பரீட்சை – 78
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
சொன்னதெல்லாம்
உண்மை என
சிறிது சிறிதாக
விளங்கி
கொண்டிருக்க..
என் உடலில்
நான் சுமந்த
உயிரே
பாரமாய் தோணுதடா
எனை வாட்டி
வதைக்கும்
ராவணனே…
என் ராமனை
சுமப்பதற்கு
முன்னால்
உன்னை
கணவனாய் இந்த
உயிரில்
சுமந்து இருந்தேன்
என்று அறிந்த
பிறகும்
எப்படி என்னுடல்
உயிர் சுமந்திருக்கும்?
######################
கொல்லாதே ராவணா..!!
“அருண்.. ஆக்சுவலா சுமிக்கு எனக்கு ஆக்சிடென்ட் நடந்தது தெரியும் தானே? அப்போ அவ கிட்ட கேட்டப்போ அவளுக்கு என்னை பத்தி எதுவும் தெரியலைன்னு சொன்னான்னு சொல்றாங்க.. அப்படின்னா இவங்களும் பொய் தானே சொல்றாங்க?” என்று கேட்ட தேஜூவிடம்.. “இந்த கேள்விக்கு பதில் சுமி தான் சொல்லணும்.. நானோ இவங்களோ சொல்ல முடியாது..” என்றான் அருண்..
“சரி.. இதை பத்தி சுமிக்கிட்டயே கேட்டுக்கோங்க.. அதுக்கு முன்னாடி நீங்க கேட்ட சர்டிஃபிகேட்ஸை எடுத்து கொடுக்கிறேன்..” என்று சொல்லி அந்த கல்லூரி பியூனை அழைத்தவர் “ஜீவா.. அந்த 2013 பேச்சோட பிஎஸ்சி மேக்ஸ் டிபார்ட்மெண்ட் சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் ஒரு ஃபோல்டர்ல இருக்கும் இல்ல..? அதை எடுத்துட்டு வாங்க..” என்று சொல்லிவிட்டு தேஜூ பக்கம் திரும்பினார்..
உள்ளிருந்து அவர் சொன்ன கோப்புகளை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் அந்த ஜீவா..
அதிலிருந்து தேஜுவின் சான்றிதழ்களை எடுத்து கொடுத்தார் சகுந்தலா.. அதை வாங்கி பார்த்தவள் அது தன்னுடையது தான் என்று தெரிந்தவுடன் அப்படியே உள்ளுக்குள் உடைந்து தான் போனாள்.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது அவளுக்கு...
அதை பார்த்த அருண்.. “ஓகே மேடம்.. தேங்க்ஸ்..” என்று சகுந்தலாவிடம் சொன்னவன்.. “இந்த சர்டிஃபிகேட்ஸை நாங்க எடுத்துட்டு போறோம்..” என்று சொன்னான்..
“ஓகே.. ஒரு லெட்டர் எழுதி குடுத்துட்டு நீங்க எடுத்துட்டு போலாம்..” என்று சொன்னார் சகுந்தலா… அவருக்கு தேஜூவை பார்க்கவே பாவமாக இருந்தது.. அவள் ஏதோ தீவிர மன உளைச்சலில் இருக்கிறாள் என்பது அவருக்கு நன்றாகவே புரிந்தது..
அங்கிருந்து நால்வரும் கிளம்ப கண்ணீர் நிறைந்த கண்களுடன் “தேங்க்யூ மேடம்..” என்று தேஜூ சொல்ல அந்த அறையை விட்டு வெளியே வந்தார்கள் அனைவரும்..
“இப்பவாவது நம்புறியா? நான் சொன்னதெல்லாம் உண்மைன்னு.. என்று அருண் கேட்க “இப்பவும் நான் இந்த காலேஜ்ல படிச்சேன்னு தெரியுதே தவிர நான் உன்னை லவ் பண்ணேன்கிறது உண்மைன்னு இதை வச்சு எப்படி சொல்ல முடியும்? நான் இந்த காலேஜ்ல படிச்சி இருக்கலாம்.. ஆனா எனக்கு என்னவோ இப்ப கூட நான் உன்னை லவ் பண்ணலைன்னு தோணுது..” என்றவளை பார்த்து இடவலமாக தலையாட்டி சிரித்தவன் “சரி வா..” என்று அவளை அழைத்துக் கொண்டு அங்கு இருந்த ஆசிரியர்களையும் சந்திக்க வைத்தான்..
அவர்கள் படிக்கும் போது நடத்திய ஆசிரியர்கள் எல்லாம் தேஜூவை பார்த்து ஆச்சரியத்தில் விழி விரித்தனர்..
“ரொம்ப பிரில்லியன்ட் ஸ்டுடென்ட் நீ.. நல்லா படிப்பே.. திடீர்னு நீ காலேஜுக்கு வரலன்னதும் எங்களுக்கெல்லாம் ரொம்ப கஷ்டமாயிடுச்சு.. எங்க எல்லாருக்குமே ஃபேவரிட் ஸ்டுடென்ட் நீதான்..” என்று ஒவ்வொருவரும் சொல்லும் போது தேஜூவுக்கு தன்னை நினைத்து பெருமையாகவும் இருந்தது.. அதே சமயம் அருண் சொன்னதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை என்று நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருப்பது அவளுக்கு நிமிடத்திற்கு நிமிடம் உள்ளுக்குள் பயங்கர திகிலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது…
அப்போது அந்த ஆசிரியர்கள் கூட்டத்தின் பின்னிருந்த ஒரு பெண் வெளியே வந்து “ஹாய் தேஜு.. எப்படி இருக்க?” என்று கேட்டாள்..
அவளைப் பார்த்த அருண் “ஹேய்.. நீ இங்கே என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க “நான் இங்கதான் லெக்சரரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.. பிஎஸ்சி மேக்ஸ் டிபார்ட்மெண்ட்ல..” என்று சொல்லி சிரித்தாள்..
“ஓ.. நீங்க தான் சுமியா?” என்று தேஜூ கேட்க அவள் சுமியை பார்த்து அப்படி கேட்டவுடன் மற்ற ஆசிரியர்கள் எல்லாம் வியப்புக்குள்ளாகி புருவம் சுருக்க சுமியோ சிறிய அதிர்வு கூட இல்லாமல் அவளை பார்த்து புன்னகைத்திருந்தாள்..
“ஆமா.. பிரின்ஸ்பல் மேடம் சொன்னாங்க.. அவங்க கேட்டப்போ எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாதுன்னு சொன்னீங்களாமே.. உங்களுக்கு எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியாதா..?” என்று கேட்க “நல்லா தெரியும்.. அருண் மலை மேல இருந்து கீழ விழுந்துட்டான்.. உனக்கு பாறையில இடிச்சு தலையில் அடிபட்டு இருந்தது.. நீ பழசு எல்லாம் மறந்துட்ட.. என்னையும் மறந்துட்டே.. அருணையும் மறந்துட்டே.. சின்ன பையனையும் மறந்துட்ட.. உனக்கு ஞாபகம் இருந்ததெல்லாம் உங்க அப்பா, உங்க அம்மா, உங்க அத்தை பொண்ணு.. அவ்வளவுதான்.. அந்த ரெண்டு வருஷம் நாம எவ்வளவு கூத்தடிச்சோம் இந்த காலேஜ்ல.. அத்தனையும் மறந்துட்டியே.. அந்த நித்திலாவும் சரணும் உன்னை எவ்வளவு பாடுபடுத்தினாங்க? எப்படி எல்லாத்தையும் உன்னால மறக்க முடிஞ்சது? ஆனா நீ அவ்வளவு உயிருக்குயிரா லவ் பண்ண அருணையே மறந்துட்டே.. அதை கம்பேர் பண்ணா.. இதெல்லாம் மறந்தது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல..” என்றாள் சுமி..
அவள் பேச்சில் பல நாள் பழகிய உயிர் தோழியின் உரிமை தெரிந்தது..
தேஜூ எதுவும் சொல்வதற்கு முன் அவள் அருகில் வந்து அவளை இறுக்க அணைத்துக் கொண்டாள் சுமி..
“பிரின்ஸ்பல் மேடம் கேட்டதுக்கு நான் பதில் சொல்லாம இருந்ததுக்கு காரணம் உனக்கு நடந்தது எனக்கு தெரியாததனால இல்ல.. அதுக்கு காரணம் உங்க அப்பா தான்.. உங்க அப்பா தான் என்னை யார்கிட்டயும் உனக்கு நடந்ததை பத்தி எதுவும் தெரிஞ்சுக்கிட்ட மாதிரி காட்டிக்க வேண்டாம்ன்னு சொன்னாரு.. அப்படி யாருக்காவது தெரிஞ்சு உன்னை வந்து பார்த்தாங்கன்னா உன் உயிருக்கே ஆபத்தாயிடும்னு அவர் சொன்னதுனால வேற வழி இல்லாம நான் உனக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாத மாதிரியே இருந்துட்டேன்.. என்கிட்ட மட்டும் இல்ல சின்ன பையன் கிட்டயும் அப்படித்தான் சொல்லிட்டு போனார் உங்க அப்பா..” என்றாள்..
தேஜூவுக்கு கொஞ்ச கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.. அவள் தன்னையே நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கி போய்க் கொண்டிருக்கிறாள் என்பது அவளின் முகத்தை பார்த்த அருணுக்கும் புரிந்தது..
அப்போது அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த விஷ்வா “நீங்கதான் சுமியா?” என்று கேட்க சுமி புருவத்தை சுருக்கி “இது யாரு?” என்று கேட்டாள்..
“ஐ அம் அன் எக்ஸ்பெர்ட் ஜர்னலிஸ்ட்..” என்று சொல்ல வைஷு அவனைப் பார்த்து முறைத்தாள்.. “டேய் இதெல்லாம் மத்தவங்க சொல்லணும்டா.. நீயே சொல்லிக்க கூடாது” என்று சொன்னாள் அவன் தலையில் தட்டி..
“போடி.. பொறாமை புடிச்சவளே..” என்றவன் சுமியைப் பார்த்து “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்க மனசும் ரொம்ப அழகா இருக்கு.. அந்த ரெண்டு வருஷம் தேஜூ அக்காவோட நீங்க எப்படி இருந்தீங்கன்னு கேட்டப்போ உங்க மேல..” என்று ஏதோ சொல்ல வந்தவனை கையில் கிள்ளிய வைஷு “டேய் வேணாம்டா..” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் ரகசிய குரலில்..
“உங்க மேல பெரிய மதிப்பே வந்துருச்சு…” என்று அவன் சொல்லவும் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டாள் வைஷு..
“அது என்ன? அவளை மட்டும் தேஜூ அக்கான்னு கூப்பிடுறே.. அப்போ நானும் சுமி அக்கா தானே..?” என்று கேட்க சற்று பதட்டம் அடைந்த விஷ்வா “நீங்க எந்த இயர் பார்ன்..?” என்று கேட்டான்..
தலையில் அடித்துக் கொண்ட வைஷு “டேய்.. விஷ்வா.. இதுக்கெல்லாம் இப்ப டைம் இல்லடா.. நீ இப்படி கிராக்குத்தனம் பண்ணாத.. நிதானமா அப்புறம் பேசிக்கலாம்.. முதலில் தேஜூ அக்கா விஷயத்தை சால்வ் பண்ணலாம்.. நீ சுமியை அப்புறம் கரெக்ட் பண்ணிக்கோடா..” என்றாள்..
“உன்னால அருண் சாரை கரெக்ட் பண்ண முடியல.. நான் சுமியை எங்கேயாவது கரெக்ட் பண்ணிட போறேன்னு உனக்கு பொறாமை.. அதனால தான் இப்படி சொல்ற.. சரி.. ஏதோ சொல்ற.. நான் அப்புறம் அவங்க கிட்ட பேசிக்கிறேன்..” என்று சுமியை பார்த்து சிரித்தவன் “நான் அப்புறமா உங்களை மீட் பண்றேன்.. இப்ப நாங்க கொஞ்சம் ஒரு வேலையா இங்க வந்து இருக்கோம்.. அது முடிஞ்ச உடனே நான் உங்களை வந்து மீட் பண்ணனும்.. எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான்..
அவன் பத்திரகையாளன் என்பதால் அவளிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறான் என்று நினைத்துக் கொண்டு “ஓகே ஷ்யூர்.. யூ ஆர் வெல்கம்..” என்றாள் சுமி..
சுமியை தனியாக அழைத்துக் கொண்டு போன அருண் அவளிடம் ஏதோ சொல்ல அவளும் தலையை ஆட்டி ஆமோதித்தாள்.. அதை பார்த்துக் கொண்டிருந்த தேஜு அவன் வந்தவுடன் “என்ன.. அவளோட போய் தனியா பேசுற?” என்று கேட்க “ஏன் பேபி.. நான் வேற யாரோடயாவது பேசினா உனக்கு பொறாமையா இருக்கா?” என்று அருண் கேட்க அவனை தீவிரமாக முறைத்தாள் தேஜூ..
“ஓகே ஓகே.. கூல் கூல்.. கோபப்படாதே.. அவளை ஒரு இடத்துக்கு வர சொல்லி கூப்பிட்டு இருந்தேன்.. நாளைக்கு கொஞ்சம் வெளியில போக வேண்டி இருக்கும் பேபி..” என்று சொல்லிவிட்டு “சரி வா நான் உன்னை இன்னொரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்…” என்று சொன்னவன் அவளை அழைத்துக்கொண்டு தாங்கள் சென்ற அந்த துணி கடைக்கு சென்றான்..
“இந்த பொட்டிக்ல தான் நம்ப அன்னிக்கு உனக்கு டிரஸ் வாங்கினோம்.. நீ இந்த பொட்டிக்ல ரெண்டு ட்ரெஸ் வாங்கினே.. ஒன்னு பிங்க்.. இன்னொன்னு கிரீன்.. ஆனா இந்த பொட்டிக்ல இருந்தவங்களுக்கு உன்னை ஞாபகம் இருக்குமான்னு தெரியல..” என்றான்..
“சரி வா.. நம்ம டேட்டூ போட்ட இடத்தை போய் பார்க்கலாம்..” என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு போக திரும்ப அப்போது அங்கே வந்த அந்த கடையின் முதலாளி “ஹலோ சார்.. நீங்களா? எவ்வளவு நாள் கழிச்சு என் கடைக்கு வந்து இருக்கீங்க? மேடம்.. நீங்களும் வந்து இருக்கீங்களா? நீங்க ரெண்டு பேரும் சூப்பர் ஜோடி சார்.. உங்களை பார்த்த அன்னையிலிருந்து அந்த மாதிரி ஒரு ஜோடியை நான் பார்க்கவே இல்லை.. ரெண்டு பேருக்கும் நடுவுல எவ்ளோ அன்டர்ஸ்டாண்டிங்.. அதுக்கப்புறம் நீங்க இன்னும் ரெண்டு பேரோட இன்னொரு முறை இந்த கடைக்கு வந்தீங்க இல்ல? அவங்க ரெண்டு பேரும் வரலையா? இவங்க ரெண்டு பேரும் யாரு? புதுசா இருக்காங்க..” என்று கேட்டார் அந்த பெண்மணி..
“அது அன்னைக்கு எங்களோட வந்தது இவங்களோட கசின் சிஸ்டரும் என்னோட பிரதரும்.. இவங்க ரெண்டு பேரும் எங்க ஃபிரண்ட்ஸ்..” என்று சொன்னான் அருண் வைஷூவையும் விஷ்வாவையும் காட்டி..
“பரவால்ல சார்.. என் கடையை எல்லாருக்கும் ரெக்கமண்ட் பண்றீங்க போல இருக்கு.. இவ்ளோ வருஷம் கழிச்சு இங்க வந்து இருக்கீங்களே..? என்ன வாங்க போறீங்க சார்..?” என்று கேட்க ஒரு ஆடையை எடுத்து “அஷ்ஷூமா எனக்காக இந்த டிரஸ் வாங்கிக்கிறியா?” என்று கேட்க “முடியாது.. எனக்கு வேண்டாம்” என்றாள் அவள்..
“எனக்கு டிரஸ் வாங்கி தரணும்னா ஒன்னு என் புருஷன் வாங்கி தரணும்.. இல்லனா அப்பா வாங்கி தரணும்.. நீ யாரு எனக்கு டிரஸ் வாங்கி தர்றத்துக்கு.. அதெல்லாம் எனக்கு ஒன்னும் வேண்டாம்.. கிளம்பி போகலாம்..” என்று சொன்னவள் அந்த கடையில் இருந்து வெளியே வந்து விட்டாள்..
அந்த கடை பெண்மணி “ஏன் சார்..? ஏதாவது கோவமா இருக்காங்களா?” என்று கேட்க “ஆமா ஆமா.. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள சரி பண்ணிடுவேன்..” என்று சொல்லிவிட்டு குறும்பாக சிரித்து விட்டு அவளுக்கு அங்கே இருந்த ஒரு பச்சை நிற ஆடையை வாங்கிக் கொண்டு போனான் அருண்..
அடுத்து அவர்கள் சென்ற இடம் அந்த பச்சை குத்தும் இடம்.. அங்கே போனவுடன் அங்கே இருந்த பெண்மணி தேஜுவின் கையை பிடித்து சரியாக மணிக்கட்டில் இருந்த அந்த பச்சை குத்திய இடத்தை பார்த்தாள்..
“சார்.. உங்க கையிலயும் போட்டேனே” என்று கேட்டவளிடம் தன் கையை காட்டினான் அருண்.. “இந்த முறை வந்ததுக்கு ஞாபகமா ஏதாவது டாட்டூ போடட்டா?” என்று கேட்க “இல்லை.. வேணா..” என்ற தேஜூ “நீங்க புதுசா டாட்டூ போட வேணாம்.. இந்த டாட்டூல இருக்கிற “ஏ.கே”ன்ற ரெண்டு எழுத்தை அழிச்சுட்டு அது மேலேயே “ஆர்.எஸ்”னு வேற ரெண்டு எழுத்துக்களை போட முடியுமா?” என்று கேட்டாள்..
“இல்ல மேடம்.. அது ஒரு லேஸர் ப்ரோசீஜர் மூலமா தான் பண்ணமுடியும்.. அது டாக்டர் கிட்ட பண்ணிக்கிட்டா தான் சேஃப்… நான் வேணும்னா உங்க இன்னொரு கையில இன்னொரு புது டேட்டூவை போட்டு விடுறேன்..” என்று சொல்ல தேஜுவுக்கு அதைக் கேட்டு கண்கள் நீர் கோர்த்துக் கொண்டது..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”