நின்னைச் சரணடைந்தேன் என் மன்னவனே…7

5
(3)

அவளை கடைசியாக கோவிலில் பார்த்த போது அவளது முகத்தில் தன் கைரேகைகள் இருந்தது வேலுவிற்கு ஞாபகம் வந்தது. ச்சே இப்படியா அடிப்பேன் என்று நொந்து கொண்டவன் அமைதியாக அமர்ந்திருந்தான். வள்ளிதிருமணம் நாடகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.

என்னடி வேல்விழி இப்பவும் வரவில்லை என்ற கலைவாணியிடம் தெரியலை கலை அவளை நான் பார்க்கவே இல்லை. நான் போகும் போதே தூங்கிட்டு இருந்திருக்காள் என்றாள் கயல்விழி. வெற்றி அண்ணா கூட வரவில்லை போல என்ற கலைவாணியிடம் உனக்கு என்னடி பிரச்சனை என்றாள் கயல்விழி. சும்மாடி உன்னை வெறுப்பேத்தி பார்க்கலாம்னு தான் என்றாள் கலைவாணி. நான் ஏன் வெறுப்பாகனும் எனக்கு வெற்றி மேல எந்த விருப்பமும் கிடையாது என்ற கயல்விழி நாடகத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

காலையில் கண் விழித்து எழுந்தவளுக்கு முகம் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. அதை பெரிது படுத்தாமல் எழுந்து குளித்து முடித்தவளின் முகம் இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை என்பது போல் இருந்தது. திரும்பவும் முகத்தில் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தவள் ராஜேஸ்வரி கொடுத்த காபியைக் குடித்தாள்.

வேல்விழி சீக்கிரம் ரெடியாகு கோவிலுக்கு கிளம்பனும் என்றார் வடிவுடைநாயகி. சரிங்க அப்பத்தா என்றவள் தன்னறைக்குச் சென்று கோவிலுக்கு கிளம்ப தயாராகினாள்.

என்னடி கயலு இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க எழுந்திரு என்றார் விஜயலட்சுமி. அம்மா ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே என்ற கயல்விழியிடம் கொன்னுருவேன் எழுந்திரு என்று அவளை எழுப்பி விட்டார். போங்க அம்மா என்றவளை முறைத்த விஜி அங்கே பாரு அந்த வேல்விழி எழுந்து கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்காள். நீயும் தான் இருக்கியே சோம்பேறி என்ற விஜி கயல்விழியை கிளம்ப சொல்லிக் கொண்டு இருந்தார். ஏய் ஏன் எப்ப பாரு என் மகளை நச்சரிச்சுட்டே இருக்க. அவள் மனசில் போட்டி பொறாமை இல்லைனாலும் நீயே தூண்டி விட்டுகிட்டு இருக்க. வேல்விழி அவளோட அக்கா . அக்காவைப் பார்த்து தங்கச்சி பொறாமை பட்டால் குடும்பம் விளங்குமா என்றவர் அதுசரி அதைப் போயி உன்கிட்ட சொல்லுறேன் பாரு என்று தலையில் அடித்து விட்டு சென்று விட்டார் விஜயசேகரன்.

இந்த மனுசனுக்கு வேற வேலைப் பிழைப்பே கிடையாது என்ற விஜி மகளிடம் எந்திருச்சு கிளம்பிடி என்று சொல்லி விட்டு சென்றார். அவளும் எழுந்து குளிக்க ஆரம்பித்தாள்.

வேல்விழி பாவாடை தாவணி அணிந்து கொண்டு வந்தாள். என்ன வேலு புடவை கட்டலையா என்ற ராஜேஸ்வரியிடம் இல்லைம்மா இப்போ சாமி கும்பிட்டு தீபாராதனை தானே பார்க்கப் போறோம் பாரி தூக்கும் போது கண்டிப்பா புடவை கட்டிக்கிறேனே என்றிட சரிம்மா உன்னோட விருப்பம் என்ற ராஜி ரேணுகா என்றிட ரேணுகா, சுரேந்திரன் அவர்களது மகன் விஷ்ணு மூவரும் வந்து சேர்ந்தனர்.

சின்னவன் எங்கப்பா என்றவரிடம் வந்துட்டேன் அம்மா என்று நரேந்திரனும் வந்து விட  வடிவுடைநாயகியிடம் அத்தை நாங்க ரெடி விஜியும் , கயலும் வந்துட்டாள் எல்லாருமா கிளம்பலாம் என்றார் ராஜேஸ்வரி. நாங்களும் வந்துட்டோம் ராஜி என்று வந்தார் விஜயலட்சுமி்.

மொத்த குடும்பமும் கோவிலுக்குச் சென்றனர். கோவிலில் அர்ச்சனை ,ஆரத்தி எல்லாம் முடிந்த பிறகு கயல்விழி, வேல்விழி இருவரும் கடைத் தெருவிற்கு சென்றனர். என்னாச்சுடி ஏன் ரொம்ப டல்லா இருக்க என்ற கயல்விழியிடம் ஒன்றும் இல்லைடி என்றாள் வேல்விழி். இல்லை எனக்கு தெரியும் நேற்று சின்ன மாமாவுக்கும், உனக்கும் நடந்த சண்டை என்றவள் அவரு இடத்தில் இருந்து யோசிச்சு பாருடி அவருக்கு நம்ம குடும்பத்து மேல கோபம் இருக்கிறதும் நியாயம் தானே. நம்ம அக்கா பண்ணுனது பெரிய தப்பு தானே யாரா இருந்தாலும் அவங்களுக்கு அது பெரிய அவமானம் தானே என்றாள் கயல்விழி். எனக்கு புரியுது கயல் என்ற வேல்விழி இனிமேல் உன்னோட மாமா கிட்ட நான் சண்டை போட மாட்டேன் என்றாள் வேல்விழி. அதென்ன உன்னோட மாமா நம்ம மாமா என்றாள் கயல்விழி.

சரி வா நெயில்பாலிஷ் வாங்கலாம் என்ற கயல்விழியைப் பார்த்து சிரித்தவள் இந்த பைத்தியம் உன்னை விட்டு போகாது என்றாள் வேல்விழி. நீ மட்டும் என்னவாம் வளையல் பைத்தியம் தானே என்றவள் ஆமாம் நேற்று நீ கட்டி இருந்தது மெரூன்கலர் புடவை ஆனால் வளையல் கோல்டன் கலர் ஏன் ஏன்னாச்சு என்ற கயல்விழியிடம் அதனால என்னடி என்றவள் வளையல்களை பார்க்க ஆரம்பித்தாள்.

தனக்கு பிடித்த வண்ணங்களில் வளையலை எடுத்தவள் கயல் உனக்கு இந்த வளையல் சூப்பரா இருக்கும் என்றாள் . இல்லைடி எனக்கு கண்ணாடி வளையல் பிடிக்காதுனு உனக்கு தெரியாதா என்றவளிடம் இது மெட்டல்டி என்றாள் வேல்விழி.

மெட்டல்னா ஈயத்துக்கு பெயிண்ட் அடிச்ச வளையல் தானே அதெல்லாம் நீயே போட்டுக்கோ என் பேத்திக்கு தங்க வளையல் இருக்கும் போது இப்போதான் மெட்டல் நொட்டல்னு வந்துட்டாள் என்றார் அங்கு வந்த தில்லைநாயகி் . உனக்கு எம்புட்டு வளையல் வேண்டும்னு சொல்லுத்தா கயலு உன் மாமனை விட்டு அரை மணிநேரத்தில் தங்கத்திலையும், வைரத்திலையும் வாங்கியாரச் சொல்லுறேன் இப்பதான் இவள் ரோட்டுக்கடையில் வாங்கித் தருவாளாம் அதை என் பேத்தி போட்டுக்கனுமா என்று வெடுக்கென்று கூறினார் தில்லைநாயகி.

அம்மாச்சி என்று ஏதோ கூற வந்த கயல்விழியிடம் நீ வா இவள் கூட எல்லாம் சுத்துனா உன்னையவும் இவளை மாதிரியே மாத்திருவாள் என்று தன் பேத்தியை இழுத்துச் சென்றார் தில்லைநாயகி.

சாரி வேல்விழி என்று கயல்விழி கண்களால் மன்னிப்பு கேட்டிட வேல்விழி சிரித்து விட்டு கண் சிமிட்டினாள். என்ன பாப்பா நீ கேட்டால் உங்க அப்பா தங்கத்தில் வளையல் பண்ணி போட மாட்டாரா என்ன இந்த அம்மா ஏன் இப்படி பேசுறாங்க என்றார் கடைக்காரர் . அப்பா, மட்டும் இல்லை இரண்டு அண்ணனுங்க அப்பறம் அத்தை மகன்னு நாங்க எல்லோரும் இருக்கோம் வளையல்கடைக்கார அண்ணே என் மாமா மகளுக்கு நல்ல வளையலா காட்டுங்க என்று வந்தான் வெற்றிமாறன்.

சரிங்க தம்பி என்ற வளையல்கடைக்காரர்  அழகழகான வளையல் செட் காட்டிட தனக்கு, ரேணுகாவிற்கு, கயல்விழிக்கு, கலைவாணிக்கு என்று வளையல்களை வாங்கியவள் கயல்விழிக்காக சில நெயில்பாலிஷ் வாங்கிக் கொண்டாள். கடைக்காரரிடம் பணத்தை நீட்டிட நான் கொடுக்கிறேன் வேல்விழி என்றான் வெற்றிமாறன். நானே கொடுத்துக்கிறேன் அத்தான் என்றவள் அடுத்த வருசம் வேணும்னா நீங்க கொடுங்க என்று அவனைப் பார்த்து சிரித்திட அதன் அர்த்தம் புரிந்தவன் சந்தோசமாக சிரித்தான்.

கடைகாரரிடம் பணத்தைக் கொடுத்தவளிடம் நிஜமா தான் சொல்லுறியா வேல்விழி என்றவனிடம் என் அப்பா, அண்ணனுக்கு அதுதான் விருப்பம் அப்போ எனக்கும் என்றவள் தலையை குனிந்து கொள்ள சொல்லு வேல்விழி என்றான் வெற்றிமாறன். போங்க அத்தான் சொல்ல மாட்டேன் என்று அவள் ஓடிச் சென்றாள். ஏய் வேல்விழி நில்லு என்றவன் அவளை விரட்டிட அவள் மறைந்து கொண்டாள்.

எங்கேடி போன என் மாமன் மகளே என்று ஒரு சந்துப்பக்கம் நின்றவனின் மேல் மஞ்சள் தண்ணீரை ஊற்றிச் சென்றாள் வேல்விழி. ஏய் வேலு நில்லுடி என்றவன் அவளை விரட்டிச் சென்றிட அங்கு ஓர் பாத்திரம் முழுக்க மஞ்சள் தண்ணீர் இருக்க முறைப்பையன்களும், முறைப் பெண்களும் மாற்றி மாற்றி மஞ்சள்நீரை ஒருவர் மீது ஒருவர் ஊற்றி விளையாடிக் கொண்டிருக்க வெற்றிமாறனும் ஒரு சொம்பில் மஞ்சள் தண்ணீரை எடுத்துக் கொண்டு வேல்விழியை விரட்டினான்.

அத்தான் வேண்டாம் என் மேல ஊத்தாதிங்க என்றவளிடம் மவளே என் மேல மட்டும் ஊத்துவ இன்னைக்கு உன்னை மஞ்சள் தண்ணீரிலே குளிக்க வைக்கலை என் பெயர் வெற்றிமாறனே இல்லை என்றவன் அவள் மீது ஊற்றினான். அவள் விலகி விட அங்கு வந்த கல்விழியின் மீது தண்ணீர் முழுவதும் கொட்டிட எருமை மாடு உன்னை இன்னைக்கு விடவே மாட்டேன் என்று அவளும் மஞ்சள் தண்ணீரை எடுத்து வெற்றியை விரட்டினாள். ஐயோ இவளுமா என்றவனை வேல்விழியும் மஞ்சள் நீரோடு விரட்டினாள்.

மூவரும் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கயல்விழி சோர்ந்து போய் விட வேல்விழி வெற்றிமாறனை துரத்திக் கொண்டு ஓடினாள். ஏய் வேலு சொன்னால் கேளு வேண்டாம் வேண்டாம் என்றவன் போக்கு காட்டிட விடவே மாட்டேன் என்றவள் தண்ணீரை ஊற்றிட இந்த முறை வெற்றிமாறன் விலகி விட்டான். எதார்த்தமாக அந்தப் பக்கம் வந்த வேலுவின் மீது வேல்விழி ஊற்றிய மஞ்சள்தண்ணீர் பட்டு அவனது வெள்ளை வேஷ்டி, சட்டை மஞ்சளாகிப் போனது.

ஐயோ மாமா என்று கயல்விழி பதுங்கி விட்டாள். வெற்றியும் ஓடி விட்டான். என்ன இது என்றவனிடம் சாரி மாமா என்றவளை அவன் முறைத்திட மன்னிச்சுருங்க வெற்றி அத்தான் மேல தான் தண்ணீர் ஊற்றினேன் அவரு விலகிட்டாரு என்றவளிடம் சரி என்றவன் கிளம்பிட மாமா வெள்ளை சட்டையை விட மஞ்சள் சட்டை உங்களுக்கு எடுப்பா இருக்கு என்று சொல்லி விட்டு வேல்விழி ஓடியே விட்டாள்.

நல்லவேளை நாம தப்பிச்சோம் என்று வெற்றிமாறனும், கயல்விழியும் பேசிக்கொள்ள இருவரின் மீதும் தண்ணீரை ஊற்றி விட்டு எருமைங்களா எப்போ பாரு அந்த சிடுமூஞ்சி மாமாகிட்ட என்னை மாட்டி விடுறதே உங்களுக்கு வேலையா போச்சு என்றவள் ஆமாம் அத்தான் உங்க சிடுமூஞ்சி சித்தப்பாவுக்கு சிரிக்கவே தெரியாதா என்றாள்.

அதோ உனக்கு பின்னாடி தான் நிற்கிறாரு நீயே கேட்டுக்கோ என்ற வெற்றிமாறன் ஓடி விட நாக்கைக் கடித்தபடி மெல்ல திரும்பினாள் வேல்விழி. கயல்விழியும் ஓடி விட்டாள். சாரி மாமா என்றவளை முறைத்தவன் உன்னை என்னையை மாமானு கூப்பிடாதேனு சொல்லி இருக்கேன்ல என்றவனிடம் சரி இனிமேல் அப்படி கூப்பிடமாட்டேன் மிஸ்டர் ரத்னவேல் என்றாள். அவளை முறைத்தவன் திமிரா என்றான். ரத்னவேல் தானே உங்களோட பெயர் அப்போ அப்படித் தானே கூப்பிட முடியும் என்றவளிடம் உனக்குலாம் வாய்க்கொழுப்பு அதிகம் என்றான் . இது என்ன வம்பா இருக்கு மாமான்னு கூப்பிடக்கூடாதுனு சொல்லிட்டிங்க அப்பறம் உங்களை சித்தப்பானா கூப்பிட முடியும் முடியாது தானே அப்போ நான் பெயர் சொல்லி தான் கூப்பிடுவேன் என்றவளிடம் உன் கிட்ட எல்லாம் பேச வந்தேன் பாரு என்றவன் உன்னை நேற்று அடிச்சது தப்புனு மன்னிப்பு கேட்க வந்தேன் நீ பேசுற பேச்சுக்கு இன்னும் கூட நாலு இழுப்பு இழுத்துருக்கனும்னு தோனுது இந்தா உன்னோட கொலுசு நேற்று தோப்பு வீட்டிலே விட்டுட்டு வந்துட்ட என்று கொடுத்து விட்டு சென்றான்.

மிஸ்டர் ரத்னவேல் ரொம்ப நன்றி என்றவளை முறைத்து விட்டு அவன் சென்று விட்டான். அவன் சென்று பத்து நிமிடம் கழித்து வந்து சேர்ந்தனர் வெற்றியும், கயலும் அவர்களை முறைத்தவள் நல்ல ஆளுங்க தான் இரண்டு பேரும் இப்போ மட்டும் எதுக்கு வந்திங்க என்றிட சரி சரி கையில் என்ன கொலுசு என்றாள் கயல்விழி. கீழே கிடந்துச்சுனு கொடுத்துட்டு போனாரு மிஸ்டர் ரத்னவேல் என்றாள் வேல்விழி.

அடிப்பாவி எங்க மாமாவை நானே பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை என்ற கயல்விழியிடம் மாமான்னு அவங்க அக்கா பொண்ணு மட்டும் தான் கூப்பிடனுமாம் அதான் கூப்பிடத் தானே பெயர் என்ன அத்தான் என்றவளிடம் ஆத்தா மாரியாத்தா நான் இந்த ஆட்டத்துக்கு வரலைத்தா என்று ஓடியே விட்டான் வெற்றிமாறன்.

….தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!