உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -6

4.6
(11)

அத்தியாயம் – 6

 

அன்று…

 

ராதிகாவிற்கு இன்னும் பிலிப்பைன்ஸ் செட் ஆகவில்லை. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவிற்காக துணிச்சலோடு கடல் கடந்து வந்து விட்டாள்.

 

ஆனால் பெற்றோர் இல்லாத தனிமையில் மனம் துவண்டு தான் போனது.

 

இதோ இன்றிலிருந்து கல்லூரி ஆரம்பம். அதற்காக கிளம்பி விட்டாள். ஃபர்ஸ்ட் ஒன் இயர் பி எஸ் படிக்க வேண்டும். அதற்குப் பிறகு தான் இங்கு மருத்துவம் படிக்க முடியும். பிஎஸ் என்பது சைக்கலாஜிப் பற்றியது.

 

இவர்களது ஹாஸ்டலில் இருந்து காலேஜிற்கு நடந்து செல்வதற்கு அரைமணி நேரமாகும். ஆட்டோ வசதி எல்லாம் அங்கே அவ்வளவாக கிடையாது. சிற்சில ஆட்டோக்களே ஓடும். அதுவும் தெருக்களில் தான். இங்கே காலேஜிற்கு ஜிப்னியில் போகலாம் என்று தெரிந்து வைத்திருந்தாள். செவன் பேசோஸ் ஆகும். பேசோஸ் என்பது இங்குள்ள மணி.

 

ஹாஸ்டலில் இருந்து வந்தவள் ஜிப்னியில் ஏறி ஒரு வழியாக காலேஜ் சென்றாள்.

 

உள்ளுக்குள் பயம். காலேஜில் ராகிங் அவ்வளவாக இருக்காது என்று ஹாஸ்டலில் கூறியிருந்தார்கள்.

 

அப்படிக் கூறியிருந்த ஹாஸ்டலிலே ராகிங் நடந்தது. எல்லாம் ஃபன்னுக்காக தான் நடந்தது. பெருசா எதுவும் கிடையாது. ஜஸ்ட் ஏதாவது கவிதை சொல்றது, இல்லை ராம்ப் வாக் பண்ண சொல்றது. இப்படி ஏதாவது சின்ன சின்னதா செய்ய சொல்லி, அவங்க சீனியர்ஸ் என்று கெத்து காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

 

காலேஜிலும் இதே போல் நடக்குமோ என்ற பயத்திலே வந்தாள் ராதிகா.

 

அவள் முகம் ஏற்கனவே வாடி இருந்தது. இரவில் இவளது அறையில், தனியாகப் படுக்க பயந்து அரைகுறையாக தூங்கி எழுந்து வந்தாள்.

 

சிறுவயதில் எல்லாம் அப்படி இல்லை. ஒரு சில வருடங்களாக இவளை தனியாக படுப்பதற்கு பெற்றோர் விடுவதில்லை. அவர்கள் கூடவே இருப்பார்கள். இப்போது திடீரென்று தனியாகப் படுக்க, அவளுக்கு உறக்கம் வராமல் ஆட்டம் காண்பித்தது…

 

பொதுவாக ராதிகா அமைதியாக இருந்தாலும், தைரியத்துடன் தான் இருப்பாள். ஆனால் அவளது இயல்பே இப்பொழுது மாறிவிட்டது‌.

 

இரவெல்லாம் தூக்கம் வராமல் அரைகுறையாக தூங்கி, காலையில் கல்லூரிக்கு கிளம்பி வந்தவளின் முகத்தில், பயமும் சேர்த்துக் கொள்ள அவளது முகமே களையிழந்து காணப்பட்டது.

 

அங்கு இருந்த சீனியர்ஸ் அவளை அழைக்க…

 

ராதிகா பயத்துடனே அவர்கள் அருகே செல்ல… அவர்கள் வழக்கம் போல ஜாலியாக சில டேர் செய்ய சொல்ல…

 

ஒரு வழியாக செய்து முடித்தாள்.

 

அப்போது தான் உள்ளே நுழைந்த அனன்யாவோ, தூரத்திலிருந்தே ராதிகாவைப் பார்த்து விட்டாள்.

 

‘ ஏர்போர்ட்டில் பார்த்த பெண் தானே. வாவ்… அவளும் இந்த காலேஜ் தானா… சூப்பர்…’ என்று எண்ணியவளின் கால்கள் விரைந்து அவளருகே சென்று நின்றது.

 

“ஹாய் ஐயம் அனன்யா. ஃப்ரம் சென்னை.” என்று ராதிகாவிடம் உற்சாகமாக அறிமுகமானாள்.

 

“ஹலோ! அனன்யா… இங்கே சீனியர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். நீங்க மட்டும் கண்டுக்காமல் போறீங்க.” என்று வினவ.

 

ராதிகாவும், அனன்யாவும் ஒரு சேர அவர்களைப் பார்த்தனர்.

 

“நீங்க போகலாம்.” என்று ராதிகாவை கிளம்ப சொல்ல.

 

அவளோ, அனன்யாவைப் பார்த்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர முயன்றாள்.

 

அனன்யா, ” ஜஸ்ட் ஏ மினிட் சீனியர்.” என்று விட்டு, ” ஹேய் ஒரு ஃபைவ் மினிட்ஸ் எனக்காக வெயிட் பண்ணு.” என்று ராதிகாவைப் பார்த்து கண்கள் சுருங்கப் புன்னகையுடன் வினவ.

 

அவளது முகபாவனையில், “சரி.” என தலையசைத்தாள் ராதிகா.

 

ராதிகாவின் தலையாட்டலைக் கண்ட பிறகு தான், நிம்மதியாக சீனியர்களிடம் திரும்பினாள் அனன்யா.

 

அவர்கள் சொன்ன டேர் அனைத்தையும் உற்சாகத்துடன் செய்தவள்,தனக்காக காத்திருந்த ராதிகாவிடம் வந்து மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள…

 

ராதிகாவும்,”ஐ யம் ராதிகா. ஃப்ரம் தஞ்சாவூர்.” என்று கைகளை நீட்டினாள்.

 

நீட்டிய கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள் அனன்யா. யார் சொன்னது காதல் மட்டும் தான் முதல் பார்வையிலே தோன்றும் என்று… நட்பும் அப்படித்தான் என்பதை அனன்யா உணர வைத்தாள்.

 

இருவரும் சைக்கலாஜிப் படிப்பதற்கு வந்திருக்க‌. வகுப்பு எங்கே என்று விசாரித்து உள்ளே சென்றனர். சைக்காலஜி படிப்பது என்பது இலகுவாக தான் இருக்கும். ஸ்கிரிப்ட்… அதாவது நாடக வடிவில் தான் படிப்பு இருக்கும்‌. நாலைந்து பேர் குழுவாக, ஒவ்வொரு பிரச்சினைக்கும் சொல்யூஷன் செல்ல வேண்டும்.

 

அப்படி க்ரூப் செலக்ட் செய்யும் போது அனன்யா, ராதிகாவுடன் சேர்ந்துக் கொண்டாள்.

 

ராதிகாவிற்கும், அனன்யாவின் நட்பு கம்பர்டபுளாக இருந்தது. மெல்ல தனது கூட்டில் இருந்து வெளிவந்தாள் ராதிகா.

 

காலேஜ் ஆரம்பித்து, ஒரு வாரம் ஓடி இருந்தது.

 

வழக்கம் போல ராதிகா, முகத்தில் சோர்வுடன் கல்லூரிக்கு வந்துக் கொண்டிருந்தாள்.

 

அனன்யாவும், பெற்றோரைப் பிரிந்து வந்ததால், டல்லடிக்கிறாள் என்று முதலில் நினைத்தாள்.

 

ஆனால் பேசிப் பார்க்கும் போது அப்படி ஒன்றும் தெரியவில்லை. இப்படியே விட்டால் சரி வராது என்று எண்ணிய அனன்யா, “என்ன பிரச்சினை ராது? ஏன் டல்லாவே இருகக.” என்று விசாரிக்க…

 

முதலில் ஒன்றும் இல்லை என்று மறுத்த ராதிகா, பிறகு தனது பிரச்சினையை கூறினாள்.

“அனு… அது வந்து, ஹாஸ்டல்ல என்னுடைய அறைக்கு யாரும் வரலை.”

 

“சரி… அதுக்கும் இப்படி டல்லா இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் ராது?”

 

” எனக்கு தனியாக படுப்பதற்கு பயம் அனு. தூக்கம் வராது.” என்று ஒரு வழியாகக் கூற…

 

” என்னது? தனியா படுக்க பயமா?” என அனன்யா, நம்பமாட்டாமல் ஆச்சரியமாக வினவ.

 

“….”

 

” ஏன் ராது. ஒன்னும் சொல்ல மாட்டீங்கறே. இவ்வளவு தூரம் வெளிநாடு வரைக்கும் தனியாக வந்திருக்க… பட் என்னால நம்பவே முடியலை.”

 

ராதிகாவோ ஒன்றும் கூறாமல், முகம் இறுகி நிற்க.

 

” சரி… சரி… விடு… நீ எதுவும் கூற வேண்டாம்.” என்ற அனன்யா,கண்களை மூடி சில நிமிடங்கள் யோசித்தாள்.

 

பின்பு முகமலர ராதிகாவைப் பார்த்தவள், ” ராது… உங்கள் ஹாஸ்டல் மேனேஜ்மென்ட்ட உன்னுடைய அறைக்கு ஒரு ஆள் வருவதாக சொல்லி வச்சிடு. நான் ரெண்டு நாள்ல வந்து உன்னோடு ஜாயின் பண்ணிக்கிறேன்.” என்று அசால்டாகக் கூற…

 

ராதிகாவோ, நம்பாமல் அவளைப் பார்த்தவள், ” ஆர் யூ மேட். உனக்காக, உங்க வீட்ல தனி அப்பார்ட்மெண்ட் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதை விட்டுவிட்டு இங்கே வருவியா? ” என்று சிறு சினத்துடன் வினவ.

 

” கூல் ராது… திஸ் இஸ் மை ஃப்ராப்ளம். ஐ வில் மேனேஜ். நான் சொன்னதை மட்டும் செய். ” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

 

சொன்னபடியே காலேஜ் முடிந்து தனது அப்பார்ட்மெண்டிற்கு சென்றவள், தனது வீட்டிற்கு அழைத்துப் பேசினாள்.

 

முதலில் எல்லோரிடமும் பேசியவள், இறுதியாக பாட்டியிடம் அந்த விஷயத்தை காதில் போட்டாள்.

 

யாரிடம் சொன்னால் காரியமாகும் என்பதை நன்கு அறிந்த அனன்யா அதையே செய்தாள்.

 

” பாட்டி…எனக்கு இங்கே தனியே இருக்கிறதுக்கு போரடிக்குது. நான் என் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஹாஸ்டல்ல தங்கிக்கிறேன் பாட்டி. ப்ளீஸ் பாட்டி.” என அனன்யா கெஞ்ச.

 

ருக்குமணிக்கோ அனன்யா கூறியதைக் கேட்டு தலை சுற்ற,” அனு மா…நான் விஸ்வா கிட்ட சொல்லுறேன். அவன் என்ன சொல்லுவான் என்று வேறு தெரியலை.” என.

 

” ப்ளீஸ் பாட்டி. எப்படியாவது ஹாஸ்டல்ல தங்கறதுக்கு பர்மிஷன் வாங்கித் தா பாட்டி. அப்புறம் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது.” என்று கெஞ்சலில் ஆரம்பித்து மிரட்டலில் முடித்தாள் அனன்யா.

 

“ம்.‌‌.. சரி டா.” என்று சொல்லி ஃபோனை வைத்தவர், தன் மகள் மற்றும் மருமகளிடம் கூற.

 

“எங்களுக்குத் தெரியாது. நீங்களாச்சு… உங்க பேரன், பேத்தியாச்சு. எங்களை

ஆளை விடுங்க.” என்று ஒன்று போல் ரஞ்சிதமும், கௌரியும் கூறி விட்டு அவ்விடத்திலிருந்து எழுந்து சென்று விட்டனர்.

 

தன் பேரனின் வரவிற்காகக் காத்திருந்த, ருக்குமணி அந்த பெரிய ஹாலில் நடைப் பயின்றுக் கொண்டிருந்தாள்.

 

கல்லூரி முடிந்ததும், மருத்துவமனைக்கும் சென்று விட்டு டயர்டாக வந்த விஸ்வரூபன் பார்த்தது என்னவோ, குட்டி போட்டப் பூனையைப் போல சுற்றிக்கொண்டிருந்த பாட்டியை தான்…

 

” என்ன பாட்டி என்ன நீங்க மட்டும் இருக்கீங்க? அம்மா, அத்தை எங்க காணோம்? நீங்க இன்னும் படுக்க போகலையா?” என்று வினவியவாறே கைகளைக் கழுவி விட்டு வந்து சோஃபாவில் அமர்ந்து சட்டை பட்டனை அவிழ்த்துக் கொண்டிருந்தான் விஸ்வரூபன்.

 

அவன் கேட்ட கேள்வியை புறந்தள்ளி விட்டு, ” விஸ்வா… உனக்கு காஃபி கொண்டு வர சொல்லவா?” என்று ருக்குமணி வினவ…

 

” திஸ் இஸ் ஏ டின்னர் டைம். நான் ரெப்ரெஷ்ஷாகிட்டு வந்து தான் சாப்பிடுவேன்.” என்றவன், அவரை கூர்ந்து பார்க்க.

 

அவனது பார்வையோ, ‘என்ன விஷயம் சொல்லப்போறீயா? இல்லையா?’ என மிரட்டுவதுப் போல ருக்குமணிக்கு தெரிந்தது.

 

” அது வந்து விஸ்வா… ” என இழுத்தவர், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு வழியாக அனன்யா பேசியதைக் கூற…

 

விஸ்வரூபன், தனது விஸ்வரூபத்தை காட்டினான். ” வாட் ஏ க்ரேசி கேர்ள்.” என்று உறும…

 

அவனுக்கே பாட்டியான ருக்குமணி மட்டும் சும்மா இருப்பாளா, ” டேய் நீ இன்னும் தமிழ் நாட்டில தான் இருக்க… ஒழுங்கா தமிழ்ல பேசு.”

 

” ம்… உன் பேத்திக்கு பைத்தியமா புடிச்சிருக்கு. அவ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கா? எனக்கு என்ன வேலைவெட்டி இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கலாமா? ஒன் வீக் லீவ் போட்டுட்டு, அவக் கூட ஸ்டே பண்ணி, எல்லாம் கம்பர்டபுளா இருக்கான்னு பார்த்துட்டு வந்தேன். இப்ப என்னடான்னா ஹாஸ்டலுக்கு போறேன் என்று சொல்லுறா? அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிடுங்க. இல்லேன்னா அவளோட விருப்பம். என்ன வேண்டுமானாலும் செய்துக்க சொல்லுங்க.” எனக் கத்த…

 

“டேய் விஷ்வா… இப்படி சொன்னால் என்ன அர்த்தம். நீதானே அவளை வெளிநாட்டுக்கு அனுப்புன… அவ உன் பொறுப்பு என்று சொன்ன… இப்போ என்ன இப்படி தட்டிக் கழிக்கிற. கூப்பிடுற தூரமா அது? இங்கேயே பக்கத்துல சேர்த்து இருந்தா, நாங்களே போய் ஹாஸ்டல் வசதியெல்லாம் நல்லா இருக்கா என்று பார்த்திருப்போம். இப்போ நீ தான் போயாகணும்.” என்று ருக்குமணி கிடுக்கிப்பிடி போட்டார்.

 

அவரின் பேச்சைக் கேட்ட விஸ்வரூபன் அயர்ந்து நின்றான். இனி இதையே சொல்லி அவனது வாழ்க்கையையே மாற்றி அமைக்க போகிறார் என்பதை அறியாமல் அவரதுப் பாட்டியைப் பார்த்து விளையாட்டாக முறைத்து நின்றான்.

 

இன்று…

 

நேற்றிரவு இருந்த கலக்கம் மறைந்து இருந்தது. முகம் பொலிவுடன் இருக்க, கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

 

இன்று முதல் நாள் காலேஜ். பி.ஜி ஸ்டார்ட் ஆகுது‌. டீனேஜில் இருந்த பரபரப்பு எல்லாம் இப்பொழுது ராதிகாவிற்கு கிடையாது.

 

கண்ணாடி முன் நின்று கிளம்பிக் கொண்டிருந்தவளின் மனதிலோ ஒரு யோசனை ஓடிக் கொண்டிருந்தது.

 

திடீரென்று தான் அணிந்திருந்த சல்வாரை மாற்றி விட்டு, புடவை எடுத்து கட்டினாள்.

 

ப்ளைன் கிளாஸ் ஒன்று எப்போதும் ஹேண்ட்பேகில் இருக்கும். தஞ்சாவூரில் இருக்கும் போது, டூவிலர் ஓட்டும் போது பயன்படுத்துவதற்காக வைத்திருந்தது. அதை எடுத்து கண்களில் மாட்டியவள், மீண்டும் கண்ணாடியைப் பார்க்க, என்னவோ குறைவதாக தோன்றியது.

 

ஒரு நிமிடம் கண்களை சுருக்கி யோசித்தவள், முகமலர விரித்திருந்த கூந்தலை வேகமாக பின்னலிட்டு கொண்டை போட்டுக் கொண்டாள்

 

ஹாஸ்டலில் டைனிங் ஹாலிற்குச் சென்று உணவு அருந்தினாள்.

 

அங்கிருந்தவர்கள் எல்லோரும் அவளை மேலிருந்து கீழாக பார்க்க‌‌… அவளோ உணவில் மட்டும் கவனத்தைச் செலுத்தினாள். அவர்களது பார்வையை அலட்சியம் செய்து விட்டு, அருகில் இருந்த கல்லூரிக்கு நடந்தே சென்றாள்.

 

இந்த ஒரு மாத காலத்தில் ஹாஸ்பிட்டலில் உள்ளவர்களிடம், காலேஜ் பற்றிய டீடையில்ஸை தெரிந்துக் கொண்டவள், நன்கு பழகிய இடத்திற்குச் செல்வது மாதிரி தயங்காமல் வேகமாக சென்றாள்.

 

அவளுடைய டிபார்ட்மென்ட்ற்கு சென்றவள், அங்கு சலசலவென பேசிக்கொண்டிருந்த மாணவ மாணவிகளை ஒரு பார்வை பார்த்தாள்.

 

அவர்களை ஸ்டூடண்ட் என்பதை விட டாக்டர்கள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். அவர்கள் எல்லோரும் ஒரே வயதில் உள்ளவர்களும் அல்ல. சில பேர் படிப்பு முடித்தவுடனே மேல் படிப்பு படிக்க வந்திருக்க, சில பேர் கொஞ்ச நாள் பிராக்டிஸ் செய்து விட்டு வந்திருந்தார்கள். அதனால் வயது வித்தியாசத்துடன் தான் இருந்தார்கள்.

 

“ஹாய் கைஸ்‌‌…” என்ற இவளது குரலில் எல்லோரும் திரும்பிப் பார்க்க…

 

” ஐ அம் ராதிகா… என்னைப் பற்றி அப்புறம் சொல்றேன். இப்போ உங்களை முதலில் அறிமுகப்படுத்திக்கோங்க. ”

 

முதல் வரிசையில் இருந்த ஒரு பெண் எழுந்து அறிமுகப்படுத்த முயல…

 

” யூ சிட். நெக்ஸ்ட் ரோல உள்ள யெல்லோ சுடி… நீங்க எழுந்திருங்க இன்ட்ரொடியூஸ் யுவர் செல்ஃப். உங்க நேம் என்ன? உங்க ஆம்பிஷன் என்ன? அதைப்பத்தியெல்லாம் ஷேர் பண்ணிக்கோங்க.” என.

 

அந்தப் பெண்ணோ குழப்பத்துடனே அவளது கேள்விகளுக்கு பதிலளித்தாள்.

 

“நெக்ஸ்ட் ப்ளாக் ஷர்ட்… நீங்க சொல்லுங்க” என‌.

 

அந்த பையனும், ஒரு விழி விழித்து விட்டு தன்னுடைய பெயரையும் இதய மருத்துவர் ஆக வேண்டிய இலட்சியத்தையும் கூறி விட்டு அமர்ந்தான்.

இதே மாதிரி அங்காங்கு இருந்த சிலரை மட்டும் எழுந்து விசாரித்தவள், கடைசியாக அமர்ந்திருந்த நெடியவனை அழைத்து, விசாரிக்க…

 

அவனோ கேஷுவலாக எழுந்தவன், இவளை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே, ” கேள்வியே லூசுத்தனமா இருக்கு. உன்மையிலே நீங்க எங்களோட மேமா? டவுட்டா இருக்கு. கார்டியலாஜிஸ்ட் படிக்கிறதுக்காகத் தான் இந்த டிபார்ட்மெண்ட். அப்படியிருக்க… இப்படி ஒரு மொக்கை கேள்வி கேட்டதிலிருந்தே தெரியுது நீயும் ஒரு ஸ்டூடண்ட் தான்.” எனக் கூற…

 

எல்லோருக்கும் இதே எண்ணம் தான். மனசுக்குள் நினைத்தாலும் வெளியே சொல்ல பயந்து கொண்டு அமைதியாக இருக்க… அவன் மட்டும் பட்டென்று கேட்டு விட்டான்…

 

அவனுடைய கேள்வியில் ராதிகாவின் முகம் மலர்ந்தது. ” வாவ்… சூப்பர்…” என்றவள் வேகமாக அவனருகே வந்து அமர்ந்துக் கொண்டே, ” யூவார் ப்ரில்லியண்ட். நீ தான் எனக்கு சரியான பார்ட்னர். எங்கே உட்காரலாம் என்று இவ்வளவு நேரமா, ஒவ்வொருத்தரையா விசாரிச்சேன்” என்றாள்.

 

அப்போது தான், ஏன் சிலரை மட்டும் விசாரித்தால் என்று புரிய, சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் அவளை வெட்டவா? இல்லை குத்தவா? என்பது போல பார்த்தனர்…

 

அதையெல்லாம் அசால்டாக தள்ளிவிட்டு, ” ஹாய் பாஸ்… ஐயம் ராதிகா.” என்று அவனிடம் கையை நீட்ட.

 

” ஆதவன்…” என்று அவன் பெயரைக் கூற…

 

” நைஸ் நேம்… ” என்றுக் கூறி புன்னகைத்தாள்.

 

ஆதவனின் முகமும் புன்னகையால் மலர்ந்தது.

 

அங்கு நடக்கும் அக்கப்போரை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் முகத்திலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு புன்னகை மலர்ந்தது. ராதிகா உள்ளே நுழையும் போதே வந்து விட்ட கிருஷ்ணன் அமைதியாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ராதிகா அமர்ந்து, ஆதவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது,

புன்னகையுடன் உள்ள நுழைந்தவர், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

 

” ஐயம் கிருஷ்ணா. நான் தான் உங்களுடைய டீன்.அப்புறம் கொஞ்சம் நான் பேசலாமா… இப்போ நீங்க ஒன்னும் பக்குவமில்லாத ஸ்டுடென்ட்ஸ் கிடையாது. எத்தனையோ உயிர்களை காக்க கூடிய மருத்துவர்கள். உங்களுடைய பொறுப்பை உணர்ந்து நடந்துக்கணும். ஒரு சின்ன கவனக்குறைவுக் கூட பெரிய உயிர் சேதத்தை உண்டாக்கிடும். சோ டோண்ட் பீ கேர்லஸ். அன்ட் ஆல் த பெஸ்ட் ஃபார் யூவர் பிரைட் ஃபியூச்சர். நவ் லெட்ஸ் ஸ்டார்ட் அவர் லெசன்.” என்று ஒரு வழியாக அறிமுகப்படலத்தை முடித்துக் கொண்டு பாடத்தை நடத்தினார்…

 

அவர் வந்ததிலிருந்து, அவருடைய மேனரிசம் அன்ட் ஸ்பீச் எல்லாத்தையும், திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கமாக ஆண்கள் கூறும் டயலாக்கான, ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே…’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க…

 

அவளின் அருகில் அமர்ந்து இருந்த ஆதவன், ” ராதிகா… வாட் ஹேப்பண்ட்? லிஸ்ன். சார் வாட்ச்ங் யூ.” என்று உலுக்க…

யோசனையிலிருந்த, ராதிகா தன்னை மீறி வேகமாக கத்தி விட்டாள். ” வாவ்… ஹேன்ஸம் மேன்.” என…

 

ஹோல் க்ளாஸே அவளைப் பார்த்து, சிரிக்க…

 

“சைலன்ஸ்…” என்ற கிருஷ்ணன், அவளை எழுந்திருக்குமாறு சைகை செய்ய…

 

” மீ சார்.” என்று ராதிகா வினவ.

 

சிரிப்பு பொங்க அதை அடக்கிய கிருஷ்ணனோ, ” ம்… நீ தான் எழுந்திரு. வந்ததிலிருந்து நான் சொன்ன எதையும் கவனிக்கலைன்னு தெரியுது. நீ ஒரு அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் என்று நல்லாவே புரியுது. விருப்பமிருந்தால் அமைதியா உட்கார்ந்து க்ளாஸை கவனி. இல்லேன்னா வெளியே தாரளமாக போகலாம்.” என்றவர், அவளின் அருகே அமர்ந்திருந்தவனைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்தவர், பிறகு சமாளித்துக் கொண்டு பாடத்தை நடத்தினார்.

 

ராதிகாவோ அவரது அதிர்ச்சியைப் பார்த்து, தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். ‘ பாவம்… ப்ரொபஸர் நம்மளைப் பார்த்து மிரண்டுட்டார்.’ எ

ன்று எண்ணினாள். அவரது அதிர்ச்சிக்கு காரணம், அவளுக்கு அருகில் அமர்ந்து இருந்து ஆதவன் தான் என்பது அவளுக்குத் தெரியாமல் போய்விட்டது…

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -6”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!