இதயம் பேசும் காதலே…(10)

4.3
(3)

கதவைத் திறந்த ரிஷி வாசலில் பானுமதி நின்றிருக்கவும் என்ன பாட்டி என்ன விஷயம் எதுக்கு இப்படி கதவை தட்டுறீங்க என்றான் .

ஒன்றும் இல்லை ரிஷி உள்ளே வரலாமா என்றார் பானுமதி. வாங்க என்று ரிஷி அழைத்திட பானுமதி உள்ளே வந்தார். கல்யாணம் தான் நேரம், காலம் பார்க்காமல் செஞ்சுட்டிங்க மத்த விஷயம் எல்லாம் நல்ல நாள் ,நல்ல நேரம் பார்த்து நடக்கணும் இல்லையா அது சொல்லணும்னு தான் என்றார் பானுமதி.

பாட்டி ப்ளீஸ் உங்களோட பஞ்சாங்கம், ஜாதகம் இதெல்லாம் உங்க கூடவே வச்சுக்கோங்க எனக்கு அது மேல நம்பிக்கை கிடையாது . நான் அதை பத்தி யோசிக்கிறதும் கிடையாது என் லைஃபை எப்போ ஸ்டார்ட் பண்ணனும்னு எனக்கு தெரியும் அதை யாரோ ஒரு ஜோசியக்காரன் சொல்லி நான் ஸ்டார்ட் பண்ண வேண்டாம் சரியா என்றான் ரிஷி.

அப்படி இல்லை ரிஷி கல்யாணம்தான் உங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டீங்க மத்த சடங்கு , சம்பர்தாயம் எல்லாம் எங்களோட  விருப்பப்படி நடக்கட்டுமே என்றார் பானுமதி. சரி பாட்டி அதுக்கு இப்போ என்ன பண்ணனும் என்ற ரிஷியிடம் நிலாவோட ஜாதகம் வேண்டும் என்றார் பானுமதி.

நிலாவுக்கு ஜாதகம் எல்லாம் கிடையாது பாட்டி என்ற ரிஷி இடம் அவள் அப்பா, அம்மா பெயர் ,பிறந்த நேரம், பிறந்த தேதி இந்த மாதிரி ஏதாவது இருக்கும்ல அதையாவது சொல்லு என்றார் பானுமதி.

சரி நீங்க கீழே போங்க நான் கேட்டு சொல்கிறேன் என்றான் ரிஷி. என்னது கேட்டு சொல்கிறியா அப்போ உனக்கே தெரியாதா என்றார் பானுமதி. எனக்கு நிலாவை தான் புடிச்சிருக்கு அவளோட பேரண்ட்ஸ் பத்தின டீடெயில்ஸ் எனக்கு தேவை இல்லை என்று நினைத்தேன் அவள் ஒரு அனாதை அவ்வளவுதான் அவளோட அப்பா அம்மா இறந்து போயிட்டாங்க. இறந்து போனவங்களை பத்தின டீடெயில்ஸ் எனக்கு எதுக்கு என்றான் ரிஷி .

அப்படியா சரி ரிஷி கொஞ்சம் கேட்டு சொல்லுப்பா என்ற பானுமதியிடம் சரிங்க பாட்டி நான் கேட்டு சொல்றேன் என்ற ரிஷி  அவரை பார்த்திட இதுக்கு மேல தான் இங்கு நிற்கக் கூடாது என்று புரிந்து கொண்ட பானுமதி அறையை விட்டு வெளியே சென்றார்.

நிலா உன் அப்பா ,அம்மா பெயர் என்ன என்றான் ரிஷி. என்ன அங்கிள் திடீர்னு என் அப்பா, அம்மா பெயர் எல்லாம் கேட்கிறீங்க என்ற நிலாவிடம் நீ என்னோட வைஃப் உன்னோட பேரண்ட்ஸ் பத்தின டீடெயில்ஸ் நான் தெரிஞ்சுக்க கூடாதா என்ன என்ற ரிஷியிடம் ஏன் தெரிஞ்சுக்க கூடாது தெரிஞ்சுக்கலாமே என் அம்மா பெயர் அனுராதா, அப்பா பெயர் பிரகாஷ் என்றாள் நிலா. அனுராதா வா என்ற ரிஷி ஏதோ நினைத்தவன் சரி ஓகே டேட் ஆப் பர்த் எல்லாம் சொல்லு நான் பாட்டிகிட்ட சொல்லணும் என்றான் ரிஷி.

தனது ராசி ,நட்சத்திரம் பிறந்த தேதி எல்லாம் கூறினாள் நிலா. உனக்கு ராசி, நட்சத்திரம் கூட தெரியுமா என்ற ரிஷியிடம் தெரியும் என்றாள் நிலா.

சரி ஓகே நீ இரு நான் போய் பாட்டி கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன் என்றான் ரிஷி. நான் போயி சொல்லி விட்டு வருகிறேன் அங்கிள் இங்கே உள்ளவங்க கிட்ட நான் பழகனுமே இது ஒரு ஆரம்பமா இருக்கட்டுமே என்றாள் நிலா. சரி நிலா என்ற ரிஷி தனது லேப்டாப்பில் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

என்ன பாட்டி ரிஷி கிட்ட என்னை பத்தின  டீடெயில்ஸ் கேட்டுட்டு இருந்தீங்களா என்று வந்தாள் நிலா.  ஆமாம்  நிலா கல்யாணம் தான் எங்க விருப்பம் இல்லாமல்  உங்க இஷ்டப்படி நாள் ,நட்சத்திரம் எதும் பார்க்காமல் நடந்துருச்சு மத்த சம்பிரதாதயம் எல்லாம் முறையா நடக்கனும் இல்லையா அதுக்கு தான் உன்னோட ஜாதகம் இல்லையே உன்னோட பிறந்த தேதி இந்த மாதிரி ஏதாவது தெரிஞ்சா ஜோசியர் கிட்ட சொல்லி நாள் குறிக்கலாமே என்றார் பானுமதி .

சரிங்க பாட்டி என்ற நிலா என்னோட பெயர் நிலா. நிலா பிரகாஷ் என்றாள்.

அம்மா பெயர் அனுராதா ,அப்பா பெயர் பிரகாஷ் என்றவளிடம் எனது உங்க அம்மா ,அப்பா பெயர் பிரகாஷ், அனுராதா வா என்றார் பானுமதி . ஆமாம் பாட்டி ஏன் இவ்வளவு அதிர்ச்சியா கேக்குறீங்க என்ற நிலாவிடம் இல்லை சும்மாதான் என்றவர் உங்க அப்பா ,அம்மா நிஜமாவே இல்லையா என்றார் பானுமதி.

ஆமாம் பாட்டி அவர் அப்படித்தானே உங்க கிட்ட சொன்னாரு எனக்கு அப்பா அம்மா யாரும் கிடையாது என்ற நிலாவிடம் சரி மா பரவால்ல அதான் உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம்ல என்றார் பானுமதி.

சரிங்க பாட்டி என்ற நிலா தன் அறைக்கு சென்றாள் .

பானுமதி யோசனையுடன் அமர்ந்திருந்தார். என்னம்மா வரச் சொன்னிங்க என்ற ரோஹினியிடம் அந்த நிலாவோட அம்மா ,அப்பா பெயர் என்ன தெரியுமா? பிரகாஷ் ,அனுராதா என்று பானுமதி கூறிட ரோகிணி அதிர்ச்சி ஆகினார். அனுராதாவோட பொண்ணு தானா. இவள் எதற்கு ரிஷியை கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்து இருக்காள் என்றார் ரோகினி.

எதுக்கு வந்திருப்பாள் நம்மளை பழிவாங்கவா இருக்கும் ஒன்று  அவள் ஏதோ திட்டத்தோட இங்கே வந்திருக்காளான்னு  முதல்ல நம்ம தெரிஞ்சுக்கணும் . நடந்த விஷயங்கள் ரிஷிக்கே தெரியாத போது இவள் ரொம்ப சின்ன பொண்ணா இருக்காளே இவளுக்கு எப்படி தெரிஞ்சிருக்கும் என்றார் பானுமதி.

அப்புறம் அந்த அனுராதாவுக்கு கல்யாணம் ஆகிருச்சா எனக்கு குழப்பமா இருக்கு என்றார் பானுமதி.

உன் புருஷன் எங்க உடனே அவனை  வரச் சொல்லு என்றார் பானுமதி.

என்ன நிலா யோசனையா இருக்க என்ற ரிஷி இடம் ஒன்றும் இல்லையே என்று சிரித்தாள் நிலா .

இதுதான் என்னோட அப்பா என்று தனது தந்தையின் போட்டோவை காட்டினான் ரிஷி .ஏன் உங்க அப்பா மட்டும் தனியா இருக்காரு உங்க அம்மா கூட சேர்ந்து எடுத்த போட்டோ எல்லாம் இல்லையா என்ற நிலாவிடம் ஏன் இருக்கே ஆனால் அம்மா வேற கல்யாணம் பண்ணிட்டாங்களே அதனால இந்த வீட்டில் மிஸ்டர்.மதிமாறனோட போட்டோ தான் இருக்கும் .அப்பா, அம்மா போட்டோ வச்சா அது அவங்களோட வாழ்க்கைக்கு பிரச்சினையா வரும்னு சொல்லி பாட்டி அதை வைக்க விட வில்லை என்றான் ரிஷி.

மத்த இடத்தில் வைக்க வேண்டாம் இது நம்ம பெட் ரூம் அங்கிள் இங்கே உங்க அப்பா ,அம்மா போட்டோ இருக்கட்டும் எனக்காக வைக்க மாட்டீங்களா என்றாள்  நிலா.

உனக்காக நான் ஏன் வைக்கணும் என்ற ரிஷியிடம் அங்கிள்  நீங்க என்னோட ஹஸ்பெண்ட் நான் கேட்டால் நீங்க செய்யணும் என்றாள் நிலா .

இது என்ன புது ரூலா இருக்கு என்ற ரிஷியிடம் இனிமேல் அப்படித்தான் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனிமேல் நான் சொல்லுறதை நீங்க கேட்டு தான் ஆகணும். நீங்க இந்த மீம்ஸ் எல்லாம் பார்க்க மாட்டீங்களா அதில் ஃபுல்லா என்ன போடுவாங்க கல்யாணம் ஆயிட்டா பொண்டாட்டி என்ன சொல்கிறாளோ அதுக்கெல்லாம் ஆமாம் சாமி போடணும் என்ற நிலா விடம் மீம்ஸா அதெல்லாம் வேற பார்க்கிறியா என்றான் ரிஷி.

நீங்கள் தானே போன் வாங்கி கொடுத்தீங்க. இந்த பேஸ்புக் இருக்கே சுவாதி ஓபன் பண்ணி கொடுத்தாள். அதில்  தான் நான் எல்லாம் பார்த்துப்பேன் என்ற நிலாவிடம் சரி சரி நீ பார்த்து தெரிஞ்சுக்கிட்டதெல்லாம் போதும் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் நீ என்ன படிச்சிருக்க என்றான் ரிஷி.

பிளஸ் டூ என்ற நிலாவிடம் மேல படிக்கிறியா என்றான் ரிஷி. எதற்கு நான் மேலே படிக்கணும் எனக்கு படிப்புல இன்ட்ரஸ்ட் இல்லை அதுவும் இல்லாமல் கல்யாணம் ஆயிடுச்சு கல்யாணம் ஆனதுக்கப்புறம் காலேஜ் போறதுக்கு ஒரு மாதிரி வெட்கமா இருக்கு நான் வீட்லயே இருக்கேன். இல்லன்னா நான் திரும்ப ஆபீஸ் வந்து அதே ஹவுஸ் கீப்பிங் வேலை பார்க்கிறேன் என்றாள் நிலா.

ஹவுஸ் கீப்பிங் வேலை பார்க்க போறியா நீ அந்த ஆபிஸோட ஓனரோட வைஃப் .நீ அங்கே கூட்டி பெருக்க போறியா என்ற ரிஷியிடம் அதனால என்ன அதுவும் ஒரு வேலை தானே என்றாள் நிலா.

இல்லை நீ படி என்றான் ரிஷி .அங்கிள் நான் என்ன படிக்கிறதா இருந்தாலும் நான் படிக்கிறதுக்கு முதல்ல டிசி வேணும் என்னோட டிசி எல்லாம் என் சித்தி இந்நேரம் குப்பையில்  போட்டு எரிச்சிருப்பாள். அவளும் அந்த ஊர்ல இருக்காளோ இல்லை கடன்காரனுக்கு பயந்துட்டு வேற எங்கேயோ ஓடிட்டாலோ அப்படி இருக்கும்போது நீங்க எப்படி என்னை படிக்க வைப்பீங்க டூப்ளிகேட் சர்டிபிகேட் ரெடி பண்ணி தான் நான் படிக்கணும்னா அப்படி ஒரு படிப்பு வேண்டாம்  என்றாள் நிலா .

சரி சரி ஓகே என்றவன் பசிக்குது நிலா நம்ம வெளியே போகலாமா என்றான். எதுக்கு வெளியில் போகணும் நீங்க சமைங்க நாம் சாப்பிடலாம் என்றவளை முறைத்தவன் உன்னை கொன்றுவேன் மரியாதையா என் கூட கிளம்பி வெளியில வா என்றான் ரிஷி.

வெளியில் எதுக்கு போகணும் நம்ம பேசாமல் அசோக் அங்கிள் வீட்டுக்கு போகலாமா அங்க பாரதி அக்கா நல்லா குக் பண்ணுவாங்க நேற்று நான் அவங்க வீட்டில் சாப்பிட்டேன் சாப்பாடு சூப்பரா இருந்துச்சு என்ற நிலாவை பார்த்து சிரித்தவன் யாராச்சும் செஞ்சு கொடுத்தா சாப்பிடுவ நீயா செய்யணுமே அப்படிங்கற எண்ணம் எல்லாம் உனக்கு வராது அப்படித்தானே என்றான் ரிஷி.

எதுக்கு எப்போ பார்த்தாலும் என்னை திட்டிட்டே இருக்கீங்க கல்யாணம் ஆயிட்டா ஹஸ்பண்ட் எல்லாம் திட்டனும்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா என்ற நிலாவிடம் அடிப்பாவி உன்னை நான் எப்ப திட்டுனேன் என்றான் ரிஷி.

இப்போ தானே சொன்னீங்க யாராச்சும் சமைச்சு போட்டா தின்னுகிட்டே இருக்கணும் இது மட்டும் தான் உனக்கு தெரியுமான்னு கோபமா கேட்டீங்க என்ற நிலாவை பார்த்து சிரித்தவன் நீ சின்ன பொண்ணு என்று அடிக்கடி நிரூபிச்சுட்டே இருக்க சரி வா என்று கூறி அவன் தயாராக ஆரம்பித்தான். எப்படி நான் ரெடி ஆகிறது எனக்கு தான் புடவை கட்ட தெரியாதே என்ற நிலாவிடம் உன்னை யாரு புடவை புடவையில் வர சொன்னது அந்த கப்போர்ட்ல உன்னோட டிரஸ் எல்லாம் இருக்கும் உனக்கு எந்த டிரஸ் புடிச்சிருக்கோ எடுத்து போட்டுட்டு வா என்றான் ரிஷி.

ஓகே என்ற நிலாவும் அழகான ஒரு ப்ராக் எடுத்து போட்டுக் கொண்டு வந்தாள். ப்ராக் போட மாட்டீங்க இப்ப போடுறீங்க என்ற ரிஷியிடம் அது ஃபர்ஸ்ட் டைம் போடும்போது ஒரு மாதிரி இருந்துச்சு இப்ப செகண்ட் டைம் தானே அதனால ஓகே தான் என்றாள் நிலா .சரி சரி வா போகலாம் என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான் ரிஷி.

…. தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!