உயிரிலே தளும்பும் உன் நினைவுகள் -9

4.8
(6)

 

அத்தியாயம் – 9

அன்று…

” நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று அனன்யா வாய் வார்த்தையாக சொல்லவில்லை. அவள் சொன்ன மாதிரியே ஹாஸ்டலுக்கு சென்றவுடன், சுந்தரிக்கு அழைத்து விட்டாள்.

” ஆன்ட்டி.” என அழைத்தாள்.

இந்த கொஞ்ச நாளில் அனன்யா, சுந்தரியுடன் நன்கு பழகி விட்டிருந்தாள்…

அவரும் ,” எப்படிடா இருக்க மா? ஒன்னும் பிரச்சினை இல்லையே. நல்லாதான இருக்கீங்க?” என பதறி விட்டார். 

” நாங்க நல்லா இருக்கோம். வீட்டுக்கு வந்தாச்சு. உங்கக் கிட்ட பேசணும். நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா ஆன்ட்டி.”

” சொல்லுமா…” என்றவர் யோசனையோடு தன் மகளை தேட…

” அவ கேண்டீன் போயிருக்கா ஆன்ட்டி.”

” சரி சொல்லு மா. எதுக்கு ஃபோன் போட்ட…”

” அது வந்து ஆன்ட்டி. நான் சொல்றதைக் கேட்டு எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க இப்படி ரெஸ்ட்லஸ்ஸா இருக்கிறதைப் பார்த்து, ராதிகாவும், அங்கிளும் கவலைப்படறாங்க. என்ன உங்க பொண்ணா நெனச்சுக்கோங்க. ராதிகா அக்கா, நம்மக் கூட தான் இருக்காங்கன்னு நினைச்சுக்கோங்க. நம்ம கையில எதுவும் கிடையாது. சாவு வரணும் இருந்தா, வீட்ல இருந்தாக் கூட நிகழும். நீங்க வருத்தப்பட்டு, அவங்களையும் ஹர்ட் பண்ணுறீங்க.” என.

” நானும் மறக்கணும் தான் நினைக்கிறேன் அனுமா. ஆனால் என்னால முடியல.” என்று சுந்தரி அழ.

“ஆன்ட்டி.‌‌.. ப்ளீஸ் அழாதீங்க. நான் சொல்றது உங்க நல்லதுக்காகத் தான் ஆன்ட்டி. எங்க அங்கிள் கிட்ட சொல்லி, தஞ்சாவூர் நல்ல சைக்கியாட்ரிஸ்ட் யாருன்னு விசாரிக்க சொல்லுறேன். நீங்க ஒரு ரெண்டு, மூணு கவுன்சிலிங் மட்டும் போங்க. சீக்கிரம் உங்களுக்கு க்யூர் ஆகிவிடும். நீங்க அதுக்கு அப்புறம் வேற விஷயத்தில் கவனம் செலுத்துங்க. உங்களுக்கு எதுல இன்ட்ரஸ்ட் இருக்கோ, அதுல கான்சென்ட்ரேஷன் செலுத்துங்க. அப்புறம் எல்லாமே சரியாயிடும். இந்த ஒரு முறை எங்களுக்காக ஒத்துழைப்புக் கொடுங்க. என்னை உங்க மகளா நினைச்சுக்கோங்க.” என.

அனன்யாவின் பேச்சால், அவரது மகள் அவந்திகாவின் முகம் கண்ணுக்குள் வந்து போக… அவர் இதுநாள் வரை ராதிகா சொன்னதற்கெல்லாம், மறுத்தவர் அனன்யாவின் பேச்சைக் கேட்டு தலையசைத்தார்.

அனன்யா இங்கிருந்துக் கொண்டே, அவளது மாமாவின் மூலம் தஞ்சாவூரின் சிறந்த சைக்கியாட்ரிஸ்ட்டுக் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கினாள்.

சுந்தரியும் ஒழுங்காகக் கவுன்சிலிங்குக்குச் சென்றாள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த பயம் மறைய ஆரம்பித்தது.

அதே நேரத்தில் அவர்கள் வீட்டு மாடியில் குடியிருந்த ஸ்வேதா, மாசமாக இருக்க… அவளை சுந்தரி தாயாக இருந்து கவனித்துக் கொண்டார். 

அனன்யா, ராதிகாவின் அம்மாவை மட்டும் மாற்றவில்லை. ராதிகாவையும் தான் மாற்றினாள். ராதிகாவும், அவளது தயக்கம், தடுமாற்றம் எல்லாம் மறைய… அவளது இயல்பு அனன்யாவால் மீண்டும், மீட்டெடுக்கப்பட்டது.

காலம் வேகமாக ஓட… அவர்கள் பிலிப்பைன்ஸ் வந்து ஒரு வருடம் முடிந்து இருந்தது.

 ஒருமுறை அனன்யா இந்தியாவிற்கு சென்று வந்தாள். அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு, மூன்று முறை எல்லோரும் வந்து, அவள் ஏற்கனவே தங்கியிருந்த அந்த ப்ளாட்டுக்கு அவளை வர வைத்து பார்த்துச் சென்றனர்.

நாளையிலிருந்து அடுத்த வருடம் படிப்பு ஸ்டார்ட்டாகுது. இந்தியாவிலிருந்து அனன்யா ஃபேமிலி வருவதாக சொல்லியிருக்க… இருவரும் இன்று ஷாப்பிங்குக்கு வந்திருந்தனர்.

டேவோ சிட்டி. பிலிப்பைன்ஸ்

ஜீ மால்… ஃபிப்த் ஃப்ளோர் ரூப் கார்டன்.

அந்த மாலையே ஒரு கலக்கு கலக்கி விட்டு, அக்கடா என்று அனன்யாவும், ராதிகாவும் அமர்ந்து இருந்தனர்.

” ஏய் அனு… அவ்வளவு தானே . பர்ச்சேஸ் ஓவர் தானே. ஐயம் வெரி டயர்ட் .” என்று கூறியவாறே தனக்கு முன்னால் இருந்த மேங்கோ ஃப்ளோட்டை அருந்தினாள் ராதிகா.

” ராது செல்லோ… இன்னும் கொஞ்சம் பர்சேஸ் பண்ணணும். ஹாஃப்னர்ல கிளம்பிடலாம். உனக்கு நல்ல இந்தியன் ரெஸ்ட்ரான்ட்ல லஞ்ச் வாங்கித் தரேன்” என்று அனன்யா டீல் பேசினாள்.

” ஹேய் அனு… நான் ஹாஸ்டல்லயே பார்த்துக்கிறேன். அங்கேயும் இந்தியன் ஃபுட் தான். அதனால நீ ஒன்னும் வாங்கித் தர தேவையில்லை.”

” ப்ளீச் செல்லோ. வேணும்னா நான் உனக்கு ஈவினிங் பானிபூரி வாங்கித் தரேன். “

‘ ஐ… பானிபூரியா…’ என்று மனதிற்குள் சப்புக் கொட்டியவள், வெளியேவோ கெத்தாக, ” அது தான் உனக்கு, உங்க வீட்ல உள்ள எல்லோருக்கும் வாங்கிட்டல்ல… அப்புறம் என்ன டி. காலையில் இருந்து ஹாஃப்னவர், என்று எவ்ளோ தடவை சொல்லிட்ட… அங்க இந்தியாவுல இல்லாதது இங்கே என்ன இருக்கு?”என்று ராதிகா முறுக்கிக் கொண்டாள்.

“அதெல்லாம் உனக்கு தெரியாது. என்னை எங்க வீட்ல எல்லோரும் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க. நான் ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுத்தால், நானே அவங்க கூட இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. சோ… அதான் இவ்வளவு மெனக்கெடுறேன். இன்னும் மாமாக்கு மட்டும் வாங்கணும். அதுக்கும் நீ தான் ஹெல்ப் பண்ணனும் டி.” என கெஞ்சுதலாக முடித்தாள் அனன்யா.

” ஹேய் என்னால முடியாது. நீ போய் வாங்கு. எனக்கு டயர்டா இருக்கு.என்னை ஆள விடு. நான் இங்கேயே வெயிட் பண்ணுறேன். நீ போய் வாங்கிட்டு எனக்கு ஃபோன் பண்ணு. நான் வரேன்.” என ராதிகா கூற.

அவளது முகத்தைப் பார்த்த அனுவும் வற்புறுத்தாமல் கிளம்பி விட்டாள்.

ஒரு வழியாக பர்சேஸ் முடிந்து, மதிய உணவையும் வெளியே முடித்துக் கொண்டு தான் ஹாஸ்டலுக்கு வந்தனர்.

    ************************

ராதிகா, அழகிய லேவண்டர் நிற குர்தி, சந்தன நிற ஜீன்ஸில் தயாராகி காத்திருக்க… அனன்யாவோ, இன்னும் தயாராகவில்லை.

அவளோ‍, நேற்று பர்சேஸ் செய்து விட்டு வந்தவற்றை களைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவின் பொறுமை, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

தனது கையிலிருந்த செல்ஃபோனில் டைமை பார்த்தவள், ” ஏன் டி அனு? உனக்கு என்ன தான் பிரச்சினை? எதுக்கு எல்லா ட்ரெஸையும் களைச்சி போடுற‌.”

” ராது… என்ன ட்ரெஸ் போடுறது என்று கொஞ்சம் குழப்பமா இருக்கு. இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே காலேஜ் வேறயா. நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு போகணும். ஃபர்ஸட் இம்ப்ரஷன். பெஸ்ட் இம்ப்ரஷன்ஸ். அதான் கொஞ்சம் நெர்வஸ்ஸா இருக்கு.”

” ஏன் டி அனு. என் வாயில் நல்லா வந்துரும். நம்ம இங்க வந்து ஒன் இயர் முடிஞ்சிடுச்சு‌. அப்புறம் என்னடி உனக்கு டென்ஷன்.”

” அது வேற. இது வேற. அப்ப நம்ம படிக்க போனது சைக்காலஜி. அது வேற காலேஜ். சும்மா கொஞ்ச பேரோட படிச்சோம். அது மாதிரியா. இங்கே நிறைய பேர் இருப்பாங்க. அவங்களோட மிங்கிள் ஆகணும். அது தான் கொஞ்சம் பயமா இருக்கு.” என அனன்யா கூற.

” என்னவோ போ அனு. எனக்கு ஒரே எக்ஸைட்டா இருக்கு. எப்பதான் நாம் ஆசைப்பட்ட மெடிசின் படிப்போமோ என்று இந்த ஒன் இயரா காத்துட்டுருந்தேன். இந்தியாவுல படிச்சிருந்தா ஃபர்ஸ்ட் இயர் முடிச்சிட்டு செகண்டியர் போயிருப்போம். 

இங்கே பிலிப்பைன்ஸ்ல சைக்கலாஜி ஒன் இயர் படிச்சா தான், மெடிசின் படிக்க முடியும். இப்ப தான் ஒரு வழியாக அதை முடிச்சிட்டு, நம்ம கனவை நிறைவேற்றப் போற காலேஜ்ஜை பார்க்கலாம் என்று பார்த்தால் வரமாட்டேங்குறீயே” என்று ராதிகா கூற.

” நானும் அதுக்காகத்தான் பரபரப்பா கிளம்புறேன். சரி இதுல நான் எதைப் போடுறது? எனக்கு நல்லா சூட் ஆகுறதை சொல்லுடி.” என.

கொலவெறியில் இருந்த ராதிகா, ” அனு… இன்னைக்கு காலேஜ் போட்டுக்கிறதுக்காகத் தானே, நேற்று பர்ச்சேஸ் பண்ணோம். எல்லாம் ட்ரையல் பார்த்து உனக்கு சூட்டாகுறதா தானே வாங்குனோம். அதுல எதையாவது போட்டுட்டு இப்போ வர… இல்லை நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்.” என்று மிரட்ட.

அந்த மிரட்டல் வேலை செய்தது. அடுத்த ஐந்தாம் நிமிடம் அனன்யா தயாராகி வந்து விட…

இருவரும் ஹாஸ்டலில் இருந்து கிளம்பி, எதிரே இருந்த மெஸ்ஸுக்கு சென்று உணவருந்தி விட்டு, ஒரு வழியாக காலேஜுக்கு கிளம்பினர்.

ஜிப்னிற்காக காத்திருக்க, சரியாக அந்த நேரத்தில் வண்டியும் வந்து விட்டது.

காலேஜில் இருவரும் அடியெடுத்து வைக்க…

அனன்யாவோ, ” இரு ராது. இன்னைக்கு மாமா வரேன் என்று சொன்னாங்க. இங்கே வெயிட் பண்ணுவோம்.” என்று என்ட்ரன்ஸ் கேட் அருகில் நின்றுக் கொண்டாள்.

ராதிகாவோ, ” நீ வெயிட் பண்ணு. நான் உள்ளே போய் வெயிட் பண்ணுறேன். கொஞ்சம் சீக்கிரமா வா அனு.” என்றவள் உள்ளே நுழைந்து அந்த காலேஜ்ஜை ஆர்வமாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது ஆர்வத்தை தடை செய்வது போல, ” ஏ கேர்ள்… ” என்ற குரல் ஒலித்தது.

ராதிகாவோ, அந்தக் குரலை லட்சியம் செய்யவில்லை.

மீண்டும் ” ஹேய் உன்னைத் தான். கம் ஹியர்.” என்ற அலட்டலான குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் ராதிகா.

ஸ்டைலாக தலையைக் கோதிக் கொண்டே, ஒரு கையால் இங்கே வா என்று சைகை செய்தான் ஒருவன்…

இவளோ யோசனையுடனே அவனது அருகில் சென்றாள். முன்பானால் பயந்து நடுங்கியிருப்பாள். இப்போ தான் அனன்யாவின் ட்ரைனிங் இருக்கிறது. ‘ யாரேனும் ரேகிங் பண்ணனும் என்று நினைத்தாலே அவங்களை தெறிக்க விடணும்.’ என்று இருவரும் பேசிக் கொண்டது அவளுக்கு நியாபகம் வரவே புன்னகையுடன் சென்றாள்.

நடந்துக் கொண்டே தன் தோழி வருகிறாளா என்றுப் பார்க்க…  

அவளோ இன்னும் உள்ளே வரவில்லை.

அவளது பார்வையை உணர்ந்தவனோ, ‘ ஒரு வேளை இவளுக்கு நாம் யாரென்று தெரியுமோ.’ என்று எண்ணியவன் ‘ இருக்காது.’ என்று தனக்குள் கூறிக் கொண்டு,” ஏய் க்வீக் ஃபாஸ்ட்.” என்றான்.

அவனது அருகே வந்தவளிடம் முதல் கேள்வியாக ,” நீ தமிழா…” என்று வினவியவன்‍, பிறகு வழக்கம் போல சில கேள்விகளை வினவினான். ” உன் பேர் என்ன? எந்த ஊர்? ” என்று எல்லாம் மொக்கை போட்டான்.

ராதிகாவும் கடனே என்று எல்லாவற்றிற்கும் பதில் கூறினாள்.

” சரி உனக்கு பாடத் தெரியுமா?” என்று அடுத்து வினவ.

” ஹாங்…” என்று முழித்தாள்.

“ஏன் பாடத் தெரியாதா? சரி பரவால்ல விடு. இங்கே கழுதை எதுவும் கிடையாது. அதனால பயப்படாமல் பாடு. அட்லீஸ்ட் நாலு லைன்ஸ் கத்திட்டாவது போ.” என்றவன் வெளியே இருந்து யாரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே வினவினான்.

ராதிகாவோ, ‘ டேய் எருமை மாடு. நீ என்ன என்னை பொண்ணு பார்க்கவா வந்திருக்க‌… பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? என்று கேட்டுட்டு இருக்கிற?.’ என மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தவள், அவன் தொடர்ந்து கூறியதைக் கேட்டு அவனை பார்த்து முறைத்தாள்.

” ஹலோ… என்ன லுக். சீனியர் கிட்ட கொஞ்சம் கூட பயமே இல்லையா. நான் சொல்றதை செஞ்சுட்டா, நீ போயிட்டே இருக்கலாம். இல்லைன்னா இங்கேயே நிற்க வேண்டியது தான்.” என.

கடுப்பான ராதிகா, அவனை வெறுப்பேத்த ” போடா போடா புண்ணாக்கு‌. போடாத தப்பு கணக்கு.” என பாட.

அவளது குரலின் இனிமையை கூட ரசிக்காமல் வேகமாக அதிர்ந்தவன் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்தான். நல்லவேளை அருகில் யாரும் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன், ” ஓய்… ஒழுங்கா ஒரு நல்ல பாட்டா பாடு. ஆங்… உன் பேர் என்ன ராதிகா தானே. அதுவும் கண்ணனோட ராதிகா தானே. அந்த கண்ணனை வச்சே ஒரு பாட்டு பாடு.” என்று கூற.

அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்றே அரத பழைய பாட்டான ” கண்ணன் எந்தன் காதலன்.” என்ற பாடலை மெய் மறந்து பாடினாள்.

அவளது குரலில் முகத்தில் வந்து போன பாவத்தில் லயித்து போனான் அவன்.

பாடி முடித்த ராதிகா, ” நான் போகட்டா சீனியர்.” என்று அவனைப் பார்த்து வினவ.

அவனோ ஒன்றும் கூறாமல் ப்ரீஸ் ஆகி நிற்க.

” ஹாய் மாம்ஸ்.நீங்க இங்கே இருக்கீங்களா? நான் உங்களை வெளியே தேடிட்டு இருந்தேன். எப்போ வந்தீங்க. வந்து ரொம்ப நேரம்ஆகுதோ?” என்று படபடவென அனன்யா வினவ.

ராதிகாவோ, கொலை வெறியில் அருகில் நின்றிருந்த நெடியவனைப் பார்க்க. அந்த மாயக்கண்ணனோ, ராதிகாவைப் பார்த்து கண் சிமிட்டி புன்னகைத்தான்.

இன்று…

கோபத்துடன் செல்லும் விஸ்வரூபனைப் பார்த்து மிரண்டவள், அவன் சென்றதும் ஆதியைப் பார்த்தாள் ராதிகா.

விஸ்வரூபன் அடித்ததில் லேசாக ரத்தம் வந்திருந்தது. 

அங்கு இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துத் துடைத்து விட்டவள்,” ஏன் ஆதி. என்ன ஆச்சு? உங்களுக்கும், அவருக்கும் என்ன பிரச்சனை.” என்றாள் தவிப்பாக.

” ஒன்னும் இல்ல ராதிகா. எங்க ரெண்டு பேருக்கு இடையில ஒரு சின்ன இஷ்யூ தான். அது அப்படி ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. சோ யூ டோன்ட் வொர்ரி. ” என்றவாறு, தான் அடிபட்டதாக கவலையுடன் இருக்கும் ராதிகாவை பார்த்து புன்னகைத்தான்.

” சரி வர்றீயா. உனக்கும் வேலைக்கு டைம் ஆயிடுச்சு தானே. உன்னை விட்டுட்டு கிளம்புறேன்.” என்று கூறியவன், அவனது காரை நோக்கி சென்றான்.

“இல்லை ஆதி. பக்கத்துல தானே நான் நடந்துப் போய்க்கிறேன். நீ பார்த்து போ. டேக் கேர்.” என்று ஆதியை அனுப்பி வைத்தவள், பெருமூச்சு விட்டுக் கொண்டாள். ‘ விஸ்வா… ஆளே மாறி விட்டார்.’ என்று மனதிற்குள் எண்ணியவாறே, வேலைக்குச் சென்றாள்.

அங்கு ஆதியோ, அடி வாங்கியதைக் கூட நினைத்து, கோபப்படாமல் புன்னகையுடன் காரை ஓட்டிக்கொண்டு சென்றான்.

சற்று முன் நடந்ததை நினைத்துப் பார்த்தான். தான் அமைதியாக உட்கார்ந்து இருக்கும் போது வந்து பேசிய விஸ்வரூபனின் வார்த்தைகள் காதுக்குள் மீண்டும் ஒலித்தது.

‘ “ஹலோ மிஸ்டர். ஆதவன். உங்களுக்கு என்ன வேணும்? உங்களுடைய சகவாசமே வேண்டாம் என்று தானே நாங்கள் ஒதுங்கிப் போகிறோம். எதுக்கு எங்களை வந்து தொந்தரவு பண்ணுறீங்க?”

“நானும் அதையேத் தான் சொல்லுறேன் அண்ணா. எங்களுக்கு சொந்தமானதைக் குடுத்துட்டா, நான் ஏன் உங்கக் கிட்ட சகவாசம் வச்சுக்கப் போறேன்.” என்று நக்கலாக வினவ.

” ஏய்… தேவையில்லாதத பேசாத?” என அழுத்தமான குரலில் விஸ்வரூபன் கூற.

” நான் பாட்டுக்கும் என் கேர்ள் ஃப்ரெண்டோட அவுட்டிங் வந்தேன். நீங்களா தானே அண்ணா வந்து பேசுனீங்க.” என ஆதி கூற.

” டேய் அண்ணான்னு கூப்பிடாதே. எரிச்சலா வருது. நீ எதுக்கு எங்க காலேஜ்ல வந்து சேர்ந்த? ஒழுங்கா காலேஜ் விட்டு ஓடிடு.”

” அண்ணான்னு சொல்லக் கூடாதா ஓகே. எனக்கும் அதுல விருப்பமில்லை. ஜஸ்ட் மரியாதைக்காகத் தான் சொன்னேன். நான் சும்மா ஒன்னும் அந்த காலேஜ்ல சேரலை. சீட்டுக்காக எவ்வளவு டொனேஷன் குடுத்துருக்கேன் தெரியுமா.” என.

” நீ குடுத்ததை விட டபுள் மடங்கு பணம் தரேன். எங்க காலேஜ் விட்டு போயிடு.” என்றான் விஸ்வரூபன்‌.

“என்ன சாரே… சும்மா, சும்மா எங்க காலேஜ் என்று சொல்லுறீங்க‌. அது உங்க காலேஜ் மட்டுமில்லை. எங்க அத்தை காலேஜும் கூட…” என்று ஆதி சொல்லிக் கூட முடிக்கவில்லை, “ஏய் அப்படி சொல்லாதே.” என்று கர்ஜித்தான் விஸ்வரூபன்.

“ஏன் சொல்லக்கூடாது. எனக்கும் அவங்க அத்தை தான்‌. அந்த உறவை மாத்த முடியாது.” என… 

அடுத்து விஸ்வரூபன் ஓங்கி ஒரு அறை விட்டான். ‘ அதை நினைத்தவனின் முகத்தில் ஒரு புன்னகைவந்தமர்ந்தது  

விஸ்வரூபனோ டென்ஷனோடு காரை ஓட்டிக் கொண்டிருந்தான். ஏற்கனவே ஹாஸ்பிடலில் ஒரு கடினமான ஆஃப்ரேஷன். அதை முடித்து விட்டு வந்தவன், ரிலாக்ஸிற்காக, பக்கத்திலுள்ள காஃபி ஷாப்பிற்கு வந்திருந்தான்.

அங்கு வந்தவனுக்கு இன்னும் பிபி ஏறியது தான் மிச்சம்.வீட்டிற்கு செல்ல வேண்டும் நினைத்தாலே மனம் நிலையில்லாமல் தவித்தது. சரி தான் என்று பீச்சிற்கு சென்றவன் கடலை வெறித்துக் கொண்டு இருந்தான். 

கண்களை மூடினால், ஆதியை தாங்கிப் பிடித்த ராதிகாவே கண்முன்னே வந்து சென்றாள். சும்மாவே பீச்சிற்கு வந்தால் அவளது நியாபகம் தான் அலைமோதும்.

அவளோடு இந்த பீச்சில் டைம் ஸ்பென்ட் பண்ணது தான் ஞாபகத்திற்கு வந்தது.

பழசையெல்லாம் அசைப்போட்டவன், மணியைப் பார்க்க பத்தை தாண்டியிருந்தது‌. 

அங்கிருந்து கிளம்பினவன்,வீட்டிற்கு வர… வீட்டில் அனைவரும் அவனுக்காகக் காத்திருந்தனர்.

எல்லோரும் உறங்கி இருப்பார்கள் என்று எண்ணியிருந்தான்.

சோஃபாவில் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து இருந்தனர். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்போக்கில் மாடிக்கு ஏற கிருஷ்ணன் தான் பேச்சை ஆரம்பித்தார்.

” ஏன் தம்பி. நான் தான் இந்த பிரச்சினையைப் பார்த்துக்கிறேன் என்று சொன்னேனே. அப்புறம் ஏன் அவன் கூட பொது இடத்தில் சண்டை போட்டுட்டு இருக்க. இப்ப பாரு உன்னால அந்தப் பொண்ணோட பேரையும் இழுத்து விட்டுருக்காங்க.”என.

இதுவரை தந்தை பேசியதைக் கேட்டு, ஒன்னும் கவலைப்படாமல், அலட்சியமாக இருந்தவன், கடைசியாக அவர் கூறியதைக் கேட்டு,” என்னப்பா சொல்றீங்க புரியல. ஃபர்ஸ்ட் நான் அவனை அடிச்சது உங்களுக்கு எப்படி தெரியும்.” என்று வினவ.

” இங்கே பாரு. நீ அங்க சண்டை போட்டு இருக்கிறது யாரோ வீடியோ எடுத்து, பேஸ்புக்ல, அப்புறம் நம்ம காலேஜ் வாட்ஸ்அப் குரூப்ல எல்லாம் ஷேர் பண்ணியிருக்காங்க‌. அதுவும் சும்மா ஒன்னும் பண்ணலை. ஒரு பொண்ணுக்காக காலேஜ் ஸ்டூடண்டும், ஒரு டாக்டரும் சண்டை

என்று காஃப்ஷெனோட ஷேர் பண்ணியிருக்காங்க.” என கிருஷ்ணமூர்த்தி கூற…

அந்த வீடியோவைப் பார்த்தவன் திகைத்து நின்றான்.

 தொடரும்…

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!