எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

4.6
(49)

இதயம் – 2

இலங்கையில் நவீன உயர்க் கல்வியை வழங்கும் முன்னணிக் கல்வியகமான கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறை பீடம் கணனித்துறை பீடம் உட்பட பல பீடங்களை கொண்டு இருந்தாலும் மருத்துவத் துறை பீடம் என்றால் சொல்லவும் வேண்டுமா? இன்று அந்த செமினார் அறையே இருவரைத் தவிர மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து இருந்தது.

“எனக்கும் உங்க எல்லாரையும் விட்டு போக ரொம்ப கஷ்டமா இருக்கு பட் என்னோட ஹெல்த்துக்கு இந்த ட்ரான்சர் வெரி இம்போர்டன்ட் ஸ்டூடண்ட்ஸ் என்ற பெண் லெக்சரர் தொடர்ந்து இது உங்களுக்கு பைனல் இயர் சோ செமஸ்டருக்கு டாப் மார்க்ஸ் எடுத்து அவுட் ஆகுங்க அது தான் என் ஆசையும் கூட” என்று அவர் கருத்துக்களை அள்ளி தெளித்துக் கொண்டு இருந்த போது அபிநயாவோ “க்கும்…என நொடித்துக் கொண்டவள் நாசமாபோச்சு” என்க…. அதற்கு விஷாலியோ “ போகட்டும் தெய்வம் என்றவள் ஒரு பெரு மூச்சுடன் இனி வர போற புது லெக்சரராச்சும் ஒழுங்கா சொல்லிக் கொடுக்குறாங்களான்னு பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டாள்.

அதே சமயம் அந்த லெக்சரரோ “புதுசா வர போறது ஒரு ஜெண்ட் லெக்சரர் தான் சோ அவர் வைக்குற டெஸ்ல எல்லாம் ஹையஸ்ட் மார்க்ஸ் எடுத்து நல்ல பெயர் வாங்குங்க ஸ்டூடண்ட்ஸ்” என்றவர் மேலும் சில அறிவுரைகளை கூறியவர் மாணவர்களிடம் விடைப் பெற்று ஆபீஸிட்கு செல்ல அவர் செல்வதை பார்த்த இவ் இருவருக்கும் பெரு மூச்சு.

 

இங்கோ, “காஷ்யபன் வீடு செம்மயா இருக்கு டா தேங்க்ஸ் அ லாட்” என விக்ரம் சொல்ல…

அவனை அனல் பார்வை பார்த்தவன் “எனக்கு ஒரு தம்பி இருந்தா நான் பண்ண மாட்டேனா இந்த தேங்க்ஸ் எல்லாம் சொன்னா சாவடிச்சுடுவேன் உன்னை” என்று சீற…

 

“ஓகே தேங்க்ஸ் அஹ் திரும்ப வங்கிடுறேன் அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?”

 

“நீ இந்த வீட்டுக்கு தனியா வர்றது நான் உட்பட வீட்ல யாருக்கும் பிடிக்கலை நீயே பிடிவாதம் பிடிச்சு தனியா வீடு வேணும்னு கேட்டு வந்திட்ட சோ நீ தேங்க்ஸ் எல்லாம் சொல்றதை பார்த்தால் நீ தான் எங்களை தூரமா நிறுத்தி வைக்கிற ரைட்?”

 

அவனின் நீளமான பேச்சில் அதிர்ந்த விக்ரம் “ஓ மை கோட் நான் இவ்வளவு தூரம் யோசிக்கல டா கொஞ்ச நாள் நான் தனியா இருக்க நினைச்சேன் தட்ஸ் ஆல்” என்றான் அவசரமாக…

 

“இட்ஸ் ஓகே லீவ் தட் விக்ரம் பட் ரொம்ப நாளா கேட்கணும்ன்னு நினைச்சேன் இந்தியால பீஎச்டி முடிச்ச ஓகே பட் உனக்கு இங்க உள்ள சிலபஸ் டீச் பண்ண ஈசியா இருக்குமா?”

“காஷ் என இழுத்தவன் அவனின் முறைப்பில் காஷ்யபன் என பெயரை சொன்னவன் ஶ்ரீ லங்கால மட்டும் உப்புக்கு சோடியம் சயனைட்னா படிச்சு கொடுக்குறாங்க? என அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னவன் நாம எங்க போனாலும் உப்புனா அதோட கெமிகல் நேம் சோடியம் குளோரைட் தான் சோ அது போல மொழிகள் மாறிப் போனாலும் சிலபஸ் மாறாது டா சில்” என்று கூறி புன்னகைத்தான்.

 

“அனிவே ஆல் த பெஸ்ட் என்றவன் தொடர்ந்து எப்போ இந்த வீட்டுக்கு ஷிப்ட் ஆகப் போற?”

 

“நெக்ஸ்ட் வீக் டா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அங்கு வந்த இந்து “விக்ரம் என்ன ரொம்ப இளைச்சு போயிட்ட?” என்று குறை பட…

 

“என்ன இளைச்சு போய்ட்டேனா என அதிர்ந்தவன் டெய்லி வீடியோ கால்ல பேசுறிங்களே ஆன்டி அப்போ எல்லாம் தெரியலையா?” என அவன் கேட்ட கேள்விக்கு தோளில் அடித்த இந்து “ஆன்டின்னு சொல்ல வேண்டாம்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் அம்மானு கூப்பிடு” என்று சொல்ல…

அதற்கு காஷ்யபனோ “அத்தை விக்ரம் உங்களை அம்மான்னு கூப்பிட்டா என் அம்மாவும் சேர்ந்து திரும்பி பாப்பாங்க நீங்க ரெண்டு பேரும் யார் ஃபர்ஸ்ட்னு அடிச்சிக்க போறீங்களா?” என்று வினவ…

 

“அவளை ஏன் குழப்பி விடுறிங்க மாப்பிளை?” என்றவாறு அங்கு வந்த ஜீவா விக்ரம் நல்லா இருக்கியாப்பா?” என்று கேட்க…

 

இந்துவும் யோசனையாக உள்ளே சென்று மூவருக்கும் காஃபி தயாரித்து எடுத்து வந்து கொடுக்க, சிரித்து பேசிக் கொண்டு இருந்த மூவரும் கதைத்துக் கொண்டே குடித்தனர்.

 

“அம்மா” என்று விக்ரம் அழைக்க “நீ இப்படியே அழைச்சுக்கோ நான் லதா கூட பேசிக்கிறேன்” என இந்து பூரிப்பாக சொல்ல…

 

“எப்படி மாமா அத்தை கூட ஓட்டிட்டு இருக்கீங்க?” என காஷ்யபன் கேட்க.. ஜீவாவோ ஒன்றும் சொல்லாமல் குரலை செரும… “அஹான் சமாளிபிகேஷன் போல அத்தை கவனிச்சிக்கோங்க” என்க….

 

“சத்தமாக சிரித்த விக்ரம் “ஏன் டா அவரே பாவம்ல” என்று சொல்லிக் கொண்ட அதே நேரம் அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டே உள்ளே யோசனையாக வந்து இருந்தாள் ஆழினி.

 

“ஆழி இவ்வளவு தூரம் தனியா ஏன் வந்த எங்க கூட வந்து இருக்கலாமே?” எனக் காஷ்யபன் கேட்க….

 

அவளோ, விக்ரம் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டு “எனக்கு மட்டும் வேண்டுதலா தனியா வர? என சோகம் இழையோட சொன்னவள் விக்ரமை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே காஷ்யபனை பார்த்து என்னோட தமிழ் லெக்சரருக்கு உடம்பு சரி இல்லை ஹார்ட் அட்டாக் வந்து வீட்டுல இருக்கார் அவரை பார்க்க தான் வந்தேன் பக்கத்துல தான் வீடு இங்க வந்த பிறகு தான் என் மைண்ட்லயே விக்ரம் வீடும் இங்க இருக்கே நீங்களும் இங்க வந்திங்களே அதான் வந்தேன்” என்று சொல்ல….

 

“இப்போ அவருக்கு ஹெல்த் எப்படி இருக்கு ஆழி?”

 

“பைன்னு சொல்ல முடியாது பட் அவர் பொண்ணோட கல்யாணத்தை செஞ்சி பார்க்கணும்னு ஆசைப்படுறார்” என்றவளின் பார்வை விக்ரமில் படிந்தது.

 

அவனோ அவளின் பேச்சை கேட்டுக் கொண்டாலும் தனது பார்வையை அலைபேசியில் படிய விட்டு இருந்த விக்ரமிற்கு அவளின் பார்வை தன்னில் படிவதை அறிந்திருக்கவில்லை.

 

காஷ்யபனுக்கோ அவளின் பேச்சும் முகப் பாவனையும் எதையோ உணர்த்த விழிகளை அகல விரித்தவன் அவளை வெளியில் வருமாறு விழிகளால் அழைத்தவன் முதலில் எழுந்து வெளியில் சென்று விட, விக்ரம் அலைபேசியில் கவனம் பதித்து இருப்பதனால் இவர்கள் செல்வது தெரியாது இருக்க மெதுவாக எழுந்து காஷ்யபன் பின்னோடே சென்று இருந்தாள் ஆழினி.

 

சுவரில் சாய்ந்து நின்று இருந்த காஷ்யபனோ தன் முன்னால் யோசனையாக நின்று இருந்தவளை ஏறிட்டு பார்த்தவன் “விக்ரம்க்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டு வந்துட்டியா?” என்ற அவனின் கேள்வியில் அவ்வளவு கோபம் இருந்தது.

 

“சார் ரொம்பவே கவலை பட்டார் காஷ் அதான் நம்மலே நல்ல பையனை வச்சிட்டு ஏன் வெளில அவங்களை தேட வைக்கணும்? அதான் வாக்கு கொடுத்திட்டு வந்துட்டேன் பட் இப்போ எனக்கு டென்ஷன் ஆஹ் இருக்கு விக்ரம் இதுக்கு ஓகே சொல்வானா?” என்று புலம்ப…

 

உஃப் என்ற பெரு மூச்சுடன் “அட்லீஸ்ட் என்கிட்டயாச்சும் ஒப்பீனியன் கேட்டு இருக்கலாம் ஆழி? என்றவன் தொடர்ந்து மார்னிங் சொன்னான் தானே அவனுக்கு பிடிச்ச போல ஒரு பொண்ணை லவ் பண்ணி தான் மேரேஜ் பண்ணிப்பேன்னு உறுதியா சொன்னான்ல பட் எந்த நம்பிக்கைல இப்படி சொல்லிட்டு வந்த ஆழி அவர் வேற ஹார்ட் ஃபேஷன்ட்ன்னு சொல்ற”

 

“நல்ல பொண்ணு தான் காஷ் விக்ரம் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருப்பான்” 

 

அவளை முறைத்தவன் “நீ இதை அவன்கிட்ட கேட்டு முடிவு பண்ணி இருக்கணும் ஆழி அதுக்கு முதல் நீ அந்த சார்கிட்ட மேரேஜ்க்கு சம்மதம் சொல்லிட்டு வந்து இருக்க” என்று அவன் சீற….

 

விழிகள் கலங்க அவனைப் பார்த்து “என்னை திட்ட வேணாம்” என்று இதழ்களை பிதுக்க..

“ஓ மை கோட் சாரி ஆழி உனக்கு நான் சொல்றது இப்போ ஏசுற போல தெரியும் பட் அவன் உன் ப்ரெண்ட் அப்படின்னு அவன் சம்மதம் இல்லாமல் நீயா அவன் வாழ்க்கைல முடிவெடுக்குறது தப்புன்னு தான் சொல்றேன் என்றவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன் அவளின் தலையை மென்மையாக வருடிய படி இட்ஸ் ஓகே நாம அவன்கிட்ட பேசி பார்க்கலாம் அவனுக்கு இஷ்டம் இல்லைனா வேற நல்ல வரன் பார்த்து அந்த பொண்ணுக்கு நாமளே முன்னால இருந்து மேரேஜ் பண்ணி வைக்கலாம்” என்று சொல்ல…

 

அவனை இறுக அணைத்துக் கொண்டவள் “வீட்டுக்கு கிளம்புறப்போ சாரை பார்த்திட்டு போயிடலாம்” என ஆழினி கெஞ்ச… “விக்ரம் வேண்டாம் நாம மட்டும் போயிட்டு பார்த்திட்டு வரலாம்” என்றான்.

 

அவனை பாவமாக பார்த்தவள் “நீங்க ரெண்டு பேரும் இங்க பக்கத்துல தான் இருக்கீங்க அதுவும் விக்ரமுக்கு பார்த்த வீடும் இங்க தான்ன்னு அவனை பத்தின எல்லாமே சொல்லிட்டேன்” என்றாள் மீண்டும் அவன் திட்டிவிடுவானோ என்ற பயத்தில்….

 

“ஆர் யூ மேட்? என்னடி உனக்கு இவ்வளவு அவரசம் யோசிக்க மாட்டியா?”

அவளோ அவனை மிரண்டு பார்க்க, “இப்போ அவன்கிட்ட அவங்க மேரேஜ்பத்தி கேட்டா அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்? அதை யோசிச்சுப் பார்த்தியா அவன்கிட்ட பொறுமையா பேசிக்கலாம்னு நினைச்சு இருந்தேன் பட் நீ பண்ணி வச்சு இருக்க வேலைல தலை சுத்துது டி”

 

“அதெல்லாம் நான் சொல்லிட்டேன் சும்மா கூட்டிட்டு வரேன்னு” என்று அவள் சொல்ல….

 

அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன் “இன்னும் என்ன எல்லாம் பண்ணி வச்சு இருக்க?” என்று அவன் வினவ…

 

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் “பொண்ணுக்கு இப்போ தான் இருபத்தி மூன்று வயசு” என்க….

 

அதிர்ந்தே விட்டான் அவன்.

 

“சோ பைனல் இயர் படிக்கிற பொண்ணு டி அவ படிப்பு வேஸ்ட் ஆகிட போகுது உனக்கு என்ன லூசா?” என்று கேட்டே விட்டான்.

 

“அவ நல்ல பொண்ணு அவளை வேற யாருக்கும் அவங்க மேரேஜ் பண்ணி கொடுத்து அவ படிப்பு கெட்டுட கூடாது காஷ். விக்ரம் லெக்சர் பண்ண போற யூநிவர்சிட்டில தான் அவளும் படிக்கிறா கூடுதல் தகவல் என்னனா அவள் மெடிகல் ஸ்டூடண்ட் தான் சோ விக்ரமை கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ படிக்கிறதுக்கும் ஹெல்ப் பண்ணுவான்ல?” என்று கேட்டவளை எங்கனம் அவன் முறைப்பது அவள் பின்னால் அனைத்தையும் கேட்ட படியே வந்து நின்று இருந்தான் விக்ரம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 49

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!