61. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.8
(132)

நெருக்கம் – 61

குரு தன்னவளுடைய வேதனையைக் கண்டு குற்ற உணர்ச்சியில் தவித்தான்.

தன் மீது நிஜமான காதல் கொண்ட பெண்ணின் வலி அல்லவா இது.

அவளுடைய அழுகையைப் பார்க்க முடியாது அவளை இழுத்து தன்னுடைய மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் அவளுடைய உச்சந்தலையில் தன்னுடைய உதடுகளைப் புதைத்தான்.

தாராவின் காதலுக்கும் என் அபியின் காதலுக்கும்தான் எத்தனை எத்தனை வித்தியாசம்.?

அவன் எவ்வளவோ கெஞ்சியும் தாரா மீது அன்பைப் பொழிந்தும் அவனை வேண்டாம் என விலக்கி விட்டுப் போன தாராவின் காதலும்

எவ்வளவோ கொடுமைகள் புரிந்து எந்த அங்கீகாரமும் கொடுக்காமல் வீட்டை விட்டு துரத்திய பின்பும் கூட தன்னுடைய கடந்த காலத்தை நினைத்து வருந்தி தனக்காக கவலை கொள்ளும் அபியின் காதலும் ஒன்று அல்லவே.

அக்கணம் அபர்ணா அவனுடைய கண்களுக்குத் தேவதையாகவே தெரிந்தாள்.

சற்று நேரத்தில் அவளாகவே அவனுடைய அணைப்பிலிருந்து விலக, மறுக்காமல் அவளை விட்டு விலகி நின்றவன் “சாரிடி…” என்றான்.

அவளோ அவனிடம் எதுவும் பேசவே இல்லை.

சற்று நேரத்தில் இரவு உணவை எடுத்து வந்தவன் அவள் உணவை வேண்டாம் என மறுக்க பிடிவாதமாக உணவைப் பிசைந்து அவளுக்கு ஊட்டியே விட்டவன் அவள் உண்டு முடித்ததும் தன்னுடைய கைகளைக் கழுவ,

“நீங்க சாப்பிடலையா..?” எனக் போட்டாள் அவள்.

அவளுடைய கேள்வியில் அவனுக்கோ நெஞ்சம் நெகிழ்ந்தது.

“ப… பசிக்கல அபி…” என்றவன் தட்டைக் கழுவி வைத்துவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தபோது அவளோ விழிகளை மூடிப் படுத்திருந்தாள்.

சற்று நேரம் அவளையே அசையாமல் பார்த்தவாறு நின்றவனுக்கு மனம் நிறைந்தது.

இத்தனை நாட்களாக அவன் தேடி அலைந்த செல்வம் அவனுடைய வீட்டிற்கே வந்துவிட்டது என எண்ணி நிம்மதி அடைந்தவன் மெல்ல அவளை நெருங்கி படுக்கையில் அவளுக்கு அருகே படுத்தான்.

தூக்கம் இன்றி விழிகளை மூடிப் படுத்திருந்தவளுக்கு குரு கூறிய அனைத்தும் மீண்டும் அவளுடைய தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான்..?

காதலியால் ஏமாந்து மிகவும் பாசம் வைத்த அன்னையின் பிரிவால் தவித்துத் துடித்து தனிமையில் இறுகிப்போய் சொல்லவொண்ணாத வேதனையை அனுபவித்திருப்பானே…!

பாவம்… என எண்ணியவளுக்கு மீண்டும் கண்ணோரம் கசிந்தது.

அவன் அவளுக்கு எவ்வளவு வேதனைகளைப் பரிசாக அளித்திருந்தாலும் கூட அவள் அவனைக் காதலித்தது நிஜம்தானே.?

அவனுடைய வலியை சகிக்க முடியாது சிரமப்பட்டாள் அபர்ணா.

அவள் தூங்குவது போல தன்னுடைய விழிகளை மூடி அமைதியாகப் படுத்திருக்க குருவோ அவள் தூங்கிவிட்டாள் என எண்ணி மெல்ல பட்டும் படாமலும் அவளுடைய நெற்றியில் காதலோடு முத்தம் பதித்தவன் சற்றே கீழே குனிந்து அவளுடைய மேடிட்ட வயிற்றுக்கும் முத்தத்தைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்து படுத்துக்கொள்ள இவளுக்கோ அழுகை வந்துவிடும் போல இருந்தது.

அன்னை இறத்ததுக்கு கூட பெரிதாக அழவில்லை என்றானே.

மனதிற்குள் கவலையை அடைத்து வைத்திருப்பானோ என்றெல்லாம் சிந்தித்தவள் அதற்கு மேல் வேதனையை அடக்க முடியாது சட்டென விழிகளைத் திறந்து தன் அருகே படுத்திருந்த குருவைப் பார்த்தாள்.

அதே கணம் அவளுடைய முகத்தைப் பார்த்தவாறு படுத்திருந்த குருவோ அவள் திடீரென கண்களைத் திறந்து பார்க்கவும் அதிர்ந்து போனவன் என்ன என்பதைப் போல அவளை நோக்கித் தன் பார்வையைச் செலுத்த எதுவும் கூறாது அவனுடைய தலையைப் பற்றி இழுத்தவள் தன்னுடைய மார்பில் அவனை சாய்த்துக் கொண்டாள்.

அதிர்ந்து விழித்தான் அவன்.

“எத நினைச்சும் கவலைப்படாதீங்க குரு…” என்றவள் அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, அவனுக்கு அக்கணம் உள்ளுக்குள் ஏதோ உடைவதைப் போல இருந்தது.

ஓ என எழுந்த ஆழிப்பேரலை அவனை அடித்து வீழ்த்துவது போல இருக்க அவளுடைய மார்பில் அழுத்தமாக புதைந்தவனின் விழிகள் மெல்ல கலங்கின.

“பொண்ணுங்க மட்டும்தான் அழனும்னு இல்ல… பசங்களும் அழலாம்… பசங்க அழுதா பொம்பளைன்னு யார் சொன்னது..? எல்லாருக்கும் உணர்வுகள் ஒன்னுதான் குரு… யாரு ரொம்ப வேதனைப் படுறாங்களோ அவங்களுக்கும் கண்ணீர் சுரக்கும்… அழுறதுல தப்பே கிடையாது… நீங்க அடக்க வேணாம்… உங்களோட வலி கவலை எல்லாத்தையும் இப்பவே போட்டு உடைச்சிடுங்க…

அம்மா போயிட்டாங்கறத எல்லாருக்கும் சொல்லிடுங்க… உங்களுக்குள்ளேயே மறைச்சு அடக்கி தவிச்சதெல்லாம் போதும் குரு….” என்றவள் அவனை இன்னும் இறுக்கமாகத் தன் மார்போடு அணைத்துக் கொள்ள அவ்வளவுதான் அவனுடல் குலுங்கத் தொடங்கியது.

சொல்லி அழுவதற்கு எந்த உறவோ சொந்தமோ இல்லை என்றுதானே அனைத்தையும் அடக்கி மறைத்து வைத்திருந்தான்.

இன்றோ அவனுக்கென ஒரு உறவு வந்து அணைத்து நான் இருக்கிறேன் அழுதுவிடு எனக் கூறியதும் உடைந்து போனவனாய் அவன் கதறி அழத் தொடங்க அவனுடன் இணைந்து அவன் மீது கொள்ளை காதல் வைத்திருந்த அந்தச் சிறு பெண்ணும் அழுகையில் கரைந்தாள்.

அவனுடைய கரங்களோ அவளைத் தன்னோடு வளைத்துக் கொண்டேன்.

அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தை இன்னும் வாட்டமாக புதைத்துக் கொண்டவன் கண்ணீரில் அவளைக் குளிப்பாட்ட அவளுடைய ஒற்றைக் கரமோ உயர்ந்து அவளுடைய தலையை வருடிவிட்டது.

சிறிது நேரம் அப்படியே தன்னுடைய மனப்பாரம் முழுவதையும் கண்ணீரில் கரைத்தவன் மெல்ல நிமிர்ந்த போது அவளும் அவனைக் கண்ணீரோடுதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எ… எல்லாமே கடந்து போயிரும் குரு… மறந்திடுங்க… அந்த வலி எல்லாத்தையும் மறந்திடுங்க..” என்றவள் அவனுடைய தாடி அடர்ந்த கன்னத்தை வருடினாள்.

“உன்ன மாதிரி ஒரு தேவதையை நான் ஏன்டி முதலே சந்திக்கல…?” எனக் கேட்டவன் அவளுடைய கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டு மீண்டும் அவளுடைய மார்பில் தன் முகத்தை சாய்க்க அழுது முடித்து ஒரு தெளிவுக்கு வந்திருந்தவள் தன் மார்பில் அழுத்தமாக முகம் புதைத்திருந்தவனை விலக்க முயன்றாள்.

“ஏன்டி..?” என்றவன் அவளுடைய வயிற்றை அழுத்தாது இன்னும் அவளுடைய மார்பில் தன்னுடைய முகத்தை அழுத்தமாகப் புதைக்க,

சட்டென அவனைத் தள்ளிவிட்டவள்,

“போ… போதும்… எல்லா கவலையும் போற அளவுக்கு அழுதுட்டீங்கல்ல…? அதுவே போதும்… தூங்குங்க…” என அடைத்த குரலில் கூறியவள் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொள்ள அவனுடைய இதழ்களிலோ புன்னகை விரிந்தது.

தன்னுடைய வேதனை போக வேண்டும் என எண்ணுபவள் என்னை விட்டு ஒருபோதும் விலக மாட்டாள் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவளை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டவன் அவளுடைய கூந்தலில் தன் முகத்தைப் புதைத்தான்.

“அபி…?”

“என்ன…?”

“ஐ லவ் யூ…”

“………….”

“காதல்னா எப்படி இருக்கணும்னு நீ எனக்குப் புரிய வச்சிட்ட… ஐ லவ் யூடி பட்டு…” என நெகிழ்ந்து போய் கூறினான் அவன்.

அவன் காதலைக் கூறியதும் அவளுடைய உடல் சிலிர்த்து அடங்கியது.

அந்தச் சிலிர்ப்பை அவனும் உணர்ந்து கொண்டான்.

முதல் முறையாக அவனுடைய அணைப்பை விலக்கத் தோன்றாது தன்னுடைய விழிகளை மூடி உறக்கத்திற்கு செல்ல முயன்றாள் அபர்ணா.

அடுத்த நாள் காலையில் எழுந்தவன் தனக்கு முன்னரே எழுந்து தயாராகி அமர்ந்திருந்த அபர்ணாவைக் கண்டு புருவம் உயர்த்தியவாறு,

“என்னம்மா காலைல இவ்ளோ நேரத்துக்கு எங்க கிளம்பிட்ட..? அம்மா வீட்டுக்குப் போகணுமா..? 5 மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் ரெடி ஆகி வந்து கூட்டிட்டுப் போறேன்..” என்றான்.

“நான் அந்தத் தாராவை மீட் பண்ணணும்..” என்றாள் அவள்.

அவனுடைய முகமோ இறுகிப் போனது.

“இந்தப் பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் அபி…”

“நான் அவளைப் பாக்கணும்…” என அபி பிடிவாதமாகக் கூற வேறு வழி இன்றி சற்று நேரத்தில் தயாராகியவன் அவளையும் அழைத்துக் கொண்டு தாராவின் வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினான் குரு.

அரை மணி நேரத்தில் அவளுடைய வீட்டிற்கு முன்பு வண்டியை நிறுத்தியவன் அபர்ணாவைப் பார்த்தான்.

“அபிம்மா நீ இங்கயே இரு… அவ சாக்கடை… ஏதாவது சொல்லி உன்னோட மனச கஷ்டப்படுத்திடுவா… நானே அவகிட்ட பேசிட்டு வந்துர்றேன்…” என்றவாறு அவன் காரில் இருந்து இறங்க முயற்சி செய்த கணம்

“என்னோட வாழ்க்கைல எல்லா விதமான கஷ்டத்தையும் நான் அனுபவிச்சிட்டேன்… இதுக்கு மேல நான் கஷ்டப்படுறதுக்கு எதுவுமே இல்ல குரு… நானும் உங்க கூட வருவேன்.” எனக் கூறிக்கொண்டு காரிலிருந்து வேகமாக இறங்கினாள் அவள்.

“ஏய் எதுக்காக இவ்வளவு வேகமா இறங்குற..? பார்த்துடி மெதுவா வா..” என்றவன் அவளைத் தன் தோளோடு அணைத்தவாறு மெல்ல அழைத்துச் செல்ல தாராவின் செவிகளுக்கோ தன்னைத் தேடி வந்தவர்களைப் பற்றிய செய்தி பறந்தது.

வேகமாக வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தவள் நிறைமாத வயிற்றோடு தன்னுடைய மனைவியை அழைத்து வரும் குருவை வெறித்துப் பார்த்தான்.

அவளைப் பார்த்த கணம் அவளுடைய முகத்திலோ அத்தனை வெறுப்பு வெளிப்பட்டது.

“ஃபைனலி உன்னோட ஓடிப்போன மனைவிய கண்டுபிடிச்சிட்ட போல..? போகும்போது சிங்கிளா போனவ வரும்போது வயித்த நிறப்பிக்கிட்டு வந்திருக்காளே…. உள்ள இருக்கிறது யாரோட குழந்தை…?” என வேண்டுமென்றே சீண்டுவதைப் போல கேட்க அடுத்த கணம் அபர்ணாவின் கரமோ தாராவின் கன்னத்தில் வேகமாகப் பதிந்தது.

“என்னப் பத்தி தப்பா பேசினா பெரியவன்னு கூட பார்க்க மாட்டேன் தொலைச்சிடுவேன் பார்த்துப் பேசு…” என அவளை அறைந்து விட்டு கோபத்தோடு எச்சரித்தாள் அபர்ணா.

தாராவோ ஒரு நொடி திகைத்து விழித்தவள் அதன் பின்பே அபர்ணா தன்னை அறைந்திருப்பதை உணர்ந்து அடக்க முடியாத சீற்றத்தோடு பிள்ளைத்தாச்சி பெண் என்று கூட பார்க்காது அவளைத் தள்ளிவிட முயன்ற கணம் சட்டென அபர்ணாவைப் பற்றித் தன் பின்னால் இழுத்து நிறுத்தியவன்,

“அவ மேல கைய வச்சீன்னா உன்ன நான் அடிச்சே கொன்னுருவேன்…” என எச்சரித்தான் அவன்.

அவனுக்கோ இதயம் வேகமாகத் துடித்தது.

அவன் மட்டும் சுதாரிக்காது விட்டிருந்தால் நிச்சயமாக தாரா தன் மனைவியைத் தள்ளிவிட்டுருப்பாள் என்பதை உணர்ந்தவனுக்கு மேலும் மேலும் சீற்றம் பொங்கியது.

“ச்சீ நீ எல்லாம் ஒரு பொண்ணா..? எப்போதான் திருந்தப் போற..? உனக்கும் எனக்கும் செட் ஆகாதுன்னு விட்டுப் போய்ட்டேல்ல…? அதுக்கப்புறம் நான் உன்னத் தேடி வரவே இல்லையே… நமக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு… அப்புறம் எதுக்காக என்னோட வாழ்க்கைல திரும்ப மூக்க நுழைக்கிற..? எதுக்கு என் பொண்டாட்டியோட ரிப்போர்ட்ட மாத்தி வச்ச..? உனக்கு என்னதான் பிரச்சனை..?” என அவன் கோபத்தில் கர்ஜித்தான்.

“எனக்கு நீதான் வேணும்….” என்றிருந்தாள் தாரா.

அதிர்ந்து போனான் அவன்.

திருமணமாகி இத்தனை வருடங்களில் இரண்டு குழந்தை வேறு இருக்கும்போது இவள் இப்படிக் கூறுவது அவனுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.

அபர்ணாவோ கொதித்துப் போனாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 132

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “61. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!