என்னாச்சு ஏன் இப்படி இருமுற என்றவனிடம் ஒன்றும் இல்லை என்றவள் தண்ணீர் என்றிட அவன் தண்ணீர் பாட்டிலை நீட்டினான். இல்லை சுடுதண்ணி வேண்டும் என்றவள் எழுந்து செல்ல நீ இரு நான் எடுத்துட்டு வரேன் என்றான். இல்லை பரவாயில்லை என்றவளிடம் சொல்றேன்ல என்றவன் கிட்சனுக்கு சென்று கொஞ்சமாக சுடுதண்ணீர் வைத்து பிளாஸ்கில் ஊற்றி எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான். தாங்க்ஸ் என்றவளிடம் இனிமேல் தாங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம். நாம இரண்டுபேரும் கணவன், மனைவி நமக்குள்ள நன்றி சொல்ல ஆரம்பித்தால் வாழ்க்கை முழுக்க நன்றி மட்டும் தான் சொல்ல வேண்டி வரும் என்றவன் தூங்கு என்றான்.
ரத்னவேல் என்றவள் உங்களை நான் எப்படி கூப்பிட மாமானு கூப்பிட்டால் தான் உங்களுக்கு பிடிக்காதே என்றவளைப் பார்த்து சிரித்தவன் பிடிச்சாலும், பிடிக்கலைனாலும் இனி என்னை அப்படி கூப்பிட உனக்கு முழு உரிமை இருக்கு என்றான். ரொம்ப நன்றி உங்களை பெயர் சொல்லி கூப்பிடுறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு மாமா என்றாள். அவன் சிரித்து விட்டு சரி வேல்விழி நீ தூங்கு என்றான்.
உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கனும் உங்களுக்கும் , என் அக்காவுக்கும் கல்யாண வாழ்க்கை எப்படி இருந்துச்சு என்றாள் வேல்விழி. அவன் மௌனமாகினான். நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா மாமா என்றவளிடம் கண்டிப்பா இல்லை ஆனால் என்னால இப்போ அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. என்னை மன்னிச்சுரு வேல்விழி என்றான். ஐயோ மாமா எதற்கு மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு என்றவள் சாரி என்று கூறி விட்டு படுத்துக் கொண்டாள். இப்போ நீ என்ன சொல்லுற என்றவனிடம் ஐயோ சரிங்க வாபஸ் என்றவள் கண்ணை மூடி உறங்கினாள்.
கயல்விழி தன்னறையில் கண்ணீர் வடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அழாதே கயல் அவனை நாளைக்கு விடியட்டும். மாமா அவனைப் பார்த்துப்பாரு. அவனே உன் கூட ஒழுங்கா சேர்ந்து வாழ்வான் என்று அவளை சமாதானம் செய்து உறங்க வைத்த விஜயலட்சுமி தன் அண்ணனிடம் வந்தார்.
என்ன அண்ணே இதெல்லாம் இந்தப் பையன் குடிச்சுட்டு வந்து என்றவரிடம் விடுமா எங்கே போயிருவான் என்ற கதிரேசன் ஏதோ தண்ணியடிச்சுப்புட்டு இப்படி பேசுறான். விடியட்டும் அவனை பார்த்துக்கிறேன் என்றவர் இந்த வேலுப் பையன் அவள் ஊட்டி விடவும் அமைதியா சாப்பிடுறான் என்ன நடக்குது என்றிட என்ன நடந்தால் என்ன அண்ணே அந்த வேல்விழி ஒழுங்கா அடங்கி நடந்தால் அவளுக்கு நல்லது இல்லைனா நாம என்ன பண்ணனுமோ அதை பண்ணிரலாம். அவள் அக்காளை பண்ணுனது மாதிரி என்று சிரித்த விஜயலட்சுமியிடம் என்ன விஜி பகல்ல பார்த்து பேசனும், ராத்திரியில் அது கூட பேசக் கூடாது சுவர்களுக்கும் காதுகள் இருக்கும் என்றார். அதுவும் சரி தான் அண்ணா என்ற விஜயலட்சுமி தன்னறைக்கு சென்று உறங்கினார்.
என்ன சொல்ல வறிங்க என்ற தில்லைநாயகியிடம் இந்த வயசுக்கு மேல உன்னை நான் அடிக்கிறது என்னோட தரத்தை இழக்கிறதுக்கு சமம். நீயும், உன் பிள்ளைகளும் பண்ணுற அநியாயம் குறையவே குறையாதா. நீங்களா தானடி ராஜசேகரன் கிட்ட போயி அவரு மகளை பொண்ணு கேட்டிங்க அப்பறம் கல்யாணம் நடக்கிற நேரத்தில் கயலை வெற்றிக்கு கல்யாணம் பண்ணி வச்சு ஏன்டி இந்த அநியாயம் உங்களுக்கு அப்படி என்ன பாவம் பண்ணுச்சு அந்தப் பச்சைப் புள்ளை வேல்விழி என்றார் துரைப்பாண்டியன்.
எல்லாம் நீவிர் பண்ணுன துரோகம் தான் அதற்காக தான் அவளுகளை பழிவாங்கத் துடிக்கிறோம் என்ற தில்லைநாயகியை அக்னியாக முறைத்தவர் நான் துரோகம் பண்ணினது உனக்காடி என்றவர் உன்னை மாதிரி மனசாட்சியே இல்லாத மிருகத்திடம் பேசுவது எனக்குத் தான் அசிங்கம். ஆனால் ஒன்று தேன்மொழிக்கு நடந்த மாதிரி வேல்விழிக்கு எதாவது கொடுமை நடந்துச்சு உன்னையைவும், உன் பிள்ளைகளையும் தீ வச்சு கொளுத்திட்டு தான் மறுவேலை என்றவர் மொட்டை மாடிக்குச் சென்று படுத்துக் கொண்டார்.
காலையில் கண் விழித்த வேல்விழி எழுந்துகொள்ள அவளது கணவன் இன்னும் உறங்கிக் கொண்டு இருந்தான். அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். மெல்ல கண் விழித்தவன் எழுந்து அவளைப் பார்த்து நீ ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க என்றான்.
இல்லை என்னோட திங்க்ஸ் எதுவும் இன்னும் கொண்டு வரவில்லை. நேற்று தாலிகட்டுசேலை, அப்பறம் நான் கட்டி இருக்கிற இந்த சேலை ரெண்டும் தான் எடுத்துட்டு வந்தது. இப்போ வெளியேவும் போக முடியாது. அதான் குளிச்சுட்டு கட்ட புடவை இல்லை அண்ணி வந்து கொடுத்தாள் தான் உண்டு என்றாள்.
புடவை தான் பிரச்சனையா என்றவன் தனது பீரோவில் ஒரு செல்ப் முழுக்க அடுக்கி வைக்கப் பட்டிருந்த புவையைக் காட்டி உனக்கு எது பிடிச்சுருக்கோ எடுத்து கட்டிக்கோ என்றான் . இதெல்லாம் என்றவளிடம் உன் அக்காவோடது இதுவரை யாரையும் நான் தொடக் கூட விட்டதில்லை. ஆனால் இனி எல்லாம் உனக்கும் உரிமையானது என்றான். அவள் அதில் ஒரு புடவையை எடுத்துக் கொண்டவள் சரி மாமா நான் குளிச்சுட்டு துணி மாத்தனும் அதனால நீங்க வெளியில் போங்களேன் ப்ளீஸ் என்றாள்.
சரி என்று கிளம்ப எத்தனித்தவனிடம் முதல்ல நீங்க குளிச்சுட்டு வாங்க. குளிக்காமல் வெளியில் போக வேண்டாம் என்றாள் வேல்விழி. சரியென்று ரத்னவேல் முதலில் குளித்து விட்டு வந்தான்.
அவன் குளித்து விட்டு அறையை விட்டு வெளியே சென்றிட அவள் சென்று குளிக்க ஆரம்பித்தாள். குளித்து முடித்து வந்தவள் அவளது அக்காவின் புடவையைக் கட்டிக் கொண்டாள். அழகாக நேர்த்தியாக புடவையைக் கட்டியவள் தலையை உலர்த்திக் கொண்டு நின்றாள்.
என்னப்பா இப்போ தான் எழுந்தியா என்ற தில்லைநாயகியிடம் ஆமாம் அம்மா என்ற ரத்னவேலுவிடம் எங்கே அந்த சிங்காரி இன்னும் எழுந்திருக்கலையா என்றிட அம்மா வேல்விழி குளிச்சுட்டு இருக்கு என்றவன் தில்லைநாயகி கொடுத்த காபியை வாங்கிக் குடித்தான்.
தம்பி வேல்விழி என்ற தெய்வானையிடம் குளிச்சுட்டு இருக்கு அண்ணி என்றான் ரத்னவேல். அவளோட துணிமணி எதுவும் இன்னும் எடுத்துட்டு வரவில்லை அதனால் இந்தப் புடவையை அவளை கட்டிக்கச் சொல்லுங்க என்று ஒரு கவரை ரத்னவேலுவிடம் தெய்வானை கொடுத்திட ரத்னவேலு தன்னறைக்குச் சென்றான்.
குளித்து முடித்து தலைமுடியை உலர்த்திக் கொண்டு இருந்தாள். அவள் கட்டியிருந்த புடவை அவனது முதல் வருட திருமணநாள் அன்று அவன் தேன்மொழிக்கு வாங்கிக் கொடுத்த புடவை. பின்னிருந்து பார்த்தவனுக்கு தன் எதிரில் நிற்பவள் தேன்மொழியாகவே தெரிந்தாள்.
தேன்மொழிக்கும், வேல்விழிக்கும் ஜாடையில் கூட பெரிய வித்தியாசம் இருக்காது. தேன்மொழியின் ஜாடையில் தான் வேல்விழியும் இருப்பாள். உருவம் , உயரம் , தலைமுடி என எல்லாமே இருவருக்கும் வித்தியாசம் கிடையாது. நிறம் தான் தேன்மொழியை விட வேல்விழி கொஞ்சம் நிறம் அதிகம்.
தேனு என்றவனைப் பார்த்து ரத்னவேல் என்றவள் அவனை நெருங்கி வந்து அவனது கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்தவள் என்னை எப்போ இந்த சிறையில் இருந்து நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டுப் போவ என்றாள். ஏன்டி என்றவனிடம் பின்ன உன் அம்மா படுத்துற பாடு தாங்க முடியலை. என் அத்தை எப்படித் தான் இந்த கிழவி கூட இத்தனை வருசம் குப்பை கொட்டுறாங்களோ. இந்த ஒரு நாள் கூட என்னால முடியவில்லை என்றவளின் கன்னம் கிள்ளியவன் என்னடி கல்யாண நாளைக்குத் தானே இங்கே வந்திருக்கோம் என்றான். போயா உன் அம்மா தொல்லை தாங்க முடியாமல் எங்கேயாச்சும் ஓடிப் போகப் போறேன். இங்கே தான் இம்சைனா தோப்பு வீட்டுக்கும் தினமும் வந்து பொட்டப்புள்ளை பகல்ல தூங்கலாமா வைக்கலாமா இதோ பார் ரத்னவேலு உன் அம்மாகிட்ட சொல்லி வை நான் ரத்னவேலுவோட பொண்டாட்டி என்னை அதட்டுறது, உருட்டுறது எல்லாம் வேண்டாம்னு என்றவளின் காதைத் திருகியவன் ஏன்டி வாயாடி உன்னை என்ன பண்ணுறேன்னு பாரு என்றவன் அவளை விரட்டிட ரத்னவேலு வேண்டாம் என்னை விட்டுரு என்றவள் பின்னே நகர உன்னைத் தானே சும்மா விடவே மாட்டேன்டி என்றவனிடம் நீ எங்கே சும்மா விட்ட என்னை தான் அம்மா ஆக்கிட்டியே என்றவள் பட்டென்று நாக்கைக் கடித்திட அவளை நெருங்கியவன் தேனு என்றிட அவனது கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தவள் குட்டி ரத்னவேலு என்றிட இல்லை குட்டித் தேன்மொழி என்று கூறி அவளது இதழில் தன் இதழைப் பதித்தான் ரத்னவேல்.
அவனை வலுக்கட்டாயமாக பிடித்து தள்ளியவள் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்து விட்டாள். என்ன பண்ணுறிங்க மாமா என்ற வேல்விழி தன் உதட்டினை அழுந்தத் துடைத்துக் கொண்டவள் ச்சை என்றிட மன்னிச்சுரு வேல்விழி நான் தேனு என்றவன் இந்தப் புடவையை ஏன் வேலு கட்டுன என்றான். இது நல்லா இருந்துச்சுனு என்றவள் ஏன் இது என்றவளிடம் இல்லை விடு. சத்தியமா நான் வேணும்னு உன்கிட்ட அப்படி நடந்துக்கலை என்னை மன்னிச்சுரு என்றவன் அறையை விட்டுக் கிளம்பினான்.
அவன் கொண்டு வந்த கவரை பிரித்துப் பார்த்தவள் வேறு புடவை இருக்கவும் தன் அக்காவின் புடவையை அவிழ்த்து மடித்து வைத்தாள். கவரில் இருந்த புடவையை அணிந்து கொண்டவள் தலைசீவி உச்சி வகுடில் பொட்டு வைத்து விட்டு தலையில் பூ வைத்து பிறகு அறையை விட்டு வெளியே வந்தாள்.
வேல்விழி வா வந்து சாமி கும்பிடு என்றார் தெய்வானை. அவளும் சென்று விளக்கேற்றி சாமி கும்பிட்டாள். மாமா என்று தன் கணவனை அழைத்திட என்ன வேல்விழி என்று வந்தான் ரத்னவேல். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க என்று அவனது காலில் விழுந்தாள். அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை இவள் ஏன் இப்படி செய்கிறாள் என்று நினைத்தவன் திரும்பிட கயல்விழி நின்றிருந்தாள். அவன் வேல்விழியை தொட்டு தூக்கி விட்டவன் அவளது நெற்றியில் குங்குமம் வைத்து விட்டான்.
தன் மகனின் வாழ்வு நல்லவிதமாக அமைந்து விட்ட திருப்தியில் துரைப்பாண்டியன் உணவு சாப்பிட அமர்ந்தார். வேல்விழி வாமா என்ற தெய்வானை இதை உங்க தாத்தாவுக்கு பரிமாறு என்றார். அவளும் அவருக்கு பரிமாறிட அவளது முகத்தில் புன்னகை தவழ்ந்திட சாப்பிடுங்க தாத்தா என்றாள்.
அவரும் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தார். கயல்விழிக்கு வேல்விழியின் சிரித்த முகம் எரிச்சலைத் தான் கொடுத்தது. அதுவும் அவள் உரிமையாக ரத்னவேலுவை மாமா மாமா என்று அழைத்து அவனுக்கு பார்த்து பார்த்து உணவு பரிமாறுவதைக் கண்டவள் எரிச்சலாக என்னம்மா நடக்குது இங்கே என்றாள் கயல்விழி.
…..தொடரும்….