கண்ணாடியின் முன் நின்றவளுக்கு தன்னை அலங்கரித்துக் கொள்ளவே விருப்பம் இல்லை. அழுகையோ இதோ வந்து விடுவேன் என்பது போல இருக்க இதழ் கடித்து பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டவள் சாரதாவின் அழுத்தமான பார்வையில் வேண்டா வெறுப்பாய் மிதமாக ஒப்பனை செய்து கொண்டவள் “போதுமா இப்போ?” என்று கேட்கும் போதே அவளின் குரல் தழுதழுக்க …
அவருக்கே அவளைப் பார்த்து பாவமாக இருக்க, “இந்த வயசுல உனக்கு கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்கு ஒன்னும் ஆசை இல்லடி அவர் ஆசைப்படுறார் மா என்றவர் ஆழினி சின்ன வயசுல இருந்தே நமக்கு தெரிஞ்ச பொண்ணு அவ உன் கூடவே இருப்பா…. இதை விட்டா உன்னை நல்லா பார்த்துகிற போல உனக்கு சம்மந்தம் கிடைக்காது என்றவர் அவங்க வந்ததும் கூப்பிடுறேன் அப்போ வா என்றவர் தொடர்ந்து முகத்தை இப்படி தூக்கி வச்சிட்டு இருக்காத டி உன் அப்பா வருத்தப்படுவார்” என்று சரியாக அவளை அவர் தாக்கி இருக்க….
“ம்ம்” எனச் சொல்லிக் கொண்டவளுக்கு அப்போது தான் சாரதா ஆழினி பற்றி சொல்லவும் ஆழினி அன்று கூறியது நினைவுக்கே வந்தது.
ஆம், அவளின் நண்பன் அல்லவா அவளது டிபார்ட்மெண்டிற்கு லெச்சரர் ஆக வரப் போகின்றான் என்று சொன்னது மூளையில் மின்னல் வெட்ட சாரதாவைப் பார்த்து “ஆழினி அக்கா வந்தா நான் கூப்பிட்டதா சொல்லி அனுப்பி வைங்க” என்றிட….
“ஆழினிகிட்ட தேவையில்லாமல் பேசி இந்த சம்பந்தத்தை இல்லாமல் பண்ணிடாத அபிநயா” என்றவர் அவளை கண்டனமாக பார்த்து விட்டு அறையை விட்டு வெளியேறி இருந்தார் சாரதா.
ஒரு பெரு மூச்சுடன் கட்டிலில் தொப்பென அமர்ந்தவளுக்கு ஆழினி அக்காவிடம் உங்கள் நண்பனை காதலிக்கிறேன் என்று சொன்னால் என்ன நினைக்க கூடும்? என்ற எண்ணம் தான் மேலும் ஒரே நாளில் காதலா? என அக்கா கேட்டால் நிச்சயமாக நான் அந்த ரகசியத்தை நிச்சயமாக கூறியே ஆக வேண்டுமே என நினைத்தவளுக்கு பதற்றத்தில் மேனி முழுவதும் வியர்க்க ஆரம்பித்து இருந்தது.
அறையில்குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டு இருந்தவளின் பின்னே “அபிநயா” என்ற ஆழினியின் குரலில் விழிகள் பெரிதாக விரிந்து கொண்டன.
பின்னால் திரும்பி “அக்கா” என்றவாறு ஓடிச் சென்று அணைத்தவள் சத்தமின்றி தேமித் தேமி அழுதாள்.
அதிர்ந்தவள் என்னவோ ஏதோ எனப் பதறிய ஆழினி, “என்னடி ஆச்சு சொல்லு?” என அவளை வலுக்கட்டாயமாக தன்னில் இருந்து பிரித்து வினவ…
எச்சிலைக் கூட்டி விழுங்கிய படி “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை அக்கா” என்று சொன்னவளின் வார்த்தைகளில் இப்போது ஆழினிக்கு இரத்த அழுத்தம் ஏகத்தும் ஏறியது.
தன்னை முயன்று கட்டுப் படுத்திக் கொண்ட ஆழினி “ஏன்?” என்று பதை பதைப்புடன் கேட்டு இருக்க…. அடுத்து அவள் சொன்ன பதிலில் அவளுக்கு மயக்கம் வராத குறை தான்.
ஆம், விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே “நான் உங்க ப்ரெண்ட் விக்ரமை லவ் பண்றேன்” என்று கூறி இருந்தாள் அபிநயா.
சுவற்றில் சென்று நங் என்று முட்டிக் கொள்ளலாமா? என்று நினைத்தவளுக்கு சிரிப்பும் வந்து விட அடக்கிக் கொண்டே “நான் நிருத்துறது இருக்கட்டும் நீ எதுக்கும் வந்து மாப்பிள்ளையை பாரு டி உனக்கு பிடிக்க சான்ஸ் இருக்கு” என்று சொல்ல…
“ஐயோ அக்கா என்னால முடியாது உங்க ப்ரெண்ட் விக்ரம் தான் வேணும் என அடம் பிடித்தவளை வியப்பாக பார்த்தவள் பார்த்த ஒரே நாள்ல எப்படிமா இவ்வளவு லவ்?” என அபிநயா எதிர்ப் பார்த்த அதே கேள்வியை கேட்டு விட….
ஒரு பெரு மூச்சுடன் “என்னை நீங்க பைத்தியம்னு நினைச்சா கூட பரவாயில்லை பட் நான் சொல்றது உண்மை என்றவள் என்னோடது ஒரு நாள் காதல் இல்லை அக்கா நாலு வருஷ லவ்” என்றிட…
நெஞ்சை பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து விட்டாள் ஆழினி.
“ அய்யயோ அக்கா என்னாச்சு?” என பதறிப் போய் அவள் அருகில் அமர்ந்த அபிநயாவைப் பார்த்த ஆழினி “நாலு வருஷமா எப்படி டி?” என்று கேட்டே விட்டாள்.
ஆம், ஆழினி விக்ரமை சந்தித்தே இரண்டு வருடங்கள் தான் ஆகின்றது அதுவும் அமேசான் காட்டில்…. இப்போது இவள் நான்கு வருடங்களாக காதலிக்கிறாள் என்றால் அது எப்படி சாத்தியம்? என்ற கேள்வியே அவளுள்…
அருகில் இருந்த மேசையில் தன் அலைபேசியை எட்டி எடுத்த அபிநயா அவளின் யாரும் அறிந்திராத அந்த போல்டரை திறந்து காட்டியவள் அனைத்தையும் கூறி இருக்க அவளை அதிர்ந்து பார்த்த ஆழினி “ஓ மை கோட் என்னால நம்பவே முடியல அபிநயா” என்றவளை பார்த்தவள் “நீங்க நம்பலைனாலும் அது தான் நிஜம் அக்கா”
கட்டிலில் இருந்து எழுந்த ஆழினி மேசையில் இருந்த தண்ணீர் போத்தலை திறந்து மட மடவென தண்ணீரைக் குடித்தவளுக்கு மனதில் இனம் புரியாத சந்தோஷம்.
ஆம், அவள் விக்ரம் ஆசைப்பட்டத்தை போலவே அவனை உண்மையாக காதலிக்கும் பெண்ணை தானே அவனிடம் சேர்த்து விட்டதை எண்ணி மகிழ்ந்தவள் “எனக்காக பிளீஸ் வெளில வந்து காஃபி கொடு அதுக்கு பிறகு நானே நிறுத்துறேன்” என்று சொல்ல….
“நான் வராமலே என் அப்பாகிட்ட பேசுனா என்ன?” எனக் கேட்டவளை “சும்மா நான் சொல்றதுக்காக வாயேன் பிறகு நான் இந்த புரோபோசலை நிறுத்துறேன்” என்று பொறுமையாக சொல்ல…
“ஹும்.. உங்களுக்காக” என்றவள் வெளியேற எத்தனிக்க “கொஞ்சம் இரு என்றவள் அவளின் முகத்தில் அழுததிற்கான தடயம் தெரிய வேகமாக அவள் எதிர்ப்பையும் மீறி சிறு முறைப்போடு ஒப்பனையை செய்து விட்டவள் வெளிப்படையாகவே “செம்ம அழகா இருக்க” என்றாள்.
“க்கும்… அது அந்த விக்ரம் வாத்திக்கு தெரியணுமே!” என்று குறை பட…
“என்னை நம்பி வா கூடிய சீக்கிரம் தெரிய வைக்கிறேன்”
“தேங்க்ஸ் அ லாட் அக்கா” என அணைத்துக் கொண்டவள் மனமோ ஆழினியுடன் பேசிய பின்பு லேசானதைப் போல உணர்ந்துக் கொண்டாள்.
“வா போகலாம்” என்றவள் அவளை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி இருந்தாள் ஆழினி.
சாரதாவும் காஃபியை அவளிடம் நீட்டி இருக்க, கைகள் நடுங்க அதனை வாங்கிக் கொண்டவள் குனிந்த தலை நிமிராமல் ஹாலிற்கு வர, பக்கவாட்டாக திரும்பி வெளியில் பார்த்து கொண்டு இருந்த விக்ரமின் தலையை திருப்பி அபிநயாவை பார்க்கச் செய்த காஷ்யபன் அவனின் முகம் அதிர்ச்சியாக மாறியதைப் பார்த்து வந்த சிரிப்பை இதழ் கடித்து அடக்கிக் கொண்டான்.
“இவளா பொண்ணு?” என அதிர்ச்சியாக அவளைப் பார்த்து இருக்க… ஆழினியும் கொஞ்சம் மாப்பிள்ளையை பாரு என அவளின் காதருகே கிசுகிசுப்பாக சொல்ல “ப்ச்” என சலித்துக் கொண்டே தலையை குனிந்து இருந்தவள் நிமிர்ந்து பார்க்க அவ்வளவு தான் விழிகளில் எதிர் பாராத அதிர்ச்சி கூடவே சேர்ந்து மேனியும் நடுங்க ஆரம்பித்து விட்டது.
இருவரின் திகைத்த தோற்றத்தை பார்த்த காஷ்யபன் மற்றும் ஆழினிக்கு சிரிப்பை அடக்கிக் கொள்ள சிரமமாக இருந்தது. அதே அதிர்ச்சி மாறாமல் ஆழினியை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவள் விழிகள் ஆனந்தத்தில் கலங்கி விட அவளை பார்த்து விழிகளை மூடித் திறந்த ஆழினி “காஃபி அஹ் கொடு டி” என்க….
என்னவென்றே தெரியாத ஒரு படபடப்புடன் அவனை நெருங்கி காஃபியை நீட்டி இருந்தாள் பெண்ணவள். அவன் திகைத்து விழித்தது என்னவோ ஒரு நிமிடம் தான் அதன் பிறகு அவனின் பார்வை அவளை தான் அளந்தது.
பயிற்சி மருத்துவ மாணவர்கள் அணியும் வெண்ணிற உடையில் சிறு பெண்ணாகத் தெரிந்தவள் புடவையில் வளர்ந்த பெண்ணாகத் தெரிந்தாள்.
நீல நிறக் கல் பதித்த புடவை பாந்தமாகப் பொருந்தி இருக்க மிதமான ஒப்பனையில் வந்தவளை அவனது லேசர் விழிகள் உள்வாங்கத் தவறவில்லை.
வந்து இருந்தவர்களுக்கு காஃபியை கொடுத்து விட்டு இதயம் படபடக்க வந்து ஆழினி அருகே நின்றுக் கொண்டவள் குரலை தாழ்த்தி ஹஸ்கி குரலில் “அக்கா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல….
“பேசலாம் டி பெரியவங்க பேசட்டும் பிறகு பேசலாம்” என்றாள் ஆழினி.
“அய்யயோ அக்கா ரொம்பவே முக்கியமான விஷயம் இதை சொல்லலைனா என் தலையே வெடிச்சிடும்” என்றாள் அவசரமாக….
எல்லோருக்கும் சற்று விளங்குவது போலவே “என்னோட போன் எங்கடி?” என்றாள் அழினி. முதலில் திரு திருவென விழித்தவள் ஆழினியின் முறைப்பில் “ஹான் அது என்னோட டேபிள்ல இருக்கு அக்கா வாங்க எடுத்து தரேன்” என்றவள் முன்னே செல்ல அவள் பின்னே ஆழினியும் செல்ல “ஏதோ பிளான் பண்ணிடுச்சிங்க போல” என சரியாக கணித்த காஷ்யபன் விக்ரமின் அழுத்தமான பார்வையில் “என்ன டா” என்று கேட்க…. “நத்திங்” என்று தோள்களை குலுக்கிக் கொண்டான்.
அறைக்குள் ஆழினி நுழைந்தது மட்டும் தான் அவளுக்கு தெரியும் வேகமாக அவளை அணைத்துக் கொண்ட அபிநயா அவளின் முகத்தில் ஒரு இடம் விடாமல் முத்தமழை பொழிய ஆழினியோ திக்குமுக்காடி போனாள்.
“போதும் அபிநயா நிறுத்து டி யாரும் பார்த்தா தப்பாய்டும்” என்று சொல்ல….
“இப்போ என் சந்தோஷத்தை வார்த்தைகளால சொல்ல முடியாது அக்கா இப்படி ஒருத்தன் உயிரோட இருக்க சான்ஸ் இல்லைன்னு நினைச்சிட்டு இருந்தேன் பட் அவனே என்னோட லெக்சரர் ஆஹ் பார்த்தப்போ என்னால என் கண்ணை நம்பவே முடியல… இப்போ அவர் தான் எனக்கு பார்த்த மாப்பிளைனு தெரிஞ்சதும் அவ்ளோ ஹேப்பி தெரியுமா எல்லாமே உங்களால தான் அக்கா லவ் யூ லாட்” என மூச்சு விடாமல் பேசியவள் ஆழினியை இறுக அணைத்துக் கொண்டாள்.
அவளின் இறுகிய அணைப்பிலேயே அவள் விக்ரமை கண்ணில் காணாமலேயே எவ்வளவு ஆழமாக காதலித்து இருக்கின்றாள் என உணர்ந்துக் கொண்டவள் “லவ் யூ டூ டி பேபி என அவளின் கன்னத்தைக் கிள்ளிய ஆழினி இப்போ நீ எதுக்கு வரவச்சனு நான் சொல்லட்டுமா?” என்று கேட்க….
“சொல்லுங்க பார்க்கலாம்?” என்றாள்.
“உன்னோட சொல்லாத காதலை நான் விக்ரம்கிட்ட ஓபன் பண்ண கூடாது அம் ஐ ரைட்?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க….
“ஐயோ! செம்ம அக்கா அதே தான் அவரும் என்னை லவ் பண்ணனும்னு நினைக்கிறேன்…. பிறகு நான் என்னோட நாலு வருஷ காதலை சொல்லிக்கலாம்ன்னு இருக்கேன்” என்றாள்.
“ஆல் த பெஸ்ட் என்றவள் அவளை அணைத்து விடுவித்து விட்டு நம்மல தேடுவாங்க இப்போ போகலாமா?” என்று சொல்ல… “ஷோர் அக்கா” என்றவள் ஆழினியின் கையை பிடித்துக் கொண்டாள்.
அதன் பிறகு பிரகலாதன் உட்பட ஜீவா வைத்தியநாதனுடன் இணைந்து நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் குறித்து பேச ஆரம்பித்து விட விக்ரமிற்கோ அபிநயாவிடம் சில விடயங்களை பேசியே ஆக வேண்டும் என்று தோன்ற எப்படி பேசுவது என யோசனையாக இருக்க…. “என்ன அபிநயாகிட்ட தனியா பேசணுமா?” என பக்கத்தில் இருந்த காஷ்யபன் கேட்க….
“தெரியுது தானே உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி ஏதாச்சும் ஒரு வழியை பண்ணு டா” என்றான்.
“அடிங்…என அவனை பார்த்து சொன்ன விக்ரம் அவளை பார்த்து ஒரு நாள் முழுசா முடியலை அதுக்குள்ள எனக்கு லவ் ஆஹ்?” என்றான் கேசத்தைக் கோதிக் கொண்டே….
“அப்போ ஏன்டா அவ்வளவு ஷாக்?”
“காலைலே அவ தரிசனம் தான் செமினார் ஹால்ல இப்போ அவ தான் பொண்ணுனா எனக்கு ஷாக் தானே தட்ஸ் ஆல்” என தோள்களை குலுக்கிக் கொண்டான் விக்ரம்.
“ஓஹோ… என ஒரு மார்க்கமாக சொன்னவன் ஆழிகிட்ட பேசிட்டு அபிநயாவை மொட்டை மாடிக்கு அனுப்பி வைக்கிறேன் அங்கயும் போய் லெக்சர் பண்ணிடாத பாவம் சின்ன பொண்ணு” என்றான் காஷ்யபன்.
அவனை மேலிருந்து கீழாக நக்கலாக பார்த்தவன் “எங்களுக்கு தெரியும் நீ ஆழினிகிட்ட சொல்லி அனுப்பி விடு” என்றவன் எழுந்து வெளியில் சென்று நின்று கொள்ள … “நான் பண்ணுனதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு பண்றான்” என தனக்குள் சொல்லிக் கொண்டவன் அலைபேசியை எடுத்து ஆழினிக்கு அழைத்து இருந்தான்.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 54
No votes so far! Be the first to rate this post.
Post Views:608
2 thoughts on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!”
Interesting 😍 😍 😍
Vikram purinji Pana avala 🤔🤔🤔
ஆமா dear 🥰❤️