எப்படி அறைக்குள் வந்தாள் எப்போது ஆயத்தமானாள் என்று அவளிடம் கேட்டாள் அவளுக்கே தெரியாது அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் வீட்டில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு நேரே புறப்பட்டவளுக்கு காலையில் மாத்திரை குடித்ததின் விளைவாக வலியோ சற்று மட்டுபட்டு தான் இருந்தது.
ஒரு துள்ளலோடு லெக்சர் நடத்தப்படும் ஹாலிற்குள் நுழைந்தவள் முதல் பெஞ்சிலேயே விஷாலிக்கும் சேர்த்து இடத்தினை பிடித்து வைத்துக் கொண்டவளுக்கு கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றம் தான். இன்னுமே விக்ரம் வந்திருக்கவில்லை என்றாலும் அவனின் வருகைக்காக நேரத்தை நெட்டித் தள்ளிய படி அமர்ந்து இருந்தாள் அவள்.
ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்களாக அதுவே நாற்பத்து ஐந்து நிமிடங்களை கடக்க நாடியில் கையை வைத்து அமர்ந்து இருந்தவள் முன் அவளையே வியப்பாக பார்த்துக் கொண்டே வந்த விஷாலி “ நாம பேக் பெஞ்சர்ஸ் டி வா பின்னாடி போகலாம் என அவளை வலுக்கட்டாயமாக எழுப்ப முயன்ற விஷாலியை பார்த்து முறைத்தவள் “சாரி டி நாம இனிமேல் ஃபர்ஸ்ட் பெஞ்சர்ஸ் தான்” என கண்களை சிமிட்டு புன்னகைத்தவளைக் கண்டு அவளுக்கு மயக்கம் வராத குறை தான்.
“அடியேய் உன்ன சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ சத்தியமா எஸ்டர்டே லெக்சர்ஸ் ரிபர் பண்ணலை டி பட் ஏதோ உன்னோட ஆளோட தயவுல கொஞ்சம் மைண்ட்ல ஒட்டிட்டு இருக்கதையும் ஃபர்ஸ்ட் பெஞ்ச்ல உக்காந்து மறக்க நான் தயாரா இல்லை. நான் சொல்றதை கேளு எல்லாரும் வர்றாங்க இடம் போய்ட போகுது வாடி பிளீஸ்” என காலில் விழாத குறையாக அவள் கெஞ்ச….
அவள் கூறியது எதுவும் காதில் விழாததைப் போல அமர்ந்து இருந்தவள் “நானும் படிக்கலை டி அது மட்டும் இல்ல உனக்காச்சும் மைண்ட்ல கொஞ்சம் ஒட்டிட்டு இருக்கு பட் எனக்கு அது கூட இல்லை சோ வந்து பக்கத்துல இரு சமாளிச்சுக்களாம்” என ஒரு குருட்டு நம்பிக்கையில் அவள் சொல்ல….
விஷாலிக்கோ பயத்தில் வியர்த்து விட்டது.
“ சரியா ஆன்சர் பண்ணலைனா மனம் போயிரும் டி இன்னைக்கு கெமிஸ்ட்ரி மட்டும் இல்லமா சர்ஜன்ஸ் கூட வருவாங்க ” என்று அவள் சொல்ல….
“வாட்? என்னடி சொல்ற?” என அதிர்ந்து கேட்டவளை முறைத்த விஷாலி “எஸ்டர்டே நைட் வாட்ஸ்அப் குரூப் மெசேஜ் பார்க்கலையா மேடம்” என்று கேட்க….
அவள் எங்கே அதைப் பார்த்தாள் அவனை நினைத்து கனவில் மிதந்து கொண்டு அல்லவா இருந்தாள் போதாத குறைக்கு இடுப்பு வலி வேறு மாத்திரையின் வீரியம் குறையும் போது வந்து விட்டால்! என அதிர்ந்தவள் “நான் நெட் ஒன் பண்ணவே இல்லை டி என தலையில் கைவைத்தவள் வேற வழி இல்லை நான் பின்னாடி இருந்து சைட் அடிச்சிகிறேன் டி வா போய்டலாம்” என விஷாலியின் கையை பற்றிக் கொண்டு எழும்பும் போதே விக்ரம் ஹாலினுள் நுழைய…..
இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.
அப்போது தான் மணியை பார்த்து விட்டு கடைசி பெஞ்சை பார்த்தவர்கள் விழி பிதுங்க இனி எழுந்து செல்ல முடியாது என உணர்ந்துக் கொண்டு வேறு வழி இல்லாமல் முதல் பெஞ்சிலேயே அமர்ந்து விட்டனர்.
ஹாலினுள் நுழையும் போதே அவளைக் கண்டவன் அதன் பின் அவளை யார் என்றே தெரியாது என்பதைப் போல தான் தனது லெக்ச்சரை ஆரம்பித்து விட அபிநயாவிற்கோ எதுவும் காதில் நுழைய வில்லை அவளது விழிகளில் அவன் மட்டுமே அவுட் ஆஃப் போகஸ் ஆக தெரிய அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை “அபிநயா ஸ்டண்ட் அப்” என்றிருந்தான்.
அவளுக்கு எங்கே அவன் கூப்பிட்டது விளங்கும் ? அவள் தான் எதிலும் கவனம் இல்லாது அவனை பார்வையால் விழுங்கிக் கொண்டு அல்லவா இருந்தாள்.
மீண்டும் அபிநயா என்றான் குரல் உயர்த்தி…
அந்த ஹாலில் உள்ள நூற்றி ஐம்பது பேரின் பார்வையும் இவள் மேல் தான் படிந்து இருந்தது.
சட்டென சுதாரித்த விஷாலி அவளை லேசாக உலுக்க…
தனது கற்பனை கலைந்து விட்ட எரிச்சலில் கோபமாக விஷாலியை முறைத்து விட்டு விக்ரமை பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.
அவளை எரித்து விடுபவன் போல முறைத்துக் கொண்டு இருந்தவனை புரியாமல் பார்க்க அவனோ “ஸ்டண்ட் அப்” என்றான் இறுகிய குரலில்….
ஆத்தி மறுபடியுமா என உள்ளுக்குள் அதிர்ந்தவள் திணறிப் போய் எழுந்து நிற்க..
அவனோ, மேசையில் சாய்ந்து நின்ற படி ஷர்ட்டின் கையை மடித்து விட்டுக் கொண்டே அவளை பார்த்து “ த ரிமூவல் ஆப் அமினோ குரூப் ப்ரோம் அமினோ ஆசிட் கால்ட்?” எனக் கேள்வியாக நிறுத்த அவளுக்கோ மயக்கம் போட்டு விழுந்து விடலாமா என்ற எண்ணமே தோன்றி விட்டது.
அவளுக்கோ சட்டென கேள்விக்கான விடை நினைவுக்கு வர மறுத்தது கெமிஸ்ட்ரி என்றாலே சுத்த சூனியமாக இருப்பவள் இப்போது அவனின் கேள்வியில் விழித்துக் கொண்டு நின்றவளிடம் என்ன நினைத்தானோ “ஆப்ஷன் ஏ. ட்ரான்ஸ்அமினேஷன், ஆப்ஷன் பீ. டிஅமினேஷன், ஆப்ஷன் சீ. ட்ரான்ஸ்பொசிஷன்” என்று சொல்ல….
“ஓ மை கோட் ஆப்ஷன் வேற கண்ணைக் கட்டுதே என்றவளுக்கு ஆப்ஷன் ஏ அல்லது ஆப்ஷன் பீ யில் தான் ஏதாவது ஒன்று வருமென திண்ணமாகத் தெரிந்தது படித்தது கொஞ்சம் கூட நினைவுக்கு வராமல் போக கடவுளே என்னை காப்பாத்து என அவசர வேண்டுதலை போட்டு விட்டு ஆப்ஷன் ஏ. ட்ரான்ஸ்அமினேஷன்” என்று திக்கி திணறி அவள் கூற….
அவளை உறுத்து விழித்தவன் எதுவும் சொல்லாமல் திரும்பி அனைவரையும் பார்த்து “எனி கெஸ்ஸஸ்?” என்று கேட்க…
“குட்” என புன்னகைத்தவன் உள்ளுக்குள் அவள் மீது கழன்ற கோபத்தை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தவன் அதன் பின் அவள் புறம் திரும்பவும் இல்லை. அவனோ தொடர்ந்து படிப்பித்துக் கொடுத்துக் கொண்டே செல்ல அவளோ இந்த முறை கவனமாகப் பாடத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டாள்.
கவனித்துக் கொண்டு இருந்த அவளுக்கு நேரம் போகப் போக அவளின் இடுப்பு வலி எடுக்க ஆரம்பித்தது. சும்மாவே பதில் சொல்லாமல் அவனிடம் மானம் போய் விட்டது. இப்போது இதை வேறு சொன்னால் அவ்வளவு தான் என்று நினைத்தவள் அவனின் பாடத்தை முடிந்த வரை வலியை முகத்தில் காட்டாது முழு கவனத்தை செலுத்த முயன்றவள் நேரத்தை பார்த்தாள் அதுவோ இன்னும் நகர மாட்டேன் என்பதை போலவே அவளுக்கு மாயை தோன்ற இதழ் கடித்து வலியை அடக்க முற்பட்டவளுக்கு விழிகளும் கலங்கி விட்டன.
பக்கத்தில் நெளிந்துக் கொண்டு இருந்த அபிநயாவைக் கடைக் கண்ணால் பார்த்த விஷாலி “வாட் ஹப்பென்ட்?” என பேப்பரில் எழுதி அவளிடம் நகர்த்த… வலியில் உயிர் போக அமர்ந்திருந்தவளுக்கு இவளின் செயலில் வெறி ஏற “இவ ஒருத்தி மனுஷன் அவஸ்தை புரியாமல்” என சலித்துக் கொண்டே அவளுக்கு பதில் ஏதும் கூறாமல் புரோஜக்டரை அவதானிக்க அவனோ ரெஜிஸ்டரை பார்த்து விட்டு முதலில் இருக்கும் பெயரை பார்த்து “ருத்ரா கம் அண்ட் எக்ஸ்பிலைன் திஸ்” எனப் புரோஜக்டரை அவன் சுட்டிக் காட்ட…
அபிநயாவிற்கு பின்னால் அமர்ந்து இருந்தவள் எழுந்து சென்று சர்வ சாதாரணமாக அவ்வளவு நேர்த்தியாக விளக்க படுத்த… அவள் விளக்கபடுத்துவதை மேசையில் சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டு இருந்தவன் மெச்சுதலாக புருவத்தை ஏற்றி இறக்கி “வெல் டன் ருத்ரா” என மென் புன்னகையுடன் சொல்ல….
இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த அபிநயாவிற்கு தான் உள்ளே பொறாமை தீயோ கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டு இருந்தது. இக் கணம் அவன் தன்னை அழைத்து மறுபடி ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டானா என அவளின் மனம் ஏங்கியது.
அவளின் மனமோ தன்னையே கடிய “அடுத்த தடவை கெமிஸ்ட்ரி யை கரைச்சு குடிச்சிட்டு வரேன் இந்த வாத்தியை மடக்க” என உள்ளே நினைத்துக் கொண்டவள் எதிர்பார்த்த இடைவெளி நேரமும் வர, அடுத்து வைத்தியர்கள் வந்து நடத்த போகும் நாலரை மணி நேர செமினாரில் எப்படி தான் அதுவும் முதல் வரிசையில் இருந்துக் கொண்டு கவனிப்பது என நினைக்கவே ஐயோ என்றாகிவிட்டது.
அவனும் ஹாலை விட்டு வெளியேறி இருக்க அதுவரை பல்லைக் கடித்து தன்னை சமன் செய்து கொண்டு இருந்தவள் அவன் வெளியேறிய அடுத்த கணமே விஷாலியின் கையை அழுத்தமாக பற்றி இருந்தாள். விஷாலியோ “வலிக்குது டி ஆஆ”
“பிளீஸ் டி என்ன ஏதுன்னு கேட்காத ஃபர்ஸ்ட் அய்ட் பாக்ஸ்ல டைலெனோல் டேப்லெட் இருந்தால் சீக்கிரம் எடுத்திட்டு வாடி”
“ஹே… என்னாச்சு?” என்று விஷாலி கேட்க…
வலியில் “பிளீஸ்ஸ்ஸ் போடி” என்றே கதறி விட்டாள் அவள்….
அனைவரின் கவனம் முழுவதும் அவளின் மீது படிய இப்போது பதறிப் போய் எழுந்து வந்த கார்த்திக் “வாட் ஹப்பென்ட் அபிநயா?”
“நத்திங்” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே “அபிநயா” என்ற அழுத்தமான குரலில் அவளுக்கு தூக்கி வாரிப் போட எழுந்து நின்று விட்டாள்.
மேசையில் வைத்து விட்டு போன புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவள் அருகில் வந்தவன் கார்த்திக் கேட்ட அதே கேள்வியை கேட்டு இருக்க இதற்கு மேல் மறைத்து என்ன பயன் என்று நினைத்தவள் தலையைக் குனிந்துக் கொண்டே “ஹிப் ஸ்ப்ரெய்ன்” என்றாள் உள்ளே போன குரலில்…..
அவனுக்கே ஏன் தான் இதைக் கேட்டோம் என்று தோன்ற விஷாலியை பார்த்து “டேக் ஹேர் டு ஹெல்த் சென்டர்” என்று கூறி விட்டு ஒரு அடி தான் எடுத்து வைத்து இருப்பான் “கவனம் ஸ்ரெய்ன் பண்ணாத அபிநயா மெதுவா” என்ற கார்த்திக்கின் குரலில் முகம் இறுகிப் போக பின்னால் திரும்பி “கார்த்திக் வெக்சினேஷன் டென்ஸ்டிங் டிஸ்கஸ் பண்ணும் சோ நீங்க லாப்கு வாங்க” என்றவன் அபிநயாவை ஆழ்ந்துப் பார்த்து விட்டு சென்று இருந்தான்.
என்ன பார்வை இது? சற்று முன்னர் அவள் அவனைப் பார்த்த அதே பார்வை அல்லவா! மனதிற்குள் குத்தாட்டம் போட்டவள் “வாத்திக்கு பொசசிவ் வந்துடுச்சா” என மனதில் செல்லமாக கொஞ்சிக் கொண்டவளுக்கு இவ்வளவு நேரமும் இருந்த இடுப்பு வலி எங்கே சென்றது என்று அவளுக்கே தெரியாது.
“இனிமேல் கார்த்திக் தான் என் ட்ரம்ப் கார்ட்” என மனதில் திட்டம் போட்டவளுக்கு கடவுள் வேறு திட்டம் போட்டு வைத்து இருப்பதை பாவம் அவள் அறியவில்லை.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.9 / 5. Vote count: 40
No votes so far! Be the first to rate this post.
Post Views:617
2 thoughts on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 9”
Abi ya ma
Enna vera திட்டமா🤔🤔🤔
இப்படி தான் சும்மா விக்ரமை டென்ஷன் ஏத்த போறா dear 😂🙈