17. செந்தமிழின் செங்கனியே!

4.9
(38)

செந்தமிழ் 17

 

இனியன் கூறியது என்னவோ, “என்னோட கிளென்ட் ஒருத்தர் தமிழ் தான்.. ஆனா இப்போ செட்டிலேட் இன் ஆஸ்திரேலியா, அவங்க பையனுக்கு தமிழ் சொல்லி தரணும்னு ஆசை படுறாரு… நீ தமிழ் டீச்சர்னு சுரேஷ் சார் சொன்னதும் என்ன கேட்டார்? நான் உங்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லிற்கேன்”, என்று அவன் சொல்லும் போதே உள்ளே நுழைந்து இருந்தனர் அச்யுத் மற்றும் கயல்.

அப்போது அவள் முடியாது என்று சொல்ல, “ஏன் முடியாது?”, என்று கேட்டிருந்தனர் இருவரும்!

“எனக்கு இருக்குற வேலையே கரெக்டா இருக்கு… இதுல எங்கிருந்து டுஷன்லாம்?’, என்று அவள் எழுந்து கொள்ள, “வெறும் ஒரு மணிநேரம் தான அதுவும் வீகெண்ட்ல தான்”, என்று இனியன் சொல்ல, “முடியாது முடியாது… அப்போ தான் என் பசங்களோட நான் நேரம் செல்வழிக்கறதே இதுல இது வேறயா?”, என்று அவள் சலித்து கொண்டாள்.

“உன்னோட தமிழை எல்லாருக்கும் சொல்லி கொடுக்கலாம்ல?”, என்று இனியன் விடாப்பிடியாக நிற்க, கயலோ சிறிது யோசித்து விட்டு பேச ஆரம்பித்தாள்.

“அம்மா நீங்க ஏன் ஒரு யுடியூப் சேனல் ஆரம்பிக்க கூடாது”, என்று கயல் சொல்லவும், “நல்ல ஐடியா அம்மா, நீங்க ஒரு யுடியூப் சேனல் தொடங்கி செலபிரிட்டி ஆகிருங்க”, என்று அச்யுத் சொல்லவும், அவன் தலையில் செல்லமாக கொட்டினாள் அவனின் அக்கா.

“இன்னும் ஆரம்பிக்கவே இல்ல, செலபிரிட்டியா?”, என்று கேட்டு அவனை முறைத்து கொண்டு அவளின் அன்னையின் புறம் திரும்பி, “அம்மா நீங்க எவளோ நல்லா தமிழ் செய்யுள்லாம் விளக்குறீங்க தெரியுமா? அது மட்டும் இல்ல, தமிழ் வார்த்தைகள் கூட அவ்ளோ தெளிவா பேசுறீங்க, கலப்படம் இல்லாத தமிழ் சொற்கள், அதையே நம்ம சேனலா ஆரம்பிக்கலாம்”, என்று அவள் யோசனையை கூறினாள்.

“அப்பறோம் இந்த மாறி வெளிநாட்ல இருக்க பசங்களுக்கும் தமிழ் கத்துக்க சுலபமா இருக்கும்.. நீங்க ட்யூஷன்னு எடுக்க வேண்டாம்”, என்று கயல் கூறவும், “நல்ல ஐடியா கயல்… நம்ப ஏன் இத இம்ப்ளிமென்ட் பண்ண கூடாது?”, என்று இனியேனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

“என்னங்க பசங்க தான் ஏதோ சொல்ராங்க நீங்களும் கூட சேர்ந்து இப்படி சொல்றிங்க?”, என்று அவள் நகர முற்பட, மூன்று பேறும் அவளை சுற்றி நின்று கொண்டனர்.

“அப்போ என்ன விட மாட்டீங்க?”, என்று அவள் கைகளை கட்டிக்கொண்டு கேட்க, அதே தொனியில் நின்று அவர்களும், “முடியாது”, என்றனர்.

அவளும் அமர்ந்து விட்டாள்.

“இதெல்லாம் எப்படி நடக்கும்? அதுக்குலாம் நல்லா அழகா இருக்கனும்… நான் போய் வீடியோ போட்டா எத்தனை பேரு பார்ப்பாங்க?”, என்று அவள் சொல்லவும், “அம்மா ட்ரை பண்ணி பார்க்கலாமே”, என்று அவளின் மகள் விடாப்பிடியாக நின்றாள்.

“அழகுல்லாம் மேட்டர்ரே இல்ல.. நீ பேசுற தமிழுக்கு கண்டிப்பா நிறைய விசிறிகள் வருவாங்க… அதுவும் எத்தனையோ பேர் தமிழ் பாட்டுக்குலாம் யாராச்சு அர்த்தம் சொன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறாங்க… நீ ஏன் அத பண்ண கூடாது?”, என்று கேட்டிருந்தான் இனியன்.

“பண்ணலாம் தான்..”, என்று அவள் இழுக்க, “பண்ணலாம்”, என்று முடித்து இருந்தார்கள் மற்ற மூவரும்!

“சேனல் பேரு என்ன வைக்கலாம்?”, என்று அச்யுத் கேட்க, “ஏதாச்சு நல்லா கேட்ச்சியா வைக்கனும்”, என்று கயல் சொல்லவும், “அப்படினா?”, என்று கேட்டவளிடம், “அப்படினா மத்தவங்கள ஈர்க்குறமாரி அம்மா”, என்று விளக்கம் அளித்தாள்.

“நம்ம தமிழுக்காக தான் ஒரு சேனல் ஆரம்பிக்க போறோம்… அப்போ அது ரிலேட்டா ஏதாச்சு வைக்கலாம்”, என்று கயல் சொல்ல, “அம்மா பேருலயே சேனல் ஸ்டார்ட் பண்லாம்”, என்று அச்யுத் கூறினான்.

இருவருக்குள்ளும் தீடீரென்று கலவரமே மூண்டு விட்டது.

“தமிழ்னு ஆரம்பிக்கிற மாறி வைக்கலாம்”, என்று கயல் ஒருபுறம் நிற்க, “அம்மா பேரு கனில வைக்கலாம்”, என்று அச்யுத் ஒரு புறம் நின்றான்.

“செந்தமிழின் செங்கனியே, பேரு நல்லா இருக்கா?”, என்று கேட்டது என்னவோ இனியன் தான். “சூப்பர் பா”, என்று இருவரும் ஒரு சேர சொல்ல, மூவரும் சிரித்து கொண்டனர்.

“எவளோ அழகா அப்பா, அவங்க இரண்டு பேரோட பேரையும் சேர்த்துட்டாரு பாரு ?”, என்று கயல் கேட்க, “அவ சேர்களானாலும் என்னைக்கும் இந்த இனியனோட கனி தான்!”, என்று அவளை அவனின் கைவளைவிற்குள் கொண்டு வந்திருந்தான் தமிழினியன்.

“ஆனா அதுக்கு நல்ல கேமெராலாம் வேணுமே?”, என்று அடுத்த கேள்வி கேட்டால் கனி!

“அதான் என்கிட்ட ஒரு கேமரா இருக்கே… அதையே யூஸ் பண்ணிக்கலாம்”, என்று அவன் சொல்லவும், “என்னனு வீடியோ போடறது?”, என்று கேட்டவளிடம், “அது உன் வேலை”, என்று சொன்னான் இனியன்.

“அம்மா நீங்க ரொம்பலாம் யோசிக்காதிங்க? இப்போ இருக்குற என்னோட படிக்கிற பிள்ளைங்களுக்கெல்லாம் ஆத்திச்சூடி கூட தெரியல! அத கூட போடுங்க… எல்லாத்துக்கும் அர்த்தம் சொல்லி போடுங்க”, என்று கூறினாள் கயல்.

“கேட்கறதுக்கு நல்லா தான் இருக்கு…”, என்று அவள் சொல்ல, “நீ என்ன பேசப்போறன்னு யோசி… நம்ப நாளைக்கே வீடியோ ஷூட் பண்றோம்”, என்று அவன் சொல்ல, “நாளைக்கே வா?”, என்று அவளின் கண்கள் விரிய, “நாளைக்கே தான்”, என்று மூவரும் ஒரே போல் கூறினர்.

பிள்ளைகள் உறங்க சென்றதும், இனியனிடம் வந்த கனி, “ஏங்க உண்மையாவே இந்த யூட்யூப் சேனல் ஆரம்பிக்கிறோமா?”, என்று கேட்க, “இல்லையா பின்ன? கேமராலாம் செட் பண்ணி பாத்துட்டு இருந்தேனே!”, என்று அவன் சொல்லவும், “அத பார்த்தேன்! ஆனா உண்மையாவே இவளோ சீரியஸ்சா இருக்கீங்களே?”, என்று அவள் அவனை தான் பார்த்தாள்.

“உண்மையாவே கயல் சொன்னது நல்ல ஐடியா கனி! எனக்கு தான் இவளோ நாள் இது தோணாம போயிருச்சு! உன் தமிழ் பற்று தான் உன்னோட ஸ்ட்ரென்த் கனி, இதையே இவளோ நாள் நான் யோசிக்காம இருந்துட்டேன்! இது உன்னோட அடையாளம் கனி! அத ஏன் நீ விட்டு கொடுக்கணும்? சொன்ன மாறி உனக்கு பிடிச்ச தமிழுக்காக செய்றதா நினைச்சிக்கோ! எத்தனையோ தமிழர்கள் உலகம் முழுக்க இருக்காங்க… அவங்களுக்கே கூட… இத திருப்பி படிக்கலாமேன்னு ஆசையா இருக்கும்”, என்று அவன் சொல்லவும், “உங்களுக்கு அப்படி ஏதாவது இருக்கா?”, என்று அவள் கேட்டாள்.

“எனக்கு ரொம்ப பிடிச்சது ஔவையார் எழுதிய கொன்றை வேந்தன்! எல்லாரும் ஆத்திச்சுடி சொல்லுவாங்க… என்னவோ எனக்கு கொன்றே வேந்தன் ரொம்ப பிடிக்கும்!”, என்று அவன் சொல்ல, அவளுக்கும் அப்படி தான் தோன்றியது!

ஆத்திச்சுடியை படிக்கும் பலர் கொன்றை வேந்தனை பற்றி பெரிதாக பேசுவது தான் இல்லை!

ஆம்! அவளின் முதல் காணொளி கொன்றை வேந்தனை பற்றி தான் என்று முடிவெடுத்து விட்டாள்!

அடுத்த நாள் விடிய, அவர்களுக்கு விடுமுறை தான்!

நாளை கயலுக்கு நடனப்போட்டி வேறு இருக்க, அவளோ பயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

“அம்மா ஷூட் பண்லாமா?”, என்று அச்யுத் கேட்க, “உங்க அப்பா ரெடின்னா பண்ணலாம்”, என்று அவள் சொல்லிக்கொண்டு வெளியே வர, “அம்மா சூப்பர்ரா இருக்கீங்க”, என்று அச்யுத் சொல்ல, கேமராவை பொருத்தி கொண்டு இருந்த இனியனும் திரும்பி பார்த்தான்.

அழகாக பருத்தி புடவை கட்டி, கழுத்தில் பொன் தாலியோடு, வகுட்டில் குங்குமம் இட்டு, நெற்றியில் பொட்டுடன், தலையில் மல்லிகை மலர் சூடி, தமிழின் மகளாக வந்தவளை பார்த்தவுடன் இனியனும் கூட ஸ்தம்பித்து விட்டான்.

“அப்பா அம்மாவ சைட் அடிச்சது போதும் வாங்க வீடியோ எடுக்கலாம்”, என்று அச்யுத் சொல்லவும் தான் இனியன் சுயநினைவு பெற்றான்.

“இப்படி பையன் முன்னாடியா டா சைட் அடிப்ப?”, என்று பொன்னம்மாள் கூற, “என் பொண்டாட்டியா நான் எப்போ வேணாலும் எங்க வேணாலும் சைட் அடிக்க என்கிட்ட லைசென்ஸ் இருக்கு…யாரு என்ன ஏதும் சொல்ல முடியாது”, என்று அவன் சொல்லவும், செங்கனி மேனி செம்மையாகி விட்டது.

“அம்மா பாருங்க வெக்க பட்றாங்க”, என்று மீண்டும் அச்யுத் கூற, “டேய் நீ உன் வேலைய பாரு டா… என்னையும் என் பொண்டாட்டியையும் கணக்கெடுக்கறதே வேலையா வெச்சிருக்கான்” என்று பொரும்மி கொண்டான் இனியன்.

“அம்மா கன்டென்ட் என்ன?”, என்று அவளை கேட்க, “கொன்றை வேந்தன்”, என்றதும் இனியனின் கண்கள் அவளை தான் பார்த்தன!

“ஆனா அது எல்லாருக்கும் தெரியுமே!”, என்ற அச்யுத்திடம், “மொத்தம் தொண்ணூத்தி ஒரு கொன்றை வேந்தன் இருக்கு டா எல்லாமே எல்லாருக்கும் தெரியாது… தெரியாத பேசலாம்”, என்று அவள் சொல்ல, அவர்களும் ஆமோதித்தனர்.

“சரி ஸ்டார்ட் பண்ணலாம் கனி”, என்று இனியன் சொல்ல, “அம்மா ஆக்சன்”, என்று அச்யுத் சொல்லவும், அவளும் துவங்கினாள்.

ஆழ்ந்த மூச்சு ஒன்றை எடுத்து பேசத்துவங்கினாள்!

“வணக்கம் மக்களே!

இது எங்களோட புது யூட்யூப் தளம்!

தமிழுக்காக நாங்க துவங்குற ஒரு தளமும் கூட!

செந்தமிழின் செங்கனியே! செங்கனியாகிய நான் உங்களுக்கு நம் செந்தமிழின் சுவையை எடுத்துரைக்க வந்துள்ளேன்!

எப்பவோம் தமிழ பத்தி பேசுனா ஆத்திச்சுடி இல்ல திருகுறளோட தான் ஆரம்பிப்பாங்க… நாங்க கொஞ்சம் வித்யாசமா கொன்றை வேந்தன்ல இருந்து ஆரம்பிக்கலாம்!

முதல்ல கொன்றை வேந்தன் அப்படினா என்னனு இங்க எத்தனை பேருக்கு தெரியும்?

கொன்றை என்பது கொன்றை மரத்தை குறிக்கும்! அதிலும் இந்த செய்யுள்ள இந்த செய்யுள் ஆசிரியர் கொன்றை வேந்தனா அவங்க அடுத்து குறிப்பிடுவது சிவபெருமானை தான்!

இந்த செய்யுளோட வாழ்த்து பாடல் “கொன்றை வேந்தன் செல்வன்னு” ஆரம்பிக்கும்! அதோட அர்த்தம் சிவபெருமானுடைய மகன் முழு முதல் கடவுளான விநாயகரை குறிக்குது!

இதுல எல்லாருக்கும் தெரிஞ்ச பாடல் பார்க்காம, சில வித்தியாசமான அதே சமயம் குழந்தைகளாகிய உங்களுக்கு ஏத்த பாடல் சிலவற்றை பார்ப்போம்!

முதல்ல, “கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி”, இது எவ்வளோ உண்மைன்னு இப்போ இருக்க குழந்தைகளுக்கு தெரியறது இல்லயோன்னு எனக்கு எப்பவோம் தோணும்!

அப்படினா என்னனா, எவ்வளோ பொருள் நம்ப கிட்ட இருந்தாலும் உண்மையாவே நம்ப கிட்ட இருக்க மிகப்பெரிய பொருள் கல்வி தான்!

உங்க அப்பா அம்மா, எவளோ பணக்காரங்களா இருந்தாலும் சரி, இல்ல நீங்க என்ன நிலைல இருந்தாலும் சரி, என்னைக்கும் அடிப்படை கல்வி ரொம்ப முக்கியம்!

நீங்க சொல்லலாம், காமராஜர் கருணாநிதிலாம் என்ன படிச்சாங்கன்னு, ஆனா கல்வியோடு அருமை தெரிஞ்சதுனால தான் காமராஜர் இலவச கல்வி மற்றும் மதிய உணவு திட்டத்தையெல்லாம் கொண்டு வந்தார். கருணாநிதியை அரசியல் தலைவரா நான் பேசவிரும்பவில்லை! ஆனா ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் பேச்சாளரா அவர் இருக்க காரணம் அவருக்கு தமிழ் கல்வி மற்றும் புத்தக அறிவு இருந்ததுனால மட்டும் தான்!

அடுத்து இன்னொரு பாடல், இது தான் நிறைய பெரு தவறா புரிஞ்சிக்கிற பாடல், “வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை”, இந்த பாடலுக்கான பொருளை தான் நிறைய பேறு தப்ப புரிஞ்சிருக்காங்க, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட் டான்னு, இது இந்த பாடலுக்கான அர்த்தம் இல்லைங்க, இந்த பாடல் உண்மையா கூற வருவது என்னனா, களங்கமற்ற தூய்மையான மனது உடையவர்கள் வஞ்சம் நினைக்க மாட்டாங்க…

இது தெரியாம உலகமே வெளி தோற்றத்தை பார்த்து மயங்கிட்டு இருக்கு…

இன்னைக்கு இது போதும், நீங்கள் தரும் ஆதரவை வைத்து தான் எங்களோட அடுத்த விடியோக்கள் வரும்… உங்களுக்கு விருப்பமான செய்யுள்கள் இருந்தால் சொல்லுங்க… கண்டிப்பா அதை பற்றியும் பேசலாம்”, என்று முடித்து இருந்தாள்.

அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் அச்யுத்தும் இனியனும்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!