அத்தியாயம் 6
அதிகாலையில் வாசலை தெளித்து கோலமிட்டு அதற்கு சாணியில் பிள்ளையார் பிடித்து அதற்கு பூசனிபபூவும் வைத்து விட்டு தன்னுடைய பாவாடையை இடுப்பில் சற்று தூக்கி சொருகி இருந்ததை இடது கையால் எடுத்துவிட்டபடியே உள்ளே நுழைந்தாள் மீனு.
உள்ளே நுழைந்த அடுத்த நொடியே எதிலோ மோதி பின்னால் விழப்போனவளைத் தன்னுடைய பலம் பொருந்திய கரத்தால் அவளுடைய இடுப்பை தாங்கிப் பிடித்தான் ஜாகிங் செல்ல தயாராகி வந்த விஹான். “ஹலோ முன்னாடி பார்த்து வரமாட்டியா நீ” சென்று மீனுவைப் பார்த்த விஹான் சற்று எரிச்சலுடன் கேட்டான்.
அவனுக்கோ இங்கு வந்ததிலிருந்து இவளிடம் இப்படி இரண்டாவது முறையாக நடக்க அவனுக்கோ எரிச்சலாக இருந்தது.
பொதுவாக வெளிநாடுகளில் இருந்து வரும் இளைஞர்களுக்கு அங்கு தங்களுடன் குட்டை பாவாடை குட்டை சட்டை இவ்வாறு அணிந்து கொண்டிருக்கும் பெண்களை பார்த்தவர்களுக்கோ இங்கு கிராமத்தில் தாவணி பாவடை சேலை, தலை நிறைய மல்லிகை பூ, நீல முடி என்று இருக்கும் பெண்களை வெகுவாக ரசிப்பது உண்டு.
ஆனால் அதற்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருக்கும் நம் விஹானுக்கோ இப்படி கிராமத்து தேவதையாக வலம் வரும் மீனுவை ஏனோ சுத்தமாக பிடிக்கவில்லை.
இதற்கு காரணம் அவனுக்கு கிராமத்து பெண்களை பிடிக்கவில்லையா அல்லது மீனு அவனுக்கு பிடிக்காத குடும்பத்து பெண் என்பதால் பிடிக்கவில்லையா என்பது அவனுக்கே வெளிச்சம்.
சரி வாங்க கதைக்குள்ள போகலாம்.
“சாரி சாரி நான் பாக்காம வந்துட்டேன் சாரிங்க மன்னிச்சிடுங்க” என்று நேற்றைய பொழுது போலவே அவளுடைய இதழ்கள் இந்த இரு வார்த்தைகளை மட்டுமே உதிர்த்தன.
அதில் மேலும் கடுப்பான விஹானோ அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவன் அவளுடைய வார்த்தைகளை பொருட்படுத்தாமல் “சரியான லூசு” என்று சொல்லிவிட்டு அவளைக் கடந்து அவன் சென்று விட்டான்.
போகும் அவனையே விழியாகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனு.
அவனோ ஆர்ம் கட் பணியினும் ஒரு ஷார்ட்ஸும் காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு அவன் ஸ்லோவாக ஓடிக் கொண்டு செல்ல,
அதிகாலையிலேயே அவனுடைய இந்த தரிசனம் கிடைத்த மீனுவுக்கோ குத்தாட்டம் போட வேண்டும் போல இருந்தது.
அப்படியே போகும் அவனையே விழியகலாமால் பார்த்துக் கொண்டு நின்றிருந்த மீனுவை லல்லுவின் ஸ்கூட்டி ஹாரன் சத்தம் காதை கிழக்கச் செய்தது.
“ஆஆஆ” என்று காதை பொத்திக்கொண்டு கனவு உலகத்திலிருந்து மீண்டு வந்த மீனுவோ சத்தம் வந்த திசையைத் திரும்பி பார்க்க லல்லுவோ ஸ்கூட்டியில் அமர்ந்து கொண்டு ஹான்பாரில் தன்னுடைய இரு கைகளையும் கோர்த்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க,
“என்னடி இப்படியா காது கிழியிர அளவுக்கு ஹாரன் அடிப்பா?” என்று தன்னுடையக் காதை ஒற்றை விரல் கொண்டு குடைந்தபடியே மீனு கேட்க,
“இப்படி காலங்காத்தாலேயே வாசலை மரைச்சி நின்னுகிட்டு பகல் கனவு கண்டுகிட்ட இருந்தா என்ன செய்றது”
என்று தெனாவட்டாக கேட்டாள் லல்லு.
“ஏன்டி அதுக்காக இப்படி காது கிழியிர அளவுக்கா ஹாரன் அடுப்ப” என்று அவள் அருகில் வந்தாள் மீனு.
“சரி விடு” என்று தன்னுடைய அக்கா தோளில் லேசாக தட்டிய லல்லவோ,
“மீனு எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான ஆர்டர் இருக்கு அது முடிஞ்சதுக்கு அப்புறம் தான் நான் வீட்டுக்கு வருவேன் மீனு அது இன்னைக்கு முடிஞ்சாலும் முடியலாம் இல்ல நாளைக்கு கூட முடிக்கலாம் வீட்ல கேட்டாங்கன்னா வழக்கம் போல நீதான் பதில் சொல்லி சமாளிக்கணும் சரியா நான் கிளம்புறேன் பாய்” என்றவள் லஞ்சமாக தன்னுடைய அக்காவின் பட்டு கன்னத்தில் லேசாக முத்தமிட்டவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
காலை உணவு தடபுடலாக அங்கு ரெடியாக மொத்த குடும்பமும் ஆஜராகியது.
அங்கு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருக்க அப்போது சித்ரா மீனுவை அழைத்து,
“மீனு நீ என்னமா செய்ற?” என்று கேட்க,
மீனு பதில் சொல்வதற்கு முன்னரே ராமச்சந்திரன்,
“அவ எம்பிபிஎஸ் முடிச்சுருக்காமா மேல படிப்பதற்காக மும்பைல அப்ளிகேஷன் போட்டு இருக்கா வந்ததும் மும்பைக்கு போய்டுவா” என்றார் ராமச்சந்திரன்.
“அப்போ லல்லு அண்ணா?” என்று கேட்க,
“அவள் பேஷன் டிசைனிங் பைனல் இயர் படிக்கிறாமா படிச்சுக்கிட்டே அவ ஒரு சின்ன பொட்டிக்கு ஆரம்பிச்சிருக்கா எப்ப பாரு அவள் ஆங்கதான் இருப்பா காலேஜ் முடிஞ்சா அங்க போய்டுவா அவளுக்கு தேவையான பொருட்கள் அங்க கொஞ்சம் இருக்கும் வீட்டுக்கு வரணும்னா அவளுக்கு எப்ப தோணுதோ அப்பதான் வருவா நாங்களும் அவளோட ஆசைக்கு குறுக்க நிக்கல அவளுக்கு அந்த பொட்டிக் அதுதான் அவளுக்கு உலகமே எப்பவும் புதுசா எதாவது செய்யணும் சாதிக்கனும் அப்படின்னு அவ அதுக்காகவே தன்னை தயார் படுத்திக்கிட்டு இருப்பா” என்று தன் மகள்களைப் பற்றி ஒரு தந்தையாக பெருமையுடன் கூறினார் தன் தங்கையிடம்.
அப்பொழுது அந்த வீட்டு வேலைக்காரர் ஒருவர், “ஐயா கொரியர் வந்திருக்கு “ என்று சொல்ல ராமச்சந்திரன் இதோ வருகிறேன் என்று வெளியில் செல்ல போக அப்பொழுது அந்த வேலைக்காரர்,
“ பெரிய ஐயா உங்களுக்கு இல்லைங்க நம்ம தங்கச்சிமாவோட பையன் விஹான் தம்பிக்குத் தான் வந்திருக்கு அவர் தான் வந்து வாங்கினுமாம் வேற யாருக்கும் தர மாட்டாங்களாம்” என்று சொல்ல விஹான் உட்பட அங்கு இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி.
பின்னே இருக்காதா?
விஹான் நேற்று தான் இந்த ஊருக்கு வந்து சேர்ந்தான். அவன் இருப்பது வெளிநாட்டில் அப்படி இருக்கும் பொழுது இங்கு வந்த மறுநாளே அவனுடைய பெயருக்கு கொரியர் வந்திருக்கிறது என்றால் அனைவருக்கும் அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.
இவனுக்கு இங்கு யார் அனுப்பி இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் விஹானோ எழுந்து வந்தவன் அந்த கொரியர் காரரிடம்,
“நான் தான் விஹான் குடுங்க” என்று கேட்டான்.
அந்த கொரியர் காரரோ பார்சலை அவனிடம் கொடுத்து விட்டு அவன்தான் விஹான் என்று உறுதிப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றார்.
பார்சலைத் தன்னுடைய கையில் வாங்கிய விஹான்.
அதைத் திருப்பி திருப்பி பார்த்த விஹானுக்கோ அது தனக்குத் தான் வந்திருக்கிறதா என்று மேலும் உறுதிப்படுத்திக் கொண்டவன் அதை பிரித்து பார்க்க அவன் கண்களோ அகலமாக சாசர் போல விரிந்தன.
அந்த பார்சலில் அழகான ஓவியம். அதுவும் அவனுடைய உருவம். அவன் இந்த ஊருக்கு வந்து காரை விட்டு இறங்குவது போல் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.
“வாவ் சச்ச அமேசிங் பிக்சர்” என்று அந்த வரைபடத்தைத் தன்னுடைய கைகால் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க, அதன் கீழே இரண்டு வரிகளில் ஒரு அழகான கவிதை.
“என்னை மையல் கொல்ல வாராயோ”
என்ற வரிகளோடு கீழே “விழி” என்ற பெயரும் அதில் குறிப்பிட்டு இருக்க, சாதாரணமாக பார்த்து கொண்டிருந்த அவன் பார்வை ரசனைப் பார்வையாக அந்தப் படத்தை வருடின அவன் கண்கள்.
அவனுடைய இதழ்களோ தன்னையும் மீறி “விழி..” என உச்சரித்தன.
வெளியே சென்ற தன்னுடைய மகனை காணவில்லையே என்று சித்ரா அவனைத் தேடி வெளியில் வந்தவர் அவனைக் கண்டதும் அவனிடம்,
“ என்னப்பா இங்க உனக்கு யாரு தெரிஞ்சவங்க இருக்காங்க ? சரி என்ன வந்திருக்கு” என்று கேட்க அவனோ உடனே தன் கையில் வைத்திருந்த அந்த படத்தை தன் தாய்க்குத் தெரியாமல் தன்னுடைய முதுகிற்கு பின்னால் மறைத்தவன்,
“அது ஒன்னும் இல்லமா நீ வா” என்றவன் சித்ரா வேற எதுவும் கேட்பதற்கு முன்னரே உள்ளே அழைத்து வந்தவன் அனைவரிடமும் பொதுவாக புன்னகையைப் புரிந்து விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
அவன் அப்படி செய்யவும் யாரும் மேற்படி அதைப் பற்றி கேட்க வில்லை.
காலை பொழுது நன்றாக கழிய மீனு லல்லு வின் பொட்டிக்கிற்கு செல்வதால்,
“அம்மா நான் லல்லுவுக்கு பாயசம் எடுத்துட்டு அவளோட பொட்டிக் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு கிழம்ப அப்போது மாடியில் இருந்து ஃபோனைப் பார்த்த படியே விஹான் இரங்கி வர பத்மாவோ,
“ மாப்பிள்ளை இங்க வாங்க” என்று அழைக்க விஹானோ தலையைத் திருப்பி அங்கும் இங்கும் பார்க்க, பத்மாவோ புன்னகைத்தவர் விஹானை நோக்கி கை நீட்டி,
“மாப்பிள்ளை உங்களைத் தான் இங்க வாங்க” என்று மீண்டும் கூப்பிட்டார். அதற்கு விஹானும் ஆள்காட்டி விரலை தன்னை நோக்கி காட்டியவன்,
“இட்ஸ் மீ?” என்று அவன் சந்தேகமாக கேட்க அவரும் ஆமாம் என்று தலையாட்ட அவர் அருகில் வந்தவன், “மாப்பிள்ளையா நானா” என்று அதிர்ச்சியாக கேட்க அதற்கு பத்மாவோ சத்தமாகச் சிரித்தவர்,
“என்ன மாப்ள நீங்க எனக்கு மருமகன் முறை தானே அதனாலதான் அப்படி கூப்பிட்டேன்” என்றார் பத்மா.
“ஓஓ ஓகே ஓகே” என்றவன் எதற்கு கூப்பிட்டீர்கள் என்று கேட்க,
“ உங்களுக்கு இந்த ஊரைச் சுத்தி பார்க்கணும்னு ஆசை இல்லையா” என்று கேட்க அதற்கு அவனோ தன்னுடைய இரு விழிகளையும் உலக உருண்டையை சுற்றுவது போல சுற்ற விட்டவன் ஏதோ சொல்ல வாய் எடுக்க அதற்குள் பத்மா மீனுவை அவனை அழைத்துச் செல்லுமாறு சொல்ல அவளுக்கோ இதைக் கேட்டதும் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
விஹானுக்கோ ‘என்ன இவளோடு செல்ல வேண்டுமா அம்மா உன்னால இந்த பட்டிக்காடு கூட கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்குறாங்களே’ என்று நினைத்துக் கொண்டான் விஹான்.