“ஏங்க ஏங்க ஹலோ மிஸஸ் பவித்ரா” என்று தோளை லேசாக தொட்டு அழைக்க, “ஹான்” என்று பயந்தபடி பின்னால் நகர்ந்தாள் பவித்ரா.. “ரிலாக்ஸ் ரிலாக்ஸ் பயப்படாதீங்க ஒன்னும் இல்ல, உங்க வீடு வந்துருச்சு” என்று அவன் சொன்னதும் வேகவேகமாக இறங்கி வீட்டுக்குள் சென்றாள்..
அவளை பார்த்த கல்யாணி எதையோ கேட்க, அவரிடம் எதுவுமே பேசாமல் அவசரமாக அறைக்குள் வந்து கதவை தாளிட்டவள் குத்து காலிட்டு முகத்தை அதுக்குள்ள புதைத்து கொண்டாள்.. நடந்த நிகழ்வுகளால் இன்னுமே அவள் உடல் நடுங்கி கொண்டு இருந்தது.. பார்த்திபன் அவனை நினைக்கும் போதே இப்புடி தன்னை பற்றி அக்கறை இல்லாமல் அப்புடிப்பட்ட ஒரு மோசமான நிலையில் விட்டு விட்டானே என்ற கோவமும் வெறுப்பும் வந்தது..
அவன் மட்டும் அந்த ஷ்யாம் மட்டும் வராமல் இருந்திருந்தால், தன் நிலை இந்நேரம் என்னவாகி இருக்குமோ, என்று நினைக்கும் போதே உடல் தூக்கிவாரிப் போட்டது..
அந்த நால்வரில் ஒருவர் சட்டையை கழட்டி விட்டு கிட்ட நெருங்கும் போது இனி எல்லாம் முடிந்தது நாளை தான் உயிரோட இருக்க போவதில்லை என்று நினைத்து கண்ணை இறுக மூடி கண்ணீர் விட, அப்போது டம் டம் என்ற சத்தமும் “டேய் அவனை விடாதீங்க டா” என்ற சத்தமும் கேட்டது.. அதோடு இறுக பற்றி இருந்த கையை அவர்கள் விட்டது போன்று இருக்க, அவசரமாக கண்ணை திறந்து பார்த்தாள் தன் கணவனோ என்று, அப்போதும் அவளுக்கு ஏமாற்றம் தான்.. அது பார்த்தி இல்லை.. வேறு யாரோ ஒருவன் அந்த நால்வருடனும் சண்டை போட்டு கொண்டு இருந்தான்.. யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் இந்த ஆபத்தான நிலையில் தன்னை காக்க வந்த ஆபத்பாந்தவனாக தான் தெரிந்தான்..
முதலில் அவனை பவிக்கு யாரென தெரியவில்லை.. “வாங்க என் கார்ல் போகலாம் உங்களை வீட்டில் விட்டுறேன்” என்று அழைக்க அவள் தயங்கினாள்.. அவன் தான் “மிஸஸ் பவித்ரா,ஏன் பயப்படுறீங்க? என்னை உங்களுக்கு நியாபகம் இல்லையா?, அன்னைக்கு பார்ட்டியில் மீட் பண்ணுனோமே, எஸ்.எஸ் காஸ்மெட்டிக் எம்.டி ஷ்யாம்” என்று நினைவு படுத்தினான்.. அந்த நிலையில் அவன் கூறியது எதுவுமே கருத்தில் பதியவில்லை.. இப்போது தான் அவன் சொன்னது நினைவு வந்தது.. அன்று அந்த பிசினஸ் பார்ட்டியில் ஷ்யாமை பார்த்த பவித்ராவிற்கு கொஞ்சம் கூட அவனை பிடிக்கவில்லை.. ரொம்ப வழியுறான் ஆள் சரியில்லை என்று தான் தோன்றியது.. அதனால்லே அவனை தவிர்த்தாள்.. இப்போது தன் எண்ணம் தவறு என்று அவளுக்கு தோன்றியது..
“பவி பவி” என்று அழைத்தபடி அறைக்குள் வந்தான் பார்த்திபன்.. “எப்ப டி வந்த” என்று கேட்டான்.. மணியை பார்த்தாள் பவி அது 2:30 என்று காட்டியது ஏற்கெனவே பயங்கர கோவத்தில் இருந்தவளுக்கு இந்த கேள்வி இன்னும் கோவத்தை தூண்டியது..
எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “ஏய் பவி உன்னை தான் கேட்கிறேன் எப்ப வந்த, உன் ஃப்ரெண்ட்ஸ் கூட வந்தியா இல்லை டாக்சி பிடிச்ச வந்தியா”, என கேட்டான்..
“பொண்டாட்டி மேல்ல உனக்கு ரொம்ப தான் அக்கறை பார்த்தி.. நைட்டு பதினோரு மணிக்கு கிட்ட வந்துட்டேன் சொல்லி தனியா நிற்க வச்சவளை 3 மணி நேரம் கழிச்சு வந்து எப்புடி வந்தன்னு கேட்கிற, அடடா என்ன ஒரு அக்கறை என்ன ஒரு அக்கறை உன் அக்கறையை பார்க்கும் போது அப்புடியே எனக்கு குளு குளுன்னு இருக்கு” என்று கோபப்பட்டாள்.. இத்தனையும் அவனை பார்க்காமலே பேசினாள்..
“பவி உன் கோவம் எனக்கு புரியுதுடி, நான் வந்துட்டு தான் இருந்தேன் வழியில் என்னாச்சுன்னா” என்று அவள் கையை பிடிக்க, அவன் கையை தட்டி விட்ட பவி “உனக்கு உன் வேலை தான் முக்கியம்.. என்னை பத்தி கொஞ்சம் கூட அக்கறையோ கவலையோ இல்லவே இல்லை, அங்க ஒருத்தியை வெயிட் பண்ண சொன்னோமே, அவ என்ன ஆனாளோங்கிற அக்கறை கொஞ்சும் கூட இல்லாமா அத்தனை தடவை கால் பண்றேன் அதை எடுத்து பதில் கூட சொல்லலாமா அசால்ட்டா இருந்தியா பார்த்தி, நான் செத்தாலும் இப்புடி தான் இருப்பியாடா” தாக்கமாக கேட்டாள் கூட அழுகையும் வந்தது..
“லூசு மாதிரி பேசாமல் கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதை கேளுடி” என்று கோவப்பட்டான் பார்த்தி.. அவனை பொறுத்தவரை அவள் அங்கு வெயிட் பண்ண காரணத்தால் கோவப்படுகிறாள் என்று நினைத்து சத்தம் போட்டான்..
“எதுக்கு கேட்கனும்? நீ சொல்ற எந்த கதையையும் நான் கேட்க தயாரில்லை.. வர முடியாதுன்னா முடியாதுன்னு முதலிலே சொல்ல வேண்டியது தானே” பவியும் கத்தினாள்..
“எனக்கு வேலை இருக்கு வர முடியாதுன்னு தானே டி அத்தனை தடவை சொன்னேன்.. அதை புரிஞ்சுக்காமா வா வான்னு டார்ச்சர் பண்ணுனது நீ தானே டி.. கார் எடுத்துட்டு போக சொன்னா அதையும் எடுத்துட்டு போகாமல், எல்லா தப்பையும் நீ பண்ணிட்டு என்கிட்ட எதுக்குடி கத்துற” என்று கத்தினான் பார்த்திபன்..
“ஆமா நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. எல்லா தப்பும் என்னோடது தான்.. நான் பண்ணுனதிலேயே பெரிய தப்பு உன்னை கல்யாணம் பண்ணுனது தான்” என கத்தினாள்..
அவள் கூறியது பார்த்திக்கும் கோவத்தை கொடுத்தது.. இருந்தாலும் மேலும் பேசி பேசி சண்டையை வளர்க்க அவனுக்கு விருப்பமில்லை.. உண்மை என்னனு தெரியுமா ஏதேதோ பேசுகிறாளே என்ற வருத்தம் உண்டானது..
“கிட்ட வந்துட்டேன்டி ஜஸ்ட் 2 மினிட்ஸ் தான் சும்மா சும்மா கால் பண்ணிட்டே இருக்காதடி” என்று பவியிடம் கோவமாக பேசி விட்டு போனை வைத்த பார்த்தி பவியிடம் பேசுவதில் கவனமாக இருந்த காரணத்தால் எதிரே வேகமாக வந்து கொண்டு இருந்த காரை கவனிக்கவில்லை.. காரில் மோதி விட கூடாது என ஓரமாக வண்டியை விட திருப்ப அதற்குள் கார் கிட்ட வந்து இடித்து விட்டது.. அதில் நிலை தடுமாறிய பார்த்தி வண்டியோட கீழே விழ, வண்டியோட சேர்த்து கொஞ்ச தூரம் சறுக்கி கொண்டு ஒரு மரத்தின் மீது தலை இடித்து இரத்தம் வர மயங்கி போனான் பார்த்திபன்..
மயக்கம் தெளிந்து பார்த்தி கண் விழித்து பார்க்க ஹாஸ்பிடல் பெட் ஒன்றில் இருந்தான்.. காலிலும் மரத்தில் மோதியதால் தலையிலும் அடிப்பட்டதால் அதற்கு கட்டு போடப்பட்டு இருந்தது.. சறுக்கியதால் உடலில் அங்காங்கே சிராய்ப்பு காயம் இருந்தது.. சின்ன அடி தான் பெருசா எதுவும் இல்லை என்று நினைக்கும் போதே பவித்ரா நினைவு வந்தது.. ‘அச்சோ பவி அங்க தனியா நின்னுட்டு இருப்பாளே’ என்றபடி மொபைலை தேட ,அது அவனிடம் இருப்பதாக தெரியவில்லை.. ச்சே என்றான் அப்போது ப்ரோ கண் முழிச்சிட்டிங்களா,
“சாரி ப்ரோ சாரி கார்ல் தீடிர்னு ப்ரேக் பிடிக்காமா போய்டுச்சு, அதான் காரை நிறுத்த முடியலை.. உங்களுக்கு அடிப்பட்டதும் நான் பயந்து போய்ட்டேன்.. சாரி ப்ரோ” என்றான் எதிரே வந்து இடித்தவன்,
“பரவாயில்லை ப்ரோ என்ற பார்த்தி உங்க மொபைல் கொஞ்சம் தரீங்களா ஒரு கால் பண்ணனும்” என்று கேட்டான்.. அவன் மொபைலை கொடுக்க பவிக்கு கால் செய்யும் முன்பு மணியை பார்க்க அது இரண்டு என்று காட்டியது.. பார்த்தி பயந்து விட்டான்.. இவ்ளோ நேரமாகிருச்சா பவியை அங்க நிற்க சொன்னனே என்னாச்சோ என்றபடி அவள் எண்ணிற்கு அழைக்க பவி போன் எடுக்கவில்லை.. பயந்து போன பார்த்தி கையில் இருந்த டீரிப்சை கழட்டி விட்டு எழுந்தான்..
“ப்ரோ என்னை பண்றீங்க?ஏன் டீரிப்சை கழட்றீங்க?, டாக்டர் மார்னிங் தான் வீட்டுக்கு போக சொல்லி இருங்காங்க என்று அவன் பதறினான்.. “எனக்கு ஒன்னும் இல்ல ப்ரோ, நான் நல்லா தான் இருக்கேன்.. கொஞ்சம் அவசரமா போகனும், நீங்க பண்ண ஹெல்ப்புக்கு ரொம்ப தாங்க்ஸ்” என்று கூறி விட்டு பார்த்திபன் ஹாஸ்பிடலில் இருந்து கிளம்ப பார்க்க அவன் வண்டி இல்லை.. உங்க வண்டியை ஃப்ரெண்ட் கிட்ட சொல்லி வொர்க் ஷாப்பில் விட சொல்லி இருக்கேன் ப்ரோ”..
“இப்ப நானே உங்களை ட்ராப் பண்றேன், வாங்க” என்று அழைத்தான் காரில் இடித்தவன், வேறு வழி இல்லாத பார்த்தியும் அவனோட கிளம்பினான்.. வழி எங்கும் பவிக்கு அழைக்க அவள் எடுக்கவே இல்லை.. ரொம்ப பயந்து போனவன் தன் அன்னை நம்பரை நினைவு படுத்தி அவருக்கு கால் செய்ய பவி வீட்டுக்கு வந்துட்டா என்று அவர் கூறினாலும் நேரில் வந்து பவியை பார்த்த பின்பு தான் பார்த்திபனுக்கு உயிரே வந்தது.. அவளிடம் நடந்ததை கூறலாம் என்று பார்த்தால் அவள் தான் கோவத்தில் வார்த்தைகளை வீசுகின்றாளே, சரி கோவம் தணிந்ததும் காலையில் சமாதானம் பண்ணலாம் என்று நினைத்தான்…
“அவங்களுக்கு எல்லாம் செட்டில் பண்ணிட்டியா” என்று கேட்டான் ஷ்யாம் ஐஸ் கட்டியை எடுத்து வொயின் ஊற்றிய க்ளாசில் போட்டபடி
“எஸ் சார்” என்று பதிலளித்தான் அவனின் உதவியாளர்..
“நவீன் எல்லா நான் சொன்ன மாதிரி தானே பண்ணுனே.. எங்கேயும் எப்பவும் என் பேர் வெளிய வரவே கூடாது”..
“சார் நீங்க சொன்ன மாதிரி தான் சார் பண்ணி இருக்கேன்.. அதனால்ல எந்த பிரச்சினையும் வராது.. சரியான ஆளு தான் சார் நீங்க.. நீங்களே நாலு பேரை செட் பண்ணி அந்த பவித்ரா கிட்ட தப்பா நடக்க வச்சு, அவ புருஷன் அங்க வர முடியாதபடி அவனுக்கு ஆக்சிடன்ட் பண்ண வச்சு..நீங்க போய் காப்பாத்துற மாதிரி காப்பாத்தி ஒரே நாள்ல அந்த பவித்ராக்கிட்ட ஹீரோ ஆகிட்டிங்களே சார், செம மாஸ்டர் ப்ளான் சார்” என்றான் நவீன்..
ஷ்யாம் சிரித்தான்.. “நான் குறி வச்சா எப்பவும் அது மிஸ் ஆகாது நவீன்.. இப்போதைக்கு என் குறி பவித்ரா” என்றான்..
“அது சரி சார் அந்த பார்த்திபனை எதுக்கு சார் லேசா இடிக்க சொன்னீங்க.. அதுக்கு பதிலா நல்லா இடிக்க சொல்லி இருந்தா அவனும் ஆளு அவுட்டாகி இருப்பான்.. உங்க ரூட்டும் க்ளியராகி இருக்குமே” என்று தன் சந்தேகத்தை கேட்டான் நவீன்..
“எனக்கு தேவை பவித்ரா தான், அந்த பார்த்திபன் உயிர் கிடையாது.. அவங்க இரண்டு பேர் நடுவுல்ல சண்டை வரனும் அதுக்காக தான் இது எல்லாம் பண்ணுனேன்.. நீ சொல்ற மாதிரி அவனை ஒரேயடியா தூக்கி இருந்தா அவன் எப்பவும் பவித்ரா மனசில் இருப்பான்.. அப்புடி எல்லாம் எதுவும் நடந்திட கூடாது.. அவ பார்த்திபனை வெறுத்து அவன் வேண்டாம்னு அவளாகவே பிரியனும்.. அதுக்கு அப்புறமா என்கிட்ட வரனும்.. அப்ப தான் என் மேல்ல யாருக்கும் முக்கியமா அவ அண்ணன் ப்ரதாப்புக்கு சந்தேகம் வராது.. அதுக்காக தான் இப்புடி பண்ணினேன்”..
அப்புறம் நவீன் “இன்னைக்கு பவித்ராக்கிட்ட நாலு பேர் தப்பா நடக்க பார்த்தது, நான் அவளை காப்பாத்தினது, இந்த விஷயம் பவித்ரா அம்மா அப்பா பாட்டிற்கு தெரியப்படுத்தனும்.. அதுவும் தானா தெரிஞ்சா மாதிரி இருக்கனும் ஓகே வா”..
“சார் இது எதுக்கு அப்புடி பண்ணுனா இந்த விஷயம் ப்ரதாப்புக்கு தெரிய வருமே, அவனுக்கு தெரிஞ்சா அவன் சும்மா இருக்க மாட்டானா, துருவி துருவி விசாரிப்பானே, ஒரே வேளை நீங்க மாட்டிட்டா என்ன பண்றது”..
“அதுக்காக தானே நவீன் நான் நேரிடையாக எதிலும் ஈடுபடலை.. அந்த நாலு பேரும் மாட்டானா கூட அவங்க கை காட்ட போறது ப்ரதாப்போட போட்டி கம்பெனி ஓனரை தான்.. சோ எனக்கு அந்த கவலையும் இல்லை.. அதனால்ல நீ பவித்ரா அம்மா காதுக்கு இந்த விஷயத்தை கொண்டு போ, அப்ப தான் அவங்க கண்ணுக்கு பார்த்தி வில்லனாகவும் நான் ஹீரோவாகவும் ஆவேன்” என்றவன் சிரிக்க ஆரம்பித்தான்…