Mr and Mrs விஷ்ணு 24

4.8
(30)

பாகம் 24

அப்போது பார்த்து ஏழரை ஷ்யாம் எப்பவும் போல் கதவை தட்டாமல் அவளின் அறைக்குள் நுழைய, கண்மூடி அமர்ந்து இருந்தவள் அவனை கவனிக்கவில்லை.. ஆனால் அவன் கண்ணில் பட்டது ப்ரெக்னென்சி கார்ட்.. பிரிச்சு விட்டு நாமா சேரலாம்னு பார்த்தா இடையில் இது வேறயா எரிச்சலாக இருந்தது… இதை வச்சு ஒருவேளை இரண்டு பேரும் ஒண்ணாகிருவாங்களா, ஒரு நொடி பயந்தவன், அடுத்த நொடி தன் குறுக்கு புத்தி கொண்டு யோசித்து சிரித்து கொண்டான்… 

“ஹே பவி கங்கிராட்ஸ்” என்று கூவ, அந்த சத்தத்தில் கண் விழித்து  பார்த்தவளுக்கு ‘பார்த்திக்கு முன்னாடி இவனுக்கு தெரியும்படி நடந்து கொண்டோமே என்ற தன் மடதனத்தை திட்டி கொண்டு, அவன் வாழ்த்தை ஏற்று கொண்டாள்..

என்ன பவி அம்மா ஆன சந்தோஷம் முகத்தில் அவ்ளோ தெரியலை, ஏதோ டல்லா இருக்க என அக்கறையாக விசாரிப்பது போல்  அவன் வேலையை காட்ட ஆரம்பிக்க,

பவித்ராவும் “உனக்கே தெரியுமே ஷ்யாம் பார்த்திக்கும் எனக்கும் இப்ப ஏதும் சரியில்லை.. இந்த டைம்ல பேபி சரியா வருமான்னு சின்ன குழப்பம்” என இந்த பைத்தியம் அவனிடம் உளறி வைக்க 

அந்த சகுணி சும்மா இருக்குமா, ஏற்கெனவே குழம்பி போய் இருந்தவளை இன்னுமும் பயங்கரமாக குழப்பியது.. அதன் விளைவு அந்த முட்டாள் பெண் இப்போதைக்கு இந்த குழந்தை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாள்.. 

முதலில் சண்டை ஓய்ந்து சமாதானம் ஆன பின்பு பெற்று கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தாள்.. பார்த்தியிடம் சொன்னால் குழந்தையை கலைக்க ஒத்து கொள்ள மாட்டான் என்ன செய்வது என்று யோசித்தவள், பார்த்திக்கு மட்டுமில்லை வேற யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் முடிவெடுத்து, குழந்தையை கலைக்கவே இங்கு வந்து இருக்கிறாள்..

காலையிலே அவள் முகத்தில் தெரிந்த சோர்வை பார்த்த பார்த்திபன் “என்ன பவி உடம்பு எதுவும் முடியலையா? ஹாஸ்பிடல் போகலாமா?” என்று அக்கறையாக கேட்டான்.. அப்போதே அனைத்தையும் சொல்லி விடலாமா என்றும் தோன்றியது..  இருந்தும் ஒன்னுமில்லை என்று சமாளித்தவள் “இரண்டு நாள் எங்க வீட்டுக்கு போய்ட்டு வரேன்” என்று சொல்லி விட்டு வந்தாள்..

 

ஆனால் இங்கு வந்த பின் மேடிட்ட வயிற்றோடு நிறைய பெண்கள் அமர்ந்து இருப்பதை பார்த்தவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.. அது தான் பழியை பார்த்தி மீது போட்டு தப்பி கொள்ள பார்க்கிறாள் அதுவும் முடியவில்லை.. இங்கு வந்தது தப்போ என்ற எண்ணம் கூட வந்தது..

அவள் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்ட ஷ்யாம் மேற்கொண்டு சிந்திக்க விடாமல் “பவி அடுத்து நாமா தான்” என்று உள்ளே அழைத்து சென்றான்.. ஏற்கெனவே டாக்டர் திவேஷிடம் பேசி வைத்து இருந்தான்… திவேஷ் ஷ்யாமிற்கு தெரிந்த நண்பர் மூலம் பழக்கம்.. அவனிடம் விஷயத்தை சொல்ல அவன் தான் ஆரோக்கியம் ஹாஸ்பிடலுக்கு வரவழைத்து இருந்தான்.. அங்கு இருந்த லேடி டாக்டரிடம் ஏற்கெனவே திவேஷ் பேசி வைத்து இருந்தான்.. அதனால் பவியை அழைத்து போய் அவர் அவள் கருவை கலைக்கும் வேலையில் ஈடுப்பட்டார்..

“ரொம்ப யோசிக்காதீங்க ஷ்யாம் எந்த பிரச்சினையும் வராது நான் பார்த்துக்கிறேன்.. ஹஸ்பன்ட் என்ற இடத்தில் சைன் பண்ணுங்க” என்றான் திவேஷ்… 

“பெரிய பிரச்சினை வரும்ன்னு தான் இதை பண்றேன்  டாக்டர்” என்று சிரித்தவன் சைன் பண்ணி அதை திவேஷ் கையில் கொடுத்து விட்டு “இந்த பேப்பரில் ஒரு காப்பி எனக்கு வேணும்” என்று கேட்க.. 

திவேஷும் வாங்கிய பணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்து வேறு எதையும் யோசிக்காது சரி என்றான்.. பின்னாளில் ஆரோக்கியம் ஹாஸ்பிடலுக்கும் அவனுக்கும் வர போகும் பிரச்சினைகளை பற்றி யோசிக்காது..

அனைத்தும் முடிந்து தன் வீட்டில் படுத்து இருந்தாள் பவித்ரா..  இரண்டு நாளாக எங்கும் வெளியே செல்லாமல் வீட்டில் தான் இருக்கின்றாள்.. வயிற்றில் இருந்ததை இறக்கி வைத்தவளுக்கு மனதில் பாரம் ஏறி கொண்டது.. செய்து இருக்கவே கூடாதோ என்ற யோசனையும் குற்ற உணர்ச்சியும் அவளை ஒரு நிலையாக இருக்க விடவில்லை.. 

பார்த்திக்கும் அண்ணாவுக்கும் தெரிஞ்சா என்னாகுமோ அச்சோ என்று நெஞ்சை பிடித்து கொண்டாள் பயமாக இருந்தது.. தெரிய வாய்ப்பே இல்லை.. அது எப்புடி தெரியும் நானா சொன்னா தான் உண்டு அதனால் தெரிய வாய்ப்பில்லை என்று நிம்மதி பெருமூச்சு எடுப்பதற்குள் கதவு படாரென்று வேகமாக திறந்தது..

திடுக்கென பயந்து யார் என்று பார்க்க பார்த்திபன் தான் வந்து இருந்தான்.. ஆனால் அவனை பார்த்து பவித்ராவுக்கு தான் பயமாக இருந்தது.. ஏனெனில் அவனை இது போன்று எப்போதும் அவள் பார்த்தது இல்லை.. அவன் கண்களில் அவ்வளவு கோவம் தெரிந்தது.. 

என்னவா இருக்கும்? ஒரு வேளை இல்ல இல்ல நாமா உளற கூடாது, என்னனு பார்ப்போம், என்று பயத்தை மறைத்து கொண்டு இயல்பாக இருப்பதை போல் முகத்தை வைத்து கொண்டு “வா வா பார்த்தி, என்ன தீடிர்னு” மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை பவித்ராவால் பார்த்தி முகத்தை பார்த்து, அவள் தடுமாறி நிற்க,

அவள் அருகே வந்தவன் “என்னடி இது எல்லாம் உண்மையா” என அவள் கையில் இரண்டு பேப்பரை வைத்து கேட்க, கைகள் நடுங்க அதை பிரித்து பார்த்தவளுக்கு சப்த நாடியும் அடங்கியது.. 

“பார்த்தி அது நான் நான். சா..ரி” என்றவள் மெத்தையில் விழுந்து இருந்தாள் இடது கன்னம் தீ பட்டது போல் எரிந்தது பார்த்தி அடித்த அடியில்,

“பார்த்தி” அதிர்ச்சியும் அழுகையுமா அவனை பார்க்க, அவளின் கை பிடித்து மேலே தூக்கியவன் இன்னும் இரண்டு அடியை கன்னத்தில் மாறி மாறி வைத்தான்..

அதற்குள் பார்த்தி வரும் போதே கோவமாக வந்தது.. மேலே இருந்து வந்த சத்ததிலும் என்னவோ ஏதோவென்று பதறி போய் ரங்கநாயகி பாட்டி, அவள் அம்மா தேவகி, சித்தி விசாலாட்சி வந்து பார்க்க, பார்த்தி அடித்து கொண்டு இருந்தது தான் தெரிந்தது..

அதில் கோவமான தேவகி மகளை தன்புறம் இழுத்து நிறுத்தியவர், “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா எங்க பொண்ணை, எங்க வீட்டில் வச்சே இப்புடி அடிப்ப” தேவகி கோவமாக கேட்டார்..

“உங்க பொண்ணு பண்ணுன காரியத்திற்கு அடிக்காமா, வேற என்ன பண்றது”, என அதே கோவத்துடனே அவள் செய்ததை சொல்ல கேட்டவர்களுக்கும் அதிர்ச்சியும் பவி மீது கோவமும் வந்தது.. 

“பவி என்னம்மா இது? ஏன் இப்புடி பண்ணுன? கோவமாக பாட்டி கேட்கவும் தான் யோசித்தவற்றை அழுகையுடன் கூறினாள்.. 

“உனக்கும் எனக்கும் நடந்த சண்டைக்கு ஒன்னும் தெரியாத உருவம் கூட வராத அந்த குழந்தை என்னடி பாவம் பண்ணுச்சு.. வீடுன்னு இருந்தேன் சின்ன சின்ன சண்டை இருக்க தான்டி செய்யும், என் குழந்தை உருவானதே கூட என்கிட்ட சொல்லாம மறைச்சு இப்புடி பண்ணிட்டியேடி பாவி” பார்த்திக்கு மனது வலித்தது.. அவளை அடிக்க கிட்ட வர, 

அவளை மறைத்தபடி நின்றார் தேவகி, அவருக்கும் மகள் செய்த காரியம் தவறு என்று தெரிந்தது.. அதே நேரம் தன் கண் முன்னே மகளை அடிப்பதை பார்த்து கொண்டு இருக்க முடியவில்லை.. அவர் பார்த்து பார்த்து செல்லமாக வளர்த்த பெண்ணை அடிக்கிறானே என பார்த்திபன் மீது தான் பயங்கர கோவம் வந்தது.. 

அதனால் “குழந்தையை சுமக்க போறது அவ, அவளோட கஷ்டம் அவளுக்கு தான் தெரியும்.. இப்ப என்ன இனி குழந்தை பொறக்காமலேயேவா போக போகுது.. அதுக்கு உடம்பு முடியாம வீக்கா இருக்கவளை அடிச்சே கொன்றுவ போல” என்று கோவமாக பேசியவர் பேச்சை கேட்ட பாட்டிக்கே அது ஒப்பவில்லை.. “தேவகி அமைதியா இரு” என்று சத்தம் போட்டார்..

“ என்கிட்ட குழந்தை உருவானதே சொல்லிட்டு, இப்போதைக்கு எனக்கு குழந்தை வேண்டாம்னு சொல்லி இருந்தா, நானே சம்மந்திச்சு இருப்பேன்.. ஆனா குழந்தை வேண்டாம்னு இன்னொருத்தன் கிட்ட சொல்லி, அவனை கூட்டிட்டு போய், குழந்தைக்கு  அப்பாங்கிற இடத்தில் சைன் பண்ண வச்சு இருக்காளே, அப்ப அந்த குழந்தை என்னோடதா இல்லை அவனோடதா” தேவகி பேசிய பேச்சில் கோவமான பார்த்தி வார்த்தையை விட்டான்..

“பார்த்தி” என்றும் பவியும் “ஏய்” என்று தேவகியும் கத்தினார்கள்.. 

“அவ பண்ணனது தப்பு தான் ப்பா.. அதற்காக இவ்ளோ அசிங்கமா பேச வேணாம்.. வார்த்தையை விடாத” என்றார் பாட்டி.. ஆயிரம் இருந்தும் அவர்கள் பொண்ணு ஆயிற்றே விட்டு கொடுக்கவா முடியும்

“உங்க பேத்தி பண்ணுன அசிங்கத்தை விட நான் பேசுறது ஒன்னும் அசிங்கம் இல்லை” என்றான் அவனுக்கே கண்மண் தெரியாத கோவம்,

“ச்சீ  வாயை மூடு பார்த்தி, இவ்ளோ நேரம் கூட குழந்தையை கலைச்சதற்காக நான் வருத்தப்பட்டேன்.. ஆனா இப்ப இப்புடி ஒரு சந்தேகாரனோட குழந்தையை சுமக்கலையேன்னு சந்தோஷபடுறேன்” என்று பவி கத்த, 

என்னடி சொன்ன கொலைக்காரி என அவளை அடிக்க பாய்ந்தான் பார்த்திபன்.. அவனை பிடித்து வேகமாக தள்ளிய தேவகி “வீட்டை விட்டு வெளிய போடா, என்று கத்த பிரச்சினை பெரிதானது… 

பார்த்தி வந்து சொல்லவும் அங்கு நடந்ததை எல்லாம் கேட்டு உதயகுமாரும் கல்யாணியும் வருத்தப்பட்டாலும், “ஏன் பார்த்தி கொஞ்சம் பொறுமையாவே பேசி இருக்கலாமே” என்று பார்த்திக்கு எடுத்து கூறினர்.. அவர்களுக்கு மகன் மகள் இருவர் வாழ்க்கையும் இதில் இருக்கின்றதே என்னவாகுமோ கலங்கி போய் நின்றனர்.. 

விஷ்ணுவுக்கோ அண்ணனின் நிலை கவலை தந்தது.. அதை விட தன் நிலையை நினைக்கும் போதே நெஞ்சே அடைத்தது போன்று இரூந்தது… அதுவும் தேவகியே உதயகுமார்க்கு போன் செய்து “உங்க பொண்ணு எப்புடி இங்க  வந்து வாழ்றான்னு நான் பார்த்துறேன்” என்றதும் அது இன்னும் அதிகமானது.. ஊரிலிருந்து திரும்பி வந்த பின் தன் கணவன் நடந்ததை எல்லாம் கேட்ட பின்பு  என்ன பண்ணுவோரோ நினைத்தாலே உடல் நடுங்கியது அவளுக்கு, 

ப்ரதாப் வந்ததும் அவனிடம் தேவகி அனைத்தையும் கண்ணீரோடு ஒப்புவிக்க, கோவமாக எழுந்தவன் பவித்ரா  கன்னத்திலே தன் பங்கிற்கு நாலு அறை விட்டான்.. , 

“இது தான் நீ காதலிச்ச இலட்சணமா, கிளம்பு உன் வீட்டுக்கு  நானே கொண்டு வந்து விடுறேன்.. பார்த்தி கிட்ட சாரி கேட்டு அவனோட போய் வாழுற வழியை பாரு” என சத்தம் போட்டான்.. 

ப்ரதாப் அவளை அவன் அடிச்சு இருக்கான் அவனோட எப்புடி என்ற தேவகியை கோவமாக பார்த்தவன், 

இவ பண்ணுன வேலைக்கு அடிக்காம கொஞ்சுவானா இதே பார்த்தி இடத்தில் நான் என சொல்ல வந்தவன் இல்லை விஷ்ணு அப்புடி எல்லாம் பண்ண மாட்டா, தப்பு இவ மேல்ல குழந்தையை கலைச்சு இருக்க அதும் பார்த்திபனுக்கு தெரியாம இது தப்பு இல்லையா, என தேவகி பவித்ரா இருவரையூம் முறைத்தவன், பவித்ரா கிளம்பு என அதட்ட, 

பவியோ இனி அவன் கூட போய் நான் வாழவே மாட்டான்..  என்று உறுதியாக நின்றாள்.. ப்ரதாப்பும் கோவத்தை விடுத்து அவளுக்கு புரியும்படி எடுத்து சொன்னாலும் அவள் கேட்பதாக இல்லை.. 

“இது என்னோட வாழ்க்கை நான் பார்த்துக்கிறேன் நீங்க தலையிடாதீங்க” என  எடுத்துதெறிந்து பேசினாள்.. 

ப்ரதாப்புக்கு புரிந்தது தங்கை சொல்லி கேட்கும் ரகமல்ல பட்டு திருந்த வேண்டியவள் என்று, 

“மார்க் யுவர் வேர்ட்ஸ் ஒன் டே ஐ வில் ரிப்ட் ட் “ அப்புடி ஒரு நாள் வரூம்.. கண்டிப்பா வரும் என்றவன் அதற்கு பிறகு பவித்ராவிடமும் சரி அவள் சம்மந்தப்பட்ட பிரச்சினையும் பேசுவதில்லை.. தேவகி எத்தனையோ முறை பேச வந்தும் அவன் அதை தவிர்த்து விடுவான்..

ஷ்யாமை சும்மா விடுவானா அவனை அடித்து மூக்கு வாய் எல்லாம் இரத்தம் வர வைத்து இருந்தான்.. இனி பவித்ராவிடம் பேச கூடாது என்றும் மிரட்டி இருந்தான்.. ஏற்கெனவே பார்த்தியும் அவன் பங்கிற்கு அடித்து இருந்தான்.. அது எல்லாம் அந்த ஷ்யாம் கேட்கும் ரகமா, பவியிடம் அதை வைத்தும் சிம்பத்தி தேடி இருந்தான்..

 அவளும் என் விஷயத்தில் தலையிடாதீங்க என்று பார்த்தியிடமும் ப்ரதாப்பிடமும் சண்டை போட்டாள்.. அதன் பின்பு ப்ரதாப் ஷ்யாமை கண்டு கொள்வதில்லை.. அப்புடி என்று தான் ஷ்யாம் நினைத்து இருக்கிறான்.. ஆனால் ப்ரதாப் அவள் மீது ஒரு கண்ணை வைத்து விட்டான் என்பது அவனுக்கு தெரியவில்லை.. ஷ்யாமின் திட்டம் என்னவென ப்ரதாப்புக்கு இன்னும் பிடிபடவில்லை.. அதோடு ஒரு நாள்  தங்கச்சி அவனை புரிந்து கொண்ட பின்பு அப்போது அந்த ஷ்யாமிற்கு வகையான விருந்து ஒன்று ப்ரதாப் கையால் கிடைக்க போகிறது..

இந்த விஷயத்தை பற்றி ப்ரதாப் பார்த்தியிடம் பேசவில்லை.. என்ன பேச முடியும், அவன் முகம் பார்த்து பேச முடியாத அளவு தங்கை செய்து வைத்திருக்கிறாளே, அதனால் அமைதியாக இருந்தான்.. 

பார்த்தியும் ப்ரதாப்பிடம் பேசவில்லை.. கல்யாணி தான் நீயா பேசாத கொஞ்ச நாள் போகட்டும் என்று இருந்தார்.. அதற்குள் பவித்ரா விவாகரத்து கேட்டாள்.. பார்த்தி இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.. தப்பு அவ மேல்ல நான் ஏன் இறங்கி போகனும் என்ற ஈகோ எல்லாம் பார்க்காமல், பவித்ராவை சமாதானம் செய்ய தான் முயற்சித்தான்.‌ விஷ்ணுவுக்காக அல்ல, அவனுக்காக அவனின் காதலுக்காக, ஆனால் பவித்ரா இறங்கி வரவே இல்லை.. அவளை மறைமுகமாக ஷ்யாம் இறங்கி வர விடவில்லை.. குழப்பி விட்டு குழப்பி விட்டு சண்டையை பெரிது படுத்தி விவாகரத்தை வாங்க வைத்து விட்டான்…

விஷ்ணுவோ, எப்பவும் போல் அண்ணி விஷயத்தில் அவர் கோவமா இருக்கார் போல, அவர் கோவம் தணிஞ்சு கூப்பிட அப்புறம் அங்க போகலாம் என்று நினைத்தவள் வீட்டிலும் அதையே சொன்னாள்.. ஒரு வேளை கூப்பிடாமலே போய்ட்டா, அவர்க்கு தான் நம்மளை பிடிக்காதே, இந்த கல்யாணமே அண்ணா அண்ணிக்கா நடந்தது தானே, என்ற பயம் உள்ளே இருக்க அதை வைத்து கொண்டே படித்து முடித்தவள், 

வேலைக்கு போக அங்கேயும் அவன் தான் எம்.டி.. பார்த்தவளுக்கு அவனிடம் சென்று பேச பயம்.. அவரே பேசட்டும் என்று இருக்க, 

இவளே இப்புடி இருந்தால் அவள் கணவன் விடாகண்டன் பேசுவானா என்ன, அப்புடி மே அவர்கள் வாழ்க்கை சென்றது.. 

 

பழையதை எல்லாம் நினைத்து பார்த்த விஷ்ணுவுக்கு மலைப்பாக இருந்தது.. எப்ப இந்த பிரச்சினை தீருமோ என்று, 

பார்த்தி பவித்ரா சமாதானமாகி சேர்ந்தால் தன்னை போல் தன் வாழ்க்கை சரியாகும் என நேற்று வரை நம்பிக்கையாய் இருந்தவளின் தலையில் டிவோர்ஸ் என்ற இடியை இறக்கி இருந்தனர் பவித்ரா பார்த்தி இருவரும்..

இனி தன் வாழ்க்கை அவ்ளோ தான்.. அவரும் என்னை டிவோர்ஸ் பண்ணிருவார் என்று பயந்தாள்.. கணவனுக்கு தன் மீது விருப்பம் இருக்கும் என்று  துளி கூட நம்பிக்கை இல்லை விஷ்ணுவுக்கு, கண்டதையும் போட்டு தன்னை குழப்பி கொண்டவள் மணியை பார்க்க அது மூன்று என்று காட்டியது.. இப்புடியே முழிச்சிட்டு இருந்தா நாளைக்கு ஆபிஸ் போய் தூங்கி வழிய வேண்டியது தான்.. அப்புறம் அதுக்கும் அந்த ஊறுகாய் கம்பெனி ஹிட்லர் கிட்ட வாங்கி கட்டிக்கனும். தூங்கு டி விஷ்ணு என்று கஷ்டப்பட்டு தூங்க ஆரம்பித்தாள்..

அதே நேரம் ப்ரதாப்போ தன் அறையில் தூக்கம் வராமல் பழையதை நினைத்து பார்த்த அவனும் மனைவியை கண்டபடி திட்டி கொண்டு இருந்தான்.. முட்டாள் முட்டாள் இவளால் வாழ்க்கை முழுவதும் இப்புடியே போய்டுமோ என்று,

இதில் அவன் தந்தை  வெங்கடேஷ் வேறு  ப்ரியாவை  போய் கூப்பிட்டு வாப்பா பவித்ரா விஷயத்திற்காக ப்ரியாவை தள்ளி வச்சிடாத என்று அடிக்கடி சொல்லி கொண்டு இருந்தார்.. அவனுக்கு அது எரிச்சலாக இருந்தது..  

எல்லாரும் ஏன் என் வாழ்க்கையை பவித்ரா வாழ்க்கையோட சேர்க்கிறாங்க.. அவங்க இரண்டு பேர் வாழ்க்கை வேறு என் வாழ்க்கை வேற, அவங்க சேர்ந்தாலும் பிரிந்தாலும் அது எப்புடி என் வாழ்க்கையை பாதிக்கும் ஏன் அவங்களோட சேர்த்து என்ற வாழ்க்கையை பேசுறாங்க என்ற எரிச்சல் வந்தது..

நான் எங்க அவளை தள்ளி வைக்கிறேன்.. அவ தான் தள்ளி தள்ளி போறா கடுப்பாக வந்தது.. 

‘அப்ப உன் பொண்டாட்டியை போய் கூப்பிட்டு வர வேண்டியது தானே மனசாட்சி கேட்க, முடியாது நானா அவளை வீட்டை விட்டு போக சொன்னேன், அவளா தானே போன்னா, அப்ப அவளா தான் வரனும் என்று பிடிவாதமாக நின்றான்.. நடந்த பிரச்சினையில் அவ பயந்து இருப்பா, உன் வீட்டில் இருக்க யாராவது எதுவும் சொல்வாங்கன்னு, சின்ன பொண்ணு தானே மனசாட்சி விஷ்ணுவுக்கு பரிந்து கொண்டு வந்தது.. 

‘ஆ…யாருக்கு அவளுக்கா பயம், இத்தனை பிரச்சினை  நடந்த போது ஒரு போன் பண்ணி அவ என்கிட்ட சொல்லவே இல்லை.. நான் இங்க வந்த அப்புறம் கூட போன் பண்ணி என்னை கூப்பிட வாங்கன்னு சொல்லலை,அதை விட மேடம் வேலைக்கு போக முடிவு எடுத்து இருக்காங்க.. அதுவும் என்னை கேட்காமா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமா, 

அதை தெரிஞ்சு என் ஆபிஸ்க்கு வர வச்சு இருக்கேன்.. அப்ப கூட மேடம் என்னை தெரிந்தது போல் காட்டி கொள்ளலாமல் யாரோ போல இருக்காங்க.. அவளுக்கு அவ்ளோ இருக்குன்னா.. எனக்கு இருக்காதா ஈகோ வந்தது.. 

சரி அவ தான் உன்னை தெரிந்தது போல் காட்டி கொள்ளவில்லை..  போன் பண்ணலை, ஏன் நீயும் தானே அப்புடி நடந்துக்கிற மனம் அவனை குற்றம் சாட்டியது..

ஆமா அப்புடி தான் நடந்துப்பேன்.. அவளை நானா வீட்டை விட்டு போக சொன்னேன்.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லுமா போய் இருக்கா.. இரண்டு நாள்ன்னு சொல்லிட்டு நாள் கணக்கா அங்க இருந்து இருக்கா.. என்னையவே அவளை  தேட வச்சு இருக்கா, தவிக்க வச்சு இருக்கா..  எனக்கு எவ்ளோ கோவம் இருக்கும்.. அவளுக்கே அவ்ளோன்னா எனக்கு இருக்காதா என்ற ஈகோ வந்தது.. 

உன் க்ரைம் ரேட் நாளுக்கு நாள் கூடிட்டே போகுதுடி இருக்கு உனக்கு, என்னைக்கா இருந்தாலும் இங்க வருவ தானே இருக்குடி உனக்கு என்று கோவம் கொண்டான் மனைவி மீது இருக்கும் அன்பை வெளிக்காட்ட தெரியாத அந்த ஆறடி ஆண்மகன்..

மறுநாள் காலை விடிந்தது.. எப்போதும் போல் ஆபிஸ்க்கு கிளம்பி வந்த விஷ்ணுவுக்கு,  கண் இரண்டும் அதிர்ச்சியில் விரிந்தது.. ஆபிஸிக்கு  ப்ரதாப்பை பார்க்க வந்தவளை பார்த்து,

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!