அன்று இரவு நம் நாயகியோ என்றும் போல் அல்லாது நிம்மதியாக இதழ்களில் மென் புன்னகை தவழ உறங்கிப் போக இங்கோ தூக்கம் வராமல் தவித்துப் போனது என்னவோ விக்ரம் தான்.
அவளின் இதழ்களின் தித்திப்பு இன்னும் அவனின் இதழ்களில் இருப்பது போன்ற உணர்வில் அடிக்கடி தனது இதழ்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவனுக்கு இதழ்களில் வெட்கப் புன்னகை.
பெண்ணின் வெட்கம் மட்டும் அல்ல ஒரு ஆணின் வெட்கம் கூட அபூர்வமான அழகு தானே!
வெகு நேரமாக பால்கனியில் தூக்கம் வராமல் தவித்து நின்று இருந்தவன் மனதோ “அவ தானே ஃபர்ஸ்ட் கிஸ் பண்ணுனா சோ அவள் இப்போ என்ன பண்றானு பாரு” என்று சொல்ல ஏதோ ஒரு ஆர்வத்தில் அவளுக்கு அழைப்பை எடுத்தவனுக்கு பதில் பூச்சியம் தான்.
அவள் தான் நீண்ட நாட்கள் கழித்து வெகு சாதாரணமாக நிம்மதியாக தூக்கிப் போனாளே!
“என் தூக்கத்தை கெடுத்துட்டு நல்லா தூங்கிட்டு இருக்கா” என்றவன் என்ன நினைத்தானோ ஜிம்மில் சென்று உடற்பயிற்சி சரி செய்யலாம் என்று ஜிம் அறைக்குள் நுழைந்தவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
“என்ன டா என் நிலமையை பார்த்தா உனக்கு சிரிப்பு வருதா? என்று முகத்தில் வழிந்த வியர்வையை ஒற்றிய படி காஷ்யபன் கேட்க….
“பின்ன வராதா இப்போ நைட் 11 மணி டா தூங்காம இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்றவனிடம் “நீ இந்த டைம்ல இங்க எதுக்கு வந்த? நைட் நீ ஜிம்க்கு எல்லாம் வர்ற ஆளும் இல்லையே” என்று கேட்டு விட…..
முதலில் அதிர்ந்து விழித்தவன் “சும்மா வந்தேன் டா அப்போ போகட்டுமா? என்றவனை “ஓவரா பண்ணாத. அப்புறம் என்ன சொல்றாங்க உன்னோட பியான்ஸ்?”
“சரியான இம்சை” என்று டிரேட் மில்லில் ஓடிக் கொண்டு சொன்னவனை “என்னாச்சு டா என்ன பண்ணுனா?” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்ட காஷ்யபனைப் பார்த்து “அதெல்லாம் சொல்ல மாட்டேன் பெர்சனல்” என்று விழிகளை சிமிட்டிக் கொண்டவனுக்கு அநியாயத்திற்கு இன்னுமே அவளின் இதழ் அணைப்பு நினைவுக்கு வந்து தொலைக்க இன்னும் வியர்வை வழிய வேகத்தைக் கூட்டி ஓட ஆரம்பித்து விட்டான்.
“என்னவோ நடந்து இருக்கு போல… உன் முகம் ப்ளஷ் ஆகி இருக்கே என்னடா பண்ற யுனிவர்சிட்டில என்றவன் நீ ஒரு சின்சியர் பிராபசார்ன்னு நான் தப்பு கணக்கு போட்டுட்டேனோ” என்றவனை முறைத்து விட்டு “நீ போய் ஆழினியை கூல் பண்ற வேலையை பாரு உன்னை பார்த்தாலே தெரியுது செம்மயா வாங்கிட்டு வந்து இருக்கனு” என்றவன் இப்போது சத்தமாக சிரித்து விட….
“சிரிச்சிட்டு இரு இப்போ ஒருநாள் நீ வந்து கதறுவ அப்போ பார்த்துக்கலாம்”
“அப்படி ஒரு நிலமை எனக்கு வராது டா யூ டோண்ட் வொரி?” என்று சொல்லிக் கொண்டவன் அறியவில்லை காஷ்யபன் சொன்னதைப் போல அவனை அபி கதறவிடப் போகின்றாள் என…
“வில் சீ” என்றவன் அங்கிருந்து வெளியேறி விட… ஒரு பெரு மூச்சுடன் தனது உடற்பயிற்சியை ஆரம்பித்தவனுக்கு அவளின் எண்ணம் மட்டுமே….
முதல் பெண்ணின் ஸ்பரிசம் மற்றும் அவளின் திடீர் இதழ் அணைப்பில் நீண்ட நேரமாக வெளி வராது உடற்பயிற்சி செய்தவன் தூங்கவே காலை மூன்று மணியைக் கடந்து இருந்தது.
அதிகாலை ஆறு மணிக்கே எழுந்து விடுபவன் இன்று எட்டு மணியாகியும் எழுந்து வராமல் இருக்க லதவோ அவனுக்கு காஃபி எடுத்துக் கொண்டு கதவை தட்டப் போகும் சமயம் “அம்மா என்ன பண்றீங்க?” என்ற காஷ்யபனின் கேள்வியில் தூக்கி வாரிப் போட திரும்பி “டேய் ஏன்டா கத்துற?”
“அவன் நைட் தூங்க லேட் ஆகிறிச்சு சோ டிஸ்டர்ப் பண்ணாதீங்க எழும் போது எழட்டும்” என்று விட “அது இல்ல டா கீழ..” என்று சொல்ல வந்தவரை “தூங்கட்டும் விடுங்களேன்” என்றவனை “அப்போ நீயே இந்த காஃபியை குடிச்சிடு” என்று அவன் கையில் காஃபி கப்பைத் திணித்து விட்டுக் லதா சென்று விட….
தன் கையில் இருந்த காஃபியை குடித்துக் கொண்டே அறைக்குள் நுழைத்துக் கொண்டான் அவன்.
காலைக் கதிரவன் தன் ஒளியை அறையினுள் ஊடுருவ விட்டு இருக்க, அதில் லேசாக விழிகள் கூச கையினால் கழுத்தில் நெட்டி முறித்த படி கட்டிலில் எழுந்து அமர்ந்த விக்ரம் அப்படியே மணியை பார்த்தவன் அதிர்ந்தே விட்டான்.
“ஓ மை கோட் இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருந்து இருக்கேன் ஷிட் என நெற்றியை தேய்த்துக் கொண்டு எழுந்தவன் எல்லாம் அவளால தான்” எனப் பல்லைக் கடித்த படி தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணிரை குடித்துக் கொண்டே அறையினை திறந்துக் கொண்டு படிகளில் கீழே இறங்கியவனுக்கு குடித்த தண்ணீர் அனைத்தும் வெளியில் வந்து இருந்தது.
அவனுக்கோ முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.
ஒரு வேளை கனவோ என்று நினைத்தவனுக்கு கழுத்தின் ஊடாக அவனின் திண்ணிய மார்பில் வழிந்த சில்லிட்ட நீரே இது கனவல்ல நிஜம் என்று எடுத்துக் கூறியது.
அதிர்ந்து படிகளில் ஆணி அடித்ததைப் போல நின்றுக் கொண்டு இருந்த விக்ரமிடம் கீழே இருந்துக் கொண்டே “என்னடா நல்லவனே உன்னோட ஸ்டூடண்ட்க்கு டவுட் ஆஹ்மே க்ளியர் பண்ணி விடு” என்று குறும்பாக ஆழினி சொல்ல….
காலையில் தாமதமாக எழுந்த கோபமும் அவள் மேல் இருக்க இப்போது டவுட் என்ற பெயரில் ஹாலில் காஃபியை குடித்துக் கொண்டே அவனைப் பார்த்து விழிகளை சிமிட்டிய அபியின் மேல் ஆத்திரம் தான் வந்தது.
பல்லைக் கடித்துக்கொண்டு “எஸ் நான் தான் என்ன டவுட் ஆஹ் இருந்தாலும் வந்து கேளுன்னு வர சொன்னேன் பட் இவ்வளவு சீக்கிரம் எதிர் பார்க்கல” என்றவனுக்கு இன்னும் அவள் கல்யாணம் ஆகாமல் எல்லாரும் இருக்கும் போது வீட்டுக்கு வந்தது சங்கடமாக இருந்தது.
அவனின் தோரணையில் “ஐயோ வச்சு செய்ய போகுது வாத்தி. ஒரு ஆர்வத்துல வந்தால் இப்படி முறைக்கிறான் சிடுமூஞ்சி” என்று உள்ளே நினைத்துக் கொண்டவள் காஃபியை குடித்துக் கொண்டே புத்தகத்தை வேண்டுமென்றே எடுத்துக் கொண்டு “சார் எனக்கு இது தான் டவுட்” என்றவள் அப்போது தான் அவன் அணிந்து இருந்த உடையையே பார்த்தாள்.
கருப்பு நிற டீ ஷர்ட் அணிந்து கருப்பு நிறத்திலேயே டிராக் பேண்ட் அணிந்து இருந்தவனின் திடகாத்திரமான மேனி அவன் அணிந்து இருந்த டி ஷர்ட்டினையும் தாண்டி வெளியில் தெரிய… “வாட் அ பிசிக்” என்று உள்ளுக்குள் வர்ணித்துக் கொண்டே அப்படியே அவளின் பார்வையை வெட்கத்துடன் அவனின் இதழ்களில் படிய விட்டவளுக்கு அவனின் இதழ்களில் படிந்து இருந்த நீர்த் துளிக் கூட கவிதையாகத் தான் தெரிந்தது.
அவளின் கையில் இருந்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தவன் அவளுக்கு விடையை சொல்லிய படி அவளின் பார்வை சென்ற திசையை பார்த்தவனுக்கு ஆத்திரம் பன்மடங்காகப் பெருகியது.
நடு ஹாலில் வைத்து என்ன செய்து கொண்டு இருக்கின்றாள் இவள் என நினைத்தவன் அவளின் முகத்தில் முன் சொடக்கிட திடுக்கிட்டு விழித்தவள் “அதான் சார் டவுட்” என்றாள் சற்று திணறிய படி….
“நாம் ஆன்சர் சொல்லிட்டேன் சோ யூ மே லீவ் நவ்” என்றான் இறுகிய குரலில்….
“இது மட்டும் இல்லை இன்னும் இருக்கு சார்” என்றாள் அவசரமாக…
“போச்சு உளறிட்டு இருக்காளே” என நினைத்துக் கொண்ட ஆழினி “ஹான் காஷ் இருங்க வரேன்” என்று அவள் அங்கிருந்து சென்று விட…
“கிராதகி நீயெல்லாம் ஒரு அக்காவா?” என உள்ளுக்குள் திட்டிக் கொண்டே விக்ரமை பாவமாக பார்த்து வைக்க….
உஃப்ப்ப் என்ற பெரு மூச்சை இழுத்து விட்டவன் “சிட் அண்ட் வெயிட் ஹியர்” என்று சோபாவை நோக்கி விழிகளால் சுட்டிக் காட்டியவன் மேசையில் புத்தகத்தை வைத்து விட்டு வேகமாக படிகளில் மேலேறி தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
போகும் அவனைப் பார்த்தவள் “ரொம்ப தான் பண்றார் வாத்தி” என நொடித்துக் கொண்டவள் சோஃபாவில் அமர்ந்து தான் விட்ட வேலையை தொடர்ந்து இருந்தாள்.
“அதுக்குள்ள போய்ட்டானா விக்ரம் என்னமா உன்னை கிளாஸ்லயும் திட்டுறானா?” என்று காஃபி கப்புடன் வந்து நின்ற லதா கேட்க…
“அது ஒன்னு தான் பண்ணிட்டு இருக்கார் என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவள் ச்சே இல்ல ஆன்டி செம்மயா சிரிச்ச முகமாக பாடம் சொல்லி தர்றார்” என்றவள் வலுக்கட்டாயமாக சிரித்து வைக்க….
“அவன் தங்கமான பையன் கோபமே வராது அபிநயா நீ கொடுத்து வச்ச ஆள் தான். நீ ஏதும் மார்க்ஸ் கம்மியா எடுத்தா கூட கோபப் படாமல் சொல்லி தருவான்” என்று உண்மையிலேயே விக்ரமின் புகழ் பாட ஆரம்பித்து விட்டார் லதா.
“ஆத்தி வாத்தி டிசைன் தெரியாமல் பேசுறாங்களே என நினைத்துக் கொண்டவள் பேச்சை மற்றும் பொருட்டு யாருக்கு ஆன்டி இந்த காஃபி?” என்று கேட்டவளை முறைத்தவர் “அத்தைனு கூப்பிடு சொல்றேன்” என்றிட…
தலையை தட்டிக் கொண்டு விழிகளைச் சுருக்கி “சாரி சாரி என்றவள் மறுபடியும் யாருக்கு இந்த காஃபி அத்தை?” என்று கேட்க….
“உன்னோட வருங்கால புருஷனுக்கு” என்று அவளுக்கு அவரே தூபம் போட்டு விட….
அவனைத் தன் புருஷன் என்ற வார்த்தையில் சிலிர்த்துப் போனவள் கண்கள் மின்ன காஃபி கப்பை பார்த்தவள் அவன் இங்கேயே இருக்கச் சொன்னதை மறந்து விட்டு “நான் வேணும்னா காஃபியை கொடுத்திட்டு என்னோட டவுட் கேட்டுட்டு வரட்டுமா அத்தை” என்று கேட்டு வைக்க….
“ஆமால… போய் அவனுக்கு காஃபியை கொடுத்திட்டு உன்னோட எக்ஸாம்ஸுக்கு எல்லா டவுட்சையும் க்ளியர் பண்ணிட்டு வந்துடு அவன் கிட்ட கேட்டு என்று இருவர் மேல் இருக்கும் நம்பிக்கையில் காஃபி கப்பை அவளின் கையில் திணித்து அனுப்பி விட….
“சோ ஸ்வீட் ஆப் யூ அத்தை” என்று அவரின் கன்னத்தில் எட்டி முத்தம் பதித்தவள் மறக்காமல் ஒரு கையில் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனின் அறையை நோக்கி விரைந்து இருந்தாள் பெண்ணவள்.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.7 / 5. Vote count: 46
No votes so far! Be the first to rate this post.
Post Views:621
5 thoughts on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 15”
Dokaimalar
Superb 😍 👌 👏 😍
Intha Abi avan kitta adi vanga pora
Superb 😍 👌 👏 😍
Intha Abi avan kitta adi vanga pora
Aama dear 🥰❤️🙈
Avan kitta adi vangama iva poha matta pola
vikram attitude superb dear…
Thanks dear ❤️🥰