என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 07

4.7
(21)

அத்தியாயம் : 07

வினிதா அங்கிருந்து சொல்லப்போனாள். படுத்திருந்தபடி அவளது கையைப் பிடித்தான் வெற்றிமாறன். “ஏய் இருடி உன் கூட வந்து நான் வீட்டில விட்டுட்டு போறேன்…. பொம்பளைப் புள்ள அடக்கொடுக்கமா இருக்காமல் இந்த நடு ராத்திரில வந்திருக்கு பாரு பிசாசு….”

“யாரு நான் பிசாசா… நீ தான் பிசாசு….” 

“ஏய் பிசாசு சத்தம் போடாமல் அமைதியா வா….” என்றவன் வீட்டின் கதவை திறந்து அவளை வெளியே அழைத்து வந்தான்.

“ஆமா எதுல வந்த…. நடந்தா வா வந்த….?”

“இல்லை மாமா ஸ்கூட்டர்ல வந்தேன்….”

“அது எங்க இருக்கு…?”

“அது வீட்டிற்கு பின்பக்கம் இருக்கு…”

“ஏய் அப்போ எப்படி உள்ள வந்த….?”

“அதோ அந்த காம்பவுண்ட் மேலே ஏறி குதிச்சுட்டேன்….”

“காம்பவுண்ட் மேலே ஏறி குதிச்சியா… என்றவன் காம்பவுண்டை பார்த்தான். பின்னர் அவளிடம், “நல்ல வேளை கடவுள் புண்ணியத்தால காம்பவுண்டுக்கு எதுவும் நடக்கலை….”

“போ மாமா நீ எப்ப பாரு என் வெயிட்ட சொல்லி என்னை கலாய்ச்சிக்கிட்டே இருக்க…. நான் ஒன்னும் அவ்வளவு வெயிட் எல்லாம் இல்லை…” என்று அவனுடன் சண்டைக்குச் சென்றாள். 

“சரி சரி… உண்மை கசப்பாத்தான் இருக்கும்… சரி வா….” என்று முன்பக்க கேட்டைத் திறந்து கொண்டு, வெளியே வந்த வெற்றிமாறன் ஸ்கூட்டர் கீயை குடுடி என்றான். அவளும் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு பின்பக்கம் சென்றவன், ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வந்தான். 

“ஏறு….” என்று சொல்ல, “உன் பின்னாடி ஸ்கூட்டர்ல ஒன்னா போறதா… அதெல்லாம் வேணாம் நீ போ…. நான் போயிட்டுறம்…”

“எப்படி இந்த தூக்க கலக்கத்திலேயே போய் முன்னாடி வர்றவனை முட்டுவ அவன் அல்ப்பாய்ஸ்ல பேசுறதுக்கா…? அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை… உன்ன கொண்டு போய் வீட்ல விட்டுட்டு வரேன்….”

அவளுக்கும் தூக்கம் வந்ததால் எதுவும் மறுத்து பேசாமல் ஸ்கூட்டரில் பின்னால் வந்து ஏறி அவன் தோளைப் பிடித்துக் கொண்டான். 

“ஏய் தொடாதடி கையை எடு…” 

“மாமா லூசா நீ… எங்க மாமா நான் புடிக்கிறது சும்மா இரு…. நான் புடிச்ச உனக்கு என்ன….?”

“அப்படியெல்லாம் புடிக்க முடியாதுடி… நாளைக்கு என் பொண்டாட்டி இதெல்லாம் கேள்விப்பட்ட என்ன நினைப்பா….?”

“ஆமா உன்னை நினைச்சுட்டாலும்…” என்று முனங்கியவள் அவன் தோளில் இருந்த கையை எடுத்து அவன் இடுப்பிற்கு கொண்டுவந்து அவனின் முதுகில் முகம் சாய்த்துக் கொண்டாள். 

“அடியே குட்டிசாத்தான் எந்திரி டி… கோயில் வேறு நடக்குது யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க…. உனக்குத்தான் இந்த வெட்கம் எதுவும் இல்லை… எனக்கும் இல்லைனு நினைச்சுட்டியா….?”

“மாமா இங்க பாரு எனக்கு தூக்க கலக்கமா வேற இருக்கு…. ஏதாச்சும் பேசின பேசுற வாயில கிஸ் பண்ணிடுவேன்…. பேசாம வண்டியை ஓட்டு….”

“இது எப்போதான் தான் பொண்ணா மாறுமோ தெரியல…” என்றவன் ஸ்கூட்டரை ஓட்டினான். அவளும் அவன் முதுகில் வாகாக சாய்ந்து கொண்டு தூங்கினாள். இரவு நேரத்து இளம் குளிர் காற்று அவர்களை வருடி சென்றது. மிகவும் குளிராக இருக்க வினிதா அவன் முதுகில் மேலும் ஒன்றினால். 

“ஏய்… ஏய் என்னடி பண்ற….?”

“உன்னை ஒண்ணுமே பண்ணலை மாமா…. ரொம்ப குளிருதா என்னால தாங்க முடியல…” என்றாள். 

“கொஞ்சம் இரு….” என்றவன் அவனது ஷர்ட்டை கழட்டி அவளிடம் நீட்டினான். “ஐயோ உன்னோட ஷர்ட் எனக்கு எதுக்கு இப்போ கழட்டின…. எனக்கு ஷர்ட் எல்லாம் வேண்டாம் மாமா…..”

“குளிருதுன்னு சொன்னேன்ல…. இதைப் போட்டுக்கோ….”

“அப்போ உனக்கு….”

“எனக்கு அது ஒன்னும் தேவை இல்லை…”

“மாமா உனக்கு குளிராது…”

“அதை நான் பார்த்துக்குறேன்… நீ இதை போட்டுக்கோ….” என்றான். அவளும் குளிர் அதிகமா இருந்ததால் அவனின் ஷர்ட்டை வாங்கி போட்டுக் கொண்டாள். வெற்றிமாறன் ஸ்கூட்டரை எடுத்ததும், மறுபடியும் இடுப்பில் கையை போட்டு முதுகில் முகத்தை வைத்துக் கொண்டு தூங்கினாள் வினிதா. ‘இவளை திருத்தவே முடியாது…’ என்று தலையில் அடித்துக் கொண்டு வெற்றிமாறன் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினான். அவன் அவளது வீட்டிற்கு அருகில் வந்ததும் எழுப்பினான். 

“இறங்குடி….” என்றான்.

“அம்மா விடுமா கொஞ்ச நேரம் தூங்கிறன்.….”

“உன்னெல்லாம் எந்த நேரத்துல பெத்தாங்கன்னு தெரியல என் அத்தை…. யாராவது வெளியே வந்து பார்த்தாங்க நான் செத்தேன்…” 

“சரி சரி கத்தாதே…. நான் போறேன்…” என்றவள் இறங்கினாள். “அடியே லூசு ஸ்கூட்டரை எடுத்துட்டு போடி…”

“நீ எப்படி மாமா போவ…?”

“அது நான் எப்படியோ போய்டுவேன்… நீ முதல் உள்ள போ…”

“சரி மாமா…” என்றவள் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். வெற்றிமாறனும் அங்கிருந்து அவனது நண்பனுக்கு அழைக்க அவன் கோயிலில் நின்றதால் விரைவாக வந்து விட்டான். பின்னர் அவனுடன் தன் வீட்டுக்குசென்றான் வெற்றிமாறன். 

இங்கே வீட்டிற்குள் வந்த வினிதா யாரு தூங்காமல் இருக்கிறார்களா என்று பார்த்தாள். வீடு அமைதியாக இருக்க, ‘அப்பாடா தப்பிச்சாச்சு…. நல்லவேளை யாரும் பார்க்கல…’ என்று நைஸாக அவளது அறைக்குள் சென்று விட்டாள். 

அங்கே ரேணுகாவுக்காக எடுத்து வந்த போட்டோவை தனது மேசையில் இருந்த புத்தகத்திற்குள் வைத்தாள். பின்னர் வெற்றிமாறனின் அறையில் இருந்து திருடி வந்ததை அவளது அலுமாரியில் யார் கண்ணிற்கும் படாத இடத்தில் மறைத்து வைத்தாள். 

அடுத்த நாள் காலையில் இருந்து மாரியம்மன் கோயிலில் ஆட்கள் நிரம்பி வழிந்தனர் தங்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். இப்போது விட்டால் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டுமே அதனால் எப்பாடுபட்டாவது அவர்கள் வைத்த வேண்டுதலை அம்மனுக்கு செய்துவிட வேண்டும் என்று தீயாக இருந்தனர். 

ஒரு சிலர் அலகு குத்தினனார்கள் ஒரு சிலர் தீச்சட்டி எடுத்தனர். இன்னும் சிலரும் அங்கப் புரதட்சணமும் செய்தனர். ராகவியும் வைதேகியும் கூட குமுதாவை அழைத்துக் கொண்டு ஆலயத்திற்கு வந்திருந்தனர். 

“என்னம்மா கோயிலுக்கு இந்த நேரத்தில வந்திருக்கிறோம்…. காலையிலிருந்து நேர்த்திக்கடன் செய்யறவங்க தானே கோயில்ல இருப்பாங்க…. நம்ம எதுக்கு வந்திருக்கிறோம்….?” என்றாள் குமுதா அவர்களிடம். 

“குமுதா நாங்களும் நேர்த்திக் கடன் செய்யத் தான் வந்திருக்கிறோம்…”

“என்னம்மா சொல்றீங்க… பெரியம்மா என்ன இது… அம்மா இப்படி சொல்றாங்க….”

“ஆமா குமுதா அக்கா சொல்றது உண்மைதான்… நானும் அக்காவும் நேர்த்திக்கடன் செய்யத்தான் வந்திருக்கிறோம்….”

“நேர்த்திக் கடனா… எதுக்காக… என்ன செய்யப் போறீங்க….?”

“நானும் அக்காவும் அங்கப்புரதட்ஷணம் செய்யலாம் என்று இருக்கிறோம்…. அதுதான் உதவிக்கு உன்னை கூட்டிட்டு வந்தோம்….”

“ஐயோ பெரியம்மா…. இது மட்டும் பெரியப்பாவுக்கு தெரிஞ்சா நம்ம தொலைஞ்சோம்….”

“ஏய் அதெல்லாம் அவங்களுக்கு தெரியாது…. நம்ம பாட்டுக்கு நேர்த்திக் கடனை செஞ்சுட்டு போய்கிட்டே இருக்கலாம்….”

“ஆமா இப்போ எதுக்கு இந்த நேர்த்தி கடன் செய்யப் போறீங்க…? இப்போ யாருக்கு என்ன வந்துச்சுனு இப்போ நேர்த்தி கடன் செய்யப் போறீங்க….?”

“அமுதா அது உனக்கு சொன்னா புரியாது பேசாம வா…”

“ஐயோ எனக்கு சொல்லுங்க… அது எனக்கு புரியும் சொல்லுமா….”

“அது ஒன்னும் இல்லைடி… நம்ம ரேணுகா இருக்கிறால்ல அவங்க நம்ம குடும்பத்தோட சேரணும் என்று சொல்லி நானும் அக்காவும் வேண்டிக்கிட்டோம்….”

“ஆனால் நேர்த்திக்கடன் வந்து நம்மளோட வேண்டுதல் நிறைவேறினதுக்கு அப்புறமா தானே செய்வாங்க… நீங்க எதுக்கு இப்போது நடக்க முன்னாடியே வேண்டுதல் செய்யப் போறீங்க….”

“குமுதா கடவுள் கிட்ட ஏதாவது ஒன்னு நாம கேட்டு, அதை அவரு கொடுத்ததுக்கு அப்புறமும் நேர்த்திக்கடன் செய்யலாம்…. இல்லைனா நம்ம அவர்கிட்ட ஒரு விஷயத்தை கேட்டுக்கிட்டு நேர்த்திக்கடன் செய்யலாம்…. நாங்க ரேணுகா நம்மளோட குடும்பத்தோட சேரணும் என்று நினைத்து இந்த வேண்டுதலை செய்யப் போறோம்…. நீ வந்து எங்களுக்கு உதவி பண்ணு….”

“சரி பெரியம்மா…. இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் நீங்க கேட்க மாட்டீங்க…. நீங்க சொல்ற மாதிரியே நான் செய்றேன்….” என்றவள் அவர்கள் இருவரும் அங்கப் பிரதட்சணம் செய்யப் போக அவர்களுக்கு உதவி செய்தாள். 

ரேணுகாவின் வீட்டில் ரேணுகாவின் பின்னாடியே சுற்றிக்கொண்டு திரிந்தாள் வினிதா. ஆனால் ரேணுகாவோ அவளைக் கண்டு கொள்ளவில்லை. தமிழ்ச்செல்வன் வந்து, “வினிதா என்னடி பண்ணி வச்ச… அம்மா இப்படி உன்னை கண்டுக்காம திரியுறாங்க….”

“நான் ஒண்ணுமே பண்ணலை தமிழு….” என்றாள் முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு. 

“யாரு நீ ஒன்னும் பண்ணலை… இதை நான் நம்பனும்…”

“ஆமா… கூடப்பிறந்த அண்ணன் நீயே என்ன நம்பலைனா வேற யாரு நம்புவாங்க….?”

“உன்னை யாருமே நம்ப மாட்டாங்க. நீ நம்பற மாதிரியா நடந்துக்கிற….? நேற்று நீ ஒரு கோயில் திருவிழாவுல ஒரு பையனோட சண்டைக்கு போனதை என் பசங்க சொல்லிட்டாங்க…. ஏன்டி நீ கொஞ்சம் கூட அடக்கமா இருக்கவே மாட்டியா….?” 

“அட போடா நீ வேற… காலையில அதை பத்தி பேசாமல் நானே அம்மா பேசுறது இல்லைன்னு கவலையா இருக்கிறன்… அவங்களை எப்படி பேச வைக்கலாம்னு யோசிக்கிறன் நீ வேற….” என்றாள். தமிழ்செல்வனும் அவள் தலையில் நன்றாக கொட்டி விட்டுச் சென்று விட்டான். 

சங்கர நாதனம் ஏதோ விஷயமாக வெளியில் கிளம்பிச் சென்றார். அப்போது சமையலறையில் நின்றிருந்த ரேணுகாவிடம் வந்தார். வினிதா, “அம்மா எதுக்குமா நீ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு திரியுற…. என் கூட சரியா பேச மாட்டேங்குற…. என்னைப் பாருமா….” என்றாள். ஆனால் அவரோ அதைக் கேட்டும் கேட்காதது போல் நின்றிருந்தார். வினிதாவின் முகம் ஒரு மாதிரியாகிவிட்டது. “அம்மா போட்டோவை நான் கிழிச்சேன்னு தானே என் மேல கோவம் உனக்கு….. இந்தா இதைப் புடி… இது உனக்காக எடுத்துக்கிட்டு வந்த புது போட்டோ…. இந்தா வச்சுக்கோ உன் அண்ணன் குடும்பத்தோட போட்டோவ பார்த்து நல்லா சந்தோஷப்படு…” என்று அவரிடம் அந்த போட்டோவை நீட்டினாள் வினிதா. 

அதைப் பார்த்ததும் ஆயிரம் வோல்ட் பவர் லைட்டைப் போல ரேணுகாவின் முகம் பிரகாசித்தது. “வினிமா நல்லா இருக்குடி…. இந்த போட்டோ உனக்கு எப்படி… என்கிட்ட இருந்தது ஒன்னே ஒன்னு தான்… அதை நீ கிழிச்சுட்ட அப்புறம் இது எப்படி வந்துச்சு….?” என்று கேட்டார். 

அதற்கு வினிதாவோ, “உனக்கு புடிச்சது வந்துருச்சுல்ல… அதுக்கப்புறம் எப்படி வந்துச்சு… எங்கிருந்து வந்துச்சுன்னுகேள்வி எல்லாம் கேட்கக்கூடாது… சரியா நீ சந்தோஷமா இருந்தால் அதுவே போதும்… இப்போ உனக்கு சந்தோஷம்தானே…”

“ரொம்பவே சந்தோஷம் வினிக் குட்டி….” என்றார் ரேணுகா. 

“சரி சரி…. இதுக்காகத்தானே நைட்டு சாப்பிடலை… காலையில நீ என் கூட பேசவும் இல்லாமல் முகத்தை தூக்கிட்டு இருந்த… மரியாதையா சாப்பிடுமா…. நான் கோயில் வரைக்கும் போயிட்டு வரேன்…”

“ஏய் வினி சாப்பிட்டு போடி…. இல்லைம்மா எனக்கு பசியில்லை… அப்புறம் அம்மா நான் தீமிதி எல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் வீட்டுக்கு வருவேன் சரியா….”

“அதுவரைக்கும் நீ என்னடி பண்ணப் போற கோயில்ல…?” என்றார் ரேணுகா. 

“அட சும்மா இரும்மா…. இன்னும் ரெண்டு நாள் திருவிழா தான்… அதுக்கப்புறம் அப்படி ஜாலி இருக்க முடியாது இல்லை…. நான் போயிட்டு வரேன் சரியா…” என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 07”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!