சுயநலமா பாசமலர் ப்ரதர்” என்று ப்ரதாப் கேட்டதில் அதுவரை விறைப்பாக நேருக்கு நேர் நின்று ப்ரதாப்பை முறைத்து கொண்டு இருந்தவனுக்கு இப்போது அவனை நேரடியாக பார்க்க முடியவில்லை.. பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டான்..
ப்ரதாப் சொன்னதும் உண்மை தானே அப்போது அவனிடம் எப்படியாவது பவித்ராவை திருமணம் செய்ய வேண்டும் என்ற சின்ன சுயநலம் இருக்க தானே செய்தது.. இந்த கல்யாணம் வேண்டாம் என்ற விஷ்ணுவின் வார்த்தைக்கு அவன் செவி கொடுக்கவில்லை தானே, அதை இப்போது ப்ரதாப் சொல்லி காட்டவும் பேச முடியாது நின்று இருந்தான்..
“அடுத்து என்ன சொன்ன” தன் பின்னங்கழுத்தை வருடியபடி கண்ணை சுருக்கி யோசிப்பது போன்ற பாவனை செய்தவன், “ஹான் பவித்ராவுக்காக பழி வாங்குறியா”?,
“ம்… பவி மேல்ல மட்டும் தப்பு இல்லாம இருந்திருந்தா, நான் இப்புடி அமைதியா இருந்திருக்கவே மாட்டேன்.. அவ வீட்டுக்கு வந்த அடுத்த நாளே உன் சட்டையை பிடிச்சு இருப்பேன்..
உன்னை மாதிரி நல்ல நாள் எப்ப வரும்னு பார்த்துட்டு அஞ்சு மாசம் சும்மா இருந்திருக்கவே மாட்டேன்” என்றான்.. இதுவும் பார்த்தியை சுட தான் செய்தது.. மீண்டும் எதுவும் பேசா முடியாது நின்று இருந்தான்..
“ஹான் நெக்ஸ்ட் என்ன சொன்ன ப்ரியாவை உன் வீட்டுக்கு கூப்டற ஐடியா இருக்கு இல்லையா”?
“நான் ஏன் வந்து கூப்டனும்? நானா காலேஜில் இருந்தவளை வம்படியா உன் வீட்டுக்கு கொண்டு வந்து விட்டேன்”..
“நீ தான் கூட்டிட்டு போன, இரண்டு நாள் கழிச்சு அனுப்பி வைக்கிறேன் சொன்ன, செய்றதை எல்லாம் நீ செஞ்சிட்டு என்ன வந்து கொஸ்டீன் பண்ணிட்டு இருக்கியா, இது எல்லாம் நியாயமா பாசமலரே”, என்றவன்
மேலும் “சொல்ல போனா இந்த விஷயத்தில் நான் தான் உன்னை கேள்வி கேட்கனும்.. சொல்லு என் பர்மிஷன் இல்லாம எப்புடி என் வொய்ஃப்பை நீ கூப்பிட்டு போகலாம்”? மார்புக்கு குறுக்காக கையை கட்டியபடி பார்த்தி முன்பு வந்து கேட்ட ப்ரதாப்,
“இரண்டு நாள்ல அனுப்புறேன்னு என் நானா கிட்ட சொன்னியாமே? இன்னுமா உனக்கு அந்த இரண்டு நாள் முடியலை” கொஞ்சம் நக்கலாகவே கேட்டான்..
இந்த கேள்விக்கும் பார்த்திபனால் பதில் சொல்ல முடியவில்லை..
என்ன சொல்வது அது அது வந்து எனக்கும் பவித்ராவுக்கும் ப்ராப்…ம்
உன் வீட்டுல ஏதும் சொல்வாங்களோன்னு
அதான் ப்ரியாவை” சொல்ல முடியாமல் பார்த்தி தடுமாறினான்..
“சோ இப்புடி தான் நடக்கும்னு நீங்களாகவே முடிவுக்கு வந்துட்டீங்க அப்புடி தானே, உன் தங்கச்சிக்கு மட்டும் தான் அப்புடின்னு நினைச்சேன், ஆனா ஒட்டு மொத்த குடும்பத்துக்கே இந்த வியாதி இருக்கும் போலயே,
இப்ப சொல்லுங்க பாசமலர் ப்ரதர் இதில் என் தப்பு எங்க இருக்குன்னு” தன் புருவம் உயர்த்தி நக்கல் தொனியில் கேட்டான் ப்ரதாப்,
“லாஸ்ட்டா என்னமோ சொன்னியே என்னது வேற வாழ்க்கை ஏற்படுத்தி இந்த மாதிரி இன்னோர் முறை என் முன்னாடி வந்து சொல்லிட்டு நிற்காத மச்சான் ம***ன்னு எல்லாம் பார்த்ததுட்டு இருக்க மாட்டேன்”.. அவ்ளோ தான் ஒற்றை விரலை நீட்டி மிரட்டினான்..
“வந்துட்டான் பண்றதை எல்லாம் பண்ணிட்டு அஞ்சு மாசம் கழிச்சு என்னை டென்ஷன் பண்றதுக்குனே, இவன் தங்கச்சி பண்ற இரிட்டேட் பத்தாதுன்னு” என்றவன் தன் இருக்கைக்கு சென்று வேலை பார்க்க ஆரம்பித்து விட்டான்..
இப்போது பார்த்திக்கு ஏன்டா வந்தோம் என்று இருந்தது.. ப்ரதாப் சொல்வது நியாயம் தானே.. அவன் கேட்டது அனைத்தும் உண்மையே,
அவர்களாகவே இப்புடி தான் என்று முடிவு எடுத்து அவனை குற்றம் சொல்வதில் என்ன நியாயம்.. பார்த்திக்கு இப்போது தான் அது உரைத்தது..
லீலா பயந்து போய் வெளரிபோன முகத்துடன் கையை பிசைந்தபடி நின்று இருந்தாள்..
அவள் எதிரே கண்களில் சிவப்பு ஏறி கோவமாக அமர்ந்து இருந்தான் ப்ரதாப்..
“பதில் சொல்லுங்க லீலா உங்களை தானே கேட்டுட்டு இருக்கேன் ப்ரியாகிட்ட நேத்து என்ன சொன்னீங்க” என்று ப்ரதாப் கோவமாக கேட்டான்..
நேற்று விஷ்ணு ஆபிஸிலிருந்து பாதியிலேயே தன்னிடம் கூட சொல்லாமலே சென்று விட்டாள் என்பதை அறிந்த ப்ரதாப் ‘திமிர்பிடிச்சவ திமிர் பிடிச்சுவ நாளைக்கு வரட்டும் இருக்கு’ என்று நினைத்து இருக்க,
காலையில் வம்சி பார்த்தி இரவு அவனிடம் கூறியதை சொல்ல,
‘அழுதாளா எதுக்கு அழுதா அதுவும் காய்ச்சல் காணும் அளவுக்கு அழுது இருக்காளா எதுக்கு,நேத்து அவளை திட்ட கூட இல்லையே’, என்னாச்சு என சிசிடிவியின் நேற்றையை ரெக்கார்ட்டை எடுத்து பார்க்க லீலா ஏதோ சொல்ல விஷ்ணு கலங்கிய கண்ணோடு ஆபிஸை விட்டு போவது இருந்தது.. பார்த்தவனுக்கு லீலா மீது ஆத்திரமாக இருந்தது.. அதான் இந்த விசாரணை
“சொல்லுங்க லீலா கேட்கிறேன்ல” என்ற ப்ரதாப்பின் கணீர் குரலில்
லீலாவுக்கு நடுங்க ஆரம்பித்தது விட்டது.. பர்ஸ்ட் இந்த கேள்வியை கேட்கும் போது ஒன்றுமே புரியவில்லை அவளுக்கு, என்ன சொன்னேன் என்கொயரி பண்ற அளவுக்கு என்று யோசித்தவளுக்கு, அடுத்து தான் புரிந்தது.. நேற்று விஷ்ணுவிடம் சொன்னது..
‘தேவுடா போட்டு கொடுத்துட்டா போலயே சரியான கோள் மூட்டி’ விஷ்ணுவை திட்டினாள்.. அவளுக்கு தெரியாது அல்லவா இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் உறவு..
அதுவும் அந்த கண்களில் தெரியும் கோவம், அதை பார்க்கும் போதே அவளுக்கு பயந்து வருதே, எப்புடி சொல்வாள்.. உண்மையை சொன்னா என்னாகுமோ என்று பயமாக இருந்தது..
இருந்தும் ஒருவாறு தைரியத்தை வரவழைத்து கொண்டு “ஒன்னும் சொல்லைல சார்.. சும்மா ப்ரெண்ட்லியா தான் பேசிட்டு இருந்தேன்” என்றாள்..
“அதுக்கு யாராவது அழுவாங்களா, பொய் சொல்றீங்க நீங்க.. உண்மையை சொல்லுங்க” என்று இழுத்து வைத்து பொறுமையுடன் கேட்டான் ப்ரதாப்..
அழுதாளா அதிர்ச்சியானாள் லீலா.. அவளுக்கு ஏன் விஷ்ணு அழுதாள் புரியவில்லை.. நான் சொன்னதை அவ சொன்னதால் இந்த விசாரணையா, இல்லை அவள் அழுததாள் இந்த விசாரணையா எதுவுமே லீலாவுக்கு புரியவில்லை.. நாமாளா வாயை விட கூடாது என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.. “எதுக்கு அழுதான்னு ப்ரியா கிட்ட தான் கேட்கவும் சார்” என்றாள்..
ப்ரதாப்புக்கு கோவமாக வந்தது.. இந்த இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால் செவிலில் ஒன்னு விட்டு விசாரித்து இருப்பான் பெண் என்பதால் தான் இந்த அமைதி..
“ராம்” இண்டர்காமில் அழைக்க, அவன் “சார்” என்றபடி வந்து நின்றான்..
“இந்த பொண்ணு இன்னும் அஞ்சு நிமிஷத்தில் ஆபிஸை விட்டு வெளியே போய் இருக்கனும் என்ன ப்ராசஸோ பண்ணு” என்றான்..
இந்த பெண் தன்னை பற்றி தான் என்னவோ சொல்லி இருக்கிறாள்.. அதனால் தான் அவனின் மனைவி அழுது இருக்கிறாள்.. வேறு எதுக்கும் அழ கூடிய ஆள் இல்லையே அவள் என்பது அவனுக்கு தெரியும்..
‘இவ என்ன வேணா சொல்லி இருக்கட்டும் அதுக்கு அவ அழுவாளா.. என் மேல்ல நம்பிக்கை இல்லையா இவளுக்கு’ என்ற கோவமும் வந்தது…
“அவ அழுதா இவங்களுக்கு என்ன வந்துச்சு” லீலா கோவமாக ராமிடம் கேட்டாள்..
“அவர் பொண்டாட்டியை அழ வச்சா பார்த்துட்டு சும்மா இருப்பாரா” என்று ராம் சொல்லவும்,
“பொண்டாட்டியா”? அதிர்ச்சியானாள் லீலா..
“ம்… ஆமா”
“ஏன் என்கிட்ட சொல்லல”
“உங்ககிட்ட எதுக்கு மேடம் சொல்லனும்..இதில் சைன் பண்ணுங்க “என்று அவள் முன்பு பத்திரத்தை நகர்த்தியவன், “இத்தனை நாள் நீங்க வொர்க் பண்றதுக்கான சேலரி உங்க அக்கவுண்ட்ல வந்துரும்” என்றான்..
“இரண்டு பேரும் டிவோர்ஸ் பண்ண போறதா சொன்னாங்களே” லீலா சற்று ஏமாற்றத்துடன் கேட்டாள்..
“சம்மந்தபட்ட இரண்டு பேர் உங்ககிட்ட சொன்னாங்களா, யாரோ சொல்றதை நீங்க ஏன் நம்புறீங்க மேடம்.. இனிமேலாவது தெளிவா இருங்க.. மத்தவங்க சொல்றதை நம்பி, உங்களை நீங்களே குழப்பி வாழ்க்கையை தப்பான வழியில் கொண்டு போக நினைக்காதீங்க” என்றான்..
“நீங்க கூட சொல்லாம மறைச்சுட்டீங்களே ராம்.. சொல்லி இருக்காலாமே” என லீலா கேட்க
“நான் ஏன் உங்ககிட்ட இதை எல்லாம் சொல்லனும்” அலட்சியமாக பதில் அளித்தான் ராம்..
“அய்யோ முதலிலே சொல்லி இருந்தா நான் லூசு மாதியி ப்ரியா கிட்ட” என்று சொல்ல வந்தவள் ராம் கூர்மையாக தன்னை பார்ப்பதை உணர்ந்து வாயை மூடி கொண்டாள்..
“அப்ப என்னமோ சொல்லி இருக்கீங்க.. சொல்லுங்க என்ன சொன்னீங்க” ராம் முறைத்தபடி கேட்க,
“அது என்னவா இருந்தா உனக்கு என்ன மேன், நான் ஏன் உன்கிட்ட சொல்லனும்” அவனை போல் அலட்சியமாக பதில் தந்தாள்..
“ஹலோ மரியாதை எங்க”? ராம் கத்தினான்..
“ஃபிஸ் வாங்க மார்கெட் போய் இருக்கு.. அதான் டெர்மினிட்டே பண்ணியாச்சா, அப்புறம் எதுக்கு மேன் உனக்கு மரியாதை கொடுக்க முடியாது போ” என்றாள் அந்த பேப்பரில் சைன் பண்ணியபடி,
“ஏய்” ராம் உறும,
“உன்னால ஒன்னும் பண்ண முடியாது மேன்.. இது ரிவென்ஜ் டைம்.. என்னை என்ன பாடு படுத்தின அதுக்கு எல்லாம் உனக்கு இருக்கு, ஆபிஸை விட்டு வெளிய வா” அப்புறம் இருக்கு கொஞ்சம் திமிராக லீலா பேச
“ஆபிஸா இருக்கிறதால் தான் நானும் அமைதியா இருக்கேன்.. இல்லைன்னு வை, இவ்வளோ பேசுன உன் வாய் இந்நேரத்திற்கு உடைஞ்சு இருக்கும்டி” அடக்கப்பட்ட கோவத்துடன் ராம் சொல்ல,
“உடைப்பியா அவ்ளோ தைரியமா உனக்கு, பார்த்துக்கலாம் நீயா நானான்னு, இனிமே தான் நீ லில்லியோட இன்னோரு ஃபேஸை பார்க்க போற மேன்” என்று மிரட்ட,
“அடிங்ககக” என்று ராம் அருகே வர வேகமாக அங்கிருந்து ஓடினாள் லில்லி.. “நெக்ஸ்ட் டைம் என் கண்ணுல மாட்டு அப்ப இருக்கு உனக்கு அடிச்சு இந்த லில்லியை சுவத்துல பல்லி மாதிரி ஒட்ட வைக்கிறேன்” என்றான் கோவமாக,
“முடியாது முடியாது என்னால் முடியாது பார்த்தி உனக்கு என்ன பைத்தியமா டா விஷ்ணு” கோவத்தில் கத்தினாள்..
“உனக்கு வேற ஆப்சனே இல்ல ப்ரியாமா ஒன்னா கிளம்பு உன் புருஷன் வீட்டுக்கு நான் கொண்டு வந்து விடுறேன்..
இல்ல முடியாதுன்னா வக்கீல் வீட்டுக்கு கிளம்பு.. இரண்டுல எங்க போகுறதுன்னு நீ தான் முடிவு பண்ணனும்.. ஆனா கண்டிப்பா இந்த இரண்டில் ஒன்று இன்னைக்கு நடந்தே ஆகனும்” என்றான் பார்த்தி உறுதியாக,
“மூணாவதா ஒன்னு நடக்கும், அது உன்ன நான் கொலை பண்ண போறது பார்த்தி” என்று கோபப்பட்டு வீட்லுள்ள பொருட்களை எல்லாம் உடைத்து சண்டை போட்டவள் இறுதியாக கிளம்பினாள் தன் வீட்டிற்கே,