என்னம்மா என்ற விஜயசேகரனிடம் தம்பி உன்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றார் வடிவுடைநாயகி். தம்பி கயல்விழிக்கு இன்னும் மறுவீட்டு அழைப்பு, சீரு எல்லாம் செய்யலை அதை எப்ப செய்யலாம்னு இருக்க என்றிட அவள் பண்ணின காரியத்திற்கு சீரு ஒன்று தான் குறைச்சல் என்ற விஜயசேகரனிடம் அப்படி சொல்லக்கூடாது தம்பி அவள் ஆயிரம் தான் தப்பு பண்ணி இருந்தாலும் உன்னோட மகள் என்றவர் நம்ம இரண்டுபேரும் வீட்டுக்குப் போகலாம் என்றார்.
அண்ணன் இப்படி இருக்கும் போது என்ற விஜயசேகரனிடம் அதனால் என்னப்பா அண்ணன் நல்லா தான் இருக்கான். அவனை பார்த்துக்க உன் அண்ணியும் பசங்களும் இருக்காங்க என்ற வடிவுடைநாயகி மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.
என்னடா தம்பி ரொம்ப சந்தோசமா இருக்க போல என்ற கதிரேசனிடம் ஏன் அண்ணே இப்படி ஒரு கேள்வி கேட்கிறிங்க என்றான் ரத்னவேல். பின்ன அந்த ராஜேஸ்வரி மகள் உன்னை மாமா, மாமானு வார்த்தைக்கு வார்த்தை கொஞ்சிட்டு இருக்கிறாள் என்றவரிடம் அண்ணே வேல்விழி என்னோட மனைவி. அவள் என்னை மாமானு கூப்பிடுறது ஒன்றும் தப்பில்லையே என்றான்.
என்னப்பா ஒரே நாளில் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணி பேசுற என்றவரிடம் ஒருத்தியை தொலைச்சதே போதும் அண்ணே இவளையும் தொலைச்சுட்டு நிற்க வேண்டாம் பாருங்க என்றவன் நம்ம வயல்காட்டில் களை எடுக்கிறவங்களுக்கு இந்த வாரம் கூலி கொடுக்கனும் அதற்கான கணக்கு வழக்கு இந்த நோட்டில் இருக்கு அப்பறம் அண்ணே ப்ளீஸ் இனிமேல் வேல்விழி பத்தி மட்டும் எதுவும் பேசிக்க வேண்டாம் என்றான் ரத்னவேல்.
நான் தூக்கி வளர்த்த நாயி பாரு அது பொண்டாட்டி பத்தி பேசக் கூடாதாம் என்று நினைத்த கதிரேசன் இன்னும் எத்தனை நாளைக்கு அவள் முந்தானையை பிடிச்சுட்டு திரிவ ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் எல்லாம் முடிஞ்சதும் என் கிட்ட தான் வரனும் என்று நினைத்த கதிரேசன் அமைதியாக தன்னறைக்கு சென்றார்.
என்ன உங்க தம்பி நல்லா மூக்கை உடைச்சு விட்டுட்டாரா என்ற தெய்வானையை முறைத்த கதிரேசன் என்னடி வாய் ரொம்ப நீளுது என்றார். நீங்களும், உங்க தங்கச்சியும் பண்ணுற வேலைக்கு மரியாதை வேற கொடுக்கனுமா என்ன என்றவர் பெத்த மகனோட சந்தோசத்தை அழிச்ச உங்களை எல்லாம் என்ன சொல்ல ச்சை என்ற தெய்வானை அமைதியாக சென்று படுத்துக் கொண்டார்.
என்ன வேல்விழி தூங்கலையா என்றவனிடம் இல்லை மாமா மினு, பினு இன்னும் தூங்கலை என்றாள். நீ என்ன குழந்தையா அந்த கிளிகளை தனியா தான் விடேன் என்றான். இல்லை மாமா என்றவள் ஏதோ கூற வர சரி உன் விருப்பம். நீயும், உன் மினு, பினுவும் எப்போ வேண்டும் என்றாலும் தூங்குங்க எனக்கு தூக்கம் வருது என்றான்.
பினு, மினு மாமா பெயர் தெரியுமா என்றவள் ரத்னவேல் சொல்லு என்றிட கிளிகள் இரண்டும் ரத்னவேல் , ரத்னவேல் என்றிட மாமா உங்களை மினு, பினு கூப்பிடுது என்றாள் வேல்விழி.
என்னை இன்னைக்கு மூன்று பேரும் தூங்க விட மாட்டிங்க போல என்றவன் சரி என்று அவளருகில் அமர்ந்து கிளிகளிடம் பேசிக் கொண்டு இருந்தான். கிளிக் கூண்டை திறந்து விட்டதும் இரண்டு கிளிகளும் வேல்விழியின் கைகளில் அமர்ந்து கொண்டன. அவளின் கன்னத்தில் முத்தமிட்ட கிளிகள் ரத்னவேலின் கன்னத்திலும் முத்தமிட்டது.
அவன் கிளிகளுக்கு பழம் கொடுத்திட இரவு வெகுநேரம் கழித்து தான் இருவரும் உறங்கினர். கிளிகளுடன் விளையாடிக் கொண்டே அவனது தோளில் சாய்ந்து உறங்கினாள். அவளது உறக்கம் கலைந்து விடாமல் இருக்க அவனும் அவளருகிலே அமர்ந்தபடியே உறங்கினான். உறக்கத்தில் அவள் நகர்ந்து மெல்ல அவன் மடியினில் படுத்துக் கொண்டு வசதியாக உறங்கினாள்.
அவளது அசைவில் கண் விழித்தவன் தன் மடியில் குழந்தை போல் உறங்கிடும் பெண்ணவளின் தலையை கோதிட நினைத்தவன் கையை கொண்டு சென்றிட அவனை ஏதோ ஒன்று தடுத்தது கையை எடுத்துக் கொண்டான். கிளிகளும் கூண்டுக்குள் செல்லாமல் அவர்களின் அருகிலே நின்று உறங்கியது.
ரத்னவேல் ரத்னவேல் என்ற குரலில் பதறி எழுந்தவன் பார்த்திட எதிரில் மலர்ந்த புன்னகையுடன் நின்றிருந்த தேன்மொழி அவனருகில் வந்து அமர்ந்தவள் வேல்விழியைப் பார்த்து என்ன இது புதுப் பொண்டாட்டி வந்ததும் என்னை மறந்துட்டியா என்றாள். தேனு அது வந்து என்றவனைப் பார்த்து சிரித்தவள் ரத்னவேல் என்றவள் அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டு நீ சந்தோசமா வாழனும் ரத்னவேல் என்றவள் காற்றோடு கரைந்து போனாள் தேன்மொழி என்று கண்விழித்தவன் சுற்றும், முற்றும் பார்த்திட அவனருகில் யாரும் இல்லை வேல்விழி மட்டும் தான் உறங்கிக் கொண்டிருக்க கனவா என்று நினைத்தவன் மெல்ல கண் மூடியவன் தேனு ஏன்டி இப்படி படுத்துற நீ எங்கேடி இருக்க என்னை விட்டு ஏன்டி போன என்று மனதிற்குள் வருந்தினான்.
வெற்றிமாறன் நன்றாக குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவன் தன்னறைக்கு சென்று பார்க்க கயல்விழி மெத்தையில் படுத்திருக்க அவளை ஒரு எத்து விட்டான். அம்மா என்று அலறி கீழே விழுந்தாள். என்னடி ஒய்யாரமா மெத்தையில் படுக்கிற தரையில் கிடைடி என்றவன் மெத்தையில் சரிந்தான்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்த கயல்விழி கீழே விழுந்ததில் இடுப்பில் அடிபட்டு இடுப்பு வலியில் பாவம் துடித்துப் போனாள். தனது அவசரப் புத்தியால் தானே தன்னுடைய வாழ்வைக் கெடுத்துக் கொண்டோமோ என்று யோசித்தாள்.
காலம் கடந்த யோசனை என்று அவளது மனம் புத்தி சொன்னாலும் அதை உணர மறுத்தாள். இவனை எப்படி நம்ம வழிக்கு கொண்டு வருவது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
ராஜேஸ்வரியின் மொபைல் போன் இசைத்திட அதை அட்டன் செய்தவர் சொல்லுங்க அப்பா என்றிட மருமகனுக்கு இப்போ எப்படித்தா இருக்கு என்றார் துரைப்பாண்டியன். இப்போ நல்லா இருக்காங்க அப்பா என்றவரிடம் என்னை மன்னிச்சுரு ஆத்தா என்றார் துரைப்பாண்டியன்.
அப்பா என்ன இது நீங்க போயி என்கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு நான் உங்க பொண்ணு என்ற ராஜேஸ்வரியிடம் இல்லை ராஜி ஒரு அப்பனா உனக்கும் ஒரு தாத்தனா உன் பிள்ளைகளுக்கும் நான் எந்த நல்லதுமே பண்ணலைத்தா உன் பொண்ணோட சந்தோசத்தை எனக்கு பிறந்த பிள்ளைகளே பறிச்சுட்டாங்களே என்றவரிடம் அப்பா தம்பி ரத்னவேலும் உங்க பிள்ளை தானப்பா என் மகளை சந்தோசமா தானே பார்த்துக்கிறாரு என்றவர் என் பொண்ணை உங்களை நம்பி தானப்பா அந்த வீட்டுக்கு மருமகளா அனுப்பி வச்சுருக்கேன் என்றார் ராஜேஸ்வரி. என் பேத்தியை பத்திரமா நான் பார்த்துக்கிறேன் ஆத்தா நீ கவலைப்படாதே என்றார் துரைப்பாண்டியன். சரிங்க அப்பா என்ற ராஜி போனை வைத்தார்.
என்ன உங்க சின்னவீடு பெத்த சிங்காரிகிட்ட பேசியாச்சா என்ற தில்லைநாயகியை முறைத்த துரைப்பாண்டியன் யாரு சின்ன வீடுனு அவங்க அவங்க கண்ணாடி முன்னாடி நின்னு கேட்டுப் பாருங்க என்ற துரைப்பாண்டியன் கண்களை மூடிக் கொள்ள தில்லைநாயகி கணவனை வசைபாடிக் கொண்டே படுத்தார்.
துரைப் பாண்டியனோ கண்களை மூடி மௌனமாக கண்ணீர் சிந்தினார். கடந்த காலத்தில் தான் செய்த தவறை நினைத்தபடி..
அதிகாலை மெல்ல கண்விழித்த வேல்விழி தான் உறங்கும் கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனாள். ரத்னவேலின் மடியில் தலைவைத்துக் கொண்டு அவனது கையை தன் இரண்டு கைகளுடன் மார்போடு சேர்த்து அணைத்தபடி உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு தன்னையே நொந்து கொண்டவள் வேகமாக எழுந்து கொள்ள அவளது அசைவில் அவனும் கண்விழித்தான்.
சாரி மாமா என்றவளிடம் ஏன் என்றான். நைட் பேசிகிட்டே உங்க மடியில் என்றவளைப் பார்த்து சிரித்து விட்டு எழுந்து குளிக்கச் சென்றான். மினு, பினுவை கூண்டுக்குள் விட்டவள் ஐயோ வேலு உனக்கு அறிவு இருக்கா என்ன நினைப்பாரு அந்த மனுசன். உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீ யாரோ, நான் யாரோனு சொல்லிப்புட்டு அவரோட மடியில் படுத்துக்கிட்டு அவரோட கையை கட்டிப் பிடிச்சுக்கிட்டு ஐய்யோ வேல்விழி ஏன்டி இப்படி என்று தலையைப் பிய்த்துக் கொண்டவள் திரும்பிட குளித்து முடித்து உள் பனியன் மட்டும் அணிந்தவன் இடுப்பில் டவலுடன் வந்து நின்றான்.
என்னாச்சு வேல்விழி ஏன் தலையில் கை வச்சுட்டு என்றவனிடம் ஒன்றும் இல்லை மாமா என்று அவள் ஓடி விட்டாள் குளியலறைக்குள். அவன் சிரித்து விட்டு உடை மாற்றி விட்டு அறையை விட்டு வெளியே சென்றான்.
அவள் குளித்து முடித்து தனது புடவையை அணிந்து கொண்டு அறையை விட்டு வந்தவள் நேராக பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்து விட்டு மாமா டீ குடிக்கிறிங்களா என்றிட சரி வேலு என்றான் ரத்னவேல்.
அவள் சென்று பசுமாட்டின் மடுவில் பாலைக் கரந்து எடுத்து வந்தவள் தன் கணவனுக்கு பாலைக் காய்ச்சி டீ போட்டுக் கொடுத்தாள். மாமா நீங்க டீ குடிங்க வந்துடுறேன் என்றவள் கட்டாந்தரையைக் கூட்டிப் பெருக்கி வாசலில் சாணம் கரைத்து வாசலைத் தெளித்தாள். வாசல் சிறிது காய்ந்த்தும் கோலம் போட்டு அதன் நடுவில் பூசணிப்பூ வைத்து விட்டு நிமிர்ந்தாள்.
தேன்மொழி கூட இப்படித்தான் என்று நினைத்தவனின் கண்கள் லேசாக கலங்கியது அதை துடைத்துக் கொண்டவன் நீ ஏன் வேல்விழி என்றவனிடம் அத்தை கயல்விழியை கட்டாந்தரை கூட்டி சுத்தம் பண்ண சொல்லுவாங்க அவளுக்கு இந்த வேலை பிடிக்கலை என்றிட ஓஒ உங்க தொங்கச்சியை நாங்க வேலை வாங்கிருவோம்னு நீங்க முந்திகிட்டு வேலை பார்க்கிறிங்களோ என்ற தெய்வானையிடம் உன் அம்மா மாதிரியே இருக்காதே இந்த உலகம் ரொம்ப போலியானது. பட்டும் திருந்தலை நீ என்ற தெய்வானை போடி போயி மறுபடியும் குளி என்றிட அவள் சென்று மீண்டும் குளித்தவள் தனது துணிகள், தன் கணவனின் துணிகள் என துவைத்து மாடியில் காயப் போட்டாள்.
என்ன வேல்விழி என்னோட துணிகளை நானே துவைச்சுப்பேனே என்ற ரத்னவேலுவிடம் மாமா அதனால் என்ன விடுங்க என்றாள்.
சரி நான் போயி அத்தைக்கு ஏதாவது வேலை செய்கிறேன் என்று சென்றவளின் கையைப் பிடித்தான். அவள் நின்றிட சாரி என்றவன் கையை விட அவள் மாமா நேற்று கோபத்தில் ஏதோ சொல்லிட்டேன் என்றாள். சரி சொல்லுங்க என்றவளிடம் இந்த வீட்டில் நீயும், அண்ணியும் மட்டும் தான் வேலை பார்க்கனுமா கயல்விழி அவள் மாமியாருக்கு வேலை பார்க்கட்டும் நீ உட்காரு என்றவன் அவள் கையில் இருந்த கட்டை பிரித்து மருந்து போட்டு விட்டான். நீங்கள் ஏன் மாமா என்றவளிடம் அட பரவாயில்லை என்றவன் அவளது கையில் மருந்து போட்டு விட்டான்.
மாமா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே என்றிட சொல்லு வேல்விழி என்றான். என் அக்கா உங்க கூட சந்தோசமா வாழ்ந்தாளா என்றாள். அவனது முகம் மாறவும் தப்பா ஏதும் கேட்டுட்டேனா மாமா என்றாள். இல்லைம்மா தப்பா என்ன இருக்கு என்றவன் கண்டிப்பா ஒருநாள் உன் கிட்ட சொல்லுவேன் என்றவன் சரி என்று எழுந்து சென்றான்…
……தொடரும்…