மை டியர் மண்டோதரி…(6)

4.8
(6)

என்னக்கா அப்பாகிட்ட பேசணும்னு சொன்ன என்ற ஷ்ராவனியிடம் அவர்கிட்ட பேசவே பயமா இருக்குது ஷ்ராவி என்று தயங்கினாள் வைஷ்ணவி. அந்த மாப்பிள்ளை வரட்டும் அப்பறமா அம்மாகிட்ட சொல்லி அம்மா மூலமா அப்பாகிட்ட பேசலாம் என்ற வைஷ்ணவியிடம் அது தான் அக்கா சரி என்ற ஷ்ராவனி கோவிலுக்கு கிளம்பினாள்.

என்னடா இது இன்னைக்கு நீயும், விஷாகாவும் கோவிலுக்கு வராமல் என்னையை ஏன்டா அழைச்சுட்டு வந்தாய். சிவபூஜையில் கரடி மாதிரி என்ற தஷகிரிவனிடம் அது என்னவோ மச்சான் உன் தங்கச்சி இல்லாமல் கூட எங்கேயும் போயிருவேன் நீ இல்லாமல் எங்கேயும் போகவே முடியலைடா என்றான் விஷ்ணு.

அதற்கு நீ என் அண்ணனை தான் கல்யாணம் பண்ணி இருக்கனும் எருமை என்றவள் கணவனின் நெற்றியில் விபூதி வைத்து விட்டு தன் அண்ணனுக்கும் வைத்தாள்.

மச்சான் இங்கே பாரு பாவாடை , தாவணியில் ஒரு பொண்ணு என்ற விஷ்ணு அந்தப் ப்ரொபசர் பொண்ணை பாவாடை , தாவணி கட்டி இருக்கவும் தானே காதலிக்க ஆரம்பிச்ச இப்போ இன்னொரு பொண்ணும் பாவாடை, தாவணி கட்டி இருக்குது பேசாமல் இந்தப் பொண்ணையும் லவ் பண்ணேன் என்று விஷ்ணு கூறிட மச்சான் உன் பொண்டாட்டி முன்னே உன்னை அடிக்க கூடாதுன்னு நினைக்கிறேன் அதனால கொஞ்சம் அடக்கி வாசிடா என்று விட்டு எதார்த்தமாக அங்கு விளக்கேற்றிக் கொண்டிருந்த பெண்ணைக் கண்ட தஷகிரிவன் புன்னகைத்திட என்ன மச்சான் அந்தப் பொண்ணை பார்த்து சிரிக்கிற அப்போ நான் சொன்னது தானா என்று விஷ்ணுவும் பார்த்திட அங்கு பாவாடை , தாவணியில் விளக்கேற்றிக் கொண்டு இருந்த பெண் சாட்சாத் ஷ்ராவனி தான்.

அடப் பாவத்த இந்தப் பிள்ளை தான் விளக்கேற்றிக் கொண்டு இருந்துச்சா பாதகத்தி தினமும் நாம போற எல்லா கோவிலுக்கும் இவளும் வந்துடுறாள் என்று நினைத்தவன் ஐய்யய்யோ இவன் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி ஆகிட்டானே என்று தன் மைத்துணனை பார்த்திட அவனோ ஷ்ராவனியின் அருகில் சென்று விளக்கினை ஏற்ற ஆரம்பித்தான்.

அவள் விநாயகரின் முன் விளக்கேற்றிக் கொண்டிருக்க அவளருகில் அவனும் விளக்கேற்றினான். அவளைப் பார்த்தபடியே விளக்கேற்றியவன் தீக்குச்சியை தூக்கிப் போடாமல் வைத்திருக்க அவனது விரலில் தீ சுட்டு விட ஆஆ என்றவன் குச்சியை கீழே போட அவனது சத்தத்தில் திரும்பினாள் ஷ்ராவனி.

இவனா இவன் என்ன நாம போற இடத்திற்கெல்லாம் வருகிறான் என்று நினைத்தவள் ஏதோ சொல்ல வாயெடுக்க அண்ணா என்று வந்தாள் விஷாகா. அவள் வரவும் ஷ்ராவனி மௌனமாகினாள். என்னாச்சுண்ணா நீ ஏன் விளக்கெல்லாம் ஏத்திகிட்டு அதான் அவரும், நானும் ஏற்றுவோமே என்றவள் எதார்த்தமாக திரும்பிட ஷ்ராவனி நின்றிருந்தாள்.

யாருண்ணா என்ற விஷாகாவிடம் என்னோட ப்ரொபசர் என்றான் தஷி. ப்ரொபசரா என்னோட ஏஜ் தான் இருக்கும் போல என்று நினைத்த விஷாகா ஹாய் ஐ யம் விஷாகா உங்க ஸ்டூடண்ட் தஷியோட சிஸ்டர் என்று அவளிடம் கையை நீட்டிட ஹாய் ஐ யம் ஷ்ராவனி என்றாள்.

ஷ்ராவனி நைஸ் நேம் என்ற விஷாகா இன்னைக்கு என்னோட அனிவர்சரி அதான் கோவிலுக்கு வந்தோம் என்று பட படவென பேசிக் கொண்டே போக இவள் என்ன இவ்வளவு பேசுகிறாள். நிறுத்த மாட்டாளோ எம்மா நான் சீக்கிரம் வீட்டுக்கு போகவில்லைன்னா எங்க நைனா பேசுற பேச்சை நான் தான் சகிச்சுக்கனும் ஆளை விடும்மா தாயே என்பது போல மனதில் நினைத்தாலும் விஷாகா முன் புன்னகை முகமாகவே நின்றிருந்தாள்.

அவளது மன ஓட்டத்தை புரிந்தவன் போல பாப்பு இன்னொரு நாள் அவங்க கிட்ட பேசலாம் மேடம்க்கு லேட் ஆகிருச்சு போல என்றான் தஷி. அவனுக்கு மனதிற்குள்ளே நன்றி கூறினாள் ஷ்ராவனி. ஸாரி ஷ்ராவனி் நாம இன்னொரு நாள் பேசலாம் என்ற விஷாகா கூறிட அவர்களிடம் இருந்து விடை பெற்று சென்றாள் ஷ்ராவனி.

அண்ணி சூப்பர் அண்ணா என்றாள் விஷாகா. அண்ணியா பாப்பு என்ற தஷியிடம் விஷ்ணு எல்லாமே சொல்லிட்டாரு என்று சிரித்த விஷாகா சென்று விட அவனோ ஷ்ராவனியை பார்த்தபடி அண்ணி தான் பாப்பு என்று புன்னகைத்திட எதார்த்தமாக திரும்பிய ஷ்ராவனி அவன் சிரிப்பதைக் கண்டு முறைத்து விட்டு சென்றாள்.

இவன் என்ன பைத்தியம் மாதிரி சிரிக்கிறான்  என்று நினைத்தவள் நல்லவேளை ஷ்ராவி அவன் அவனோட தங்கச்சியை கோவிலுக்கு அழைச்சுட்டு வந்திருக்கிறான். அது தெரியாமல் நீ பாட்டுக்கு உன்னை பாலோவ் பண்ணிட்டு வரான்னு திட்டப் போனியே. நல்லவேளை அசிங்கப் படவில்லை என்று நினைத்த ஷ்ராவனி தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு கிளம்பினாள்.

என்ன விஷா உங்க அண்ணிகிட்ட பேசிட்ட போல என்ற விஷ்ணுவிடம் பேசாமல் என்ற விஷாகா சரி கிளம்பலாமா என்றாள். உன் அண்ணன் வரட்டும்மா அவன் உன் அண்ணியை வழியனுப்ப பின்னாலேயே போயிருப்பானே அவன் வரட்டும் என்ற விஷ்ணுவின் தலையில் கொட்டு வைத்தான் தஷகிரிவன்.

என்னடா கொட்டுற என்றான் விஷ்ணு தலையை தடவியபடி . பின்னே ஏன்டா உன் பொண்டாட்டியை அனுப்பி வச்ச நானும், என் ஆளும் எதுவும் பேசிறக் கூடாது அவ்வளவு நல்ல எண்ணம் உனக்கு என்றான் தஷி. பின்னே என்னடா கல்யாணம் ஆகியும் என்னையும், என் பொண்டாட்டியையும் பிசினஸ், வேலைன்னு சொல்லி குடும்பமா பிரிச்சு வச்சுருக்கிங்க அதற்கு ஒரு சின்ன பழிவாங்கல் என்ற விஷ்ணுவைப் பார்தது மச்சான் இதை நான் விஷாகா விட்ட சொல்லட்டுமா என்று வில்லச்சிரிப்பு சிரித்தபடி தஷி கேட்டிட மாப்பிள்ளை ஆணியே புணுங்க வேண்டாம் வீட்டில் அத்தை வடை சுடுறாங்களாம் வா போகலாம் என்றான் விஷ்ணு. அவனைப் பார்த்து கலகலவென சிரித்த தஷகிரிவன் அவர்களுடன் வீட்டிற்கு சென்று விட்டான்.

அந்த நட்சத்திர விடுதியில் இருந்த நவீன பாரில் அமர்ந்திருந்தான் அவன். என்ன பேபி உனக்கு பொண்ணு பார்க்கப் போறதா கேள்விப் பட்டேன் என்றாள் எதிரில் அமர்ந்திருந்த நவ நாகரீக மங்கை மதுவை அருந்தியபடி. அவளது உடையின் வறுமையை ரசித்தபடி ஆமாம் டார்லிங் என் அப்பா, அம்மா தொல்லை தாங்க முடியவில்லை அதனால அவங்க பார்க்கிற பொண்ணை கட்டிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்றான் அவளை தலை முதல் கால் வரை பார்வையால் பருகியபடி மதுக் குப்பியையும் தன் வாய்க்குள் கவுத்தியபடி.

அப்போ என்னை மறந்துருவியா பேபி என்றவளிடம் உன்னை மறந்துட்டு எல்லாம் கிடையாது செல்லம். அவள் என் அப்பா, அம்மாவோட மருமகள் என்னோட மனைவி ஆனால் நீ என்னோட துணைவி என்றான் வினித் அவளது கை விரல்களை கோர்த்தபடி. அவளும் அவனது கைவிரல்களை தன் விரல்களால் இறுக்கிப் பிடித்தபடி யூ ஆர் ஸோ ஸ்வீட் பேபி என்றவள் அவனது கை விரலைப் பிடித்து முத்தமிட்டாள்.

ஷேல் வீ என்ற வினித்திடம் ஸ்யூர் பேபி என்ற தனிஷா அவனுடன் அந்த விடுதியில் குளிரூட்டப்பட்ட அந்த அறைக்கு சென்றாள். இருவரும் இன்பமாய் அந்த இரவு பொழுதினைக் கழித்து விட்டு களைப்பில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர்.

எங்கே போனான்  யசோதா அவன் என்று கத்திக் கொண்டிருந்தார் நந்தகோபாலன். ஏன் கத்துறிங்க ஆபிஸ் ப்ரண்ட்ஸ் கூட ஏதோ பார்ட்டி இருக்கு காலையில் தான் வருவேன்னு சொல்லிட்டு தானே போனான் என்ற யசோதா புடவையின் கொசுவத்தை சரி செய்து கொண்டிருக்க பொண்ணு வீட்டுக்காரங்க வெயிட் பண்ணிட்டு இருப்பாங்கங்கிற எண்ணம் உன் மகனுக்கு கொஞ்சமும் இல்லையா என்றார் நந்தகோபாலன்.

வினீத் ரொம்ப பொறுப்பானவன்னு நீங்கள் தானே அடிக்கடி சொல்லுவிங்க என்னாச்சு கொஞ்ச நாளா அவன் வெளியில் தங்கினாளே கோபம் படுறிங்க , அது மட்டும் இல்லாமல் அவனுக்கு உடனடியா கல்யாணம் பண்ணி வைக்கனும்னு பொண்ணு வேற பார்க்கிறிங்க அவனுக்கு முன்னே தங்கச்சி ஒருத்தி இருக்கிறாள்ங்கிற எண்ணம் கூட இல்லாமல் என்ற யசோதாவிடம்  நான் அவனோட அப்பா அவனுக்கு எப்போ எதை செய்து கொடுக்கனும்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனால நீ அமைதியா இரு என்று மனைவியை கடிந்து கொண்டார் நந்தகோபாலன்.

விடாமல் அந்த மொபைல் போன் ஒலித்துக் கொண்டிருக்க அதை அட்டன் செய்து காதில் வைத்தான் வினீத். எங்கே இருக்க என்ற தந்தையின் குரலில் அதிர்ந்தவன் பத்து நிமிசத்தில் வீட்டில் இருப்பேன் அப்பா என்று விட்டு எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

கண்விழித்த தனிஷா கண்டதோ உடை மாற்றிக் கொண்டிருக்கும் வினீத்தை தான். எங்கே கிளம்பிட்ட பேபி என்றவளிடம் இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும்னு அப்பா போன் பண்ணாரு பாய் டார்லிங் என்ற வினீத்தின் கன்னத்தில் முத்தமிட்டு அவனை அனுப்பி வைத்தாள் தனிஷா.

….தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!