யாருடா நீ பைத்தியமா என்று வாய் முனகினாலும் மனமோ அந்த பைத்தியக் காரனைத் தான் சுற்றி வந்தது ஷ்ராவனிக்கு. தன் தலையில் தட்டி விட்டு எழுந்து பைக் ஸ்டாண்டிற்கு வந்தாள். அவளது பைக் பஞ்சர் ஆகி இருக்கவும் கடுப்பானவள் எவன் பார்த்த வேலை இது என்று நொந்து கொண்டவள் அய்யோ என் ஹிட்லர் டாடி வீட்டுக்கு வருவதற்குள் போகனுமே ஆல்ரெடி அந்த இடியட் தஷியால் வேற அரை மணி நேரம் வேஸ்ட் ஆகி போச்சு என்று புலம்பினாள்.
மேடம் என்ற குரலில் திரும்பியவள் கண்டதோ அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்ற தசகிரிவனை தான்.
என்னாச்சு மேடம் என்ற தஷியிடம் பைக் பஞ்சர் என்றாள் ஷ்ராவனி. சரி மெக்கானிக் செட்டில் விட்டுட்டு வீட்டுக்கு போகலாமே என்ற தஷியிடம் போகலாம் ஆல்ரெடி உன்னால் அரை மணி நேரம் லேட் ஆச்சு எங்க அப்பன் ஹிட்லர் கதிர்வேலன் கிட்ட போய் என் ஸ்டூடண்ட் எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான் அதற்கு பேச்சு வார்த்தை நடத்தினேன் அதான் லேட் ஆச்சுன்னு சொன்னால் என் கழுத்தை திருகி போட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பாரு என்றாள் ஷ்ராவனி.
என் மாமனார் அவ்வளவு கோபக்காரரா என்றவனை முறைத்தவள் என்ன மாமனாரா என்றவளிடம் ஆமாம் நீங்க எனக்கு பொண்டாட்டி என்றால் உங்க அப்பா எனக்கு மாமனார் தானே ஷ்ராவனி மேடம் என்றான் தசகிரிவன்.
ஆசை தான் மிஸ்டர் போ போயி அரியர் க்ளியர் பண்ற வேலையை பாரு என்றவள் வண்டியை தள்ளிக் கொண்டு மெக்கானிக் செட் கிளம்ப மேடம் ஒரு நிமிஷம் என்றவன் மச்சி என்று குரல் கொடுக்க விஷ்ணு வந்து நின்றான்.
சொல்லுடா மாப்பிள்ளை என்ற விஷ்ணுவிடம் மேடம் பைக் பஞ்சர் என்றான் தஷகிரிவன். சரி மேடம் நீங்க உங்க பைக் சாவி குடுத்துட்டு மாப்பிள்ளை கூட உங்க வீட்டுக்கு போங்க பைக் நாளைக்கு ரெடி ஆகிரும் என்றான் விஷ்ணு.
இல்லை பரவாயில்லை என்ற ஷ்ராவனியிடம் மேடம் உங்க அண்ணன் மாதிரி நெனைச்சு குடுங்க என்றான் விஷ்ணு. சரி என்று பைக் சாவியை அவனிடம் கொடுத்தவள் நடந்து செல்ல ஹலோ மேடம் நில்லுங்க என்று அவளை பின் தொடர்ந்தான் தசகிரிவன்.
என்னங்க எங்கே போறிங்க என்றவனிடம் பைக் இல்லையே அப்போ பஸ்ல தானே போகனும் அதான் கிளம்புகிறேன் என்றாள் ஷ்ராவனி. பஸ் இந்த டைம் கிடையாது மேடம் பேசாமல் என் கூட வாங்க என்றான் தஷி. இல்லை வேண்டாம் என்றவள் நடக்க ஹலோ ரொம்ப பண்ணாதீங்க மேடம் என்றான் அவளை பின் தொடர்ந்தபடி.
அட ஏங்க நீங்க வேற உங்களுக்கு என் அப்பா பத்தி தெரியாது என்றவளிடம் நான் உங்க ஸ்டூடண்ட் தானே மேடம் பைக் பஞ்சர் அதான் என் ஸ்டூடண்ட் கூட வீட்டுக்கு வந்தேன்னு சொல்லுங்க என்றான் தஷி. ஸ்டூடண்ட் மாதிரியா நீங்க இருக்கீங்க. ஏதோ கல்யாணம் பண்ணி நாலு பிள்ளை பெத்த அப்பன் மாதிரி எருமைமாடு கணக்கா இருக்கிற உன் கூட வீட்டுக்கு போனேன்னு வை அவ்வளவு தான் எங்க அப்பன் என்னை வீட்டுக்குள்ள சுவத்தை இடிச்சு நூறாவது நாள் படத்துல வருவது போல உயிரோட சமாதி கட்டிருவாரு என்றாள் ஷ்ராவனி.
ஏங்க என்னை இவ்வளவு டேமேஜ் பண்ணனுமா என்றான் தசகிரிவன். லெக்சரர்க்கு லவ் லெட்டர் கொடுக்கிற உன்னை இன்னும் கூட டேமேஜ் பண்ணலாம் என்றாள் புன்னகையுடன்.
சரிங்க யாரு டேமேஜ் பண்ணுறது நீங்க தானே புருஷனை பொண்டாட்டி டேமேஜ் பண்ணலாம் தப்பில்லை என்றான் தசகிரிவன். ஹலோ என்ன கொழுப்பா நீ எப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட நான் எப்போ உனக்கு பொண்டாட்டி ஆகினேன் என்றாள் ஷ்ராவனி.
தாலியே தேவை இல்லை
நீ தான் என் பொஞ்சாதி….
என்று அவனது மொபைல் போன் ரிங் டோன் ஒலித்திட அவனை முறைத்தாள் ஷ்ராவனி. சாரி மேடம் என்றவன் சரிங்க உங்க அப்பா வீட்டுக்கு வருவதற்கு முன்னே உங்களை உங்க வீட்டில் விட்டுடுவேன் சத்தியம் என்றான் தசகிரிவன்.
சரி எனக்கும் வேற வழி இல்லை போகலாம் என்று அவனது பைக்கில் அமர்ந்தாள் ஷ்ராவனி. என் தோள் பட்டை கூட சும்மா தான் இருக்கு உங்க கையை வைக்கலாம் என்றான் தசகிரிவன்.
பாரேன் இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்ட கதையா இருக்கே நீ ஃபர்ஸ்ட் பைக்கை நிப்பாட்டு நான் நடந்தே என் வீட்டுக்கு போய்க்கிறேன் என்றாள் ஷ்ராவனி. உடனே கோவிச்சுக்குவிங்களே சரி சரி பைக் கம்பியைவே பிடிங்க என்றவன் பைக்கை ஓட்டினான்.
அப்பறம் மேடம் எப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான் தசகிரிவன். கல்யாணமா ஹலோ என்ன கொழுப்பா நீ பாட்டுக்கு லவ் லெட்டர் கொடுக்குற இப்போ கல்யாணம் எப்போன்னு கேட்கிற என்ன ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்க என்றாள் ஷ்ராவனி.
அட என்னங்க நீங்க கொஞ்சம் கூட ரொமான்டிக்கா பேச விட மாட்டீங்கிறேங்களே என்று சளித்துக் கொண்டான். நீ என் கிட்ட அடி வாங்கப் போற என்றாள் ஷ்ராவனி. பொண்டாட்டி கிட்ட அடி வாங்க வில்லை என்றால் என்ன புருஷன். என் மச்சான் எல்லாம் டெய்லி வாங்குகிறான் என்றான் தசி.
ஹேய் உன்னை கொன்னுறுவேன் என்றவளிடம் அதான் காலேஜ் வந்த முதல் நாளே கொன்னுட்டிங்களே என் செல்ல மண்டோதரி என்று அவன் கூறிட அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. எங்கே தான் சிரித்தாள் அவன் இதை ஒரு அட்வாண்டேஜ் போல எடுத்துக் கொள்வான் என்று நினைத்து முகத்தை கோபமாக இருப்பது போல் வைத்திருந்தாள்.
ஹேய் நிப்பாட்டு என்று அவள் கூறிட என்னங்க நான் பேசல கோவப் பட்டு பாதி வழியிலே இறங்கி விடாதீங்க என்றான் தசகிரிவன். அட வீடு வந்துருச்சுயா என்றாள்.
எங்கே மேடம் பஸ் ஸ்டாப் தானே இருக்கு என்றவனிடம் அதோ தெரியுதே பச்சை பெயிண்ட் அது தான் என் வீடு என்றவள் இறங்கிட என்னங்க வீட்டு வாசலில் இறக்கி விட்டு போகிறேன் என்றான். ஏன் நான் உயிரோட இருக்கிறது உனக்கு பிடிக்கவில்லையா போயா வந்துட்டான் பெரிய ஹீரோ என்றவள் சென்று விட்டாள்.
செல்லும் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டு நின்றான் தசகிரிவன்.
….தொடரும்..