ஹீரோ தான் என்று நினைத்தவள் தன் வீட்டிற்கு சென்று சோஃபாவில் பொத்தென்று விழுந்தாள். என்னாச்சு ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் பைக் பஞ்சர் அக்கா என்றாள் சோகமாக.
அப்பறம் எப்படி வந்த ஷ்ராவி என்ற வைஷ்ணவியிடம் என் ஸ்டூடண்ட் கூட அக்கா பிளீஸ் அம்மா, அப்பா கிட்ட பஸ்ல வந்தேன்னு தான் சொல்லப் போகிறேன். நீயும் அப்படியே சொல்லிரு அக்கா என்றாள் ஷ்ராவனி. சரி ஷ்ராவி என்ற வைஷ்ணவி தங்கைக்கு தேநீர் வைத்துக் கொடுத்தாள்.
என்ன மச்சான் ரொம்ப சந்தோசமா இருக்க என்ற விஷ்ணுவிடம் பின்னே என் ஆளு என் கூட பைக்ல வந்தாள் அப்போ சந்தோசம் இல்லாமல் இருக்குமா என்றான் தசகிரிவன்.
என்னடா உன் தம்பிகாரன் மந்திரிச்சு விட்டது போல சுத்துரான் என்ற விஷ்ணு டேய் மச்சான் இங்கே வாடா என்று குகனை அழைத்தான் விஷ்ணு.
என்ன மச்சான் என்ற குகனிடம் ஒன்றும் இல்லை உங்க அண்ணன் இன்னைக்கு அவன் ஆளை பைக்ல பிக் அப் பண்ணிட்டு போய் டிராப் பண்ணிருக்கான் . ஆனால் அதற்கு காரணமான எனக்கு ஒரு குச்சி மிட்டாய் கூட அவன் வாங்கி கொடுக்க வில்லை என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் விஷ்ணு.
என்ன நீ காரணமா என்ன சொல்லுற நாயே என்றான் தஷி. பின்னே உன் ஆளு பைக் தானாகவா பஞ்சர் ஆகும். நான் தான் அந்த அல்லக்கை அசோக் கிட்ட சொல்லி பஞ்சர் ஆக்க வைத்தேன் என்றான் விஷ்ணு.
ஏன்டா என்ற தஷியிடம் எல்லாம் ஒரு ஆங்கிள் ஆப் இந்தியா வேலைக்கு தான் என்றான் குகன் சிரிப்பை அடக்கிக் கொண்டு. அதிகமாக பேசாதடா அப்பரசெண்டி என்ற விஷ்ணு மாப்பிள்ளை நீ என்னோட நண்பன்டா அதை விட முக்கியம் என் பொண்டாட்டியோட அண்ணன் அதான் உனக்கும் கால காலத்தில் கல்யாணம் நடக்கனுமே அதான் அந்த பொண்ணு கூட பைக்ல போகும் பொழுது ரொமான்ஸ் எதனாலும் நடந்து லவ் டெவலப் ஆகும்ல என்றான் விஷ்ணு.
அவனைப் பார்த்து சிரித்த தஷி அவள் மனசுல என் மேல ஃபீலிங்க்ஸ் இருக்கு மச்சான் ஆனால் சொல்ல மாட்டேங்கிறாள் என்றான் .
அவளும் பெண் தானே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் இருக்கத் தானே செய்யும் என்று வடிவேலு டயலொக்கை வடிவேலு போலவே பாடி லாங்குவேஜ் வைத்துக் கொண்டு விஷ்ணு சொல்ல கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச என்பது போல் தஷி விஷ்ணுவை ஒரு எத்து விட விஷ்ணு நீச்சல் குளத்தில் பொத்தென்று விழுந்தான்.
அடேய் கிராதகா நீயெல்லாம் ஒரு மச்சானாடா ஏதோ பொண்டாட்டியோட அண்ணனாச்சே அவனுக்கும் காலம் நேரத்தோட கல்யாணம் நடக்கணும்னு ஹெல்ப் பண்ணினால் இப்படி கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச நாயேன்னு சொல்லி உதைக்கிற உன்னை என்று அவனையும் பிடித்து தண்ணீருக்குள் இழுத்து போட்டான் விஷ்ணு.
டேய் நாயே உன்னைய என்ற தஷி அவனை விரட்டிட குகன் சிரித்துக்கொண்டிருந்தான். இவன் மட்டும் என்ன சிரிச்சிட்டு இருக்கான் என்ற விஷ்ணு குகனையும் சேர்த்து தண்ணிக்குள் தள்ளிவிட்டான். அடப்பாவிங்களா நீங்க ரெண்டு பேரும் நனைஞ்சது மட்டும் இல்லாமல் என்னை ஏன்டா இழுத்து போட்டீங்க என்று குகன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்க ரொம்ப நடிக்காத நாயே செட்டாகல என்ற விஷ்ணு அவனை மேலும் தண்ணீரில் சேர்த்து அமுக்கினான்.
என்ன நடக்குது இங்க என்று வந்த விஷாகா மூவரையும் பார்த்து நீங்கள் மூன்று பேரும் என்ன குழந்தைங்களாடா மேல வாங்க டா என்றாள் .
என்னடி உன் புருஷனை தான் டா போட்டு பேசுவ சைக்கிள் கேப்ல எங்களையும் டா போட்டு கூப்பிடுறியே என்ற குகனிடம் ஏன் என் புருஷன விட நீ சின்ன பையன் தானே உன்னை நான் டா போட்டு கூப்பிட்டால் ஒன்றும் தப்பில்லை முதலில் மூன்று பேரும் மேல வாங்க என்ற விஷாகா மூவருக்கும் ஆளுக்கு ஒரு டவலை கொடுத்துவிட்டு உள்ள வாங்கடா என்று சொல்லிவிட்டு சென்றாள் .
டேய் கிரீஸ் டப்பா உன் பொண்டாட்டி உன்னோட சேர்ந்ததுனால எங்களையும் மரியாதை இல்லாமல் பேசுகிறாள் பாரு என்றான் குகன். என்னடா பொண்ணு வளர்த்து வச்சிருக்கீங்க புருஷன மரியாதை இல்லாம பேசுகிறாள் என்ற விஷ்ணு குகனிடம் மீண்டும் வம்பு இழுக்க அவனும் பதிலுக்கு ஏதோ சொல்ல என்று அவர்கள் இருவரும் செல்லமாக சண்டை இட்டுக் கொள்ள தஷகிரிவனோ சிரித்த படி அதை ரசித்துக் கொண்டிருந்தான்.
என்ன ஷ்ராவனி உன் பைக் எங்கே என்ற காயத்ரியிடம் அம்மா பைக் பஞ்சர் ஆயிடுச்சும்மா அதான் மெக்கானிக் செட்ல விட்டுட்டு பஸ்ல வந்தேன் என்றாள் ஷ்ராவனி. சரி சரி நாளைக்கு ரெடி ஆய்டும்ல என்ற காயத்ரியிடம் அதெல்லாம் ரெடியாயிடும் அம்மா என்ற ஷ்ராவனி அப்பா எங்கே என்றாள். அப்பா இன்னைக்கு வர கொஞ்சம் லேட் ஆகும் என்ற காயத்ரி சமையல் வேலையை பார்க்க வைஷ்ணவியோ ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
என்னக்கா யோசனை என்ற ஷ்ராவனியிடம் ஒன்றும் இல்லை என்றாள் வைஷ்ணவி. நீ ஒன்றும் இல்லை என்று சொல்லும் போதே ஏதோ இருக்கு என்ன விஷயம் என்றாள் ஷ்ராவனி. மனசு சரியில்லைடி என்ற அக்காவை பார்த்து சிரித்தவள் நம்ம வீட்டில் மனசு சரியா இருந்தால் தான் ஆச்சரியப்படனும் என்று சிரித்தாள் ஷ்ராவனி . போடி லூசு என்ற வைஷ்ணவி அப்பா பார்த்திருக்கிற அந்த மாப்பிள்ளையை என்னவோ எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லடி என்றாள் . போட்டோவை பார்த்த அப்போவே அவனை எனக்கு பிடிக்க வில்லை என்ற ஷ்ராவனியை முறைத்தவள் அந்த ஆளு உன்னை விட வயசுல மூத்தவன் மரியாதையா பேசு என்றாள் வைஷ்ணவி.
அதனால என்ன உனக்கு அவரை பிடிக்க வில்லைன்னு சொல்லி விட்டாயே அப்புறம் அவனை எப்படி கூப்பிட்டால் என்ன விடு என்ற ஷ்ராவனி ஏதோ சொல்ல வர வாசலில் அவளது அப்பாவின் பைக் சத்தம் கேட்டது. ஐயோ அக்கா ஹிட்லர் வந்துட்டாரு என்ற ஷ்ராவனி அமைதியாக நியூஸ் சேனலை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.
என்ன ஷ்ராவனி வாசலில் உன் பைக்கை காணோம் என்ற கதிர்வேலனிடம் அப்பா பைக் பஞ்சர் ஆயிருச்சுப்பா அதான் மெக்கானிக் ஷெட்ல விட்டு இருக்கேன் என்றாள் ஷ்ராவனி. அப்போ எப்படி வீட்டுக்கு வந்த என்ற கதிர்வேலனிடம் பஸ்ல தான் அப்பா என்றாள் ஷ்ராவனி சரிம்மா நாளைக்கு நானே உன்னை காலேஜ்ல விட்டுட்டு போறேன் என்ற கதிர்வேலன் காயத்ரி என்றிட காயத்ரி என்னங்க என்று வந்தார்.
அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்த கதிர்வேலன் என்னடி பொண்ணு வளர்த்திருக்க என்றார் .என்னங்க என்ற காயத்ரி எதுவும் புரியாமல் பார்க்க எவனோ ஒருத்தன் கூட உன் பொண்ணு பைக்ல வந்து இறங்கி விட்டு பஸ்ல வந்தேன்னு பொய் சொல்கிறாள் என்ன பொண்ணு வளர்த்து வெச்சிருக்க என்றார் கதிர்வேலன்.
அப்பா அது என்ற ஷ்ராவனியை முறைத்தவர் வயசுக்கு வந்த பொண்ணை கைநீட்டி அடிக்க கூடாதுன்னு தான் உன் அம்மாவை அடிச்சேன் யார் கூட பைக்ல வந்த என்றார் கோபமாக .அப்பா என்னோட ஸ்டூடன்ட் கூட தான் அப்பா வந்தேன் என்ற ஷ்ராவனியை முறைத்தவர் அவனுக்கு உன் அக்காவை விட அதிக வயசு இருக்கும் அவன் உனக்கு ஸ்டூடண்டா என்றார் கதிர்வேலன்.
சத்தியமா அப்பா அவன் என்னோட ஸ்டூடண்ட் தான் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நாளைக்கு காலேஜ்ல வந்து பாருங்க என்றாள் ஷ்ராவனி. உன்னை வேலைக்கு அனுப்புனதே என்னோட தப்பு தான் என்ற கதிர்வேலன் ஏதோ சொல்ல வர என்னங்க அவள் தான் சொல்கிறாளே நம்ம பொண்ணை நம்புவோமே நாளைக்கு காலேஜ்ல போய் நீங்களே பாருங்க என்றார் காயத்ரி.
அவரை ஏதோ சொல்லி பற்களை கடித்த கதிர்வேலனிடம் அப்பா தங்கச்சி உங்களுக்கு பயந்து தான் பொய் சொல்லி இருப்பாள். நிஜமா அவளோட ஸ்டூடன்ட் கூட தான் வந்துருப்பாள் நீங்கள் காலேஜுக்கு போய் செக் பண்ணி பாருங்க அம்மாவை அடிக்காதீங்கப்பா என்று வைஷ்ணவியும் கூற அமைதியானார் கதிர்வேலன்.
உன் அம்மா மேல சத்தியம் பண்ணு. அவன் உன்னோட ஸ்டூடண்ட் தான் என்று. அவனுக்கும் , உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு என்ற கதிர்வேலனிடம் அம்மா மேல சத்தியம் அப்பா, அவன் என்னோட ஸ்டூடண்ட் தான் அவனுக்கும், எனக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்லை என்ற ஷ்ராவனி கண் கலங்கி நின்றாள்.
சரி உன்னை நம்புறேன் இத்தோட இதை நிறுத்திக்கணும் திரும்பவும் யார் கூடவாவது பைக்ல வர்றதை பார்த்தேன் உன்னை வெட்டி பொதைச்சிடுவேன் என்று திட்டி விட்டு தன்னறைக்கு சென்று விட்டார் கதிர்வேலன்.
ஷ்ராவி அழாதடி என்ற வைஷ்ணவியை கட்டிக்கொண்டு அழுதாள் ஷ்ராவனி. என்னடி இது குழந்தை மாதிரி என்ற வைஷ்ணவியிடம் நான் என்னக்கா தப்பு பண்ணினேன். அம்மாவை அடிச்சாரு அம்மா மேல சத்தியம் பண்ண சொன்னாரு அப்பவும் என் மேல அவருக்கு நம்பிக்கை வந்து இருக்காது நீ வேண்டும் என்றால் பாரு நாளைக்கு கண்டிப்பா காலேஜ்ல வந்து அவன் யாரு என்னன்னு விசாரிச்சுட்டு தான் இந்த பிரச்சினையை விடுவாரு என்றாள் ஷ்ராவனி.
…. தொடரும்….