Mr and Mrs விஷ்ணு 59

4.8
(57)

பாகம் 59

ம்… என எதையோ யோசிப்பது போன்று தன் நாடியை நிவி கொண்டு இருந்த ப்ரதாப்பை எதிரில் இருந்த D.S.மருத்துவமனை முதன்மை டாக்டரான தேவா அடுத்து என்ன கேட்க போறான்னோ என மென் புன்னகையுடன் பார்த்து கொண்டு இருக்க, அவனின் நண்பனும் இன்னோரு முதன்மை மருத்துவருமான டாக்டர் சூர்யா கடுப்போடு பார்த்து கொண்டு இருந்தான்..

கடுப்பாகாமல் என்ன? ஒரு மணி நேரத்திற்கு மேலாக ப்ரதாப் கேட்கும் சந்தேகத்திற்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லி சொல்லியே சூர்யாவுக்கு அவன் படித்த மருத்துவம் மறந்து விடும் போல,

“டேய் முகத்தை நார்மலா வை பேஷன்டோட அட்டன்டர் அவர்” என ப்ரதாப்பை கண்ணால் காட்டி தேவா சூர்யா காதில் முனுமுனுக்க, , “இப்புடிபட்ட ஆளு நமக்கு தேவையே இல்ல கடுப்புபேத்துறார் மை லார்ட்” என்றான் சூர்யாவும் அதே போல் மெதுவாக,

நேற்று இரவு நடந்தது,

“ப்ரதாப் கண்ணா நீ எப்ப தான் இங்க வர போற?”

ப்ரதாப் வீடு வராமல் ஆந்திராவில் தங்கி இருந்த போது ரங்கநாயகி பாட்டி தான் ப்ரதாப்பிடம் இவ்வாறு கேட்டது..

“கொஞ்ச வேலை இருக்கு பாட்டி, அது முடிந்த அப்புறம் தான் வர முடியும்” என்றான்..

“வேலை எப்பவும் இருக்க தான் செய்யும்.. வேலை வேலைன்னு அதை பார்த்தா மட்டும் போதுமா, முன்ன மாதிரியா? இப்ப உனக்கு கல்யாணமாகிட்டு, உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா, அவ மேல்ல கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா உனக்கு” என கேட்டவரை

புருவம் சுருக்கி வீடியோ கால் அழைப்பில் இருந்த பாட்டியை பார்த்தான் ப்ரதாப்..

பெரும்பாலும் அவர் வீடியோ கால் செய்ய மாட்டார்.. இன்று அழைத்து இருக்கிறார்.. வேலை என்று சொல்லி விட்டால், அதை பாரு அது தான் முக்கியம் என்பவர், இவ்வாறு பேசுகிறார்.. அதுவும் விஷ்ணுவை பற்றியும் பேசுகிறாரே, என்னவோ என்ற யோசனையில் பார்த்தான் எதுவும் கேட்கவில்லை,

பாட்டியே தொடர்ந்தார் “உன் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லை சாப்பிட எல்லாம் நாலு அஞ்சு டைம் வாமிட் பண்ணிட்டா, உடம்பு வேற சூடுது” என்றதும்,

“ஏன் என்னாச்சு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலையா?” பதற்றமாக ப்ரதாப் கேட்க,

“பாட்டி எனக்கு ஒன்னுமில்லை நல்லா தான் இருக்கேன்.. அவர்க்கு இப்ப எதுக்கு போன் பண்ணி பயப்படுத்துறீங்க” சிணுங்களாக விஷ்ணு குரல் கேட்டது.. இப்போது தான் கவனித்தான் பாட்டி இருப்பது கூட அவர்கள் அறையில் தான் என்பதை,

“நீ தானம்மா என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணி எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லுங்க, அப்ப தான் அவர் சீக்கிரம் வருவார் பேசுங்க பாட்டி பேசுங்க பாட்டின்னு தொல்லை பண்ணி போன் போட்டு கையில் கொடுத்துட்டு ,இப்ப இப்புடி மாத்தி சொல்றியே” என சரியாக போட்டு கொடுத்த ரங்கநாயகி பாட்டி போனை அவள் பக்கமாக திருப்பி,

‘அய்யோ கிழவி போட்டு கொடுத்துருச்சு’ என ஒற்றை கையால் முகத்தை மூடியவள் விரல் இடுக்கால் கணவன் முறைக்கிறோனோ என போனை பார்க்க, அவளை ஏமாற்றாமல் முறைத்தான் ப்ரதாப்.. கண்ணை மூடி கொண்டாள்..

‘பண்றதை எல்லாம் பண்ணிட்டு பயப்படற போல நடிக்கிறா பாரு’ மனதுக்குள் விஷ்ணுவை திட்டி கொண்டான்..ஒரு வார காலத்திற்கும் மேல் ஆகி விட்டது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, மனைவி மீது மலையளவு கோபதாபங்கள் இருந்தது போதும் தலை முதல் கால் வரை அவளை அளந்தது காதல் கொண்ட மனது, அவளை பார்த்து கொண்டு இருந்தவனை பாட்டியின் குரல் கலைத்தது,

“ப்ரதாப் நீ பதறாத அவளுக்கு ஒன்னும் இல்லை.. உன் பொண்டாட்டிக்கு உன்னை ரொம்ப தேடுது போல.. சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு வா, புள்ள முகமே வாடி தான் கிடக்கு, நீ வந்தா தான் சரியாகும் சரியா” என சிரித்தபடி சொல்லியவர் போனை வைத்து விட்டார்..

பாட்டி சொன்னது போல் ப்ரதாப்பிற்கும் மனைவி முகத்தில் இருந்த வாட்டம் தெரிந்தது.. போய் விடலாமா என்ற எண்ணம் தோன்ற, மானம் கெட்ட மனசு சின்ன பொண்ணுகிட்ட இத்தனை பட்டும் உனக்கு புத்தி வரலையா என திட்டி கொண்டவன் மனதை இறுக்கி கொண்டான்..

எப்போதும் அவளிடம் பெரிதாக பேசாத ரங்கநாயகி தன் வீட்டிலிருந்து இங்கு வந்த விஷ்ணு ஆபிஸ்க்கு போகாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது.. ப்ரதாப் ஊரில் இருப்பது, அதோடு அவள் முகத்தில் தெரிந்த வாட்டம் பாட்டியை விஷ்ணுவிடம் பேச செய்தது..

அறைக்கு அவளை தேடி வந்தவர் “ஏன்மா ஒரு மாதிரி இருக்க” என கேட்டார் ரங்கநாயகி பாட்டி..

“உங்க பேரனை வர சொல்லுங்க பாட்டி சரியாகிடுவேன்” என்றாள் விஷ்ணு..

“நீ சொல்லு, போன் பண்ணி வாங்கன்னு ஒரு வார்த்தை சொன்னா அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நிற்க போறான், அப்புறம் என்ன” பாட்டி கேட்க,

‘ம்க்கும் நான் பேசுன பேச்சில் தான் மனுஷன் தலை தெறிக்க ஆந்திரா பக்கம் ஓடி போய்ட்டார்ன்னு உங்ககிட்ட சொல்லவா முடியும்’என்று தனக்குள் நொந்து கொண்டவள்,

“நான் சொல்றதை விட பெரியவங்க நீங்க சொன்னா தான் சீக்கிரம் வருவார்.. அதுவும் நான் சொல்ற போல சொன்னா சிட்டா பறந்து வருவார் பாட்டி” என்றவள் சொல்லி கொடுத்து பேச சொல்ல பாட்டியோ கவுத்து விட்டது..

“நீ சொல்லி கொடுத்த போல தானம்மா பேசுனேன் சரியா பேசினனா”, என போனை வைத்து விட்டு சிரித்த பாட்டியை..

“ஏற்கெனவே எரிஞ்சிட்டு இருக்கிறதில் இந்த கிழவி வேற ஒரு லிட்டர் எண்ணெய் விட்டுட்டு” என மனதுக்குள் வறுத்து விட்டு வெளியே முறைத்தபடி அங்கிருந்து சென்றாள்..

பாட்டி சிரிப்பு இன்னும் அதிகமானது.. அனுபவசாலியான பாட்டிக்கு இருவர்க்கும் ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது.. ஆனால் தன் பேரன் பேத்தி பவித்ரா அளவுக்கு செல்ல மாட்டான்.. தன் வாழ்க்கையை தானே சரி செய்து கொள்வான் என்ற நம்பிக்கையும் இருந்தது.. அதனால் இந்த பிரச்சினையை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..

விஷ்ணு சொன்ன பொய் அனைத்துமே நிஜமானது தொடர் வாந்தி, தலை சுற்றல், காய்ச்சல் என நடு இரவில் வர, தொடர் வாந்தி,காய்ச்சல் என விஷ்ணு எழுந்துக்க முடியாத அளவு சோர்ந்து போனாள்.. வீட்டில் இருப்பவர்கள் பயந்து போயினர்.. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்..

ப்ரதாப்க்கு அழைத்து வம்சி சொல்ல இதுவும் மனைவியின் வேலை என நினைத்த ப்ரதாப் வம்சி காது புண்ணாகும் அளவு திட்டி தீர்த்து விட, பொண்ட்டாட்டி கிட்ட காட்ட முடியாத கோவத்தை எல்லாம் நம்ம கிட்ட காட்றது வம்சின்னால்லே இவருக்கு இளிச்ச வாயனா போய்ட்டு என நொந்து கொண்டான்..

விஷ்ணு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு அவள் அம்மா அப்பா பார்த்திபன் மூவரும் வந்து விட்டனர்.. ப்ரதாப் வீட்டில் வம்சி பவித்ரா ரங்கநாயகி பாட்டி இருந்தனர்.. உடன் வருகின்றேன் என்ற தேவகி வெங்கடேஷையும் வம்சி தான் நான் இருக்கேன் பார்த்துக்கிறேன்.. ஹாஸ்டபிடலுக்கு இவ்வளோ கும்பலா வர வேணாம் என தடுத்து இருந்தான்.. விஷ்ணுவை பரிசோதித்த மருத்துவர் கர்ப்பமாக இருக்கின்றாள்.. அதனால் உடலில் ஏற்பட்ட மாற்றம் தான் இந்த காய்ச்சலுக்கு சோர்வுக்கு காரணம் என சொல்ல, இருவீட்டிற்குமான முதல் அடுத்த தலைமுறை வரவு அவர்கள் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா, அனைவர்க்கும் சொல்ல முடியாத அளவு மகிழ்ச்சி..

பார்த்திபனுக்கு தங்கை தாயாக போகிறாள் பயங்கர மகிழ்ச்சி தான்.. அதே நேரம் அவன் அறியாத சரியாக துளிர் கூட விடாமல் கருவிலே கருகி போன அவனின் குழந்தை நினைவு வந்தது.. பவித்ரா அந்த முட்டாள் தனத்தை செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவன் கைகளில் வந்து தவழ்ந்து இருக்குமே அவனின் ரோஜமொட்டு, இப்புடி பண்ணிட்டாளே என்ற கோவமும் ஆதங்கமும் வர எதிரே நின்று இருந்த பவித்ராவை பார்த்தான்.. அதே நேரம் அவளுக்கும் அந்த நினைவு வந்து இருக்குமோ என்னவோ அவளும் பார்த்திபனை பார்த்தாள்.. உடனே பார்த்திபன் பார்வையை விலக்கி கொண்டான்..

“வம்சி நாங்க உள்ள போய் ப்ரியாவை பார்க்கிறோம், நீ இந்த சந்தோஷமான விஷயத்தை ப்ரதாப்கிட்ட சொல்லிடு” என்ற பாட்டி விஷ்ணு இருந்த அறைக்குள் சென்றார்..

மறுபடியும் போன் பண்ணி அவர்கிட்ட யார் அசிங்க அசிங்கமா திட்டு வாங்கிறது என நினைத்த வம்சி போன் செய்யவில்லை.. விஷ்ணுவின் மெடிக்கல் ரிப்போர்ட்டை போட்டோ எடுத்து ப்ரதாப்புக்கு அனுப்பி இருந்தான்.‌.

அதை பார்த்த ப்ரதாப் என்ன மாதிரி உணர்கின்றான் தெரியவில்லை.. கண்களை மூடி கொண்டான்.. சந்தோஷமான விஷயம் தானே ஆனால் கண்கள் கலங்குகின்றதே ஏன் என அவனுக்கு புரியவில்லை..

எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்.. நல்ல படியாக இருந்திருந்தால் அவள் தானே இதை தன்னிடம் முதலில் சொல்லி இருப்பாள்.. தங்கள் அறைக்குள் சொல்ல முடியாமல் ஒருவித அவஸ்தையோடு வெட்கத்தோடு அவள் சொல்ல, கேட்டவன் சந்தோஷத்தில் அவளை அணைத்து முத்தமிட்டு எவ்வளவு சந்தோஷமான தருணம் அது.. அதை கிடைக்காமல் செய்து விட்டாள் முட்டாள் என விஷ்ணுவை திட்டினாலும்

உடனே பார்க்க வேண்டும் என மனம் பரபரத்தது.. அவ எத்தனை தடவ செருப்பால் அடிச்சாலும் திருத்தாம அவளுக்காக துடிக்கிறியே மானம் கெட்ட மனசு என திட்டி கொண்டாலும், கிளம்ப ஆயத்தமாக கேலி செய்தது மனசாட்சி, அவளுக்காக இல்ல என் பேபிக்காக என மனசாட்சியை அடக்க சொல்வது போல் தனக்கு தானே சமாதானம் சொன்னவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தான்..

பிரச்சினை இருந்தும் கூட மனைவி கர்ப்பம் என்று அறிந்த உடனே வந்து நின்ற மருமகன் மீது உதயகுமார்க்கு இருந்த வருத்தம் நீங்கியது.. கல்யாணிக்கு நிம்மதியாக இருந்தது.. பார்த்திபன் வாழ்த்து சொல்ல சின்ன சிரிப்போடு ஏற்று கொண்டான் ப்ரதாப்.. வம்சியோ வாழ்த்தோடு சேர்த்து நக்கல் செய்ய அவனை முறைத்தான்..

வம்சி முதுகில் அடித்த பாட்டியோ “அண்ணன்கிற நினைப்பு இல்லாம என்ன கிண்டல் என்றவர், நீ போய் உன் பொண்டாட்டியை பாரு கண்ணா” என அனுப்பி வைத்தார்..

விஷ்ணுவோ சலைன் ஏற்றப்பட்டதால் சோர்வு நீங்கி சற்று முன்பு தான் கண் திறந்தாள்.. அவளிடம் கர்ப்பமாக இருப்பதை சொல்ல, கேட்டவளுக்கு முதலில் நம்ப முடியவில்லை.. சந்தோஷம் தாளவில்லை.. எப்படி நாளை மறந்தேன் தலையில் அடித்து கொண்டாள்.. கவனித்து இருந்தால் தன் மூலம் கணவனுக்கு சொல்லி இருக்கலாமே அவளுக்கு அதே எண்ணம் தான்..

இப்போது தான் வயிற்றுக்குள் ஏதோ குறுகுறுப்பது போன்று இருந்தது.. குனிந்து அடி வயிற்றை தொட்டு பார்த்தாள்.. உடல் சிலிர்த்தது.. அவளுக்கும் கண் கலங்க தான் செய்தது.. அவள் தாயாகி விட்டாள்.. அவளுக்குள்ளும் ஒரு உயிர்.. கணவனின் உயிர். நினைக்க நினைக்க உள்ளுர ஏதோ சந்தோஷ ஊற்று சுரப்பது போல், உடனே அவனிடம் சொல்ல வேண்டும்.. சொன்னா அவர் ரியாக்சன் எப்புடி இருக்கும்…நிச்சயம் தன்னை விட அதிக சந்தோஷ படுவார்.. உடனே கோவத்தை எல்லாம் தூக்கி தூர போட்டு விட்டு வந்து விடுவார். சிரித்து கொண்டாள்.. உடனே சொல்ல வேண்டும் என அவள் போனை கேட்க,

ப்ரதாப்கிட்ட சொல்லிட்டோம்மா வந்துட்டு இருக்கான் என்ற பதில் பாட்டியிடமிருந்து வந்தது.. அய்ய ஜாலி விஷ்ணு மனம் துள்ளியது வந்து அணைத்து முத்தமிட்டு உண்மையாடின்னு கேட்பானா, இல்லை கேலி கிண்டலால் சீண்டி சிவக்க வைப்பானா, கணவனை காண ஆவலாக இருந்தாள்..

கதவை திறந்து ப்ரதாப் உள்ளே வந்தான்.. இருவரும் ஒரு வாரமாகிறது ஒருவரை ஒருவர் பார்த்து, விஷ்ணு இமைக்காமல் அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.. ப்ரதாப்பும் அவ்வாறு தான் விழி அகலாது அவளை பார்த்த வண்ணம் வந்தான்.. அருகே வந்தவன் பார்வை நிலைத்தது என்னவோ அவள் வயிற்றில் தான்.. பார்த்து கொண்டு நிற்க,

விஷ்ணுவிற்கு வெட்கம் வர வேறு புறம் திரும்பி கொண்டாள்.. இன்னும் நெருங்கி வந்து வயிற்றை தொட்டு வருடினான்.. விஷ்ணு கண்கள் தானாக மூடி கொண்டது.. விரல் செய்த காரியத்தை ப்ரதாப் அடுத்து இதழால் செய்வானோ முத்தமிடுவானோ என விஷ்ணு நினைக்க, ஒரு நொடி கழிந்து இருக்கும்.. ஏதோ சத்தம் கேட்டது.. கண் விழித்து பார்த்தாள்.. ப்ரதாப் கதவை திறந்து அறையிலிருந்து வெளியேறி இருந்தான்..

ச்சே ஒரு வார்த்தை பேசலையே ஏமாற்றமாக இருந்தது.. இன்னும் கோவம் போகவில்லை புரிந்தது.. ஆனாலும் நீ பாசக்காரன் தான்யா விஷயம் கேள்விப்பட்ட உடனே வந்துட்ட என கொஞ்சி கொண்டவள், இந்த கோவக்கார மச்சானை எப்புடி மலை இறக்குவது தீவிர சிந்தனைக்கு சென்றாள்..

வெளி வந்த ப்ரதாப்பு நேராக சென்றது அவளுக்கு பரிசோதித்த மகப்பேறு மருத்துவர் இந்திராவிடம் தான்.. அங்கு போய் இந்திராவிடம் தான்,அவன் கேட்ட கேள்வி.. அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

பின்ன மசாலா கம்பெனிக்காரன் ஊறுக்காய்க்கு வாங்கிற மிளகாய்க்கே, மிளகாய் தரம் நிறம் என பலமுறை பரிசோதித்து மிளகாய் மண்டிக்காரனிடம் பல கேள்வி கேட்டு அவன் உயிரை வாங்கி விடுவான்.. இதுவோ அவனின் உயிர், உயிருக்கு உயிரானவளின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் சும்மா விடுவான்னா..

அவளின் மருத்துவ அறிக்கை அவளின் உடல்நிலை குறித்து சந்தேகம் கேட்டால் பரவாயில்லை.. நீங்க இதுவரை எத்தனை கர்ப்பிணி பெண்களுக்கு வைத்தியம் பார்த்து இருக்கீங்க.. எத்தனை பிரசவத்தை அட்டன் பண்ணி இருக்கீங்க.. அதில் எத்தனை சுகப்பிரசவம் எத்தனை ஆப்ரேஷன், எதனால் ஆப்ரேஷன் வரை போகுதுன்னு இந்திராவை கேள்வி கேட்டு அவர் ஆவியை வாங்கி விட்டு, உங்க ஹாஸ்பிடல் டீன்யை பார்க்கனும் என்றவன் அடுத்து வந்தது தேவா சூர்யாவிடம் தான்..

D.S.மருத்துவமனை பழைமை வாய்ந்த மருத்துவமனை அல்ல தான்.. ஆனால் ஆரம்பித்த குறுகிய காலத்திலே அவர்களின் சேவை நோயாகளிடம் கவனித்து கொள்ளும் பாங்கு, அவர்களிடம் காட்டும் கணிவு.. இந்த ஆஸ்பத்திரிக்கு போனா சரியாகும் என்ற நம்பிக்கையை மக்களிடம் குறைந்த காலத்திலே பெற்றது.. அது ப்ரதாப்புக்கு தெரியும்.. அதனால் தான் மனைவியை இங்கேயே வைத்தியம் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவு எடுத்தான்.. இருந்தாலும் சின்ன சின்ன சந்தேகத்தை தீர்த்து கொள்ள வேண்டாமா என்ன?

அதனால் தான் ப்ரதாப் தேவா சூர்யாவை சந்தித்து இந்திராவிடம் கேட்ட அனைத்து கேள்வியையும் இங்கும் கேட்டான்.. அது மட்டுமா கூடுதலாக கர்ப்பிணி பெண்களுக்கு என்ன மாதிரி மாத்திரை மருந்து எல்லாம் கொடுப்பீங்க.. அது எல்லாம் உங்க சொந்த தயாரிப்பான, எந்தெந்த மருந்து எந்த கம்பெனிலிருந்து வாங்குவீங்க.. அந்த மருந்து கம்பெனி எத்தனை வருஷமா இந்த தொழிலில் இருக்காங்க.. அதில் சைடு எஃபெக்ட் வருமா என்று எத்தனை கேள்வி, அதில் தான் சூர்யா கடுப்பாகி விட்டான்..

அப்புறம் என எதையோ கேட்க வந்த ப்ரதாப், சூர்யா கண்ணில் இருந்த கேலி கடுப்பை பார்த்து விட்டான்..

“என்னடா இவன் இவ்வளவு கேள்வி கேட்கிறான்னு டோன்ட் மிஸ்டேக்ன்னு மீ.. ஒரு ட்ரஸ் வாங்கிறதுக்கே அவ்வளவு தூரம் க்வாலிட்டி செக் பண்றது இல்லையா.. இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் அதான்” என ப்ரதாப் நிறுத்தவும்..

“புரியுது எனக்கு, நாங்க தப்பா எடுத்துக்கலை.. உங்க டவுட் எதுவா இருந்தாலும் எப்ப வேணா நீங்க எங்களை கேட்கலாம்.. பதில் சொல்ல வேண்டியது எங்க கடமை “சிரித்தபடி சொன்னான் டாக்டர் தேவேந்திரன் பொறுப்பாக,

“ஆமா ஆமா எதுவா இருந்தாலும் கேளுங்க.. நாங்க ப்ளஸ் டூ பாஸான்னு கூட கேட்கலாம்” நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்.. என சூர்யா நக்கலடிக்க,

டேய் தேவா கடிந்தான்… ப்ரதாப்போ கடிந்தான்..

“சாரி” என்ற தேவா, “இந்த ஸ்டேஜ்க்கு எவ்வளவு க்ரோத் அண்ட் ஹெல்தி தேவையோ அந்தளவு உங்க பேபி ஹெல்தியா இருக்கு.. எந்த பிரச்சினையும் இல்லாம உங்க பேபியை உங்க கையில் ஒப்படைக்கிறது எங்க பொறுப்பு” என்றான் தேவா..

“பேபியை மட்டுமில்ல பேபியோட அம்மாவையும் நல்ல படியா ஆரோக்கியமா எனக்கு திருப்பி தரனும் அதுக்காக தான் உங்க ஹாஸ்பிடல் தேடி வந்து இருக்கோம்.. என் வொய்ப் சின்ன பொண்ணு ஜஸ்ட் 22 தான்.. அதோட அவளால் பெயின் அவ்ளோ வா தாங்க முடியாது சோ அவளுக்கு அதிகம் கஷ்டம் கொடுக்கமா டெலிவரி நடக்கனும் என்றவனின் பாசமும் காதலும் தேவாவிற்கு புரிய சிரித்தபடி சம்மந்தமாக தலை அசைத்தான்.. 

சூர்யாவோ காதல் மன்னன் ஏ… காதல் மன்னன் என பாட அவனை முறைத்த ப்ரதாப் ஊருக்குள்ள நிறைய வம்சி இருக்காங்க போல என நினைத்தபடி வெளியேறினான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 57

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!