வெற்றிமாறன் போனை எடுத்து அவள் பேசுவதற்கு முன்னால் கத்தியதும், கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள் வினிதா. “ஏய் பேசத்தானே கால் பண்ணின… என்னடி அமைதியா இருக்க சொல்லு… என்ன விஷயம் கால் பண்ணினே…?” என்று கேட்டான் வெற்றி மாறன். அப்போதும் வினிதா பேசவில்லை. “இப்ப பேசுறயா இல்ல நான் போன வைக்கவா….” என்று வெற்றிமாறன் கேட்டது மறுபக்கம் இருந்து ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்த வெற்றிமாறன் கட்டில் இருந்து எழுந்து அமர்ந்தான்.
“ஏய் என்னடி ஆச்சு… எதுக்கு இப்ப அழுதுட்டு இருக்க…? சொல்லுடி என்ன ஆச்சு…. மாமா திட்டினாங்களா… இல்ல அத்தை அடிச்சாங்களா….?” என்று இவன் கேட்க கேட்க அவள் மேலும் அழ ஆரம்பித்தாள்.
இந்தப் பக்கம் வெற்றிமாறனுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. “ராட்சசி அதுதான் கேட்கிறேன் இல்ல என்ன ஆச்சுன்னு வாயைத் திறந்து சொல்லுடி… எதுக்கு அழுத்திட்டு இருக்க… இப்ப சொல்லப் போறியா இல்லனா உன் வீட்டுக்கே வரவா….?”
“போ நீ வேணாம் எனக்கு…? நான் ஒரு பிரச்சினையை சொல்லணும் கால் பண்ணினா நீ என்னை திட்டுற இல்ல நீ போ….” என்று சிறுபிள்ளை போல அழுதாள் வினிதா. முதலில் இவள் அழுகை நிறுத்த வேண்டும் என்பதை உணர்ந்த வெற்றி மாறன், “சரி சாரி…. நிஜமா சாரிடி நைட்டு ஃபுல்லா தோட்டத்துக்கு காவலுக்கு வந்தனா இப்பதான் தூங்கினேன்…. அந்த டைம்ல நீ கால் பண்ணியா அதான் கோவத்துல திட்டிட்டேன் உன் மாமன் தானே மன்னிச்சுக்கோ…” என்றதும் அவள் அழுகை பட்டென்று நின்றது. “மாமா இப்ப என்ன சொன்ன….?”
“என்ன சொன்னேன் மன்னிச்சுக்கோனு சொன்னேன்…”
“இல்ல வேற ஏதோ சொன்ன…”
“வேற என்னடி நான் சொன்னேன்…. மன்னிச்சுக்கோனு தான் சொன்னேன்….”
“இல்ல உன் மாமன் தானே என்று சொன்ன மாமா….” இனிமே இத விடமாட்டா
‘அய்யோ இதை வேற புடிச்சுட்டாளா….’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
“மாமா சொல்லு மாமா… நீ என் மாமா தானே….?”
‘விடமாட்டா போலயே…’ என நினைத்த வெற்றிமாறன் வெளியே, “ஆமாடி நான் உன் மாமா தான்… ஏதோ தூக்க கலக்கத்துல கத்திட்டேன்…. சரி சொல்லு எதுக்காக இந்த காலையிலேயே கால் பண்ணினே….”
“மாமா உன்னைப் பார்த்து ரெண்டு நாள் ஆச்சு… நான் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணியும் ரெண்டு நாளாச்சு…. நீ என்ன தேடவே இல்லைல…”
“இங்க பாருடி…. என்கிட்ட திட்டு வாங்கன்னே நீ கால் பண்ணுவியா….? நானே நீ அழுதுகிட்டு கால் பண்ண என்னவோ ஏதோன்னு பதறினா நீ எதை கேட்டுக்கிட்டு இருக்க என்கிட்ட…?”
“சொல்லு மாமா… நீ என்னைத் தேடவே இல்லையா…. அப்போ உனக்கு என்ன பிடிக்காது அப்படித்தானே….”
“ஏய் இப்போ உனக்கு என்ன தான்டி பிரச்சனை…? எதுக்குடி காலங் காத்தால இப்படி எல்லாம் கால் பண்ணி கேட்டுகிட்டு இருக்க….?”
“எதுக்கு கேட்டுட்டு இருக்கேனா… உன் மாமா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காரு….”
“ஏய் விளையாடாதடி குந்தாணி….”
“ஆமா விளையாடுறன்… அடஅடப் போ மாமா நான் எதுக்கு இந்த விஷயத்துல விளையாடப் போறேன் உண்மைதான் இன்னைக்கு சாயந்தரம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்களாம்… அதனால என்னை காலேஜுக்கு இன்னைக்கு லீவு போட சொல்லிட்டாரு உன் மாமா…. இங்க பாரு மாமா நான் திரும்பத் திரும்ப சொல்றேன்…. என் கழுத்துல தாலி ஏறணும்னா அது உன் கையால மட்டும்தான்…. அதையும் மீறி உன் மாமா எனக்கு வேற யாரையாவது கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாருனா என் கழுத்துல தாலி ஏறாது தூக்கு கயிறு தான் ஏறும்… நான் மட்டும் சாக மாட்டேன்… உன்னையும் கொன்னுடுவேன்…”
“ஏய் சனியனே…. காலங்காத்தால என்ன பேச்சு பேசுற தூக்கு கயிறு அது இதுன்னு… உன்னை எங்க அத்தைக் எதுக்கு பெத்தாங்களோ தெரியல பேசுற பேச்ச பாரு காலையிலேயே…”
“மாமா நீ என்ன வேணா திட்டு ஆனா அது தான் நடக்கும்.. இந்தப் பொண்ணு பாக்குற சடங்கு சம்பிரதாயத்துக்கு கூட நான் யார் முன்னாலும் அலங்கரிச்சுட்டு வந்து நிக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்…. எவனாச்சும் எங்க வீட்டு வாசலுக்கு பொண்ணு பாக்குறேன்னு வந்தான்னு வச்சுக்கோ… அப்புறம் நான் என்ன முடிவெடுப்பது எனக்கே தெரியாது….”
“என்னடி பேசிட்டு இருக்க நீ…?” என்று கோபப்பட்டான் வெற்றிமாறன்.
“அவ்வளவுதான் மாமா… இன்னைக்கு யாரும்…. இன்னைக்கு இல்ல என்னைக்குமே எங்க வீட்டு வாசலுக்கு பொண்ணு பாக்க வரவே கூடாது… நான் யாரு முன்னாடியும் பொம்மை மாதிரி ரெடி ஆயிட்டு போய் நிக்க எனக்கு விருப்பம் இல்லை…. புரிஞ்சுதா மாமா…?”
“முடியலடி எனக்கு… இப்ப எதுக்கு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க… மாமா உனக்கு ஏத்த மாதிரித் தானே மாப்பிள்ளை பார்த்திருப்பார்…. உனக்கு புடிச்சிருந்தா கட்டிக்க…” வினிதாவிடம் அழுகை விடைபெற்றுக் கோபம் வந்தது.
“டேய் மாமா நீ என்ன லூசா…? இல்ல லூசானு கேட்கிறேன்… நான் இவ்வளவு நேரம் என்ன பேசிக்கிட்டு இருக்கேன் நீ என்ன பேசுற…. கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி தானே சொல்லிக்கிட்டு இருக்கேன்… உன்னைத் தவிர யாருக்கும் முன்னாலே என்னால அலங்கரிச்சிட்டு நிக்க முடியாது…. வேற யாரும் கட்டுற தாலி என் கழுத்துல ஏறாது… உனக்கு புரியுதா இல்லையா…. உனக்கு எப்படி புரியும்… அப்படி என்ன புரிஞ்சிக்கிட்டு இருந்தா தான் நீ இப்போ என்னை லவ் பண்றத ஒத்துக்கொள்ளுவையே… இப்ப கூட நீ பேசாம இருக்க தானே மாமா…. ஆனா இன்னைக்கு உனக்கு புரிய வைப்பேன் இன்னைக்கு மட்டும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என் வீட்டு வாசல்ல வந்து நின்னா மவனே.. நான் எதுவும் பண்ணிக்க மாட்டேன்…. உனக்கு விஷம் வைச்சிடுவேன் பார்த்துக்க…” என்றவள் போனை கட் பண்ணி விட்டாள்.
வெற்றிமாறனுக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது. ‘இவளை பொண்ணு பாக்க வந்தா நான் என்ன செய்றது…? எனக்கு விஷம் வைப்பேன்னு வேற சொல்றா… சொன்னதை செஞ்சாலும் செய்வா… வெவெற்றி உனக்கு உன் உசுரு முக்கியம்ல…’ என நினைத்தான். வினிதாவின் பிடிவாதம் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். இப்போது என்ன செய்வது என்று நினைத்தவன் தமிழ்ச்செல்வனுக்கு போன் பண்ணினான். தமிழ்ச்செல்வனை வேலையாக அனுப்பி இருந்தார் தயாளன். அந்த வேலையை முடித்துக் கொண்டு வரும் வழியில் வெற்றிமாறனின் கால் வர போனை எடுத்தான். “சொல்லு வெற்றி… என்ன இவ்வளவு நேரத்தோட கால் பண்ணி இருக்க…”
“என்ன வெற்றி எதுக்கு இப்ப இப்படி எல்லாம் பேசுற… இப்ப என்ன நடந்துச்சு….”
“என்ன நடந்துச்சா… நீ உன் வீட்ல தானே இருக்க… என்கிட்ட கேக்குற என்ன நடக்குதுன்னு….”
“இல்ல வெற்றி அப்பா வேலையா அனுப்பியிருந்தாங்க டவுனுக்கு வந்தேன்…. இப்பதான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன் என்ன ஆச்சு வீட்ல….”
“என்ன ஆகணும் உன் தங்கச்சி சும்மாவே ஆடுவா இப்ப உன் அப்பா அவளுக்கு சலங்கையை வேற கட்டி விட்டுருக்காரு…. அந்த ஆட்டம் ஆடுறான் சலங்கையை கட்டிக்கிட்டு…”
“மச்சான் என்னடா சலங்கைன்ற ஆட்டம்ன்ற எனக்கு ஒண்ணுமே புரியல தெளிவா சொல்லு….”
“தெளிவாத்தானே சொல்றேன்… உன் அப்பா உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காரு.. சாயந்தரம் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க உன் தங்கச்சிய பொண்ணு பாக்க வீட்டுக்கு வராங்களாம்…”
“என்ன பொண்ணு பாக்க யார் வந்தாலும் நான் உனக்கு விஷம் வைச்சிடுவேன்னு சொல்லி உன் தங்கச்சி எனக்கு கால் பண்ணி சொல்றா…”
“டேய் வெற்றி என்னடா சொல்ற….?”
“என்ன என்னடா சொல்ற வினிதா கால் பண்ணினாடா காலையில எனக்கு… கால் பண்ணி அவ தான் சொன்னா மாமா வேற யாரு முன்னாடி நான் ரெடியாகி நிற்க முடியாது… மாப்பிள்ளைனு யாராவது எங்க வீட்டுக்கு வந்தாலும் கண்டிப்பா உனக்கு விஷம் வைச்சிடுவேன் என்று சொல்றா….”
“வெற்றி வினிதாவை பற்றித்தான் உனக்கு தெரியுமே….”
“நான் என்னதான் பண்றது டா…?”
“இந்த ரெண்டு நாளும் அவ அவளாவே இல்ல எப்ப பாரு பட்டாம்பூச்சி போல சுத்திக்கிட்டு இருக்கிறவ இந்த ரெண்டு நாள் காலேஜுக்கு போற வாரா… வெளியில எங்கேயும் போகல… வீட்லயும் யார் கூட ஒரு சரியா பேசல ரூமுக்குள்ளேயே உட்கார்ந்துட்டு இருக்கா…. நான் என்ன பண்றதுனு போய் பேசினேன் ஆனா அவ பேச தயாரா இல்லை… என்கிட்ட யாரும் பேச வேண்டாம்…. என்னைக் கொஞ்சம் தனியா விடு தமிழ்னு சொன்னா…. நானும் வந்துட்டேன்…. ஆமா நீ என்ன முடிவு எடுத்திருக்கிற வெற்றி….?”
“முடிவு தானே எடுக்கிறன்… சாயந்திரமா எடுக்கிறன்…. அதுக்கு முன்னாடி உன் அப்பாவிடம் பேசி உன் லூசு தங்கச்சியைப் பார்க்க வர மாப்பிள்ளை யாருன்னு தகவல் மட்டும் என்கிட்ட சொல்லு….”
“நீ என்ன பண்ண போற வெற்றி….?”
“கெடா வெட்டி விருந்து வைக்கப் போறேன்…. சொன்னதை செய் தமிழ் நீ வேற என்னை டென்ஷனாக்காத…”
“ஓகே டா ஓகே நான் அப்பா கிட்ட பேசிகிட்டு உனக்கு கால் பண்றேன்…” என்று சொல்லி ஃபோனை வைத்தான் தமிழ்ச்செல்வன்.
தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு வரும்போது ஹாலில் இருந்து சங்கர நாதன் தாத்தாவுடனும் ராஜேஸ்வரி பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தார் தயாளன். ரேணுகாவும் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு அமைதியாக நின்றார். அங்கே தமிழ் வந்ததும், “வா தமிழ் போன விஷயம் என்ன ஆச்சு..?” என்றார்.
“நீங்க சொன்ன மாதிரியே வேலைய முடிச்சிட்டேன்ப்பா….”
“ரொம்ப நல்ல வேலை பண்ண. தமிழ்…”
“சரி சாயந்திரம் எங்கேயும் போயிடாத….”
“ஏன் அப்பா… சாயந்திரம் என்ன..?”
“அது வந்து நம்ம வினியை பொண்ணு பாக்க வராங்க…”
“என்னப்பா சொல்றீங்க திடீர்னு வினியை பொண்ணு பார்க்க வராங்கன்னா…”
“ஆமா தமிழ் அம்மா வேற சொல்லிக்கிட்டே இருக்காங்க…. உங்க ரெண்டு பேரோட நல்லதையும் பார்த்துடணும் என்று சொல்லிட்டு இருந்தாங்க…. தங்கச்சி இருக்கும்போது உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது… அது தான் முதல் வினிக்கு பண்ணிடலாம்னு….. அன்னைக்கு தரகரை கூப்பிட்டு வினியோட போட்டோ கொடுத்திருந்தேன்…. அவரும் மாப்பிள்ளை பாத்து சொன்னாரு எனக்கும் புடிச்சிருந்துச்சு அதுதான் பேசிக்கொள்ளலாம் என்று வர சொல்லி இருக்கேன்….”
“ரொம்ப சந்தோசம் பா…. ஆமா மாப்ள என்ன பண்றாரு…?”
“அவரு டவுன்ல ஐடில வொர்க் பண்றாரு…. நம்ம பக்கத்து ஊரு தான்…. ஆனா மாப்பிள்ளை டவுன்ல தங்கி இருக்கிறாங்க…. அங்க அவருக்கு சொந்தமா ஒரு வீடு கூட இருக்கு…”
“அதெல்லாம் பாக்காம இருப்பனா நான்… தமிழு நமக்கு ஏத்த வசதி தான் அவர்களுக்கும்… மாப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை… நம்ம வினிக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க….”
“ஆமால்ல உங்க கிட்ட மாப்பிள்ளை போட்டோ காட்ட மறந்தே போயிட்டேன்…” என்றவர் தனது போனில் இருந்த போட்டோவை. அங்கிருந்தவர்களிடம் காட்டினார். மாப்பிள்ளை பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தான். தமிழ்ச்செல்வன் அந்த போட்டோவை தனது ஃபோனுக்கு அனுப்பியவன் அதை வெற்றிமாறனுக்கு அனுப்பினான். “சரி அப்பா… நான் ரூமுக்கு போறேன்…” என்றவன் அவன் அறைக்குச் சென்றான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி 💙
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.5 / 5. Vote count: 19
No votes so far! Be the first to rate this post.
Post Views:283
2 thoughts on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 31”
Waiting for next epi divi
Can’t wait for next episodes
Upload soon