என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 34

4.6
(13)

அத்தியாயம் : 34

வினிதா தனது அறைக்குள் இருந்து அழகான நெயில் பாலிஷ் போட்ட நகங்களைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். பின்னர் ஒரு முடிவுடன் வெற்றிமாறனுக்கு போன் பண்ணினாள். வெற்றிமாறனும், “சரி எடுத்துட்டாடா எடுத்துட்டா….” என்று பக்கத்தில் இருந்த நண்பர்களிடம் சொல்லிவிட்டு சற்று விலகி சென்றான். 

“ஹலோ யாருங்க பேசுறது….?” என்றதும், மறுபக்கம் இருந்த வினிதா, “என்னது யாரா….? யோவ் மாமா…..”

“என்னாது யோவ் மாமாவா….? என்னடி வர வர மரியாதை குறையுது….”

“உனக்கெல்லாம் எதுக்கு மரியாதை… ஆமா நான் சொன்ன வேலை என்ன ஆச்சு….?”

“என்ன….. என்ன வேலை… நீ என்ன சொன்ன நான் என்ன பண்ணனும்….?”

“மாமா விளையாடாத…. அந்த மாப்பிள்ளை மட்டும் என்னை பொண்ணு பாக்குறதுக்கு வந்தான் அப்புறம் உன் உயிர் உனக்கு சொந்தமில்லை அதை ஞாபகம் வச்சுக்கோ…..”

“என்னடி மிரட்டுரியா நீ…. என்னதான் நீ மெரட்டினாலும் உனக்காக ஒண்ணும் பண்ண முடியாது….”

“அப்படிங்களா மாமா…. சரி சரி அப்போ உனக்கு விஷம் கன்பார்ம்… நீ வீட்ல சாப்பிட்ட சாப்பாட்டில் விஷம் இருக்கலாம்…. நீ ஹோட்டல்ல சாப்பிடுற சாப்பாட்டில விஷம் இருக்கலாம்…. இல்ல உன் பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து மலை மேல உக்காந்து நல்லா சாப்பிடுவியே அதுல கூட விஷம் கலக்கலாம்… எதுக்கும் பாத்திரு மாமா… உனக்கு அல்பாய்சுனு இருக்கும் போல….” என்றாள். 

“என்னடி மிரட்டுரியா…? எங்க விஷம் வை பாப்போம்… உன்னால முடியும்னா வைடி பாப்போம்…”

“இங்க பாரு மாமா…. என்ன பத்தி ரொம்ப நல்லாவே தெரியும்…. நான் சொன்னா சொன்னதை செய்றவ….”

“ஆமா பெரிசா வந்துட்டா பேசுறதுக்கு…. நீ சொல்றதை எல்லாம் பண்ண முடியாதுடி… மாப்பிள்ளை வந்தா பார்த்தா உனக்கு புடிச்சிருந்தா கட்டிக்கோ….”

“இங்க பாரு மாமா… என்னை வெறுப்பேத்த நீ பண்ணிக்கிட்டு இருக்க…. மவனே இரு இந்த மாப்பிள்ளை மட்டும் வந்து பார்க்கட்டும் உனக்கு வச்சிக்கிறேன் கச்சேரியை….” என்றாள் வினிதா. 

“சரி சரி போன வை… எனக்கு நிறைய வேலை இருக்கு….”

“ஆமா பெரிய கலெக்டர் உத்தியோகம் பாக்குற அளவுக்கு வேலை இருக்கு….” என்று கோபத்துடன் போனை வைத்தாள் வினிதா. மறுபக்கம் சிரித்தான் வெற்றி மாறன். 

“என்ன மச்சான் போன் எல்லாம் பார்த்து சிரிக்கிற போல இருக்கு…”

“யாரு வினிதா வா….?”

“டேய் எப்படிடா…?”

“அதான் உன் முகத்தை பார்த்தாலே தெரியுது யாரு பேசி இருப்பாங்கன்னு….”

“ஏன் மச்சான் ஏன்…. பேசாம ரெண்டு பேரும் லவ் பண்றதை ஒத்துக்க வேண்டியது தானே….”

“நீங்க வேற ஏண்டா என்னை பாடா படுத்துறீங்க…. அதை பத்தி நான் இன்னும் யோசிக்க கூட இல்ல… அதை விடுங்கடா….”

“சரி சரி…. இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க…?”

“வேற என்ன பண்றது நம்ம… ஊர் எல்லையில போய் நின்னுடுவோம்… முகத்தை எல்லாம் மறச்சுக்கோங்கடா… கையில கொஞ்சம் கல்ல வச்சுக்கோங்க… வண்டி வந்ததும் வண்டிக்கு குறி பார்த்து வீசுவோம்… அதுலே பயந்து ஓடிடுவானுங்க….” என்றான் வெற்றிமாறன். 

“ஆனா ஒண்ணுடா இது மட்டும் தயாளன் ஐயாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு நினைச்சாலே எனக்கு வயித்த கலக்குது….”

“டேய் நானே அதை ஞாபகப் படுத்தாம அமைதியா இருக்கேன்…. நீங்க வேற ஏன்டா எனக்கு ஞாபகப்படுத்துறீங்க…. பேசாம வாங்கடா….” என்ற வெற்றிமாறன் அவர்களை அழைத்துக் கொண்டு சென்றான்.

ரேணுகாவிற்கு தனது அண்ணிகளுடன் பேசிவிட்டு வந்ததிலிருந்து வினிதாவை வெற்றிமாறனுக்கும், குமுதாவை தமிழ்ச்செல்வனுக்கும் கட்டி வைக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகியது. ஆனால் ‘வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக அல்லவா இவர் இப்படி வினிதாக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாரு…’ என்று மனதுக்குள் பொருமிக் கொண்டு இருந்தார். அவரது அகத்தை முகம் பிரதிபலித்தது. தயாளன், “உன் முகம் மட்டும் ஏன் ஒரு மாதிரி இருக்கு… உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா ரேணுகா….?” என்று கேட்டார். உடனே ரேணுகாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. “இல்லைங்க வினிதா இன்னும் காலேஜ் முடிக்கல இல்ல… அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு….”

“கல்யாணத்தை பேசி வச்சுக்குவோம்…. காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் தான் நம்ம பொண்ணுக்கு கல்யாணம் சரியா….?”

“சரிங்க…” என்று தலையை ஆட்டினார் ரேணுகா. ‘அம்மா வெற்றி அவ்வளவு பேசியும் நீ இப்படி இப்பவும் தலையை ஆட்டிகிட்டு இருக்கிற… இப்படி பண்ற உன்னை நான் எப்படித் தான் மாற்றுவதோ தெரியல…’ என்று மனதில் பேசினான் தமிழ்ச்செல்வன். 

சாயந்திரமானதும் வினிதாவை அலங்கரிக்க அறைக்குள் வந்தார் ரேணுகா. அவளோ, “அம்மா என்னால முடியாது….” என்று சொன்னாள். 

“ஏய் உங்காருடி… ஒழுங்கு மரியாதையா ரெடியாகு இல்ல உங்க அப்பா கிட்ட உன்னால எனக்குத்தான் திட்டு விழும்… என்னால திட்டு வாங்க முடியாது…”

“அம்மா என்கு இந்த கல்யாணம் வேணாம்மா…. சொன்னா புரிஞ்சுக்கோ….” 

“இதை என்கிட்ட சொல்றத போய் உங்க அப்பா கிட்ட சொல்லிடாத… அப்புறம் என்ன நடக்கும்னு உனக்கு தெரியும் தானே…. பேசாம அமைதியா இரு… அம்மா இதோ பாரு நான் சொன்னது தான் மாப்பிள்ளை மட்டும் வீட்டுக்கு வந்தா நான் அவன் மண்டையை உடைக்கிறது கன்ஃபார்ம்….”

“ஏய் ஏண்டி நீ வேற உயிரை வாங்குற… உங்க அப்பா வேற ஒரு பக்கம் பொண்ணு ரெடியா ரெடியானு கேட்டுட்டு இருக்காரு…. நீ ஒரு பக்கம் மாப்பிள்ளை மண்டையை உடைப்பேன்னு சொல்லிட்டு இருக்க….”

“என்ன நெனச்சிட்டு இருக்க நீ மரியாதையா புடவையை காட்டி ரெடியாகுற வழியப் பாரு…. உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தரேன்… நான் வர்றதுக்குள்ள புடவை கட்டி இருக்கணும்…” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார் ரேணுகா. வினிதா வேண்டா வெறுப்பாக அந்த புடவையை எடுத்து கட்ட ஆரம்பித்தாள். 

வெற்றிச்செல்வன் மீண்டும் அந்த மாப்பிள்ளைக்கு கால் பண்ணினான். அவர்கள் காரில் திருவெற்றியூருக்கு வந்து கொண்டிருந்தார்கள். ரஞ்சித் போனை எடுத்தான், “ஹலோ…” என்றதும் மறுபக்கம் இருந்த வெற்றி மாறன், “ஹலோ தம்பி நீங்க எங்க இருக்கீங்க….?”

“நீங்க யாருங்க…?”

“நான் தான் காலையில கால் பண்ணினேன்…. திருவெற்றியூரில் இருந்து பேசின மறந்துட்டீங்களா…?”

“ஆமாங்க உங்க நம்பர் ஞாபகம் இல்ல சொல்லுங்க…”

“என்ன சொல்லுங்கன்னு கேட்கிறீங்க… தம்பி எங்க இருக்கீங்க வீட்லயா இல்ல பொண்ணு பாக்க வந்துட்டு இருக்கீங்களா….?”

ரஞ்சித்தும், “நானும் என் அம்மாவும் அப்பாவும் பொண்ணு பாக்க தான் வந்துட்டு இருக்கேன்…” என்றான். “நான் அவ்வளவு சொல்லியுமா பொண்ணு பாக்க வர்றீங்க… சரி தம்பி அப்புறம் உங்களை காப்பாத்த கடவுள் தான் வரணும்… நான் வச்சிர்றேன்…” என்றவன் போனை வைத்து விட்டான். ரஞ்சித்துக்கு பயமாக இருந்தது மீண்டும் அந்த நம்பருக்கு போன் பண்ணினான் ஆனால் வெற்றிமாறன் எடுக்கவில்லை. 

“டேய் நான் சொன்னேன்ல மாப்பிள்ள வீட்டுக்காரங்க எப்படியும் வருவானுங்கனு… இப்ப நம்ம வேலையை காட்டலாம்… எல்லாரும் ரெடியா…?” என்றார். 

“மச்சான் டபுள் ரெடி… கல்லப் பாரு மாப்பிள்ளைளோட தலையில மட்டும் பட்டுச்சுது கன்ஃபார்ம் பத்து தையல் போடணும்….”

“டேய் என்னை கொலை கேஸ்ல மாட்டிவிட்டுடாதீங்கடா…. அவ்வளவு போர்ஸா எல்லாம் வேணாம் டா… அவங்கள மிரட்டினா போதும்….”

“விடு வெற்றி பார்த்துக்கொள்ளலாம்…” என்றவர்கள் கையில் கல்லுடன் தயாராக நின்றனர் முகத்தை மூடிக்கொண்டு. 

மாப்பிள்ளை விட்டாரின் கார் திருவொற்றியூரில் வந்தது. அவர்களுக்கு தயாளனின் வீட்டிற்குச் செல்லும் வழி தெரியாததால் அங்கே மரத்தின் கீழே நின்றிருந்தவர்களிடம் அழைத்து விவரம் கேட்டனர். அவர்கள் கேட்டது யாரிடமும் இல்லை வெற்றிமாறனிடம் தான். வெற்றிமாறனும் அவர்கள் தயாளன் வீட்டிற்கு செல்லும் வழியைச் சொன்னான். “ரொம்ப நன்றிப்பா…” என்று அவர்கள் காரை எடுத்துக் கொண்டு செல்லும் போது, வெற்றிமாறன் அவர்களிடம், “இதுக்கு எதுக்கு நன்றி… நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் அந்தப் பொண்ணை உங்க வீட்டு மருமகளாக்கிக்கிறதுக்கும் உங்களுக்கெல்லாம் பெரிய மனசு வேணும்…. எங்க ஊருப் பொண்ணை பத்திரமா பாத்துக்கங்க… இல்ல இல்ல உங்க பையனை கல்யாணத்துக்கு அப்புறம் பத்திரமா பாத்துக்கோங்க…” என்றான் வெற்றிமாறன். 

“என்னப்பா சொன்னீங்க புரியல…” என்று கேட்டார் ரஞ்சித்தின் தந்தை. ஆனால் ரஞ்சித்துக்கு அவன் சொன்னது நன்றாக புரிந்து விட்டது. “அது ஒண்ணுமில்லை ஐயா… பொண்ணை பத்திரமா பாத்துக்கங்க என்று சொல்ல வந்தேன் அவ்வளவுதான் நீங்க போங்க…” என்றான் வெற்றிமாறன். 

அவர்களும், “சரிங்க தம்பி…” என்று சொல்லி விட்டு அங்கிருந்து சிறிது தூரம் சென்றிருப்பார்கள். அப்போது எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் வந்தார்கள் வெற்றியின் நண்பர்கள். அந்தக் காரின் மீது கல்லை எறியத் தொடங்கினார்கள். திடீரென்று காரிற்கு கல்லை எறியவும் காரை நிறுத்தினார் டிரைவர். “ஐயா என்னங்கய்யா இது… காருக்கு கல்லால எறிஞ்சிட்டு இருக்கிறாங்க….”

“அதுதானே யாருன்னு தெரியலையே….” அப்போது டிரைவர் காரில் இருந்து இறங்கி, என்ன என்று கேட்டார். அதற்கு அவர்களும், “எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வினிதாவை பொண்ணு பாக்க வருவீங்க…. வினிதா சொல்லுச்சு… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தா கல்லால ஏறியச் சொல்லி… மரியாதையா போய்டுங்க… இல்ல உங்க உயிருக்கு உத்தரவாதமே இல்ல….” என்று அவர்கள் மீண்டும் கல்லை வீசத் தொடங்கினார்கள். 

உடனே டிரைவர் காருக்குள் அமர்ந்து, “ஐயா அந்த பொண்ணை பொண்ணு பாக்க போக வேணாம்னு சொல்லித்தான் இந்த கல்லால எறியிறாங்க ஐயா…. நம்ம இப்படியே திரும்பி போயிடலாம் அய்யா…”

“அப்பா அம்மா எனக்கு கொஞ்சம் கல்யாணத்துல இஷ்டம் இல்ல போயிடலாம் அப்பா…. இப்பவே கல்லால எறியிற ஊரு அப்புறம் கல்யாணம் ஆன பிறகு கத்தியால குத்த மாட்டாங்கன்னு என்னப்பா நிச்சயம்… அப்பா போயிடலாம்…” என்றான் ரஞ்சித். 

ரஞ்சித்தின் தாயாரும், “ஆமாங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்கன்னு ஒரு மரியாதை இல்லாம இப்படி கல்லல் எறியச் சொல்லியிருக்கு அந்த பொண்ணு…. அது எப்படிப்பட்ட பொண்ணா இருக்கும் பேசாம போயிடலாம் வாங்க உயிராவது மிச்சமாகும்….” என்று மூவரும் மாறி மாறி பேச, ரஞ்சித்தின் தந்தையும், “சரி போகலாம் வண்டியை திருப்பு…” என்று டிரைவரிடம் சொல்ல, அந்தக் காரை திருப்பிக் கொண்டு வந்த வழியே சென்று விட்டார்கள். அவர்கள் சென்றதைப் பார்த்து வெற்றியோடு நண்பர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

இங்கே வீட்டில் தயாளன் வாசலுக்கு வீட்டிற்குமாய் நடந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த சங்கரநாதன், “என்னப்பா அங்கேயும் இங்கே நடந்து கொண்டு இருக்க…?”

“இல்லப்பா மாப்பிள்னை வீட்டுக்காரங்க சரியா வந்துருவேன்னாங்க…. ஆனா டைம் ஆயிடுச்சு இன்னும் வரல அதான் யோசிச்சிட்டு இருக்கிறன்…”

“சரிப்பா வந்துடுவாங்க கார்ல தானே வராங்க…. வந்துடுவாங்க நீ யோசிக்காத வந்து உட்காரு….” என்றார்.

“ஆனா தேடணும் இல்லப்பா மனசுக்கு ஏதோ ஒரு மாதிரியா இருக்கு…. இருங்க போன் பண்ணி பார்க்கலாம்…” என்று தனது போனிலிருந்து ரஞ்சித்தின் தந்தைக்கு கால் பண்ணினார். தயாளன்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 34”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!