எல்லாரும் எப்ப பார்த்தாலும் அவளுக்கு மட்டுமே சப்போர்ட் பண்றீங்க.
நான் தான உங்க மகன் ஆனால் எப்ப பார்த்தாலும் அன்பு அன்பு அன்பு. எரிச்சல் தான் ஆகுது.
எனக்குனு எந்த நம்பிக்கையும் இல்லாமல் என்ன சுக்கு நூறா உடச்சிட்டிங்க.
இதற்கெல்லாம் முழு காரணம் தீபா மட்டுமே!…
ஆதரனின் இரு கன்னங்களிலும் அனைவரும் மாறி மாறி அடித்தார் போன்று இருந்தது… சங்கீதாவிற்காக பேசினான் எனில் அவனது வஞ்சகத்தை அவ்வாறாக திசை திருப்பி கூறியிருக்கிறான்…
வளர்ந்த பின்பும் அன்பினி மீது அவன் கோபம் அடங்காததற்கு காரணம் தீபாவின் சொற்பொழிவுகள் மட்டுமே..
அங்கே இருந்த யாவருக்கும் பதில் அளிக்காததால் பாஸ்கரன் திடுதிப்பென்று ஒரு முடிவெடுத்தார்.
அன்பரசி அண்ட் இன்பரசனை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்… போதும் இது வரைக்கும் என்னோட பொண்ணு கஷ்டப்பட்டது எல்லாம் போதும்…. எங்களோட கஷ்ட காலத்துல கூடவே இருந்த உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி… எப்ப எங்க மேல ஒரு வெறுப்பு தம்பிக்கு ஒரு அதுக்கு மேல நாங்க இங்க இருக்கறதுல எங்களுக்கு எந்த மதிப்பும் இல்லை… அதையும் தாண்டி உங்க விருப்பத்துக்காக நாங்க இங்க இருக்கனும்னா எங்களோட சுயமரியாதையை விட்டுட்டு இருக்கணும்னு அர்த்தம்… எந்த ஒரு பெத்தவங்களும் அப்படிப்பட்ட கீழ்த்தனமான முடிவு எடுக்க மாட்டாங்க.. என்னோட பொண்ணு இண்டிபெண்டன்டா வாழனும் இல்ல… எங்களுக்கே தெரியாம அவ ரெண்டு வருஷம் பார்ட் டைம் ஜாப் போய் இருக்கா… இது இந்த விஷயம் நம்ம கண்ணு முன்னாடி பார்த்ததனால தெரிய வந்துச்சு… இதைத்தாண்டி அவை எத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறார்களோ எங்களுக்கு தெரியாது… இதுக்கு மேலயும் என்னோட அன்புமா கஷ்டப்படுறத பாக்குற தெம்பு எங்களுக்கு கிடையாது… ஆதித் தம்பி நீங்க எதிர்பார்த்தது நல்லபடியா முடிய போகுதுப்பா… இனிமே இந்த வீட்டோட ராஜியம் எல்லாமே உன்னோடது தான்… ஏன் இனிமே உங்க பேரன்ட்ஸோட அன்பு முதல் பண வர எல்லாமே உனக்காக மட்டும் தான்… இனிமே நாங்க இந்த வீட்ல இருக்க மாட்டோம்… உனக்கு தொந்தரவா நாங்க இருக்க மாட்டோம்… என்னோட அன்பினி இனிமே ஓசி சாப்பாடு சாப்பிடற பொண்ணு இல்ல… எங்க வீட்ல எங்களோட உழைப்பில சாப்பிடுற பொண்ணுனு காட்ட போறோம்…
பாஸ்கரனின் தற்போதைய முடிவு அக்குடும்பத்தையே ஒரு ஆட்டம் ஆட்டிவிட்டது… அன்பினி இதை அறிந்ததுதான்… தனது தந்தை எப்படியும் இந்த முடிவை எடுத்து விடுவாரென யூகித்து சரியான சமயத்தில் ஆதிரனை மாட்டி விட்டாள்…
ஆதிரனும் பாஸ்கரனின் முடிவை எதிர்பார்க்கவில்லை..
இப்படி எல்லாம் பண்ணாதீங்க பா.. ஶ்ரீநீங்களாவது சொல்லி புரியவைங்களே…
என்ன புரிய வைக்கணும் ஆதி…. இதுக்கு மேல நீ தான் எங்களுக்கு புரிய வைக்கணும்….
அன்பரசி யின் ஆதங்கமாக கேள்விகள் அவனைத் துளைக்க தொடங்கியது..
அம்மா அது சும்மா நீங்க சின்ன வயசுல இருந்து அவ மேலையும் அன்பு அதிகமா கொடுத்ததுனால எனக்கு ஏற்பட்ட வெறுப்பு மட்டும்தான் மா…. ஸ்ரீமா நீங்க இல்லைனா நான் எப்படி சாப்பிடுவேன்.. நீங்க தானே எனக்கு ஊட்டி விடுவீங்க… பாஸ்கரன் பா நீங்க தான நான் தூங்குற வரைக்கும் கதை சொல்லுவீங்க… இப்ப நீங்க போறேன்னு சொன்னா எனக்கு இதெல்லாம் யாரு பண்ணுவா…
இது எல்லாம் யாரு பண்ணுமான்னு மட்டும் நீ யோசிக்கிறியேடா…
அவங்களோட பொண்ணு இங்க கஷ்டப்படுறான்னு அந்த பேரண்ட்ஸ் யோசிப்பாங்கனு யோசிக்க மாட்டியா?….
இன்பரசன் தனது மகனிடம் மென்மையாக தனது கேள்வியை தொடங்கினார்…
சிறுவயதிலிருந்தே அன்பினியின் மீது ஆதிரனுக்கு கோபம் வருவதற்கான முக்கிய காரணம் தாங்கள் தான் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள் இருவரும்… அதனால் இதுவரை ஆதங்கமாக எழும்பிய கேள்விகள் அன்பாக கரைய தொடங்கியது…
அவன் தங்களிடம் எதிர்பார்த்த அன்பின் விளைவு தான் அன்பினியின் மீது ஏற்பட்ட வெறுப்பிற்கு உச்சகட்ட காரணம் என்பதை எண்ணுகையில் இருவருக்கும் பாரமாக தான் இருந்தது…
அன்பரசியும் இன்பரசனும் அன்பினியின் மீது பிறப்பின் போது ஏற்பட்ட ஒரு ஈர்ப்பின் காரணமாக தான் அன்பினி என்ற பெயரை அன்பரசி வைத்தாள்.
நாளுக்கு நாள் அவள் மீது ஏற்பட்ட அன்பின் விளைவால் ஆதிரனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. தன் பிள்ளைக்கு இப்படி ஒரு ஏக்கம் இருக்கும் என்பதே இவர்கள் இருவரும் இப்போதுதான் அறிந்து கொள்கின்றனர்.. இதில் முழு தவறும் அவன் மீதுதான் என்று சொல்லும் அளவிற்கு இவ்விருவரும் கல். நெஞ்சுக்காரர்களும் அல்ல..
ஆனால் பாஸ்கரனை தடுத்துவிடும் எண்ணத்திலும் இவர்கள் இல்லை..
தடுத்தாலும் பாஸ்கரன் எடுத்த முடிவை மாற்றிக் கொள்வார் என்பது இவர்களுக்கு தயக்கம் தான் ஏனெனில் பாதிக்கப்பட்டது அவரது குழந்தை. பாதிப்பு ஏற்படுத்தியது காரணம் ஆதிய எனினும் அவனை அந்த சூழ்நிலைக்கு தள்ளியது தாங்கள் இருவரும் தான்… இப்போது அவரை இறுக்கச் சொல்ல வேண்டுமானால் அது அன்பினியால் மட்டும் தான் முடியும்.
மடையை உடைத்துச் செல்லும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் அணை எங்கு உள்ளது…
சம்யோஜிதமாக யோசித்த சங்கீதா தான் இதற்கு ஒரு தெளிவு கொடுத்தாள்.
ஆதி தம்பி உன் பாஸ்கர் அப்பா இந்த வீட்ட வெளியே விட்டு வெளியே போகக்கூடாதுன்னா அது அன்பினியால மட்டும் தான் முடியும்.. தயவு செஞ்சு உன்னோட வேண்டா வெறுப்பை எடுத்து ஒரு ஓரமா வச்சுட்டு அவர்கிட்ட சாரி கேட்டுட்டு இங்கையே இருக்க சொல்லுப்பா.
இல்லைனா இந்த வீடே உரு குலஞ்சி போயிடும்.. உன்னோட ஒருத்தரோட வெறுப்புனால வீட்டோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோறது எனக்கு புடிக்கல ஆதி… சங்கீதாவும் அம்மா வீட்டில் ஒருவள்தான்.. அதுவும் திக்குத் தெரியாமல் திணறும் சமயங்களில் உதவும் அவளது தெளிவான புத்தி கூர்மை குடும்பத்தினர் அவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உரித்தானது….
சிறிது நேரம் யோசித்தவன் வேறு வழி இல்லை என்பதனால் அன்பினியிடம் சென்று மண்டியிட்டு மன்னிப்பும் கேட்டான்….
சாரி அன்பு… மண்டியிட்டவன் கேட்டுவிட்டு அப்பாவ இங்க இருந்து போக வேணாம்னு சொல்லுமா ப்ளீஸ்.. கை கூப்பி அவளிடம் கெஞ்சினான்.
ஆதிரன் என்னதான் தவறு செய்தாலும் அன்பினிக்கு ஆதிரன் மீது அலாதி பிரியம் அல்லவா!. அவனின் இந்த பதைபதைப்பு அவளுக்கு சந்தோஷத்தை கொடுப்பதற்கு பதிலாக கவலையை கொடுத்தது
தவறு செய்து விட்டோமா என்று அவள் சிந்தித்து விட்டு தனது தந்தையிடமும் அவனுக்காக பேசிப் பார்த்தாள்.
டாடி ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் ஆங்கிரி. ஆதியோட கோவம் கரெக்டாக தான இருக்கு. நீங்க என்ன தாண்டி ஆதிமேல ரொம்ப பாச வச்சா எனக்கு எப்படி கோவம் வருமா அது மாதிரி தானே அவனுக்கு கோவம் வந்திருக்கு…
சோ அவ மேல எனக்கு தப்பு இருக்கிற மாதிரி தோணல டாடி… அது மட்டும் இல்லாம அதிக ஒரே ஒரு மனுஷனுக்காக அன்பரசிமா இன்பரசன் பா சங்கீதா அக்கா எல்லாத்தையும் கஷ்டப்படுத்தனுமா?. உங்க தொழில் கூட இவங்களோட கணக்கில் தானே இருக்கு..
.
எப்படிமா ஆதி உன்னை இப்படி எல்லாம் பேசி இருக்கான் இருந்தாலும் நீ அவனுக்காக சப்போர்ட் பண்ற..
ஏன்னா அவன் என்னோட ஃப்ரண்டுப்பா… நீங்க நினைக்கிற மாதிரி அவனும் நானும் ஃபிரண்ட்ஸ் எல்லாம் இல்லாம இல்ல அவன் எனக்கு நிறைய சமயத்துல உதவி செஞ்சிருக்கான்…
நீங்களே நிறைய டைம் அது எனக்கு சொல்லி இருக்கீங்களே என்னப்பா.
எனக்கு நோட்ஸ் வாங்கறதெல்லாம் இஷ்டமே இல்லன்னு சொன்னப்ப கூட அவன் எனக்காக நீ வாங்கி படிச்சா தான் நல்ல மார்க் ஸ்கோர் பண்ண முடியும்னு உங்ககிட்ட பேசி இருக்கானே.. என் எக்ஸாம் டைம்ல கூட எனக்காக ஹெல்ப் பண்ணலாம்பா… அவனுடைய ஈகோ காக நம்மளோட நிம்மதியை கெடுக்க வேணாம்பா..
முடிவா நீ என்னம்மா சொல்ல வர..
நம்ம இந்த வீட்டை விட்டு போக வேண்டாம்னு சொல்லவரேன்பா…
என்னமோ பண்ணுமா நான் உன்னோட நிம்மதிக்காக யோசித்தேன் நீ எல்லாரோட நிம்மதியாக யோசிக்கிற.
இந்த வயசுலயே உனக்கு இவ்வளவு மெச்சூரிட்டியா.
தனது தந்தையை சமாதானம் செய்து விட்டதை ஆதிரனுக்கு சக்ஸஸ் என்ற கட்டைவிரலை கை குறையீட்டை கொடுத்து தெரிவித்தால் கைகளில்.
அதை பார்த்த பின்பு தான் அங்கு வீட்டில் மத்த அனைவருக்கும் சிரிப்பு..
என்ன இருந்தாலும் முன்பிருந்தது போல அந்த வீடு இல்லாமல் மாறத் தொடங்கியது… ஏதாவது சொல்லி விட்டு விடுவார்களோ என்ற பயத்திலே அன்பின் வாழ தொடங்கினாள்..
ஆதியின் ஏதாவது ஒரு சொல் என்னை பாதித்தால் நான் பாதிப்பதை எனது பெற்றோர்களை பாதித்து அது ஆதியின் பெற்றோரை பாதிக்கிறது என்பதை நன்கு கவனித்து விட்டவள் அவனிடம் பேசுவதை தவிர்த்து விட்டாள்.
சங்கீதாவிடம் வம்பளக்காமலும் சமையலறையில் அவளுக்கு கூடுதல் உதவியாக இருப்பதிலும் அவள் மூழ்கிப் போனாள்…
அன்பரசியும் இன்பரசனும் கூட இப்போதெல்லாம் ஆதியனிடம் நெருங்கி பழகிக் கொண்டிருந்தார்கள்… அவனுக்கு பிடித்தவர்களை பார்த்து பார்த்து செய்ய தயாரானார்கள்…. அவனது முக்கிய ஆசையே வீட்டின் முன்புற தோட்டத்தில் மணி பிளான்ட் செடியை வரவேற்பு சரியாக வளர வைக்க வேண்டும் என்பது…
அடுத்த நாளே இன்பரசன் அதனை வாங்கி வந்து அவன் கையால் நடவைத்து அது புதியதாக துளிர் விட்டதும் அவனுக்கு கண்களைக் கட்டி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி விட்டார்கள்..
இந்த புறம் பாஸ்கரனும் ஸ்ரீஜாவும் அன்பினிக்கு விருப்பமான மண்டேலா ஆர்டின் வகுப்பிற்கு அனுப்பி வைத்தேன் அவளை சந்தோசப்படுத்தினார்கள்…
பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்கியது…
இருவரும் தேர்வை நல்லபடியாக படித்து எழுதினார்கள்….தன் பிரதிபலன் ஆதிரன் முதல் மதிப்பெண் பெற்று பள்ளியையே பெருமை படுத்தினான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அன்பினி இரண்டாவது மதிப்பெண் எடுத்திருந்தாள்…
செந்தனலா?… மழையா?..
கௌசல்யா வேல்முருகன் 💝