என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 35

4.8
(12)

அத்தியாயம் : 35

தயாளன் ரஞ்சித்தின் தந்தைக்கு கால் பண்ணினார். ஆனால் ரஞ்சித்தின் தந்தையோ போனை எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்தார் தயாளன் ஆனால் போனை அவர் எடுக்கவே இல்லை. “என்னப்பா போன் எடுத்தாங்களா…?” என்று கேட்டார் சங்கரநாதன். அதற்கு தயாளன், “இல்லப்பா இன்னும் போன் எடுக்கல….”

“ஒருவேளை வழியில வந்துகிட்டு இருப்பாங்களாக்கும்… கொஞ்ச நேரம் பார்க்கலாம்…” என்று சங்கர நாதன் சொன்னதும், “சரி அப்பா பார்க்கலாம்….” என்று அமைதியாக இருந்தார். ஆனால் அரை மணி நேரம்மானது அவர்கள் வந்த பாடும் இல்லை இவர்களுக்கு ஃபோன் பண்ணவும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார். அங்கே வந்த ரேணுகா, “என்னங்க என்ன ஆச்சு இன்னும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரலையா….?” என்று கேட்டார். அதற்கு தயாளனும், “இல்ல ரேணுகா… இன்னும் வரல… நான் போன் பண்ணா ஆன்சர் பண்ணல….”

“என்னங்க இது இப்படி சொன்னா எப்படி….? அவங்க வராங்கலாமா இல்லையாம்மா…?” என்று கேட்டார். அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே தரகர் தயாளனுக்கு கால் பண்ணினார். “கொஞ்சம் இரு இந்தா தரகர் கால் பண்றாரு என்னன்னு கேட்கலாம்…” என்றவர் போனை ஆன்சர் பண்ண தரகரோ, “ஐயா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இந்த சம்மந்தம் வேணாம்னு சொல்லிட்டாங்க ஐயா….”

“என்ன தரகரே சொல்றீங்க… இப்படி சொன்னா எப்படி…?”

“என்னன்னு தெரியலையா… எனக்கு கால் பண்ணினாங்க எங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிக்கல… நாங்க பொண்ணு பாக்க வரலன்னு சொல்லிட்ட சொல்லி என்கிட்ட சொன்னாங்க ஐயா…. என்ன மன்னிச்சிடுங்க ஐயா…”

“இல்ல இல்ல இதுக்கு நீங்க எதுக்கு தரகரே மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு… ஆனா என்ன அவங்க எங்ககிட்டயே நேரடியா சொல்லி இருக்கலாம் சரி பரவால்ல…” என்று தரகரிடம் பேசிவிட்டு ஃபோனை வைத்த தயாளன் சங்கரநாதனை பார்த்தார். “என்ன ஆச்சு தயாளா….? தரகர் என்ன சொன்னாரு….?”

“அது வந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு இந்த சம்பந்தம் பிடிக்கல அதனால நாங்க பொண்ணு பாக்க வரலைன்னு சொல்லிட்டாங்களாம் அப்பா…”

“அது எப்படிப்பா இப்படி பொண்ணு பாக்க வர்றேன்னு சொல்லிட்டு இப்படி சொல்லலாம் அவங்க…?” என்றான் தமிழ்ச்செல்வன். 

“என்ன பண்றது தமிழு… என்னதான் இருந்தாலும் மாப்ள வீட்டுக்காரங்க இல்ல அதான் அவங்க அப்படித்தான் பண்ணுவாங்க….”

“அப்பா அதுக்கு முன்னாடியே சொல்ல வேண்டியது தானே… இவ்வளவு நேரம் அமைதியா இருந்துட்டு இப்ப வந்து தரகர் கிட்ட சொல்லி இருக்காங்க… ஒரு மரியாதை இல்லாத மாதிரி நடந்துக்கிட்டாங்கப்பா… வாங்க அப்பா அவங்ககிட்ட என்னன்னு கேட்டுட்டு வந்துடலாம்…” என்று குதித்தான் தமிழ்ச்செல்வன். 

அறையினுள் இருந்த வினிதாவிற்கு இவர்கள் பேசிக்கொள்வது கேட்க சட்டென்று கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாரள். அவளைப் பார்த்த ரேணுகா. “வினி நீ எதுக்காக இப்போ வெளியில வந்த உள்ள போ….” என்றார். அவளோ, “நான் எதுக்குமா போகணும்…? என்ன பத்தி தானே பேசுறீங்க அப்ப நான் இங்க இருப்பேன்…. என்னாச்சு அண்ணா மாப்ள வரலையாமா…?” என்று கேட்டாள். 

அதற்கு தமிழ்ச்செல்வன், “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இந்த சம்மந்தம் பிடிக்கலைன்னு அவங்க தரகர் கிட்ட சொல்லி அனுப்பி இருக்காங்க….”

‘ஓஓஓஓ அப்போ மாமா ஏதோ வேலை பார்த்துடுச்சு…’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டவள் வெளியே, “என்ன அண்ணா சொல்ற….? மாப்பிள்ளைக்கு என்னைப் புடிக்கலையா…. அப்போ என்ன இதுக்கு என்ன அவங்க பொண்ணு பாக்க வரோம்ன்னு சொல்லி சொன்னாங்க…. அப்பா என்னப்பா இதெல்லாம்…. உங்களை நம்பி தானே நான் பேசாம இருந்தேன்…. இப்போ இப்படி சொன்னா ஊர்ல நாளைக்கு என்னைப் பத்தி என்ன பேச்சு பேசுவாங்க…. வினிதாவை பார்க்க வந்த மாப்பிள்ளை வந்து வீட்டுக்கு வராமல் ஓடிப் போயிட்டான்னு சொல்லுவாங்க…. என்னப்பா பேசாம அமைதியா இருக்கீங்க…. ஏதாவது பேசுங்கப்பா…” என்றாள் வினிதா. 

“வினி என்ன பழக்கம் இது அப்பாவை எதிர்த்து பேசறது…?” என்று ரேணுகா வினிதாவை அதட்டினார்.  

“அம்மா நான் ஒன்னும் அப்பாவை எதிர்த்துப் பேசல… நடந்ததை தான் சொல்றேன்…. ஊர்ல நாளைக்கு என்ன பத்தி எதுவும் பேச மாட்டாங்களா என்ன…. இப்படித்தான் போன தடவை நம்ம சுமதி அக்காவ பொண்ணு பாக்க வந்தாங்க… மாப்பிள்ளை வேணான்னு சொல்லிட்டு போயிட்டான்… அதுக்கு அப்புறம் ஊர்ல என்ன பேச்சு பேசினாங்க… சுமதிக்கு என்ன குறையோ ஏதோ தெரியல அதான் மாப்பிள்ளை பாக்க வந்தவங்க சொல்லாம கொள்ளாம போயிட்டாங்கன்னு சொல்லி பேசினாங்களா இல்லையா…? அப்படி நாளைக்கு எனக்கு பேச மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்….?”

இதைக் கேட்ட ராஜேஸ்வரி,”வினி சின்ன பொண்ணு மாதிரி பேசு பெரிய பேச்சு எல்லாம் பேசாத போ…” என்றார். 

“எப்படி எப்படி சின்ன பொண்ணா…? அது எப்படி எனக்கு கல்யாணம் பார்க்கும்போது மட்டும் நான் பெரிய பொண்ணு…. நான் எதுவும் பேசினா நான் சின்ன பொண்ணு இல்ல… அப்பா எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்… நீங்க அத பத்தி தயவு செய்து யோசிக்க வேணாம்…. உங்களுக்கு அப்படி கல்யாணம் பண்ணி வைக்கணும்னா இதோ இங்க நிக்குறானே தடிமாடு தமிழ் இவனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க…” என்று சொல்லிவிட்டு அவள் அறைக்குள் சென்று விட்டாள். 

‘அடிப்பாவி மகளே… என் வாழ்க்கையில் இப்படி தீய பத்த வச்சுட்டு போறியே உன்ன இரு பார்த்துக்கொள்றேன்….’ என்று மனதுக்குள் அவளைத் திட்டிய தமிழ்ச்செல்வன். 

“அப்பா எனக்கும் இப்போதைக்கு கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல… வினியை வச்சுட்டு நான் பண்றது சரியில்ல… கொஞ்ச நாள் பார்ப்போம் இப்போதைக்கு இதை அப்படியே விட்ருங்க…” என்றான். எல்லாரும் பேசியதை கேட்டுக் கொண்டு இருந்த தயாளன், “சரி… கொஞ்ச நாளைக்கு எதுவும் பேச வேணாம்…. முதல்ல வினி காலேஜ் முடிக்கட்டும்… அதுக்கு அப்புறம் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்… அம்மா, உனக்கும் சேர்த்து தான் சொல்றேன் கொஞ்ச நாளைக்கு அமைதியா இருங்க… வினிதா காலேஜ் முடிக்கட்டு அப்புறம் மத்ததெல்லாம் பாத்துக்கலாம்…. ஆனா இந்த மாப்பிள்ளை எதுக்கு வேணாம்னு போய்ட்டான்றதுக்கு காரணம் தான் எனக்கு தெரியல….”

“அப்பா விடுங்கப்பா அவனுக்கு வினி கூட வாழ கொடுத்து வைக்கல… யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ…” என்றான் தமிழ்ச்செல்வன். 

“நீ வேணும்னா பாரு என் பேத்திய கல்யாணம் பண்ணிக்க மாப்பிள்ளை க்யூல வந்து நிப்பாங்க….”

“ஆமா…ஆமா உன் பேத்திக்கு க்யூல தான் வந்து நிக்க போறாங்க… ரொம்ப நினைப்புத்தான் பாட்டி உனக்கு….”

“ஏன்டா என் பேத்தி என்ன அழகு இல்லையா அறிவில்லையா…. அவள போல பொண்ணு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்…” 

“இதோ பாரு பாட்டி என்ன ஓவரா அவளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்க… இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன். அட போடா கூறுகெட்டவனே….” என்று சொல்லி தமிழைக் கொட்டி விட்டு எழுந்து சென்றார் ராஜேஸ்வரி பாட்டி. என்னடா இது எல்லாருக்கும் என் தலையிலேயே கொட்டுறது வேலையா போச்சு… தமிழு இங்க இருந்த நீ கொட்டு வாங்கியே செத்துருவ எஸ்கேப் ஆயிடு….’ என்று வெளியே செல்ல வந்தவனை நிறுத்தினாள் வினிதா. 

‘ஐயையோ குட்டிச்சாத்தான் வந்திருச்சு… என்னென்ன கேட்க போறான்னு தெரியலையே…’ என மனதுக்குள் நினைத்தவன், “சொல்லுடி என்ன…?” என்றான் வெளியே. 

“அண்ணே போற வழியில என்னை இறக்கி விட்டுரு….”

“எங்க போகப் போற…”

“எங்கே போறேன்னு சொல்லணுமா பேசாம வா….” என்று அவனுடன் சென்று விட்டாள் வினிதா. 

ரேணுகாவும் தயாளினிடம், “நீங்க யோசிக்காதீங்க…. அவளுக்குனு பிறந்தவன் அவளைத் தேடி வருவான் நீங்க கவலைப்படாதீங்க…” என்றார் தயாளனிடம். அவரும், “அதுவும் சரிதான் ரேணு பார்க்கலாம் அவளுக்கு உரியவன் எப்போ வர்றான்னு…” என்றவர் அங்கிருந்து எழுந்து செல்ல ரேணுகாவும் தனது வேலையை பார்க்க சமையல் அறைக்குச் சென்றார்.

ராகவியும் வைதேகியும் இனிமேல் யாருக்கும் பயப்படாமல் ரேணுகாவிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டனர். அதைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்க அங்கே வந்தார் சாரதா பாட்டி. 

“என்ன மருமகள்களா பேச்சு பலமா இருக்கு… அப்படி என்ன பேசிட்டு இருக்கீங்க….”

“அய்யய்யோ அத்தை அது ஒன்னும் இல்ல அத்தை…. சும்மாதான் பேசிட்டு இருந்தோம்….”

“அது சரி என்னோட பேரு அடிபட்டிச்சு என்ன விஷயம்…. சும்மா சொல்லுங்கமா….” என்றார். 

“அத்தை அது வந்து….”

“என்ன வந்து போயிட்டு எதா இருந்தாலும் சொல்லுங்க…”

“இல்ல அத்த ரேணுவ நேத்து கோயிலை பார்த்தம்…”

“அப்படியா ராகவி… என் பொண்ணு எப்படி இருக்கா…? நல்லா இருக்காளா…? உங்க கூட பேசினாளா…..?” என்று கேட்டார் சாரதா. 

“ஆமா அத்தை நேத்து எதேச்சையாக தான் கோயிலை பார்த்தோம் பேசினோம்…. நல்லா இருக்கா ஆனா என்ன நம்ம குடும்பத்தோட வந்து சேரலையே… ஒன்னா இருக்க முடியலனு தான் ரொம்ப கவலைப்பட்டா….”

“என்ன செய்றது வைதேகி…. எல்லாம் விதி…. எனக்கும் என் பொண்ணு என் கூட இருக்கணும்னு தான் ஆசை அதுக்கு நாம என்ன பண்றது…?” 

“ஏன் அத்த நான் கேட்கிறேன்னு என்னை தப்பா எடுத்துக்காதீங்க… நம்ம ஏன் ரேணு கூட பேசக் கூடாது….?” என்று கேட்டார் ராகவி. 

“நல்லா கேட்ட போ… நம்ம மட்டும் பேசுறத உன் புருஷனும் ரேணு புருஷனும் பாக்கணும் அப்புறம் சுந்தரம் என்ன பண்ணுவான்னு தெரியாது….”

“ஏன் அத்தை அவங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனைனா நம்ம என்ன பண்றது…. நம்ம பொண்ணுங்க பேசிக்கலாம் தானே….”

“வைதேகி உனக்கு என்ன ஆச்சு…? எதுக்கு இப்போ ரெண்டு பேரும் இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க…. என்ன பயம் விட்டு போச்சா…?”

“ஐயோ அத்தை பயம் எல்லாம் இல்ல…. எத்தனை நாளைக்கு தான் இந்த பிரிவு…. இதனால ரெண்டு குடும்பத்துக்கும் மனசு கஷ்டம் தானே…. அதுதான் நம்மளாவது பேசலாமேன்னு பார்த்தோம்….”

“ராகவி… வைதேகி… நான் சொல்றத கேட்டுக்கோங்க…. நீங்க ரெண்டு பேரும் உங்க புருஷனையும்ம் சம்மதிக்காம நீங்க அந்த குடும்பத்தோட பேசினீங்களா இருந்தா ஏதாவது பிரச்சனை வந்துரும்…. எதுக்கும் பார்த்து நடந்துக்கோங்க ரெண்டு பேரும்….” என்று சொல்லி. விட்டு அவர் வெளியே சென்றார். 

“என்ன அக்கா அத்தை இப்படி சொல்லிட்டு போறாங்க….”

“விடு வைதேகி அத்தை. அவங்களுக்கு பயப்படுறாங்க போல இருக்கு…. ஆனா நம்ம எதுக்கு பயப்படனும்… நம்ம ரேணுவ பார்க்குற இடத்துல பேசலாம் சரியா…. வெற்றி சொன்ன மாதிரி பேசித்தான் பாப்போமே என்ன நடக்குதுன்னு…. அதுக்கப்புறம் நடக்கிறத பாத்து நம்ம முடிவு எடுக்கலாம்….”

“சரிக்கா நீங்க சொன்னா சரிதான்….”

“அட போடி ரொம்ப ஐஸ் வைக்காதே… வா வேலையை பாக்கலாம்…. அப்புறம் நைட்டுக்கு சாப்பாடு செய்ய லேட்டாயிரும்…” “அதுவும் சரிதான் அக்கா….” என்ற இருவரும் பேசிக் கொண்டு வேலையை தொடங்கினார்கள்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 35”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!