லீலா அவனை முறைக்க, அவள் விழிகளை துடைத்து விட்டு “வா கேண்டின்ல போய் ஏதாவது சாப்பிடலாம்.. அப்புறம் உன்னை வீட்டில் ட்ராப் பண்றேன்” என்றவனை புரியாமல் பார்த்த லீலா,
“நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன்.. நீங்க என்ன இப்புடி அசாலாடடா பேசுறீங்க” என கோவப்பட,
“இதோ பார் லீலா நடந்தது தப்பு தான். அதை மாத்த முடியாது.. ஆனா சரி பண்ண முடியும்.. அப்புறம் எதற்கு இந்த கவலையும் கண்ணீரும்.. நாமா கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றதும், “எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லை” என்றாள் வேகமாக
“நம்மளை விட வசதி கம்மி எப்புடி இவனை கல்யாணம் பண்றதுன்னு தயக்கமா” என கேட்டான் ராம்..
நிமிர்ந்து அவனை முறைத்தவள், “என்ன பத்தி நீங்க என்னை நினைச்சிட்டு இருக்கீங்க”என கோவமாக கேட்டவள்,
“உங்களுக்கு தான் என்னை பத்தி எப்பவும் நல்ல அபிப்ராயம் இருந்தது இல்லையே” என விரக்தியானவள்,
“ஒரு வேளை அதனால் தான் என்கிட்ட நீங்க அப்புடி நடந்துக்கிட்டீங்களா ராம்” என தழுதழுத்த குரலில்கேட்க,
அவளை முறைத்தவன் “லூசு மாதிரி பேசாத லீலா.. நான் எப்பவும் உன்னை தப்பா நினைச்சது இல்லை.. அப்புடி எல்லாம் நினைக்கிறவனா இருந்தா என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு உன்கிட்ட கெஞ்சிட்டு இருப்பேன்னா” என கோவப்பட,
“படுத்துறா” என பெருமூச்சு ஒன்றை விட்டவன் “வா கேண்டின் போகலாம்” என எழுந்து நிற்க,
“கேண்டின்ல்ல வடை பஜ்ஜி சாப்பிடவா உங்களை கூப்பிட்டேன்” அதற்கும் கோவம்,
“வேற என்னடி பண்றது” ராம் கேட்க,
“டாக்டரை பார்க்க போகலாம் வாங்க” என்றாள்..
“ஓ.. காட் திரும்ப ஆரம்பிக்காத லீலா நாமா இப்ப தானே பேசி முடிச்சோம்”என இம்முறை கோவமே வந்து விட்டது அவனுக்கு
“நீங்க நினைக்கிறது நடக்கவே நடக்காது ராம்.. எங்கம்மா ஒத்துக்க மாட்டாங்க.. அவங்களுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சுது.. உங்களையும் என்னையும் சும்மா விட மாட்டாங்க.. இந்த கல்யாணம் நடக்காது” என பயத்தோடு பேசியவளை தடுத்தவன்,
“அது என் பிரச்சினை நான் பார்த்துக்கிறேன்.. நீ எதையும் போட்டு குழப்பிக்காம இரு.. நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும்” என உறுதியாக சொன்னான்..
லீலாவுக்கு மறுக்க முடியவில்லை.. ராம் மீது வருத்தம் கோவம் நிறைய இருக்கின்றது.. அதே நேரம் குழந்தையை கலைக்கவும் மனமில்லை.. குழந்தையை கலைத்து விட்டு வேறு திருமணம் அதை பற்றியும் சத்தியமாக நினைக்க முடியவில்லை.. சாலா இப்புடியே இருக்கவும் விட போவதில்லை. இது தான் கடவுள் சித்தம் போல என தோன்ற சம்மதம் என்னும் விதமாக தலை அசைத்தாள்…
“குட் கேர்ள்” என கன்னம் தட்ட போக, முகத்தை பின் இழுத்து கொண்டாள்..
“கல்யாணத்திற்கு மட்டும் தான் சரி சொல்லி இருக்கேன்.. அதுவும் குழந்தைக்காக மட்டும் தான்.. நீங்க எந்த அட்வான்டேஜ்ஜும் எடுக்க கூடாது. உங்க விரல் என்மேல்ல பட கூடாது இந்த கண்டிசனுக்கு நீங்க ஓகேன்னா தான் கல்யாணம் என்றதும்..
‘ம்க்கும் கிழிஞ்சது இப்ப இவ மேல்ல எனக்கு இருக்க லவ்வுக்கு டச் பண்ணாமா தள்ளி இருக்கிற கண்டிஷனை எல்லாம் கடைப்பிடிக்க முடியுமா? என்னை சோதனைடா இது எல்லாம் என தனக்கு தானே மனதிற்குள் புலம்பிய வண்ணம் நிற்க,
ஹலோ என்ன சரியா அவன் முகத்திற்கு முன்பு கையை ஆட்டி லீலா கேட்க,
“சரிங்க மகாராணி என் கை விரல் உங்க மேல்ல படாது என்றான் இப்போதைக்கு, இப்ப வாங்க சாப்பிட்டு டாக்டரை பார்க்கலாம்” என்றதும் சந்தேகமாக லீலா அவனை பார்க்க,
“செக் அப்புக்குமா” என்றான்..
“குழந்தை மேல்ல ரொம்ப தான் அக்கறை” என்றாள் லீலா சலித்து கொண்டே,
“குழந்தையை விட அதிகமாக உன் மேல்ல இருக்கு சொன்னா நம்புவியா?” என ராம் கேட்க,
முறைத்தவள்,”இப்ப எல்லாம் வாயை திறந்தாலே பொய் தான்” என முணுமுணுத்து கொண்டே லீலா முன்னே செல்ல சின்ன புன்னகையுடன் அவளை பின் தொடர்ந்தான் ராம்..
அவளை சாப்பிட வைத்து அதன் பின் டாக்டரிடம் அழைத்து சென்று உடல்நிலையை பரிசோதித்து விட்டு அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை அவள் கையில் கொடுத்தவன்,
“டாக்டர் சொன்னது எல்லாம் கேட்டுச்சா, கரெக்ட் டைம்க்கு சாப்பிடு, மாத்திரை எல்லாம் சரியா எடுத்துக்கோ சரியா, எந்தெந்த மாத்திரை எந்த டைம் சாப்பிடனும் சிஸ்டர் சொன்னது நியாபகம் இருக்குல்ல.. ஏதும் மறந்துட்டா எனக்கு கால் பண்ணு ஓகே வா.. எல்லாம் கல்யாணம் ஆகுற வரை தான் இந்த கஷ்டம் உனக்கு, அதற்கு அப்புறம் இதையும் நானே பார்த்துக்கிறேன்” என்றான் கையிலிருந்த மாத்திரைகளை காண்பித்து,
“ரொம்பதான்” என்றபடி முறைத்தாள்..
“முறைக்கும் போது ரொம்ப அழகா இருக்க” என்றான்.. மீண்டும் முறைப்பு அவளிடம், “ராம் அட்வான்டேஜ் எடுக்காதீங்க” என பல்லை கடிக்க,
“அழகா இருக்கேன் சொல்றது எல்லாம் கூடவா உங்க ஊர்ல அட்வான்டேஜ்” ராம் கேட்க,
“ஆமா” என்றாள் லீலா முறைத்தபடி..
சரி தான் என் தலையில் அடித்து கொண்டவன் வா உன்னை வீட்டில் ட்ராப் பண்றேன் என அழைக்க,
இல்ல வேண்டாம் என்றாள்..
ஏன்?
நீங்க போங்க நான் ஆட்டோவில் போய்க்கிறேன் என்றாள்..
ஏன்?
உங்க கூட ஒன்னா வர பிடிக்கலை..
என் கூட வாழ்க்கை ஃபுல்லா ஒன்னா வரவே சம்மதிச்சிட்ட வண்டியில் வரதுக்கு என்ன?
“இல்ல வேணாம்”
“லில்லி” என அதட்ட
“யாராவது பார்த்துட்டா அதான்” லீலா பயப்பட,
“பார்க்கட்டும் அதுவும் நல்லதுக்கு தான், பார்த்ததுட்டு போய் உன் அம்மாக்கிட்ட சொல்லட்டும் நமக்கு வசதி தானே” என்ற ராமை இப்போதும் லீலா முறைத்தாள்..
“மாசம இருக்க பொண்ணு ஆட்டோவில் போக கூடாது வா” என அவளை அதட்டி வண்டியில் ஏற்றி கொண்டான்..
கொஞ்ச தூரம் சென்று இருக்க “ராம் கொஞ்சம் வண்டியை ஸ்டாப் பண்ணுங்க” என்றாள் லீலா.. அவள் குரலில் இருந்த அவசரமே ராமையும் பதட்டம் கொள்ள வைக்க, வண்டியை ஓரமாக நிறுத்தியவன்,
“என்னம்மா என்னாச்சு?” பதட்டமாக கேட்க,
“வாமிட் வர போல இருக்கு” என்றாள் நெஞ்சை தடவி கொண்டே,
“வாமிட் வர போல இருக்கா, அச்சோ வா ஹாஸ்பிடல் போகலாம்” என வண்டியை திருப்ப,
தலையில் அடித்து கொண்டவள் சுற்றிலும் எதையோ தேட அவள் கண்ணில் ஒரு பெட்டி கடை பட்டது..
வேகமாக அந்த கடைக்கு செல்ல,
“லீலா எங்க போற? என்னாச்சு?” என கேட்டபடி ராம் வர,
“அண்ணா புளிப்பு மிட்டாய் இருக்கா” என கேட்டாள்..
“ம்.. இருக்குமா” என்ற கடைக்காரர் அந்த டப்பாவை எடுத்து கடைசி இரண்டு தான் இருக்கு.. இரண்டையும் சேர்த்து எடுத்துக்கோங்க என்றவர் இரண்டையும் லீலா கையில் கொடுக்க,
“அது எல்லாம் இங்க இல்லை, காசாவே கொடுங்கம்மா” என்றார்.. வழக்கம் போல லீலாவிடம் அஞ்சு ரூபா இல்லை.. என்கிட்ட “கையில் காசு இல்லை,கார்ட் போட்டுக்கலாமா” என கேட்க,
தலையில் அடித்து கொண்ட கடைக்காரர் “இப்ப எல்லாம் இதே பொழப்பா போயிட்டு ஒரு ரூபாய் மிட்டாய்க்கு கூட போனை எடுத்து நீட்டுறது” கடைக்காரர் புலம்ப, ராம் ஐந்து ரூபாய் காயினை எடுத்து கொடுத்தான்..
அவனை முறைத்தவள் போனில் எதையோ தட்ட.. ராம் போன் பேக்கு நோட்டிபிகேஷன் வந்தது.. லீலா தான் ஐந்து ரூபாயை அனுப்பி இருந்தாள்.. போனை பார்த்து விட்டு அவளை ராம் நிமிர்ந்து பார்க்க,
“இதில் ஆரம்பிச்சு தான் இப்ப இங்க வந்து நிற்குது” என தன் வயிற்றை காண்பித்து விட்டு அவள் முன்னே நடக்க, அவள் சொன்ன தோரணையில் சிரிபபு வர சிரித்தபடி அவளை பின் தொடர்ந்தான்..
புளிப்பு மிட்டாயை வாயில் போட்டு கொண்டு லீலா வண்டியில் ஏற பிடிச்சு உட்கார் லில்லி என்றான்..
“ம்”.. என்றவள் வண்டியை பிடித்தபடி அமர,
“நான் தானே மேடம் உங்களை டச் பண்ண கூடாது. நீங்க என்ன டச் பண்ணலாம் மேடம் ஐ டோண்ட் மைண்ட்” வண்டியின் கண்ணாடி வழியாக பின்னாடி இருப்பவளை பார்த்து,
இப்போதும் லீலாவின் முறைப்பு தான் பரிசாக கிடைத்தது..
ராம் சிரித்தான்..
“எதற்கு இந்த சிரிப்பு” என கேட்டாள் லீலா..
இந்த சுவிட்வேஷனுக்கு ஒரு ரைமிங் தோணுச்சு சொன்னா கோவப்படுவ என்றான்..
“பரவாயில்லை சொல்லுங்க” என்றாள்..
“இல்லை வேணா, ஏற்கெனவே என் மேல்ல பயங்கர கோவம் உனக்கு, சொல்ல மாட்டேன்” என்றான்..
“சொல்லுங்க சொல்றேன்ல” என லீலா கோவப்பட
யம்மாடி லில்லி
தொடதா சொல்லி
போகதா தள்ளி
உங்கம்மா தான் எனக்கு வில்லி
என சொல்லி ராம் சிரிக்க,
ராம் உங்களை முறைக்க முயன்ற லீலாவும் சிரித்து விட்டாள்.. ஒரு மாதத்திற்கு பின்பு சந்தோஷமாக சிரிக்கின்றாள்..
ராம்க்கு லீலா சிரிப்பை பார்த்த பின்பு தான் நிம்மதியே வந்தது.
அவர்கள் வாழ்வில் சின்னதாய் ஒரு விபத்து ஏற்பட்டு விட்டது உண்மை தான்.. அதை மாத்த முடியாது.. ஆனால் ராம் சொன்னது போல சரி செய்ய முடியும்..
இந்த வாழ்க்கையை சந்தோஷமாக மாற்ற அவனால் முடியும்.. நடந்த தவறுக்கு பாவம் பார்த்தோ, குற்ற உணர்விற்காகவோ அவளை திருமணம் செய்ய கேட்கவில்லை அவன்..
அவன் மனதில் இருக்கும் காதலுக்காக அவளுக்காக, கேட்டான்.. ப
நடந்ததை நினைத்து அழுது வடிந்து வாழ்க்கையை கஷ்டமாக நகர்த்த அவனுக்கு விருப்பமில்லை..
அவளோடு எப்புடி எல்லாம் வாழ வேண்டும் என இந்த ஒரு மாத காலம் கனவு கண்டானோ, இப்போதும் அதே போல கேலி கிண்டல் சீண்டல் ஊடல் நிறைய காதல் கொஞச்ம் காமம் என தான் வாழ போகின்றான்.. லீலாவை சந்தோஷமாக சிரித்த முகத்தோடு தான் வாழ வைக்க போகின்றான்.. இடையில் நடந்த எதுவும் அவர்கள் வாழ்க்கையை பாதிக்கவோ மாற்றவோ போவதில்லை.. லீலாவுடனும் அவன் குழந்தையுடனும், சந்தோஷமா வாழுவேன்.. அவர்களையும் சந்தோஷமா வைத்து கொள்வேன் என்று நினைத்தபடி வண்டியை ஓட்டினான்…
“நடந்ததை நினைச்சு கவலைப்படலை அண்ணி.. இனி நடக்க போறதை நினைச்சு தான் கவலைப்படுறேன்.. என் கவலை முழுக்க நிவியை நினைச்சு தான்.. அவளுக்கு கல்யாணம் பண்ணனும்.. அந்த நேரத்தில் அவங்க அப்பா சம்மந்த பட்ட விஷயம் எல்லாம் அவ வாழ்க்கையை பாதிக்குமோன்னு” தான் காவேரி பயம் கொள்ள,
“அது சரி நிவியை பத்தியும் அவ கல்யாணத்தை பத்தியும் கவலை உனக்கு எதுக்கு காவேரி.. அதுக்கு தான் நான் இருக்கேன்னே, என் பையன் ராம் இருக்கானே, அப்புறம் ஏன் நிவி கல்யாணத்தை பத்தி கவலைபட்டுட்டு இருக்க” என கேட்டார் ராம் அன்னை சாவித்ரி..
“இல்ல அண்ணி ஏதோ ஒரு பயம்.. அதை எப்புடி சொல்ல” காவேரி தடுமாற,
“நீ தேவையில்லாதை நினைச்சு கவலைப்படுற காவேரி, உன் கவலையையும் பயத்தையும் நான் போக்கிறேன்.. இன்னைக்கு ராம் வேலை விட்டு வந்த உடனே நீ நான் உங்க அண்ணா ராம் நாலு பேரும் சேர்ந்து ஜோசியர் கிட்ட போய் கல்யாணத்திற்கு நாள் குறிச்சிட்டு வருவோம்” என்றார்..
காவேரி அவரை அதிர்ந்து பார்க்க,
“என்னடி அதிர்ச்சியாக பார்க்கிற, இப்பவே வா போகலாம் சொல்லுவேன்.. ஆனா நல்ல விஷயத்திற்கு மூணு பேரே போக கூடாதுல்ல, அதான் ராம் வரவும் போகலாம்.. முன்னவே பேசி வச்சது தானே நிவி தான் என் மருமகள்னு, சீக்கிரம் கல்யாணத்தை முடிக்கனும்ங்கிற ஒரு எண்ணம் தான் எனக்குள்ளயும் ஓடிட்டு இருக்கு, ராம் வரவும் போகலாம்.. அடுத்த மாசத்தில் நல்ல நாளாக குறிச்சிட்டு வரலாம்” என்றார் சாவித்ரி..
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.8 / 5. Vote count: 45
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,346
1 thought on “Mr and Mrs விஷ்ணு 63”
Sankar
அச்சோ வம்சி க்கு இது தெரிந்த தான் உங்களுக்கு இருக்கு
அச்சோ வம்சி க்கு இது தெரிந்த தான் உங்களுக்கு இருக்கு