காதில் அலைபேசியை வைத்ததும் அவனது கோபத்தாண்டவம் மிகுந்த முகம் மிகவும் பயங்கரமாக மாறியது.
“ஹலோ கமிஷன் சார் மார்னிங் சொல்றேன்னு சொன்னீங்க ஆனா ஒண்ணுத்தையும் காணோம் நான் வேற வழியில் டீல் பண்ண வேண்டி வரும் என்னை அந்த வழிக்கு போக வைக்கிறதும் வைக்காததும் உங்களோட பதில்ல தான் இருக்கு..” என்று கமிஷனரின் காதிலிருந்து ரத்தம் வரும் அளவுக்கு பொரிந்து தள்ளினான்.
“இல்ல துருவன் ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க டுடே நான் மோஸ்ட்லி உங்களோட பிரபலத்தை தான் இன்வெஸ்டிகேஷன் பண்ணிட்டு இருந்தேன்
போன் நம்பரை ட்ராக் பண்ணவும் முடியல ஒரு நிமிஷத்துல லொகேஷன் சேஞ்சு ஆகிக்கொண்டு இருக்கு சீரியஸா நான் எவ்வளவோ கேஸ் பார்த்திருக்கேன் இப்படியான கேஸ பாக்குறது இதுதான் முதல் தடவை டெக்னாலஜியே கண்டுபிடிக்கிறதுக்கு திக்கி முக்காடுது ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் தாங்க..” என்று கமிஷனர் மிகவும் பணிவாகக் கேட்க,
“ஓகே டைம் தானே தாராளமா தரலாம் ஆனா அவனப் பத்தி அவனோட புத்திசாலித்தனத்தை பற்றி என்கிட்ட இதுபோல இனிமே நீங்க பேசக்கூடாது கண்டுபிடிச்சிட்டேன் என்ற பதில் மட்டும் தான் எனக்கு வேணும்
அதோட இன்னைக்கு ஒரு விஷயம் நடந்திருக்கு.. அதையாவது நீங்க கண்டுபிடிச்சீங்களா..? சிட்டில என்ன நடக்குதுன்னே தெரியாம இருக்கீங்க இதுக்கு கமிஷனர் என்று பதவி வேற உங்களுக்கு..”
“என்ன துருவன்..?”
“என்னோட மனைவியை கடத்தி 50 கோடி கேட்டு இருக்காங்க எனக்கு இது என்னவோ என்ன குறி வைத்தது போலத் தான் தெரியுது என்னோட குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுது ஒரு ஸ்ட்ராங்கான இரண்டு போலீஸ் அதிகாரிகளை பாதுகாப்புக்கு அனுப்பி வைங்க அதுக்கு ஏதாவது பார்மாலிட்டி இருந்தா சொல்லுங்க நான் அதையும் செய்து வைக்கிறேன்.
மோஸ்ட்லி நாளைக்கு நீங்க மார்னிங் இந்த விஷயத்தை சீக்கிரமா செய்து தரணும் காலையில வாசல்ல ரெண்டு கான்ஸ்டபிள் நிக்கணும் அதோட வைஃபை இங்க இருக்குற யாருக்குமே தெரியாது என்ன குறி வச்சவன் தான் வைஃபை கடத்தி இருக்கணும்.
ஆனா கடத்தினவனுக்கு வேறு யாரோ கடத்த சொல்லி இருக்காங்க அப்போ கடத்த சொன்னவங்க தான் என்னுடைய எதிரி.
அவனுக்கு மெயின் காசுதான் ஆனால் கடத்த சொன்னவங்களுக்கு மெயின் டார்கெட் என்னோட உயிர். கடத்தினவனோட போன் நம்பரை நான் தரேன் அவனையாவது கரெக்ட்டா கண்டுபிடிங்க இல்லன்னா நான் இனிமே உங்களுக்கு கால் பண்ணி பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்.
நாளைக்கு என்னோட வைஃப்பை கடத்தினவன பிடிச்ச தகவல் எனக்கு உடனே வந்தே ஆகணும் எனக்கு கால் பண்றதா இருந்தா அந்த செய்தியோட கால் பண்ணுங்க. இல்லன்னா கால் பண்ணாதீங்க குட் பாய்..” என்று மறுமுனையில் அவர் பேசுவதற்கு முன் அலைபேசியை அணைத்துவிட்டு உள்ளே வந்து மெத்தையில் விழுந்து படுத்தவன்,
யாராக இருக்கும் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினான். ‘பிசினஸில் எவ்வளவோ பேரை சந்திக்கிறோம் நாம எல்லாரையும் போட்டியா தான் நினைத்துக் கொள்வோம் ஆனால் பொறாமை படுறவன் பிசினஸ்ல விழுந்து கொண்டு போறவன் உயர்ந்து கொண்டு போற என்னை எதிரியாகப் பார்த்தால் நான் என்ன பண்றது என்னோட ஹெல்ப் கேட்டு வர்றவங்க எல்லார்கிட்டயும் நான் மறக்காம என்னால முடிந்த உதவிகளை செய்து கொடுக்கிறேன் தானே.
நான் யாரையுமே எதிரியாக பார்ப்பதில்லை அப்போ என்ன யார் அப்படி எதிரியாக பார்க்கின்றனர் நான் ஒன்றும் கெட்ட வழியில முன்னேறலையே எனக்கு தெரிஞ்ச நல்ல வழியில் தானே நான் முன்னேற்றம் கண்டுள்ளேன் யாருக்கும் எந்த விஷயத்திலும் துரோகம், களவு செய்யாமல் ஒழுங்கா பிசினஸ் பண்ணிட்டு வாரேன்.
இந்த உலகத்துல நேர்மையாக வாழ்வது ரொம்ப கஷ்டம் நாமளும் ஏதாவது ஒரு வழிய கண்டுபிடிச்சா தான் இவன கண்டுபிடிக்க முடியும் முள்ள முள்ளால தான் எடுக்கனும்..’ என்று நினைத்தவன்,
நீண்ட சிந்தனையில் மூழ்கியபடி வள்ளியின் மாசற்ற மதிமுகத்தை எதிர்பாராமல் திரும்பிப் பார்த்தவன் அப்படியே சிந்தனையிலிருந்து தாவி குதித்து வெளியே வந்தவன்,
அந்த வதனத்தின் அப்பழுக்கற்ற அழகிலேயே லயித்து அப்படியே அவனும் உறங்கி விட்டான்
இன்பமான காலை பொழுது இறையாசியால் இனிதாக புலர்ந்தது. வழமை போல துருவன் உடற்பயிற்சியை முடித்துவிட்டு கம்பெனிக்கு செல்வதற்காக விரைவாக புறப்பட்டு கொண்டிருந்தான்.
இன்று மிகவும் முக்கியமான மீட்டிங் அவனுக்காகக் காத்திருந்தது. அதற்காக காலையிலேயே நேரத்திற்கு எழுந்து சில முக்கிய ஆவணங்களை தனது மடிக்கணனியில் தயார் படுத்தி பிரதியெடுத்து வைத்துவிட்டு குளிக்கச் சென்றான்.
அவனுக்காக மேலே டீ எடுத்துக் கொண்டு வந்த வள்ளி அவன் குளியலறையில் இருந்து இன்னும் வராமல் இருக்க கையில் டீயை வைத்துக் தனது கணவனுக்காக காத்திருந்தாள்.
பத்து நிமிடங்களில் வெளியே வந்து வேகமாக புறப்பட்டுக் கொண்டிருந்த துருவன் வள்ளியை பார்த்ததும்,
“என்ன வள்ளி ஏதும் சொல்லனுமா..?”
“இல்லைங்க டீ..”
“சரி சரி அங்க வைச்சுட்டு போ எனக்கு அவசரமான மீட்டிங் இருக்கு இன்னும் 15 மினிட்ஸ்ல நான் ஆபீஸ்ல இருக்கணும்..” என்று அவன் சொல்லிவிட்டு பரபரப்புடன் கோர்ட்டை மாட்டிக்கொள்ள,
வள்ளி டீ கப்பை மேசை மீது வைக்க அவளது கை தடுமாறி அது கீழே சிந்தி விட்டது.
“அச்சச்சோ கொட்டிருச்சு..” என்று அவள் கூற,
வேகமாக புறப்பட்டு கொண்டிருந்தவன்,
“என்ன ஆச்சு வள்ளி..” என்று அருகில் வந்து பார்க்க முக்கியமாக இன்றைய மீட்டிங்குக்கு ரெடி பண்ணி வைத்த டாக்குமெண்ட்ஸ் அனைத்தையும் அனைத்தின் மீதும் அந்த தேநீர் சிந்திவிட்டது.
முதலில் அதை கவனிக்காதவன், பின்பு தேநீர் தானே என்று விட்டு உற்று நோக்கவே அவன் காலையில் நேரத்துக்கு எழும்பி கஷ்டப்பட்டு செய்த வேலைகள் அனைத்தும் சிறு பொழுதில் வீணாகி போக துருவனுக்கு தலைக்கு மேல் நெருப்பைக் கொட்டியது போல அப்படி ஒரு கோபம் வர கொதித்தெழுந்தவன்,
“என்ன காரியம் பண்ணி வெச்சிருக்க அற்புதம் இதெல்லாம் என்னுடைய இம்பார்ட்டன்ஸ் டாக்குமெண்ட்ஸ் இன்னைக்கி மீட்டிங்க்கு இதை நான் சப்மிட் பண்ணனும் அவளத்தையும் நாசம் பண்ணிட்டியே..!” என்று துருவன் உரத்த குரலில் கத்த,
அப்போதுதான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டேன் என்பதை உணர்ந்தவள் என்ன செய்வதென்று புரியாமல்,
“என்னங்க நான் தெரியாம பண்ணிட்டேன் சாரிங்க..” என்றிட,
“சாரின்னு ஒரு வார்த்தை சொன்னால் போதுமா இது எவ்வளவு கஷ்டப்பட்டு ரெடி பண்ணினேன் தெரியுமா ஒரு செகண்ட்ல அனைத்தையும் வீணாக்கிட்டியே இது எவ்வளவு பெரிய காண்ட்ராக்ட் தெரியுமா கோடிக்கணக்கா இன்வெஸ்ட் பண்ணி இருக்க காண்ட்ராக்ட்.
இன்னைக்கு இந்த டாக்குமெண்ட்ஸ கொடுக்கலைன்னா இந்த காண்ட்ராக்ட் கையை விட்டுப் போயிரும்
இது என்னோட ஒரு வருஷ கனவும், உழைப்பும் அதுல நீ மண்ணை அள்ளிப் போட்டுட்டியே
இதை நான் கொஞ்சம் கூட உன்னிடம் எதிர்பார்க்கல இப்ப மீட்டிங்குக்கு போகணும் இது எப்படி பண்ணிட்டு நான் இன்னைக்கு எப்படி ஆஃபீஸ்க்கு போவேன்,
என்னன்னு மீட்டிங் அட்டென்ட் பண்ணுவேன், காப்பி பண்ணி வச்சது எல்லாத்தையும் உடனே அழிச்சிட்டேன். இது ரொம்ப சீக்ரெட்டா இருக்கணும்னு எல்லாத்தையும் இரேஸ் பண்ணிட்டேன் இப்போ என்ன பண்றது..?” என்று திணறிக் கொண்டிருக்க,
“இல்லைங்க எனக்கு தெரியாது..” என்று வள்ளியிடமிருந்து முனகல் வெளிப்பட்டது.
என்ன செய்வது என்று சிந்தனையில் ஆழ்ந்தவன் உடனே வள்ளியின் இந்த குரல் கேட்டதும் ஆவேசமாக அவளை திரும்பிப் பார்த்து,
“உனக்கு எப்படி தெரியும் படிச்சிருந்தா தானே உனக்கு இதெல்லாம் புரிகிறதுக்கு மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பட்டிக்காடு தானே நீ
பட்டிக்காடுன்னு தெரிஞ்சும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்ன சொல்லணும்
படித்திருந்தால் தானே ஒரு ஆபீஸ்ல என்ன வேலை நடக்குது அந்த வேலைக்கு என்னென்ன முக்கியம் மீட்டிங்கன்னா என்ன? டாக்குமெண்ட்ஸ்ன்னா என்ன? கான்ட்ராக்ட்ன்னா என்னன்னு தெரிகிறதுக்கு
ஒண்ணுமே தெரியாத ஒரு முட்டாளத் தானே எங்க அம்மா எனக்கு கட்டி வச்சிருக்காங்க என் கண்ணு முன்னால நிக்காத வெளியே போ வெளியே போ ன்னு சொன்னேன்..” என்று கொடூரமாக வார்த்தைகளை கடித்து துப்பினான் துருவன்.
வெளியே போ என்று அவன் கூறியதும் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க, அவளது கண்களில் இருந்து நீ பொலபொலவென்று கண்ணத்தில் வடிந்து கீழே விழுந்தது.
வெளியே போ என்று சொல்லி அவன் மீண்டும் உரத்து கத்த இதற்கு மேல் அந்த அறைக்குள் நிற்க நெருப்பின் மேல் நிற்பது போல உடலெங்கும் எரியத் தொடங்கியது.
அங்கு நிற்க பிடிக்காமல் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிச் சென்றாள் அற்புதவள்ளி.