இன்னிசை-2

5
(1)

இன்னிசை – 2

கூடலூர் வன அலுவலகம்…

சற்று பரபரப்பாக இருந்தது. ஏற்கனவே இருந்து மாவட்ட வன அலுவலர் வேறு இடத்திற்கு மாற்றப்பட ,அந்த இடத்திற்கு புதிய வன அலுவலர் என்று தான் பொறுப்பேத்துக்க வந்திருக்கிறார்.

 வந்தவுடனே மீட்டிங் ஏற்பாடு செய்திருக்க…

வன அதிகாரிகள் அனைவரும் அங்கு வந்திருந்தனர். ஃபாரஸ்ட் வாட்ச்சர், ஃபாரஸ்ட் கார்டு, ஃபாரஸ்ட் ரேஞ்சர் எல்லோரும் அங்கு குழுமியிருந்தனர்.

 நேற்று இருந்த விளையாட்டுத்தனம் கொஞ்சம் கூட இல்லாமல் கம்பீரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ” ஹாய்… நான் ஜீவாத்மன்… மாவட்ட வன அலுவலர். இன்னையிலிருந்து பொறுப்பேத்துக்க போறேன்.

ஃபர்ஸ்ட் என்னைப் பத்தி உங்களுக்கு சொல்லிடுறேன். நான் ஃப்ரெண்ட்லி டைப். சோ உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் கேட்கலாம். பட் வேலையில சின்ன தவறு நடந்தாலும் எனக்குப் பிடிக்காது. அன்றைக்கு உள்ள வேலையை அன்றைக்கே முடிச்சாகணும். அப்புறம், நாளைக்கு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நான் டெய்லி ஆஃபிஸ் வந்திடுவேன், என்றவன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களைப் பார்த்துக் கொண்டே கூறினான். தென் ஃபாரஸ்டுக்கும் எப்போ வேண்டுமானாலும் வருவேன்.

காடு நம்முடைய இயற்கை கொடை. அதை நாம எல்லாரும் சேர்ந்து தான் பார்த்துக்க போறோம். அங்கே எந்த இல்லீகல் ஆக்டிவிட்டிஸும் நடக்கக் கூடாது. மரத்தை வெட்டினாலோ, விலங்குகளை துன்புறுத்தினாலோ கடுமையான தண்டனை கொடுக்கப்படும்.

 அடிக்கடி ஃபாரஸ்ட்ல ரவுண்ட்ஸ் போயிட்டு இருக்கணும்‌‌. சின்னதாக எந்த அசம்பாவிதம் நடந்தா கூட நீங்க உங்க மேல் அதிகாரிகளுக்கு சொல்லிடணும். அதே நேரத்தில் நீங்கள் என்னையும் தொடர்பு கொள்ளலாம். என்னோட நம்பர் உங்களுக்கு நான் கொடுத்துடறேன். நீங்க எப்ப வேணா என்னை காண்டாக்ட் பண்ணலாம். யார் வேணும்னாலும் எனக்கு கால் பண்ணலாம்.” என்று அவன் கூறி முடிக்கும் வரை அந்த இடம் நிசப்தமாக இருந்தது.

எல்லோரும் சரிங்க சார் என்று அவனுக்கு மறுமொழி கூறிக் கொண்டிருக்க. மேனகாவோ,

 புதிதாக வந்திருந்த ஃபாரஸ்ட் ரேஞ்சரான ஆதிரனைப் பார்த்தாள். அவனோ இளம் புன்னகையுடனே நின்றிருந்தான்.

அவளது யோசனையை கலைப்பது போல் ஹலோ மேடம் உங்களைத் தான் என்று பலமுறை அழைத்து இருந்தான் ஜீவாத்மன்.

 ஆதிரன் தான், அவளை உலுக்கினான்.

“ஹான்…” என்று பதற…

“சார் உங்களை கூப்டிட்டு இருக்காரு…” என்று மெதுவான குரலில் கூறினான் ஆதிரன்.

” என்ன கனவு கண்டுட்டு இருக்கீங்களா? அதெல்லாம் அப்புறம் பாருங்க. இது வொர்க்கிங் ஹவர்ஸ்.முக்கியமான மீட்டிங்ல இருக்கீங்க. உங்க ஃபோகஸ் ஃபுல்லா இங்கே தான் இருக்கணும். நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா மிஸ்…” என்று ஜீவாத்மன் கேள்வியாக இழுக்க…

“மேனகா…” என்றாள் மெதுவான குரலில்.

” சத்தமா சொல்லுங்க…” என்று கூற.

 அவனை முறைக்க முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு, ” மேனகா.” என்று தன்னுடைய பெயரை கூறினாள்.

” உங்க பேரையா கேட்டேன். நான் கேட்ட கேள்விக்கு பதில் தான் சொல்ல கேட்டேன். அது வரவே இல்லை. உங்க கவனம் தான் இங்க இல்லையே.ரைட் விடுங்க. இப்போ சொல்லப் போறதையாவது கவனமா கவனிங்க.ஈவினிங் டைம் தனியா காட்டுக்குள்ள போகாதீங்க. தேவையிருந்தால் வாட்ச்சர், கார்டையும் அழைச்சிட்டு போங்க.” என்றவன், அவளை கிண்டலாக பார்த்தான்.

 அவனது பார்வை வீச்சில் கொதித்து போனவள், அதை வெளிக் காட்டாமல் மௌனமாக தலை அசைத்தாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் உள்ள கிராமத்தில் யானை நுழைந்து விட்டதாக மெசேஜ் வர.

 எல்லோரும் சற்று பதற்றமாகினர்.

” போச்சு… காட்டுயானை வழி மாறி வந்திருக்கும் போல. வாழைத்தோட்டத்தில் புகுந்துடுச்சு. அட்டகாசம் செய்ய போகுது.” என்று பாரஸ்ட் வாட்ச்சர் கவலையுடன் கூற.

 புதிய ஃபாரெஸ்ட் ரேஞ்சரான ஆதிரன்,

“ஹலோ… யானை ஒண்ணும் வழி மாறி வரலை. அது சரியா தான் வந்திருக்கு. அதோட எடத்துல நம்ம தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறோம். அதோட உணவு தேவைக்காக தான் வருது. அதை துரத்தாமல் இருந்தா அதற்கு தேவையான உணவு சாப்பிட்டு போயிடும். மக்கள் துரத்துறேன்னு ஏதாவது தொந்தரவு செஞ்சா தான் தாறுமாறா ஓடி தோட்டத்தை நாசம் செய்துடும்.” என்று சற்று கோபத்துடன் கூறினான்.

மேனகா அவனை மெச்சுதலாகப் பார்த்தாள்.

” இப்படியே எவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கப் போறீங்க ஆதிரன். முதல்ல மக்கள் அந்த மாதிரி எதுவும் பண்றதுக்கு முன்னாடி நீங்க ஸ்பாட்டுக்கு போங்க. யானையை பத்திரமாக காட்டுக்கு உள்ளார விட்டுடுங்க.” என்று உத்தரவிட்ட ஜீவாத்மன் அவனது வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

மேனகாவோ அவனை கீழ் கண்ணால் முறைத்துக் கொண்டே ஆதிரனுடன் சென்றாள்.

ஆதிரனோ பரபரப்பாக இருந்தான். வாகனத்தில் செல்லும் போதே பல உத்தரவுகளை இட்டுக் கொண்டே வந்தான். கும்கி யானையை அழைத்து வர உத்தரவிட்டவன், மருத்துவர் குழுவையும் அந்த இடத்திற்கு வரச் சொன்னான்.

வேகமாக அங்கு செல்ல… அங்கோ எல்லாம் கை மீறி போயிருந்தது.

 கிராமத்து மக்கள் வெடி வெடித்து யானையை விரட்ட பார்க்க. அந்த யானையின் உடம்பில் அங்காங்கு தீக்காயம் இருந்தது.

அந்த யானையோ வலியில் பிளிறிக் கொண்டு யாரையும் அருகில் வர விடாமல் பார்த்துக் கொண்டது.

அதை பார்த்ததும் முகம் வாட நின்றான் ஆதிரன்.

அவனுக்கு காடும் புதிதல்ல, காட்சிகளும் புதிதல்ல. இரண்டு வருஷம் அப்பரண்டீஸாக காட்டில் பணியாற்றி விட்டு தான் இந்த பதவிக்கு வந்திருக்கிறான். ஆனால் ஒவ்வொரு முறையும் இதைப் போல் விலங்குகள் வதைப்படுவதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. இளகிய மனம் படைத்தவன் தனக்குள் வருந்திக் கொண்டிருக்க…

 அருகில் இருந்த மேனகா, “சார்…” என்று அவனை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தாள்.

ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டவன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தான்.

 மருத்துவ குழுவின் உதவியின் மூலமாக மயக்க மருந்து கொடுத்து அந்த காட்டு யானையை வண்டியில் ஏற்றினான். அந்த யானை கண்களில் இருந்தோ கண்ணீர் வழிந்தது. ” டேய் மனிதா… என் இடத்திற்கு வந்து என்னையே விரட்டுகிறாயா?” என்று கேட்பது போல் தோன்ற, கண்களை ஒரு முறை மூடி திறந்தவன், விடுவிடுவென மக்கள் கூட்டமாக இருக்கும் இடத்திற்கு சென்றான்.

அவனது வேகத்திற்கு மற்றவர்கள் ஓடினர்.

” இது யாரோட தோப்பு?” ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு வினவினான் ஆதிரன்.

“என்னோடதுங்க ஐயா… எல்லாம் நாசமா போச்சு. குலை வெட்டும் பருவம்யா.” என்றவர் அழ…

” அழாதீங்க பெரியவரே… அரசாங்கத்துக் கிட்ட இருந்து நிவாரணம் வாங்கித் தரேன். ஆனால் யானை மேல் எந்த தப்பம் இல்லைங்களே? இது அதோட இடம். நாம தான் கொஞ்சம் கொஞ்சமாக அதோட இடத்தை ஆக்கிரமிச்சுக்கிட்டோம். இப்போ அது தோப்புக்கு வருதுன்னு தண்டனைக் கொடுத்தா என்ன செய்யுறது. அது வாயில்லா ஜீவன். இப்படித் தான் துன்புறுத்துவதா?” என்று வினவ.

அவனை ஆச்சரியமாக பார்த்தாள் மேனகா. கோபத்தைக் கூட கருணையுடன் காண்ப்பிக்க முடியுமா என்று வியந்து தான் போனாள்.

அந்த பெரியவரோ, ” ஐயோ! சாமி… நான் யானை மேல போடலை. சும்மா பயமுறுத்த வெடிச்சேன் சாமி. அது ஓடி வந்து வெடிக்கிட்ட மாட்டிக்கிச்சு.”

“இனிமேல் இந்த மாதிரி எதுவும் செய்யாதீங்க. எந்த வனவிலங்குகள் ஊருக்குள்ள வந்தாலும் எங்களுக்கு தகவல் சொல்லுங்க. நாங்க உடனடியா வந்துடுவோம். இரவு, பகல்னு வேலைப் பார்க்கத் தானே நாங்க இருக்கோம். அதை விட்டுட்டு விலங்குகளை துன்புறுத்தினால் கைது செய்யப்படுவீங்க.” என்று எச்சரிக்கை செய்து விட்டு கிளம்பினான்.

முகாமில் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் மருத்துவர்களை அழைத்து அதன் காயத்திற்கு சிகிச்சை அளித்து, ஒரு வழியாக வனத்திற்குள் அனுப்பினான்.

வேலையினாலோ, அந்த யானைப் பட்ட துன்பத்தைப் பார்த்ததாலோ அனைவரும் சோர்ந்து போய் இருக்க. அனைத்து ஊழியர்களையும் ஒரு பார்வை பார்த்த ஆதிரன், ” சரி விடுங்க கைஸ். இனிமேல் இதுபோல் தவறு நடக்காமல் பார்த்துப்போம் .ஷிப்ட் முறையில் வனத்துக்குள் ரவுண்ட்ஸ் போகலாம்.”என்று கூற…

” சரி…” என்று எல்லோரும் தலையசைத்தனர்.

” ஓகே… நீங்க எல்லாம் என் கூட அலைஞ்சு சாப்பிடக் கூட இல்லை. டயர்டா வேற இருப்பீங்க. செவிக்கு உணவில்லாத போது தான் சிறிது வயித்துக்கு உணவிடப்படும்… அதனால…” என்று அவன் இழுக்க…

” அதனால… எதுவும் கதாகலாட்சபம் செய்ய போறீங்களா? ஐயோ! வேண்டாம் சார்.” என்று அவன் கூடவே இன்னொரு குரலும் ஒலித்தது.

” யாருடா அது… மேனகா மேடமா? இன்னைக்கு தான் குரல் வெளியே வருது. பயப்படாதீங்க… அப்படியெல்லாம் உங்களை கதை சொல்லி பயமுறுத்த மாட்டேன். உங்க மூடை ஹேப்பியா மாத்துறதுக்காக ஒரு பாட்டு பாடப் போறேன்.” என்று கூற.

” கிண்டல் செய்யாதீங்க சார்.”

” சீரியஸ்லி மேனகா. நான் பாட்டு பாடுறேன். அப்புறம் உங்க மைண்ட் எப்படியிருக்குன்னு சொல்லுங்க.” என்றவன் பாட ஆரம்பித்தான்.

“என்ன சத்தம் இந்த நேரம்

குயிலின் ஒலியா

என்ன சத்தம் இந்த நேரம்

நதியின் ஒலியா

கிளிகள் முத்தம் தருதா

அதனால் சத்தம் வருதா

அடடா ஆ ஆ ஆ…. ” என்று பாடி முடிக்க.

“சூப்பர் சார்.” என்று எல்லோரும் கத்தி கைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

” ஹான்… சூப்பர்னு ஒரு வார்த்தையில முடிக்கக் கூடாது. நான் எப்படி பாடி உங்களை ஹேப்பியாக்குனேனோ அது மாதிரி, நீங்க பாடி என்னை சந்தோஷப்படுத்துங்க.”

” ஐயோ எனக்கெல்லாம் வராது பா … என்னால முடியாது… நான் மாட்டேன் … “என்று ஆளாளுக்கு குரல் கொடுக்க.

 “நீங்க என்ன சூப்பர் சிங்கருக்கா பாட போறீங்க? சும்மா ஜாலியா பாடுங்க. நல்லா இருக்கும்.” என்று எல்லோரையும் சமாளித்து ஒரு வழியாக பாட வைத்தான் ஆதிரன்.

ஒவ்வொருவரும் அவர்களது தயக்கத்தை விட்டு பாட, அந்த இடமே உற்சாகமாக மாறியது.

 ” லாஸ்ட் நீங்க தான் மேனகா. பாடுங்க.”என்றான் ஆதிரன்.

” இல்லை நான் பாடல.” என்று முகம் வாட கூறினாள்.

” சும்மா டூ லைன்ஸ் எங்களுக்காக பாடுங்க மேனகா. உங்கள் வாய்ஸே சூப்பரா மயில் குரல் போல இருக்கு.” என்று கூற.

 அவ்வளவு நேரம் முகம் வாடி இருந்த மேனகா அவனை முறைத்தாள்.

” எதுக்கு முறைக்குறீங்க. மயில் குரல் எப்படி இருக்கும் தெரியுமா?” என்று வினவ.

“கர்ணகொடூரமா இருக்கும்.” என்று ஒரு குரல் இடையிட்டது. அந்த குரல் கேட்டதும் அவ்வளவு நேரம் அங்கே கொட்டமடித்தவர்கள் எல்லோரும் அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

 மயில் குரல் பற்றி பேசிக் கொண்டிருந்தவனும் சரி, கேட்டுக் கொண்டிருந்தவளும் சரி அதைக் கவனிக்கவில்லை.

 “ஓ சாரி… குயில்னு சொல்ல வந்தேன். டங் ஸ்லிப் ஆகிடுச்சு. நீங்க டென்ஷனாகாதீங்க. மறுபடியும் சாரி கேட்டுக்கிறேன். எக்ஸ்டீரிம்லி சாரி.”

” சாரியெல்லாம் வேண்டாம் சார். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க பாடின பாட்டை மீண்டும் ஒருமுறை பாடுங்க. அது போதும்.”

” ஏன் என் பாட்டு அவ்வளவு பிடிச்சிருக்கா? நான் சுமாரா தான் பாடுவேன். என் ப்ரதர் இன்னும் சூப்பரா பாடுவான்.”

” சார்… இதுவே செமையா இருக்கு. உங்க பாட்டைக் கேட்டா, எனக்கு சாப்பாடு, தூக்கம் எதுவும் தேவையில்லை. என்னையே மறந்திடுவேன். அவ்வளவு அருமையா இருக்கு உங்க வாய்ஸ்.” என்று மேனகா மனதார பாராட்டினாள்.

“பத்து நாள் பட்டினி போட்டுட்டு அவரை பாட சொல்லணும். அப்ப தெரியும்… அவர் வாய்ஸோட அருமை. தெரிச்சு ஓடிடுவ.” என்ற குரலை கேட்டு, அப்போது தான் அங்கிருக்கும் ஜீவாத்மனை பார்த்தனர்.

 ஜீவாத்மனின் கேலியில் மேனகா முகம் கோபத்தில் செந்தழலாக மாறியது. ஆதிரனோ அவனை ஆராய்ச்சியாக பார்த்தான்.

‘ வாரே வா… நான் இந்த பொண்ணோட பேசுறது சாருக்கு பிடிக்கலை போல. இவருக்கு கீழே இருந்தால், எல்லா விஷயத்தையும் தலையிடுவாரா? பார்த்துடலாம். ‘ என்று மனதிற்குள் எண்ணியவன், வெளியேவோ எப்பொழுதும் போல் அவனது அக்மார்க் புன்னகையுடன் நின்றிருந்தான்.

” என்ன சிரிப்பு? என்ன நடக்குது இங்க?” என்று ஜீவாத்மன் கடிந்து கொள்ள.

” சும்மா தான் சார்… எல்லாரும் டயர்டா இருந்தாங்க. அதான் ரிலாக்ஸுக்காக பாட்டு பாடினேன்.”

” மிஸ்டர் ஆதிரன்… நீங்க ஒரு ஃபாரெஸ்ட் ரேஞ்சர். நீங்க இப்படி பொறுப்பில்லாமல் இருக்கீங்க. காட்டு யானையை பத்திரமா சேவ் பண்ணீங்களா? அதைப் பற்றின ரிப்போர்ட் எனக்கு வரலையே.” என்று கடிந்துக் கொள்ள.

” சாரி சார் ‌”

“ப்ளீஸ் அவாய்ட் திஸ். அப்புறம் யானை சேஃப் தானே…” என்று அதைப் பற்றிய தகவலை விசாரித்தான்.

ஆதிரனும் அவனிடம் யானைப் பற்றிய விவரங்களை தெரிவித்தான்.

” ஓகே… ” என்ற ஜீவாத்மன் கிளம்ப, அவனருகே இருந்த முகுந்தனோ ஃப்ரீஸாகி நின்றிருந்தார்.

” முகுந்தன்… என்னாச்சு… கிளம்பலாமா?” என்று ஜீவாத்மன் விசாரிக்க.

” ம்…” என்றவர் நாலா பக்கமும் தலையாட்டினார்.

மனதிற்குள் ஏதோ யோசனை ஓடியது.

அவரது முகத்தைப் பார்த்த ஜீவாத்மன், ” என்ன முகுந்தன்? இவர் மட்டும் நேத்து பாடினாரே… ஆனா இப்போ அடுத்தவங்க பாடினா திட்டுராரேன்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்க.

“ஹான்.” என்று அதிர்ந்து நின்றார் முகுந்தன்.

” ஓ… அப்போ மனசுக்குள்ள அப்படித் தான் நினைச்சீங்களா முகுந்தன். நான் பாடுனேன். ஆனா நான் பாடும் போது, நீங்க கூட சேர்ந்து பாடுனீங்களா? இல்லை ஆட்டம் தான் போட்டீங்களா? இல்லைல்ல. ஒரு பயம் தானே இருந்தது. அதுதான் வேணும். நம்ம ஜாலியா இருக்கலாம். ஆனா நம்ம கிட்ட யாரும் அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது. நான் என்ன சொல்றேன் உங்களுக்கு புரியுதா?”

” புரியுது சார்.” என்றான் முகுந்தன்.

“என்ன புரியுது?”

” உங்கள விட்டு பத்தடி தள்ளியே நிக்கணும்.” என்று முகுந்தன் கூற.

” ஹா…ஹா…” என்று வாய் விட்டு சிரித்தான் ஜீவாத்மன்.

அவனது சிரிப்பு சத்தம் வனத்தில் எதிரொலிக்க… மேனகா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

‘ டிரைவர் கிட்ட இப்படி சிரிச்சு பேசிட்டு போறாரு. ஆனால் நம்ம கிட்ட பேசும் போது மட்டும் ஒரு கோபமும், வெறுப்பும் தெரியுதே. ஒரு வேளை ரிஷிவர்மன்…’ என்று யோசிக்க… அவளது முகம் முழுவதும் வியர்வை துளிர்த்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!