Mr and Mrs விஷ்ணு 64

4.7
(40)

பாகம் 64

“அம்மா என்ன சொல்றீங்க” அதிர்ச்சியானான் ராம் தன் தாய் சாவித்ரி சொன்னதை கேட்டு,

“ஏன்டா உனக்கு எதுவும் காதில் பிரச்சினையா? இவ்வளவு நேரம் சொன்னதை எல்லாம் கேட்டுட்டு, திரும்பவும் என்னம்மான்னா என்னடா அர்த்தம்? போ போய் குளிச்சிட்டு வா ஜோசியர் வீடு வரை போய்ட்டு வரலாம்” என்றார் சாவித்ரி..

“அய்யோ அம்மா எனக்கும் நிவிக்கும் கல்யாணமா, முடியாதும்மா எனக்கு இதில் விருப்பமில்லை” என்றான்..

அதை கேட்ட அவன் அப்பா கணேசன் அம்மா சாவித்ரி இருவருக்கும் அதிர்ச்சி தான்..

“ஏன்டா வேணான்னு சொல்ற? எதுனால உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்ற? உனக்கு தான் நிவியை பிடிக்குமே, அப்புறம் ஏன்டா இப்புடி பேசுற?”என கேட்டார் சாவித்திரி..

“எனக்கு நிவினா பிடிக்கும்தான்மா.. ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது அது வேற, நான் எப்பவுமே நிவேதாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சது கிடையாது நான் அந்த கண்ணோட்டத்தோடு அவளை நான் பார்த்ததே கிடையாது” என்றான்

“இதுவரை பார்க்கலைன்னா என்ன இனிமே பாரு” என்றார் சாவித்திரி..

இல்லை எனும் விதமாக தலையசைத்தான் ராம்..

“ஏன்?”என கோவமாக சாவித்ரி கேட்க,

“நான் வேற ஒரு பொண்ண விரும்புறேன், அவளை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன்.. அத பத்தி தான் உங்ககிட்ட இன்னைக்கு பேசணும்னு நினைச்சுட்டு வீட்டுக்கு வந்தேன்..அதுக்குள்ள நீங்க இப்படி பேசுறீங்கம்மா என்றான்..

அது கேட்டதும் சாவித்திரிக்கு பயங்கர ஆத்திரம் வந்தது..

“என்னால நீ சொல்ற பொண்ணை எல்லாம் மருமகளா ஏத்துக்க முடியாது, நிவேதா தான் இந்த வீட்டு மருமக, நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்..

ராம் புரிஞ்சுக்கோடா,உனக்கு என்னடா ஆச்சு, நம்ம நிவேதா அவ ளுக்கும் காவிரிக்கும் நம்மளை விட்டு வேற யாரு இருக்கா,

உனக்கு தெரியாதா அவங்க சூழ்நிலை என்னன்னு அவங்களை நல்லா பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு டா என கோவமாக ஆரம்பித்து அழுகையோடு முடித்தார்..

அம்மா நீங்க சொல்றதெல்லாம் எனக்கு புரியுது.. ஆனா அதுக்கா என்னால் நிவேதா வை கல்யாணம் பண்ண முடியாது.. அத்தைக்கும் நிவிக்கும் கடைசி வரைக்கும் நான் தனியா இருப்பேன்.. நிவிக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டியது ஏன் பொறுப்பு என்றான்..

அவனை கோவமாக உறுத்து விழித்த சாவித்ரி “அப்போ நீ கல்யாணம் பண்ணிக்க மாட்ட அப்படித்தானே சொல்ல வர கோவமாக கேட்டார்..

“என்னால முடியாதுமா நான் உங்களுக்கு எப்படி சொல்றது, நான் ஒரு பொண்ணை லவ் பண்றதால் இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க.. நான் யாரையுமே காதலிக்காமல் இருந்தா கூட என் முடிவு இதா தான் இருந்திருக்கும்… நிவியை நான் என் கூட பொறந்த தங்கச்சியை மட்டும் தான் நினைக்கிறேன்

இந்த மாதிரி சினிமா வசனம் பேசுறது நிறுத்துடா.. காவிரி ரொம்ப வருத்தப்படற டா.. அவளுக்கு நான் வாக்கு கொடுத்து இருக்கேன்.. நம்பிக்கை கொடுத்திருக்கிறேன். அவ நம்பிக்கையை என்னால் உடைக்க முடியாது..

நிவிக்கும் உனக்கும் தான் கல்யாணம்.. அதனால நீ மனசுல இருக்கறது எல்லாம் தூக்கி தூர போட்டுட்டு நிவேதாவை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு ரெடியாகு. இது தான் என் முடிவு என உறுதியாக சொன்னவர்..‌மாத்தி எதுவும் பண்ண நினைக்காத அப்புறம் நான் மனுஷியாக இருக்க மாட்டேன் என கோவமாக கூறிவிட்டு அறைக்குள் சென்று விட்டார்..

ராமுக்கு ஐயோடா என்று இருந்தது பிரச்சனை சாலா இடத்தில் இருந்து வரும் என்று நினைத்திருந்தால், இங்கு தன் வீட்டிலே இப்படி ஒரு பிரச்சனையா, தலையில் கை வைத்து சோபாவில் அமர்ந்து விட்டான்..

தன் அம்மா சொன்னது போல் நிவேதாவுக்கும் தனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்காது, அதுக்கு நிவேதாவே ஒத்துக்க கொள்ளவே மாட்டாள்.. அதனால் அந்த கவலை அவனுக்கு இல்லை.. ஆனா லீலாவா அம்மா அப்பா ஏத்துக்கணும்.. இப்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்.. அதற்கு கொஞ்சம் கஷ்டப்படனும் என தோன்றியது.. ஆனால் எக்காரணம் கொண்டும் லீலா கர்ப்பம் என்பது தன் வீட்டிற்கோ அவள் வீட்டிற்கோ தெரிய வர கூடாது‌‌ தெரியாமலே சம்மதம் வாங்க வேண்டும் என நினைத்தான்..

வம்சிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும்? நினைக்கும் போதே சிரிப்பு வந்தது.. சிரித்து கொண்டான்..

அறைக்குள் சென்று சாவித்திரிக்கு கோவம் அடங்கவில்லை.. அங்குமிங்கும் நடந்தார்..

.

சாவித்திரிக்கு காவேரி நிவேதா என்றால் மிகவும் பிரியும். அவர்களின் இன்றைய கஷ்டத்துக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வு எப்போதும் சாவித்திரிக்கு உண்டு…

அந்த குற்ற உணர்வே ராமிற்கு நிவேதாவை கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் விதைத்து இருந்தது.. ஆனால் அவரின் மகன் ராமோ இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டு விட்டானே,

சாவித்திரியும் நிவேதா அம்மா காவேரியும் நெருக்கமான தோழிகள்.. அவர்களின் இந்த நட்புக்கு காரணம் அவர்கள் இருவரின் கணவனும் நண்பராக இருந்தது தான்..

ராம் அப்பா கணேசன் நிவேதா அப்பா ஜெயந்தனும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்தனர்.. அதன் அடிப்படையில் இருவருக்கும் ஒரு நல்ல நட்பு இருந்தது.. அந்த நட்பு வீடு வரை தொடர்ந்தது..

  ஜெயந்தனுக்கு அம்மா அப்பா சொந்தம் என யாருமே கிடையாது.. அதனால் சாவித்ரியிடம் கணேசன் அறிமுகப்படுத்தும் போது இதை சொல்ல, அதனால்லே சாவித்ரி ஜெயந்தனை உடன் பிறவா சகோதரனாகத்தான் நினைத்தார். அவரும் வாய் நிறைய அக்கா அக்கா என்று தான் சாவித்ரியை அழைப்பார்.. இரண்டு வயதான ராம் மீதும் அவருக்கு மிகவும் பிரியம்..

இந்நிலையில்தான் ஜெயந்தன் ஒருநாள் காவிரியை அழைத்து வந்து தான் காதலிக்கும் பெண் திருமணம் செய்ய நினைக்கும் பெண் என்று கணேசன் சாவித்திரி இருவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார்.. காவிரிக்கு சொந்தபந்தமும் நிறைய இருந்தது செல்வ செழிப்புக்கும் குறைவில்லாமல் இருந்தது அதுவே இவர்கள் இருவரின் காதலுக்கும் பலத்த எதிர்ப்பாக இருந்தது..

காவிரியின் பெற்றோர் யாரும் இல்லாத வசதி குறைவான ஜெயந்தனை மருமகனாக ஏற்க தயாராகவே இல்லை.. அவருக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்ய ஆரம்பித்து விட்டனர்.. காவிரி வெளியேற முடியாத அளவுக்கு அவருக்கு காவலும் இருந்தது..

இதை அறிந்த ஜெயந்தன் தற்கொலைக்கு முயற்சி செய்தார்… அவரை மருத்துவமனையில் அனுமதித்து போராடி காப்பாற்றினர்.. ஜெயந்தன் என்னை எதுக்கு காப்பாத்துனீங்க.. காவிரி இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம்.. அவளை வேற யாரோட சேர்த்து வச்சு என்னால் பார்க்க முடியாது.. என்னை சாக விடுங்க என மருத்துவமனையில் ரகளை செய்ய ஆரம்பித்தார்.. இவரைப் பார்த்த கணேசனுக்கும் சாவித்திரிக்கும் மனது கேட்கவில்லை..

காவிரி பெற்றோரிடம் சென்று பேசி பயனில்லை.. அதனால் போலீஸ் வரைக்கும் சென்று, காவிரிக்கு விருப்பம் இல்லாத திருமணம் என கூறி,அவங்க வீட்டில் இருந்து மீட்டு ஜெயந்தனுக்கும் காவிரிக்கும் திருமணம் செய்து வைத்தனர்.. எங்க பேச்சை மீறி போகிற இல்ல, இனிமே நீ எங்க வீட்டு வாசப்படியை மிதிக்கக்கூடாது என்றனர் காவேரியின் பெற்றோர்..

அவர்களை மீறி திருமணம் செய்து கொண்ட காவிரியும் ஜெயந்தனும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்தனர்.. ஜெயந்தன் காவிரியை கையில் வைத்து தங்கினார்..

திருமணமான மறு வருஷமே நிவேதாவும் பிறந்தால் அவர்களின் வாழ்க்கை எந்தவித தங்கு தடையும் எந்தவித பிரச்சினையும் இன்றி சந்தோஷமாக கழிந்தது.. அப்படி சந்தோஷமாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை ஜெயந்தன் இடியை இறக்கினார்

அப்போது நிவேதாவுக்கு 18 வயது இருக்கும் கல்லூரியில் காலெடுத்து வைத்த சமயம், ஜெயந்தனுக்கு அலுவலகத்தில் வேலை பார்க்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.. அது காவிரி காதிலும் விழுந்தது..

காவிரியால் நம்ப முடியவில்லை உண்மையா என்று கணவனை கேட்க,ஆமா என்றார் கொஞ்சமும் கூச்சமின்றி,

காவேரி அந்த பழக்கத்தை விட சொல்லி சண்டை போட, அவளை விட முடியாது.. அவளை எனக்கு கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று விவாகரத்து நோட்டீஸும் அனுப்பினார்..

காவிரி அதிர்ந்து தான் போனார் வயசுக்கு வந்த பொண்ணு வெச்சிருக்கோம்ங்க,வேணாங்க, இந்த விவாகரத்து இந்த பழக்கம் எல்லாம் வேணாம் என்று காலில் விழாத குறையாக கெஞ்ச ஜெயந்தன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை..

சாவித்திரி கணேசன் கூட கண்டிக்க என் குடும்ப விஷயத்தில் தலையிட நீங்க யாரு என்று எடுத்து எறிந்து பேசினார்.. அவருக்கு நிவேதா பற்றி கவலையும் இல்லை காவேரி பற்றி கவலையும் இல்லை தன்னுடைய சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று நினைத்தார் அந்த சுயநலவாதி..

நீதிமன்றத்தில் விவாகத்து தர மாட்டேன் என்று காவேரி பிடிவாதமாக நிற்க, கொஞ்சமும் மனசாட்சி இல்லாத ஜெயந்தன் காவிரியின் நடத்தையை குறை கூறினார்.. கணேசன் உடன் அவருக்கு தவறான தொடர்பு என்று நீதிமன்றத்தில் பொய்யாக நிரூபித்து விவாகரத்தும் பெற்றுக் கொண்டார்..

நீதிமன்றத்தில் இருந்து நொறுங்கி போய் வீட்டுக்கு வந்த காவேரி உயிரை போக்கி கொள்ள முடிவு செய்து மருந்தை குடிக்க..

அவரை போராடி காப்பாற்றினாலும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்.. எங்கள் மீறி போய் கல்யாணம் பண்ணின அவளுக்கு இது தேவை தான்.‌ அனுபவிக்கட்டும் என்ற ரீதியில் காவிரி பெற்றோரும் சொந்தமும் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை..

18 வயதில் நிரம்பிய நிவேதாவால் என்ன செய்ய முடியும் அவளிடம் கூட சரியாக பேசாது அவள் நினைவு இல்லாது சுவரை வெறிக்கும் காவேரியை பார்த்து அழ தான் முடிந்தது.. அந்த துரோகத்திலிருந்து காவேரி மீண்டு வரவே சில வருஷமானது.. இன்னும் முழுதாக மீள் முடியாமல் மனதால் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்..

அவர்கள் இருவரையும் பார்க்கும்போது சாவித்திரிக்கு குற்ற உணர்வு அதிகரித்தது. அன்று மட்டும் தான் போலீஸ்க்கு சென்று காவிரியை அவர் வீட்டில் இருந்து அழைத்து வராமல் இருந்திருந்தால் காவிரிக்கு இந்த நிலை வந்திருக்கிறதோ என்று,

அப்போதே ஒரு முடிவு செய்தது தான் நிவேதாவுக்கு ராமை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று,

அவள் வேற வீட்டிக்கு அனுப்பி அங்கு அவளை சரியாக பார்த்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது.‌ ராமை திருமணம் செய்து வைத்து அவரே நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என முடிவு செய்ய, அவர் மகன் ராமோ இப்புடி காதல் என்று வந்து நிற்கின்றானே,

அடுத்து என்ன செய்வது என்றே அவருக்கு தெரியவில்லை..

கணேசன் அறைக்குள் வர, பாருங்கள் இந்த பையன் என்ன சொல்றான்னு,

எவளோ ஒருத்திக்கா நம்ம நிவியை வேணாம்னு சொல்றான்.. காவிரி கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவ்வளவு நம்பிக்கையா பேசிட்டு வந்து இருக்கேன்…

அவளும் என்னை நம்பி தான் இருக்கா, இவன் என்னடானா இப்ப இப்படி வந்து சொல்லிட்டு இருக்கான் அவனுக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு நினைக்கிறேன் என கணவனிடம் புலம்பினார்,

இந்த விஷயத்தில் அவன் நம்மகிட்ட என்ன சமாதானம் சொன்னாலும் இறங்கி போயிடவே கூடாது சரியா, நிவியை தான்அவன் கல்யாணம் பண்ணிக்கனும் அதில் நாமா உறுதியா இருக்கனும் சரியாங்க என சாவித்ரி கேட்க.. அவரும் சம்மதமாக தலை அசைத்தார்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 40

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!