அலுவலகத்தில் இருந்த ப்ரதாப்பிற்கோ வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. பயங்கர டென்ஷனாக இருந்தது..
அவனை டென்ஷன் ஆக்கும் அளவுக்கு யாருக்கு அவ்வளவு தைரியம் இருக்கும் அவன் மனைவி விஷ்ணுவை தவிர, அவளே தான்.. அவனை சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் அவள் செய்யும் அலும்புகளால் அவனின் கோபம் இன்னுமே அதிகரிக்க தான் செய்கிறது..
இரண்டு நாட்கள் முன்பு அலுவலகம் விட்டு வீட்டுக்கு சென்றவனை அவன் அம்மா தேவகி பிரதாப் உன்கிட்ட பேசணும் என்று அழைக்க,
என்ன விஷயமா சொல்லுங்க என்றபடி அமர்ந்தான்..
ப்ரியா சின்ன பொண்ணு..உன்னை விட பத்து வயசு கம்மி உலகம் தெரியாத பொண்ணு
வெளுத்தது எல்லாம் பால்லுன்னு நம்புற அளவு ரொம்ப வெகுளி, யாராவது எதையாவது சொன்னா உடனே நம்பிடும் சின்ன பிள்ளை தானே என அவர் பேசி கொண்டே போக,
எதுக்கு இது என்ற ரீதியில் அவரையே ப்ரதாப் கூர்மையாக பார்த்தான்..
அது புரிந்தவர் ஏதாவது உன் மனசு கஷ்டப்படுற போல இல்ல பிடிக்காத போல நடந்துக்கிட்டாலும் நீ எதையும் மனசில் வச்சுக்காத ப்ரதாப்,
ஏன்னா ப்ரியா சின்ன பொண்ணு மாசமா வேற இருக்கா, இந்த டைம்ல சண்டை போடுறது, திட்டுறது, பேசாம இருக்கிறது, அப்புடி எல்லாம் பண்ண கூடாதுப்பா
அவளை ரொம்ப பத்திரமா பார்த்துக்கணும்.. அவ மனசு கஷ்டப்பட்டா வயித்தில் இருக்கிற குழந்தையையும் அது பாதிக்கும் என்றார் தேவகி..
ப்ரதாப்புக்கு புரிந்தது.. இது எல்லாம் தன் தர்ம பத்தினியின் வேலை, அவளுக்காக தூது அனுப்பி இருக்கிறாள் என்று,
அவனுக்கு அது இன்னும் கோவத்தை தான் கொடுத்தது.. அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயத்தை அவனின் அம்மாவாகவே இருந்தாலும் அவர்களிடம் சொல்லி இருக்கிறாளே என கோவம் வந்தது.. அவ தான் விவஸ்தை இல்லாம சொன்னான இவங்களும் வந்து பேசுறாங்களே என தேவகி மேலும் கோவம் வந்தது அடக்கி கொண்டான்..
இது இப்ப எதுக்கு சொல்றீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா. எங்களுக்குள்ள ப்ராப்ளம் ஏதும் இல்லை. அப்புடின்னு உங்கிட்ட யார் சொன்னது? என கூர்மையாக அவரை பார்த்தபடி கேட்டான்..
தேவகி திருதிருவென முடித்தார்.. இதுக்கு தானே பேச மாட்டேன் என்றார்.. விட்டாளா அவள்..
விஷ்ணு தான் கணவனை எப்புடி சமாதானம் செய்வது என யோசித்து யோசித்து களைத்தவள் தேவகியிடம் வந்தாள்..
எனக்கு ஏதாவது கஷ்டமான வேலை ஏதாச்சும் கொடுங்க மாமியாரே என கேட்டபடி, இந்த மாதிரி நேரத்தில் வேலை எல்லாம் செய்ய கூடாது போய் ரெஸ்ட் எடு போ என தேவகி விரட்ட,
முடியாது எனக்கு ஏதாவது கஷ்டமான வேலை கொடுங்க.. இல்லை சீரியல் வர மாமியார் போல மாசமா இருக்க என்னை கொடுமை பண்ணுங்க என்றவளை ஏற இறங்க பார்த்தவர், உனக்கு என்னடி ஆச்சு என கேட்க,
உங்க பையன் என்னோட கோவிச்சிட்டு பேச மாட்டேங்கிறார்.. அவரை பேச வைக்க தான்.. என்னை நீங்க கொடுமை பண்ணுனா என் மேல்ல பாவப்பட்டு பேசுவார் அதற்கு தான் என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு,
என்ன சண்டை தேவகி கேட்க, அது எல்லாம் உங்களுக்கு எதுக்கு சண்டையை சமாதானமாகனும் அதற்கு என்னை கொடுமை பண்ணுங்க என ஒற்றை காலில் நிற்க,
நீ சொல்ற போல் பண்ணுனா உன் கூட பேசிடுவான்.. ஆனா ஜென்மத்திற்கும் என் கூட பேச மாட்டான்டி, சும்மாவே உன்னை ஏதும் சொன்னா முறைப்பான்.. இதில் இந்த மாதிரி நேரத்தில் கொடுமை வேற பண்ணனுமா, அவ்ளோ தான் நீ என் அம்மாவே இல்லைன்னு ஒதுக்கி வச்சிடுவான்..
அத்தம்மா ப்ளீஸ் என கெஞ்ச, ஏன்டி படுத்துற என்றார் தேவகி..
சரி அப்ப அவர்கிட்ட ஏதாவது பேசி என்னோட சமாதானமா போக சொல்லுங்க என்றாள்..
உங்க இரண்டு பேருக்கும் நடுவில் நான் எப்புடி வர முடியும்.. அது பர்தாப்பிற்கு பிடிக்காது என்றார் தேவகி..
ஆ… அது எல்லாம் எனக்கு தெரியாது... நீங்க ஏதாவது பண்ணனும்.. இல்லைன்னா நான் சரியா சாப்பிட மாட்டேன்.. மாத்திரை எடுத்துக்க மாட்டேன் என மிரட்ட பதறினார் தேவகி..
அந்த மாதிரி எல்லாம் எதுவும் பண்ணிடாதா ப்ரதாப்கிட்ட நான் பேசுறேன் சரியா என்றதும்,
ம்.. அது என்றாள்.. குழந்தைக்காக சரி என ஒப்புக் கொண்டு பேச இதோ அவர் மகன் வாயை கிளறுகிறானே, சமாளிக்க வேண்டும் என நினைத்தவர்,
ச்சே யாருமே சொல்லலை.. ப்ரியாவும் சொல்லலை.. ஜென்ட்ரல்லா சொன்னேன் ப்ரதாப் ப்ரியா மாசமா இருக்கா.. நம்ம வீட்டு வாரிசை நாமா தானே பத்திரமா பார்த்துக்கணும் அதற்காக தான் சொன்னேன் என சமாளிக்க,
சரி என்னும் விதமாக தலை அசைத்தான்.. அப்ப ப்ரியாகிட்ட பேசிடுவ தானே என தேவகி ஆர்வமாக கேட்க, அவரை முறைத்தான்.. உளறிட்டோம் என்பது அவருக்கு புரிந்தது..
குட் நைட் ப்ரதாப் நான் வரேன் என எழுந்திருக்க, அம்மா என அழைக்க,
தேவகி திரும்பி பார்த்தார்.. உங்களுக்கு எப்புடி உங்க வீட்டு வாரிசு மேல்ல அக்கறை இருக்கோ, அதே போல் ஏன் அதை விட அதிகமான பாசம் அக்கறை பார்த்திபனுக்கு அவன் குழந்தை மேல்ல இருந்து இருக்கும் என்றான்..
தேவகிக்கு சுருக்கென்று இருந்தது ப்ரதாப் சொன்னது.. உங்க பொண்ணை அவன் அடிச்சிட்டான்.. அதுவே உங்களுக்கு அவ்ளோ வலிச்சுது.. அப்ப அவனுக்கு என்ற ப்ரதாப் மேலும் எதுவும் சொல்லாது மேலே அறைக்கு விட்டான்..
தேவகிக்கு இப்போது தன் தவறு நன்றாக உரைத்தது.. பார்த்திபன் அடித்து விட்டான் என கோவப்பட்டவர்க்கு, எதற்காக அடித்தான் என்பதும் அவன் வலியும் இழப்பும் புரியாமல் போனதே, அன்று மட்டும் தான் பவித்ராவுக்கு சப்போர்ட் செய்யாமல் அவளை தவறை சொல்லி புரிய வைத்து இருந்தால்.. விவாகரத்து அது இது என செல்லாமல் அவள் வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்குமோ என இப்போது கவலைப்பட்டார்..
அறைக்குள் கோவமாக வந்தான் ப்ரதாப்.. மெத்தையில் அவனை எதிர்பார்த்து இருந்த விஷ்ணு பேசுவான் என ஆர்வமாக அவன் முகத்தை பார்க்க,
எதுவுமே பேசவில்லை ப்ரதாப்.. டவலை எடுத்து கொண்டு பாத்ரும் சென்று விட்டான்..
மாமியார் சொதப்பிட்டு போலயே, ச்சே என சலித்து கொண்டாள்..
தேவகியோடு தூது நின்று இருந்தாள் பரவாயில்லையே, காலை எழுந்து அலுவலகம் கிளம்பி அறையை விட்டு வெளியே வர பாட்டி, அவனின் அப்பா வெங்கடேஷ், ஏன் விசாலாட்சி கூட விஷ்ணுக்காக தூது வந்து இருந்தார்..
ப்ரதாப்பிற்கே ஆச்சரியம் விசாலாட்சி விஷ்ணுவிற்கு ஆதரவாக பேசுவது, பேசாமல் எப்புடி?
உனக்காக நான் ஏன் பேசனும், முடியாது போ என்ற விசாலாட்சியிடம், நீங்க பேசனும், இல்லைன்னா வம்சிக்கு கல்யாணம் நடக்காது.. இப்ப நீங்க அவருக்கா பொண்ணு பார்த்ததுட்டு இருக்கீங்க தானே, அந்த பொண்ணு வீட்டில் எல்லாம் வம்சியை பத்தூ தப்பு தப்பா சொல்லி கல்யாணம் நடக்காம பண்ணிடுவேன் என மிரட்ட, அப்புடி எல்லாம் பண்ணிடாதம்மா பேசுறேன் பேசுறேன் என ஒத்துக்கொண்டார்..
அவர்களின் தனிப்பட்ட விஷயத்தை, இப்புடி கடைப்பரப்புகிறாளே என, எல்லாரும் பேச பேச ப்ரதாப்க்கு கோவம் தான் அதிகரித்தது..
கோவமாக ஆபிஸுக்கு செல்ல அங்கு அவன் அறையில் பார்த்திபன் இருந்தான்..
உன் தங்கச்சி பத்தி பேச வந்து இருந்தா வெளிய போ என்றான் கோவமாக, நேற்றிலிருந்து அவளுகாக பேசி அனைவரின் கோவத்தையும் பார்த்திபனிடம் காட்டினான்..
நான் ஆபிஸ் விஷயமா தான் பேச வந்து இருக்கேன்.. நேத்து நீங்க தான் பார்க்க வர சொல்லி இருந்தீங்க சார் என பார்த்திபன் நிதானமாக சொல்ல,
என்னை அசிங்கமா திட்டுறீங்களா பார்த்திபன் சிரித்தபடி கேட்க,
அசிங்கமா தான் திட்டுறேன்.. ஆனா உன்னை இல்ல உன் தங்கசிலையை என்றான்..
சிரித்த பார்த்திபன் ஆனாலும் என் தங்கச்சி பாவம் சின்ன என ஆரம்பிக்க
டேய் சின்ன புள்ள சிங்கப்பூர்ல சிலைன்னு நீயும் ஏதும் ஆரம்பிச்ச உன்னை கொன்னுடுவேன்டா என்றான் ப்ரதாப் விரல் நீட்டி கோவமாக,
இன்னும் பலமாக சிரித்தான் பார்த்திபன்..
சிரிக்காத டா கோவம் கோவமா வருது.. புள்ளையாடா வளர்த்து வச்சு இருக்கீங்க.. சரியான அரை வேக்காடா வளர்த்து என்கிட்ட தள்ளி விட்டு இருக்கீங்க என்றான் கோவமாக ப்ரதாப்,
இதை நாங்களும் சொல்லாம்ல உங்க வீட்டுலையும் ஒரு அரை வேக்காடு இருக்கு பவித்ராவை சொன்னான் பார்த்திபன்..
ஆஹான் இது எப்ப இருந்து, சார்வால் பொய் சொல்றதா இருந்தாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்லுங்க.. கல்யாணம் வேண்டாம் பிடிக்கலை நிறுத்திடுங்கன்னு தேடி வந்து சொன்ன போதும், என் தங்கச்சி தான் வேணும்னு வம்படியா கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப என்ன குறை சொல்றது நியாயமா கொடுக்கு(மாப்பிள்ளை) என பார்த்திபன் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க,
ப்ரதாப்போ அதிர்ந்து பார்த்தான்.. இதையும் சொல்லி வச்சு இருக்கா எருமை எருமை என மனதிற்குள் மனையாளை திட்டியவன், உன் தங்ககுச்சி இஷ்டத்திற்கு அளந்து விட்டு இருக்கா அது எல்லாம் உண்மை இல்லை என்றான்..
ஹா ஹா என பலமாக சிரித்த பார்த்திபன் கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்டயே உனக்கா நான் ஏன்டா கல்யாணம் பண்ண போறேன்.. என் விருப்பம் இல்லாம என் சுண்டு விரலை கூட அசைக்க முடியாது.. மை லைஃப் மை ரூல்ஸ்ன்னு பஞ்ச் டயலாக் எல்லாம் விட்டுட்டு இப்ப என் தங்ககுச்சி மேல்ல பழி போடுறது நியாயமா கொடுக்கு என பார்த்திபன் இன்னும் சிரிக்க,
அது தான் அது தான் நான் செஞ்ச ஓரே தப்பு அதுக்கு தான் இப்ப அனுபவிக்கிறேன்..
இப்ப வருத்தப்பட்டு நோ யூஸ் கொடுக்கு என்ஜாய் என பார்த்திபன் சிரிக்க,
உனக்கு கொஞ்சமாவது என்மேல்ல பாசம் இருக்காடா பார்த்தி எருமை, நான் உன்னை எனக்காக பேச சொன்னா.. நீ ஏதேதோ பேசிட்டு வந்து இருக்க விஷ்ணு பார்த்தியை திட்ட,
ப்ரியா லூசு முதல்ல இந்த மாதிரி தூது விடுறதை நிப்பாட்டு, ப்ரதாப்புக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடு அவராகவே சரியாகிடுவார்.. நீ இதை போல் ஏதாவது செஞ்சா அவர் கோவம் அதிகமாகும்.. அதனால் அமைதியா இரு என்றான் பார்த்திபன்.. அவன் சொல்வதை ஏற்று அமைதியாக பொறுமையாக இருக்கும் ரகமா அவன் தங்கை..
அடுத்த நாளே ப்ரதாப்பை சமாதானம் செய்கிறேன் என வேறு ஒன்றை கையில் எடுக்க அது தான் ப்ரதாப்பின் தற்போதைய கோவத்திற்கும் எரிச்சலுக்கும் காரணம்..