அரண் – 22
உடனே தனது செக்ரட்டரி வேந்தனை வரும்படி அழைத்த துருவன் வேட்டையாடும் வேங்கையைப் போல தனது ஆபீஸ் ரூமுக்குள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
நடப்பது யாதென புரியாமல் வேகமாக அறைக்குள் நுழைந்த வேந்தன் துருவனின் ஆவேசமான நடையைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் வாசலிலேயே நின்றான்.
இத்தனை வருடங்களாக துருவனிடம் வேலை புரிபவனுக்கு துருவனின் சிறு கண் அசைவில் கூட மாற்றம் ஏற்பட்டாலே அறிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் நுண்ணிப்பாக அவனுடன் இணைந்து வேலை புரியும் ஒரு உண்மையான தொழிலாளி என்று வேந்தனை கூறலாம்.
அப்படிப்பட்டவன் இதனை அறிந்து கொள்ள மாட்டானா..? அவன் வந்து வாசலிலேயே அப்படியே அதிர்ந்து போய் நிற்பதை பார்த்த துருவேந்திரன்.
“லெட்ஸ் வெல்கம் மை டியர்..” என்று கிண்டலாக உள்ளே அழைக்க,
அவன் உள்ளே வந்ததும் அங்கு நின்ற இருவரும் வெளியே சென்றனர்.
வேந்தனை ஒரு ஆழமான பார்வை பார்த்துவிட்டு எழுந்து அவன் அருகில் நெருங்கிச் செல்ல வேந்தனோ இரண்டு அடி பின்னால் கால் வைத்து பயத்துடன் அவனை எதிர் நோக்கினான்.
அவனது பயம் துருவனுக்கு பல சந்தேக கேள்விகளை மனதினுள் எழச் செய்தது.
‘இந்த விடயத்தை வேந்தன் செய்திருக்க மாட்டான் என்று மனம் கூற மூளையோ அவனைவிட இந்த அறைக்குள் நுழைய வேறு யாருக்கும் இடமில்லை அது அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் தெரிந்த விடயமே
அப்படி இருக்கையில் ஒருவரும் வராத இடத்திற்குள் எவ்வாறு நஞ்சு புகுந்தது இதற்கெல்லாம் முடிவு காண வேண்டும் என்றால் அதனை வேந்தன் இடமே அறிந்து கொள்ளலாம்..’ என்று மனதினுள் எண்ணியவன்,
சிறு புன்னகையுடன், தனது முன்னே மேசையில் இருக்கும் நீர் நிரம்பிய கிளாஸினை எடுத்து வேந்தன் முன் நீட்டினான் துருவன்.
அதனைப் பார்த்ததும் புருவம் சுருக்கிய வேந்தன்,
“என்ன சார் தண்ணீர் வேணுமா இந்தத் தண்ணீரை கீழே ஊற்றி விட்டு வேற தண்ணீர் எடுத்து வரவா..” என்று புரியாமல் கேட்க,
அவனது ஒவ்வொரு அங்க அசைவுகளையும் கண்ணிமைக்காமல் கிரகித்து உள்வாங்கிக் கொண்டிருந்த துருவன்,
அவனை ஆராய்ந்த படி,
“எனக்கு வேணாம் இது உனக்குத்தான் நீயே குடி…”
“சார் இது ரொம்ப காஸ்ட்லியான மினரல் வாட்டர் உங்களுக்காக தான் இதை ஆர்டர் பண்ணி எடுத்தோம் இது நம்முடைய ஆவா கம்பெனி வாட்டர் தான் எனக்கு வேணாம் சார் நான் இதெல்லாம் குடிக்கிறது இல்லை வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து விடுவேன். நம்மளுக்கு அது தான் சரியா வரும்..” என்று வெள்ளந்தியாக அவன் கூற,
துருவன் கழுகு பார்வையுடன்,
“அப்படியா பரவாயில்லை இன்று எனக்காக மட்டும் இதை குடி..”
“ப்ளீஸ் சார் வேணாம்..”
“நான் உன்னோட பாஸ் நான் சொல்றதை நீ கேட்கத்தான் வேண்டும். இந்த தண்ணிய கூட நான் சொன்னா குடிக்க மாட்டியா..?”
“அப்படி இல்ல நான் இப்போதான் தண்ணி குடிச்சிட்டு வந்தேன் எனக்கு தண்ணீர் தவிக்கல..”
“ஒரு கிளாஸ் வாட்டர் தானே, இதை குடிக்கிறதுல என்ன இருக்கு..”
“ஏன் இப்படி என்ன கட்டாயப்படுத்துறீங்க பாஸ் வேணாம்ன்னா விடுங்களேன்..” என்று அவன் சற்றே எரிச்சலுடன் கூற,
துருவனுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது.
“ஏன் நீ குடிக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும். அதுதான் உன்னை கட்டாயப்படுத்துறேன் எத்தனை முறை சொல்லியும் நீ இந்த தண்ணிய குடிக்கல.
ஆனா, என்னோட முதல் இருந்த வேந்தனாக இருந்திருந்தால் நான் இதை குடி என்று சொல்லி முடிப்பதற்கு முன்னே எந்தக் கேள்வியும் கேட்காமல் மறுபேச்சு பேசாமல் இந்நேரம் குடித்து முடித்து இருப்பான். அப்படின்னா இது வேந்தனோட மறுமுகமாகவும் இருக்கலாம் அப்படித்தானே..!”
“நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்குப் புரியல பாஸ்..”
“பொறு வேண்டாம் இனி தான் விஷயமே இருக்கு அதுக்குள்ள என்ன அவசரம் ஏன் முகம் எல்லாம் அப்படி வியர்க்குது..?”
“இல்ல பாஸ் லிப்ட் பிஸியா இருந்துச்சு அதனால மாடிப்படிகளில் ஏறி தான் வந்தேன்..”
“ஓஹோ ரொம்ப பதட்டமா இருக்குற மாதிரி இருக்கு..”
“அப்படி எல்லாம் இல்ல..”
“இந்த தண்ணீரில் விஷம் கலந்திருக்கு..” என்று துருவன் கூற,
“என்ன பாஸ் சொல்றீங்க..?” என்று வாயைப் பிளந்தான் வேந்தன்.
“என்னடா ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிற..”
“பாஸ் உண்மையில எனக்கு ஒன்னும் தெரியாது..”
“உனக்கு எப்படித் தெரியாம போகும் நீ மட்டும் தான் இந்த ரூமுக்குள்ள வரலாம் போகலாம் வேறு யாரையுமே நான் அனுமதிக்கிறது இல்லை.
இன்னைக்கு என்னோட போன்ல சிசிடிவி புட்டேஜில் வந்து போனது யாருன்னு சொல்லி எல்லாமே செக் பண்ணிட்டேன். எவரும் உள்ளே நுழையவில்லை நீ மட்டும் தான் வந்திருக்க அதுவும் காலையில உன் கையால கொண்டு வந்து தண்ணிய வச்சிருக்க.,”
“உண்மையிலேயே நான் அந்த விஷத்தை கலக்கவில்லை எனக்கு ஒண்ணுமே தெரியாது..”
“அந்த கிளாஸ்ல கலந்திருக்கிறது உலகிலேயே மிக கொடிய நஞ்சான கறிய நாகப்பாம்பில் பல்லில் உள்ள விசம் அது ஒரு துளி பட்டால் கூட உடனே நரம்பு மண்டலம் பாதித்து மூச்சு குழாய் அடைத்து இறந்து விடுவர்
நல்ல வேலை அந்த கிளாசுக்கு மேல ஒரு சிறு கொழுப்பு படலம் மாதிரி என்னோட கண்ணுக்கு மஞ்சளாக தெரிந்ததால தான் நான் அதை கண்டுபிடித்தேன் இல்லையென்றால் இந்நேரம் நான் சிவலோகம் தான்.
அப்படிப்பட்ட கொடிய விஷத்தை எனக்கு தந்து சாகடிக்கிற அளவுக்கு உனக்கு என் மேல என்ன கோபம்
யார் உன்கிட்ட இதை செய்ய சொன்னது..? இப்ப சொல்லு எனக்கு இப்ப தெரிஞ்சு ஆகணும் உனக்கு யாரோ காசு தந்து இதை செய்ய சொல்லி இருக்காங்க நீயும் பணத்தாசைல இப்படி செஞ்சிருக்க அப்படித்தானே..”
“இல்ல பாஸ் நீங்க என்ன தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க எனக்கு நீங்க சொல்றதெல்லாம் ஏதோ கதை சொல்ற மாதிரி இருக்கு அப்படி நான் எப்படி பாஸ் நம்புங்க ப்ளீஸ் நான் இதைச் செய்யல..”
“உன்னை எப்படி நம்புறது இவ்வளவு நேரமும் உன் மேல ஒரு துளி அளவு கூட எனக்கு சந்தேகமே வரல ஆனா இந்த சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ் பார்த்ததும் என்னோட மைண்ட் பிலக் ஆயிட்டு.
உன்ன நான் எவ்வளவு நம்பினேன் எனக்கு இப்படி துரோகம் செய்யணும்னு உனக்கு எப்படி மனசுல தோணுச்சு
உன்னை நான் ஒரு செக்ரட்டரி மாதிரியா பார்த்தேன் என்னோட கூட பிறக்காத தம்பி மாதிரி தானே உன்னோட நான் பழகினேன் எப்படி உன்னால் இதை செய்ய முடிந்தது..?”
“ஐயோ பாஸ், நான் உண்மையில இதை செய்யவே இல்ல நான் எப்படி இதை உங்களுக்கு புரிய வைப்பேன்…” என்று இரு கைகளையும் தலையை பிடித்து கொண்டு உட்கார்ந்து விட்டான்.
அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தவன் பின்பு கண்கள் பிரகாசிக்க ஏதோ ஞாபகம் வந்தவனாக எழுந்து, “பாஸ் பாஸ் வளமையாக நான் தான் உங்களுக்கு தண்ணீர் எடுத்து வைப்பேன் ஆனால் இன்று சரோஜா அம்மா தான் கொண்டு போய் வைக்கச் சொல்லி கொடுத்தாங்க..”
‘சரோஜா அம்மா துருவனின் கம்பெனியில் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடும் ஒரு வயதான பெண்மணி அவர் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக துருவனின் அப்பா காலத்தில் இருந்தே வேலை செய்கிறார்.
மிகவும் ஒழுக்கமானவர் எப்பொழுதும் தனது வேலையில் நேர்மையாகவே இருப்பார். சரோஜா அம்மா மீது அவனுக்கு இதனால் ஒரு தனி மரியாதையே உண்டு. அவரது வேலைகள் எப்பொழுதும் சீராகவே இருக்கும். அதில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாது அப்படிப்பட்டவர் எப்படி இவரு செய்தார்..’ என்று மனதிற்குள் சிந்தித்தவன்,
“என்ன உன்னோட திட்டம் பலிக்காததால வேற யாரையாவது மாட்டி விட பாக்குறியா…?”
“இல்ல பாஸ் முதல் நான் சொல்ற விஷயத்தை கேளுங்க..”
“என்ன சொல்லு.. ஆனா நீ சொல்றது ஒன்னு கூட பொய்யின்னு எனக்கு தெரிஞ்சது உன் உடம்புல உசுரு இருக்காது மைண்ட் இட்..” என்று கடினமான குரலில் எச்சரிக்க,
அவன் கூறிய முறையிலேயே பயந்து உமிழ் நீரை விழுங்கிக் கொண்டு, “வளமையாவே நான்தான் உங்களுக்கு கிளாஸ்ல தண்ணி ஊத்தி வைக்கிற இன்னைக்கு நேரத்துக்கு சரோஜா அம்மா வந்து எல்லா வேலையும் செய்து முடிச்சிட்டாங்க.
அப்புறம் நான் தண்ணீர் எடுக்கப் போக அவங்களே கிளாஸ்ல தண்ணி ஊத்தி வந்து தந்தாங்க பாஸ்
இதை துருவன் சார் மேசையில வெச்சிடுங்கன்னு சொன்னாங்க நான் இது அவர் குடிக்கிற தண்ணியான்னு கேட்க,
ஆமாங்க சார் நீங்க வர லேட் ஆயிட்டு அதுதான் நானே எடுத்து ரெடி பண்ணி வச்சிட்டேன் எல்லாம் கழுவி சுத்தமான தான் எடுத்து வச்சேன் என்று சொன்னாங்க எனக்கு அப்போ ஒன்னும் தோணல நானும் வர லேட் ஆயிட்டு தானே அதனால அவங்க செஞ்சாங்க என்று நான் நினைச்சுகிட்டேன்
இப்போ நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா சரோஜா அம்மா கிட்ட தான் என்னன்னு விசாரிக்கணும் என்று அவன் சொல்லிக்கொண்டு போக துருவனுக்கோ நடப்பவை அனைத்தும் குழப்பமாகவே இருந்தது.
யாருக்கு யார் எதிரி யார் யாரை கொல்ல திட்டமிடுகின்றனர் என்று தெரியாமல் அந்த முகம் தெரியாத எதிரி மீது மிருகத்தனமான கோபம் எழுந்தது.
“இப்போ அவங்க எங்க இருக்காங்க..?”
“அவங்க வேலை முடிச்சு வீட்டுக்கு போயிருப்பாங்க பாஸ்..”
“அவங்கட வீடு உனக்குத் தெரியுமா..”
“தெரியும்..”
“உடனே கிளம்பு சரோஜா அம்மாவோட வீட்டுக்கு போகலாம் ஆனால் சரோஜா அம்மாவும் இல்லை என்று கூறினால் உனக்கு மன்னிப்பே இல்லை அந்த வயதான அம்மா மீது பழி சுமத்தலாம் என்று மட்டும் நினைக்காதே..”
“சரி பாஸ் ஆனால் நான் செய்யலன்னு கட்டாயமா உங்களுக்கு நிரூபிச்சு காட்டுவேன்..”
“சரி வா போகலாம்..” என்று இருவரும் காரில் ஏறி புறப்பட துருவனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.
அலைபேசியின் திரையில் அழைப்பவர் யார் என பெயரைப் பார்த்தும் புன்முறுவல் ஒன்று அந்த இறுக்கமான நிலையிலும் அவனது முகத்தில் ஜொலித்தது.
அந்தப் பதட்டத்திலும் அந்த பெயரை பார்த்தவுடன் அவனுக்கு கொஞ்சம் படபடப்பு, கோபம், டென்ஷன் அனைத்தும் குறைந்தது போல இருந்தது.
இப்போதைக்கு பேச நேரமில்லாமல் சரோஜா அம்மாவின் வீடு வர,
காரை நிறுத்திய வேந்தன்,
“சார் வீடு வந்துட்டு..” என்று கூற வேகமாக காரில் இருந்து இறங்கி வீட்டு வாசலை பார்க்க வீடோ பூட்டி இருந்தது.
ஆனால் சிறு சந்தேகம் அவனுள் எழ
“வேந்தன் எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு இந்த பூட்டை உடை உள்ள போய் பாத்துடலாம்..” என்று கூற,
துருவனின் அதிரடி நடவடிக்கையை பார்த்து மிரண்டு போன வேந்தன்,
“பாஸ் கொஞ்சம் பயமா இருக்கு..” என்று அங்கும் இங்கும் சுழன்றபடி யாராவது பார்க்கின்றனரா என்று பார்த்தான்.
அவன் திரு திரு என முழித்துக் கொண்டிருக்க துருவன் அருகில் இருந்த பெரிய கல்லால் பூட்டை உடைத்து உள்ளே திறந்தான்.
திறந்ததும் அவனால் நம்பவே முடியவில்லை தலையின் மேல் இடி விழுந்தது போல அசைவற்று இருவரும் வாய் பிளந்தபடி நின்றனர்.
சரோஜா அம்மா நடு வீட்டில் தூக்கில் தொங்கிக்கொண்டு கிடந்தார்.
சரோஜா அம்மாவை சந்தித்தால் ஆவது இதற்கொரு முடிவு தெரியும் என்று பார்த்தால் மேலும் இந்த விடயம் பழ குழப்பங்களுடன் நீண்டு கொண்டே இருந்தது.
சரோஜாவின் மரணத்திற்கு யார் காரணம்..?
துருவனுக்கு விஷம் வைத்தது யார்..? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்….