அடுத்தடுத்து வந்த நாட்களிலும் விஷ்ணு அதே போல் சேட்டை செய்ய, ப்ரதாப்போ நீ தலைகீழா பின்னாலும் எனக்கு கோவம் போய் எப்ப பேசனும் தோணுதோ அப்ப தான் பேசுவேன் என்று மேலும் மேலும் பிடிவாதம் பிடிக்க என அவர்கள் நாட்கள் அப்புடியே நகர்ந்தது..
சட்டையை முழங்கை வரை மடித்து விட்டபடி தன்னை கண்ணாடியில் ஒரு முறை சரிபார்த்து கொண்டான் ராம்.. பட்டு வேஷ்டி சட்டை, படிய வாரிய தலைமுடி, நெற்றி நடுவே சந்தன கீற்று என அம்சமாக மாப்பிள்ளை போல இருந்தான்..
மாப்பிள்ளை போல அல்ல மாப்பிள்ளையே தான். இன்று அவனுக்கும் லீலாவுக்கும் திருமணம்.. கடந்த பத்து நாட்களாக மிகவும் சிரமப்பட்டு இன்று திருமணம் வரை கொண்டு வந்து இருக்கின்றான்.. ப்ரதாப்பும் இந்த விஷயத்தில் ராம்க்கு பெரிதும் சப்போர்ட்டாக இருந்ததால் தான் இவ்வளவு சீக்கிரம் திருமண நடக்க இருக்கின்றது.
நிவியை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சாவித்ரி பிடிவாதமாக நிற்க, அவரை மாற்ற முடியாத ராம்… நேரே சென்று நின்றது காவேரியிடம் தான்..
அவரிடம் லீலாவை விரும்புவதையும் அதை சாவித்ரி மறுப்பது, மறுக்கும் காரணம் அனைத்தையும் சொன்னவன்,
மேலும் “அத்தை நிவியை நான் என்னைக்கும் அப்புடி நினைச்சது இல்ல.. லீலாவை காதலிக்கலைன்னாலும் நிவியை நான் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்.. அவளை நான் கூட பொறுக்காத தங்கச்சியை போல தான் பார்க்கின்றேன்.. அப்புறம் எப்புடி என்னால் அவளை நீங்களாவது புரிஞ்சிக்கோங்க அத்தை.. நிவியை வாழ்க்கை நினைச்சி நீங்க பயப்படாதீங்க.. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க வேண்டியது என் பொறுப்பு. நம்ம நிவியை நான் அப்புடி விட்டுற மாட்டேன்” என்றான் ஆறுதலாக,
அவனை பார்த்து மெலிதாக சிரித்த காவேரி, “உன் அம்மாகிட்ட நான் பேசுறேன்” என்றார்..
அவருக்கு ராம்
நிவியை மறுத்த விஷயம் கவலைக்குள்ளாக்கியது.. நிவியின் எதிர்காலம் குறித்த பயம் வந்தது.. வெளி இடத்தில் நிவிக்கு வரன் பார்த்தால், நிச்சயம் அவள் தந்தையின் விஷயம் பெரிய தடையாக வரும்.. நிவியை அதை விஷயத்தை சொல்லியே போற இடத்தில் கஷ்டப்படுத்துவாங்களோ என்ற பயமும் வந்தது..
ஆனாலும் ராம் நிவி மீது விருப்பமில்லை வேறு பொண்ணை விரும்புகிறேன் என்று சொல்லும் போது கட்டாயப்படுத்தவா முடியும்..
உன்னை காதலிக்கிறேன் நீ தான் என் உயிர் உலகம் என உருகி உருகி காதல் வசனம் பேசி கையை கிழித்து சாக துணிந்து அவளை மணந்த அவர் கணவரே விட்டுட்டு சென்று விட, கட்டாயப்படுத்தி வாழ்க்கையை அமைத்து கொடுத்தால் அது எப்புடி இருவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும்.. என் மகளுக்கு வேற நல்ல வாழ்க்கை அவளுக்கு பிடித்த போல கடவுள் அமைத்து கொடுப்பார் என தன்னை தேற்றியவர், சாவித்ரியிடமும் இதை சொல்லியே கஷ்டப்பட்டு அவர் மனதை மாற்றி இருந்தார்.. சாவித்ரியும் மனதே இல்லாமல் ராம் லீலா கல்யாணத்திற்கு பச்சை கொடி காட்ட,
ஹப்பாடா என நிம்மதி பெரூமூச்சு விட நினைத்த ராம்.. “பாதி கடல் தான் தாண்டி இருக்க.. இன்னும் பாதி கடல் இருக்கு அதில் சாலான்னு பெரிய சுறா மீன் இருக்குடி” என்ற வம்சியை முறைத்தான்..
அடுத்த நாளே பர்தாப் ராமை அழைத்து கொண்டு லீலா வீட்டிற்கு சென்றான்.. உடன் வம்சியும் அவர்களுடன் சென்றான்.. ராம் அம்மா அப்பாவை அழைத்து செல்லவில்லை..
ப்ரதாப் தான் அவர்கள் இப்போது வேண்டாம் என ராமிடம் சொல்லி இருந்தான்… “பர்ஸ்ட் நாமா போய் பேசி முடிச்சிட்டு அப்புறம் முறைப்படி அவங்களை அழைச்சிட்டு இன்னோரு நாள் போகலாம் ராம்.. உனக்கு லீலா அம்மா பற்றி தெரியும் தானே” என்றதும் ராமிற்க்கும் அது தான் சரியென பட்டது.. அவனுக்கு சாலாவை பற்றி தெரியுமே,
அவர்கள் எண்ணம் சரியே என்பது போல் தான் அங்கு சாலா சலங்கை இல்லாமல் ஆடினார்..
“பத்தாயிரமோ இருபதுயிரமோ மாச சம்பளம் வாங்குற இவனுக்கு என் பொண்ணா, எங்க ஸ்டேட்ஸ் என்னனு தெரியுமா, என் பொண்ணை எவ்வளவு பெரிய பெரிய இடத்தில் இருந்து கேட்கிறாங்க தெரியுமா, போயும் போயும் இவனுக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்கீங்களே, என் பொண்ணை கல்யாணம் பண்ண என்ன தகுதி இருக்கு” என சாலா ஆத்திரத்தில் கத்த,
இப்படி தான் நடக்குமென எதிர்பார்த்து வந்தும் கூட ப்ரதாப் வம்சி இருவருக்கும் பயங்கர கோவம் வந்தது.. ராம் பொறுமையாக இருந்தான்.. ப்ரதாப்பும் வந்த காரியம் நடக்க வேண்டுமென கோவத்தை அடக்கிய படி அமர்ந்து இருந்தான்..
“டேய் என்ன தகுதி இருக்குன்னு கேட்கிறாங்க.. சொல்லு உங்களை பாட்டி ஆகிட்டேன் இந்த தகுதி போததான்னு” வம்சி கோவத்தோடு ராமிடம் முணுமுணுக்க,
“ம்பச் அமைதியா இருடா” என ராம் தான் வம்சியை அடக்கினான்..
“என் பொண்ணை இவன் லவ் பண்ணுனா உடனே பொண்ணு கேட்டு வந்துடுவீங்களா.. கொஞ்சம் கூட அறிவேயில்லை” போல என்றதும், வம்சியின் கோவம் எல்லையை கடந்தது..
“அவன் மட்டுமில்ல உங்க பொண்ணும் தான் லவ் பண்ணுது.. உங்க பொண்ணு சொல்லி தான் வந்து இருக்கோம்” என்றான்..
“டேய் டேய்” என ராம் தடுத்தும் வம்சி சொல்லி விட, சாலாவின் கோவம் அதிகமானது…
லில்லி என அந்த வீடே அதிர கத்தியவர் லீலா மாடியிலிருந்து பயந்தபடி கீழ் இறங்கி வர,
“இவங்க சொல்றது உண்மையா நீ இந்த ஒன்னும் இல்லாதவனை லவ் பண்றியா?” உச்சகட்ட கோவத்தில் கேட்க,
லீலா பதில் சொல்லவில்லை அமைதியாக தலை குனிந்து நின்றாள்..
இந்த மௌனமே நாயுடுவிற்கு மகளின் மனதை சொன்னது..
“ஏன்டி உனக்கு எவ்வளவு தைரியம், இதுக்கு தான் அந்த ஆபிஸ்க்கு போனியா” என கன்னத்தில் மாறி மாறி ஆத்திரத்தோடு இத்தனை பேர் முன்னால் மகளை அசிங்கப்படுத்துக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் இல்லாது அடிக்க,
லீலா அப்பா நாயுடு தடுக்க முயற்சித்தாலும் அவரையும் மீறி திமிறி கொண்டு லீலாவை அடிக்க பாய்ந்தார்..
ராமிற்கு கோவம் வந்தது.. தடுக்க போக அவனை கண்களால் வேண்டாம் என அமைதி படுத்தினான் ப்ரதாப்..
“சாலா” என்ற கண்டிப்புடன் சத்தமாக நாயுடு அழைக்க, அதில் அவரின் கோவம் புரிய சாலா அமைதியானார்.. ப்ரதாப்பையோ ராமையோ அவரால் பார்க்க முடியவில்லை தர்ம சங்கடமாக இருந்தது..
அவரின் நிலை புரிந்த ப்ரதாப் “நாயுடு சார் நாங்க கிளம்புறோம்.. ராம் ரொம்ப ரொம்ப நல்ல பையன்.. அவன் உங்க பொண்ணை ரொம்ப நல்லா பார்த்துக்குவான்.. நீங்க எங்க தேடுனாலும் உங்க பொண்ணுக்கு இவனை விட நல்ல பையன் கிடைக்க மாட்டான்.. அவ்ளோ நல்ல பையன்.. வசதியை பார்க்காதீங்க.. உங்க கிட்ட என்கிட்ட இருக்கிறது எல்லாம்.. நம்ம தாத்தா அப்பா உருவாக்குனது”..
“ஆனா ராம் சொந்த கால்ல நிற்கிறான்.. அவன்கிட்ட இருக்கிறது அவனே உருவாக்குனது.. உங்க வயசில் உங்களை விட அதிகமான வசதி அவன்கிட்ட இருக்கும்.. நான் சொல்றேன் இல்ல, நீங்களே வெளிய விசாரிச்சு பாருங்க ராமை பத்தி.. எல்லாத்தையும் விட உங்க பொண்ணுக்கும் பிடிச்சு இருக்கு.. வேற என்ன வேணும்”..
“அவளுக்கு பிடிச்சா போதுமா, அவ சின்ன பொண்ணு விவரம் பத்தலை” என மேலும் பேச வந்த சாலா நாயுடு பார்த்த பார்வையில் அடங்கினார்..
“இரண்டு நாள் நல்லா யோசிங்க நாயுடு சார்” என்றவன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்..
அவர்கள் சென்றபின் மீண்டும் லீலாவிடம் பாய போன சாலாவை நாயுடு தான் அடக்கினார்.. “இதுக்கு நீங்க ஒத்துக்கவே கூடாது.. அப்புடி ஏதும் முடிவு பண்ணுனீங்க அவ்ளோ தான்” என்ற எச்சரித்தார் சாலா..
லீலா அப்பாவுக்கோ ப்ரதாப்பே ராம்க்காக பேசுகிறான் என்றால் ராம் நல்லவனாக தான் இருப்பான் என்ற நம்பிக்கை வந்தது.. லீலாவையும் தனியே அழைத்து விசாரிக்க ராமையை திருமணம் செய்ய விருப்பம் என்று சொன்னாள்.. நாயுடுவும் தனிபட்ட முறையில் ராம் மற்றும் அவன் குடும்பத்தை பற்றி விசாரித்தவருக்கு திருப்தி தான். ஆனாலும் வசதி என்ற விஷயம் கொஞ்சம் அவரை தயங்க செய்தது..
சாலாவுக்கோ கணவன் செயல்பாடு பிடிக்கவில்லை.. ராமை பற்றி விசாரிக்கிறார் ஒரு வேளை மனம் மாறி லீலா ராம் திருமணத்திள்கு சம்மதித்தே விடுவாரோ என்ற பயம் வந்தது.. அப்புடி ஏதும் நடந்தால் சொந்த பந்தங்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டி வருமே என கல்யாணத்தை நிறுத்த வேறு வழி யோசித்தார்..
அடுத்த நாளே ராமிற்கு விபத்து நடந்தது.. நல்ல வேளை சின்ன அடி தான்.. என் பொண்ணு பக்கம் நீ வர கூடாது.. வந்தா இப்புடி ஹாஸ்பிடல் வர அளவுக்கு அடி விழாது.. ஸ்ரைட்டா மார்சுவரி தான் என்ற மிரட்டல் வேறு விடுத்து இருந்தார்..
“இன்னும் ஒரு வாரத்தில் ராம்க்கும் உங்க பொண்ணுக்கும் கல்யாணம்.. நீங்களும் உங்க வொய்ஃப் வந்தாலும் வரலைன்னாலும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும்.. உங்க வொய்ஃப்பால் என்ன பண்ண முடியுமோ அதை பண்ண சொல்லுங்க..நானும் பார்க்கிறேன் அவங்க அப்புடி என்ன பண்ணிட்டுவாங்கன்னு”,
“அவங்க அகம்பாவத்தை ஒன்னுமே இல்லாம பண்ண எனக்கு ஒரு செக்ண்ட் போதும் நாயுடு சார், ஆனா அவங்க என் குடும்பத்திற்குள்ள பிரச்சினை பண்ணுன போதும் நான் பொறுமையா போனது உங்களுக்காக தான்”..
“ஏன்னா நான் திரும்ப பண்ணனும் நினைச்சா கொஞ்சம் கூட பாவமே பார்க்க மாட்டேன்.. இந்த விஷயம் உங்களுக்கும் ரொம்ப நல்லாவே தெரியும்ன்னு நினைக்கிறேன்.. உங்க மனைவிக்கு புரிய வைங்க நாயுடு சார்… இல்லை பாதிப்பு உங்களுக்கும் சேர்த்து தான்”
என்றான்.. இத்தனையும் கோவமாக அல்ல சிரித்தபடி பேசினான்.. ஆனால் பேசிய வார்த்தைகளில் அழுத்தமும் கோவமும் இருந்தது அது லீலா அப்பாவிற்கும் புரிந்தது…
மனைவி நடந்து கொண்ட விதம் அவருக்குமே அதிர்ச்சி தான்.. அவர் நினைத்தே பார்க்கவில்லை சாலா இந்த அளவு இறங்குவார் என,
“ப்ரதாப் சாலா” என ஏதோ விளக்கம் கொடுக்க முற்பட,
“எனக்கு எந்த விளக்கமும் வேணாம்.. கல்யாண ஏற்பாட்டை நீங்க முன்ன நின்னு பண்றீங்களா இல்ல நான் பண்ணட்டுமா” என கேட்க,
நாயுடுவிற்கு வேறு வழியில்லை.. அவரே அந்த முடிவில் தான் இருந்தார்.. வசதி இல்லை என்ற விஷயம் அவருக்கு ஒரு நெருடலை கொடுத்து இருந்தாலும், அதை எல்லாம் ராமின் குணம் பின்னுக்கு தள்ளியது.. அவரே ராம் வீட்டிற்கு அழைத்து பேசலாம் என்று நினைத்து கொண்டு இருக்க, மனைவி இடையில் இப்புடி ஒரு குழப்பத்தை செய்து வைத்து விட்டார்.. நானே பண்றேன் ப்ரதாப் என்றார்.. ஓகே என்றவன் போனை வைத்து விட்டான்..
உடனே லீலா அப்பா ராம் வீட்டிற்கு சென்று மனைவி நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்டவர், திருமண பேச்சை ஆரம்பித்தார்.. வார இறுதியில் கல்யாணம் எளிய முறையில் கோவில் வைத்து கொண்டு, ரிசப்ஷன் பெரியதாக வைத்து கொள்ளலாம் என பேசி முடித்தனர்..
“நீங்க எப்புடி என்ன கேட்காம இப்புடி ஒரு முடிவு எடுக்கலாம்.. அப்புடி ஒன்னும் இல்லாத இடத்தில் சம்மந்தம் வச்சிக்கிட்டா நம்ம தகுதி தராதரம் என்ன ஆகுறது.. நம்மளை சொந்தக்காரங்க மதிப்பாங்களா” என கோபப்பட்டு கத்த,
“இப்புடி என் அப்பா அம்மா நினைச்சு இருந்தா, நீ இப்ப இங்க இருந்திருக்க மாட்ட சாலா” என்றதும் சாலா வாயடைத்து போனார்..
அவர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் தான்.. நாயுடுவின் கடைக்கு வேலைக்கு வந்தவர் மீது நாயுடு ஆசைப்பட்டு கல்யாணம் செய்து கொண்டார்.. அதுக்கு அவர் பெற்றோர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.. அதை சொல்லி காட்டவும் முகம் கசங்கி போனவர் அமைதியாக நின்றார்..
“இதோ பாரு சாலா என் பொண்ணுக்கு அவளுக்கு பிடிச்ச வாழ்க்கையை தான் நான் அமைச்சு கொடுப்பேன்.. உன்னால் அமைதியா இருக்க முடியும்னா இரு. இல்லை பிரச்சினை பண்ணுவேன் சொல்லி ஏதும் பண்ணின, என் பொண்ணு மாமியார் வீட்டிற்கு போற அதே நேரம், நீ வாழா வெட்டியா உன் அம்மா வீட்டிற்கு போக வேண்டிய நிலை வந்துடும்” என மிரட்ட சாலா பயந்து தான் போனார்.. நாயுடுவின் முகத்தில் அவ்வளவு கோவம்.. இதுவரை அவரை இவ்வளவு கோவமாக சாலா பார்த்தது கிடையாது..
சாலா அமைதியாக நிற்க, ஆ.. அப்புறம் என் பொண்ணை திட்றது அடிக்கிறதுன்னு ஏதும் பண்ணின அவ்வளவு தான் சொல்லிட்டேன் என விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றார்..
நடந்ததை எல்லாம் நினைத்து பார்த்த ராம்.. இந்த நிலைக்கு கொண்டு வரதுக்குள்ள எவ்வளவு பிரச்சினை என கண்மூடி பெருமூச்சு ஒன்றை விட்டு தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டான்.. கல்யாணம் நல்லபடியா நடக்கனும்.. மீண்டும் எந்த புது பிரச்சனையும் வர கூடாது என்ற வேண்டுதலை கடவுளிடம் வைத்து விட்டு கோவிலுக்கு கிளம்பினான்..
லீலாவும் தன் வீட்டில் கண்ணாடி முன்பு அமர்ந்து தன்னை பார்த்து கொண்டு இருந்தாள்.. ராம் வீட்டில் எடுத்து கொடுத்த பட்டு புடவை உடுத்தி இருந்தாள்.. தன்னுடைய நகை கடையிலுள்ள புது டிசைன் நகைகளை கொண்டு வந்து நாயுடு அவளிடம் குவித்து இருந்தார்..
ஆனால் அவளோ அதில் எளிய ஒரு ஆரத்தை கழுத்தில் மாட்டியவள், காதில் ஜிமிக்கி வளையல் என மிதமான அலங்காரம் தான் செய்து இருந்தாள்.. இன்று அவளுக்கு திருமணம் ஆனால் வீட்டில் அதற்கான எந்த பரபரப்பு ஆரவாரம் எதுவுமே இல்லை..
அவளிடம் கூட இல்லை.. சாதரணமாக தான் இருந்தாள்.. ராமுடன் இருக்கும் போது அவன் அவளை பேசி பேசி சிரிக்க வைத்து விடுகின்றான்.. எதை பற்றியும் நினைக்க விடுவதில்லை.. ஆனால் தனிமையில் அவளால் நடந்ததை அவ்வளவு இலகுலாக மறக்க முடியவில்லை… இவ்வளவு பிரச்சினையும் தன்னால் தானே என் நினைத்து நினைத்து மருகுகிறாள்..
அம்மா பேச்சை கேட்காமல் இருந்திருக்கலாம்.. சிங்கப்பூர் செல்லாமல் இருந்து இருக்கலாம்.. குடிக்கமா இருந்திருக்கலாம்.. ராம் ரூம்க்கு போகாமல் இருந்திருக்கலாம் என ஏகப்பட்ட லாம் போட்டு தன்னை தானே குழப்பி கொண்டு இருக்கிறாள்..
ராமை அவளுக்கு பிடித்து இருக்கின்றது.. ஆனால் இப்புடி எல்லாம் நடக்காம, காதல் அடுத்து கல்யாணம் என முறைப்படி நடந்து இருந்திருந்தா நல்ல இருந்திருக்குமே மனம் ஆசைப்பட்டது..
“லில்லி மா டைமாச்சு சீக்கிரம் தயாராகி வாம்மா” என்ற தந்தையின் குரலில் அவளும் கல்யாணம் நல்ல படியா நடக்கும் என்ற வேண்டுதலோடு அறையிலிருந்து வெளியேறினாள்..