சொர்க்கம் – 19
“வாட்..? ஆர் யு வெர்ஜின்..?” என அதிர்ந்து போய் கேட்டான் அவன்.
அவன் கேட்ட கேள்வியில் செந்தூரிக்கோ அவனைவிட அதிர்ச்சியாக இருந்தது.
‘என்ன வெள்ளைக் காக்கா பறக்கின்றதா..?’ என நம்பவே முடியாத செயலைக் கேட்பதைப் போல அல்லவா கேட்கின்றான்.
தான் திருடி பிறரை நம்பான் என்பதைப் போல என்னையும் அவனைப் போல கழிசடை என நினைத்து விட்டானோ..?
அவனுடைய கரங்களுக்கு எட்டாத தூரத்தில் விலகி நின்றவள் ஆம் என்றாள்.
“ஓஹ்.. இன்ட்ரஸ்டிங்..” என அவனுடைய தடித்த அதரங்கள் முணுமுணுத்தன.
“பட் நீ சொல்றத நம்ப முடியல.. நீயும் அந்த மேக்கப் மேனும் லவ்வர்ஸ்ல..?” என விநாயக் புருவம் உயர்த்திக் கேட்க,
மேக்கப் மேன் என சேகரைத்தான் அவன் கூறுகின்றான் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு காதல் ஒன்றுதான் இப்போது இல்லாத குறை என்ற கேள்வி மூளைக்குள் தோன்றி மறைந்தது.
“சான்ஸ் கிடைச்சா எந்தப் பொண்ணையும் விட்டு வைக்காதவன் உன்னை எப்படி இவ்வளவு நாள் விட்டு வச்சான்…?” எனச் சிரித்தவாறு அவன் கேட்க அவனுடைய வார்த்தைகளில் இவளுக்குத்தான் ஐயோ வென்றிருந்தது.
இத்தனை நாட்களும் சேகர் சுயநலவாதி என்று மட்டும்தான் நினைத்திருந்தாள். ஆனால் அவனும் பெண்கள் விஷயத்தில் இப்படித்தான் போலவே.
“மத்தவங்க எப்படி இருந்தா என்ன..? நான் வெர்ஜினா இருக்குறதுக்கு என்னோட பிஹேவியர் மட்டும் போதும்..” என சளைக்காமல் பதில் கொடுத்தாள் அவள்.
“இப்போவும் உன்னோட பிஹேவியர் அப்படியேதான் இருக்கு.. பட் நான் நினைச்சா உன்ன இப்போ என்ன வேணும்னாலும் பண்ண முடியுமே..” என கைகளை விரித்த படி அவன் கூற அருவருப்பில் தன் முகத்தை சுளித்தாள் அவள்.
“என்னோட இஷ்டம் இல்லாம உங்க இஷ்டத்துக்கு நடந்தா அதுக்கு பேர் ரேப்.”
“ஐ டோன்ட் கேர் அபௌட் தட்..” என அலட்சியமாக பதில் கூறினான் அவன்.
அந்தப் பதிலில் அவளுக்கோ இதயம் வேகமாகத் துடித்தது.
அதைப்பற்றி கவலை இல்லை என்றால் என்ன அர்த்தம் அவன் ரேப் பண்ணவும் தயங்க மாட்டான் என்பதா..?
நொடிக்கு நொடி பயமும் பதற்றத்தோடும் கழிய என்ன வாழ்க்கை இது என வெறுத்துப் போனது அவளுக்கு.
“இதோ பார் என்னப் பொறுத்த வரைக்கும் இனி நீதான் என்னோட கீப்..”
‘நாசமா போனவன்.. எத்தனை தடவை கீப் கீப்னு ஏலம் போடுறான்..’ மனதுக்குள் அவனை வறுத்தெடுத்தாள் அவள்.
“எனக்கான எல்லா வேலையும் நீதான் பண்ணனும்..”
‘இது வேறயா..?’
“எனக்கு ஹெட் மசாஜ், பாடி மசாஜ் பண்ணி விடுறதுல இருந்து என்னோட ட்ரஸ் எல்லாம் அயர்ன் பண்ணி எடுத்து வச்சு சாப்பாடு ஊட்டுறது வரைக்கும் இந்த வீட்ல எல்லாமே நீதான் பண்ணனும்..” என்றதும் அவளுக்கோ விழிகள் விரிந்தன.
“இப்போ எதுக்கு இப்படி கண்ண விரிச்சு பார்த்துட்டு இருக்க..?”
“ஹாங் ஒ.. ஒன்னும் இல்ல..”
“சரி அந்த டேபிள்ல இருக்க என்னோட ஃபோனை எடுத்துக் கொடு..” என அவன் கேட்க பெரு மூச்சோடு அதனை எடுத்து வந்து அவனுடைய கரத்தில் கொடுத்தாள் அவள்.
அவனோ சக்கரவர்த்திக்கு அழைப்பெடுத்தவன் அவருடைய படத்தில் நடிப்பதாகக் கூறிவிட மறுப்பக்கத்தில் இருந்தவருக்கு ஏக சந்தோஷம்.
ஹீரோயினாக செந்தூரியை நடிக்க வைக்கும்படி கூறிவிட்டு மறுபக்கம் அவர் என்ன கூறுகின்றார் என்பதைக் கூடக் கேட்கப் பிரியமின்றி அழைப்பைத் துண்டித்தவனின் உதடுகளில் மர்மப் புன்னகை தவழ்ந்தது.
அனைவரும் அவனுக்கு ஏற்ப வளைந்து தான் ஆக வேண்டும் என எண்ணியவனின் பார்வை தன் முன்னே பதற்றத்தோடு நின்றவளின் மீது படிந்தது.
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நைட் வர்றேன்..” எனக் கூறிவிட்டு அவன் எழுந்து சென்றுவிட அலையடித்து ஓய்ந்தது போல் இருந்தது அவளுக்கு.
அதே கணம் அவள் கொண்டு வந்த பையில் இருந்து அவளுடைய அலைபேசி சிணுங்க வேகமாக ஓடிச் சென்று அதனை எடுத்தவள் தன்னுடைய அன்னைதான் அழைக்கிறார் என்பதை உணர்ந்து அந்த அழைப்பை உடனே ஏற்றாள்.
“அம்மா..?”
“கண்ணம்மா நீ நல்லாதானே இருக்க..?” எனக் கிட்டத்தட்ட அழுது அழுது காய்ந்து போன தொண்டையோடு தழுதழுத்த குரலில் கேட்டார் அவர்.
அவளுக்கோ உருகிப் போனது.
தன்னை நினைத்து இவ்வளவு நேரமும் அழுது இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவள் “இப்போ வரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லமா.. எல்லாத்துக்கும் துணிஞ்சு தானே வந்திருக்கேன் பார்த்துக்கிறேன்..” எனக் கூறியவளுக்கு உள்ளுக்குள் அச்சம் பரவிப் படரத்தான் செய்தது.
ஆனால் அந்த அச்சத்தை தன் அன்னைடம் காட்டி இன்னும் அவரை வேதனைக்குள் தள்ளக் கூடாது என்ற முடிவை எடுத்தவள் முயன்ற அளவுக்கு இயல்பாகவே பேசத் தொடங்கினாள்.
“கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க.. செலவுக்கு எப்படியாவது நான் பணம் அனுப்புறேன்.. ஷூட்டிங் ஆரம்பிச்சுதுன்னா அட்வான்ஸ் கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கிறேன்..” என அவள் கூற,
“இல்லம்மா நீ என்னப் இனி பத்தி யோசிக்காத.. செலவுக்கு நான் பாத்துக்கிறேன்.. சின்னச் சின்ன வேலைகள அக்கம்பக்கத்துல செஞ்சு கொடுக்கலாம்னு இருக்கேன்..” என்ற அன்னையின் வார்த்தைகள் அவளை வியப்பின் உச்சிக்குத் தள்ளியது.
“இல்ல வேணாம்மா… நீங்க அப்பாவ பாத்துக்கோங்க.. வெளியே எங்கேயும் போக வேணாம்..” என்றாள் அவள்.
‘நீதான் நம்ம வீட்டுக்குப் பின்னாடி நிறைய காய்கறி வச்சிருக்கியே.. அதை எடுத்து வித்தா கூட அன்னன்னைக்கு சாப்பாட்டுக்கு நல்லாவே பத்தும்.. என்னால முடிஞ்சத நான் பண்ணுறேன் கண்ணம்மா.. இனியும் என்னால நீ கஷ்டப்பட வேண்டாம்..” என உணர்ந்து கூறினார் மேகலா.
இப்போது தான் என்ன கூறினாலும் அன்னை ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதை உணர்ந்து கொண்டவள் சரி என்றாள்.
தன்னுடைய தந்தையைப் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு மேகலாவையும் சமாதானப்படுத்தி விட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு இரவு நெருங்க நெருங்க அழையாத விருந்தாளியாக அச்சம் வந்து அப்பிக்கொண்டது.
அந்தக் குளியல் அறையில் சென்று குளிக்கத் தொடங்கியவளுக்கு குளியலறை முழுவதும் அவனுடைய மேனியின் வாசம் வீசுவதைப் போல இருந்தது.
அவனையே அவளுக்குப் பிடிக்காது. அவனுடைய மேனியின் நறுமணம் மட்டும் பிடித்து விடுமா என்ன..?
சட்டென தன் விரல்களால் அவளுடைய மூக்கைப் பொத்திக் கொண்டவள் ஷவரைத் திறந்து விட்டு குளிக்கத் தொடங்கினாள்.
அக்கணம் குனிந்து தன்னுடைய இடுப்பை பார்த்தாள் அவள்.
இன்று அவன் தன் இடையைத் தொட்டது நினைவில் எழுந்தது.
எந்தத் தயக்கமோ பயமோ சிறிதுமின்றி சட்டென கை வைத்து விட்டானே.
அவள் துள்ளி விலகியதற்கு இதுக்கே இப்படியா என்ற கேள்வி வேறு.
உண்மையைக் கூற வேண்டும் என்றால் அவன் நினைத்ததை சாதித்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதோ அவன் எக்குத்தப்பாக தொட்ட போதும் அவனை அறைய முடியாது பதறி விலகத்தானே முடிகின்றது.
இன்று இரவு வரவே கூடாது கடவுளே என மனதில் பிரார்த்திக்கத் தொடங்கினாள் அவள்.
அவள் பிரார்த்தனை செய்தால் மட்டும் இரவு வராமலா இருந்து விடப்போகிறது..?
குளித்து முடித்து சுடிதார் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவள் மீண்டும் வெளியே வந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
அடுத்த நான்கு மணி நேரத்தில் இருள் சூழ்ந்து சந்திரன் பூமியை ஆளத் தொடங்கி விட அந்த அறையை விட்டு எங்கும் நகரவில்லை அவள்.
கீழே சென்றாலே அத்தனை பேரில் பார்வையும் தன்னை கூறு போடுவது போல அவளுக்கு அவமானமாக இருந்தது.
இப்படியே இந்த அறைக்குள்ளேயே இருக்கும் வரை இருந்து விடலாம் என்ற எண்ணம்தான் பேதையவளுக்கு.
அவளுடைய எண்ணத்தை தரை மட்டம் ஆக்குவது போல அந்த அறையின் கதவு தட்டப்பட நிதானமாக எழுந்தவள் யாராக இருக்கக்கூடும் என்ற கேள்வியோடு அந்தக் கதவைச் சென்று திறந்தாள்.
“மேடம் சார் உங்கள கீழ வரச் சொன்னாரு..” என்றான் அந்த வேலையாள்.
“சரி..” என்றவள் அறைக் கதவைப் பூட்டிவிட்டு வேறு வழி இன்றி கீழே சென்றாள்.
முப்பது பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு மிகப்பெரியதாக இருந்தது அந்த டைனிங் டேபிள்.
அதில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளை விழிகளால் தன்னருகே அழைக்க பசிக்கவில்லை என மறுத்து விட வேண்டும் என நினைத்தவள் “எனக்கு சாப்பாடு வேணாம்..” எனக் கூறினாள்.
“இங்கே யாரும் உன்னை சாப்பிட சொல்லிக் கூப்பிடல.. எனக்கு சாப்பாடு ஊட்டி விடறத்துக்குதான் உன்ன கூப்பிட்டேன்..” என்றான் அவன்.
பல்லை கடித்தவளுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலைதான்.
தட்டில் இருந்த பீட்சாவைப் பார்த்தவள் இதுதான் இரவு உணவா என எண்ணியவாறு தட்டைத் தன்னுடைய கரத்தில் ஏந்திக் கொண்டாள்
“பக்கத்துல வாடி..” என்றான் அவன்.
வேறு சில உணவு வகைகளை வேலையாள் ஒருவன் மேசையில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க இவளுக்கோ அவமானம் பிடுங்கித் தின்றது.
தயங்கி நின்றவளின் சுடிதாரைப் பற்றிப் பிடித்து தன் அருகே இழுத்து நிறுத்தினான் விநாயக்.
பதறி அவன் அருகே வந்து நின்றவளுக்கு அவனுடைய முகம் அவளுடைய வயிற்றின் அருகே உரசுவது போல இருக்க தூக்கி வாரிப் போட்டது.
அவளோ சங்கடம் தாங்காது வேகமாக விலக முயற்சிக்க,
“ஏய் ஸ்டே ஹியர்…” என அந்த இடமே அதிரும் வண்ணம் கர்ஜித்தான் அவன்.
மிக அருகே அவன் கத்திப் பேசியதும் அவளுடைய கரங்களோ நடுங்கி கரத்தில் இருந்த மார்பில் தட்டு தரையில் விழுந்து படார் என்ற சத்தத்தோடு உடைந்தது.
பயந்து போய் தன் வாயில் கரத்தை வைத்தவாறு உறைந்து நின்றுவிட்டவளுக்கு விழிகளில் கண்ணீர் தேங்கத் தொடங்கின.
“இடியட்.. உனக்கு ஒரு வேலை கூட ஒழுங்கா பண்ணத் தெரியாதா..?” மீண்டும் கர்ஜித்தான் அவன்.
அந்த கர்ஜனைக் குரலில் அவளுக்கோ கரங்களின் நடுக்கம் இன்னும் அதிகரித்தது.
உணவைப் பரிமாறிக் கொண்டிருந்த வேளையாளோ சட்டென அருகே வந்த கீழே உடைந்து கிடந்த மார்பிள் துண்டுகளை சுத்தம் செய்ய முயற்சிக்க அவனை பார்வையால் எரித்த விநாயக் “இது உன்னோட வேலையா..?” என அவனிடமும் எரிந்து விழுந்தான்.
“இல்லை..” என அவனிடமிருந்து பயந்தவாறே பதில் வந்தது.
“இங்க உன்னோட வேலை எதோ அதை மட்டும்தான் நீ பண்ணனும்.. தேவையில்லாத ஆணில மூக்கை நுழைச்சா எனக்குப் பிடிக்காது காட் இட்..?” என அவனை எச்சரிக்க வேகமாக மீண்டும் நின்ற இடத்தில் வந்தவன் உணவுகளை எடுத்து பரிமாறத் தொடங்கினான்.
அவ்ளோ அப்படியே உறைந்து போய் நிற்க,
“ஏய் நீதானே உடச்ச..? இன்னும் 5 மினிட்ஸ்ல நீயே இது எல்லாத்தையும் கிளீன் பண்ணிடணும்..” எனக் கட்டளையாகக் கூறியவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து பார்க்கத் தொடங்கி விட, அவளுக்கோ தேக்கி வைத்திருந்த கண்ணீர் முழுவதும் கன்னத்தில் வழியத் தொடங்கியது.
அப்படியே நடுக்கத்தோடு தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள் நொறுங்கிய மார்பிள் தட்டை கரங்களால் அள்ளி சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
“இன்னும் த்ரீ மினிட்ஸ்தான் டைம்.. அதுக்குள்ள இதெல்லாம் கிளீன் பண்ணிட்டு வந்து எனக்கு சாப்பாடு ஊட்டணும்..” என மீண்டும் அவன் கத்த,
வேக வேகமாக உடைந்த மார்பிள் துண்டுகளை கரத்தில் எடுத்தவளுக்கு உள்ளங்கை கிழிந்து உதிரம் சொட்டத் துவங்கியது.
இதுவரை இருந்த சூழ்நிலை மொத்தமாக தலை கீழாக மாறிப் போக கீழ் உதட்டை மடித்து கடித்துக் கொண்டவள் அவன் கூறிய சுத்தப்படுத்தும் வேலையை வலியைத் தாங்கிக் கொண்டு செய்யத் தொடங்கி இருந்தாள்.
💜🔥💜
So sad
Kolakara paavi nalla irupana avan