என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 45

4.4
(7)

அத்தியாயம் : 45

வினிதாவை விரட்டிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வனுக்கு போன் பண்ணினான் வெற்றிமாறன். 

“ஏய் இருடி வெற்றி போன் பண்றான்… அப்புறம் வந்து உன்னை வச்சுக்கிறேன்….” என்று சொன்ன தமிழ்ச்செல்வன் போனை எடுத்தான். 

“சொல்லு வெற்றி… என்ன கால் பண்ணி இருக்க….?”

“தமிழ் நீ எங்க இருக்க…?” என்று கேட்டான் வெற்றிமாறன். 

அதற்கு தமிழும், “நான் வீட்லதான் மச்சான் இருக்கேன்…. ஏன் என்னாச்சு….?”

“அம்மா சித்தி பாட்டி எல்லாரும் அங்கிருந்து கிளம்பிட்டாங்களா….?”

“அவங்க கிளம்பிட்டாங்க வெற்றி…. இந்த லூசு வினிதான் எங்க லவ் மேட்டர வீட்ல அம்மா பாட்டி அத்தைங்க கிட்ட எல்லார்கிட்டேயும் போட்டு கொடுத்துடுச்சு….”

“ஏய் என்னடா சொல்ற…? அவ ஏன் இதை இப்போ சொன்னா…?”

“அதை ஏன் கேட்கிற… நேத்து ஐஸ்கிரீம் கேட்டுச்சு நான் வாங்கி கொடுக்கலன்னு இன்னைக்கு வீட்ல வந்தவங்க கிட்ட போட்டு கொடுத்துச்சு….” என்றான். 

“நான் சொன்னேன்ல உன் தங்கச்சிக்கு அறிவே இல்ல மச்சான்…. சரி நீ கிளம்பிய உடனே நம்ம ஆலமரத்துக்கிட்ட வா…” என்றான். 

“ஏன் வெற்றி எதுவும் அவசரமா….?”

“அவசர இல்ல மச்சான் ரொம்ப அவசியம் சீக்கிரமா வா….” என்று போனை வைத்து விட்டான். 

‘என்ன வெற்றியோட குரலே நல்லா இல்ல… எதும் பிரச்சினை இருக்குமோ…?’ என்று யோசித்த தமிழ்ச்செல்வன் வினிதாவை துரத்துவதை விட்டுவிட்டு வெற்றிமாறனை பார்ப்பதற்காகச் சென்று விட்டான். 

‘என்னை துரத்திட்டு வந்தான்…. மாமா போன் பண்ணதும் விட்டுட்டு போயிட்டான்…. நல்ல வேளை மாமா போன் பண்ணதால நம்ம தப்பிச்சோம்….’ என்று ரேணுகாவிடம் சென்றாள்.

இங்கே ராகவியும் வைதேகி சாரதாவும் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வரும்போது ஹாலில் உட்கார்ந்திருந்த சுந்தரம் குசேலனிடம் இருந்து கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

“என்ன அத்த எப்பவும் லேட்டா வர்றவங்க இன்னைக்கு நேரத்திற்கு வந்துட்டாங்க….. ஒருவேளை நம்ம அங்க போயிட்டு வந்தது தெரிஞ்சு இருக்குமோ….?”

“அத விடுங்கடி பாக்கலாம்… தெரிஞ்சிருந்தா என்ன… அதை எப்படி சமாளிக்க வேண்டும்னு எனக்குத் தெரியும் வா…..” என்ற சாரதா பாட்டி அவர்களுக்கு தைரியம் கூறி அழைத்து வந்தார். 

“அம்மா எங்க போயிட்டு வந்தீங்க…? நாங்க வந்துட்டு உங்க மூணு பேரையும் பாத்தா யாரையுமே காணோம்….” என்றார் சுந்தரம். 

“அது ஒன்னும் இல்லப்பா…. ரேணுகா வீட்டுக்கு போயிட்டு வந்தோம்….” என்றார் சாரதா பாட்டி. 

“ஓ அப்படியா சரி….” என்ற சுந்தரம் மீண்டும் அவரிடம், “அம்மா என்ன சொன்னீங்க இப்போ…? எங்க போயிட்டு வந்தீங்க இப்போ…?” என்று கேட்டார். 

“அதுவா நம்ம ரேணுகா அதான் உன் தங்கச்சி ரேணுகா வீட்டுக்கு போயிட்டு வந்தோம்….”

“அப்படியா என்ன திடீர்னு….”

“என்ன திடீர்னு என்ன….? என்ன இருந்தாலும் என் பொண்ணைப் பாக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா…. இத்தனை வருஷம் தான் நான் பார்க்காமல் இருந்துட்டேன்…. இப்போ கண்ண மூடுற காலத்துலயாவது அவ கூட பேசணும்னு ஆசையா இருந்துச்சு…. அதான் தனியா போக முடியாம மருமகள்களை கூட்டிட்டு போனேன்….” என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னார் சாரதா பாட்டி. சாரதாப் பாட்டி பொதுவாக குரலை உசத்தி பேசமாட்டார். அவர் இன்று அப்படி உயர்த்தி பேசியதும் சுந்தரம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. “சரிமா நானும் உங்க பொண்ண பாக்க வேணாம்னு சொல்லல…. நீங்க போய் பார்க்க வேண்டியதுதானே…. எப்படி இருக்கா ரேணுகா…? நல்லா இருக்கால்ல…”

“ஆமா அவளுக்கு என்ன ரொம்ப நல்லா இருக்கா…. ஆனா மனசுக்குள்ள தான் ரொம்ப கஷ்டப்படுற… அண்ணனுங்களை பாக்க முடியல பேச முடியலன்னு…. ஏன் சுந்தரம் அவளை ஒருவாட்டி போய் பார்த்துட்டு வரலாம்ல….” என்றார் சாரதா. 

அதற்கு சுந்தரமும், “பாக்கலாம் பாத்துக்கலாம்….. நீங்க போய் வந்துட்டீங்க இல்ல அது போதும்….” என்றவர் மேல் அந்த பேச்சை வளர்க்கவில்லை. 

அவர்களும் எதுவும் பேசாமல் அவரது வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்கள். அப்போது குமுதா தோழிகளுடன் சென்று விட்டு வீட்டுக்கு வர, “குமுதா இங்க வா….” என்று அழைத்தார். 

‘ஐயையோ அம்மா மாமா வீட்டுக்கு போயிட்டு வந்தாங்க இல்ல… நம்ம விஷயம் அம்மாக்கும் பெரிய அம்மாக்கும் தெரிந்திருக்குமோ….’ என்று பயத்துடன் அவர்கள் அருகில் வந்தாள். 

குமுதா அருகில் வந்ததும் வைதேகி அவள் காதை திருகினார். அப்போது ஒரு ராகவி, “ஏய் குமுதா இங்க வா….” என்று அவர் அருகில் இழுத்தார். “இங்க வச்சு கேட்டா பிரச்சினை ஆயிடும் வா ரூம்ல போய்க் கேட்கலாம்….” என்று அவளை அழைத்துக் கொண்டு ரூமுக்குள் வந்தார். 

“சொல்லுடி என்னடி வேலை பார்த்து வச்சிருக்க….?” என்று குமுதாவிடம் வைதேகி கேட்டார். 

அதற்கு குமுதா, “அம்மா என்னம்மா சொல்றீங்க…..?”

“நான் என்ன பார்த்தேன்….?”

“என்ன வேலை பாத்தியா நீயும் தமிழும் மூணு வருஷம் லவ் பண்றீங்களாமேடி ஒரு வார்த்தை எங்க கிட்ட சொன்னியா….?” என்று கேட்டார். 

குமுதாவும், “அம்மா நீங்க என்ன பண்ணுவீங்க…. என்ன சொல்லுவீங்கன்னு தெரியாதுமா… அந்த பயத்துல தான் நான் சொல்லல மன்னிச்சுடுங்க அம்மா….” என்றாள். 

“ஏதோ தமிழ் தம்பினுதான் நான் மன்னிச்சு விடுறேன்….. இதுவே வேற யாராவும் இருந்தா உனக்கு நடக்கிறதே வேற…. அதுவும் உங்க அப்பாக்கு தெரிஞ்சா அவர் என்ன முடிவு எடுப்பார்னு எங்களுக்குத் தெரியாது….” என்றார் வைதேகி. 

“வைதேகி விடு பாத்துக்கலாம்….”

“அக்கா எப்படி அக்கா நீங்க சாதாரணமா சொல்றீங்க…? அவங்களைப் பத்தி உங்களுக்கு தெரியும்ல்ல….”

“தெரியும்தான் ஆனா என்ன பண்றது….. நம்ம பொண்ணு விரும்பிட்டா அதுவும் யாரை முறை பையனைத் தானே…. அவனுக்கு உரிமை உள்ளவங்க தானே… அவ விரும்பி இருக்கா…. அதுல யாரும் எதுவும் சொல்ல முடியாதுல்ல… அது மட்டும் இல்ல இங்க பாத்த தானே… நம்ம ரெண்டு வீட்டுக்கும் போயிட்டு வந்ததுக்கு கூட இவங்க ரெண்டு பேரும் எதுவுமே சொல்லல… அதனால எனக்கு என்னவோ கல்யாணத்தில பிரச்சனை வரும்னு தோணல….” என்றார் ராகவி. 

“அது ரேணுவைப் பாக்க போன விஷயம் தானே…. இந்த விஷயத்துல என்ன பண்ணுவாருன்னு எனக்கு பயமா தான் இருக்கு அக்கா…. எல்லாம் இவளைச் சொல்லணும்…” “அம்மா, அப்பாக்கிட்டேயும் பெரியப்பாக்கிட்டேயும் நான் பேசுறேன்….. பெரியப்பா ஒத்துக்கிட்டா அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு….”

“ஆமா நீ போய் பேசின உடனேயே ராஜாதி என்று அப்படியே உன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டப் போறாரு ஏன்டி நீ வேற…”

“சரிம்மா இதையே சொல்லித் திட்டாத…. என் மாமாதானே…”

“அதே ஒரே ஒரு காரணத்துக்காகத்தான் நான் அமைதியாக இருக்கேன்…. இல்லனா உன்னை வந்த உடனே வெட்டி போட்டு இருப்பேன்…”

“அதெல்லாம் விடுங்கம்மா… இந்த விஷயத்தை யார் உங்க கிட்ட சொன்ன….?”

“வேற யாரு எல்லாம் வினிதாதான் சொன்னா….”

“என்னது வினி அண்ணியா….?”

“அவளேதான்…. ஏதோ நேற்று தமிழ்கிட்ட ஐஸ்கிரீம் கேட்டுருப்பா போல அவன் வாங்கிக் கொடுக்கலனு நாங்க போனதும் எங்க கிட்ட அந்த விஷயத்தை சொல்லிட்டாமா…”

“ஒரே ஒரு ஐஸ்கிரீம்க்காக என் வாழ்க்கையே இப்படி போட்டு உடைச்சுட்டாங்களே இந்த அண்ணி….” என்ற குமுதாவை பார்த்த ராகவி, “அவளைப் பத்தி தெரியும் இல்ல குமுதா…. சரி நம்ம ரொம்ப நேரமா பேசினா அவங்களுக்கு சந்தேகம் வந்துட போது நீ போ….”

“சரி பெரியம்மா நான் வரேன்…” என்ற வெளியே சென்றாள்.

இங்கே மரத்தடியில் அமர்ந்திருந்த வெற்றிமாறனின் அருகே வந்து வண்டியை நிறுத்தினான் தமிழ்ச்செல்வன். 

“வெற்றி என்னாச்சு… உன் முகமே சரி இல்ல….”

“தமிழு நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… அதான் இங்க வர சொன்னேன்…” “சொல்லு மச்சி எதுவும் பிரச்சனையா….?”

“பிரச்சனை தான் ஆனா அது எனக்கு இல்ல மாமாக்கு….”

“மாமாவா யாரு மாமாக்கு…?”

“தயாளன் மாமாக்கு…. உன் அப்பாக்கு மச்சி….”

“என்ன சொல்ற என் அப்பாக்கு பிரச்சனையா…? அப்பா என்கிட்ட எதுவும் சொல்லல….”

“மாமாவும் என்கிட்ட சொல்லல தமிழு…. நான் இந்த பக்கம் வந்துட்டு இருந்தன்…. அப்போ மாமா இங்க உட்கார்ந்து இருந்தாரு… சரி மாமா கிட்ட பேசிப் பார்க்கலாம்னு தான் வந்தேன்…. ஆனா நான் வந்தது கூட கவனிக்காம யோசனையிலேயே இருந்தாரு…. நான் வந்து அவர் தோளை தொட்டதுக்கு அப்புறம் தான் அவரு என்னைப் பாத்தாரு…. அந்த அளவுக்கு யோசனையில் இருந்தாரு…”

“என்ன வெற்றி சொல்ற… அப்படி பக்கத்துல யாரும் வராங்கன்னு கூட பாக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன யோசனை அப்பாக்கு….”

“அதேதான் நானும் கேட்டேன் ஆனா அவரு சொல்லல அப்புறம்…. நான் வற்புறுத்தி கேட்டதால மாமா சொன்னாங்க….”

“முதல்ல என்னன்னு சொல்லு வெற்றி… அப்பாக்கு என்ன பிரச்சனைனாலும் நான் எப்படியாவது அதை சரிப்படுத்த பாக்கிறேன்….”

“தமிழு மாமா ரைஸ்மில்லா ஏதோ மெஷின் வாங்க அவசரமா பணம் வேணும்னு வேற வீரையன்கிட்ட வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறாரு….”

“என்னது வீரையனா…? அவன் கிட்ட போய் யாராவது வட்டிக்கு வாங்குவாங்களா…. அவன் ரொம்ப மோசமான ஆளாச்சே வெற்றி….”

“ஆமா தமிழ்… அதைத்தான் நானும் மாமா கிட்ட கேட்டேன்… ஆனா மாமா சொன்னாங்க அவசரத்துக்கு யாரு கிட்ட வாங்கிறன்னு தெரியாம அவன் கிட்ட போய் வாங்கிட்டேன்… வட்டிப் பணம் எல்லாம் கட்டிட்டு இப்ப முழு பணத்தையும் கேட்கிறதா சொன்னாரு…. அதுவும் பத்து நாள் டைம் கொடுத்து இருக்கான் அந்த வீரையன்… இந்த பத்து நாள்ல இப்போ ரெண்டு நாள் தான் பாக்கி இருக்கு தமிழ்….. இந்த ரெண்டு நாளைக்குள்ள எப்படியாவது மாமாக்கு உதவி பண்ணனும்…. மாமா ரொம்ப அப்செட்டா இருக்குற மாதிரி தெரியுது…. ஒன்னு பணத்தை கொடு இல்ல மில்லை எழுதி கொடுனு மிரட்டிட்டு இருக்கான் அந்த வீரையன்….”

“அது எப்படி வெற்றி கொடுக்க முடியும்….? இந்த மில்ல அப்பா அவ்ளோ கஷ்டப்பட்டு உருவாக்கினது… அப்படி லேசா அவனுக்கு தூக்கி கொடுத்துடலாமா…?”

“நீ சொல்றது கரெக்ட் தான்…. இந்த மில்லு மாமாவோட மொத்த உழைப்பால உருவானது…. அதை அவ்வளவு சீக்கிரமாக கொடுக்க முடியாது…. ஆனா பணம் திரும்ப கொடுத்து ஆகணும்…. இல்லனா அது வேற பெரிய பிரச்சனையாகிடும்….”

“என்ன வெற்றி இப்படி சுத்தி சுத்தி பிரச்சினை வருது இப்பதான் அத்தை எங்க வீட்டுக்கு வந்துட்டு போனாங்க அப்பாவும் எதுவும் பேசல எல்லாம் சுமூகமா போயிட்டு அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனை…. வெற்றி என்னால முடியல….” என்றான் தமிழ். 

அதுக்கு வெற்றிமாறன், “தமிழ் ஒரு பிரச்சனைனு வந்தா அதுக்கு கண்டிப்பா தீர்வு இருக்கும்…. அதுமட்டுமில்ல எந்த பிரச்சினை வந்தாலும் அதுக்குள்ள நமக்கு ஒரு நன்மை கண்டிப்பா இருக்கும்…. நம்ம பொறுமையா யோசிச்சா அந்த வீரையன்கிட்ட இருந்து மாமாவைக் கண்டிப்பா காப்பாத்த முடியும்….”

“அது எப்படி முடியும்….? ஒன்னு பணத்தை குடுக்கணும் இல்ல மில்லை குடுக்கணும்… இப்ப ரெண்டு நாளைக்குள்ள அவ்வளவு தொகை பணம் கொடுக்கற அளவுக்கு அப்பா கிட்ட பணம் இருக்காது வெற்றி…. இப்போ கொஞ்ச நாள் வச்சு பெருசா வியாபாரமும் போகல….” என்றான் தமிழ்ச்செல்வன். 

“தமிழ் நீயே இப்படி உடஞ்சிட்டா எப்படி….? கவலைப்படாதே இதுக்கான வழி கண்டிப்பா ஏதாவது இருக்கும் நான் யோசிக்கிறேன் ரெண்டு நாள் நமக்கு டைம் இருக்கு…. ரெண்டு நாளைக்குள்ள இதற்குரிய வழி கிடைக்கும்…. நான் எதுக்கு உன்னை கூப்பிட்டேன்னா இந்த விஷயம் கண்டிப்பா யாருக்காவது தெரிஞ்சிருக்கும்னு தான் உன்னை கூப்பிட்டேன்…. மாமாவ கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோ…. அது மட்டும் இல்ல முடிஞ்ச அளவு ப்ரெண்ட்ஸ் கிட்ட யாரு மூலமாவது பணம் வாங்க முடியுமான்னு பாரு… நான் எனக்கு தெரிஞ்சவங்க மூலமா அரேஞ்ச் பண்ணலாமானு பாக்கிறேன்….”

“கண்டிப்பா வெற்றி நான் எனக்கு தெரிஞ்ச ப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு பாக்கிறேன்….”

“சரி தமிழ் லேட் ஆயிடுச்சு நான் அப்ப கிளம்புறேன்….”

“சரி வெற்றி இப்போது நானும் போயிட்டு வரேன்…” என்று இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

வெற்றிமாறன், ‘எப்படியாவது தயாளனுக்கு உதவி செய்யணும்…’ என்று யோசித்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும்போது அவனுக்கு போன் வந்தது. எடுத்துப் பார்க்க வினிதா தான் அழைத்திருந்தாள்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!