21. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.6
(57)

சொர்க்கம் – 21

நிச்சயமாக இதெல்லாம் கெட்ட கனவாகத்தான் இருக்கக்கூடும்.

பின்னே இப்படி விவஸ்தை இன்றி எவனாவது ஒரு பெண்ணிடம் பேசக் கூடுமா..?

நிச்சயம் இது கனவேதான் என அவள் தனக்குள் போராடிக் கொண்டிருக்க அவள் முகத்தின் முன் சொடக்கிட்டு அழைத்து அவளுடைய சிந்தனையை தடை செய்தவன் இது கனவில்லை என்பதை அவளுடைய புத்திக்குப் புரிய வைத்தான்.

“பிடிக்காத பொண்ண நான் தொடுறது கிடையாது.. அதனாலதான் உன்ன ட்ரஸ் மட்டும் ரிமூவ் பண்ண சொன்னேன்.. இதுக்கு அப்புறமும் நான் சொல்றத நீ பண்ணாம இருந்தீன்னா நானே உன்னோட ட்ரெஸ்ஸ கழட்ட வேண்டி இருக்கும்..” என அவன் அழுத்தமாக அவள் அருகில் நெருங்கி நின்று கூற அவனுடைய அருகாமையில் அவளுக்கோ மூச்சுத் திணறியது.

வேண்டாம் என மறுப்பாக தலை அசைத்தாள் அவள்.

‘நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா..’ என சாபம் போட்டன அவளுடைய விழிகள்.

விழிகள் கூறும் வார்த்தைகளை அவள் வாயால் அவ்வளவு எளிதாக வெளியே கூறி விட முடியாதே.

அவனிடம் அப்படிக் கூறினால் அடுத்த நொடியே அதற்கும் சேர்த்து பழிவாங்கத் தயாராகி விடுவான் என்பதை அறிந்து வைத்திருந்தவள் வாய் பேசாத ஊமை ஆகித்தான் போனாள்.

விநாயக் மகாதேவின் பொறுமை பறந்து போனது.

“நானும் போனா போகுது உன் கிட்ட ரகடா நடந்துக்கக் கூடாதுன்னு பார்த்தா நீ என்ன மதிக்கவே கூடாதுங்கிற முடிவோடு இருக்கேல்ல..?” என்றவன் அவள் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவை இழுத்து எடுக்க பதறிப் பின்னால் நகர்ந்தவளுக்கு மனம் வெந்தது.

அவள் கழற்றவில்லை என்றால் அவனால் ஆடைகள் கிழிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து அவனை வெறித்துப் பார்த்தாள் அவள்.

அவனுடைய முகத்தைப் பார்த்ததும் சொல்லவொண்ணாத வெறுப்பு அவளுடைய முகத்தில் படர்ந்தது.

“நா.. நானே ப.. பண்றேன்..” என்றாள் செந்தூரி.

அவள் கூறி முடிப்பதற்கு முன்னர் கண்ணீர் துளிகள் அவளுடைய கன்னங்களைத் தீண்டி தரையை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டிருந்தன.

“குட்.. டூ இட்..” என்றவன் அங்கிருந்த படுக்கையில் சென்று அமர்ந்து அவளைப் பார்க்கத் தொடங்க அவளுக்கோ உடல் படபடக்கத் தொடங்கியது.

அவளுடைய கைகள் அசையவே மாட்டேன் என்பதைப் போல அப்படியே இருந்தன.

“ப்ச்.. கமான் பேப்.. என்ன அத்தனை பேரு முன்னாடியும் அடிக்கும் போது உன்னோட கை எவ்வளவு ஃபாஸ்ட்டா வேலை செஞ்சுது..? இப்போ மட்டும் அது ஏன் அசையவே மாட்டேங்குது..?” என அவன் குத்தலாகக் கேட்க தன் விழிகளை இறுக மூடிக் கொண்டாள் அவள்.

“இன்னும் ரெண்டு நிமிஷத்துல என்ன அடிச்ச அதே கை நான் சொன்னத செஞ்சு முடிச்சு இருக்கணும்..” என அவன் கட்டளை இட இவளுடைய தலையில் இடி விழ வேண்டும் என அந்த நிலையில் கூட வேண்டிக் கொண்டாள் பெண்ணவள்.

அவளோ அப்போதும் அதேபோல் அசையாமலே இருக்க,

“வாட் த ஹெல்..” எனக் கர்ஜித்தவன் மீண்டும் எழுந்த நொடி “ப்ளீஸ்.. நா.. நானே பண்றேன்.. பண்றேன்… ப்ளீஸ்..” எனக் கதறிவிட்டாள் அவள்.

“நீ பண்.. பண்ண சொல்றது எவ்வளவு கேவலமான விஷயம்னு உனக்குப் புரியவே இல்லையா விநாயக்..? கட்டின புருஷனாவே இருந்தாலும் பொண்ணுங்க சட்டுன்னு தங்களோட உடம்ப வெட்ட வெளிச்சத்துல இப்படி காமிக்கத் தயங்குவாங்க.. யாருன்னே தெரியாத உனக்கு முன்னாடி எப்படி என்னால அப்படி நிக்க முடியும்..?” என அவள் அழுதவாறு கூற,

“வாட் என்ன யாருன்னு தெரியாதா..? எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சது நீதானே..? ப்ச்… இந்த சென்டிமென்ட் டயலாக் எல்லாம் பேசி என் மனச மாத்தலாம்னு தயவு செஞ்சு ட்ரை பண்ணாத.. அதெல்லாம் என்கிட்ட ஒர்க்அவுட் ஆகாது.. நான் சொன்னதை பண்ணு கமான்..” என அவன் இடைவிடாது வற்புறுத்த மீண்டும் விழிகளை மூடிக்கொண்டவள் தன்னுடைய இதழ்களை அழுந்தக் கடித்தவாறு சுடியின் மீது கைகளைப் பதித்தாள்.

கிடுகிடுவென அவளுடைய கரங்கள் நடுங்கத் தொடங்கின.

நடுங்கிய கரங்களால் சுடியைக் கழற்றி தரையில் போட்டவளின் உள்ளமும் உடலும் இறுகிப் போனது.

தன்னுடைய உணர்வுகளை அக்கணம் மொத்தமாக கொன்று புதைத்திருந்தாள் பெண்.

ஒருவேளை அவன் அவளை வற்புறுத்தி அவளுடைய ஆடைகளைக் கழற்றி இருந்தால் கூட அவளுடைய மனம் இந்த அளவுக்கு பாதிக்கப்படாமல் இருந்திருக்குமோ என்னவோ..?

அவளே அவளுடைய மானத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைப்பது அவளுக்கு நரக வதையாக இருந்தது.

விழிகளைத் திறக்கவே இல்லை அவள்.

அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் பார்த்தால் இன்னும் நொறுங்கிப் போவாளே.

ஏனைய ஆடைகளையும் ஒவ்வொன்றாக உடலில் இருந்து அகற்றிவிட்டு இறுகிப்போய் நின்றாள் பேதை.

அவளுடைய உடலை பார்வையால் வருடியவனுக்கு விழிகளில் சட்டென பிரமிப்பு தோன்றி மறைந்தது.

எத்தனையோ பெண்களின் உடலை பார்த்தவன்தான் அவன்.

அப்படித்தான் அவளையும் நினைத்தான்.

ஆனால் அவன் பார்த்த பெண்களில் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தாள் செந்தூரி.

ஆம் அவளுடைய உணர்வுகள் மொத்தமும் வலியை அல்லவா அவனுக்குப் பிரதிபலித்தன.

அவளுடைய இதழ்கள் துடித்தன.

கரங்கள் பலமாக நடுங்கின.

மூச்சு விடவே முடியாமல் அவள் அழுகையில் திணற,

அதற்கு மேல் அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை.

“பெட்ல இந்தப் பக்கம் படுத்துக்கோ.. காலைல வரைக்கும் நீ இப்படித்தான் இருக்கணும்.. குட் நைட்..” எனக் கூறி விட்டு அவன் மின்விளக்கை வேகமாக அணைத்து விட அதன் பின்னர் விழிகளைத் திறந்தவளுக்கோ அந்த அறை முழுவதும் இருளாகத்தான் இருந்தது.

அவன் கூறியது அவளுடைய செவிகளில் விழத்தான் செய்தது.

கண்களை மூடித் திறந்து அந்த இருளுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டவள் படுக்கையைக் கண்டுபிடித்து அவனுக்கு அருகே சென்று படுத்துக் கொண்டாள்.

மனம் கதறியது.

உடல் கூசியது.

அவ்வளவுதான் அத்தனை நேரமும் அடக்கி வைத்த அழுகை விம்மி வெடித்தது.

தன்னுடைய உடலைக் குறுக்கிக் கொண்டவள் விக்கி விக்கி அழத் தொடங்க அதன் விளைவால் அவளுடைய உடலோ படுக்கையில் அசைந்து கொண்டே இருந்தது.

சட்டென தன்னருகே படுத்திருந்தவளை திரும்பிப் பார்த்தான் விநாயக்.

ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருப்பவளிடம் எதுவும் பேசாது விட்டத்தைப் பார்த்தவாறு படுத்துக் கொண்டவனுக்கு தூக்கம் வரவில்லை.

‘நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே.. இதுக்கே இப்படித் துடிப்பவளை வைத்து எப்படிப் பழி வாங்குவது..?

அவன் பட்ட அவமானத்திற்கு இது நிகராகி விடுமா..?

அத்தனை பேரின் முன்பும் அதுவும் ஹீரோ இமேஜில் தன்னை வைத்துப் பார்ப்பவர்களின் முன்பு கைநீட்டி அடித்ததும் இல்லாமல் தவறாகத் திட்டி விட்டுச் சென்றது சரியா..?

அவனுக்கு அது எத்தனை அவமானத்தைத் தரும் என்பதை அவள் ஏன் அறியாது போனாள்..?

அன்றைய நாள் துணை நடிகர்கள் போட்டி நடிகர்கள் என எத்தனை பேர் அவனிடம் ஏதோ பாவப்பட்ட ஆளை விசாரிப்பது போல அவன் அடி வாங்கியதை விசாரித்தார்கள்.

அந்த அவமானத்தின் வலியே இவள் உணர வேண்டாமா..?

இத்தனைக்கும் அவன் அவளைப் போல அனைவருக்கும் முன்பும் அவளை அசிங்கப்படுத்தவில்லையே.

என்னிடம் மட்டும் தானே இப்படி இருக்கச் சொன்னேன்..?

இதற்கு ஏன் இந்த அழுகை..?

என்னிடம் வந்த எத்தனையோ பெண்கள் நான் கூறுவதற்கு முன்னரே ஆடைகளை களைந்து விட்டு வந்திருக்கின்றனரே..

இவளுக்கு மட்டும் ஏன் அப்படி முடியவில்லை..?

பணத்தைக் கொடுத்தால் இவளும் மாறத்தான் போகின்றாள் என்ற எண்ணம்தான் அப்போதும் அவனுக்குள் இருந்தது.

அவளுடைய அழுகையில் கவனம் செலுத்தாது தன்னுடைய விழிகளை மூடிக்கொண்டவனுக்கு தூக்கத்தில் கவனத்தை செலுத்த முடியவில்லை.

அவளுடைய விசும்பல் பெரும் கேவலாக மாறி விட பதறிப்போய் மின் குமிழை ஒளிரச் செய்தான் அவன்.

அவன் மீன்குமிழை ஒளிரச் செய்ததும் துடித்து போனவளாய் அவள் தன்னுடைய கரங்களால் உடலை மூட சட்டென போர்வையை அவள் மீது போர்த்தி விட்டவனுக்கு தலை வலிக்கத் தொடங்கிவிட்டது.

அவளோ போர்வையை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டவள் விழிகளை மூடிக்கொள்ள,

அழுது வீங்கிச் சிவந்திருந்த அவளுடைய முகத்தைப் பார்த்தவன் “அழாம தூங்கு…” என்றான்.

அவன் பேசியது அவளுடைய காதுகளை எட்டவே இல்லை போலும்.

வெகு நேரம் அழுது அழுது சோர்ந்து ஓய்ந்து போய் விசும்பல் மட்டுமே கேட்கத் தொடங்க அதுவரை அவனும் தூங்காமல்தான் விழித்திருந்தான்.

நள்ளிரவு வரை விழித்திருந்தவன் மின் குமிழை மீண்டும் ஒளிரச் செய்தான்.

அவளோ கண்ணீர் காய்ந்த கன்னங்களுடன் உறங்கி விட்டிருக்க, அவளுடைய போர்வையோ சற்றே விலகி இருந்தது.

போர்வையை சரி செய்து அவளுடைய கழுத்து வரை மூடி விட்டவன் அவளுடைய கன்னத்தை தன்னுடைய ஒற்றை விரலால் துடைத்து விட்டான்.

அதன் பின்னே உறங்கத் தொடங்கியவன் காலையில் வெகு தாமதமாகத்தான் விழிகளைத் திறந்தான்.

அவனுடைய பார்வை தன் அருகே காலியாக இருந்த படுக்கையைப் பார்த்தது.

எங்கே போய்விட்டாள் என எழுந்த கேள்வியை அப்படியே ஒதுக்கித் தள்ளியவன் எழுந்து பிரஷ் செய்துவிட்டு ஜாக்கிங் செல்வதற்கு ஏற்றாற் போல தன்னுடைய உடையை மாற்றியவன் ஷூவை அணிந்தவாறு கீழே சென்றான்.

அவனுடைய விழிகளோ அந்த வீட்டில் எங்கேனும் செந்தூரி தென்படுகின்றாளா என்று தேடத் தொடங்கின.

நேற்று நான் நடந்து கொண்ட விதத்தில் வீட்டைவிட்டு ஓடிவிட்டாளோ..?

எப்படி ஓடினாலும் மீண்டும் தன்னிடம் வந்துதானே ஆக வேண்டும் அதனால் இங்கேதான் எங்கேயாவது இருப்பாள் என நினைத்தவாறு வீட்டைச் சுற்றி மிகப் பெரிய பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தோட்டத்திற்குள் போடப்பட்டிருந்த பாதையில் ஓடத் தொடங்கினான் அவன்.

அவனுடைய உரம் ஏறிய படிக்கட்டு தேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வியர்வை அரும்பத் தொடங்கியது.

நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தவன் அவனுடைய தோட்டத்திற்கு மத்தியில் போடப்பட்டிருந்த கல் பெஞ்சில் கால்களை மடித்து உறங்கிக் கொண்டிருந்த செந்தூரியைப் பார்த்து திகைத்து நின்றான்.

ஓடுவதை நிறுத்திவிட்டு பாதையில் இருந்து தோட்டத்திற்குள் இறங்கி அவள் அருகே சென்று நின்றவன் அவளுடைய முகத்தைப் பார்க்க அவளுடைய இதழ்களோ ஆழ்ந்த தூக்கத்தின் விளைவால் சற்றே விரிந்திருந்தன.

கழுத்துக்கு கீழே சென்றவனுடைய பார்வையோ நேற்று அவளைப் பார்த்த விதத்தை எண்ணித் தடுமாற சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டவனுக்கு இப்போது எதற்கு அதைப் பற்றி எண்ணுகிறோம் என மனம் தடுமாறியது.

தன்னுடைய எண்ணங்களை இடை நிறுத்திவிட்டு அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க சட்டென விழிகளைத் திறந்தாள் அவள்.

பார்த்தவளுக்கு பேரதிர்ச்சிதான்.

பதறி எழுந்து நின்றவள் தன்னுடைய இரு கரங்களாலும் முகத்தை துடைத்து விட்டு அவனைப் பார்த்தாள்

“இங்க என்ன பண்ற.?” என அழுத்தமாகக் கேட்டான் அவன்.

அவளோ உண்மையை சொல்வதா பொய் சொல்வதா எனக் குழம்பிப் போனாள்.

காலையில் கண் விழித்ததும் வேகமாக எழுந்து தன்னுடைய ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டவளுக்கு அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவனைக் கண்டு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

எங்கே அவன் கண்விழித்தால் மீண்டும் தன்னை அப்படியே ஆடையின்றி இருக்கச் சொல்வானோ என எண்ணிப் பயந்தவள் விடியற்காலை 4 மணிக்கு வெளியே வந்து இந்த பெஞ்சில் படுத்து தூங்கி இருந்தாள்.

“ஏய்.. உன்னைத்தான் கேட்கிறேன்.. நீ இங்க என்ன பண்ற..?”

“அ… அது வந்து நான் டெய்லி காலைல வாக்கிங் போவேன்.. அதனாலதான் இங்கே வந்தேன்… வாக்கிங் போய் டயட் ஆனதால இதுல கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்..” என வாய்க்கு வந்ததை அடித்துவிட்டாள் அவள்.

“குட் நானும் டெய்லி வாக்கிங் இல்லனா ஜாக்கிங் போவேன். இனி நீயும் என் கூடவே ஜாயின் பண்ணிக்கோ..” என்றதும் ‘போச்சுடா.. செத்தேன்..’ என அலறியது அவளுடைய மனம்.

💜🔥💜

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 57

No votes so far! Be the first to rate this post.

1 thought on “21. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!