26. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.6
(61)

சொர்க்கம் – 26

நேரமோ இரவு பத்தை நெருங்கி இருந்தது.

இன்னும் அறைக்குள் வராத செந்தூரியின் மீது கட்டுக்கடங்காத கோபம் விநாயக்கிற்கு எழுந்தது.

ஒவ்வொரு முறையும் இந்த நேரத்திற்குள் அறைக்கு வர வேண்டும் என அவன் யாரிடமாவது கூறி அவளை இங்கே வர வைக்க வேண்டுமா..?

மேடத்திற்கு தானாக வரத் தெரியாதோ..?

இல்லை வேண்டுமென்றே என்னை காக்க வைக்கின்றாளா.?

கொதித்துப் போனவனாய் கதவைத் திறந்தவன் வெளியே அதிர்ந்த முகத்துடன் நின்றவளைக் கண்டதும் அமைதி அடைந்தான்.

“இடியட் உனக்கு டைமுக்கு வரத் தெரியாதா..?” நிதானமாகத்தான் அவனுடைய வார்த்தைகள் வெளியே வந்தன.

“இவ்வளவு நேரம் எங்க இருந்த..?”

“இ.. இங்கேதான்..” என்றாள் அவள்.

அவளை அழுத்தமாகப் பார்த்தவன் “உள்ளே வந்து கதவை மூடு..” என்றதும் அவளுக்கோ மீண்டும் விழிகள் கலங்கின.

அவனோ படுக்கையில் சென்று அமர்ந்தவன் ஆரம்பி என்பதைப்போல தலையை அசைக்க மொத்தமாக உடைந்து போனாள் செந்தூரி.

“எ… என்னால முடியல.. சத்தியமா என்னால இதை இதுக்கு மேல பண்ண முடியாது.. நான் அடிச்சதுதானே உங்களுக்கு கோபம்.. வேணும்னா ஷூட்டிங் நடக்கிற இடத்துல வச்சு நீங்களும் என்ன அடிச்சிருங்க.. கேவலமா திட்டிடுங்க.. பட் ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க.. என்னால இத சகிச்சுக்க முடியல.. ரொம்ப வேதனையா இருக்கு.” என அவள் வாய் விட்டுக் கெஞ்சி அழ,

“அழுது முடிச்சிட்டேன்னா நான் சொன்னத சீக்கிரமா பண்ணு செந்தூரி..” என சிறிதும் இரக்கமே இல்லாமல் கூறினான் அவன்.

விக்கித்துப் போனாள் பெண்ணவள்.

பெண் என்றால் பேயும் இரங்கும் என்றல்லவா சொல்வார்கள். இந்த விநாயக் எதற்கும் இரங்க மாட்டான் போலவே.

“பச் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத.. ஆல்ரெடி இதுதான் உனக்கான தண்டனைனு நான் நேற்றே சொல்லிட்டேன்.. திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை என்னால சொல்ல முடியாது.. ட்ரஸ்ஸ ரிமூவ் பண்ணு..” என அவன் அழுத்தமாகக் கூற ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது அவளுடைய வெண்ணிற தேகம்.

அவன் கூறியதை செய்து முடிக்கும் வரை தன்னுடைய பிடிவாதத்தை ளதர்க்க மாட்டான் என்பதை அறிந்து வைத்திருந்தவளுக்கு இங்கே வந்திருக்கவே கூடாது என்ற எண்ணம் நூறாவது முறையாக அவளுடைய மனதில் முகிழ்த்தது.

அவனுக்கோ பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் கோபத்தோடு எழுந்தவன் அவள் தன்னுடைய ஆடையை கழற்றத் தொடங்கியதும் மீண்டும் அமைதியாகி படுக்கையில் அமர்ந்து விட்டான்.

அவளோ தன்னுடைய தலையை தாழ்த்திக் கொண்டவள் விழிகளை இறுக மூடிக்கொண்டு தன்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்ற அவனுடைய விழிகளோ விரிந்தன.

அவளுடைய கண்களில் இருந்து வழியும் கண்ணீரில் நிலைத்த அவனுடைய பார்வை அவளுடைய செந்நிற உதடுகளில் படிந்து சங்குக் கழுத்தில் தவழ்ந்து ஆடை மறைக்காத அழகியலில் பொதிந்து அழகிய வயிற்றில் நிலைக்க முதல் முறையாக அவனுக்கோ உடல் சிலிர்த்தது.

தேகம் சூடேறியது.

அவளோ ஆடைகள் முழுவதையும் அகற்றிவிட்டு கண்ணீரோடு விழிகளைத் திறந்தவள் தன்னையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும் துடிதுடித்துப் போனாள்.

அசிங்கமாக இருந்தது.

அவன் பார்க்கும் இந்த வெற்று உடலை தீயிட்டு கொளுத்த வேண்டும் போன்ற வெறி எழுந்தது.

அவனுடைய பார்வை வீச்சில் நொறுங்கிப் போனவள் அழுதவாறே வேகமாக வந்து படுக்கையில் படுத்து போர்வையால் தன்னை மூடி விட அவளை விழிகளால் தொடர்ந்தவனுக்கு பெருமூச்சு எழுந்தது.

“இங்க இருக்கப் போற ஒவ்வொரு நாளும் இனி இதுதான் நடக்கப் போகுது.. இப்படி டெய்லி அழுகுறதால ஏதாவது மாறப்போகுதா..?” என அவன் கேட்க அவனுடைய வார்த்தைகளைக் கேட்கப் பிடிக்காது தன்னுடைய இரு கரங்களாலும் தன் காதுகளை மூடிக்கொண்டாள் அவள்.

அவனுடைய பார்வையோ அப்போதும் அவள் மீதுதான் நிலைத்திருந்தது.

“நீ காதை மூடினாலும் நான் பேசுறது உனக்குத் தெளிவா கேட்கும்னு எனக்குத் தெரியும்..” என அவன் கூற அவளுடைய உடலோ அழுகையில் குலுங்கியது.

சட்டென தன் காதுகளில் இருந்து கரங்களை விலக்கிக் கொண்டவள்,

“நீ நல்லாவே இருக்க மாட்ட டா..” என அழுதவாறு கூற இதழ் விரித்து சிரித்தான் அவன்.

“ஹா.. ஹா.. அதையும் பார்க்கலாம்..” என்றவன் விழிகளை மூடி உறங்கத் தயாரானான்.

ஆனால் நேற்று போல இன்றும் அவனுக்கு உறக்கம் வரவே இல்லை.

அவளுடைய விசும்பல் அவனுடைய உறக்கத்தை கெடுக்கப் போதுமானதாக இருந்தது.

அவளோ இப்படி ஒரு நிலையில் அவனுடன் படுத்திருக்கிறோமே என்று எண்ணத்தில் நெருப்பில் இருப்பதைப் போலத்தான் துடித்துக் கொண்டிருந்தாள்.

“அழாம தூங்கு.. உன்னால நேத்து நைட்டு நான் சரியா தூங்கல.. இன்னைக்கும் தூங்கலைன்னா என்னோட ஃபேஸ் டல்லாயிரும்..” என்றான் அவன்.

“எனக்கு இங்க நிம்மதியா அழக்கூட உரிமையில்லையா..?” என கோபத்தில் வெடித்தாள் அவள்.

“இப்போ உனக்கு என்னடி பிரச்சனை..? உன்ன இங்க வர வைக்கிறதுக்கு 70 லட்சம் கொடுத்த மாதிரி நீ நிர்வாணமா இப்படித் தூங்குறதுக்கு ஒரு 20 லட்சம் கொடுக்கட்டுமா..? அப்போ அழாம சந்தோஷமா இப்படி பண்ணுவேல்ல..?” என அவன் கேட்க,

இப்போது அவன் புறம் திரும்பி அவனுடைய விழிகளை சந்தித்தவள் “கோடி ரூபா கொட்டிக் கொடுத்தாலும் நீங்க நினைக்கிற எதுவுமே நடக்காது..” என அழுத்தமாகக் கூறினாள்.

“இந்த உலகத்துல பணத்துக்கு மயங்காதவங்க யாருமே கிடையாது.. பணத்தாலதான் நான் உன்ன இப்போ என்னோட படுக்கையிலேயே வெச்சிருக்கேன் என்பத மறந்துடாத..” என்றவனின் உதடுகளில் இகழ்ச்சி நகை தவழ்ந்தது.

“இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க.. உங்க பணத்தால என்ன மிரட்டி மட்டும்தான் பணிய வைக்க முடியும்.. என்னோட மனசையோ என்னோட சம்மதத்தையோ எப்போதுமே உங்க பணத்தால மாத்த முடியாது..”

“அப்படியா பேப்..? நீயே என்கிட்ட வருவ..” என உறுதியாக அவன் கூற

அவனைப் பார்த்து தன்னுடைய முடிக்கற்றையை தூக்கி கர்வமாகக் காட்டியவள் மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொள்ள அவனுக்கோ செருப்பால் அடித்தது போல இருந்தது.

உச்சகட்ட ஆத்திரத்தில் படுக்கையில் இருந்து எழுந்தவன் விருட்டென அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தான்.

அவளுடைய செயல் பலமாக அவனுடைய ஈகோவை தூண்டி விட்டிருந்தது.

‘எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்டயே அவ முடிய தூக்கி காமிச்சிருப்பா.. ப்ளடி ×××××××’ எனத் திட்டியவனின் உடல் முழுவதும் கோபம் பரவியது.

இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தால் கூட அவளை கோபத்தில் அடித்து விடுவோமோ என எண்ணித்தான் உடனே அந்த அறையை விட்டு வெளியேறி வந்திருந்தான் விநாயக்.

வரவேற்பு அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த மதுவை வெளியே எடுத்தவன் மடமடவென அருந்தத் தொடங்கினான்.

‘திமிரு புடிச்சவ..’ அவன் மனமோ கோபத்தில் அவளைத் தாறுமாறாகத் திட்டியது.

ஆத்திரம் அடங்கும் மட்டும் மதுவைக் குடித்தவன் வெகு நேரம் கழித்து மீண்டும் அறைக்குள் நுழைந்தான்.

அங்கே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த செந்தூரியைப் பார்த்தவனின் விழிகள் இன்னும் சிவந்தன.

‘இன்னைக்கு நீ பண்ணதுக்கு கண்டிப்பா அனுபவிப்ப..’ என தனக்குள் கூறிக் கொண்டவன் அங்கே இருந்த சோபாவில் சென்று படுத்துக் கொண்டான்.

போதையின் உதவியால் சற்று நேரத்தில் அவனை தூக்கம் தழுவி இருந்தது.

****

காலையில் தூக்கம் நீங்கி எழுந்து கொண்டவள் விலகி இருந்த போர்வையை பதறித் தன்னில் சுற்றிக்கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து நின்றாள்.

சோபாவில் அசந்து உறங்கிக் கொண்டிருந்த அவனைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு தன்னுடைய ஆடைகளை வேகமாக அணிந்தவளுக்கு வாழ்க்கை வெறுமையாக இருந்தது.

அவன் விழிப்பதற்கு முதல் இங்கிருந்து சென்று விடலாம் என எண்ணியவள் நேற்று போல இன்றும் நேரத்திற்கே தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த கல் பெஞ்சில் படுத்துக் கொண்டாள்.

எவ்வளவு நேரம் அப்படியே தூங்கினாளோ அவளுடைய முகத்தில் சூடான சூரியனின் வெப்பக் கதிர்கள் படுவதை உணர்ந்து திடுக்கிட்டு விழிகளைத் திறந்து பார்த்தவளுக்கு விடிந்து வெகு நேரம் ஆகியது தாமதமாகவே புரிந்தது.

‘அந்த பைத்தியம் இன்னும் எழுந்திரிக்கல போல.. நல்லதா போச்சு..’ என நினைத்தவாறு எழுந்து அமர்ந்தவள், அவன் இந்த வழியால் ஜாக்கிங் போனதையோ அவளை சில நொடிகள் பார்த்தபடி நின்றதையோ அறியவில்லை.

அவன் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பான் என எண்ணிக் கதவைத் திறந்தவள் அங்கே கிரீன் டீயை பருகியவாறு அமர்ந்திருந்த விநாயக்கைக் கண்டதும் அதிர்ந்து பின் எதுவுமே நடவாதது போல தன்னுடைய முக பாவனையை மாற்றிக் கொண்டவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

“ஏய்..” என அவன் அழைக்கும் சத்தம் கேட்க சட்டென நின்றவள் குளியலறைக் கதவைத் திறந்து வெளியே என்ன என்பது போல எட்டிப் பார்த்தாள்.

“இங்க வா…”

“சொ.. சொல்லுங்க..”

“நான் சக்கரவர்த்தி கிட்ட சீக்கிரமாவே ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ண சொல்லிட்டேன்..

என்னாலதான் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ற டேட் தாமதமாச்சு.. சோ சீக்கிரமாவே ஸ்டார்ட் பண்ணுங்கன்னு நான் சொன்னதும் நாளைக்கே ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க..”

“ஓஹ்…” என்றவளுக்கோ விழிகளில் திகைப்பு தெரிந்தது.

நிஜத்தைக் கூற வேண்டும் என்றால் அவளுக்கோ ஒரு புறம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

தினமும் இப்படி ஒரே வீட்டில் இவனுடன் தனியாக இருந்து வதை படுவதை விட படத்தில் நடிப்பது மேல் என எண்ணினாள் அவள்.

“இன்னைக்கு வாக்கிங் போனியா.?” என அவளைப் பார்த்து புருவம் உயர்த்திக் கேட்டான் விநாயக்.

“அ.. அது வந்து ஆமா..” என்றாள் அவள்.

“எத்தனை மணிக்கு வாக்கிங் ஸ்டார்ட் பண்ண..?”

‘அச்சோ இப்போ எதுக்கு இவ்வளவு கேள்வி கேக்குறான்னு தெரியலையே..’ என மனதுக்குள் புலம்பியவள் “மார்னிங் 5 மணி இருக்கும்…” என்றாள்.

“நானும் இந்த பால்கனில நின்னு நீ வாக்கிங் போறததான் பார்த்துட்டே இருந்தேன்..” என அவன் கூறியதும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

‘அய்யய்யோ நாம தூங்கிட்டு இருந்தத பாத்துட்டான் போல இருக்கே..’

‘ரொம்ப நல்ல வாக்கிங் போற..’ என்றவனின் உதடுகள் சிரிப்பில் துடிக்க,

அசடு வழிய அவனைப் பார்த்து சிரித்தவள் சட்டென குளியலறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டாள்.

அன்றைய நாள் முழுவதும் அவனோ வேறு சில திரைப்படங்களின் ஒப்பந்தங்கள் பற்றி கலந்துரையாடுவதற்கு சென்றுவிட இவளோ தனிமையில் நிம்மதியாக இருந்தாள்.

அன்று இரவு வழமை போல வந்துவிட இம்முறை அவனிடம் கெஞ்சாது தன்னை திடப்படுத்திக் கொண்டு ஆடைகளை கழற்றிவிட்டு அவன் அருகே படுத்தவள் இம்முறை அழவில்லை.

அவன் மீது அதிக வெறுப்பை மட்டும் தன் மனதில் சேமித்து வைத்துக் கொண்டாள்.

நாளைய தினத்தில் அவளுக்கு புதுவிதமான அறிமுகம் கிடைக்கப் போகிறது.

சினிமா துறையில் அவளும் ஒரு நாயகியாகப் போகின்றாள்.

இனி அவளுக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கும்.

சீக்கிரமே அனைத்திலும் இருந்தும் விடுதலை அடைந்து விடலாம் என எண்ணியவள் அன்று மிக விரைவிலேயே தூங்கியிருந்தாள்.

அவளுக்கு எதிர் மாறாக தூங்காமல் விழித்திருந்தான் விநாயக்.

 

💜😎💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 61

No votes so far! Be the first to rate this post.

1 thought on “26. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!