சொர்க்கம் – 32
தன்னுடைய அலைபேசியை கரத்தில் வைத்திருந்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு அழைப்பை எடுப்போமா வேண்டாமா என்ற இரண்டே கேள்விகள்தான் மூளைக்குள் ஓடிக்கொண்டிருந்தன.
அவளிடம்தான் கௌதமனின் அலைபேசி எண் இருக்கிறதே.
அவனிடம் பேசி தன்னுடைய நிலையை புரிய வைத்து விட்டால் என்ன..?
அவனுடைய அந்த அதிர்ந்த பார்வையையும் வெறுப்பையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எங்கே இன்னொரு முறை அவனை செட்டில் பார்க்கும்போது தன்னைப் பார்த்து அருவருப்புடன் முகத்தைத் திருப்பி விடுவானோ என எண்ணி அச்சம் கொண்டாள் அவள்.
தன்னை உண்மையான நட்பாக ஏற்றுக்கொண்ட நல்ல உள்ளம் அவளை வெறுப்பதை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
கிட்டத்தட்ட பத்தாவது தடவைக்கு மேலாக மீண்டும் கௌதமனின் எண்ணை அழுத்தினாள் அந்தப் பேதை.
எண்ணை அழுத்துவதும் அழைப்பு கொடுக்கலாமா வேண்டாமா என தயங்குவதுமாக இருந்தது அவளுடைய செயல்.
தன் அழைப்பை அவன் ஏற்று தன்னிடம் ஏதேனும் அவன் கோபமாக கேட்டுவிட்டால் அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே..
அதற்காக தன்னுடைய நிலையை புரிய வைக்காமல் விடுவதா..?
என்ன நடந்தாலும் நடக்கட்டும் தன்னிலை விளக்கத்தை அவனிடம் கொடுத்து விடலாம் என எண்ணியவள் அழைப்பை எடுத்து விட, சில நொடிகளுக்குப் பிறகு அழைப்பை ஏற்றிருந்தான் கௌதமன்.
“ஹலோ இட்ஸ் கௌதம் ஹியர்.. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா..?” எனக் கேட்டது அவனுடைய வசீகரமான குரல்.
பேச்சு வராமல் சதி செய்ய பதில் பேச முடியாது திணறினாள் அவள்.
“ஹலோ யாருங்க நீங்க..?” மீண்டும் கேட்டது அவனுடைய குரல்.
“கௌ… கௌதம் நான்தான்..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
தொண்டை அடைத்தது.
தன்மீது தவறான அபிப்பிராயம் கொண்டு அழைப்பைத் துண்டித்து விடுவானோ என எண்ணிப் பயந்து போனவள் அமைதியாக இருக்க,
“செந்தூரிதானே.” எனக் கேட்டான் அவன்.
“ம்ம் நான்தான்..”
“சொல்லு செந்தூரி.. என்ன விஷயம்..?” அவனுடைய பேச்சு இயல்பாக இருந்தது.
இவளுக்கு அது வியப்பைக் கொடுத்தாலும் அருகே இருந்த தண்ணீரை எடுத்து பருகியவள் “நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நீ ஃப்ரீயா..?” எனக் கேட்டாள்.
“ஆமா நான் ஃப்ரீ தான் சொல்லு..”
“என்ன பத்தி தப்பா நினைக்கிறியா கௌதம்..?”
அவனிடமிருந்து எந்தப் பதிலும் அதற்கு வரவில்லை.
அமைதியாக இருந்தான் அவன்.
அந்த அமைதியில் அவனுடைய எண்ணம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு கண்கள் கலங்கிப் போயின.
“நீ நினைக்கிற மாதிரி எல்லாம் நான் தப்பானவ கிடையாது கௌதம்.. ஒரு பிரச்சினைல மாட்டிக்கிட்டேன்னு சொன்னேன்ல… எல்லாமே என்னோட கைமீறிப் போயிடுச்சு.. வலுக்கட்டாயமா மீள முடியாத சுழலுக்குள்ள மாட்டி தவிச்சுக்கிட்டு இருக்கேன்..” என்றவள் தனக்கு நடந்துவற்றையெல்லாம் கடகடவென ஒன்று விடாமல் அவனிடம் ஒப்பிக்கத் தொடங்கினாள்.
தினமும் இரவில் அவன் தன்னை நிர்வாணமாக நிற்க வைப்பதை மட்டும் மறைத்து விட்டு அனைத்தையும் கூறியவளுக்கு அழுகை கதறலாகவே மாறிவிட்டது.
இடையிடையே விசும்பல்களும் ஒலித்தன.
“வாட்..? என்ன சொல்ற..? இப்படி எல்லாம் ஒருத்தன் பண்ணுவானா..?” என அதிர்ந்து போனான் கௌதமன்.
“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே.. என் தலையை அடமானம் வச்சாவது பணத்தை புரட்டிக் கொடுத்துருப்பனே..” என பதறிப் போனவனாய் கூறினான் கௌதம்.
அவனுக்கோ அவள் கூறியவற்றை தாங்க இயலாது போனது.
எத்தனை துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாளோ என அவளுக்காக பதறித் தவித்தது அவனுடைய மனம்.
“70 லட்சம் பணத்துக்கு நீ எங்க கெளதம் போவ..? பத்தாயிரத்துக்கே உன்னோட பைக்க அடகு வச்சுட்டு பணத்த எடுத்துட்டு வந்த.. என்னால உனக்கு கஷ்டம் எதுக்கு..? அப்படியே நீ எனக்கு உதவி பண்ணனும்னு நெனச்சா கூட சேகரோட வேலை போன மாதிரி உன்னோட பட வாய்ப்பும் உன்னை விட்டுப் போயிருக்கும்…
என்னால நீ கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சேன்… நாம பணத்தை அவன்கிட்ட கொடுத்திருந்தாலும் கூட இன்னொரு விதமா பிரச்சனை கொண்டு வந்திருப்பான்.. அவனுடைய டார்கெட் பணம் இல்ல கௌதம்.. நான்தான்… அத்தனை பேரு முன்னாடி அவன் அடிச்சதுக்கு எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறான்.. இதோ இப்போ வரைக்கும் அதைத்தான் அவன் பண்ணிட்டு இருக்கான்.”
“போதும்… இதுக்கு மேல நீ அங்க இருக்க வேணாம்… நீ அங்க இருந்து கிளம்பிடு.. இல்லன்னா வெயிட் பண்ணு.. நான் அங்க வரேன்.. நம்ம போலீஸ்கிட்ட போகலாம்..” என வேக வேகமாக வார்த்தைகளை உச்சரித்தவனை பெருமூச்சோடு நிறுத்தினாள் செந்தூரி.
“நீ நினைக்கிற மாதிரி இது ஒன்னும் அவ்ளோ ஈசி இல்ல கௌதம்.. உனக்கு இன்னும் புரியல.. நீ எத்தனை போலீஸ்கிட்ட போனாலும் அவனோட பணம் தான் எல்லா இடமும் பேசும்.. அவனை மீறி நம்மளால எதுவுமே பண்ண முடியாது..”
“அதுக்காக இப்படி கெட்ட பெயரை சுமந்துகிட்டு அங்கேயே இருந்து கஷ்டப்படப் போறியா..?”
“வேற என்னதான் செய்றது..? எனக்கு வேற வழி தெரியல… இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இந்த நரகத்துல இருக்கப் போறேன்னு எனக்கு தெரியல.. அவன் பழிவாங்கி முடிக்கும் வரைக்கும் காத்திருக்கிறத தவிர எனக்கு வேற வழி இல்ல..”
“இந்தப் பிரச்சினைல நான் நிறைய பேரோட உண்மையான முகத்தைப் பார்த்துட்டேன்.. என்ன கட்டிக்க போறவன், பணத்தை வட்டிக்கு கொடுத்தவன்னு இப்படி ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமா என் கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தாங்க.. யாருமே என்கிட்ட உண்மையா இல்ல..
முதல் முறையா எனக்காக கிடைச்ச உண்மையான உறவு உன்னோஞ நட்புதான் கௌதம்.. அதனால எதுக்காகவும் உன்ன இழக்க நான் தயாரா இல்லை.. அதனாலதான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு நினைச்சேன்..” என்றவள் அழுகையோடு அனைத்தையும் கூறி முடித்து விட அந்த அறை வாயிலில் கைகளைக் கட்டியவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விநாயக்.
கௌதம் எதையோ கூற அவனுடைய வார்த்தைகள் எதுவுமே அவளுடைய காதுகளுக்கு எட்டவில்லை.
அங்கே சாய்ந்திருந்து அவளையே அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்த விநாயக்கின் மீதுதான் அவளுடைய மொத்த கவனமும் சென்றது.
ஐயோ எப்போது வந்திருப்பான்..?
நான் பேசிய அனைத்தையும் கேட்டிருப்பானோ..?
கௌதமனுக்கு எல்லா உண்மையும் கூறிவிட்டேன் என்பது தெரிந்தால் அதற்கும் ஏதாவது செய்து விடுவானோ..?
இதனால் கௌதமனுக்கு பிரச்சனை வந்தால் என்ன செய்வது..?
கடவுளே காப்பாற்று என பதறியது அவளுடைய மனம்.
“யார் கூட போன்ல பேசுற..?” எனக் கேட்டான் அவன்.
அப்போதுதான் அவளுக்கு நின்ற மூச்சே திரும்பி வந்தது.
இப்போதுதான் வந்திருக்கிறான் போலும் என எண்ணிக் கொண்டவள்,
“என் கூட ஒர்க் பண்ணினவங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்..” என்றாள்.
“சரிடி நான் உன்கிட்ட அப்புறமா பேசறேன்..” என அலைபேசியில் கூறிவிட்டு கௌதமனின் அழைப்பைத் துண்டித்தவள் தன்னைப் பதற்றப்படாமல் வைத்திருப்பதற்காக எழுந்து சென்று தன்னுடைய ஆடைகளை மடிக்கத் தொடங்கினாள்.
சற்று நேரம் அவளை கூர்மையாகப் பார்த்தவன் எதுவும் கூறாமல் படுக்கையில் அமர்ந்து விட இவளுக்கு எங்கே அவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து இறுதியாக நான் யாருடன் பேசி இருக்கிறேன் என்பதை பார்த்து விடுவானோ என உடலும் உள்ளமும் பதறிக் கொண்டிருந்தது.
அவனோ சற்று நேரத்தில் அப்படியே படுக்கையில் சரிந்து விழிகளை மூடிக்கொண்டதும்தான் மூச்சு சீராக வெளிப்பட்டது அவளுக்கு.
மெல்ல தன்னுடைய அலைபேசியை எடுத்து இறுதியாக பேசிய அழைப்பை போனிலிருந்து டெலிட் செய்தவள் மீண்டும் தன்னுடைய ஆடைகளை அழகாக மடித்து வைக்கத் தொடங்கினாள்.
விநாயக்கிடமிருந்து மெல்லிய குறட்டை சத்தம் வரத் தொடங்கிவிட அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டான் என்பதை அறிந்தவள் தன்னுடைய ஃபோனை எடுத்துக்கொண்டு பல்கனிக்குச் சென்றாள்.
“சாரி கௌதம் விநாயக் வந்துட்டான்.. எனக்கு மெசேஜ் ஆர் கால் பண்ணாத.. நாளைக்கு உன் கிட்ட நேர்ல பேசுறேன்… ப்ளீஸ் இதுக்கு ரிப்ளை பண்ணாத..” என அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு அனுப்பிய குறுஞ்செய்தியையும் தன்னுடைய அலைபேசியல் இருந்து அழித்தவள் பயத்துடன் படுக்கையைப் பார்த்தாள்.
அவனோ அசந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
ஏதோ களவு செய்வது போல அவளுடைய கரங்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன.
மீண்டும் தன்னுடைய அலைபேசியை இருந்த இடத்தில் வைத்துவிட்டு சோபாவில் சாய்ந்து கொண்டவளுக்கு ஏதோ மலையைப் புரட்டி வைத்தது போலத்தான் சோர்வாக இருந்தது.
இன்னும் எத்தனை பேருக்கு தன்னை இப்படி புரிய வைக்க முடியும்..?
கௌதம் மட்டும் அவளை நம்பியிருக்கவில்லை என்றால் நிச்சயம் அவள் உடைந்து போய் இருப்பாள்.
நல்ல வேளை அப்படியெல்லாம் நடக்கவில்லை.
சற்று நேரத்தில் இருள் பூமியை சூழத் தொடங்கியது.
அவளுக்கும் தன்னை இருள் சூழ்வதைப் போலத்தான் இருந்தது.
இரவு வந்தாலே உடலும் உள்ளமும் வலிக்கின்றதே.
அவன் முன்பு உடைகளைக் களைய வேண்டுமே.
இன்று ஒரு நாள் என்னுடைய வீட்டில் இருந்துவிட்டு வருவதாக கூறினால் சம்மதிப்பானா..?
வாய்ப்பே இல்லை. அப்படியெல்லாம் சம்மதிப்பதற்கு அவனிடம் என்ன நல்ல உள்ளமா இருக்கிறது..?
இன்று இரவை எப்படிக் கடப்பது என தன் மனதை அரித்துக் கொண்டிருந்த சிந்தனைக்கு பதிலாக வந்தாள் லைலா.
‘அட ஆமால்ல அந்த லைலா டின்னர் இருக்குன்னு இவன கூப்பிட்டாளே..
இவன் மட்டும் அங்க போனான்னா நிச்சயமா நைட் இங்க இருக்க மாட்டான்.. நாம நிம்மதியா ட்ரெஸ்ஸோட தூங்கலாம்..’ என எண்ணியவள் நேரத்தைப் பார்த்தாள்.
நேரமோ இரவு எட்டு எனக் காட்டியது.
அவனோ குளியல் அறையில் இருந்து ஷார்ட்ஸுடன் வெளியே வந்தவன் கைகளை மடித்து ஏதோ உடற் பயிற்சி போல செய்து கொண்டிருக்க முகத்தை சுளித்தாள் அவள்.
‘காலைலதான் வாக்கிங் ஜாக்கிங் ஜிம்முன்னு அவ்வளவு பண்றானே.. அது போதாதா..?
சீக்கிரமா ரெடி ஆகி உனக்காக வெயிட் பண்ற லைலா கிட்ட போயேன்டா..’ என மனதிற்குள் புலம்பினாள் அவள்.
அவனோ அங்கே கிளம்பும் எண்ணமே இல்லாமல் கால்களுக்கு அடுத்த பயிற்சியைக் கொடுக்கத் தொடங்கி விட இவளுக்கோ வெறுத்துப் போனது.
‘அச்சச்சோ ஒருவேளை அவ கூட டின்னருக்கு போக மாட்டானோ..?
ஒருவேளை அவ கூட டின்னருக்கு ப்ளான் பண்ணத மறந்துட்டானோ..?’
இவள் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க அவனோ நிதானமாக படுக்கையில் அமர்ந்து கொண்டவன் ஏதோ லோஷனை எடுத்து தன்னுடைய உடலில் பூசத் தொடங்கினான்.
‘ம்க்கும்… இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல.. இப்படி கிரீம் எல்லாம் பூசிப் பூசிதான் இவ்வளவு வெள்ளையா பளபளன்னு இருக்கான் போல..’ என எண்ணிக்கொண்டது அவளுடைய மனம்.
நேரமோ 8:30 தொட்டதும் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “ஒன்பது மணி ஆகப்போகுது..” என சற்றே சத்தமாகக் கூறினாள் அவள்.
லோஷனைப் பூசிக் கொண்டிருந்த அவனுடைய கரங்களோ சில நொடிகள் அசைவை நிறுத்தின.
அவனோ அவளைப் பார்த்தவன் “சோ வாட்..?” எனக் கேட்டான்.
“இல்ல டின்னருக்கு……” என இழுத்தாள் அவள்.
“பசிச்சா போய் சாப்பிட்டுக்கோ..” என்றவன் மீண்டும் லோஷனை பூசத் தொடங்கிவிட வெறியாகிப் போனாள் அவள்.
‘அட பைத்தியமே.. நீ தான்டா டின்னருக்கு போகணும்.. இந்த லைலா என்ன பண்றா..? ஒரு ஃபோன் கால் பண்ணி இவனுக்கு ரிமெம்பர் பண்ணினாதான் என்னவாம்..?’ என அவளுக்கும் சேர்த்து திட்டினாள் செந்தூரி.
லைலாவைப் பற்றி ஏதாவது பேசினால் அவனுக்கு நினைவு வந்துவிடும் என எண்ணியவள் “உங்ககிட்ட லைலாவோட நம்பர் இருக்கா..?” எனக் கேட்டாள் அவள்.
அவனோ அவளைக் கூர்ந்து பார்த்தவன்,
“யாரு லைலா..?” எனக் கேட்டானே பார்க்கலாம்.
அதிர்ந்து போய் விட்டாள் அவள்.
‘அடப்பாவி..’ என அலறியது அவளுடைய மனம்.
Waiting for next epi sis