33. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.7
(59)

சொர்க்கம் – 33

எப்படியாவது விநாயக்கை அந்த லைலாவுடன் அனுப்பி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்கலாம் என கனவு மாளிகையை அவள் கட்டி வைக்க ‘யார் அந்த லைலா..?’ என்ற ஒற்றைக் கேள்வியில் அவளுடைய கனவுக் கோட்டையை சிதைத்து விட்டிருந்தான் அவன்.

அவளுக்கோ அப்படியே அவனைப் பாய்ந்து பாய்ந்து புரட்டி எடுத்தால் என்ன என்ற ஆத்திரம் மிகுந்தது.

ஆனால் இது ஆத்திரப்படும் நேரம் கிடையாது அல்லவா..?

மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவட்டவள்,

“அவங்கதான் அந்த மேக்கப் ஆர்டிஸ்ட் லைலா.. இன்னைக்கு வீட்டுக்கு வந்தாங்களே..’ என அவனுக்கு நினைவு படுத்தினாள் செந்தூரி.

“யா.. யா க்யூட் கேர்ள்..” என்றவனுக்கோ உதடுகள் சிரிப்பில் துடித்தன.

அடக்கிக் கொண்டான் அவன்.

‘ஆமா ராசா அவ க்யூட்டு கேர்ள்தான்.. அந்த க்யூட்டு கேர்ள் உன்ன டின்னருக்கு கூப்பிட்டா.. அந்த சங்கதி உனக்கு ஞாபகம் வந்திருச்சா இல்லையா..?’ வழமை போல அவளுடைய மனதிற்குள்தான் அவளால் அவனோடு வக்கனையாகப் பேச முடிந்தது.

அவனோ அடுத்த வேலையை பார்க்கத் தொடங்கிவிட,

“அந்த லைலாவோட நம்பர் உங்ககிட்ட இருக்கான்னு கேட்டேனே..?” என மீண்டும் அவனிடம் கேட்டாள் அவள்.

“நோ..” என ஒற்றை வார்த்தையில் பதில் கூறினான் அவன்.

‘அட ராமா.. இவனுக்கு இன்னும் ஞாபகம் வரலையா..?’

“இல்ல நான் அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… சக்கரவர்த்தி சார் அவங்க காண்டாக்ட் வாங்கி வச்சுக்க சொன்னாரு..” என்றவள் அவனை கடைக்கண்ணால் பார்த்தவாறு,

“உங்கள இன்னைக்கு அவங்க டின்னருக்கு கூப்பிட்டாங்கல்ல..? நீங்க டின்னருக்கு போய்ட்டு வரும்போது அவங்களோட நம்பர வாங்கிட்டு வர்றீங்களா..?” எனத் தயங்கி தயங்கி அவள் கேட்க அப்போதுதான் அவனுக்கு சட்டென பொறி தட்டியது.

‘அட இதுக்குத்தான் இந்த குள்ள கத்திரிக்கா மறுபடி மறுபடி லைலாவை பத்தி கேட்டுட்டே இருந்தாளா..?’ என எண்ணியவன் வந்த சிரிப்பை உதடுகளை பிதுக்கி மறைத்துக் கொண்டான் விநாயக்.

“டைம் ஆயிடுச்சு.. நீங்க இன்னும் கிளம்பலையே..?” என மீண்டும் அவனுக்கு அவள் நினைவூட்ட,

“லைலா அப்போவே கால் பண்ணிட்டா..” என்றான் விநாயக்.

“ஓ அப்படியா..? சூப்பர்…. சந்தோஷமா போயிட்டு வாங்க..” என அத்தனைப் பற்களையும் காட்டிச் சிரித்தாள் செந்தூரி.

“நானும் ஈவ்னிங் வரைக்கும் போகலாம்னுதான் நினைச்சேன்.. பட் நவ் டின்னர் போற மூடே வரல.. வர முடியாதுன்னு அப்போவே கேன்சல் பண்ணிட்டேன்..” என்றவன் மீண்டும் வேறு ஒரு லோஷனை பூசத் தொடங்க அவளுக்கோ தலையில் இடி விழுந்தாற் போல இருந்தது.

அவளுடைய ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிப் போக சோர்ந்து போனாள் செந்தூரி.

எப்படியும் 9:00 மணிக்கு சாப்பிடுவதற்கு அழைப்பான்.

சாப்பிட்டு முடித்த பின் அவன் கூறிய அனைத்தையும் செய்ய வேண்டுமே.

சோர்வோடு அங்கிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டாள் அவள்.

அக்கணம் அவளுடைய மனம் வெகுவாக சோர்ந்து போனது.

அன்றைய நாள் நடந்த அனைத்தையும் நினைவில் கொண்டு வந்தவள் அவற்றை சிந்தித்தவாறே தன்னை அறியாமல் உறங்கிப் போனாள்.

எப்போதும் இவ்வளவு சீக்கிரம் உறங்குவது அவளுக்குப் பழக்கம் இல்லை.

இன்று உடலும் மனதும் அதீதமாக சோர்ந்து போயிருந்ததால் தூங்கி இருந்தவள் அரை மணி நேரத்தில் விழித்துக் கொண்டாள்.

அவனோ அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்திருந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்.

மெல்லத் திரும்பி சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள் திகைத்தாள்.

நேரம் ஒன்பதைத் தாண்டி இருந்தது.

இவ்வளவு நேரம் ஆகியும் இவன் தன்னை எழுப்பவே இல்லையே என நினைத்தவளுக்கு அப்போதுதான் தூங்குபவர்களை எழுப்புவது பிடிக்காது என அவன் கூறியது நினைவில் வந்தது.

சட்டென இப்படியே மீண்டும் தூங்கி விட்டால் என்ன..?

இரவு எழுந்து கொண்டால் தானே அவன் முன்பு ஆடைகளைக் களைய வேண்டி வரும்.

இப்படியே நான் தூங்கி விட்டால் அவன் என்னை எழுப்ப மாட்டான் அல்லவா..?

விடிந்த பின்னர் அவனை சமாளிப்பது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்லவே.

இந்த இரவைத் தாண்டி விட்டால் போதுமே என எண்ணியவள் மீண்டும் தன்னுடைய கைகளை விரித்து சோம்பல் முறிப்பது போல செய்துவிட்டு சோபாவில் சாய்ந்து விட அவளை அழுத்தமாகப் பார்த்தான் விநாயக் மகாதேவ்.

தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டவளுக்கு தூக்கம் வரவில்லை.

இவ்வளவு நேரம் தூங்கி விட்டாள் அல்லவா.

உறக்கம் அவ்வளவு சீக்கிரத்தில் வரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்க விழிகளைத் திறக்காமல் மிக சிரமப்பட்டு அப்படியே அசையாமல் படுத்துக் கிடந்தாள் அவள்.

அவளைப் பார்த்தவன் எதுவும் கூறாது சற்று நேரத்தில் வெளியே சென்று விட விழிகளைத் திறந்தவளுக்கு எரிச்சலாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் அவளை அறியாமலேயே மீண்டும் உறக்கம் வந்து அவளைத் தழுவிக் கொண்டது.

நேரமோ இரவு பத்தை நெருங்கியதும் வெளியே சென்றவன் மீண்டும் அறைக்குள் நுழைந்தான்.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த செந்தூரியைக் கண்டதும் அவனுடைய புருவங்கள் இடுங்கின.

இரவு உணவு இன்னும் உட்கொள்ளவில்லையே என எண்ணியவன் அவளை எழுப்ப மனம் இன்றி மீண்டும் வெளியே சென்று தன்னுடைய உணவை மட்டும் முடித்துக் கொண்டு மேலே வந்தான்.

கிட்டத்தட்ட சோபாவில் இருந்து தரையில் விழுந்து விடுவதைப் போல படுத்துக் கிடந்தாள் அவள்.

பெருமூச்சோடு அவளை நெருங்கி தன்னுடைய கரங்களில் ஏந்திக் கொண்டவன் அவனுடைய படுக்கையில் அவளைக் கிடத்துவிட்டு போர்வையை போர்த்தி விட்டான்.

தூங்கிக் கொண்டிருப்பவளை அப்போதும் அவனுக்கு எழுப்புவதற்கு மனம் வரவில்லை.

சற்று நேரத்தில் அவன் மின் விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் படுத்து விட, அதன் பின் தன்னுடைய விழிகளைத் திறந்தவளது மனமோ “தப்பிச்சிட்டோம் மாறா..’ என மகிழ்ச்சியோடு எண்ணிக் கொண்டது.

“இனி டெய்லி ஈவ்னிங் ஆறு மணிக்கே படுத்துத் தூங்கிடலாம்..” என அவளுடைய மனம் குதூகலித்தது.

அடுத்த நாள் அதிகாலையில் ஆறு மணிக்கே விழிப்பு வந்து விட்டது செந்தூரிக்கு.

மெல்லத் தன்னுடைய விழிகளைத் திறந்தவளுக்கு வழமையாக எழும் பதற்றமே எழுந்தது.

எங்கே உடலில் இருந்து போர்வை எங்கேனும் விலகி இருக்கிறதோ எனப் பதறியவாறு தன்னைக் குனிந்து பார்த்தவள் அப்போதுதான் தான் ஆடையுடன் படுத்திருப்பதைக் கண்டு நிம்மதியாக உணர்ந்தாள்.

நேற்று இரவு அவள் பயந்தது போல எதுவுமே நடக்கவில்லை அல்லவா.

இனி தினமும் இப்படியே செய்து தப்பித்துக் கொள்ளலாம் என எண்ணியவள் படுக்கையில் படுத்திருந்தவாறு அவளையை பார்த்திருந்த விநாயக்கின் அழுத்தமான பார்வையில் தடுமாறிப் போனாள்.

“என்ன நேற்று எஸ்கேப் ஆயிட்டோம்னு தோணுதா..?”

திரு திருவென விழித்தாள் அவள்.

‘இனி நீ நைட்ல நான் சொல்லும் வரைக்கும் தூங்கவே கூடாது..” புதிய கட்டளையை பிறப்பித்தான் அவன்.

“அடப் போடா.. நீ என்ன சொன்னாலும் நான் தூங்குறது தூங்குறதுதான்..” என அவள் மனதிற்குள் நினைக்க,

“ஒருவேளை அப்படி நீ தூங்கிட்டேன்னா உன்ன தூக்கத்துல இருந்து எழுப்ப மாட்டேன்.. பட் நானே உன்னோட மொத்த ட்ரெஸ்ஸையும் ரிமூவ் பண்ணிடுவேன்..” என்றதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

தூக்கத்திலிருந்து விழித்த போது இருந்த உற்சாகம் மொத்தமும் வடிந்து போய்விட அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள் அவள்.

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என்ன இங்கேயே வச்சிருக்கப் போறீங்க..? எவ்வளவு நாள்தான் பழி வாங்கப் போறீங்க..? எப்போதான் உங்க பழிவெறி அடங்கும்..?”

“நோ ஐடியா..” என தோள்களைக் குலுக்கினான் அவன்.

நொடியில் அவள் முகம் வாடியது.

“சீக்கிரமா முடிஞ்சிடும்னுதான் நினைக்கிறேன்.. மேபி இந்த படத்தோட ஷூட்டிங் முடியறதுக்குள்ள என்னோட பழிவெறி முடிஞ்சிடலாம்..”

பேசாமல் இவனைக் கொன்றுவிட்டு இந்த வீட்டில் இருந்து தப்பித்தால் என்ன..?

வில்லத்தனமாக சிந்திக்க ஆரம்பித்து விட்டாள் அவள்.

“இன்னைக்கு காலையிலேயே செட்டுக்கு போகணும்.. எனக்கு லேட் பண்ணா பிடிக்காது.. சீக்கிரமா ரெடியாயிரு..” என்றவன் படுக்கையில் இருந்து சென்றுவிட அவளால் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

தூக்கத்தில் இருப்பவளை எழுப்ப மாட்டேன் என்கிறான்.

ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளிடம் அத்துமீற மாட்டேன் என்றும் சொல்கிறான்.

ஆடை இல்லாமல் அருகில் படுத்தால் கூட அவன் தப்பித் தவறி கூட அவளைத் தொடுவது கிடையாதே.

கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான் போலும்.

ஆனால் இப்படிப்பட்டவனுக்குள் எரிந்து கொண்டிருக்கும் பழி வெறி தான் அவளை ஆழ்ந்த அச்சத்திற்கு உள்ளாக்கியது.

சற்று நேரத்தில் அவள் தயாராகி வெளியே வந்து விட அவளை அழைத்துக்கொண்டு ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குச் சென்றான் விநாயக்.

சூரியன் அப்போதுதான் கிழக்கு வானில் உதித்துக் கொண்டிருந்தான்.

அங்கே அனைத்துமே தயாராக இருக்க லைலாவோ லேசான ஒப்பனையை செந்தூரிக்குப் போட்டு விட்டாள்.

அழகிய சிவப்பு நிற தாவணிப் பாவாடையில் கூந்தலை விரித்து விட்டவாறு ஆற்றங்கரையின் ஓரத்தில் நின்றவளுக்கு நெஞ்சம் படபடக்கத் தொடங்கியிருந்தது.

சற்றே தள்ளி அவர்களை படம் பிடித்துக் கொண்டிருந்த கேமராமேன் தொடக்கம் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தியின் அசிஸ்டன்ட் அதைத்தவிர இன்னும் சிலர் என ஒரு கூட்டமே அந்த இடத்தைச் சுற்றிக் குழுமி இருந்தது.

அவள் நின்றதற்கு நேர் எதிரே சற்று தள்ளி நின்றிருந்தான் விநாயக்.

அவனுக்கு இந்தக் காட்சி மிகச் சாதாரணமே.

நொடியில் நடித்து முடித்து விடவான்.

அவளுக்குத்தான் இதயம் பந்தயக் குதிரை போல துடித்துக் கொண்டிருந்தது.

அவளுடைய விழிகளோ அந்த இடத்தில் கௌதமன் எங்கேயும் தென்படுகின்றானா எனத் தேடத் தொடங்கின.

கௌதம் அங்கே இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள் சக்கரவர்த்தியைப் பார்த்தாள்.

அவரோ மீண்டும் ஒருமுறை நடிக்க வேண்டிய காட்சியைத் தெளிவாகக் கூறிவிட எச்சிலை விழுங்கிக் கொண்டவள் சரி எனும் விதமாக தலை அசைத்தாள்.

“ரோலிங் கேமரா ஆக்ஷன்..” என்றதும் அவனோ கம்பீரமாக அவளை நோக்கி நடந்து வர அவளோ நடக்க வேண்டும் என்பதை மறந்து அப்படியே நின்றிருந்தாள்

“கட் கட் கட்.. என்னமா நீயும் நடந்து போனா தானே சரியா இருக்கும்.. இப்படியே நின்னன்னா எப்படி சரியா சீன் அமையும்..? ஆறு ஸ்டெப் எடுத்து வச்சதும் நீ வழிக்கு விழுற மாதிரி விநாயக் சார் மேல விழணும்.. புரிஞ்சுதா..?

“ஓ.. ஓகே ஓகே சார்.”

விநாயக்கோ பொறுமை இழந்தவனாய் தன்னுடைய சிகையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான்.

மீண்டும் அவன் நின்ற இடத்திலேயே சென்று நின்று விட விழிகளை மூடி சில நொடிகள் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டவள் சக்கரவர்த்தி கூறிய வார்த்தைகளை நன்றாக தன் மனதில் ஏற்றிக் கொண்டாள்.

அவளுடைய முக பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நினைவு கூர்ந்தவளாக அவள் அந்த ஆற்றங்கரையின் ஓரமாக நடக்கத் தொடங்க “பெர்ஃபெக்ட்..” என முணுமுணுத்தன சக்கரவர்த்தியின் உதடுகள்.

அவளுடைய நீண்ட கூந்தல் தோகை போல அவளுடைய முதுகில் படர்ந்து அசைய முகத்தில் சிறு கீற்றுப் புன்னகையுடன் நடந்து வந்தவள் அவர் கூறியதைப் போலவே ஆறு அடி எடுத்து வைத்ததும் அப்படியே தடுமாறியது போல சரிய,

அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் விநாயக்.

அவனுடைய வலிமையான கரமோ அவளுடைய தாவணி விலகிய வெண்ணிற இடைப் பகுதியில் அழுத்தமாக பதிய கீழே விழாமல் அவளைத் தன் மார்போடு அனைத்தவாறு அவளுடைய முகத்தை நோக்கினான் அவன்.

அவ்வளவுதான் அவ்வளவேதான்.

இவ்வளவு நேரமும் சக்கரவர்த்தி கூறியது போல உணர்ச்சிகளை தன்னுடைய முகத்தில் கொண்டு வந்து நடித்துக் கொண்டிருந்தவள் அவனுடைய வலிமையான கரம் அவளுடைய வெற்று இடையை அழுத்தமாகத் தீண்டியதும் பதறிப்போய் அவனைத் தள்ளி முயற்சி செய்ய மீண்டும் சீற்றக் குரலில் “கட்..” எனக் கத்தினார் சக்கரவர்த்தி.

“ஷிட்..” என முணுமுணுத்தான் விநாயக்.

பொறுமை பறந்து போனது.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 59

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!