34. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.6
(71)

சொர்க்கம் – 34

விநாயக் பொறுமை இழந்து நிற்பதைக் கண்ட சக்கரவர்த்திக்கோ இவன் கோபமாக செட்டை விட்டுச் செல்லாமல் இருந்தாலே போதும் என எண்ணிக் கொண்டவர் “டென் மினிட்ஸ் பிரேக்..” என்றார்.

அதுவரை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு பிரிந்து செல்லத் தொடங்க அவரோ கோபமாக செந்தூரியை நெருங்கினார்.

அதற்கு முன் அவளுடைய கரத்தை இறுக்கப்பற்றி தன்னருகே இழுத்தான் விநாயக்.

“நான் பாத்துக்குறேன்..” எனக் கூறி சக்கரவர்த்தியை திட்ட விடாமல் தடுத்து நிறுத்தியவன் அவளை இழுத்துக்கொண்டு கேரவனுக்குள் சென்றுவிட சக்கரவர்த்திக்கோ வெறுத்துப் போனது.

‘இந்த பத்து நிமிஷ கேப்ல அந்த பொண்ணுக்கு எப்படி எக்ஸ்பிரஷன் காட்டணும்னு சொல்லிக் கொடுக்கலாம்னு வந்தா இவன் அவனோட தேவைக்கு இவள அழைச்சிட்டுப் போயிட்டானே.. இவனை வச்சுக்கிட்டு ஒரு ஷூட்டிங் முடிக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடும் போல இருக்கு..’ என எரிச்சலோடு எண்ணிக் கொண்டார் சக்கரவர்த்தி.

கேரவனுக்குள் அவளை இழுத்து வந்து கதவைப் பூட்டியவன் அதிர்ந்து பார்த்தவளை இழுத்து தன்னுடைய கை வளைவுக்குள் கொண்டு வந்திருந்தான்.

“எதுக்குடி என்னப் பார்த்து பயப்படுற..? நல்லா தானே நடிச்ச.. என்னோட கை பட்டதும் உன்னால நடிக்க முடியலையா..?”

“ப.. பயமா இருக்கு..” மனதை மறையாமல் கூறிவிட்டாள் அவள்.

“வாட் பயமா..? அப்படி என்ன பயம் உனக்கு..? உன்னத் தொட்டதும் ரேப் பண்ணிடுவேன்னு நினைச்சிட்டியா..?”

“இ… இல்ல…”

“ப்ச்.. நான்தான் உன்னோட பர்மிஷன் இல்லாம எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்னு உனக்குத் தெரியும்ல..? என்னையும் டென்ஷன் படுத்தி டைரக்டரையும் டென்ஷன் படுத்தி இதெல்லாம் உனக்குத் தேவையா..?

மறுபடியும் நீ சொதப்பினா அந்த ஆளு எல்லார் முன்னாடியும் உன்னைக் கண்டபடி திட்டுவான் பரவாயில்லையா..?” அதட்டலாகக் கேட்டான் அவன்.

அவரை விட உன்னைப் பார்த்தால்தான் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது எனக் கூறவா முடியும்..?

தன் வாயை இறுக மூடிக்கொண்டவள் அவனுடைய கை வளைவுக்குள் இருந்து விடுபடத் துடிக்க, அவளுடைய செயலில் அவனுக்கோ சீற்றம் கூடிப்போனது.

அவளை இன்னும் தன் உடலோடு இறுக்கியவன்,

“நடிக்கணும்னு வந்துட்டா இதெல்லாம் பண்ணித்தான் ஆகணும்.. இதுக்கே இப்படின்னா இன்னும் கொஞ்ச நாள்ல கிஸ் பண்ற சீன் எல்லாம் வரும்.. அதுக்கெல்லாம் என்ன பண்ணுவ..?” என அவன் அதட்டலாகக் கேட்க,

“என்னது கிஸ் பண்ணனுமா..?” என நெஞ்சில் கையை வைத்து பதறி விட்டாள் அவள்.

“இதோ பார்.. நான் ஒன்னும் உன்ன நடிக்கணும்னு சொல்லல.. இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. நீயாதான் நடிக்கணும்னு சொன்ன.. உனக்காக டைரக்டர்கிட்ட பேசினேன்.. இதே உன்னோட இடத்துல வேற எந்த ஹீரோயினாவது இருந்திருந்தா தூக்கி எறிஞ்சிட்டு செட்ட விட்டு போயிட்டே இருந்திருப்பேன்.. என்னால மறுபடி மறுபடி ஒரே சீன நடிச்சிட்டே இருக்க முடியாது புரியுதா..?”

“ம்ம் ம்ம்..” வேகமாக தலையாட்டினாள் அவள்.

அதற்குள் வெளியே சோவென மழை அடித்துப் பெய்யத் தொடங்கி விட அவளை விடுவித்தான் அவன்.

அவன் கேரவனை விட்டு வெளியே வந்ததும் அவனுடைய பிஏ ஓடி வந்து அவனுக்கு குடை பிடிக்க அவனை நெருங்கி வந்த சக்கரவர்த்தியோ,

“இதுக்கு மேல ஷூட் பண்ண முடியாது.. இனி நாளைக்கு காலைலதான் பண்ணலாம்..” என சற்று இறுக்கமான குரலில் கூற,

“ஃபைன்..” என்றான் விநாயக்.

அவளுக்கென அங்கே எந்த செயலாளரும் இல்லையே. கொட்டும் மழையில் இறங்கி நின்றவளுக்கோ உடல் குளிரத் தொடங்கியது.

கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்த அனைவரும் அவர்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பத் தொடங்கிவிட,

மழையில் நனைந்தவாறே காரை நோக்கி நடக்கத் தொடங்கினாள் செந்தூரி.

“ஏய் ஸ்டே ஹியர்..” என்றான் அவன்.

அவளுடைய மெல்லிய தாவனியோ மழையில் நனைந்து அவளுடைய உடல் வனப்பை அப்பட்டமாய் காட்ட,

தனக்கு குடை பிடித்தவாறு நின்ற பிஏ வை செல்லும்படி கூறியவன் குடையை வாங்கி அவளையும் தன்னுடைய குடைக்குள் அழைத்துக் கொண்டான்.

“மழை பெய்யுதுன்னு தெரியுதுல.. அப்புறம் எதுக்கு நனைஞ்சுக்கிட்டே போற.” கடிந்து கொண்டான் அவன்.

“அதுக்காக இங்கேயே நிக்க முடியுமா..? ப்ளீஸ் ட்ரெஸ் எல்லாம் நனைச்சிருச்சு போகலாமே..”

“இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் கிளம்பிடுவாங்க.. அது மட்டும் வெயிட் பண்ணு..” என்றான் அவன்.

“எதுக்கு..?”

“அந்த சீன எப்படி நடிக்கணும்னு நான் உனக்கு சொல்லித் தரேன்..” என்றதும் அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

“இ… இல்ல நாளைக்கு நான் சூப்பரா பண்ணிடுவேன்..” என படபடத்தாள் அவள்.

“இப்போ இங்க நாம பிராக்டிஸ் பண்ணிட்டுதான் வீட்டுக்கு கிளம்புறோம் டாட்..” என அவன் அழுத்தமாக வார்த்தைகளை உதிர்க்க ‘போச்சுடா..’ என முனகிக் கொண்டாள் அவள்.

அவனுடைய கட்டளையின் பேரில் அங்கே இங்கே என நின்றிருந்த சிலரும் அந்த இடத்தை விட்டு வேகமாகச் செல்லத் தொடங்கி விட தன்னுடைய கரத்தில் இருந்த குடையை அங்கே இருந்த இருக்கை ஒன்றில் வைத்தவன் மழைக்குள் நனைந்தவாறே அவளைப் பார்த்தான்.

குளிருக்குள் தன்னுடைய கரங்களை ஒன்றோடு ஒன்று தேய்த்தவாறு ஆற்றுப் பக்கம் பார்வையை பதித்து இருந்தவளைத் தன்னுடன் வரும்படி அழைத்தவன் அவளுடைய இடத்தில் அவளை நிற்க வைத்துவிட்டு சற்று தள்ளி அவன் நின்று கொண்டான்.

“இந்த இடத்தை பார்க்கும்போது எப்படி இருக்கு..?” எனக் கேட்டான் அவன்.

‘அட படுபாவி பயலே கொட்டுற மழையில நிக்க வச்சுட்டு கேட்கிறான் பாரு கேள்வியை..’ என மனதில் அவனைத் திட்டிக் கொண்டாலும் அந்த மழையை ரசிக்கத்தான் செய்தாள்.

“அடியேய் வாயைத் திறந்து பதில் சொல்லலைன்னா தூக்கி இந்த ஆத்துல வீசிடுவேன்..” மிரட்டினான் அவன்.

அவன் செய்தாலும் செய்து விடுவான் என்பதை அறிந்து வைத்திருந்தவள் அந்த இடத்தை மீண்டும் ஒருமுறை தன்னுடைய பார்வையால் அளவெடுத்தாள்.

“ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.. சில்லுனு காத்து வீசும்போது மனசுக்கு இதமா இருக்கு..”

அதை சொல்லும்போதே அவளுடைய முகத்தில் சிறு கீற்றுப் புன்னகை மலர்ந்தது.

“குட்.. இந்த இடத்தை நல்லா ஃபீல் பண்ணிக்கோ.. அத அப்படியே ரசிச்ச மாதிரியே ஆறு ஸ்டெப் முன்னாடி வந்தீன்னா போதும்.. கால் தடுமாறி விழுற மாதிரி விழு.. நான் உன்னை கீழே விழ விட மாட்டேன்.. ட்ரஸ்ட் மீ..”

‘கீழ விழுந்தா கூட பரவால்லையே.. நீ பிடிக்கிறதுதான்டா பயமா இருக்கு..’ மீண்டும் மனதிற்குள் கவுண்டர் கொடுத்தாள் அவள்.

‘ஓகே லெட்ஸ் டூ இட்..” என்றவன் அவளை ஆரம்பிக்கச் சொல்ல அவளோ தன்னுடைய சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்த அனைத்தையும் அகற்றிவிட்டு நிஜமாகவே அந்த இடத்தை ரசித்தவள் தன்னுடைய உணர்வுகளை விழிகளில் கொண்டு வந்து மெல்ல நடக்கத் தொடங்க கம்பீரமான நடையுடன் அவனும் அவளை நெருங்கினான்.

அவளோ கால் இடறியது போல தடுமாற இம்முறை அவளை வாகாக தன்னுடைய கரங்களில் கீழே விழாமல் தங்கியவன் அவளுடைய முகத்தைப் பார்க்க, அவனுடைய உள்ளங் கையின் வெப்பத்தை தன்னுடைய வெற்று இடையில் உணர்ந்து கொண்டவளின் உடலோ ஒருமுறை அதிர்ந்து அடங்கியது.

நொடியில் அவளுடைய முகத்தில் கலவரம் வந்து போக தன்னுடைய கரத்தை அவளிடம் இருந்து விடுவித்தவன்,

“நான் தொட்டுறதுதான் உனக்கு பிரச்சனையா இருக்குல்ல.?” எனக் கேட்டான்.

உண்மையைக் கூறினால் தொடாமல் நடிப்பான் போலும் என எண்ணியவள் வேகமாக ஆம் என ஒத்துக்கொள்ள அவன்தான் அடாவடி ஆயிற்றே.

அவளை இழுத்து தன்மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

பதறிப் போனாள் அவள்.

“இப்படியே கொஞ்ச நேரம் என் கூட இரு.. டோன்ட் மூவ்… என்னோட டச்சிங் உனக்குப் பழகிப் போயிரும்..” என்றதும் தன்னுடைய தலையை கொண்டு போய் எங்காவது சுவற்றில் மோதலாமா என்பது போலானது அவளுக்கு.

“அதெல்லாம் வேணாம் விடுங்க..” என்றவளின் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

மழை வேறு இன்னும் அதிகமாக பெய்யத் தொடங்கியது.

இம்முறை அவனுடைய கரம் அதீத அழுத்தத்தோடு அவளுடைய தாவணியை விலக்கி வெற்றிடையில் பதிய அவனை விலக்க வேண்டும் என முயற்சித்தவள் பெரிதாக முழங்கிய இடியில் பயந்து போய் அவனுடைய மார்பில் இன்னும் நெருக்கமாக ஒன்றிக் கொண்டாள்.

அஜானபாகு போல இருந்த அவனுடைய கட்டுமஸ்தான உடலில் அவள் ஒன்றி நின்ற விதமோ ஏதோ பூனைக்குட்டி அவன் மீது சாய்ந்திருந்ததைப் போலத்தான் அவனுக்குத் தோன்றியது.

அவனுடைய வலிமையான கரங்கள் அவளை ஆக்டோபஸாய் சுற்றிக்கொள்ள காற்றுக் கூடப் புக முடியாத அளவுக்கு அவர்களுடைய நெருக்கம் அதீதமானது.

மங்கை அவளுக்கும் மன்னவனுக்கும் சில நொடிகள் தற்கால உலகம் மறந்து போனது போலும்.

அவளை விட அவன்தான் அதிகமாய் திகைத்துப் போனான்.

எப்போதும் தன்னுடைய சுண்டு விரல் பட்டால் கூட துள்ளி ஓடி விலகுபவள் இன்று அவளுடைய பட்டு மேனி மொத்தமாய் தன் மீது படரும் வகையில் மிக நெருக்கமாக தன் மார்பில் ஒன்றி இருப்பதை உணர்ந்ததும் அவன் தேகம் சூடேறியது.

இன்னும் இன்னும் அவளைத் தன் உடலோடு இருக்கியவன் அவளுடைய கழுத்து வளைவில் கிறங்கி தன் முகத்தைப் புதைக்க அந்த நொடியில் சட்டென விழித்துக் கொண்டாள் செந்தூரி.

என்ன நடக்கின்றது என்பதை அவள் உணர்ந்து கொள்வதற்கு முதலே அவனுடைய சூடான அதரங்கள் அவளுடைய சங்குக் கழுத்தில் அழுத்தமாக பதிந்து விட பதறியவளால் அவனுடைய இறுகிய அணைப்பில் இருந்து விலகத்தான் முடியவில்லை.

தன்னுடைய கரங்களை குவித்து அவனுடைய மார்பில் பதித்து அவனைத் தள்ள முயன்ற நொடியில் சட்டென அவளை விடுவித்தான் அவன்.

அவனுடைய பார்வை மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டே அச்சத்துடன் மருண்ட பார்வை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணவளின் மீது நிலைத்தது.

அவளுடைய உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

அவனுடைய லேசர் விழிகள் அந்த உதடுகளின் நடுக்கத்தை கூர்ந்து கவனித்தன.

இது மழையால் வந்த நடுக்கமா இல்லை அவன் அவளுடைய கழுத்தில் பதித்த முத்தத்தால் வந்த நடுக்கமா என்ற கேள்வி அவனுக்குள் எழுந்தது.

கொட்டும் மழையில் அவனுடைய முகத்தைப் பார்க்காது தன்னுடைய பார்வையை தரையில் தாழ்த்தி நின்றவளுக்கு உடலில் நடுக்கம் மட்டும் குறையவே இல்லை.

“போ.. போகலாமே..?”

“நீ இப்போ சரியா பண்ணிட்டேன்னா போகலாம்..” என்றான் அவன்.

அவன் அணிந்திருந்த மெல்லிய வெண்ணிற ஷர்ட்டோ மழையில் தொப்பலாக நனைந்து அவனுடைய மேனியோடு ஒட்டிக்கொண்டது.

பெருமூச்சோடு சரி என ஒத்துக் கொண்டாள் அவள்.

மீண்டும் இருவரும் பிரிந்து அவரவருடைய இடத்தில் நின்றனர்.

அவளோ நடந்த அனைத்தையும் மறந்து விட்டு அவன் கூறியதைப் போல இயற்கையில் தன் கவனத்தை பதித்து அதே போல நடந்து வந்தவள் தடுமாறி சரிய இம்முறை இன்னும் அழுத்தமாக அவளுடைய இடையில் தன் கரத்தை பதித்து தாங்கிக் கொண்டான் அவன்.

அவனைத் தள்ளி விட்டால் மீண்டும் மீண்டும் இந்த மழையில் நடித்துக் காட்ட வேண்டும் என்பதை உணர்ந்தவள் அவன் சொன்னது போல பாவணையோடு அவனுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்க,

அவளுடைய முக உணர்வுகளை மிக அருகில் பார்த்தவனுக்கோ தன்னுடைய பாவனைகள் யாவும் மறந்து போயின.

அவனுடைய கையில் சரிந்து இருந்தவளின் முகத்தில் விழுந்த மழைத்துளிகள் அவளுடைய நெற்றியிலிருந்து வடிந்து இதழ்களின் மீது பட்டுத் தெறிக்க, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முற்றாக மறந்து போனான் அந்த நாயகன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 71

No votes so far! Be the first to rate this post.

1 thought on “34. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!