எவ்வளவு நேரத்திற்குத்தான் அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது..?
அவனுடைய ரொமான்டிக் பார்வையோ அவளுக்கு ஏதோ ஒரு வித்தியாசமான விலங்கை பார்க்கும் பார்வை போல இருந்தது.
அவன் இமை சிமிட்டாது அவளையே உற்று உற்றுப் பார்க்க அவளுக்கோ சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
இதற்கு மேல் நடிக்க முடியாது என எண்ணியவள் அவனுடைய பிடியிலிருந்து விலகி நிற்க அதன் பின்னர்தான் அவனுக்கு சுயம் வந்தது.
“ஐயோ இதுக்கு மேல என்னால முடியாது… அடுத்த இடி இடிக்கிறதுக்குள்ள இங்கிருந்து போயிடலாமே ப்ளீஸ்..” என்றாள் அவள்.
அவனோ தடுமாறிப் போனான்.
சில நொடிகள் என்ன நடிக்க வேண்டும் என்பதையே மறந்து அசைவற்று நின்றுவிட்ட தன்னையே நினைத்து அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அவள் தன்னுடைய கரத்தை மார்புக்கு குறுக்காகக் கட்டியவாறு நடுங்கிக் கொண்டிருக்க,
“நீ காருக்குப் போ.. நான் வரேன்..” என்றான் விநாயக்.
அவளோ விட்டால் போதும் என அங்கிருந்து ஓடிச் சென்று விட இவனுக்கோ அவளைத் தீண்டிய உதடுகள் தித்திப்பதைப் போல இருந்தன.
எதற்காக அவளை முத்தமிட்டோம்..?
எத்தனையோ பெண்களை அவன் பார்த்திருக்கின்றானே.
யாரிடமும் இப்படித் தடுமாறி சித்தம் பிழைத்துப் போய் அவன் நின்றதே இல்லையே.
அதுவும் அவன் வெறுக்கும் பெண்ணல்லவா இவள்.
இவளை எப்படி முத்தமிட்டேன்..?
அதுவும் சுயம் மறந்து..!?
அவனால் அந்த திகைப்பிலிருந்து அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே வர முடியவில்லை.
சற்று நேரம் அந்த ஆற்றங்கரையிலேயே நின்றிருந்தவன் தன்னுடைய சிந்தனைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு கார் நிறுத்தி இருந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
அவன் அறிந்து முதல் முறை ஒரு பெண்ணிடம் தடுமாறி இருக்கிறான்.
சட்டென அவனுக்குள் ஒரு விதமான கோபம் முகிழ்த்தது.
இந்தத் தடுமாற்றம் முத்தமெல்லாம் அவனுடைய அகராதியில் இருக்க தகுதியற்றவை அல்லவா.?
அவனாக எந்தப் பெண்ணையும் இதுவரை தேடிச் சென்றதே இல்லை.
அவனை நாடி வந்த பெண்களை அவன் விட்டு வைத்ததும் இல்லை. ஆனால் வரலாற்றை மாற்றும் விதமாக அல்லவா இன்று அவன் நடந்து விட்டான்.
இனி அவளின் அருகிலேயே செல்லக்கூடாது என்ற முடிவோடு காரைத் திறந்தவனுக்கு உள்ளே ஈரத்தோடு நடுங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டதும் இதயம் மீண்டும் தடதடக்கத் தொடங்கியது.
அவளைத் தொட்டு உணர வேண்டும் போல பரபரத்தன அவனுடைய கரங்கள்.
ஒருவேளை இவளை சந்தித்தது முதல் அவன் எந்த பெண்ணின் அருகேயும் செல்லவில்லையே உடல் தேவை அவனை அழைக்கின்றதோ..?
ஆதலால்தான் அருகே இருந்த பெண்ணிடம் தடுமாறுகின்றோமோ..?
இன்று இரவு லைலாவுடன் வெளியே சென்றால் என்ன..?
தன்னுடைய தேவையை தீர்த்துக் கொண்டால் இப்படியான தடுமாற்றங்கள் அவனைத் தடுமாறச் செய்யாது அல்லவா..?
முடிவெடுத்தவன் காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.
மழை நிற்கவே இல்லை.
சற்று நேரத்தில் அவனுடைய வீடு வந்ததும் வாட்ச்மேன் கதவைத் திறப்பதற்காக காத்திருந்தவன் மீண்டும் காரை செலுத்த அதுவோ நகரமாட்டேன் என அடம் பிடித்தது.
“வாட் த ஹெல்..?” என கார் ஸ்டேரிங்கில் தன்னுடைய கைமுஷ்டியை மடக்கிக் குத்தினான் விநாயக்.
“என்னாச்சு..?”
“தெரியல கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது..”
“அதனால் என்ன நாமதான் வீட்டுக்கு வந்துட்டோமே..?”
“இங்க இருந்து வீடு வரைக்கும் போகவே 20 மினிட்ஸ் ஆகும் இடியட்.. வேற காரை வரச் சொல்றேன்….” என்றவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து மற்றைய காரை வாயிலுக்கு வரவழைக்கும் பொருட்டு இலக்கங்களை அழுத்தத் தொடங்க,
“சரி, நீங்க வெயிட் பண்ணி கார் வந்ததும் வாங்க.. நான் நடந்து போறேன்..” என்றாள் அவள்.
‘ஏய் உனக்கு என்ன பைத்தியமா..? மழை பெய்யுது நடந்து போறேன்னு சொல்ற..?”
“அதுதான் ஃபுல்லா நனைஞ்சிட்டேனே.. இனி நனைஞ்சா என்ன நனையலன்னா என்ன..? ப்ளீஸ்…” என கண்களை சுருக்கி அவள் கெஞ்ச,
“கெட் லாஸ்ட்…” என்றான் அவன்.
அவ்ளோ அதுவே போதும் என்பதைப்போல காரிலிருந்து வேகமாக இறங்கியவள் வாட்ச்மேன் திறந்துவிட்ட கதவின் ஊடாக ஓடிச் சென்று விட தன் தலையை நீவிக் கொண்டான் அவன்.
மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து பார்த்தவன் கார் ஸ்டார்ட் ஆகியதும் பெருமூச்சோடு காரை உள்ளே செலுத்தியவன் அவனுக்கு முன்பு புள்ளிமான் துள்ளி ஓடுவதைப் போல தாவணியை விரித்து பிடித்தபடி அந்த சிமெண்ட் போட்ட பாதையில் மழையை ரசித்து நனைந்து கொண்டு ஓடிச் சென்றவளைக் கண்டு சட்டென காரின் பிரேக்கை அழுத்தினான்.
அவனுடைய மனம் அவளைப்போல நடந்து சென்றால் என்ன என்ற கேள்வியை முன் வைத்தது.
ஸ்டார்ட் ஆகிய காரை ஆப் செய்தவன் காரிலிருந்து இறங்கி அந்தப் பாதையில் அவளின் பின்னே நடக்கத் தொடங்கினான்.
அவன் தன் பின்னே நடந்து வருவது தெரியாது மழையை ரசித்தவாறே கைகளை விரித்தபடி மெல்ல ஓடிச் சென்றவளின் கூந்தலோ அவளுடைய இடை தாண்டி அங்கும் இங்கும் அசைந்தாடியது.
அதைப் பார்த்தவன் மனமோ தன் ஊசலாட்டத்தை தொடர்ந்தது.
துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தவள் திடீரென கேட்ட இடி சத்தத்தில் அப்படியே அதிர்ந்து காதுகளை மூடியவாறு நின்றுவிட அவளை வேகமாக நெருங்கியவன் “இட்ஸ் ஓகே… லெட்ஸ் கோ..” என்றான்.
திடீரென அருகே கேட்ட குரலில் பதறி தன்னுடைய விழிகளைத் திறந்து பார்த்தவள் அவனை அங்கே எதிர்பார்த்திருக்க வில்லை.
அவனுடைய கார் சற்று தூரத்தில் நிற்பதைக் கண்டு “நீங்களும் நடந்தே வந்துட்டீங்களா..?” எனக் கேட்டாள்.
“ஆமா என்னோட கார் ஸ்டார்ட் ஆகல..”
“ஃபோன்ல உங்களோட மத்த கார வர வைக்கிறேன்னு சொன்னீங்க..?”
“ஃபோன்ல சார்ஜ் இல்ல.. அதனாலதான் நானும் நடந்து வந்துட்டேன்..” என பொய் கூறியவன் அவளுடன் இணைந்து நடக்கத் தொடங்கி விட அவளோ அவன் அருகே வருவதால் தன்னுடைய குறும்புத்தனங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு சமத்தாக நடக்கத் தொடங்கினாள்.
“மழைன்னா பிடிக்குமா செந்தூரி..?”
“ம்ம் யாருக்குத்தான் மழை பிடிக்காது..?” என்றாள் அவள்.
“எனக்கு பிடிக்காது..” என்றான் அவன்.
ஆரம்பிச்சுட்டான் என முனகியவள் அமைதியானாள்.
“நாளைக்கு பெர்பெக்டா நடிச்சிடுவியா..?”
“ஆமா நாளைக்கு நல்லா பண்ணிடுவேன்னு நினைக்கிறேன்..” என்றாள் அவள்.
“நாம வேணும்னா இப்போ ஒரு தடவை ரிகர்சல் பார்த்துடலாமா..?” என அவளுடைய ஈரம் படிந்த கழுத்தைப் பார்த்தவாறு அவன் கேட்க அவளுக்கோ திக்கென இருந்தது.
ஏற்கனவே அவன் ஒத்திகை என்ற பெயரில் அவளுடைய இடையை அழுத்திப் பிடித்து சிவக்க வைத்தது போதாதா..?
இனியும் அவனுடைய தொடுகையை இந்த உடல் தாங்காது என எண்ணிக்கொண்டவள் மறுத்து விட,
“அது எப்படி நீ முடியாதுன்னு சொல்லலாம்..? ஒருவேளை நீ சரியா நடிக்கலைன்னா நாளைக்கு நான்தான் கஷ்டப்படணும்.. சோ ரிகர்சல் பார்க்கிறதுல தப்பு கிடையாது..” என அவன் அழுத்தமாகக் கூற அவளுக்கோ ஐயோ என்றாகிப் போனது.
“ரெடியா..?”
“ஐயோ பாம்பு…” என அருகே இருந்த தோட்டத்தைக் காட்டி அவள் அலற,
“எங்கடி..?” என்றவாறு தன்னுடைய நடையை நிறுத்தியவன் அவள் காட்டிய தோட்டத்தின் பக்கம் தன்னுடைய பார்வையைத் திருப்ப அங்கே அவள் சொன்னதைப்போல எந்த பாம்பையும் காணவே இல்லை.
“பாம்பு எங்கே..?” எனக் கேட்டவாறு தன் அருகே நின்றவளைத் திரும்பிப் பார்த்தவன் அந்த இடம் காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான்.
“ஷிட் எஸ்கேப் ஆயிட்டா…” என எரிச்சலோடு முணுமுணுத்தன அவனுடைய உதடுகள்.
“சாரி விநாயக்.. ரொம்ப குளிருது.. நான் போறேன்..” என ஏதோ ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதைப் போல கத்திக்கொண்டே அவள் முன்னேறிச் சென்றுவிட அவனுடைய சிவந்த விழிகள் அவளை வெறித்தன.
வீட்டுக்குள் ஓடிவந்தவளுக்கு எப்படியோ தப்பித்து விட்டோம் என்ற எண்ணம்தான்.
தன்னுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டு வேகமாக குளியலறைக்குள் புகுந்தவள் குளித்து முடித்து ஆடையை மாற்றி விட்டு வெளியே வந்த நேரம் அவனும் மற்றைய அறையில் இருந்த இன்னொரு குளியலறையில் குளித்து முடித்துவிட்டு துவாலையுடன் வந்திருந்தான்.
‘இவனுக்கு எப்ப பாத்தாலும் இதே வேலையா போச்சு.. ஏதாவது அரைகுறை ட்ரஸ்ஸா போட்டுக்க வேண்டியது.. வெட்கம் கெட்டவன்..’ என நினைத்தவள் சோபாவில் தன்னுடைய முடியைக் காய வைத்தவாறு அமர்ந்து விட,
அவனுடைய பார்வையோ அவளுடைய நீண்ட கூந்தலிலும் கழுத்திலும் படிந்தது.
உடல் முழுவதும் உஷ்ணம் பரவுவதைப் போல இருக்க தன்னுடைய அலைபேசியை வேகமாக எடுத்தவன் அதிலிருந்த லைலாவின் எண்ணுக்கு அழைப்பை எடுத்தான்.
தன்னுடைய போனை அவுட் ஸ்பீக்கரில் போட்டவன் ஷர்ட் ஒன்றை எடுத்து அணிய சில நொடிகளிலேயே அவனுடைய அழைப்பை ஏற்று,
“ஹலோ விநாயக் சார்.. என்ன அதிசயம் நீங்களே கால் பண்ணி இருக்கீங்க.. நான் ரொம்ப சப்ரைஸ் ஆயிட்டேன்..” என குதுகலித்தாள் லைலா.
“லைலா நீ ஃப்ரீயா..?” எனக் கேட்டான் அவன்.
இவர்கள் இருவருடைய உரையாடலையும் பார்த்த செந்தூரிக்கோ அதிர்ச்சியாக இருந்தது.
தன்னிடம் லைலாவின் அலைபேசி எண் இல்லை என்றல்லவா கூறினான்..?
எதற்காக தன்னிடம் பொய் கூறினான் என சிந்திக்க ஆரம்பித்தாள் அவள்.
அவளுடைய சிந்தனையை தடுக்கும் வண்ணம் லைலாவின் குரல் அந்த அறையை நிறைத்தது.
“ஐயோ நான் ஃப்ரீயாதான் இருக்கேன்.. இன்னைக்கு ஃபுல்லா ப்ரீதான்.. நாம மீட் பண்ணலாமா..?” எனக் கொஞ்சிக் குழைந்தது அவளுடைய குரல்.
“எஸ்..” என்றான் அவன்.
“நேற்று நான் கேட்டதும் நீங்க வராம போனதுல ரொம்பவே வருத்தப்பட்டேன்.. இப்போதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… இப்பவே உங்க வீட்டுக்கு வரேன்…” என்றாள் அவள்.
“நோ இங்க வேணாம்.. மூன் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்துரு.. அங்க மீட் பண்ணலாம்..” என்றவன் அவள் எதையோ கூற முயல அதைக் கேட்க பிடிக்காதவனாய் சட்டென தன்னுடைய அழைப்பைத் துண்டித்து விட்டு நிமிர பேய் அறைந்ததைப் போல விழிகளை விரித்தபடி நின்றிருந்தாள் அவள்.
“வாட்..?” என்றான் அவன்.
“இ.. இல்ல ஒன்னும் இல்ல..” அவனுடைய முகத்தைப் பார்க்காது வேறு புறம் திரும்பிக் கொண்டாள் அவள்.
“நான் இன்னைக்கு நைட் இங்க வர மாட்டேன்.. ஏதாவது சொல்லனும்னா எனக்கு கால் பண்ணு.. என்னோட நம்பர் உன்கிட்ட இருக்கு தானே..?”
“இல்லையே..” என்றாள் அவள்.
அவளுடைய அலைபேசியை வாங்கிப் பார்த்தவன் “இந்த ஃபோன வச்சு எப்படி மேனேஜ் பண்ற..? ஒரு ஸ்மார்ட்போன் வாங்கலாமே..?” என்றான்.
“பேசுறதுக்கு இந்த ஃபோனே போதும்..” என சுள்ளென்று பதிலடி கொடுத்தாள் அவள்.
“என்னவோ பண்ணு.. ஐ டோன்ட் கேர்..” என்றவன் தன்னுடைய நம்பரை அவளுடைய போனில் சேமித்துவிட்டு அவளிடம் கொடுத்தான்.
‘உலகமே அழிஞ்சாலும் நான் உனக்கு கால் பண்ணவே மாட்டேன்டா..’ என உறுதியாய் கூறியது அவளுடைய மனம்.
“ஓகே நாளைக்கு மீட் பண்ணலாம். ட்ரைவர் கூட ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு வந்துரு.. நான் இங்க வரமாட்டேன்.. நான் நேரா அங்க வந்துடுறேன்..” என்றவன் தன்னுடைய கார் கீயையும் ஃபோனையும் எடுத்துக் கொண்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றுவிட அவளுக்கோ புயல் அடித்து ஓய்ந்தாற் போல இருந்தது.
Poi tholaittum