15) செந்தனலாய் பொழிந்த பனிமழை

5
(1)

ஐந்து வயதை தாண்டிய வருட கால அவகாசத்தோடு நகர்ந்த ஆதிரனுக்கு நினைவு முழுவதும் தங்களின் பெற்றோருக்கு விருப்பமான அன்பினியை சுற்றியே இருந்தது…

 

அவன் கண்ணுக்கு புலப்படாத தொலைவில் அவளை பற்றி அவன் அறிந்து கொள்ளாத நிலையில் அவனை வைத்து விட்டு சென்றிருந்தாள் அன்பினி…

 

ஆதிரனின் தேடல்கள் அனைத்தும் அவனுக்கு தோல்வியை தழுவியது.. பெற்றோரிடம் கேட்கலாமா என்ற போதெல்லாம் அவனை வெறுத்து வைத்து விட்டார்கள் இருவரும்…

 

சங்கீதா கூட இப்போதெல்லாம் உணவு சமைப்பது வீட்டை சுத்தமாக வைத்திருப்பதை மட்டும் செய்தவள் சொல்லாமல் கொள்ளாமல் தனது வீட்டிற்கு கிளம்பி விடுவாள்….

 

நினைவுகளை மட்டும் தூசிதட்டி வாழ்ந்து கொண்டு இருந்தவனுக்கு நான் இப்படி ஒரு கொடூரமானவனாகவா இருந்து உள்ளேன் என்று நினைத்தாலே அவனது தலைவலிக்கு அடித்தளம் போடுவான்…

 

இந்த ஐந்து வருடத்தில் ஆதிரனும் அவர்களது நண்பர்களும் கல்லூரி படிப்பை முடித்ததோடு அன்பினியை பெற்ற தகவல்களையும் தேடி சலித்து போய் விட்டார்கள்…

 

அன்பினி இந்த இடத்தை விட்டு நகர்ந்த பின்பு தான் அவளின் அருமை புரிந்தது  அவனுக்கு….

 

அவள் இல்லாத‌ நாட்கள் அனைத்தும் அவனுக்கு அவளை இருந்த நாட்கள் அனைத்தையும் நியாபகம் கொண்டு வந்தது…

 

தனது தந்தை தாயின் ஒதுக்கம், சங்கீதா பேசா முகம், அத்தோடு இல்லாமல் போன அவனுடைய ஶ்ரீமா அன்பு, பாஸ்கரன் அப்பாவின் அதட்டும் விதமும் அவனை பாடாய் படுத்தியது…

 

பள்ளி பருவ முடிவினால் நண்பர்கள் கூட்டமும் குறைந்து ஒரே ஆளாக மாறிவிட அவனுடைய தயவால் தான் தாடியோடு நடமாடும் உயிராக உள்ளான்…

 

காலை முதல் இரவு வரை அவனோடு பயணிக்கும் ஆதிரன் இரவில் மட்டும் இரை தேடி விட்டு வீட்டை அடையும் பறவையாக தனது இடத்தை அடைந்து கொள்வான்…

 

அவனால் அந்த வீட்டில் வாழ்வதே சவாலான தருணங்களில் மிக மோசமானது  தாராளம்…இதோ இப்போது கூட இருவரும் விளையாடிய அவர்களின் தோட்டத்து புல்வெளிகளை அவனை கண்டு சிரிப்பதை போல உணர்ந்தான்….

 

அவள் இல்லாமல் நான் இல்லை என்ற தருணத்தை உணர்ந்தும் அவனால் அவளை கண்டு பிடிக்க முடியவில்லையே!…

 

இதில் அவனிழந்த பட்டப்படிப்பு ஒரு பக்கம் என்றால் குடியில் மூழ்கியது இரண்டாம் பக்கம்…

 

பெற்றவர்களும் அவன் செய்யும் எதற்கும் கேள்வி கேட்பது இல்லை…இப்படி ஒரு வாய்ப்பு கிட்டாதா என்று காத்திருந்த தீபாவிற்கு அவனது மாற்றம் மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது…

 

அதிலும் ரம்யா ஆதிரனின் மூளையை அவ்வப்போது பயன்படுத்தி கொண்டு அவனது படிப்பின் அத்துனை ரகசிய வழியையும் கற்று கொண்டாள். அதை பயன்படுத்தி இப்போது அவள் ஆன்காலஜி ஸ்பெஷலிஸ்ட்டாக மாறியிருந்தாள்…

 

ஆனால் அவனோ அனைவரும் கண்டுகொள்ளாமல் போன அனாதை ஆகிவிட்டான்…

 

தனது மகளின் வளர்ச்சிக்கு பின்னர் தீபா ஆதிரனிடம் பேசுவதை அறவே தவிர்த்து விட்டாள்… அவனாக சென்று பேச முற்பட்டாலும் வயசுக்கு வந்த பொண்ணு இருக்க இடத்துல குடிச்சிட்டு வரையே வெட்கமா இல்லையா?…என்று அசிங்கமாக கேட்டு அனுப்பி விடுவாள்…

 

அத்தோடு அவர்களின் பெற்றோருக்கு இந்த தகவலையும் தெரிவித்து குளிர்ச்சி கண்டு கொள்ளுவாள்… எப்படி ஆனாலும் நடக்கும் விஷயத்தில் நன்மை இப்போது வரை விளையும் பூமி தீபாவின் வீட்டில் மட்டுமே!…

 

எத்தனையோ முறை சொல்லி பார்த்த அன்பரசியும் இன்பரசனும் எப்படியோ போ என்று கை கழுவி விட்டார்கள்…

 

சங்கீதா அவன் பேசிய அன்றுக்கு மேல் அவன் அவனது முகத்தை கூட காணுவதில்லை என்பது தான் மெய்..

 

குடிபோதையில் தனது வீட்டு தோட்ட நாற்காலியில் அமரந்தான் அவன்…

 

இதோ‌ கிங்கினி சிரிப்பு சத்தத்தோடு அவனருகே அன்பினி வந்து அமர்வது போன்ற பிம்பம் அவனுக்கு தெரிந்தது…

 

அன்பு…அன்பு…வந்துட்டையா…என் மேல இவ்வளவு கோபமா?…ஏன் என்ன இப்படி விட்டு போன…என்று அந்த குழந்தையை பார்த்து கேட்கவும் அதுவும்,

 

நீ தான் டா காரணம் என்பது போல அவனது மூக்கை சிமிட்டி விட்டது…

 

நான் எப்பவுமே உன்ன அப்படி தான் திட்டுவேன்…எப்பவுமே நீ என்ன விட்டு போனது இல்ல தான…இப்ப மட்டும் என்ன…

 

ஏன்னா இப்ப நீ சொன்னது உன்னோட நிம்மதியே பறிபோயிடுதுன்னு…அப்புறமும் உன்ன எப்படி டா தொந்தரவு பண்ணுவேன்…

 

சாரி அன்பு…நீ இல்லைனா நான் இல்லைன்றத இப்ப தான் நான் புரிஞ்சுகிட்டன்…இனிமே நான் இப்படி பண்ண மாட்ட….

 

மயான அமைதியோடு அவன் அவளை பார்த்தவாறு இருக்க சில்லென்ற ஒரு இரவு காற்று வீசி செல்லவும் அந்த இளவயது அன்பினியும் கலைந்து போய் அவனுக்கு நிகழ் காலத்தை உணர்த்தியது…

 

அன்பு..அன்பு… அன்பு….

 

காணாமல் போன அவளை அந்த தோட்டத்தை சுற்றி சுற்றி தேடி கலைத்து போனான்…

 

அப்ராட் போயிட்டு வரேன் நான் இல்லாமல் நீ இருந்துப்பையா?.. என்ற அன்பினியின் கடைசி பேச்சுகள் அவனது செவியில் மீண்டும் மீண்டும் ரம்மியம் செய்தது…

 

இல்ல…இது கனவு இல்ல..அவ வந்தா…அவ எனக்காக மறுபடியும் இங்க வந்தா…வருவா என்று அழுதான்…

 

முட்டியிட்டு தோட்டத்தில் அமரந்தவனுக்கு அவளது நினைவுகள் புகைப்படம் போல வரிசை படுத்தி சிரித்தன…கூடுதலாக அவள் கேட்ட கேள்வியும், அவளது அறையில் அவன் அவளது காதலை உணர்ந்த தருணமும் பிரசவித்து சென்றது நிமிட நொடியினிடையே!…

 

……..

 

என்ன நடக்குது இங்க?…

 

தனது புருவ உயர்விலே அங்கு குலைநடுங்கி நிற்பவர்கள் அனைவரையும் ஒரு ஏளன பார்வையோடு நகர்ந்தாள் ஒரு ஹீல்ஸ் போட்ட பெண்மணி …

 

நான் என்ன டிசைன் சொன்ன நீங்க என்ன டிசைன் பண்ணிருக்கிங்க?…

 

பார்வை மட்டும் அல்ல பேச்சும் கூட வெடித்துவிடும் மிளகாயாக இருந்தது..

 

இல்ல மேம் இது இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் அதான்…

 

வாட் நீ என்ன விட எக்ஸ்பீரியன்ஸானவளா இங்க?…

 

நோ மேம்…நேத்து தான் ஜாய்ன் பண்ண…

 

ஓஹோ…அதான் இந்த துள்ளல்…நான் என்ன சொல்றேன்னோ அது மட்டும் செஞ்சா போதும்… தேவையில்லாமல் எதாவது செஞ்சைனா உன்ன நிறுத்த எனக்கு நொடி நேரம் ஆகாது…

 

தனது பேச்சுக்கு மறுபேச்சு அங்கு இல்லை என்பதை நிறுபித்தவள் அவளது அலுவலக அறையில் சென்று நின்றாள்…

 

சாப்பிட்டிங்களா டாடி….

 

நோ மா …நீ இல்லாமல் நான் எப்ப சாப்பிட்டு இருக்க…

 

நான் வர நேரமான நீங்க சாப்பிடுங்கனு எத்தன டைம் சொல்லி இருக்கப்பா…

 

ம்ம்…உனக்கு நான் அப்பாவா, இல்ல எனக்கு நீ அம்மாவான்னே தெரியலமா…

 

அப்படி மடக்குறிங்களா… நானே உங்க அம்மான்னு வச்சுக்கோங்களேன்…

 

ஓஹோ அப்பவும் நீ சொல்றத தான் நான் செய்யனும்….நான் சொல்றத நீ செய்ய மாட்ட…அப்படித்தான்ன…

 

நோ டாடி…நீங்க என்ன சொன்னாலும் செய்வேன்…பட் உங்க உடம்ப பாதிக்கிறது எனக்காக செஞ்சா என்னால தாங்கிக்கவே முடியாது…பிக்காஸ் எனக்கு  உங்கள அவ்வளவு பிடிக்கும்…

 

சொல்லியவாறு தனது தந்தையின் கழுத்தை கட்டியணைத்து கொண்டவள் சாட்சாத் அன்பினியே தான்…

 

சரிம்மா நம்ம இந்தியா எப்ப கிளம்ப போறோம்?…

 

டுடே நைட் டாடி… டிக்கெட்லாம் புக் பண்ணிட்டன்…

 

அப்படியாடா…சரசரி…

 

தங்குறதுக்கு ஒரு பை ஸ்டார் ஹோட்டல் ரெடி பண்ணிருக்க…நல்ல இடம் தான்… கொஞ்சம் கூட நமக்கு அன்பிட்டா இருக்காது…ஹை ஜீனிக் ஃபுட் அண்ட் ஹை ஜீனிக் ரெஸ்டாரண்ட் அதுதான்…இன்டர் நெட்லையும் கூட ஃபை ஸ்டார் வேல்யூ வாங்கின ரெஷார்ட் அது… நம்ம வேல முடியிற வரை நம்ம அங்க தங்கி முடிச்சிட்டு வர சரியா இருக்கும் டாடி…

 

ம்ம் ம்ம். அப்படியா சூப்பர்டா… போற வேலை நல்ல படியா முடியனும்…

 

நீங்க இருக்கும் போது அதுலாம் ஒரு மேட்டரா டாடி….

 

இதுலாம் என்னம்மா இருக்கு…உன்னோட உழைப்பு தான் உன்னோட உயர்வுக்கு காரணம்…

 

வெளியே பணியாட்களிடம் கடிந்து கொண்ட அதே அன்பினி தான் தன் தந்தையிடம் கொஞ்சி கொண்டுள்ளாள்..

 

அவள் விருப்பமான மண்டேலா ஆர்ட்டில் செழித்து வளர்ந்து விட்டாள் அப்ராட்டில்…அவளது உழைப்பையும் அவளது தொழிலும் அவளை இந்தியா வரை அழைத்து செல்ல தயாராகிவிட்டது…

 

இதோ இன்னும் ஐந்து மணிநேரத்தில் விமானத்தில் பயணித்து கோயம்புத்தூர் ரெஷார்ட்டில் தங்கி அருகில் உள்ள அவளது பள்ளியின் தலைமை ஆசிரியரின் வீட்டிற்கு மண்டேலா  ஆர்ட் வடிவ  வரைபடங்களை தங்களது சுவற்றில் வரைந்த வர்ணம் தீட்டி விடுமாறு அவர் வேண்டி கேட்டுக்கொள்ளவும் தான் அவள் இந்தியா வர சம்மதித்தாள்…

 

டாடி இந்தியால்ல எனக்கு பிடிச்சது எதாவது இருக்கா?…நம்ம கோயம்புத்தூர்ல இருந்தம்னா அங்க நம்ம சொந்த வீடு இருக்கும்ல… அங்க கூட போலாம்ல…

 

நோ‌ டா வரும்போது எல்லாத்தையும் வித்துட்டு வந்துட்ட…இனிமே அங்க எப்படி போக முடியும்…

 

ம்ம்ம்…ஓக்கே டாடி ….

 

தானும் தந்தையும் கோயம்புத்தூர் செல்வதால் அங்கு பிறப்பிடம் இருந்திருக்கும் என்று எண்ணியவளுக்கு ஏமாற்றம்…

 

இருவருக்கும் டிக்கெட் புக் செய்தவள் தாமதமில்லாமல் விமான நிலையத்தை அடைந்து விமானம் ஏறி அமர்ந்து கண்களை இறுக மூடி அமர்ந்தாள்…

 

அவளின் இப்போதைய நிம்மதி குலைபோக  போகிற கோயம்புத்தூர் நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறாள் அவளின் தந்தையோடு…..

 

காலங்கள் கொடுத்த இடைவெளியில் மறைந்த முன்னால் நினைவுகள் அனைத்தும் வடுக்களை கொடுக்க போவதை தெரியாமல் அமர்ந்திருந்த அவளிடம் யார் சொல்லுவார்கள் மீண்டும் உனது பயணம் உன் தந்தையோடு இல்லை என்று….

 

விதி விளையாண்ட விளையாட்டின் முற்பாதி அறியும் முன் அவள் ஓய்ந்து போவதில் கடவுளுக்கு அத்தனை மகிழ்ச்சி…

 

செந்தனலா?…மழையா?…

 

கௌசல்யா வேல்முருகன் 💝.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!