மை டியர் மண்டோதரி…(16)

5
(3)

என்ன மேடம் எப்ப பாத்தாலும் இப்படி முறைச்சுக்கிட்டே இருக்கீங்களே என்ன விஷயம் யார் யாரையோ நம்புறீங்க என்ன நம்ப மாட்டேங்கறீங்களேன்னு சொன்னா இப்படி முறைச்சு பார்த்துட்டு இருக்கீங்க என்றான் தசகிரீவன்.

உன்னை எதுக்கு நான் நம்பனும் என்ற ஷ்ராவனியிடம் என்னங்க இப்படி சொல்றீங்க ஒரு பொண்டாட்டி ஒரு புருஷனை நம்பாமல் இருக்கலாமா என்றான் தசகிரீவன் .

அடி செருப்பால யார் யாருக்குடா பொண்டாட்டி? என்ற ஷ்ராவனியிடம்  செருப்பால அடிக்கிறேன்னு சொல்றீங்க அப்ப நான் தான் உங்க புருஷன் நீங்க தான் என்னோட பொண்டாட்டி. பொண்டாட்டி மட்டும்தான் புருஷனை செருப்பால ,விளக்கமாத்தால, ஏன் பூரிக்கட்டையால் எல்லாம் அடிக்கிறதுக்கு புல் ரைட்ஸ் உள்ள பொண்ணு என்ற தஷகிரிவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது .

இவன் வேற அப்பப்ப வந்து கடுப்பேத்திட்டு இருக்கானே ஐயோ இவன் பேச பேச என் மைண்ட் வேற இவன் பக்கம் போயிட்டு இருக்க எங்க அப்பா ஹிட்லர் கதிர்வேலனை நினைச்சா ஒரு பக்கம் பயமா இருந்தாலும் இவன் சொல்றது மாதிரி அவர்கிட்ட இருந்து தப்பிச்சு இவனை கல்யாணம் பண்ணிட்டு எங்கையாவது போய் செட்டில் ஆனால் கூட தேவலைன்னு தான் தோணுது என்று நினைத்த மனதை அடக்கியவள் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

எப்ப பார்த்தாலும் நான்தான் பேசிட்டு இருக்கேன் நீங்க பேசவே மாட்டேங்கிறீங்க என்ன தாங்க உங்க பிரச்சனை என்கிட்ட சொல்லுங்க நான் சரி பண்ணி தரேன் என்றான் தஷகிரிவன் .

என் பிரச்சனை என்னனு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா சரி பண்ணுவீங்களா? என்றாள் ஷ்ராவனி . சத்தியமா உங்க மேல சத்தியமா, என் மேல சத்தியமா நம்ம லவ் மேல சத்தியமா, நமக்கு பிறக்க போற புள்ளை மேல சத்தியமா நான் சரி பண்ணி தரேங்க என்றவனை கோபமாக முறைத்தாள் ஷ்ராவனி .

அய்யய்யோ பார்ட்டி ரொம்ப முறைக்குதே கொஞ்சம் அதிகமா போறோமோ சரி சரி நம்ம ஆளு தானே போகலாம் என்று நினைத்தவன் அட ஆமாங்க நீங்க என் பொண்டாட்டினா என்னோட குழந்தையை நீங்கதானங்க பெத்து கொடுப்பீங்க அப்ப அது நம்மளோட குழந்தை தானே என்றான் தசகிரீவன்.

ஹலோ மிஸ்டர் என்ன இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்கிற கதையாவுல இருக்கு உன் கதை ஏதோ சும்மா பேசினால் கல்யாணம்கிற பொண்டாட்டிங்கற புள்ள குட்டி வரைக்கும் போயிட்ட ஓவரா கற்பனை பண்ணிட்டு சுத்திட்டு இருக்காதே அப்புறம் நான் எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு போகப் போறேன் . நீ தேவதாஸ் மாதிரி தாடி வளர்த்துக்கிட்டு, கையில் ஒரு சரக்கு பாட்டில் ,ஒரு நாய்க்குட்டியோட தெருத்தெருவாக சுத்த போற என்றாள் ஷ்ராவனி.

அவ்வளோ சீன் எல்லாம் இல்லை மேடம் உங்க கழுத்துல இன்னொருத்தனை தாலி கட்ட விட்டு விடுவேனா மணவறையிலயே வச்சு உங்களை தூக்கிட்டு போயிடுவேன் கெப்பாசிட்டி இருக்கு மேடம் என்றான் தஷகிரிவன்.

எங்க முடிஞ்சா என்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணி பாரு பாக்குறேன் என்றாள் ஷ்ராவனி.

சொல்லிட்டீங்களே மேடம் நாளைக்கே உங்க வீடு புகுந்து உங்களை தூக்குறேனா இல்லையானு பாருங்க என்றான் தஷகிரிவன்.

இவன் செஞ்சாலும் செய்வான் பயப்புள்ள சரியான கேடியா இருக்கும் போல என்று நினைத்தவள் அப்பா சாமி நீ அதெல்லாம் பண்ண வேண்டாம் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா என்றாள் ஷ்ராவனி .

உத்தரவு மகாராணி தாங்கள் கூறும் ஆணையை என் சிரம் ஏற்றி நிறைவேற்றுவேன் என்றான் தசகிரிவன்.

உங்கள் சிரம் மேல எல்லாம் ஏத்தி நிறைவேற்ற வேண்டாம் நார்மலா நிறைவேத்தினா போதும் என்றாள் ஷ்ராவனி .

சொல்லுங்க என்ன பண்ணனும் என்ற தஷியிடம் , இந்த உதவி உங்ககிட்ட கேட்கலாமா வேணாமா எனக்கு தெரியல ஆனால் இப்போதைக்கு எனக்கு நம்பிக்கையான ஒரு ஆள்னா அது நீங்க மட்டும் தான் அதனால தான் நான் உங்ககிட்ட கேட்கிறேன் என்றாள் ஷ்ராவனி.

நம்பிக்கையான ஆளுன்னு சொல்லிட்டீங்களே மேடம் உங்க வேலைய என் உயிரைக் கொடுத்து முடிச்சு கொடுப்பேன் என்றான் தஷகிரிவன் .

உயிரெல்லாம் கொடுக்க வேண்டாம் நான் சொல்ற ஒருத்தனை பத்தின டீடெயில்ஸ் மட்டும் எவிடன்ஸோட கலெக்ட் பண்ணி கொடுங்க. அது போதும் என்றாள் ஷ்ராவனி.

யார் மேடம் அவன் என்ற தசகிரிவனிடம் என்னை கட்டிக்க போற மாப்பிள்ளை என்றாள் ஷ்ராவனி.

என்னங்க என்னைப் பற்றி என் கிட்டேயே டீடெயில்ஸ் கலைக்ட் பண்ண சொல்றீங்க என்றான் தஷகிரிவன். ஆசை ,தோசை அப்பளம் ,வடை ஆளையும்,மண்டையும் பாரு நீ ஒன்றும் இல்லை மேன் நான் போட்டோ தரேன் அவன பத்தின டீடெயில்ஸ் அவ யார் யார் கூட சுத்துறான். அவனுக்கு எத்தனை பொண்ணுங்களோட கனெக்சன் இருக்கு அதுக்கான பக்கா எவிடன்ஸ் எனக்கு வேணும் என்றாள் ஷ்ராவனி.

சத்தியமா உங்களை தவிர நான் வேற எந்த பொண்ணு பின்னாடி சுத்தலைங்க என்றான் தஷகிரிவன்.

அப்பா சாமி நீ இல்லை சாமி என் அக்காவுக்கு பார்த்திருக்கிறேன் மாப்பிள்ளை போதுமா என்றாள் ஷ்ராவனி.

நான் கூட என் மாமனார் ஹிட்லர் கதிர்வேலன் உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாரோன்னு பயந்துட்டேன் என்றான் தஷகிரிவன்.

அது எப்படி வீட்ல அக்கா இருக்கும்போது தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணுவாங்க எங்க அப்பா எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட் அக்காவுக்கு கல்யாணம் ஆனால் தான் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைப்பாரு என்றாள் ஷ்ராவனி.

அதான் தெரியுமே என் மாமனார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு காலேஜ் வரைக்கும் வந்து என்கிட்ட விசாரிச்சிட்டு தானே போனாரு என்றான் தஷகிரிவன் .

தயவு செஞ்சு அதை ஞாபகப்படுத்தாதே என்றாள் ஷ்ராவனி. சரிங்க மேடம் சொல்லுங்க நான் உங்களுக்கு என்ன பண்ணனும் என்றான் தஷி.  வினித்தின் போட்டோவை தன் மொபைலில் இருந்து தஷகிரிவனின் மொபைலுக்கு அனுப்பியவள் இவன்தான் இவனை பத்தின ஃபுல் டீடைல்ஸ் முடிஞ்சா இவன் யாரும் ஒரு பொண்ணு கூட அபேர் வச்சுருந்தானா அந்த வீடியோ கிடைச்சாலும் கூட ஓகே இவனை எப்படி ஆச்சு இவன் தப்பானவன் அப்படிங்கிறதுக்கான ஒரே ஒரு எவிடன்ஸ்  இருந்தா கூட தயவு செஞ்சு கொண்டு வந்து கொடுங்க இது எங்க அக்காவோட வாழ்க்கை அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. இவனோட பார்வையே சரியில்லைன்னு அவள் சொல்றாள். எனக்கு என்னவோ இவனை பார்த்தால் அவ்வளவு நல்லவன் மாதிரி தோனலை தயவு செஞ்சு ப்ளீஸ் என்று அவள் கெஞ்சி கொண்டிருக்க மேடம் எதுக்கு நீங்க கெஞ்சுறீங்க நீங்க சொன்னா உயிரையே கொடுப்பேன் இவனை பத்தின டீடெயில்ஸ் கொடுக்க மாட்டேனா. இன்னும் ரெண்டு நாள் இவனை பத்தின என்ன டீடைல்ஸும் உங்ககிட்ட கொடுப்பேன் என்னை நம்பலாம் என்றான் தஷகிரிவன்.

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க என்ற ஷ்ராவனி  கிளம்பிட என்னங்க வெறும் தேங்க்ஸ் தானா என்ற தசகிரிவனிடம் வேற என்ன சொல்லணும் என்றாள் ஷ்ராவனி.

அந்த ஐ லவ் யூ தான் சொல்லிட்டு போங்களேன் மண்டோதரி மேடம் என்றவனிடம் என் பெயர் ஒன்றும் மண்டோதரி கிடையாது என்றாள் ஷ்ராவனி.

எனக்கு எப்பவுமே மண்டோதரி தாங்க என்று கூறிவிட்டுஅவனும் சென்றுவிட்டான் .

வைஷ்ணவி என்ற குகனிடம் என்ன சார் என்றால் வைஷ்ணவி .ஒர்கிங் டைம் முடிஞ்சிருச்சு நீங்க என்ன கிளம்பாமல் இருக்கீங்க என்றான் குகநேத்ரன் .‌சாரி சார் எதோ ஒரு ஞாபகம் என்ற  வைஷ்ணவி கிளம்ப எத்தனிக்க ஒரு நிமிஷம் என்றான் குகநேத்ரன்.

சொல்லுங்க சார் என்ன விஷயம் என்றவளிடம் அதுதான் நான் உங்ககிட்ட கேட்கணும் என்ன விஷயம் என்ன ஆச்சு என்கேஜ்மென்ட் னு சொன்னீங்க எங்கேஜ்மென்ட் முடிஞ்சு ஆபீஸ் வந்த நாளிலிருந்து நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் எப்போ பாத்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கீங்க. உங்க கவனம் வேலையில் இல்லை நிறைய மிஸ்டேக் இருக்கு .என்ன பிரச்சனை என்றான் குகன்.

ஒன்றும் இல்லை சார் என்றவளிடம் என்னை உங்க நண்பனா நினைச்சு சொல்லுங்க என்றான் குகநேத்ரன்.

ஒன்றும் இல்லன்னு சொல்றேன்ல சார் என்றவளிடம் ஏங்க என்னால எதுவும் பிரச்சனையா சத்தியமா உங்களுக்கு என்கேஜ்மென்ட் நடக்க போகுதுன்னு தெரிஞ்சு என் மனசுல உள்ள ஆசையை சொல்லலங்க சொல்லணும் தோணுச்சு அதனாலதான் சொன்னேன் மற்றபடி என்று அவன் கூறிட உங்க மேல எந்த தப்பும் இல்லை சார். உங்களால நான் அப்செட் ஆகல சார் ப்ளீஸ் விடுங்க என்றாள் வைஷ்ணவி .

வைஷ்ணவி உங்களுக்கு என்ன பிரச்சனை அதை சொல்லாமல் என்ன அவாய்ட் பண்ணிட்டு போறதிலே குறியா இருக்கீங்களே என்ன விஷயம் தயவு செஞ்சு சொல்லுங்களேன் என்றான் குகநேத்ரன்.

எனக்கு என்ன பிரச்சனை வேணாலும் இருந்துட்டு போது அது எதுக்கு சார் நான் உங்ககிட்ட சொல்லணும் நீங்க என்னோட பாஸ் தான் ஆபீஸ்ல நான் வேலை சரியா பார்க்கலை அப்படின்னா திட்டுங்க இல்லை என்ன டெர்மினேட் பண்ணுங்க அதை விட்டுட்டு என்னோட பர்சனல் விஷயங்களை எல்லாம் பத்தி தெரிஞ்சுக்க நினைக்காதீங்க அது எப்பவுமே எனக்கு பிடிக்காது என்று கூறிவிட்டு கிளம்பினாள் வைஷ்ணவி.

இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ்ளோ கோவமா போறாள். சரி விடு என்ன பண்றது இந்த பொண்ணுங்களே இப்படித்தான் நம்ம விரட்டி விரட்டி லவ் பண்ணாலும் சரி நம்ம ஆறுதலா பேசுனாலும் சரி இப்படித்தான் அவாய்ட் பண்ணிட்டு போவாங்க என்று நினைத்தவன் மனம் லேசாக வலித்தாலும் அதை ஓரமாக தள்ளிவிட்ட வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்தான்.

வைஷ்ணவிக்கு தான் கண்கள் கலங்கி கண்ணீர் பெருக்கெடுத்தது .லிப்ட்டில் அவள் மட்டும் இருக்க குகனும் லிப்டிற்குள் நுழைந்தான். அவள் அவனிடம் எதுவும் பேசவில்லை அமைதியாகவே நின்றிருந்தாள் .அவனும் தான் அமைதியாக நின்று இருக்க திடீரென்று லிஃப்ட் நின்று போனது. அவனுடன் அவள் தனியாக லிப்டில் மாட்டிக் கொண்டிருக்க அவளுக்கு உடல் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.

பயப்படாதீங்க நான் உங்களை எதுவும் பண்ண மாட்டேன் என்ற குகனை பார்த்து இல்லை சார் எனக்கு லிஃப்ட்டில் மாட்டிக் கொண்டது ஒரு மாதிரி ரொம்ப பயமா இருக்கும். நீங்க இருக்கிறதுனால இல்லை பொதுவாவே திடீர்னு லிஃப்ட் நின்னு போச்சுன்னா எனக்கு பயமா இருக்கும் என்றாள் அவள்.

ஒன்னும் பிரச்சனை இல்லங்க பயப்படாதீங்க நான் செக்யூரிட்டிக்கு போன் பண்ணி என்ன ஏதுன்னு கேட்கிறேங்க என்று கூறியவன் செக்யூரிட்டிக்கு போன் செய்தான்.

செக்யூரிட்டிவ் ஃபோனை எடுத்துப் பாடில்லை .மீண்டும் மீண்டும் அவன் முயற்சி செய்து தோற்றுப் போனவன் அவளை பார்க்க அவள் உடல் எல்லாம் வேர்த்து மயக்கமிடுவது போல் நின்று கொண்டிருந்தாள்.

பயப்படாதீங்க வைஷ்ணவி என்று கூறியவன் வேகமாக தன் அண்ணன் தசகிரிவனின் எண்ணிற்கு போன் செய்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!