38. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

4.5
(113)

சொர்க்கம் – 38

அவளுடைய காதில் விழுந்த வார்த்தைகளை அவளால் நம்பவே முடியவில்லை.

இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப் போகின்றதா..?

அதுவும் ஒரே மாதத்தில்..!

அவன் கூறியதெல்லாம் நிஜம் தானா..?

இல்லை என்னை ஆசை வார்த்தைகள் காட்டி ஏமாற்றப் பார்க்கின்றானா..?

நம்புவதா வேண்டாமா என விழிகளில் கலக்கமும் அதே கணம் உண்மையாக இருக்குமோ என மகிழ்ச்சியும் வெளிப்படும் வகையில் அவள் அவனையே பார்த்தபடி நிற்க,

“என்ன இங்க இருந்து போறதுல ஹேப்பி இல்ல போல இருக்கே..?” என்றான் அவன்.

“அச்சச்சோ அப்படி எல்லாம் இல்ல.. நீங்க சொல்றதெல்லாம் நிஜம்தானா..? நிஜமாவே நான் இன்னும் ஒரு மாசத்துல எங்க வீட்டுக்குப் போகலாமா..?”

“நான் பொய் பேசுறது கிடையாது..” என்றான் அவன்.

அவளுக்கு விழிகள் விரிந்தன.

அப்படி என்றால் நிஜம்தானா..?

இன்னும் ஒரே மாதத்தில் மீண்டும் நான் சுதந்திரப் பறவையாக மாறிவிடுவேனா..?

நொடியில் அவளுடைய முகம் பூவாய் மலர்ந்தது.

“ஐயோ எனக்கு எவ்ளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா..?” என நின்ற இடத்தில் இருந்தே ஒரு முறை கைகளை விரித்து சுற்றி நின்றவள் “தேங்க்யூ சோ மச்…” என இதழ்களை குவித்துக் கூற,

அவனுக்குத்தான் நெஞ்சமே அடைத்துப் போனாற் போல இருந்தது.

அவளோ தன்னுடைய நாக்கை கடித்துக் கொண்டவள் ‘இவனுக்கு எதுக்கு தேங்க்ஸ் சொன்னோம்..? என்னை இழுத்துட்டு வந்ததே இவன்தானே.. இவன்கிட்ட தேங்க்ஸ் சொல்லவே கூடாது..’ என எண்ணியவள் “அந்த தேங்க்ஸ்ஸ வாபஸ் வாங்கிக்கிறேன்..” என்றதும் அவனுக்கோ சிரிப்பு வந்துவிட்டது.

“அப்போ நானும் இந்த ஒரு மாச டீல வாபஸ் வாங்கட்டுமா..?” என புருவம் உயர்த்திக் கேட்க பதறிப் போனவள்,

“வேணாஆஆஆஆஆம்… தேங்க்யூ தேங்க்யூ.. நீங்களே அந்த தேங்க்யூவ வச்சுக்கோங்க..” என்றாள்.

“ம்ம்…”

“என் மேல இருந்த கோபம் பழி வெறி எல்லாம் போயிடுச்சா..?”

“அதான் பழி வாங்கிட்டேனே.. எனக்கு என்னவோ உன்ன பழிவாங்கும் ஃபீலே வரல.. உன்ன கூட்டிட்டு வந்து உனக்கு சினிமால வாய்ப்பு வாங்கிக் கொடுத்து இருக்கேன்… உன்னோட கடனை அடைச்சிருக்கேன்… புதுசா ஜுவல்ஸ் ட்ரஸ் எல்லாம் எடுத்து கொடுத்து இருக்கேன்… இதெல்லாம் பாத்தா பழிவாங்குற மாதிரியா இருக்கு..?” என அவனே அவளிடம் கேட்டு விட அவன் கூறியதில் அவளும் அதிர்ந்துதான் போனாள்.

ஆம் அவளை அவன் உடல் தேவைக்காக ஒருபோதும் பயன்படுத்தவில்லையே.

அடித்து உடல் ரீதியாகவும் துன்புறுத்தவில்லையே.

என எண்ணியவள் சட்டென தன் தலையில்தானே கொட்டிக் கொண்டாள்.

அவளை ஆடையில்லாமல் நிற்க வைத்திருக்கிறான். மிக மிகக் கொடூரமான பாதகம் அல்லவா அது..?

அதைவிட அனைவரின் முன்பும் அவளுடைய குணத்தை தவறாக சித்தரித்திருக்கிறான்.

இதெல்லாம் சரியாகிவிடுமா..?

அவன்தான் முட்டாள்தனமாக பேசுகின்றான் என்றால் நானும் அதை சில நொடிகள் நம்பிவிட்டேனே.

“இப்ப எதுக்கு உன்னோட தலையில கொட்டின..?”

“நீங்க ஒன்னும் எனக்கு நல்லது பண்ணல.. என் பேர டேமேஜ் பண்ணி இருக்கீங்க.. என்னோட மானத்தையே அழிச்சு இருக்கீங்க..”

“அது நீ பண்ண தப்புக்கு சரியா போச்சு..”

“நான் ஒன்னும் வேணும்னே உங்களை காயப்படுத்தலையே.. அந்த ப்ரொடியூசர் அன்னைக்கு என்கிட்ட அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிட்டான்.. அவனோட பிஏ அவனுக்கு வக்காலத்து வாங்கி அவனும் என்கிட்ட தப்பா பேசினான்..

ப்ரொடியூசரோட பீச் ஹவுஸ்க்கு என்ன வர சொன்னாங்க.. அவங்க கூட ஒன்னா இருந்ததுக்கு அப்புறம் கேமராமேன்ல இருந்து ஹீரோ வரைக்கும் என்கிட்ட வருவாங்களாம்.. எல்லார் கூடவும் படுத்து தொலைச்சா அடுத்த படத்துல வாய்ப்பு தரேன் அப்படி இப்படின்னு ரொம்ப பேசினான்..

எல்லாத்துக்கும் முக்கியமா அந்த அட்ஜஸ்ட்மெண்ட்தான் காரணம்.. அதுலயே ரொம்ப உடைஞ்சு போய் வந்தப்போ நீங்களும் அட்ஜஸ்ட்மெண்ட்னு சொன்னீங்க.. தாங்க முடியாம அடிச்சிட்டேன்..

தப்புதான்.. நான் வேணும்னு பண்ணல.. பட் நடந்தது நடந்து போயிருச்சு.. இனி அதை மாத்த முடியாதே..”

“இட்ஸ் ஓகே… நீ பண்ணதுக்கு நானும் பண்ணிட்டேன்.. இதோட முடிச்சுக்கலாம்..” என்றான் அவன்.

“அப்போ இன்னைக்கு நான் வீட்டுக்கு கிளம்பிடலாமா..?” ஆவலாகக் கேட்டாள் அவள்.

ஆம் எனக் கூறி அனுப்பி விட்டால் என்ன என்றுதான் அவனுக்குத் தோன்றியது.

ஆனால் அவனுடைய பாழாய்ப் போன மனம் அதற்குள்ளே அனுப்ப வேண்டுமா? எனக் கேள்வி கேட்க மறுப்பாக தலையசைத்தான் அவன்.

“நோ நான் சொன்ன மாதிரி ஒரு மாசம் மட்டும் இங்க இருந்துட்டுப் போயிடு.. அதுக்கு அப்புறமா உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. நான் உன்னோட விஷயத்துல தலையிடவே மாட்டேன்.. அதே மாதிரி நீயும் என்னோட விஷயத்துல தலையிடக்கூடாது..”

“ஐயோ நீங்க இருக்க பக்கம் திரும்பிக் கூடப் பாக்க மாட்டேன்..” என்றாள் அவள்.

“அது உன்னால முடியாது பேபி..”

“ஏனாம்..?”

“ஏன்னா நீ என்கூட படம் நடிச்சுத்தானே ஆகணும்..”

“அட ஆமால்ல…”

“அதுக்கப்புறமா படத்துல நடிக்கிற ஐடியா இருக்கா..?”

“சத்தியமா இல்ல.. வேற ஏதாவது நல்ல வேலை தேடி அதுல சேர்ந்துக்கணும்..” என்றாள் அவள்.

“ஏன் சினிமா என்ன நல்ல வேலை கிடையாதா..?”

“உங்கள மாதிரி பணக்காரங்களுக்கு ஆம்பளைங்களுக்கு சினிமா நல்லதா இருக்கலாம்… ஆனா என்ன மாதிரி கஷ்டப்பட்ட குடும்பத்துல இருந்து வந்த பொண்ணுங்களுக்கு சினிமா நல்ல வேலை கிடையாது..

திறமை இருக்கோ இல்லையோ அழகு இருக்கோ இல்லையோ வாய்ப்பு கிடைக்க வேண்டும்னா எல்லார் கூடவும் போய் படுக்கணும்.. இல்லன்னா பணத்தை தண்ணியா வாறி இறைக்கணும்..

இதெல்லாம் பண்ணினாதான் நடிக்க முடியும்.. அடுத்தடுத்த படத்துல வாய்ப்பு கிடைக்கும்.. இப்போ சொல்லுங்க.. இது நல்ல வேலையா..? இந்தத் துறை ஒரு குப்பை..”

அவள் எடுத்துக் கூறிய பக்கம் அவனுக்கோ புதிதாக இருந்தது.

“இதோ பாரு எல்லாரும் எல்லாரையும் வற்புறுத்த மாட்டாங்க செந்தூரி… நிறைய பொண்ணுங்க அவங்களாதான் என்னத் தேடி வருவாங்க.. என்கூட இருந்துட்டு அதற்கான பெனிபிட்டை அனுப்பவிப்பாங்க..”

“ப்ச்.. அந்த மாதிரி பொண்ணுங்கள பத்தி நான் பேசல.. நான் என்ன மாதிரி பொண்ணுங்கள பத்திதான் பேசுறேன்.. நாங்க உழைச்சு சம்பாதிக்கதான் வேலைக்கு வர்றோம்.. உடம்ப வித்து சம்பாதிக்க வரலையே..”

“நல்லா பேசுற..”

“அப்படிலாம் இல்ல உண்மைய சொன்னேன்..” என்றவளின் இதழ்களில் அப்போதும் புன்னகை நிலைத்திருந்தது.

இதுவரை அவளுக்குள் விநாயக்கைப் பற்றி ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் அணிவகுத்திருந்தன.

என்னை இறுதிவரை அவன் விடுவிக்கவே மாட்டானோ..?

இல்லை இங்கிருந்து நான் வெளியே சென்ற பின்பும் தொல்லை செய்வானோ..?

தன்னுடைய நிர்வாண உடலை கைடன் கேமராவின் மூலம் வீடியோ எடுத்து ஏதாவது மிரட்டுவானோ என்றெல்லாம் அவள் எண்ணிப் பயந்திருக்க,

அந்தப் பயங்களுக்கு அவசியமே இல்லை என்பதைப் போல இன்று அவன் கூறியதும் நிம்மதியாக உணர்ந்தாள் அவள்.

அக்கணமே அவளுக்கு விடுதலை கிடைத்தது போலத்தான் இருந்தது.

“எங்க அம்மாகிட்ட இதை சொல்லிட்டு வரேன்.. அவங்களுக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவாங்க..” என்றவளை நிறுத்தினான் அவன்.

“வேணாம் இந்த ஒரு மாசப் பிரிவு உங்க அம்மாவ இன்னும் நல்லா மாத்தும்.. அவங்களுக்கு சில கஷ்டம் தெரியணும்.. நீ வரப் போறன்னு தெரிஞ்சா ஏனோ தானோன்னு பழையபடி இருக்கவும் வாய்ப்பு இருக்கு.. நீ போறப்போ நேரிலேயே சொல்லிக்கோ.. இப்ப எதப் பத்தியும் சொல்ல வேணாம்.. சொல்லவும் கூடாது…” என அவன் கூறியதும் வேறு வழி இன்றி “சரி..” என்றாள் அவள்.

அவனை மறுத்துப் பேசி பிரச்சனையை விலை கொடுத்து வாங்க அவள் கிஞ்சித்தும் விரும்பவில்லை.

மனதின் பாரம் நீங்கியதும் அவளுடைய முகம் மலர்ந்தே இருக்க அவனுக்குத்தான் அவளுடைய மகிழ்ச்சி மனதை உறுத்தியது.

“நான் என்ன உன்ன அவ்வளவு கொடுமையா படுத்தினேன்..? இங்கே இருந்து போகலாம்னு சொன்னதும் இவ்வளவு ஹேப்பியா இருக்க..?”

“நீங்க கொடுமப் படுத்தாம என்னைத் தங்கத் தட்டுல வச்சு தாங்கி இருந்தாலும் கூட இங்கிருந்து எப்போ ஓடலாம்னுதான் நான் யோசிச்சு இருப்பேன்..

இது முறை இல்ல தானே..? ஒரு வயசு பொண்ணு யாருன்னு தெரியாத ஒருத்தனோட வீட்டுல ஒரே படுக்கைல ஒன்னா தூங்குறதே கொடுமைதான்.. என்னோட வாழ்க்கை அழிஞ்சே போயிடுச்சே..‌”

அவளுடைய குரலில் சோகம் இழையோடியது.

“அந்த சேகர நினைச்சு சொல்றியா..?”

“சே.. அவன் எல்லாம் மனுசனா..? அவன அப்பவே வேணாம்னு சொல்லிட்டேன்.. ஆனா இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு எனக்கு இனி தகுதி கிடையாதே..”

“வாட்..? ஏன் தகுதி கிடையாது..?”

“ஏன்னா என்ன பொறுத்த வரைக்கும் என்னோட மானம் வாழ்க்கை எல்லாமே இந்த ரூமோட போயிடுச்சு.. இதுக்கு அப்புறமா இன்னொருத்தர நான் என்னோட வாழ்க்கைல சேர்த்துக்கிறது நடக்காத காரியம்..

கடைசி வரைக்கும் என்னோட குடும்பத்தை பார்த்துக்கிட்டு அவங்க கூட சந்தோஷமா இருந்தாலே எனக்கு போதும்னு தோணுது…”

“முட்டாள்தனமா பேசாதே.. நானும்தான் பல பொண்ணுங்ங கூட இருந்திருக்கேன்.. அதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்க தகுதி இல்லைன்னு ஆயிடுவேனா..? இல்ல அந்த சேகர்தான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டானா..? என்கூட இருந்த பொண்ணுங்களே கொஞ்ச நாள்ல பீல்ட விட்டு போனதுக்கப்புறம் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழத்தான் போறாங்க..

நான்தான் உன்னை எதுவுமே பண்ணலையே அப்புறம் என்ன..?”

“என்னை முழுசா பார்த்துட்டீங்களே.. மனசாட்சின்னு ஒன்னு இருக்குல்ல… அது எனக்கு நிறையவே இருக்கு.. கல்யாணத்த பத்தி எல்லாம் நான் யோசிக்கவே இல்ல..” என்றாள் அவள்.

கல்யாணமே வேண்டாம் எனக் கூறியவள்தான் தன்னுடைய திருமணப் புகைப்படத்தை விநாயக் மகாதேவிற்கு இன்னும் சில நாட்களில் அனுப்பி வைக்கப் போகின்றாள் என்பதை அப்போது அவளும் அறியவில்லை.

அவளுடைய திருமணப் புகைப்படத்தைப் பார்த்து உச்சகட்ட வேதனையில் உடைந்து நொறுங்கிப் போவதை அக்கணம் அவனும் அறியவில்லை.

மாற்றம் ஒன்றுதானே மாறாதது.

இனி இதுதான் நடக்கும்.

நான் இதைத்தான் செய்வேன். இப்படித்தான் என்னுடைய எதிர்காலம் இருக்கும் என எதையும் நம்மளால் நிர்ணயம் செய்துவிட முடியாது அல்லவா.?

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என்பது எப்போதுமே புரியாத புதிர்தான்.

அது புதிராக இருக்கும் வரை தான் மக்களிடத்தில் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

“நான் பார்த்து வளர்ந்த சொசைட்டில உன்ன மாதிரி ஒருத்தியை நான் பார்த்ததே கிடையாது.. நீ ரொம்ப டிஃபரண்டா இருக்க… உன்னோட கேரக்டர் ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கு..” என்றவன் அவளுடைய கன்னத்தில் தவழ்ந்து உரசிக் கொண்டிருந்த சில முடிக் கற்றைகளை அவளுடைய காதோரத்தில் ஒதுக்கி விட்டான்.

சிரித்துக் கொண்டிருந்த அவளுடைய முகம் ஸ்விட்ச் போட்டாற் போல தன்னுடைய சிரிப்பை நிறுத்தியது.

“எனக்கு பசிக்குது.. நான் சாப்பிட போறேன்.” என்றவள் அந்த அறையை விட்டு கீழே சென்றுவிட அவளுடைய கூந்தலை ஒதுக்கிவிட்ட தன்னுடைய கரத்தை முகத்தில் முன்பு தூக்கிப் பிடித்து இமைக்காது பார்த்தான் அவன்.

🔥💜🔥

அடுத்த எபிசோட் வர 60 star ⭐ ratings

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 113

No votes so far! Be the first to rate this post.

1 thought on “38. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!