தேடித் தேடி தீர்ப்போமா

4.8
(8)

அத்தியாயம் 24

விழியின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ய வந்த விஹானோ அதே பெயரில் வேறொருவர் ரிஜிஸ்டர் செய்திருக்க இவனுக்கோ வேறு யாரோ விழியின் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்களோ என்று நினைத்தவன் அந்த பெயரில் ரிஜிஸ்டர் ஆன சாஃப்ட் காப்பியை பார்வையிட்டான்.
பார்வையிட்டவனின் விழிகளோ அதிர்ச்சியில் அப்படியே விரிந்தன.
கண்கள் கலங்க அவனுடைய உடலோ ஆட்டம் காண அவனுடைய அதரங்களோ “விழி” என்று அழைத்தன.
ஆம் அவன் பார்த்த சாப்ட் காப்பியில் இருந்த படம் மூன்று வருடங்களுக்கு முன்பு நல்லுவும் விஹானும் அவர்கள் வீட்டில் மாடியில் நின்று நெருக்கமாக பேசிக் கொண்டிருக்க பக்கத்தில் மீனா அவர்களைப் பார்த்து வலியோடு நின்ற காட்சியை தத்ரூபமாக வரைந்து இருந்தாள் மீனா.
சுற்றியுள்ள அனைத்தையும் நுணுக்கமாக வரைந்தவளோ அவர்கள் மூவரின் முகத்தை மட்டும் வேறொருவராக சித்தரித்து வரைந்திருந்தாள்.
அதைப் பார்த்த விஹானோ நொடியில் புரிந்து கொண்டான் இது மீனாவின் வரைபடமே என்று.
அவனால் சற்றும் அதை நம்ப முடியவில்லை எப்படி சாத்தியம் இது.
மீனா இறந்து மூன்று வருடங்கள் ஆகிறது.
ஆனால் இப்பொழுது அவளுடைய ட்ராயிங் இங்கு எப்படி வந்தது.
குழப்பத்தில் ஆழ்ந்தவனோ தன்னுடைய தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
“ சார் என்ன ஆச்சு உங்களுக்கு” என்று அந்த பெண் கேட்க,
“ இல்ல ஒன்னும் இல்ல மேம் இந்த பெயிண்டிங்க யார் கொண்டு வந்து கொடுத்தாங்க” என்று கேட்க,
அந்த பெண்ணோ,
“ மார்னிங் ஒரு ரெண்டு கேர்ள்ஸ் தான் ரிஜிஸ்டர் பண்ணிட்டு இதை கொடுத்துட்டு போனாங்க” என்று சொல்ல இவனுக்கோ மேலும் மேலும் அதிர்ச்சி.
“ அவங்களோட அட்ரஸ்ஸ எனக்கு கொடுக்க முடியுமா ப்ளீஸ்” என்று கேட்டான்.
அந்த பெண்ணோ,
“நோ சார் அதெல்லாம் எங்களால கொடுக்க முடியாது ஐ அம் சாரி வேணும்னா நீங்க நாளைக்கு அவங்களை பார்க்கலாம் எக்ஸிபிஷன் நடக்கும் போது அவங்க கண்டிப்பா வருவாங்க நீங்க அப்போ அவங்களை பார்க்கலாமே” என்று சொன்னாள்.
இவனுக்கோ அந்த நொடியே யார் அவர்கள் என்று பார்க்க வேண்டும் போல இருந்தது.
ஆனால் அந்தப் பெண் மற்றவர்களின் தனிப்பட்ட விஷயத்தை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்பதால் இவனிடம் மறுத்து கூற, இவனுக்கோ மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.
ஆனாலும் நாளை அவர்களை பார்க்க முடியும் என்பதால் நாளைய பொழுதுக்காக காத்திருக்க ஆரம்பித்தான் விஹான்.
ஒரு பக்கம் அவனுக்கு இது மீனவாக இருக்குமா? அல்லது வேறு யாராவதா என்ற கேள்வி அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
நாளைய பொழுது அவர்களை சந்திக்கும் வரை அவனுடைய மனது நிலை கொள்ளாமல் யோசிக்க தொடங்கின.
இரவு பொழுது ஆனால் அங்கு பகல் பொழுதை விட இரவு நேரம் வண்ணமயமாக அழகாக காட்சியளித்தன.
அந்த பாதை சாலையில் காதில் ஃபோனை வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான் விஹான்.
அந்த ரெஜிஸ்டர் பெண் சொன்ன வார்த்தையில் இருந்து அவன் மனது நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது.
சற்று தன்னை சாந்த படுத்தவே இந்த நடைப்பயணம் அவன் தங்கி இருக்கும் ஹோட்டல் அருகில் தான்.
அன்றைய நாள் முழுவதும் நன்றாக சிங்கப்பூரை சுற்றி பார்த்தவர்களோ அவ்வழியே வந்து கொண்டிருந்தார்கள்.
விஹானுக்கும் இவர்களுக்கும் சற்று இடைவெளி தான் இருக்கும் ஆனால் இருவருமே பார்க்கவில்லை.
ரஞ்சனி,
“ மீனா ஐஸ்கிரீம் சாப்பிடலாமா” என்று கேட்க,
“ இல்ல வேண்டாம் ரஞ்சனி எனக்கு ரொம்ப தலை வலிக்குது நீங்க வேணா சாப்பிடுங்க” என்று மீனா சொல்ல, விழியோ,
“ ஐஸ்கிரீமா ரஞ்சனி ஆன்ட்டி வாங்க போகலாம் எனக்கு ஐஸ்கிரீம் வேணும்” என்று விழியும் சொல்ல ரஞ்சனியோ,
“ என்ன மீனா தல ரொம்ப வலிக்குதா ஹாஸ்பிடல் வேணா போவோமா” என்று கேட்க,
“ இல்லை வேண்டாம் ரஞ்சனி கொஞ்ச நேரம் தூங்குனா சரியா வரும் நான் ரூமுக்கு போறேன் நீங்க விழியை கூட்டிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு வாங்க”
என்று சொல்ல,
“ ஓ அப்படியா சரி ஓகே நீங்க ரூமுக்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் விழியை கூட்டிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு உங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்” என்று ரஞ்சனி சொல்ல மீனாவும் தலையசைத்து விட்டு அவ்விடம் விட்டு சென்றவளோ எதிரே வந்த விஹானை அவளும் பார்க்கவில்லை. விஹானும் தனக்கு எதிரே வந்த மீனாவை பார்க்கவில்லை. இருவருமே ஒருவரை கடந்து ஒருவர் சென்றார்கள்.
மீனா ரூமுக்கு சென்றதும் ரஞ்சனி விழியை அழைத்துக்கொண்டு அந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தவள் விழியை அங்கு அமரச் சொல்லிவிட்டு தனக்கும் அவளுக்கும் என ஐஸ்கிரீமை ஆர்டர் செய்ய போனாள்.
அதே ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தான் விஹான்.
உள்ளே நுழைந்தவன் போனில் பேசிய படியே விழி அமர்ந்திருந்த இருக்கையை தாண்டி செல்ல விழியோ அங்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டிருக்கும் ரஞ்சனியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது கையில் ஐஸ்கிரீமோடு வந்த ரஞ்சனையோ தனக்கு எதிரே வந்த விஹானை கவனிக்காமல் அவன் மேல் மோதி விட ஐஸ்கிரீமோ அவன் சட்டையின் மேல் கொட்டுயது.
“ ஹேய் இடியட்” என்று விஹான் கோவமாக கேட்க ரஞ்சனியோ,
“ ஐயோ சாரி சாரி சார் தெரியாம மோதிட்டேன்” என்று சொல்லியவாறு விஹானை ஏறிட்டுப் பார்க்க, பார்த்தவளோ அவனை அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இங்க ரஞ்சனியையே பார்த்துக் கொண்டிருந்த விழியோ அவள் ஒருவர் மேல் மோதவும் தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்த விழி ரஞ்சனியிடம் வந்தவள்,
“ ஆன்ட்டி என்ன ஆச்சு உங்களுக்கு எதும் அடிபட்டுடுச்சா” என்று கேட்டவள் விஹானிடம் திரும்பி சற்று கோபமாக,
“ என்ன அங்கிள் பார்த்து வர மாட்டீங்களா போன் பேசிக்கிட்டே வந்து எங்க ஆன்ட்டி மேல மோதிட்டீங்க சாரி சொல்லுங்க” என்று விஹானிடம் சண்டைக்கு சென்றது விழி.
விஹான் போனில் பேசிக் கொண்டிருந்தாலும் கவனமாகத்தான் வந்து கொண்டிருந்தான்.
ரஞ்சனிதான் அவன் மேல் தெரியாமல் மோதியது.
ஆனால் இது தெரியாமல் விழி விஹான் தான் ரஞ்சனி மேல் மோதினான் என்று தவறாக நினைத்து அவனிடம் சண்டைக்குச் சென்றது.
தன் மேல் ஐஸ்கிரீமை கொட்டிய ரஞ்சனியை திட்ட வாய் எடுத்தவன் விழியின் பேச்சில் சற்று திகைத்துப் போய் தான் விழியை பார்த்தான்.
தம்மாத்தூண்டு இருந்துகிட்டு என்ன பேச்சு பேசாது என்று நினைத்து விழியை பார்க்க, விழியோ தன்னுடைய குண்டு கன்னங்கள் சிவக்க அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தது.
சட்டென அவனை அடையாளம் காண முடியவில்லை விழியால்.
இங்கு ரஞ்சனியோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் விஹானையே பார்த்து ரசித்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்.
‘வாவ் எவ்வளவு அழகா இருக்கான்’ என்று அவனை உச்சி முதல் பாதம் வரை தன் கண்களாலேயே ஸ்கேன் செய்து கொண்டிருந்தாள் ரஞ்சனி.
ஆனால் விஹானோ தன் முன்னால் நின்று ஒருத்தி தன்னை இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை கூட பார்க்காமல் அவன் விழியை பார்த்துக் கொண்டிருந்தான்.
“இங்க பாருங்க லிட்டில் கேர்ள் நான் ஒன்னும் உங்க ஆன்ட்டி மேல மோதல உங்க ஆன்ட்டி தான் என் மேல வந்து மோதினாங்க ஆனால் நான் உங்க ஆண்டி கிட்ட சாரி சொல்லணுமா ஆப்போசிட்ல வர ஆள கூட பார்க்காம மோதிட்டு உங்க ஆன்ட்டிய பாருங்க எப்படி நிக்கிறாங்கன்னு” என்று அவன் விழியிடம் சொல்ல விழியோ,
“ பொய் சொல்லாதீங்க நீங்கதான் போன் பேசிக்கிட்டு பார்க்காம வந்து மோதிட்டீங்க நான் பார்த்துகிட்டு தான் இருந்தேன்” என்று அவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தது.
விஹானோ கோபத்தில் சிவந்த அவளுடைய முகத்தை பார்த்தவனுக்கோ தன்னை மறந்து அவனுடைய வதனத்தில் புன்னகை அரும்ப சட்டென விழியின் உயரத்திற்கு கீழே காலை மடக்கி அமர்ந்தவன் அவளிடம்,
“ ஓகே சாரி நான் தான் தெரியாம வந்து உங்க ஆன்ட்டி மேல மோதிட்டேன் இப்போ ஓகேவா கொஞ்சம் சிரிக்கலாமே” என்று கேட்டான்.
விழியோ,
“ அங்கிள் சாரி என்கிட்ட இல்ல எங்க ரஞ்சனி ஆன்ட்டி கிட்ட கேளுங்க” என்று சொல்ல அவனும்,
“ சரி அவ்ளோதானே உங்க ஆன்டி கிட்ட சொன்னா நீங்க சிரிப்பீங்களா” என்று கேட்க விழியோ ஆம் என்பது போல தன்னுடைய இரண்டு குடிமிகளும் ஆடும் அளவிற்கு மண்டையை ஆட்டியது.
அதில் மேலும் அவனுடைய இதழ்கள் அழகாக புன்னகைக்க எழுந்தவன் விழியின் சிரிப்பை பார்ப்பதற்காக ரஞ்சனிடம்,
“ சாரி நான் தான் தெரியாம வந்து உங்க மேல மோதிட்டேன்” என்றான்.
அவளோ தன் சுயநினைவிற்கு இன்னும் வந்த பாடுதான் இல்லை.
விஹானையே வெரித்து பார்த்துக் கொண்டிருக்க அவனோ அவள் முகத்திற்கு முன்னால் தன்னுடைய கையை உயர்த்தி சுடக்கு போட்டவன்,
“ ஹலோ மிஸ்” என்று அழைக்க அப்பொழுதே சுயம் வந்தவள்,
“ சாரி சார் நான் தான் தெரியாமல் மோதிட்டேன் அச்சச்சோ உங்க ஷோட்ல ஐஸ் கிரீம் கொட்டிருச்சு கொடுங்க சார் நான் வாஷ் பண்ணி தரேன்”
“இட்ஸ் ஓகே பரவால்ல நான் பாத்துக்குறேன்”
விழியோ,
“ ஆன்ட்டி அந்த அங்கிள் தான் உங்க மேல வந்து மோதுனாங்க போன் பேசிக்கிட்டே வந்து ஆனா நீங்க ஏன் சாரி சொல்றீங்க அவர்தான் உங்ககிட்ட சாரி சொல்லணும்” என்க.
ரஞ்சினியோ,
“ ஐயோ இல்லடா செல்லம் அவர் மேல தப்பில்லை ஆன்ட்டி தான் அந்த அங்கிள் மேல தெரியாம மோதிட்டேன்” என்று விழியிடம் ரஞ்சனி சொல்ல அதற்கு விழியோ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு,
“ அச்சச்சோ ரஞ்சனி ஆண்ட்டி நான் அந்த அங்கிள் தான் உங்க மேல மோதிட்டாங்கன்னு நான் அவரு கிட்ட சண்டை போட்டேன் ஆனா நீங்க தான் அந்த அங்கிள் மேல மோதிட்டீங்களா” என்று ரஞ்சனியிடம் கேட்க, ரஞ்சனையோ ஆம் என்று தலையசைக்க உடனே விஹானிடம் திரும்பியவள்,
“அங்கிள் ஐ அம் சோ சாரி நான் தான் சரியா பார்க்காம தப்பா சொல்லிட்டேன் என்ன மன்னிச்சிடுங்க” என்று முகத்தை தொங்க போட்டு அவனிடம் மன்னிப்பை யாசிக்க விஹானோ இப்பொழுது தன்னுடைய முத்துப்பற்கள் தெரிய சிரித்தவன் விழியின் தலையில் கைவைத்து வருடியவாறு,
“ இட்ஸ் ஓகே லிட்டில் கேர்ள் நோ ப்ராப்ளம் அப்புறம் அங்கிளுக்காக ஒரே ஒரு தடவை சரிக்கிரிங்களா ப்ளீஸ்” என்று விஹான் க்யூட்டாக கேட்க, விழியோ அவன் கேட்டதற்காக தன்னுடைய குண்டு கன்னத்தில் குழி விழும் அளவிற்கு அழகாக புன்னகைத்தாள்.
பின்பு ரஞ்சனி விழியிடம் திரும்பியவள்,
“ அம்மா தேடுவாங்கடா குட்டி நம்ம சீக்கிரமா போகலாம் வா இப்பவே லேட் ஆயிருச்சு இதுக்கு அப்புறமா ஐஸ் கிரீம் ஆர்டர் பண்ணா லேட் ஆகும் நம்ம நாளைக்கு வந்து சாப்பிடலாம் சரியா வா போகலாம்” என்றவள் விழியின் கைப்பிடித்து விஹானிடம் ஒரு சிறு தலையசைப்போடு விடைபெற்றவள் அங்கிருந்து கிளம்பினாள்.
போகும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த விஹானோ அவர்கள் ஐஸ்கிரீம் பார்லரை விட்டு வெளியே செல்லும் பொழுது,
“ ஓய் லிட்டில் கேர்ள்” என்று அழைக்க, விழி திரும்பியவள்,
“ என்ன அங்கிள்” என்று கேட்க,
“ உங்க பேர் என்ன” என்று கேட்டான்.
விழியோ,
“ மை நேம் இஸ் விழி அங்கிள்” என்று சொல்ல விஹானோ,
“ வாட்” என்று அதிர்ந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தேடித் தேடி தீர்ப்போமா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!