அத்தியாயம் 25
விஹான் தன்னை கடந்து போகும் விழியிடம் அவளுடைய பெயரைக் கேட்க அவளோ தன்னுடைய பெயர் “விழி” என்று சொல்ல உடனே ஷாக் அடித்தது போல் இருந்தான் விஹான்.
அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவன் விழியை பார்க்க அங்கு விழி இல்லை.
தன்னுடைய பெயரை சொல்லிய விழியோ அவ்விடம் விட்டு அப்பொழுதே அகன்று இருந்தாள்.
“ ஐயோ மிஸ் பண்ணிட்டேன் ச்சை என்ன விஹான் நீ இப்படி முட்டாள்தனமா இருக்க” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் சட்டென அந்த ஐஸ்கிரீம் பார்லரை விட்டு வெளியே வந்து சுற்றி அங்கிருக்கும் இடங்களில் விழியைத் தேட அவளோ கிடைக்கவில்லை.
தன் தலையைப் பிடித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டான்.
இங்கு தங்களுடைய அறைக்கு வந்தவர்களோ உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு முடித்துவிட்டு ரஞ்சனி அவர்கள் இருவருக்கும் பாய் சொல்லியவள் தன்னுடைய அறைக்கு வந்தவளுக்கோ நினைவு முழுவதும் அங்கு ஐஸ் கிரீம் பார்லரில் மோதிய விஹானின் மீது இருந்தது.
“ அச்சச்சோ அவர் யாரு என்னனு கூட தெரியல அவசரத்தில அவரோட பேர கூட கேட்காம வந்துட்டேன் இவ்ளோ அழகா இருக்காரு அப்படியே சினிமா ஹீரோ மாதிரி இருக்காரு நம்மளோட க்ரஷ் லிஸ்ட்ல இனி இவர்தான் ஃபர்ஸ்ட் ஷாருக்கான், விஜய், சூர்யா, அஜித், மத்தவங்க எல்லாத்தையும் பின்னாடி வச்சுட்டு இனி இவர்தான் என்னோட க்ரஷ் நம்பர் ஒன். கடவுளே, இதுக்கு அப்புறம் நான் அவர பார்த்தா கண்டிப்பா அவரோட போன் நம்பர் மட்டும் எனக்கு கிடைக்கிற மாதிரி பண்ணிருங்க” என்று அவசரமாக கடவுளுக்கு ஒரு வேண்டுதலும் வைத்தவள் உறங்கியும் போனாள்.
இங்கு விழியோ கட்டிலில் அமர்ந்திருந்தவள் யோசனை முழுவதும் ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்த விஹானின் மீது இருந்தது.
“ ஐயோ அந்த அங்கிள இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்கு யாரா இருக்கும்” என்று வெகு நேரமாக யோசித்துக் கொண்டே இருந்தாள் விழி.
ஆனால் அவளுடைய நினைவுக்கு யார் என்று தான் தெரியவில்லை.
அப்பொழுது பாத்ரூமில் இருந்து வந்த மீனாவோ வெளி எதையோ தீவிரமான யோசனையோடு அமர்ந்திருப்பதை பார்த்து அவள் அருகில் வந்தவள்,
“விழிக்குட்டி என்னடா யோசிச்சிட்டு இருக்க” என்று கேட்க அதற்கு விழியோ,
“ அம்மா நான் இன்னைக்கு ஐஸ்கிரீம் பார்லர்ல ஒரு அங்கில பார்த்தேன் ரொம்ப அழகா இருந்தாரு ஆனா அவர நான் இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கு ஆனா அவரு யாருன்னு தெரியலை அதான் யோசிச்சுகிட்டு இருக்கேன் அந்த அங்கிள எங்க பார்த்தேன்னு” என்று தன் தாயிடம் சொன்னாள் விழி.
அதற்கு மீனாவோ,
“என்ன விழிக்குட்டி நம்ம சிங்கப்பூருக்கு இப்பதான் வந்திருக்கோம் இங்க உனக்கு தெரிஞ்சவங்க யாரு இருக்காங்க” என்று மீனா கேட்க அதற்கு விழியோ,
“ இல்லம்மா எனக்கு நல்லா தெரியும் அந்த அங்கிள நான் இதுக்கு முன்னாடி பாத்திருக்கேன்” என்று உறுதியாக சொல்ல தற்சமயம் அவளை சமாளிக்கும் பொருட்டு,
“ ஓஓ அப்படியா சரி ஒன்னும் பிரச்சனை இல்ல மறுபடியும் அந்த அங்கிள நீ பார்த்தேனா அவர் கிட்ட கேளு ஒருவேளை அவருக்கு ஞாபகம் இருக்கலாம் தான” என்று மீனா சொல்ல அதற்கு விழியோ,
“ ஆமா இல்ல சூப்பர் மா மறுபடியும் நான் அந்த அங்கிள பார்த்தா கண்டிப்பா கேட்கிறேன்” என்றாள்.
“சரி ஓகே விழிக்குட்டி ரொம்ப லேட் ஆகுது சீக்கிரம் தூங்குங்க” என்றவள் விழியை தூங்க வைத்து தானும் உறங்க ஆரம்பித்தாள்.
பட்சிகள் ஒலி எழுப்ப மிருகங்கள் இரைத்தேட தன் காதலி தாமரை மலர்வதற்காக தன் புகழ் கற்றைகளை பரப்பி இரைவியவன் வானில் சிரிக்க தொடங்கினான்.
இருள் மறைந்து வெளிச்சம் அனைத்து இடங்களிலும் பரவ இங்கு விஹானின் வாழ்க்கையில் உள்ள இருளும் மறைந்து வெளிச்சம் பரவும் நாளும் இனிதாக விடிந்தது இவ்வுலகில்.
அனைவரும் ஓவிய கண்காட்சி நடக்கும் இடத்திற்கு புறப்பட்டார்கள்.
அங்கு இவர்களைப் போலவே ஏனையவர்கள் தங்கள் ஓவியங்களை காட்சி பொருளாக வைத்திருந்தார்கள்.
மீனா தங்களுக்கு என கொடுக்கப்பட்ட ஒரு இடத்தில் அவளுடைய ஓவியங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்க அதன் அருகில் அவள் நின்று அவள் ஓவியங்களை பார்க்க வருபவர்கள் அனைவருக்கும் தன்னுடைய ஓவியத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தாள்.
ரஞ்சனியும் விழியும் அந்த ஓவிய கண்காட்சி நடக்கும் இடத்தை முழுவதும் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இங்கு விஹானோ ஓவியக் கண்காட்சி நடக்கும் இடத்திற்கு வந்தவன் தன்னுடைய விழியை அந்த அரங்கம் முழுவதும் அலையவிட்டான் தன்னுடைய மீனா தன் கண்ணில் அகப்படுவாளா என்று.
அவனுக்கு நேற்று அந்த ஓவியத்தை பார்த்ததிலிருந்து ஒரு வேளை அது தன் மீனவாக இருக்குமா? அது என் மீனவாக இருக்கக் கூடாதா என்றும் அவனுடைய மனது ஆசை கொண்டது.
அந்த அரங்கம் முழுவதும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
இவன் ஒவ்வொரு இடமாக சென்று பார்வையிட்டான் விழி என்று பெயர் பொறிக்கப்பட்ட ஓவியங்கள் அவன் கண்ணில் தென்படவில்லை. பலதரப்பட்ட ஓவியங்களை கடப்பதற்குள் அவனுடைய மனது ஏக்கத்தை அதிகமாக உண்டாக்கியது.
தன்னுடைய மீனா எங்கே இருப்பாள் என்று அவனுடைய விழிகளோ சுற்றும் முற்றும் ஒலிம்பிக்கில் ஓடுவதைப் போல அவனுடைய அந்தக் கரு விழிகளோ அந்த அரங்கத்தையே சுழன்று கொண்டிருந்தன.
“தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே
தேடித் தேடித் தேடித் தேடித் தீர்ப்போமா
தேடித் தேடித் தேடித் தேடித் தீர்ப்போமா”
“ஹைய் அந்த அங்கிள்” என்று அங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த விழியின் கண்ணில் பட்டான் விஹான்.
ரஞ்சனியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த விழியோ விஹானை பார்த்ததும் அவளுடைய கையை உதறிவிட்டு விஹானை நோக்கி ஓடியவள் தன்னுடைய கால் தட்டுப்பட்டு கீழே விழ அவள் முதுகில் போட்டிருந்த குட்டி பேக்கோ கீழே விழுந்தது.
அதிலிருந்து விஹானின் வரைபடமும் கீழே விழுந்தது.
கீழே விழுந்த விழியோ எழுந்தவள் தன்னுடைய பேக்கில் இருந்து சிதறிய பொருட்களை எடுத்து உள்ளே போட்டவள் இறுதியாக விஹானின் வரைபடத்தை எடுத்து உள்ளே வைக்கும் போது அந்த போட்டோவை பார்த்த விழியின் கண்களோ தனக்கு நேர் எதிரே வந்து கொண்டிருந்த விஹானின் முகத்திலோ பதிந்தன.
“அப்பா.. அப்பா.. என்னோட அப்பா அந்த அங்கிள் அய்யோ இல்ல என்னோட அப்பா இப்பதான் எனக்கு ஞாபகம் வருது என்னோட அப்பா அவரு நான் என் அப்பாவை பார்த்துட்டேன்” என்று சந்தோஷப்பட்ட அந்த குட்டி குழந்தையோ,
“ அப்பாஆஆஆ” என்று உரக்க கத்தியவாறு விஹானை நோக்கி ஓடினாள்.
விஹானுக்கோ அவள் கூப்பிட்டது காதில் விழவில்லை.
அவனுடைய மனமும் சிந்தனையும் செயலும் என அவனுடைய ஒவ்வொரு அணுவும் அங்கு மீனாவை தான் தேடிக் கொண்டிருந்தது.
விவேகமாக செயல்பட்டு கொண்டிருந்த அவனுடைய கால்களோ சட்டென பிரேக் போட்டார் போல இருந்த இடத்தை விட்டு நகர அடம்பிடித்தது.
அடம்பிடித்தது அவனுடைய கால்கள் மட்டுமல்ல அவனுடைய ஐம்புலன்களும்.
அந்த நிமிஷம் தன்னுடைய செயல்பாட்டை இழந்தது போல இருந்தது.
ஆனால் அவனுடைய அந்த கூர் விழிகள் மட்டும் எதையோ உற்று பார்த்துக் கொண்டிருந்தன.
அவனுடைய தடித்த ஆதாரங்களோ, தன்னையும் மீறி,
“மீனா” என்று உச்சரித்தன.
ஆம் கண்டுவிட்டான்.
கண்டுவிட்டான் அவனுடைய ஓவியக் காதலி விழியே.
ஆம் கண்டுவிட்டான் அவனை இத்தனை வருடங்களாக ஏங்க வைத்தவளை.
ஆம் கண்டுவிட்டான் அவனை ஒரு தலையாக காதலித்து அவனை இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாக்கிய அந்த மாயக்காரி மீனாவை கண்டுவிட்டான்.
அவனை நோக்கி அப்பா என்று அழைத்துக் கொண்டு வந்த விழியோ அவன் அங்கு நிற்பதைக் கண்டு புன்னகைத்தவள் வேகமாக அவனுடைய அருகில் வந்து அவனுடைய கையைப் பிடித்து,
“ அப்பா” என்று அழைத்து அவனை அன்னாந்து பார்க்க,
அவனோ இவ்வளவு நேரம் மீனாவை பார்த்தது மெய்யா பொய்யா என்றும் அவளை பார்த்த ஆனந்தத்திலும் அவன் ஆடிப்போய் நிற்க, அவனுடைய கையை பிஞ்சு விரல்கள் தொடும் பரிசத்தை உணர்ந்தவன் சற்று குனிந்து பார்க்க அங்கு விழியோ முகமெல்லாம் புன்னகையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.
அவனுக்கு இரட்டிப்பு அதிர்ச்சி.
நேற்று அந்த குழந்தை விழி என்று சொன்னதும் அவளை தேடி அவன் செல்ல அந்த குழந்தையை காணவில்லை.
இப்பொழுது அவன் அவனுடைய மீனாவையும் கண்டுவிட்டான்.
நேற்று பார்த்த அந்த குழந்தையையும் கண்டு விட்டான்.
“ அப்பா” என்று மீண்டும் விழி அவனை அழைக்க அவனுடைய புருவங்களோ இடுங்கின.
‘ என்ன இது இந்த குழந்தை தன்னை ஏன் தந்தை என்று அழைக்கிறது’ என்று யோசித்தவன் அந்த சந்தேகத்தை விழியிடமே கேட்க முனைந்தான்.
அவளுடைய உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தவன் அவளுடைய தலையை வருடிவிட்டு,
“ ஏஞ்சல் உங்க பேரு விழிதானே நேத்து அப்படித்தானே சொன்னீங்க.
சரி என்னை ஏன்மா நீ அப்பான்னு கூப்பிடுற” என்று கேட்க விழியோ கிழிக்கி சிரித்து விட்டு,
“ நீங்க தானே என்னோட அப்பா அப்போ உங்களை நான் அப்பான்னு தானே கூப்பிட முடியும். ஆனால் நேத்து எனக்கு உங்க முகம் ஞாபகம் இல்ல ஆனா அம்மா கிட்ட வந்த பிறகு எனக்கு உங்களை இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரியே தோனி கிட்டு இருந்துச்சு நான் அம்மாகிட்ட சொன்னேன்.
அப்போ அம்மா சொன்னாங்க நீ திரும்பவும் அந்த அங்கிள பார்த்தேன்னா அவங்க கிட்ட கேளு ஒருவேளை அவங்களுக்கும் தெரிஞ்சி இருக்கலாம் அப்படின்னு சொன்னாங்க நானும் சரின்னு இருந்தேன்.
இப்போ உங்கள நான் பார்த்தேனா பார்த்ததும் சரி உங்க கிட்ட கேட்கலாம் என்று நான் ஓடி வந்தேன் அப்போ கீழே விழுந்ததுல என் பேக்ல உள்ள திங்ஸ் எல்லாம் கீழ விழுந்துட்டு அப்பதான் உங்களோட போட்டோவும் என்கிட்ட இருந்துச்சு அதை பார்த்து தான் நீங்க தான் என்னோட அப்பான்னு கண்டுபிடிச்சேன்” என்று விழி ஒவ்வொன்றாக அவனிடம் சொல்ல அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.
‘என்னது இது இந்த குழந்தை என்னை அப்பா என்கிறது அது மட்டும் இல்லாமல் என்னுடைய புகைப்படம் இந்த குழந்தை இடம் இருக்கிறது என்று வேறு சொல்கிறது’
“ ஓ அப்படியா எங்க அந்த போட்டோவை காட்டுறீங்களா எனக்கு” என்று விழியிடம் கேட்க அவளோ,
“ ஓஓ காட்டுவேனே” என்றவள் தன்னுடைய முதுகில் இருந்த பேக்கை கழட்டி அதில் உள்ள விஹானின் புகைப்படத்தை அவனிடம் காட்ட, அவனோ அதை பார்த்து விதிர்விதிர்த்து போனான்.
மீனாவின் கைப்பட வரைந்த அவனுடைய புகைப்படம் அதன் கீழ் எப்பொழுதும் அவளது அடையாளமாக விழி என்று எழுதி இருக்க,
‘ மீனா இது என் மீனா வரஞ்சப்படம் இந்த பொண்ணு கிட்ட எப்படி. இந்த பொண்ணு வேற என்னை அப்பா என்று கூப்பிடுது ஆனா மீனா வரைஞ்ச படம் இந்த பொண்ணுகிட்ட இருக்கு ஐயோ ஒரே குழப்பமா இருக்கே’ என்று குழம்பிய மனநிலையோடு விழியிடம்,
“ விழி இந்த போட்டோ உனக்கு எப்படி கிடைத்தது” என்று கேட்க,
“ இது என்னோட அம்மா எப்பவும் அவங்க வச்சிருப்பாங்க நானே எடுத்துக்கிட்டேன்” என்று சொல்ல விஹானோ,
“ உன்னோட அம்மா இங்க வந்து இருக்காங்களா” என்று கேட்க,
“ ஆமாப்பா அம்மா இங்க தான் இருக்காங்க”
என்று சொல்ல அவனோ அதிர்ச்சியாக,
“ யாருடா உன்னோட அம்மா இங்க எங்க இருக்காங்க” என்று கேட்க விழியோ தன்னுடைய பிஞ்சு விரல்களை மீனாவை நோக்கி நீட்டி,
“ அதோ அவங்க தான் என்னோட அம்மா” என்று சொல்ல விழி கையால் காட்டிய திசை பக்கம் தன்னுடைய விழிகளை திருப்பியவனோ உறைந்து போய் அப்படியே கீழே அமர்ந்து விட்டான்.
‘ எ என்னோட மீனா இந்த குழந்தைக்கு அம்மாவா அப்போ அவளுக்கு கல்யாணம் ஆயிட்டா’ என்று நினைத்தவனுக்கோ சர்வமும் அடங்கியது போல உணர்ந்தான்.
OMG 😳😳😳😳 superb epiiiiii sis ….. Lovlyyyyyyyyyy bt wrong confusion…… Quickly upload panungaaaa sissss waiting…..
நன்றி சஹோ 🤍🤍🤍