அத்தியாயம் 26
‘என்ன என் மீனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா அதும் போக ஒரு குழந்தை வேற இருக்கு என்னோட நினைப்பு அவளை கொஞ்சம் கூட கஷ்டப்படுத்தவே இல்லையா. என்ன இந்த அளவுக்கு உருகி உருகி காதலிச்சு என்னை இப்படி நடைபிணமா ஆக்கி இருக்கா. அப்படி இருக்கும்போது அவளுக்கு எந்த ஒரு பாதிப்புமே இல்லாம அவள் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையும் இருக்கு. ஏன் மீனா ஏன் இப்படி எல்லாம் செஞ்ச உன்னால ஈஸியா அதுல இருந்து மூவ் ஆன் ஆக முடியுமானால் ஏண்டி உன் காதலை என்கிட்ட தெரியப்படுத்தின. உன்னோட காதல் எனக்கு தெரியாமலே இருந்திருந்தா நான் சந்தோஷமா இருந்து இருப்பேனே. இவ்ளோ கஷ்டப்படணும்னு எனக்கு அவசியமே இல்லையே மீனா. ஏன் மீனா என் வாழ்க்கையை முழுசா அழிச்சிட்ட மீனா. உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இதுக்கு நீ செத்தவள் செத்தவளாகவே இருந்திருக்கலாம்’ என்று அவனுடைய மூளை வேறு மாதிரி யோசிக்க உள்ளுக்குள் உடைந்தான் விஹான்.
இத்தனை வருடங்கள் கழித்து உயிரோடு தன்னுடைய மீனாவை பார்த்து சந்தோஷப்படுவதா இல்லை அவள் இனி தனக்கு சொந்தமில்லை என்று வருத்தப்படுவதா.
‘ ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது நான் அப்படி என்ன பாவம் செய்தேன்’ என்று தனக்குள்ளே குமுரிக் கொண்டான் சிறிது நேரம்.
அப்பா அப்பா என்ற விழியின் அழைப்பில் அவளைத் திரும்பி பார்க்க சட்டென அவனுக்கு ஒரு விடயம் தோன்றியது.
‘ சரி மீனா உயிரோடு இருக்கா. அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. குழந்தை இருக்கு. ஆனா ஆனா இந்த குழந்தை என்ன ஏன் அப்பான்னு சொல்லணும் எங்கேயோ இடிக்குது’ என்று யோசித்தவனுக்கோ சட்டென கண்கள் மின்னின.
உடனே விழியிடம்,
“ விழி நான் தான் உன்னோட அப்பான்னு நீ இந்த போட்டோவை பார்த்து நீ தான் சொல்றியா இல்ல உங்க அம்மா சொன்னாங்களா” என்று கேட்க அவளோ,
“ அதுவா அப்பா நான் அம்மாகிட்ட என்னோட அப்பா யாருன்னு கேட்டேன்”
என்று விழி சொல்ல அவனும் விழியை கூர்மையாக பார்த்து,
“ என்ன என்ன சொன்ன உன்னோட அப்பா யாருன்னு கேட்டியா ஏன் உங்க அப்பா உங்க கூட இல்லையா” என்று சந்தேகமாக அவன் கேட்க விழியோ உடனே சிரித்தாள்.
“ஐயோ அப்பா நீங்கதான் மிலிட்டரியில் வேலை பார்க்கிறதா அம்மா சொன்னாங்க அப்புறம் எப்படி நீங்க எங்க கூட இருப்பிங்க நானே இப்பதான் உங்களை பார்க்கிறேன்” என்று சொன்னாள் விழி.
‘ அப்போ இந்த குழந்தையோட அப்பா மிலிட்டரியில் வேலை பார்க்கிறார்களா ஓகே அப்போ எதுக்காக மீனா என்னைய இந்த குழந்தை கிட்ட அப்பான்னு சொல்லி இருக்கா அவ ஹஸ்பண்டோட போட்டோவையே காட்டியிருக்கலாமே’ என்று அவன் யோசிக்க விழியோ, “அப்போதான் எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. அம்மா இந்த போட்டோவை அவங்களோட தலையணைக்கு அடியில வச்சுதான் எப்பவும் தூங்குவாங்க. எனக்கு அது ஞாபகம் வந்ததா உடனே அதை எடுத்துட்டு போய் நான் அம்மாகிட்ட இவங்க தான் என்னோட அப்பாவான்னு கேட்டேன். அம்மாவும் ஆமான்னு சொன்னாங்க”
என்று விழி சொல்ல இவனுக்கோ தலை சுற்றிக்கொண்டு வந்தது.
அவனால் ஒரு திடமான முடிவு எடுக்க முடியவில்லை.
என்ன நடக்கிறது மீனாவுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. கணவன் ஆர்மியில் இருக்கிறான். அப்படி இருக்கும் பொழுது என் போட்டோவை தலையணைக்கு அடியில் ஏன் வைக்க வேண்டும். தன் பிள்ளையிடம் நான் தான் தகப்பன் என்று ஏன் சொல்ல வேண்டும் என்று அவனுடைய மண்டையிலோ அடுக்கடுக்கான கேள்விகள் எழ தொடங்கின.
அப்பொழுது விழியைத் தேடி வந்த ரஞ்சனி விழியையும் அவள் அருகில் இருக்கும் விஹானையும் பார்த்து வலிய ஆரம்பித்தாள்.
‘அட நம்ம கிரஷ் நம்பர் ஒன்’ என்று தனக்குள் சொல்லி குதூகலைத்தவள் அவர்கள் அருகில் வந்து,
“ ஹாய் சார் நீங்களா வாவ் நான் உங்களை இங்கே எதிர்பார்க்கவே இல்லை” என்று அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
அவனோ தனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் அமர்ந்து கொண்டிருக்க விழியோ,
“ரஞ்சனி ஆன்ட்டி இவர்தான் என்னோட அப்பா” என்று சொல்ல ரஞ்சனிக்கோ இதயத்தில் ஓட்டை விழுந்தது போல ஆனது.
சட்டென தன்னுடைய இரு கைகளாலும் இடது பக்க மார்பை தாங்கிப் பிடித்தவள் தன்னுடைய விழிகளில் அதிர்ச்சியை காட்டியவாறு,
“ விழி என்னடா குட்டி சொல்ற இவரு உன்னோட அப்பாவா” என்று அதிர்ந்தவாறே கேட்க அதற்கு விழியோ,
“ ஆமா ஆன்ட்டி இவர்தான் என்னோட அப்பா நேத்து நம்ம அங்க ஐஸ் கிரீம் பார்லர்ல பார்த்தோமில்ல எனக்கு டக்குனு ஞாபகம் வரல இப்பதான் எனக்கு ஞாபகம் வந்தது”
என்று விழி சொல்ல ரஞ்சனிக்கோ ஒன்றும் புரியவில்லை.
‘என்ன இவள், இவள் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லையே இவர்தான் விழியின் அப்பா என்றால் நேற்று ஏன் இருவரும் தெரியாதது போல் நடந்து கொண்டார்கள். சரி விழி தான் சின்ன குழந்தை அவளுக்குத்தான் ஞாபகம் இல்லை என்றால் இவருக்குமா ஞாபகம் இல்லை. ஆனால் நேற்று இவருமே ஒருவரை ஒருவர் இப்பொழுதுதான் பார்ப்பது போல் அல்லவா பேசிக் கொண்டிருந்தார்கள் என்ன நடக்கிறது ஒன்றுமே புரியவில்லையே’ என்று யோசித்தாள் ரஞ்சனி.
அவளுக்கோ, ‘ என்னடா இது? அப்போ உன்மையிலையே இவர் தான் விழி ஓட அப்பாவா அப்போ என்னோட க்ரிஷ் நம்பர் ஒன் போச்சா. இப்படி அழகான ஆண்பிள்ளை எல்லாம் சீக்கிரம் கல்யாணம் பண்ணி பிள்ளைகளை பெத்துட்டா எங்களை மாதிரி பியூட்டி குயின்ஸ் எல்லாம் என்ன பண்றது. ஹம் அந்த கடவுள் லேட்டா உங்கள என் கண்ணு முன்னாடி காமிக்கிறதுக்கு சீக்கிரமே காமிச்சிருக்கலாம் இந்நேரம் விழிக்கு நான் அம்மாவா இருந்திருப்பேன். சரி எல்லாம் போச்சு இங்க பாருங்க ஹீரோஸ் இனி உங்களை ஃபர்ஸ்ட் எடுத்துக்கு மாற்ற போறது இல்ல இந்த மாதிரி அடிக்கடி யாராவது வந்தா உங்கள இடம் மாற்ற வேண்டியது இருக்கு அதனால நீங்க செகண்ட் பிளேஸ் தேர்ட் பிளேஸ்ல இருங்க என்னோட நம்பர் ஒன் கிரிஸ் இடம் ஃப்ரீயாவே இருக்கட்டும் யாராவது வந்தா டக்குனு அங்கேயே வச்சுக்கலாம்’ என்று ரஞ்சனி தனக்குள் உரையாடிக் கொண்டிருந்தாள்.
அவளுக்கு அவளுடைய கவலை.
விஹான் ஒரு பக்கம் யோசனையில் ஆழ்ந்திருக்க அந்த சமயம் மீனாவோ விழியையும் ரஞ்சனியையும் தன்னுடைய விழிகளால் தேட அப்பொழுது அவள் கண்ணில் பட்டார்கள் இருவரும்.
யாரோ ஒரு ஆணுடன் பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தது. இவளுக்கு அந்த ஆணின் பின் பக்கமே தெரிந்தது.
அதனால் இவளுக்கு யார் என்று தெரியவில்லை.
உடனே அங்கிருந்து நேராக விழி இருக்கும் இடத்திற்கு வந்தவள்,
“ விழி ரஞ்சனி உங்க ரெண்டு பேரையும் நான் எவ்வளவு நேரமா தேடுறேன் எங்க போனீங்க” என்று கேட்டவளோ அப்பொழுதுதான் அங்கு தலையை குனிந்து அமர்ந்திருந்த விஹானை பார்த்தாள்.
யார் இவர் என்று அவள் கூர்ந்து பார்க்க விஹானோ மீனாவின் குரலைக் கேட்டு தன்னுடைய சிரசை மெதுவாக அவளை நோக்கி உயர்த்தினான்.
அவ்வளவுதான் மீனாவின் மொத்த உடலும் ஆட்டம் கண்டது.
‘ அத்தானா இவரா இவர் எப்படி இங்க’ என்று விஹானை அவள் அதிர்ந்து பார்க்க விஹானோ மீனாவை தலை முதல் கால் வரை தன்னுடைய விழிகளால் அளவிட்டான்.
சிகப்பு நிற புடவையில் கண்களில் மையிட்டு நெற்றி வகுட்டில் குங்குமமும் கழித்தல் தாலியும் என தீர்க்க சுமங்கலியாய் மாற்றான் வீட்டு மல்லிகையாய் நின்ற மீனாவை கண்டவனினின் இதழ்களும் லேசாக ஏளனமாக வளைந்தன.
பின்பு அவ்விடத்தை விட்டு மெதுவாக எழுந்தவன் ரஞ்சனிடம் திரும்பி,
“ மிஸ் ரஞ்சனி எனக்கு ஒரு சின்ன உதவி கொஞ்ச நேரத்துக்கு நீங்க விழியை கூட்டிட்டு போங்க நான் இவங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று சொல்ல
ரஞ்சனியோ சரி என்றவள் விழியை தன்னோடு அழைத்துக் கொண்டாள்.
விஹானோ எதைப் பற்றியும் யோசிக்காமல் மீனாவின் கையைப் பிடித்து தரதரவென இழுத்து சென்றான். அவளோ விஹானை இங்கு எதிர்ப்பாராதவளோ அவனைப் பார்த்த அதிர்ச்சியில் இருக்க அடுத்த அவனுடைய இந்த செயலில் அவளால் அவனிடம் எதிர்வினை ஆற்ற முடியாமல் அவன் இழுத்தை இழுப்பிற்கு அவன் பின்னோடு சென்றாள் மீனா.
அங்கு ஒரு ஓரமாக மறைவான இடத்தில் அவளை இழுத்துக் கொண்டு வந்து விட்டவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் விட்டான் அவள் கன்னத்தில் பளார் என்ற ஒரு அறையை.
OMG …..yyyyu…. Lovlyyyyyyyyyy epiii kjm indha confusion ku conclusion kudunga sis….. Waiting for nxt epiii quickly upload siss ❤️❤️❤️❤️❤️❤️