தேடித் தேடி தீர்ப்போமா

4.9
(8)

அத்தியாயம் 28

சிங்கப்பூர் விமான நிலையத்தில் தங்களுக்கான பிலைட்டுக்காக காத்திருந்தார்கள் ரஞ்சனி, விழி, மீனா.
நேற்று விஹானை பார்த்த பொழுதிலிருந்து விழிக்கு அவ்வளவு சந்தோஷம் தன்னுடைய அப்பாவை பார்த்ததில்.
ஓவிய கண்காட்சியில் இருந்து அவர்கள் கிளம்பும் பொழுது விஹான் அவர்களுடன் வராமல் இருக்க அப்பொழுது விழியோ,
“ அப்பா நீங்க எங்க கூட வரலையா?” என்று கேட்க அதற்கு விஹானோ,
“ மை பிரின்சஸ் அப்பாவுக்கு கொஞ்சம் வேலை இருக்கு நீங்க அம்மா கூட போங்க அப்பா அதை முடிச்சுட்டு சீக்கிரமா வந்துருவேன் சரியா” என்று சொல்ல விழிக்கோ அவன் வராதது ஏமாற்றமாக இருந்தாலும் அவன் வேலையை முடித்து சீக்கிரமே வருகிறேன் என்று சொன்னதும் சந்தோஷம் அடைந்தவள் அவனுடைய கன்னத்தில் முத்தத்தை பதிக்க ஆணவனோ அந்த பிஞ்சுக் குழந்தையின் முத்த ஸ்பரிசத்தில் மெய்சிலிர்த்து போனான்.
அவனும் விழியின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு,
“அப்பா கண்டிப்பா வருவேன் நீங்க சமத்தா இருக்கணும் சரியா” என்று சொல்ல அதுவும் சரி என்று மீனாவுடன் சென்றது.
ஆனால் இரவு பொழுதெல்லாம் விழி மீனாவிடம் அப்பா எப்பொழுது வருவார் என்று கேட்டு கேட்டு அவளை ஒரு வழி ஆக்கிவிட்டாள்.
இப்பொழுதும் கூட ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்த விழியின் கண்களோ தன்னுடைய தந்தை ஆனவனையே தேடிக் கொண்டிருந்தது.
அவ்வப்பொழுது மீனா விடமும் அப்பா எப்பொழுது வருவார் என்று கேட்டுக் கொண்டே இருந்தாள்.
“அம்மா அப்பா எப்ப வருவாங்க நான் நேத்துல இருந்து கேட்டுகிட்டே இருக்கேன் நீங்க எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க. ஆமா உங்களுக்கு என்ன ஆச்சு நேத்து அப்பாவ பார்த்ததுல இருந்து இப்படி அமைதியாகவே இருக்கீங்க” என்று விழி கேட்க அதற்கும் அவளிடம் பதில் இல்லை அமைதியாகவே இருந்தாள்.
அப்பொழுது ரஞ்சனி,
“ என்ன மீனா நானும் பாத்துகிட்டே தான் இருக்கேன் நேத்து உங்க ஹஸ்பண்டை பார்த்ததில இருந்து ரொம்ப அமைதி ஆயிட்டீங்க. உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் சண்டையா” என்று கேட்க மீனாவோ,
“ சேச்சா அப்படியெல்லாம் இல்ல ரஞ்சனி”
“ஹான் அப்புறம் உங்க ஹஸ்பண்ட் ஆர்மியில இருக்காருன்னு தானே சொன்னீங்க ஆனா இவரை பார்த்தா மிலிட்டரிக்காரர் மாதிரி தெரியலையே பெரிய பிஸ்னஸ்மேனா தெரியுறாரு” என்று யோசனையாக கேட்க மீனாவுக்கோ இவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது மீனாவின் தோளில் கையை போட்டவாறு ரஞ்சனியின் கேள்விக்கு பதில் கூறினான் விஹான்.
“ ஆமா ரஞ்சனி மீனா சொன்ன மாதிரி நான் மிலிட்டியில் தான் வேலை பார்த்தேன் எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று தெரியவும் அவங்க பிசினஸை நான் டேக் ஓவர் பண்ண வேண்டியதா போச்சு” என்று சொல்லி சமாளித்தான்.
“ ஓ அப்படியா சார் சூப்பர்” என்று சொன்னாள் ரஞ்சனி.
மீனாவோ தன்னுடைய தோளில் இருந்த விஹானுடைய கையை எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சித்துப் பார்த்து விட்டாள்.
ஆனால் இரும்பை போன்ற அவனுடைய கரத்தை அவளால் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.
அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் அவளுடைய காதருகில் குனிந்தவன்,
“ ரொம்ப போராடாத மீனா இனி இப்படித்தான் உன் புருஷன் கிட்ட என்ன பொய் சொல்லி அவனை விட்டுட்டு வரலாம்னு மட்டும் யோசி என்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று யோசிக்காத. நீ யோசித்தாலும் அது நடக்காது” என்று சொன்னவன் அவளுடைய தோளில் இருந்த கரத்தை அப்படியே கீழே இறக்கி சேலை நடுவே சின்னதாக தெரிந்த அவளுடைய வெற்றியடைய இறுக்கமாக பிடித்தான் விஹான்.
அவனுடைய இந்த செயலில் திடுக்கிட்டவள் கூச்சத்தில் நெளிய தன்னோடு அவளை மேலும் இறுக்கிக் கொண்டான் விஹான்.
அவளோ பக்கத்தில் ரஞ்சனி இருக்கிறாள் விழி இருக்கிறாள் என்று சங்கடத்தில் நெளிந்து கொண்டே இருக்க அதை அறிந்த ரஞ்சனியோ சிறு புன்னகையோடு அவ்விடம் விட்டு அகன்றாள்.
விழியோ,
“ அப்பா” என்று அவனுடைய கால்களை கட்டிக் கொண்டாள்.
விழியை பார்த்ததும் மீனாவின் இடுப்பில் சற்று அழுத்தமாக கிள்ளியவன் அவள் வழியில் கத்தும் முன்பே இடுப்பில் இருந்த அவள
னுடைய கையை அவளுடைய வாயில் வைத்து அழுத்தியவன்,
“ கத்தாதடி கத்தினா உன் மானம் தான் போகும் எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றவன் அவளுடைய அதிர்ந்த பார்வையை நோக்கியவாறு அவளுடைய கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு விழியை தூக்கிக்கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
இங்கு மீனாவுக்கோ சொல்லவே வேண்டாம்.
அவனுடைய அடுத்தடுத்த நெருக்கத்தில் சிக்குண்டவளோ அவனே ஏறெடுத்தும் பார்த்தால் இல்லை.
விஹானோ விழியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவனுடைய முழு கவனமும் மீனாவின் மேலே இருந்தது.
லாலிதான் தான் காதலித்த விழி என்று நினைத்து அவளை விரும்பியவளோ சிறு முத்தத்திற்கேனும் சிறு தொடுகைக்கேனும் அவளுடைய அனுமதி வேண்டி நிற்கும் விஹாக்கோ இப்பொழுது மீனாதான் தன்னுடைய விழி என்று தெரிந்த பின் அவளிடம் விலகி நிற்க ஏனோ அவனால் முடியவில்லை.
ஒருவேளை இத்தனை வருடங்கள் அவளை பிரிந்து இருந்ததால் வந்த நெருக்கமா இல்லை இத்தனை வருடத்தில் அவள் மேல் உண்டான அதிகமான காதல் அவளைப் பார்த்ததும் இனியும் அவளை நூல் அளவேனும் பிரிந்து இருக்க முடியாது என்ற அவனுடைய காதல் கொண்ட மனமா என்று தெரியவில்லை.
பிளைட்டிலும் அவளை விட்டு வைத்தான் இல்லை.
விழியும் ரஞ்சனியும் பின்னே அமர்ந்து கொள்ள இங்கு மீனாவின் அருகிலோ விஹான் அமர்ந்து கொண்டான்.
அவன் தங்களுடன் வருவதை கண்ட மீனாவோ,
“ நீங்க எதுக்கு இந்த பிளைட்ல வரீங்க நீங்க உங்க ஊருக்கு போகலையா” என்று தயக்கமாக கேட்க அதற்கு விஹானோ,
“ அது எப்படி டார்லிங் நான் உன்ன விட்டு போக முடியும்”
“ எது டார்லிங்ஆஆ” என்று அவள் கேட்க,
“ ஆமா டார்லிங். டார்லிங், பட்டுகுட்டி, செல்லகுட்டி, என்னோட குண்டுகுட்டி என்று அவன் அடுக்கிக் கொண்டே போக அவளோ,
“ போதும் போதும் நிப்பாட்டுங்க” என்று தன்னுடைய காதுகளை பொத்திக் கொள்ள விஹானோ,
அவளுடைய இரு கைகளையும் எடுத்து விட்டவன்,
“ நான் தான் சொன்னேன்ல இனி நீ என்கூட தான் இருக்கணும்னு முதல்ல உன் ஊருக்கு போய் உன் புருஷனை சரி கட்டிட்டு அதுக்கப்புறம் உன்னை குண்டு கட்டா அப்படியே தூக்கிட்டு போயிடுவேன்” என்று சொல்ல வாய் அடைத்துப் போனாள் மீனா.
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளை சீண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு அவள் படும் அவஸ்தையை ரசித்துக்கொண்டிருந்தான் விஹான்.
மூன்று வருடங்களாக தொலைத்த தன்னுடைய சந்தோஷத்தை மீட்டெடுக்க முடிவு செய்து விட்டான் விஹான்.
ஆனால் பாவம் மீனாவின் பாடுதான் படுமோசம்.
ஒரு கட்டத்தில் அவனுடைய இம்சையை தாங்க முடியாமல் அவனிடம்,
“ என்ன செய்றீங்க நான் இன்னொருத்தரோட பொண்டாட்டி இப்படி நீங்க அத்துமீறது எல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா”
என்று வரவழைத்த தைரியத்தை கொண்டு விஹானிடம் பேச அவனோ அவளுடைய இந்த கோபத்தை கூட ரசிக்கத்தான் செய்தான்.
“ உனக்கு இவ்வளவு பேச வருமா” என்று ஆச்சரியமாக கேட்க,
அவளோ ஆமை தன் ஓட்டுக்குள் அடைந்து கொள்வது போல மீண்டும் தன்னுள் அடங்கிப் போனாள். இவனுக்கோ அதை பார்த்து ஐயோ என்று ஆகி போனது.
‘ முதல்ல இவளை என்கிட்ட தயக்கமில்லாமல் பேச வைக்கணும் அதுக்காக விலகி இருந்தே இவளுக்கு டீச் பண்ண முடியாது.’
“என்ன சொன்ன கல்யாணமான பொண்ணா? நீ இன்னொருத்தனை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி என்ன லவ் பண்ணுவ சோ அவன விட எனக்கு தான் முதல் உரிமை இருக்கு”
“என்ன நீங்க இப்படி பேசுறீங்க அதெல்லாம் முடியாது எப்படி அது சாத்தியமாகும்” என்று திக்கி திணறி மீனா சொல்ல,
அவனோ தனக்குள் சிரித்துக் கொண்டவன்,
“ ஒன்னு பண்ணலாம் அவனை மெயினா வச்சுக்கோ என்ன சைடா வச்சுக்கோ” என்று சொல்ல இவளோ அதிர்ச்சியில் கண்கள் விரிய,
“ வாட்” என்று கத்தியே விட்டாள்.
அங்கு ஃபிளைட்டில் அமர்ந்திருக்கும் அனைவருடைய பார்வையும் இவள் புறம் திரும்ப, இவளோ தலையில் அடித்துக் கொண்டு,
“ அய்யோ மானமே போச்சு எல்லாரும் என்னையவே பாக்குறாங்க” என்று தன்னுடைய கீச்சுக் குரலில் புலம்ப அதைக் கண்டு ரசித்த விஹானோ,
“ இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ இருக்கே ஏன் டார்லிங் மீனு குட்டி” என்றவன் அவளுடைய செம் மாதுளை இதழ்களை கிள்ளி தன்னுடைய உதட்டில் வைத்து முத்தமிட்டான்.
தங்களுடைய ஊருக்கு வந்து ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வர ரஞ்சனியோ,
“ ஓகே மீனா இதோட நம்ம பயணம் முடிஞ்சது இன்னும் எப்ப பார்ப்பமோ தெரியல எனிவே உங்களோடு இருந்த இந்த பயணம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அதோட விழிக்குட்டி சொல்லவே வேண்டாம் எனக்கு அவளை ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு நான் எப்ப எல்லாம் ஃப்ரீயா இருக்கேனோ அப்ப எல்லாம் வந்து விழி குட்டியை பார்த்துட்டு போவேன்”
என்றவள் விஹானின் புறம் திரும்பி,
“ சார் உங்களுக்கு அண்ணன் தம்பி யாராவது இருக்காங்களா?” என்று கேட்க அவனும் புரியாமல் எதுக்கு என்று கேட்க,
“இல்ல சார் உங்களை ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததும் என்னோட க்ரஷ் லிஸ்டில் ஃபர்ஸ்ட்டா வச்சிருந்தேன் ஆனா அடுத்த நாளே நீங்க விழியோட அப்பானு தெரியவும் என் குட்டி மனசு உடைஞ்சு போச்சு. இப்படி அழகான பசங்க எல்லாம் சீக்கிரமா கல்யாணம் பண்ணி ஏன் சார் எங்கள மாதிரி பொண்ணுங்களோட மனசை இப்படி உடைக்கிறீங்க” என்று கேட்க பிஹானோ அழகாக புன்னகைக்க மீனாவோ ஒரு நிமிடம் ரஞ்சினியை கோபமாக பார்த்தாள்.
“இப்போ அந்த இடத்தை காலியா தான் வச்சிருக்கேன் அதான் உங்களுக்கு அண்ணன் தம்பி யாராவது இருந்தா அவங்கள அந்த லிஸ்ட்ல சேர்க்கலாம்” என்று அவள் கூறிக் கொண்டிருக்க விஹானோ மீனாவை பார்த்தவாறு,
“ சாரி ரஞ்சனி நான் வீட்டுக்கு ஒரே பையன் கவலைப்படாதீங்க என்ன மாதிரி அழகான பையன்கள் நிறைய இருக்காங்க கூடிய சீக்கிரம் உங்க க்ரஸ் ஓட முதல் இடத்தை பிடிக்கிறதுக்கு ஆள் கிடைக்கும் என்னோட வாழ்த்துக்கள்” என்று சொல்ல அவளும் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்.
பின்பு விஹானோ மீனாவின் தோளில் கையை போட்டு,
“ அப்புறம் டார்லிங் நம்ம வீட்டுக்கு போவோமா உன் புருஷன் வீட்ல இருப்பானா” என்று கேட்க அவளோ ஙங என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ இப்படி முட்ட கண்ண உருட்டி உருட்டி பார்க்காதடி பொது இடம்னு கூட பார்க்காம உதட்டில கிஸ் அடிக்க தோணுது” என்று சொன்னவன் ஒற்றை கண்ணை சிமிட்ட பெண்ணவளோ நானிச் சிவந்தாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

1 thought on “தேடித் தேடி தீர்ப்போமா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!