அத்தியாயம் 31
ஒரு வாரம் கழித்து.
மீனாவின் சொந்த ஊரில் அவர்களுடைய வீட்டில் உள்ள அனைவரும் மிகுந்த ஆவலாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தார்கள் மீனா விஹானின் வரவை.
ஆம் விஹான் மறுநாளே தன்னுடைய தந்தைக்கு போன் செய்து நடந்த அனைத்து விடயங்களையும் கூறியவன் அவர்களை உடனே மீனாவின் சொந்த ஊருக்கு புறப்பட்டு வரவும் சொல்லி இருந்தான்.
அதேபோல மீனாவின் வீட்டிற்கும் அழைப்பு எடுத்து அவர்களுக்கும் நடந்த அனைத்தையும் சொல்ல அவர்களுக்கு வருத்தம் இருந்தாலும் பேர் ஆனந்தம்.
தங்களுடைய மகள் உயிரோடு இருக்கிறாளா அவளை இப்பொழுதே காண வேண்டும் என்று ஆர்வம் எழ,
“ எப்ப வருவீங்க மாப்பிள்ளை இங்க” என்று கேட்டார் ராமச்சந்திரன்.
“ மாமா நான் எல்லாம் ஏற்பாடு செஞ்சுட்டேன் அடுத்த வாரம் நாங்க அங்க இருப்போம். நா ங்க அங்க இருக்கிற நாள் எங்க ரெண்டு பேரோட கல்யாண நாளா தான் இருக்கணும். நீங்க எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்யுங்க” என்று சொன்னான் விஹான்.
அவரும் சரி என்று சொல்ல மொத்த குடும்பமும் இவர்கள் வரும் நாளை காண ஆவலாக காத்திருந்தார்கள்.
அதேபோல அந்த நாளும் இன்று அழகாக விடிந்து விட விக்ரம், சித்ரா உட்பட மொத்த குடும்பமும் இவர்களை எதிர்நோக்கி வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களின் காத்திருப்பதை வீணாக்காது ஒரு வெள்ளை நிற கார் வந்து நின்றது.
அவர்களின் முன்னே கார் வந்து நிற்கவும் மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் படபடவென வெடிக்க காரை விட்டு இறங்கிய விஹான் மறுபக்கம் வந்து மீனா இருக்கும் கதவைத் திறந்து அவளை கைபிடித்து வெளியே அழைக்க, அவளுக்கோ குற்ற உணர்ச்சி அதிகமாக இருந்தது.
இத்தனை வருடங்களாக ஏமாற்றிய தன்னுடைய குடும்பத்தை எந்த முகத்தை வைத்து எதிர்கொள்வது என்று தயங்கியவளை தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண்களால் அவளுக்குச் சைகை செய்தவன் அவளை அனைவர் முன்னும் அழைத்து வந்தான்.
அவளைப் பார்த்ததும் அவளுடைய அம்மா, அப்பா, பாட்டி, தங்கை, அத்தை, மாமா என ஒவ்வொருவரும் அவளை வாரி அனைத்து தங்களுடைய அன்பையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்த, அவளுக்கோ குற்ற உணர்ச்சி மேலும் மேலும் அதிகமானது. தன்னுடைய ஒருத்தியின் சுயநலத்துக்காக இத்தனை பேரையும் ஏமாற்றி விட்டேனே என்று நினைத்தவளுக்கோ கண்களில் கண்ணீர் ஆறாக ஓட,
“ தங்கம் இப்படி எல்லாம் நடக்கணும்னு விதி இருக்கு. அதை யாரால மாத்த முடியும். இதோட நம்ம குடும்பத்தை பிடிச்ச பீடை எல்லாம் போயிட்டுன்னு நினைச்சுக்கோ” என்று அவளை ஆறுதல் படுத்துவதோடு அனைவரையும் ஆறுதல் படுத்தினார் பாட்டி.
“ சரி எங்க என்னோட கொள்ளுப்பேத்தி” என்று அனைவரையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர பாட்டி விழியை பற்றி கேட்க,
“நான் இங்கே இருக்கேன் பாட்டி” என்று விழி விஹானின் காலுக்கு பின்னால் இருந்து தன்னுடைய தலையை மட்டும் சாய்த்து பார்க்க அதனுடைய அழகில் அங்கு இருந்த அனைவருமே அதில் சிக்குண்டு புன்னகைத்தார்கள்.
பிறகு என்ன.
மூவரையும் உள்ளே அழைத்து வந்தவர்கள் விஹானையும் மீனாவையும் அலங்காரம் செய்ய அனுப்பி வைத்துவிட்டு மற்ற வேலைகளை துரிதமாக செயல்படுத்த ஆரம்பிக்க, லல்லுவோ விழியை தூக்கிக்கொண்டு,
“ ஹாய் குட்டி ஏஞ்சல் நான்தான் உன்னோட சித்தி. அங்க உன்னோட அம்மா அப்பா ரெடியாகா போயிட்டாங்க நீங்க ரெடியாக வேண்டாமா இந்த க்யூட்டான ஏஞ்சல இன்னும் அழகா இந்த சித்தி ரெடி பண்ண போறேன் போலாமா” என்று லல்லு சொல்ல விழிக்கு அவளை மிகவும் பிடித்த போனது.
“ நீங்க எனக்கு சித்தியா அழகா இருக்கு இந்த சித்தி. விழிக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அழகாக சொல்ல அதில் புன்னகைத்த லல்லுவோ,
“ அப்படியா எனக்கும் உங்களை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சரி வாங்க போகலாம் அவங்க வர்றதுக்குள்ள நம்ம சூப்பரா ரெடி ஆகிட்டு வந்துடலாம்” என்று விழியை அவள் தயார் செய்ய சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் பட்டு வேஷ்டி பட்டு சட்டை அனிந்துக்கொண்டு ஆண்மகனுக்கே உண்டான அழகோடு விஹான் மணமேடை ஏற,
மஞ்சள் வண்ண பட்டுடுத்தி சர்வ அலங்காரத்தோடு மீனா மணமேடை நோக்கி வர இருவருடைய கண்களிலோ அவ்வளவு காதல்.
இருவரும் ஆளுக்கொரு திசையில் இருந்து ஒரே சமயத்தில் மணமேடையில் வந்து அமர்ந்தார்கள்.
பின்பு ஐயர் மாலை எடுத்துக் கொடுக்க ஒருவர் கழுத்தில் மற்றவர் மாத்திக்கொள்ள சில வினாடிகளில் அங்கு இருக்கும் அனைவருடைய ஆசீர்வாதத்தோடு மாங்கல்யத்தை விஹானின் கையில் கொடுக்க,
தன்னுடைய ஓவியக் காதலி இந்த மாயக்காரி மீனாவை தன்னுடைய வாழ்க்கையில் இணைத்துக் கொள்வதற்காக அந்த மாங்கல்யத்தை அவளுடைய கழுத்தில் சூட்டினான் விஹான்.
அந்த சமயம் மீனாவின் கண்கள் கலங்க தன்னுடைய பார்வையின் மூலமாக அவளை அழக்கூடாது என்று சொல்லியவனோ அவளுடைய நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டு தன்னுடைய இதழை பதித்தான் விஹான்.
அதைப் பார்த்து மொத்த குடும்பமும் ஆனந்தத்தில் பூரிப்படைந்தார்கள்.
பின்பு அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க,
அப்பொழுது அந்த வீட்டின் வாட்ச்மேன் உள்ளே வந்தவர்,
“ ஐயா விஹான் தம்பிக்கு கொரியர் வந்திருக்குங்க” என்று சொல்ல விஹான் மட்டுமல்ல மொத்த குடும்பமும்,
“ என்ன மறுபடியுமா” என்று அதிர்ச்சியாக கேட்க, விஹானோ மீனாவை பார்த்தவன்,
“ என்னடி இது” என்று கேட்க அவளோ சிரிப்புடனே,
“ என்னென்னு போய் பாருங்க” என்று சொல்ல,
“ அடியேய் நமக்கு இப்ப கல்யாணமும் ஆயிடுச்சு உனக்கு ஏதாவது சொல்லனும்னா என்கிட்ட நேரடியா சொல்லவே மாட்டியா இன்னுமா இந்த கொரியர் பழக்கத்தை வச்சிருக்க. அதை வாங்கிட்டு வந்துட்டு அதுக்கப்புறம் உன்னை கவனித்துக்கிறேன்” என்று சொல்லியவாறு விஹான் வெளியே போய் பார்க்க, அதே கொரியர் காரர்.
“என்ன தம்பி எப்படி இருக்கீங்க பார்த்து வருஷக்கணக்காகுது. இத்தனை வருஷமா உங்களுக்கு வராத கொரியர் இப்ப வந்திருக்கு. அதே ஆளா இல்ல வேற ஆளா” என்று அந்த கொரியர் காரர் குறும்பாக கேட்க, அவரை முறைத்து பார்த்த விஹானோ,
“ அண்ணே சும்மா இருங்க வந்த வேலையை மட்டும் பாருங்க அண்ணே. சரி சரி கொரியர குடுங்க” என்று அவரிடம் இருந்து கொரியரை வாங்கியவன் நேராக மீனாவிடம் வந்து,
“ என்னடி இது இவ்வளவு பெருசா இருக்கு” என்று கேட்க,
“ என்ன அத்தான் நீங்க அதை பிரிச்சு தான் பாருங்களேன்” என்று சொல்ல அவளைச் செல்லமாக முறைத்தவாறே அதை பிரிக்க,
அவன் மட்டும் அல்ல மொத்த குடும்பமே அது என்னவாக இருக்கும் என்று ஆவலாக அந்த கொரியரை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இறுதியில் முழுவதுமாக பிரித்தவன் கண்களோ அந்த வரைபடத்தை பார்த்து வியப்பாக விழியை விரித்தான்.
அந்த ஓவியமோ மீனாவும் விஹானும் மணமேடையில் அமர்ந்து விஹான் அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டி அந்த மாங்கல்யத்தை தன்னுடைய கையில் ஏந்தியவாறு அவனுடைய விழிப் பார்வை மீனாவின் விழிப் பார்வையை சந்திக்க மீனாவினுடைய கண் பார்வையும் விஹானின் பார்வையை காதலோடு பார்க்க இருவருக்கும் நடுவில் “ஐ லவ் யூ” என்று பெரிய எழுத்தாக எழுதி இருந்தாள் விஹானின் விழி.
“ ஐ லவ் யூ அத்தான்” என்று மீனா தன் வாய் வழியாக முதல் முறை அவனிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த, உடனே அவளை தன்னுடைய கையில் தூக்கியவன்,
“ இது போதும்டி இந்த ஒரு வார்த்தை இந்த ஒரு வார்த்தைக்காக இத்தனை வருஷம் காக்க வச்சிட்டியே இது போதும் எனக்கு” என்றவன்,
“ விழிக்குட்டி உங்களுக்கு இவங்க எல்லாரையும் புடிச்சிருக்கா”
என்று கேட்க அதற்கு விழியோ,
“ ஆமா அப்பா எனக்கு இவங்க எல்லாரையும் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்ல,
“ ஒரு மூணு நாள் இவங்க எல்லார் கூடயும் நீங்க இருக்கிறீங்களா அப்பா அதுக்குப் பிறகு உங்களை வந்து கூப்பிடுகிறேன்”
என்று கேட்க அதற்கு மீனாவோ,
“ இல்ல இல்ல அத்தான் விழி என்ன விட்டு இருக்க மாட்டா” என்று சொல்ல அதற்கு விழியோ,
“ இல்லாம்ம நான் இருப்பேன் நீங்க அப்பா கூட போங்க இந்த சித்தியை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு நான் இவங்க கூட இருக்கேன்” என்று சொல்ல,
“ அது என் செல்ல குட்டி” என்று விழியை தூக்கி கொஞ்சியவன் அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிவிட்டு தன்னுடைய வேஷ்டியை மடித்து கட்டியவன் அழேக்காக மீனாவை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் மீனாவை அவ்வாறு தூக்கி செல்ல அங்கு இருந்த பெரியவர்களோ அவர்கள் இருவரையும் பார்த்து திருஷ்டி சுத்தினார்கள்.
அவனுடைய காதலின் தேடல் இனிதே முடிவுக்கு வந்தது.
விழியின் காதல் என்றும் அவனுள் அழியாத ஓவியமாய் நிலை பெறும்.
சுபம்.
என்றும் அன்புடன்
ஆதி.
Wowwwwwww awesome awesome story lovlyyyyyyyyyy pairs nd also cuteeeeeee vizhiiiii…….. Lovlyyyyyyyyyy…. Super endings….