சங்கவி சோகமாக தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரம் என்னங்க ஒரு நிமிசம் என்று வந்தான் கார்முகிலன். சொல்லுங்க என்ற சங்கவியிடம் நீங்க இதை மறந்து வைத்து விட்டு வந்துட்டிங்க என்றான். அது குந்தவையின் செயின் அதை வேண்டும் என்று தான் அங்கு வைத்து விட்டு வந்தாள். அதை தெரிந்து கொண்ட உதிரன் முகிலனிடம் கொடுத்து அனுப்பினான். உங்க இன்ஸ்பெக்டர் கொடுத்து விட்டாங்களா என்ற சங்கவியிடம் ஆமாம் என்றான் முகிலன். அவள் அதை வாங்கிக் கொண்டு கடவுளே ஏன் இப்படி சோதிக்கிறிங்க என் அக்கா பாவம் இல்லையா ஒவ்வொரு நாளும் அவள் தவிக்கிற தவிப்பு ஏன் இந்த அத்தானுக்கு புரிய மாட்டேங்குது என்று நினைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
உதிரன் கேஸ் ஃபைலை ஆராய்ந்து கொண்டிருந்தவன் முகிலன் வரவும் அவனிடம் கேஸ் பற்றி பேச ஆரம்பித்தான். சொல்லுங்க முகிலன் இந்த மலர்கொடியோட டெர்த் பற்றி என்ன நினைக்கிறிங்க என்றான். எனக்கு புரியலை சார் ஒரே மாதிரியான கொலை முதலில் ஒரு ஆண் ஆசிரியர் , இப்போ பெண் ஆசிரியர் அதான் ஒன்றும் புரியலை. சக்கரவர்த்தி பிசிக்ஸ் டீச்சர், மலர்கொடி எக்னாமிக்ஸ் டீச்சர் இரண்டு பேருமே வேற வேற டிப்பார்ட்மென்ட். இரண்டு பேருக்குமே அவவளவா பழக்கம் இல்லை என்று ஸ்கூல்ல சொல்லுறாங்க மலர்கொடி ஒரு விதவை. அவங்க தனியா தான் இருந்திருக்காங்க பசங்க யாரும் இல்லை. ஆனால் இவங்களோட கைவிரல்கள் துண்டாகிருக்கு, கண்கள் தோண்டப்பட்டு இருக்கு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருக்கு என்ன மலர்கொடிக்கு மார்பகங்களும் வெட்டப்பட்டிருக்கு என்ற முகிலன் சார் ஒரு டவுட் சக்கரவர்த்தி இறந்தப்ப கூட வாட்ச்மேன் மணிக்கு யாரோ மயக்க மருந்து கொடுத்துட்டாங்க ஆனால் மலர்கொடி டெர்த் பட்டப்பகலில் அதுவும் டீச்சர்ஸ் யூஸ் பண்ற டாய்லெட்ல நடந்திருக்கு அது எப்படி அவங்க சத்தம் கொடுக்காமல் இருந்திருப்பாங்க அப்படி சத்தம் கொடுத்தது ஏன் வெளியே கேட்கலை என்றான் முகிலன். எனக்கும் அந்த டவுட் இருக்கு முகிலன் என்ற உதிரன் போர்ஸ்ட் மார்டம் செய்த மருத்துர் நந்தனிடம் இது பற்றி விசாரித்தான்.
இறந்து போன இரண்டு பேருக்குமே பிரசவம் நடக்கும் போது கர்ப்பிணிகளுககு செலுத்தற எபிடியூரல் மருந்தை இன்ஜெக்ட் பண்ணிருக்காங்க அதோட அளவு கொஞ்சம் அதிகமானதால இறந்து போன இருவருக்கும் உடல் எல்லாம் மரத்துப் போயிருச்சு. அது மட்டும் இல்லாமல் அவங்களோட தொண்டைக்குழியில் ஒரு கத்தியை வைத்து குத்தி அவங்களுடைய குரல்வளையை தாக்கவும் அவங்களால் கத்த முடியலை அதன் பிறகு தான் ஒவ்வொரு உறுப்பா வெட்டிருக்காங்க என்றார் மருத்துவர். ஏன் டாக்டர் இந்த மர்டர் ஒருத்தன் பண்ணுனதா இல்லை இரண்டு மூன்று பேர் சேர்ந்து பண்ணிருப்பாங்களா என்றான் உதிரன். நீங்க என்ன நினைக்கிறிங்க உதிரன் என்ற மருத்துவர் நந்தனிடம் கண்டிப்பா ஒருத்தர் பண்ணி இருக்க முடியாது அட்லீஸ்ட் இரண்டு பேராவது இருக்கும் என்றான் உதிரன். கரைக்ட் ஒருத்தன் பண்ணலை என்னோட கணிப்பு சரியா இருந்தால் ஐந்து பேர் சேர்ந்து இந்த கொலையை பண்ணி இருக்காங்க என்றார் மருத்துவர் நந்தன்.
என்ன சொல்றிங்க டாக்டர் ஐந்து பேர்னு எப்படி சொல்றிங்க என்றவனிடம் ஆமாம் உதிரன் என்ற நந்தன் தொடர்ந்தார். இறந்து போன சக்கரவர்த்தி டெட்பாடில இருந்தும் சரி, மலர்கொடியோட டெட்பாடிலையும் சரி ஒரே நேரத்தில் கண்கள் தோண்டப்பட்டிருக்கு, நாக்கு அறுக்கப்பட்டு இருக்கு , பற்கள் உடைக்கப் பட்டு இருக்கு , பிறப்புறுப்பு அறுக்கப்பட்டிருக்கு, கை விரல்கள் துண்டாக்கப் பட்டிருக்கு அப்படி இருக்கும் போது இது ஐந்து பேர் சேர்ந்து செய்த கொலை தான் என்றார் மருத்துவர். இறந்து போன இரண்டு பேரோட உடலிலுமே ஐந்து விதமான கத்திகளோட குத்து இருந்துச்சு அதுமட்டும் இல்லாமல் மலர்கொடியோட மற்ற உறுப்புகள் அறுப்பட்டிருந்த நேரத்தை விட ஒரு நிமிடம் கழித்து தான் அவங்களோட மார்பகம் வெட்டப்பட்டிருக்கு அதை வைத்து தான் சொல்றேன் இது நிச்சயம் ஐந்து பேர் சேர்ந்து செய்த கொலை என்றார் மருத்துவர் நந்தன். சரிங்க டாக்டர் என்ற உதிரன் என்னடா இது ஐந்து பேர் சேர்ந்து கொலை செய்யுற அளவுக்கு அவங்க அப்படி என்ன தப்பு செஞ்சுருப்பாங்க என்று குழம்பி தவித்தான் உதிரன்.
என்ன குந்தவை எப்போ பாரு இந்த லேப்டாப்பை கட்டிகிட்டே அழுதுட்டு இருக்க என்ற தேவகியிடம் வேற என்ன பண்ண சொல்றிங்க அடுத்தடுத்து கொலை நடந்ததால ஸ்கூல் இரண்டு நாள் லீவு அடுத்த வாரம் கேஸ் ஹியரிங் உன் மருமகன் என்ன சொல்லப் போறாரோ என்றவளின் கண்கள் கலங்கிட குந்தவி என்று அவளை அணைத்த தேவகியிடம் நான் செய்த தப்புக்கு மன்னிப்பே இல்லையாமா ஏதோ கோபம், ஆத்திரம், திமிரு எல்லாம் சேர்ந்து என்னை யோசிக்க விடாமல் தப்பு பண்ணிட்டேன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த தண்டனை அம்மா என்றவளின் கண்ணைத் துடைத்து விட்டார் தேவகி.
அப்பாவுக்கு அத்தை குடும்பத்தோட உறவு என்னால முறிஞ்சு போச்சுனு கோபம் அவரும் என் கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கிறாரு என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தவள் அம்மா கொஞ்ச நேரம் உங்க மடியில் தூங்கட்டுமா என்றாள்.
சரிமா வா வந்து படுத்துக்கோ என்ற தேவகியிடம் உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா என்றாள் குந்தவை. கோபமா உன் மேலையா சத்தியமா இல்லைடா உன்னோட நிலைமையை என்னால புரிஞ்சுக்க முடியும் ஆனால் வருத்தம் இருக்கு எந்த பொண்ணும் செய்யக் கூடாத காரியம் நீ செய்தது அந்த வருத்தம் அம்மாவுக்கு எப்பவும் மாறாதுடா உதிரன்எழிலமுதன் உன் கணவன் மட்டும் இல்லை என் அண்ணனோட பையன் அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன பண்ணிருப்ப நீ செய்த தப்போட விளைவுகளை தான் இப்போ அனுபவிக்கிற அவனோட இடத்தில் இருந்து யோசித்தாள் அவன் உன்கிட்ட நடந்துக்கிற முறை தப்பு இல்லை தான். ஆனால் நீ நான் பெத்த பொண்ணு உன்னோட வாழ்க்கை என் கண்ணு முன்னாடியே வீணாய் போவதை பார்க்கும் போது தான் வேதனையா இருக்கு என்றார் தேவகி. அவள் அமைதியாக கண்களை மூடிக் கொண்டாள்.
என்ன உதிரன் சாப்பிட வரலையா என்ற மங்கையர்க்கரசியிடம் சாப்பாடு வேண்டாம் அம்மா என்றான். ஏன்பா என்றவரிடம் பசி இல்லை என்றவன் அம்மா கொஞ்ச நேரம் உங்க மடியில் படுத்துக்கவா என்றான். சரிப்பா என்ற மங்கை தன் மகனை மடியில் படுக்க வைத்து அவனது தலையைக் கோதி விட்டார். என்னப்பா முடிவு பண்ணிருக்க என்ற மங்கையிடம் எதைப் பத்திமா என்றான் உதிரன். அடுத்த வாரம் கேஸ் ஹியரிங் என்று தயங்கியபடி கூறினார் மங்கையர்க்கரசி. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை அம்மா விவாகரத்து கண்டிப்பா நடக்கும் உங்க அண்ணன் பொண்ணு முழுசா என் வாழ்க்கையை விட்டு போயிருவாள் என்றவன் எழுந்து செல்ல எத்தனிக்க ஏன்பா அவளை மன்னிக்க கூடாதா என்றார் மங்கை. மன்னிக்கிறதா என்னம்மா பேசுறிங்க அவள் செய்த காரியம் சாதாரணமானதா என்றவன் அம்மா ப்ளீஸ் நான் மறக்கனும்னு நினைக்கிற விசயத்தை ஞாபகம் படுத்தாதிங்க என்றவன் எங்கோ கிளம்பிச் சென்றான்.
என்ன சாம்பவி ஏதோ யோசனை போல என்று வந்தான் சாம்பவியின் கணவன் அதிரன்புகழினியன். எல்லாம் நம்ம குந்தவை பத்தி தான் புகழ் என்றாள் சாம்பவி. குந்தவையின் அக்கா சாம்பவி . அவளது கணவன் அதிரன்புகழினியன் நம் நாயகன் உதிரன்எழிலமுதனுடைய தம்பி.
அண்ணி பத்தி நினைக்க என்ன இருக்கு என்ற சாம்பவியிடம் என்ன விளையாடுறிங்களா புகழ் உங்க அண்ணனுக்கும், அவளுக்கும் விவாகரத்து நடக்கப் போகுது என்றாள் சாம்பவி. அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுற அண்ணி செய்தது பெரிய தப்புனு தான் நான் சொல்லுவேன் என்ற அதிரன் சாம்பவியை பார்க்க நானும் அதை சரினு சொல்லவே இல்லை ஆனால் என்று இழுத்தவளிடம் விடு சாம்பவி எல்லாம் சரியாகிடும் என்றான் அதிரன். அம்மா , அப்பா என்று ஓடி வந்தனர் அவர்களது மூன்றரை வயது இரட்டைக் குழந்தைகளான நிலவேனில், நிரஞ்சன் இருவரும். அவர்களைக் கொஞ்சிய அதிரன் குழந்தைகளிடம் விளையாட ஆரம்பிக்க தன் தங்கையின் வாழ்வு இப்படி இருக்க தானும் ஒரு காரணம் என்று நினைத்த சாம்பவிக்கு கண்ணீர் வந்தாலும் அதை துனைத்து விட்டு தன் குழந்தைகளுடன் விளையாடச் சென்றுவிட்டாள்.
குந்தவையின் மனம் ஏதோ பாரமாக இருக்கவும் அவள் தன் ஷ்கூட்டரை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்றாள். கடற்கரையைக் கண்டவள் மனதில் அன்று ஒருநாள் தன் கணவனுடன் இதே கடற்கரையில் அமர்ந்து பேசிய நினைவுகள் வந்தது.
என்ன எழில் இது எந்திரிங்க மடியில் வந்து படுத்துக்கிட்டு என்ற குந்தவையின் கன்னம் கிள்ளியவன் என்னடி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் கடற்கரை மணலில் பொண்டாட்டி மடியில் படுத்துகிட்டு நிலாவை ரசிக்கிறது எல்லாம் ஒரு வரம்டி என்றான். ஆமாம் பொல்லாத வரம் என்று சினுங்கியவளின் கன்னத்தில் முத்தமிட்டவன் ஏன்டி எனக்கு பிடித்த எதுவுமே உனக்கு பிடிக்க மாட்டேங்குது என்றான். ஏன்னு உங்களுக்கு தெரியாதா என்றவளிடம் சாரிமா நான் நேற்று வேலை டென்சன்ல உன்னை வெளியில் கூட்டிப் போறேனு சொன்னதை மறந்துட்டேன் அதற்காக மேடம் கோவிச்சுக்கிட்டு முகத்தை தூக்கி வைத்திருந்தாள் என்ன அர்த்தம் என்றான் உதிரன். ப்ளீஸ்டி என் செல்லம்ல , என் பட்டுல எங்கே உன் புருசனுக்கு ஒரு முத்தம் கொடு பார்ப்போம் என்றவனிடம் முடியாது போடா என்று எழுந்து அவள் சென்று விட அவளை அப்படியே தூக்கிக் கொண்டவன் எனக்கு முத்தம் கொடுக்காமல் எங்கே ஓடப் பார்க்கிற என்று அவளை கடலில் தூக்கிப் போட்டான். அவள் முழுவதும் தண்ணீரில் நனைந்து போக உன்னை என்றவள் அவனைப் பிடித்து இழுத்து தண்ணீரில் தள்ளினாள். இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் பிடித்து தண்ணீரில் தள்ளி விளையாடி ஈரம் சொட்ட சொட்ட நனைந்து நின்ற போது உதிரன் தன் மனைவியின் முகத்தை கையில் ஏந்தி அவள் இதழில் தன் இதழைப் பதிக்கச் சென்ற நேரம் எழில் வீட்டுக்குப் போகலாம் என்று குந்தவை கூறவும் இருவரும் வீட்டிற்குச் சென்றனர். இரவின் தனிமையில் இருவரும் இணைந்திருந்த நினைவுகள் அவளை வாட்டிட அவள் கடற்கரை மணலில் அமர்ந்து கண்ணீர் வடித்தாள்.
உதிரன்எழிலமுதனும் அதே கடற்கரை மணலில் அமர்ந்து குந்தவை நினைத்துப் பார்த்த நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தான். ஆனாலும் அவளது அகங்காரத்தால் செய்த அந்த செயலும் ஞாபகம் வர அவனது முகமும் பாறை போல்
இறுகியது.
….தொடரும்….